அத்தியாயம் 113

நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்குள்ளும் எனது ஞானம் உள்ளது. ஆனால், அடிப்படையில் மனிதன் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு இயலாதவன்; மனிதன் அடிப்படையில் இந்த ஆற்றலில் குறைவுள்ளவனாக இருப்பதனால், எனது மகிமையையோ தோற்றத்தையோ அல்ல, மனிதனால் எனது செயல்களையும் எனது வார்த்தைகளையும் மாத்திரமே காண முடியும். எனவே, என்னுடைய மாற்ற மேற்படுத்துதல் மனிதனுக்கு இல்லாமல், மனிதன் எனது ஞானத்தையும் எனது சர்வ வல்லமையையும் காணும்படி, எனது முதற்பேறான குமாரர்களும் நானும் சீயோனுக்குத் திரும்பி மறுரூபமடைவோம். இப்போது மனிதன் காணும் எனது ஞானமும் சர்வவல்லமையும் எனது மகிமையின் ஒரு சிறு பகுதி மாத்திரமே. அது குறிப்பிடத் தகுந்ததல்ல. இதிலிருந்து, எனது ஞானமும் எனது மகிமையும் எல்லையற்றது, அளவிடப்பட முடியாதளவு ஆழமானது என்பதுடன் மனிதனின் மனம் இதனைப் பரிசீலிப்பதற்கோ புரிந்து கொள்வதற்கோ அடிப்படையில் இயலாததாக உள்ளது என்பதையும் காணமுடியும். ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது முதற்பேறான குமாரர்களின் கடமை என்பதுடன் எனது வேலையுமாகும். அதாவது, அது எனது நிர்வாகத் திட்டத்திலுள்ள ஒரு விஷயமாகும். ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது திருச்சபையைக் கட்டியெழுப்புவது போன்றதல்ல; எனது முதற்பேறான குமாரர்களும் நானும், என்னுடைய ஆள்தத்துவமாகவும் ராஜ்யமாகவும் இருப்பதனால், எனது முதற்பேறான குமாரர்களும் நானும் சீயோன் மலையில் பிரவேசிக்கும் போது, ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது நிறைவேற்றப்பட்டிருக்கும். வேறு விதத்தில் கூறுவதென்றால், ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது என்பது கிரியையின் ஒரு படியாகும், ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்பதற்கான படி ஆகும். (ஆயினும், உலகைச் சிருஷ்டித்தது முதல் நான் செய்திருக்கிற அனைத்தும் இந்தப் படியின் நிமித்தம் மாத்திரமே. நான் இது ஒரு படி எனக் கூறுகின்ற போதும், யதார்த்தத்தில் இது ஒரு படியே அல்ல). இவ்வாறாக, ஊழியம் செய்யும் அனைவரையும் இந்தப் படியின் ஊழியத்தில் நான் பயன்படுத்துகின்றேன், அத்துடன் தொடர்ந்து, கடைசி நாட்களில், பெருந்திரளான ஜனங்கள் பின்வாங்குவர்; அவர்கள் அனைவரும் முதற்பேறான குமாரர்களுக்கு ஊழியம் செய்வர். ஊழியம் செய்யும் இவர்களுக்கு இரக்கம் காட்டும் எவரும் எனது சாபத்தினால் மரிப்பார்கள். (ஊழியம் செய்யும் அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சூழ்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன் அனைவரும் சாத்தானின் எடுபிடிகள், ஆகவே, அவர்களுக்கு இரக்கம் காட்டுவோர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு உடந்தையாகவும் சாத்தானைச் சேர்ந்தோராகவும் இருக்கின்றார்கள்). நான் நேசிக்கும் அனைத்தையும் நான் நேசிக்கின்றேன், அத்துடன் எனது சாபங்கள் மற்றும் சுட்டெரித்தலின் அனைத்து இலக்குகளையும் நான் மிகவும் வெறுக்கின்றேன். உங்களாலும் இதனைச் செய்ய முடியுமா? என்னை எதிர்த்து நிற்கும் எவரையும் நான் நிச்சயமாகவே மன்னிக்க மாட்டேன், அவர்களைத் தப்பிக்க விடவும் மாட்டேன்! ஒவ்வொரு கிரியை செய்யும் போதும் எனக்கு ஊழியம் செய்வதற்காக பெருந்திரளான ஊழியம் செய்வோரை நான் ஏற்பாடு செய்கின்றேன். இவ்வாறாக, வரலாறு முழுவதும், இன்றைய படியின் நிமித்தமே அனைத்துத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்துள்ளனர் என்பதையும், அவர்கள் எனது இருதயத்திற்கு ஏற்றவர்கள் இல்லை, என்னிடமிருந்து வரவுமில்லை என்பதையும் காண முடியும். (பெரும்பாலானோர் எனக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்ற போதும், ஒருவரும் எனக்குச் சொந்தமானவரல்ல. இவ்வாறாக, இவர்களின் ஓட்டம் எனக்காக இந்தக் கடைசிப் படியின் அஸ்திபாரத்தை உருவாக்குவற்காகவேயாகும், ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பயனற்றவை). ஆகவே, கடைசி நாட்களில் இன்னும் அதிகமாக, பெருந்திரளான ஜனங்கள் பின்வாங்குவர். (“பெருந்திரளான ஜனங்கள்” என நான் கூறுவதன் காரணம் எனது நிர்வாகத் திட்டமானது அதன் முடிவை எட்டிவிட்டது, எனது ராஜ்யத்தைக் கட்டியெழுப்புதல் வெற்றியடைந்து விட்டது, அத்துடன் எனது முதற்பேறான குமாரர்கள் சிங்காசனத்தில் அமர்ந்து விட்டனர்). இவையனைத்தும் எனது முதற்பேறான குமாரர்களின் தோற்றத்தின் காரணமாகவே நடந்துள்ளன. முதற்பேறான குமாரர்கள் தோன்றிய காரணத்தால், சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது கூடுமான வல்லா வழிகளிலும் சேதம் விளைவிப்பதற்கும் அனைத்து வழிகளையும் சோர்வடையச் செய்வதற்கும் முயற்சிக்கின்றது. எனக்கு ஊழியம் செய்வதற்காக வருகிறவர்களுக்கும் தங்களின் உண்மையான இயல்பை தற்போதைய காலத்தில் வெளிப்படுத்தியுள்ளவர்களுக்கும் எனது நிர்வாகத்திற்கு இடையூறு செய்வதற்கு முயற்சித்தவர்களுக்கும் எல்லா வகையான பொல்லாத ஆவிகளையும் அது அனுப்புகின்றது. இவற்றை வெறுங்கண்களால் காண முடியாது; இவையனைத்தும் ஆவிக்குரிய உலகின் விஷயங்கள். இவ்வாறாக, பெருந்திரளான ஜனங்கள் பின்வாங்குவர் என ஜனங்கள் நம்புவதில்லை, ஆயினும் நான் செய்வது இன்னதென்று எனக்குத் தெரியும், எனது நிர்வாகத்தை நான் அறிந்திருக்கிறேன்; மனிதன் தலையிடுவதற்கு இடமளிக்காததன் காரணம் இதுவே. (ஒவ்வொரு வகையான இழிவான பொல்லாத ஆவியும் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் ஒரு நாள் வரும், அத்துடன் எல்லா மனுஷரும் மெய்யாகவே நிச்சயத்தை உடையவர்களாவார்கள்.)

எனது முதற்பேறான குமாரர்களை நான் நேசிக்கின்றேன், ஆனால் மிகுந்த நேர்மையுடன் என்னை நேசிப்பவர்களான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினரை நான் சிறிதும் நேசிப்பதில்லை; உண்மையில், நான் அவர்களை இன்னும் அதிகம் வெறுக்கிறேன். (இந்த ஜனங்கள் என்னுடையவர்கள் அல்ல, அத்துடன் அவர்கள் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தி இனிமையான வார்த்தைகளைப் பேசினாலும், இவையனைத்தும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஒரு திட்டமே, அதனால் நான் அவர்களை மிகவும் வெறுக்கிறேன்.) இதுவே எனது மனநிலை, மற்றும் இதுவே அதன் முழுமையில் எனது நீதி. மனிதனால் அதனைப் புரிந்து கொள்ளவே முடியாது. எனது நீதியின் முழுமை ஏன் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது? இதிலிருந்து, எந்தக் குற்றத்தையும் சகித்துக் கொள்ளாத எனது பரிசுத்த மனநிலையை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும். எனது முதற்பேறான குமாரர்களை நேசித்து எனது முதற்பேறான குமாரர் அல்லாதவர்களை வெறுப்பதற்கு என்னால் முடியும் (அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருப்பினும் கூட). இதுவே எனது மனநிலை. உங்களால் இதைக் காண முடியவில்லையா? ஜனங்களின் எண்ணங்களில், நான் எப்போதும் இரக்கமுள்ள தேவன், அத்துடன் என்னை நேசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கின்றேன்: இந்த வியாக்கியானம் எனக்கெதிரான தூஷணம் அல்லவா? என்னால் விலங்குகளையும் மிருகங்களையும் நேசிக்க முடியுமா? சாத்தானை எனது முதற்பேறான குமாரனாகக் கொண்டு அதனை அனுபவிக்க முடியுமா? முட்டாள்தனமானது! எனது கிரியையானது எனது முதற்பேறான குமாரர்களின் மேல் மேற்கொள்ளப்படுவதுடன் எனது முதற்பேறான குமாரர்களைத் தவிர, நேசிப்பதற்கு என்னிடம் வேறெதுவுமில்லை. (குமாரர்களும் ஜனங்களும் மேலதிகமானோர், ஆனால் முக்கியமானவர்கள் அல்ல). பயனற்ற கிரியைகள் பலவற்றை நான் செய்து வந்ததாக ஜனங்கள் கூறுகின்றனர், ஆனால் எனது பார்வையில், அக்கிரியைகள், உண்மையாகவே மிகவும் பெறுமதிப்பு வாய்ந்தவையும் மிகவும் அர்த்தமுள்ளவையுமாகும். (இது இரு மனுவுருவாதல்களின் போதும் மேற்கொள்ளப்பட்ட கிரியைகளைக் குறிப்பிடுகின்றது; ஏனெனில் நான் எனது வல்லமையை வெளிப்படுத்த விரும்புகின்றேன், எனது கிரியைகளை முடிப்பதற்கு நான் மாம்சமாக வேண்டும்.) கிரியை செய்வதற்கு எனது ஆவியானவர் தனிப்பட்ட முறையில் வருவதாக நான் கூறுவதன் காரணம் எனது கிரியை மாம்சத்திலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, எனது முதற்பேறான குமாரர்களும் நானும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு ஆரம்பிக்கின்றோம். மாம்சத்தில் சாத்தானுடனான யுத்தமானது ஆவிக்குரிய உலகில் சாத்தானுடனான யுத்தத்தை விட கோரமானது; எல்லா மனிதராலும் இதனைக் காண முடியும், ஆகவே விட்டுச் செல்வதற்கு விருப்பமற்று சாத்தானின் சந்ததியினரும் கூட எனக்குப் பயனுள்ள சாட்சி பகர முடியும், மாம்சத்தில் எனது கிரியையின் அர்த்தம் இதுவே. இது முக்கியமாக பிசாசின் சந்ததியினர் பிசாசையே இகழ்ச்சியடையச் செய்வதற்காகவாகும்; இதுவே பிசாசாகிய சாத்தான் மீது வரும் கடும் வெட்கக் கேடாயிருக்கின்றது, அது தனது வெட்கக்கேட்டை மறைப்பதற்கு இடமின்றி எனக்கு முன்பாகத் தொடர்ச்சியாக இரக்கத்திற்கு கெஞ்சுமளவிற்விற்குக் கடுமையானதாக இருக்கின்றது. நான் ஜெயித்திருக்கிறேன், நான் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறேன், பரலோக ராஜ்யத்தின் பெருவிருந்தில் நித்தியமாகத் திளைத்திருக்கும்படி, எனது முதற்பேறான குமாரர்களோடு குடும்பத்துடன் பேரின்பத்தை ஒன்றாக அனுபவிப்பதற்காக நான் மூன்றாம் வானத்தின் வழியாகச் சென்று சீயோன் மலையை அடைந்துள்ளேன்!

முதற்பேறான குமாரர்களுக்காக நான் எல்லா விலையையும் கொடுத்துள்ளதுடன் எனது முயற்சிகளில் எல்லா வலிகளையும் அனுபவித்துள்ளேன் (நான் செய்துள்ள அனைத்தையும், நான் கூறியுள்ள அனைத்தையும், ஒவ்வொரு வகையான பொல்லாத ஆவியையும் நான் பார்க்கின்றேன் என்ற உண்மையையும் மற்றும் ஒவ்வொரு வகையான ஊழியம் செய்வோரையும் நான் துரத்தியுள்ளேன் என்னும் உண்மையையும் மனிதன் அறியவில்லை—அவையனைத்தும் முதற்பேறான குமாரர்களின் நிமித்தமாகவே செய்யப்பட்டுள்ன.) ஆனால் எனது பெரும்பாலான கிரியைகளினுள் எனது ஏற்பாடு நேர்த்தியானது; கிரியை நிச்சயமாகவே கண்மூடித்தனமாக செய்யப்படவில்லை. ஒவ்வொரு நாளும் எனது வார்த்தைகளில், நீங்கள் எனது கிரியை செய்யும் வழிமுறையையும் அதன் படிகளையும் காண்பதற்கு இயல வேண்டும். ஒவ்வொரு நாளும் எனது செயல்களில், விஷயங்களைக் கையாள்வதில் எனது ஞானத்தையும் எனது கோட்பாடுகளையும் நீங்கள் காண வேண்டும். நான் கூறியுள்ளவாறு, எனது நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்திற்காகச் சாத்தான் எனக்கு ஊழியம் செய்பவர்களை அனுப்பியுள்ளான். ஊழியம் செய்யும் இவர்கள் களைகள் ஆவர், ஆயினும், “கோதுமை” என்னும் வார்த்தை முதற்பேறான குமாரர்களை அல்ல, ஆனால் முதற்பேறான குமாரர்கள் அல்லாத குமாரர்களையும் ஜனங்களையும் குறிக்கிறது. “கோதுமை எப்போதும் கோதுமையாகவே காணப்படும், களைகள் எப்போதும் களைகளாகவே காணப்படும்”; இதன் அர்த்தம், சாத்தானைச் சேர்ந்தோரின் சுபாவமானது எப்போதும் மாறாது. ஆகவே, சுருக்கமாகக் கூறுவோமானால், இவர்கள் சாத்தானாகவே இருக்கின்றனர். “கோதுமையானது” குமாரர்களையும் ஜனங்களையும் குறிக்கின்றது, ஏனெனில், உலகத்தின் சிருஷ்டிப்பிற்கு முன்னதாகவே நான் இந்த ஜனங்களுக்குள் எனது பண்பைப் புகுத்தியுள்ளேன். மனிதனின் சுபாவம் மாறுவதில்லையென ஏற்கனவே நான் உங்களுக்குக் கூறியிருக்கின்றேன், இதனாலேயே கோதுமை எப்போதும் கோதுமையாயிருக்கும். அப்படியாயின், முதற்பேறான குமாரர்கள் என்போர் யார்? முதற்பேறான குமாரர்கள் என்னிடமிருந்து வருகின்றனர்; அவர்கள் என்னால் சிருஷ்டிக்கப்படவில்லை, ஆகவே கோதுமை என அவர்களை அழைக்க முடியாது (ஏனெனில் கோதுமை பற்றிய எந்தக் குறிப்பும் எப்போதும் “விதைத்தல்” என்னும் வார்த்தையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது அத்துடன் “விதைத்தல்” என்பதன் அர்த்தம் “சிருஷ்டித்தல்” என்பதாகும்; ஊழியம் செய்வோராகச் செயல்படுவதற்காக எல்லாக் களைகளும் சாத்தானால் இரகசியமாக விதைக்கப்படுகின்றன). முதற்பேறான குமாரர்களே எனது நிர்வாகத்தின் முழுமையும் மிகுதியுமான வெளிப்பாடு என ஒருவரால் கூற முடியும். அவர்கள் பொன்னினாலும், வெள்ளியினாலும் இரத்தினங்களினாலும் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும். எனது வருகை திருடனைப் போலிருக்கும் என்ற உண்மையுடன் நான் பொன், வெள்ளி மற்றும் இரத்தினங்களைத் திருட வந்துள்ளேன் என்பதை இது சம்பந்தப்படுத்துகின்றது (ஏனெனில் இந்தப் பொன்னும் வெள்ளியும் இந்த இரத்தினங்களும் ஆதியில் எனக்குச் சொந்தமானவையாக இருந்ததுடன் எனது வீட்டிற்கு அவற்றைத் திரும்பவும் எடுத்துச் செல்லவும் நான் விரும்புகின்றேன்). நானும் எனது முதற்பேறான குமாரர்களும் சீயோனுக்கு ஒன்றாகத் திரும்பும் போது, இந்தப் பொன், இந்த வெள்ளி மற்றும் இந்த இரத்தினங்கள் என்னால் திருடப்பட்டிருக்கும். இக்காலத்தில், சாத்தானின் தடைகளும் இடையூறுகளும் இருக்கும், இதனால் நான் பொன்னையும் வெள்ளியையும் இரத்தினங்களையும் எடுத்துச் செல்வதுடன் சாத்தானுடன் ஒரு தீர்க்கமான யுத்தத்தையும் தொடங்குவேன். (இங்கு, நான் உறுதியாகவே கதையொன்றைக் கூறவில்லை! இது ஆவிக்குரிய உலகின் நிகழ்வாகும், இதனால் மக்கள் இது பற்றித் தெளிவின்றிக் காணப்படுவதுடன் கதையாக மாத்திரமே இதனைக் கேட்க முடியும். ஆனால் எனது ஆறாயிரம் வருட நிர்வாகத் திட்டம் என்ன என்பதை நீங்களே எனது வார்த்தைகளின் மூலம் கண்டு கொள்ள வேண்டும், அத்துடன் நீங்கள் அதனை நிச்சயமாக நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இல்லாவிடின், மனிதனுக்குரிய எல்லாவற்றிலிருந்தும் எனது ஆவியானவர் நீங்கி விடுவார்). இன்று, இந்த யுத்தம் முழுமையாக முடிவடைந்துள்ளது, அத்துடன் நான் எனது முதற்பேறான குமாரர்களை (எனக்குச் சொந்தமான பொன், வெள்ளி மற்றும் இரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு) என்னுடன் எனது சீயோன் மலைக்குத் திரும்ப அழைத்து வருவேன். ஏனெனில், பொன், வெள்ளி மற்றும் இரத்தினங்கள் ஆகியவற்றிற்குத் தட்டுப்பாடு காணப்படுவதாலும், அவை விலையேறப் பெற்றவை என்பதினாலும், சாத்தான் சாத்தியமான எல்லா வழி வகைகளிலும் இவற்றைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கின்றான், ஆனால் நான் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவெனில் என்னிடமிருந்து வருபவை எனக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அதன் அர்த்தம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்பேறான குமாரர்கள் என்னிடமிருந்து வருகின்றனர் மற்றும் எனக்குச் சொந்தமானவர்கள் என நான் கூறுவது சாத்தானுக்கான ஒரு பிரகடனம். யாரும் அதனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இது முழுமையாகவே ஆவிக்குரிய உலகின் ஒரு நிகழ்வாகும். இவ்வாறாக, முதற்பேறான குமாரர்கள் எனக்குச் சொந்தமானவர்கள் என நான் ஏன் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றேன் என்பதை மனிதன் புரிந்து கொள்வதில்லை; இன்று, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! எனது வார்த்தைகளுக்கு நோக்கமும் ஞானமும் உள்ளன என நான் கூறியுள்ளேன், ஆனால் நீங்கள் அதனை வெளிப்புறமாக மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள்—ஒரு மனிதன் கூட இதனை ஆவியில் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

நான் அதிகமதிகமாய் பேசுகின்றேன், நான் எவ்வளவு அதிகமாகப் பேசுகின்றேனோ, அவ்வளவு அதிகமாக எனது வார்த்தைகள் கண்டிப்பு மிகுந்தவையாகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவை அவை எட்டும்போது, ஜனங்களை ஒரு அளவிற்கு செயற்படுத்துவதற்காக, இருதயத்தில் மாத்திரமன்றி வார்த்தையிலும் ஜனங்களை நம்ப வைப்பதற்காக, அதற்கும் மேலாக, ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே அவர்களை ஊசலாடச் செய்வதற்காக எனது வார்த்தைகளைப் பயன்படுத்துவேன்; இதுவே எனது கிரியை செய்யும் முறையாகும், இவ்வாறு தான் எனது கிரியை அதன் படிகளில் தொடர்கின்றது. அது அவ்வாறே இருக்க வேண்டும்; அப்போது மாத்திரமே, அது சாத்தானை வெட்கத்துக்குள்ளாக்க முடியுமென்பதுடன் (முதற்பேறான குமாரர்களை இறுதியில் பரிபூரணமாக்குவதற்கு, மாம்சத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்பதற்கு அவர்களை அனுமதிப்பதற்கு எனது வார்த்தைகளைப் பயன்படுத்தி) முதற்பேறான குமாரர்களை முழுமையாக்கவும் முடியும். மனிதன் எனது வார்த்தைகளின் முறைமையையும் தொனியையும் புரிந்து கொள்வதில்லை. எனது விளக்கத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் கொஞ்சம் ஆழ்ந்த அறிவு கிடைக்க வேண்டும், மற்றும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய கிரியைகளை நீங்கள் நிறைவேற்றுவதற்கு நீங்கள் அனைவரும் எனது வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும். இதனையே நான் உங்களுக்குப் பொறுப்பாக அளித்துள்ளேன். வெளியுலகத்திலிருந்து மாத்திரமல்ல, ஆனால் மிகவும் முக்கியமாக, ஆவிக்குரிய உலகத்திலிருந்தும் நீங்கள் இது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 112

அடுத்த: அத்தியாயம் 114

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக