பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு

பேதுரு தேவனால் தண்டிக்கப்பட்டபோது, “தேவனே! என் மாம்சம் கீழ்ப்படியாததாக இருக்கிறது, நீர் என்னை சிட்சித்து என்னை நியாயந்தீர்க்கிறீர். உம்முடைய சிட்சையிலும் நியாயத்தீர்ப்பிலும் நான் களிகூருகிறேன், நீர் என்னை விரும்பாவிட்டாலும், உம்முடைய பரிசுத்தமான மற்றும் நீதியான மனநிலையை உம்முடைய நியாயத்தீர்ப்பில் நான் காண்கிறேன். நீர் என்னை நியாயந்தீர்க்கும்போது, உமது நியாயத்தீர்ப்பில் உமது நீதியுள்ள மனநிலையை மற்றவர்கள் காணும்படி, நான் மனநிறைவாய் உணர்கிறேன். அது உமது மனநிலையை வெளிப்படுத்தவும், உமது நீதியான மனநிலையை எல்லா சிருஷ்டிகளும் காணும்படியாக அனுமதிக்க முடியுமானால், அது உமது மீதான என் அன்பை மேலும் தூய்மையாக்க முடியுமானால், இதனால் நீதியுள்ள ஒருவரின் சாயலை நான் அடைந்திட முடிந்தால், அப்போது உம் நியாயத்தீர்ப்பு நன்மையானது, ஏனென்றால் உம்முடைய கிருபையுள்ள சித்தமும் அதேபோல் இருக்கிறது. என்னுள் இன்னும் கலகத்தனம் அதிகமாக இருக்கிறது என்பதையும், நான் உம் முன் வருவதற்கு இன்னும் தகுதியற்றவன் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன். ஒரு விரோதமான சூழல் மூலமாகவோ அல்லது பெரும் உபாத்திரவங்களின் மூலமாகவோ நீர் என்னை இன்னும் அதிகமாக நியாயந்தீர்க்க விரும்புகிறேன். நீர் என்ன செய்தாலும், அது எனக்கு விலையேறப்பெற்றதுதான். உமது நேசம் மிகவும் ஆழமானது, சிறிதும் புகார் இல்லாமல் உம் ஏற்பாட்டின் கீழ் என்னை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜெபித்தான். இது தேவனின் கிரியையை அனுபவித்த பின்பான பேதுருவின் அறிவாகும், மேலும் இது தேவன் மீதான அவனுடைய நேசத்திற்கு ஒரு சாட்சியாகும். இன்று, நீங்கள் ஏற்கனவே ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த ஜெயம் உங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது? சிலர், “என் ஜெயம் தேவனின் உயர்ந்த கிருபையும் மேன்மையும் ஆகும். மனிதனின் வாழ்க்கை வெறுமையானது மற்றும் முக்கியத்துவம் இல்லாதது என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன். மனிதன் தனது வாழ்க்கையை, தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளை உற்பத்தி செய்வதற்கும், வளர்ப்பதற்கும் விரைவாகச் செலவழிக்கிறான், கடைசியில் எதுவும் இல்லாமல் போகிறான். இன்று, தேவனால் ஜெயம்கொள்ளப்பட்ட பின்னரே, இந்த வழியில் வாழ்வதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மையில் அர்த்தமற்ற வாழ்க்கையாகும். அதற்கு பதில் நான் மரித்துப்போய் முடித்திருக்கலாம்!” என்று சொல்லுகின்றனர். ஜெயம்பெற்ற அத்தகையவர்களை தேவனால் ஆதாயப்படுத்த முடியுமா? அவர்கள் உதாரணங்களாக மற்றும் மாதிரிகளாக ஆக முடியுமா? அத்தகைய ஜனங்கள் செயலற்றத் தன்மையில் ஒரு பாடமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த இலட்சியங்களும் இல்லை, தங்களை மேம்படுத்த முயற்சிக்க மாட்டார்கள். அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டதாக எண்ணினாலும், அத்தகைய செயலற்றவர்கள் பரிபூரணப்படுத்தப்பட இயலாதவர்கள். பேதுரு பரிபூரணமாக்கப்பட்ட பிறகு, அவனுடைய வாழ்க்கையின் முடிவில், “தேவனே! நான் இன்னும் சில வருடங்கள் வாழவேண்டியிருந்தால், உமக்காகத் தூய்மையானதும் ஆழமானதுமான அன்பைக் கொண்டிருக்க விரும்புகிறேன்”, என்று சொன்னார். அவர் சிலுவையில் அறையப்படும் தருணத்தில், “தேவனே! உம் நேரம் இப்போது வந்திருக்கிறது. எனக்காக நீர் ஏற்பாடு செய்த நேரம் வந்துவிட்டது. நான் உமக்காகச் சிலுவையில் அறையப்பட வேண்டும், இந்த சாட்சியை நான் உமக்காகப் பகிர வேண்டும், மேலும் என் அன்பு உம் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றும், அது மேலும் தூய்மையானதாக மாற முடியும் என்றும் விசுவாசிக்கிறேன். இன்று, உமக்காக மரித்து, உமக்காக சிலுவையில் அறையப்பட்டிருப்பது எனக்கு ஆறுதலளிக்கிறது, உறுதியளிக்கிறது, ஏனென்றால் உமக்காகச் சிலுவையில் அறையப்படவும் உமது விருப்பங்களை நிறைவேற்றவும், என்னையே உமக்குக் கொடுக்கவும், என் ஜீவனை உமக்காக அர்ப்பணிக்கவும் முடிகிறதைவிட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. ஓ தேவனே! நீர் மிகவும் இனிமையானவர்! நீர் என்னை வாழ அனுமதிப்பதாக இருந்தால், நான் உம்மை இன்னும் அதிகமாக நேசிக்கத் தயாராக இருப்பேன். என் ஜீவனுள்ள வரை, நான் உம்மை நேசிப்பேன். நான் உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க விரும்புகிறேன். நான் பாவம் செய்ததாலும், நான் நீதிமானாக இல்லாததாலும் நீர் என்னை நியாயந்தீர்க்கவும், என்னை சிட்சிக்கவும் சோதிக்கவும் செய்கிறீர். உமது நீதியான மனநிலை எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது, ஏனென்றால் என்னால் உம்மை இன்னும் ஆழமாக நேசிக்க முடிகிறது, மேலும் நீர் என்னை நேசிக்காவிட்டாலும் இந்த வழியில் உம்மை நேசிக்க நான் தயாராக இருக்கிறேன். உனது நீதியான மனநிலையைப் பார்க்க நான் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் இது அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு எனக்கு அதிகமாக உதவுகிறது. நான் இப்போது என் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதாக உணர்கிறேன், ஏனென்றால் நான் உமக்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், உமக்காக மரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனாலும் நான் திருப்தி அடைந்ததாக உணரவில்லை, ஏனென்றால் உம்மைக்குறித்து நான் மிகவும் குறைவாகவே அறிவேன், உம்முடைய விருப்பங்களை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதையும், உமக்கு மிகக் குறைவாகவே திருப்பிச் செலுத்தியுள்ளதையும் நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், என் முழுமையையும் உம்மிடம் திருப்பித் தர என்னால் இயலவில்லை. நான் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன். இந்தத் தருணத்தில் நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் உம்மிடம் மிகவும் கடன்பட்டிருப்பதாக உணர்கிறேன், என் எல்லா குற்றங்களையும் சரி செய்ய, நான் உமக்குத் திருப்பிச் செலுத்தாத எல்லா அன்பையும் ஈடுசெய்ய இந்த தருணத்தைத் தவிர எனக்கு வேறென்ன இருக்கிறது”, என்று அவர் தன் இருதயத்தில் ஜெபித்தான்.

மனிதன் உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர வேண்டும், மற்றும் அவனுடைய தற்போதைய சூழ்நிலைகளில் திருப்தி அடையக்கூடாது. பேதுருவின் சாயலில் வாழ்ந்திட, அவன் பேதுருவின் அறிவையும் அனுபவங்களையும் பெற்றிருக்க வேண்டும். மனிதன் உயர்ந்ததும் ஆழமானதுமான காரியங்களைத் தொடர வேண்டும். அவன் தேவனுக்கான ஆழமான, சுத்தமான அன்பையும், மதிப்பும் அர்த்தமும் கொண்ட வாழ்க்கையையும் தொடர வேண்டும். இது மட்டுமே வாழ்க்கையாகும். அப்போதுதான் மனிதன் பேதுருவைப் போலவே இருப்பான். நேர்மறையான பக்கத்தில் உன் பிரவேசத்தில் செயல் திறனுடன் இருக்க நீ கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஆழ்ந்த, மிகவும் குறிப்பிட்ட மற்றும் மிகவும் நடைமுறை சத்தியங்களைப் புறக்கணித்துவிட்டு, தற்காலிக நலத்திற்காக உன்னைச் செயலற்ற முறையில் பின்வாங்க அனுமதிக்கக்கூடாது. உன் அன்பு நடைமுறையானதாக இருக்க வேண்டும், மேலும் மிருகத்தின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவும் வித்தியாசமில்லாத இந்த மோசமான, கவலையற்ற வாழ்க்கையிலிருந்து உன்னையே விடுவிப்பதற்கான வழிகளை நீ கண்டுபிடிக்க வேண்டும். நீ உண்மையுள்ள ஒரு வாழ்க்கையை, மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும், மேலும் உன்னை நீயே முட்டாளாக்கக் கூடாது அல்லது உன் ஜீவனை விளையாடுவதற்கான ஒரு பொம்மையைப் போல நடத்தவோ கூடாது. தேவனை நேசிக்க விரும்பும் அனைவருக்கும், அடைந்திட முடியாத சத்தியங்களும் இல்லை, அவர்களால் உறுதியாக நிற்க முடியாத நீதியும் இல்லை. உன் வாழ்க்கையை நீ எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வாறு நீ தேவனை நேசிக்க வேண்டும் மற்றும் அவருடைய சித்தத்தைப் பூர்த்தி செய்ய இந்த அன்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? உன் வாழ்க்கையில் இதைவிட பெரிய காரியம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ அத்தகைய ஆசைகளையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் முதுகெலும்பு இல்லாதவர்களைப் போலவும், பலவீனமானவர்களைப் போலவும் இருக்கக்கூடாது. ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையையும் அர்த்தமுள்ள சத்தியங்களையும் எவ்வாறு அனுபவிப்பது என்பதை நீ கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் உங்களை அந்த வகையில் பொறுப்பில்லாமல் நடத்தக்கூடாது. நீ அதை உணர்வதற்குள், உன் வாழ்க்கை உனக்குத் தெரியாமலேயே கடந்து சென்றுவிடும். அதன் பிறகு, தேவனை நேசிக்க உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா? மனிதன் மரித்த பிறகு தேவனை நேசிக்க முடியுமா? நீ பேதுருவைப் போல அதே ஆர்வங்களையும் மனசாட்சியையும் பெற்றிருக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், நீயே உன்னோடு விளையாடக் கூடாது. ஒரு மனிதனாக, தேவனைப் பின்தொடரும் ஒருவனாக, நீ உன் வாழ்க்கையை எவ்வாறாக நடத்த வேண்டும், தேவனுக்கு உன்னை எவ்வாறு அர்ப்பணிக்க வேண்டும், எவ்வாறு தேவன் மீது உனக்கு அர்த்தமுள்ள விசுவாசம் இருக்க வேண்டும், நீ தேவனை நேசிப்பதால், எப்படி அவரை மிகவும் தூய்மையான, மிகவும் அழகான மற்றும் மிகவும் நன்மையான முறையில் நேசிக்க வேண்டும் என்பதை உன்னால் கவனமாகப் பரிசீலிக்க முடிய வேண்டும். இன்று, நீ எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட்டாய் என்பதில் மட்டுமே நீ திருப்தியடைய முடியாது, ஆனால் எதிர்காலத்தில் நீ நடந்து செல்ல வேண்டிய பாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பரிபூரணமாக்கப்படுவதற்கான ஆர்வங்களையும், தைரியத்தையும் நீ கொண்டிருக்க வேண்டும், எப்போதும் உன்னை இயலாதவன் என்று நினைக்கக்கூடாது. சத்தியத்திற்குப் பிடித்தமானவை என்று ஏதும் இருக்கின்றதா? சத்தியம் ஜனங்களை வேண்டுமென்றே எதிர்க்க முடியுமா? நீ சத்தியத்தைத் தொடர்ந்தால், அது உன்னை மூழ்கடித்துவிட முடியுமா? நீ உறுதியுடன் நீதிக்காக நின்றால், அது உன்னைக் கீழே அடித்து தள்ளிவிடுமா? ஜீவனைத் தொடர்வது உண்மையிலேயே உன் ஆர்வமாக இருந்தால், ஜீவனால் உன்னைத் தவிர்க்க முடியுமா? நீ சத்தியம் இல்லாமல் இருந்தால், அது சத்தியம் உன்னைப் புறக்கணிப்பதால் அல்ல, மாறாக நீ சத்தியத்திலிருந்து விலகி இருப்பதாலேயே. நீதிக்காக உறுதியாக நிற்க உன்னால் முடியாவிட்டால், அது நீதியில் ஏதோ தவறு இருப்பதால் அல்ல, மாறாக அது யதார்த்தங்களுக்கு முரணானது என்று நீ நம்புவதாலேயே. அநேக ஆண்டுகளாகப் பின்தொடர்ந்த பிறகும் நீ ஜீவனை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை என்றால், ஜீவனுக்கு உன்னைக் குறித்து மனசாட்சி இல்லாததால் அல்ல, மாறாக உனக்கு ஜீவனைக் குறித்த மனசாட்சி இல்லாததாலும், ஜீவனை விரட்டியடித்ததாலுமாகும். நீ ஒளியில் வாழ்ந்து, ஒளியைப் பெற இயலாமல் இருந்தால், அது ஒளியால் உன்னை ஒளிரச் செய்ய இயலாது என்பதனால் அல்ல, மாறாக நீ ஒளியின் இருப்பைப் பற்றி எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பதாலாகும், அதனால் ஒளி சத்தமின்றி உன்னிடமிருந்து விலகியது. நீ பின்தொடரவில்லை என்றால், நீ மதிப்பற்ற குப்பை, ஜீவிதத்தில் உனக்கு தைரியம் இல்லை, இருளின் வல்லமைகளை எதிர்க்கும் ஆவி இல்லை என்று மட்டுமே சொல்லப்பட முடியும். நீ மிகவும் பலவீனமானவன்! உன்னை முற்றுகையிடும் சாத்தானின் வல்லமைகளிடமிருந்து உன்னால் தப்ப முடியவில்லை, மேலும் இந்த வகையான பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற வாழ்க்கையை வாழ்வதற்கும் அறியாமையில் மரிப்பதற்கும் மட்டுமே தயாராக இருக்கிறாய். நீ ஜெயம் கொள்ளப்படுவதற்காகத் தொடர்வதே நீ அடைந்திட வேண்டியதாகும். இது நீ ஆற்றவேண்டிய கடமையாகும். நீ ஜெயம் கொள்ளப்படுவதில் திருப்தியடைந்தால், ஒளியின் இருப்பை நீ விரட்டுவாய். நீ சத்தியத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீ அதிகத் துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும். அமைதியான குடும்ப ஜீவியத்தின் பொருட்டு நீ சத்தியத்தைத் தூக்கி எறியக்கூடாது, மேலும் உன் வாழ்க்கையின் கண்ணியத்தையும் நேர்மையையும் தற்காலிக இன்பங்களுக்காக இழந்துவிடக்கூடாது. நீ அழகானவை மற்றும் நன்மையானவை அனைத்தையும் பின்தொடர வேண்டும், மேலும் வாழ்க்கையில் அதிக அர்த்தமுள்ள ஒரு பாதையை நீ பின்தொடர வேண்டும். நீ அத்தகைய இழிவான ஜீவியம் நடத்தினால் மற்றும் எந்த நோக்கங்களையும் பின்பற்றவில்லை என்றால், நீ உன் வாழ்க்கையை வீணாக்குகிறாயல்லவா? அத்தகைய ஜீவிதத்திலிருந்து நீ என்ன ஆதாயம் செய்ய முடியும்? நீ ஒரு சத்தியத்திற்காக மாம்சத்தின் அனைத்து இன்பங்களையும் கைவிட வேண்டும், மேலும் ஒரு சிறிய இன்பத்திற்காக எல்லா சத்தியங்களையும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இது போன்றவர்களுக்கு நேர்மையோ அல்லது கண்ணியமோ இருப்பதில்லை. அவர்கள் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை!

தேவன் மனிதனைச் சிட்சிக்கிறார் மற்றும் நியாயந்தீர்க்கிறார், ஏனென்றால் அது அவருடைய கிரியைக்குத் தேவையானதாக இருக்கிறது, மேலும், அது மனிதனுக்குத் தேவைப்படுகிறது. மனிதன் சிட்சிக்கப்பட வேண்டும், நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அப்போதுதான் அவனால் தேவனின் அன்பை அடைந்திட முடியும். இன்று, நீங்கள் முற்றிலும் நம்பியிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சிறிய பின்னடைவைச் சந்திக்கும்போது, நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சி இன்னும் மிகவும் சிறியது, மேலும் ஒரு ஆழமான அறிவைப் பெறுவதற்கு இதுபோன்ற அநேக சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீங்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும். இன்று, நீங்கள் தேவனிடம் கொஞ்சம் பயபக்தியைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறீர்கள், அவர் மெய்யான தேவன் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அவருக்காக மிகுந்த அன்பு நீங்கள் கொண்டிருக்கவில்லை, நீங்கள் சுத்தமான அன்பை மிகக் குறைவாகவே அடைந்துள்ளீர்கள். உங்கள் அறிவு மிகவும் மேலோட்டமானது, உங்கள் வளர்ச்சி இன்னும் போதுமானதாக இல்லை. நீங்கள் உண்மையிலேயே ஒரு நிலைமையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் இன்னும் சாட்சி பகிரவில்லை, உங்கள் பிரவேசத்தில் மிகக் குறைவானதே ஆற்றல்மிக்கது, மேலும் எவ்வாறு பயிற்சி செய்வது என்று உங்களுக்குத் தெரியாது. பெரும்பாலான ஜனங்கள் மந்தமானவர்கள் மற்றும் செயலற்றவர்கள். அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனை ரகசியமாக மட்டுமே நேசிக்கிறார்கள், ஆனால் நடைமுறைக்குரிய எந்த வழியையும் கொண்டிருக்கவில்லை, அவர்களின் இலக்குகள் என்ன என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக இல்லை. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் யாவரும் சாதாரண மனிதநேயத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மனசாட்சியின் அளவுமுறைகளைத் தாண்டியதும், மனசாட்சியின் தரங்களை விட உயர்ந்ததுமான சத்தியங்களைக் கொண்டவர்கள். அவர்கள் தேவனின் அன்பைத் திருப்பிச் செலுத்துவதற்கு தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக, அவர்கள் தேவனை அறிந்தும் இருக்கிறார்கள், மேலும் தேவன் அழகானவர், மனிதனின் அன்பிற்குத் தகுதியானவர் என்பதையும், நேசிப்பதற்கானவை தேவனில் நிறைய இருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறார்கள். மனிதனால் நேசிக்காமல் இருக்க முடியாது! பரிபூரணமாக்கப்பட்டவர்களின் தேவன் மீதான அன்பு அவர்களின் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே இருக்கிறது. அவர்களுடையது ஒரு இயல்பாகத் தோன்றுகிற அன்பு, திரும்ப எதுவும் கேட்காத ஒரு அன்பு, அது ஒரு பரிவர்த்தனை அல்ல. தேவனைக் குறித்த அறிவைத் தவிர வேறெந்த காரணத்தினாலும் அவர்கள் தேவனை நேசிக்கிறதில்லை. தேவன் தங்கள் மீது கிருபைகளை வழங்கினாரா என்பதைக் குறித்து அக்கறைக் கொள்வதில்லை, மேலும் தேவனைத் திருப்திப்படுத்துவதை விட வேறெதிலும் அத்தகையவர்கள் திருப்திகொள்வது இல்லை. அவர்கள் தேவனோடு பேரம் பேசுவதில்லை, தேவனின் அன்பை மனசாட்சியால் அளவிடுகிறதுமில்லை: “நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர், அதனால் நான் உம்மை நேசிக்கிறேன். நீர் எனக்குக் கொடுக்கவில்லை என்றால், உமக்குப் பதில் செய்ய என்னிடம் எதுவும் இல்லை”. “தேவனே சிருஷ்டிகர், அவர் தம்முடைய கிரியையை நம்மீது நடப்பிக்கிறார். பரிபூரணமாக்கப்படுவதற்கு இந்த வாய்ப்பு, நிலை மற்றும் தகுதி எனக்கு இருப்பதால், எனது நாட்டம் அர்த்தமுள்ள ஜீவியத்தை வாழ்வதற்காக இருக்க வேண்டும், நான் அவரைத் திருப்திப்படுத்த வேண்டும்” என்று பரிபூரணமாக்கப்பட்டவர்கள் எப்போதும் விசுவாசிக்கிறார்கள். இது பேதுரு அனுபவித்ததைப் போன்றதே. அவன் மிகுந்த பலவீனமாக இருந்தபோது, “ஓ தேவனே! நேரமும் இடமும் எதுவாயினும், நான் உம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நேரமும் இடமும் எதுவாயினும், நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன் என்பதை நீர் அறிவீர், ஆனால் எனது வளர்ச்சி மிகவும் சிறியது, நான் மிகவும் பலவீனமாகவும் ஆற்றலற்றவனாகவும் இருக்கிறேன், என் நேசம் மிகவும் குறைவானது, உம்மைக் குறித்த என் நேர்மை மிகவும் அற்பமானது. உம் அன்போடு ஒப்பிட்டால், நான் முற்றிலும் வாழத் தகுதியற்றவன். எனது வாழ்க்கை வீணாகக்கூடாது என்பதையும், உமது அன்பை மட்டும் என்னால் திருப்பிச் செலுத்த முடியும் என்பதுவுமல்லாமல், இன்னும், என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடியும் என்பதையும் மட்டுமே நான் விரும்புகிறேன். ஒரு சிருஷ்டியாக நான் உம்மைத் திருப்திப்படுத்த முடிந்தால், எனக்கு மன அமைதி கிடைக்கும், மேலும் அதற்கு மேல் எதுவும் கேட்க மாட்டேன். நான் இப்போது பலவீனமாகவும் ஆற்றலற்றவனாகவும் இருந்தாலும், உமது அறிவுரைகளை நான் மறக்க மாட்டேன், உமது அன்பை நான் மறக்க மாட்டேன். உமது அன்பைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர இப்போது நான் வேறெதுவும் செய்யவில்லை. ஓ தேவனே, நான் மிக மோசமாக உணர்கிறேன்! என் இருதயத்தில் உள்ள அன்பை நான் உமக்கு எவ்வாறு திருப்பித் தர முடியும், எப்படி நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து, உம்முடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும், மேலும் என்னிடம் உள்ள அனைத்தையும் உனக்கு அர்ப்பணிக்க முடியும்? மனிதனின் பலவீனம் உமக்குத் தெரியும். உன் நேசத்திற்கு நான் எவ்வாறு பாத்திரவானாக இருக்க முடியும்? ஓ தேவனே! நான் சிறிய வளர்ச்சியுள்ளவன், என் நேசம் மிகவும் அற்பமானது என்பது உமக்குத் தெரியும். இந்த வகையான சூழலில் என்னால் முடிந்ததை நான் எவ்வாறு செய்ய முடியும்? உம் அன்பை நான் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும், என்னிடம் உள்ள அனைத்தையும் நான் உமக்குக் கொடுக்க வேண்டும் என்றும் எனக்குத் தெரியும், ஆனால் இன்று எனது வளர்ச்சி மிகச் சிறியது. நீர் எனக்குப் பலத்தையும் தன்னம்பிக்கையையும் தருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன், இதன்மூலம் நான் உமக்காக அர்ப்பணிக்க சுத்தமான அன்பைக் கொண்டிருக்க முடியும், மேலும் என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடியும். உமது அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியும் என்பது மட்டுமல்லாமல், உமது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சோதனைகள் மற்றும் இன்னும் கடுமையான சாபங்களைக் கூட நான் அனுபவிக்க முடியும். உமது அன்பைக் காண நீர் என்னை அனுமதித்திருக்கிறீர், உம்மை நேசிக்கமல் என்னால் இருக்க முடியாது, இன்று நான் பலவீனமாகவும் ஆற்றலற்றவனாகவும் இருந்தாலும், உம்மை நான் எப்படி மறக்க முடியும்? உமது நேசம், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு எல்லாம் உம்மை நான் அறிந்து கொள்ள காரணமாகின, ஆனாலும் உம்முடைய அன்பை நிறைவேற்ற இயலாது என்றும் நினைக்கிறேன், ஏனென்றால் நீர் மிகவும் பெரியவர். என்னிடம் உள்ள அனைத்தையும் சிருஷ்டிகருக்கு எப்படி அர்ப்பணிக்க முடியும்?” என்று சொல்லி அவன் தேவனிடம் ஜெபித்தான். பேதுருவின் வேண்டுகோள் இவ்வாறு இருந்தது, ஆனாலும் அவனது வளர்ச்சி போதுமானதாக இல்லை. இந்த நேரத்தில், அவன் இருதயத்தை ஒரு கத்தி சிதைப்பதைப் போல் உணர்ந்தான். அவன் வேதனையில் இருந்தான். அத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும், “ஓ தேவனே! மனிதன் குழந்தைத்தனமான வளர்ச்சியுள்ளவன், அவனுடைய மனசாட்சி பலவீனமானது, உம் அன்பைத் திருப்பிச் செலுத்துவதே நான் அடைந்திடக்கூடிய ஒரே காரியம். இன்று, உம் விருப்பங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை, என்னால் முடிந்த அனைத்தையும் செய்யவும், என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கவும், என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்கவும் மட்டுமே விரும்புகிறேன். உமது நியாயத்தீர்ப்பைப் பொருட்படுத்தாமல், உம் சிட்சையைப் பொருட்படுத்தாமல், நீர் எனக்கு என்ன வழங்குகிறீர் என்பதைப் பொருட்படுத்தாமல், நீர் என்னிடமிருந்து எதைப் பறித்துக்கொள்கிறீர் என்பதைப் பொருட்படுத்தாமல், உம்மைக்குறித்த மிகச் சிறிய புகாரில் இருந்து என்னை விடுவியும். அநேக முறை, நீர் என்னைச் சிட்சித்து, என்னை நியாயந்தீர்த்தபோது, எனக்குள்ளே நான் முணுமுணுத்தேன், தூய்மையை அடைந்திடவோ அல்லது உமது விருப்பங்களை நிறைவேற்றவோ முடியாமல் இருந்தேன். உமது அன்பை நான் திருப்பிச் செலுத்துவது கட்டாயத்தால் பிறந்தது, இந்த நேரத்தில் நான் என்னை இன்னும் வெறுக்கிறேன்”, என்று அவன் தொடர்ந்து ஜெபம் செய்தான். தேவன் மீதான தூய்மையான அன்பை நாடியதால் தான் பேதுரு இந்த வழியில் ஜெபம் செய்தான். அவன் தேடிக்கொண்டு, மன்றாடிக் கொண்டிருந்தான், மேலும், அவன் தன்னையே குற்றஞ்சாட்டிக்கொண்டு, தனது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தேவனுக்குக் கடன்பட்டதாக உணர்ந்தான், தன்னைப் பற்றியே வெறுப்பை உணர்ந்தான், ஆனாலும் அவன் சற்றே சோகமாகவும் செயலற்றவனாகவும் இருந்தான். அவர் தேவனின் சித்தத்திற்கு ஏற்றவன் அல்ல என்றும் அவனுடைய சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றும் எப்போதுமே அவன் நினைத்தான். இத்தகைய நிலைமைகளின் கீழ், பேதுரு இன்னும் யோபுவின் விசுவாசத்தைப் பின்தொடர்ந்தான். அவன் யோபுவின் விசுவாசம் எவ்வளவு பெரிதாக இருந்திருந்தது என்பதைக் கண்டான், ஏனென்றால், தான் பெற்றிருந்த எல்லாம் தேவனால் அருளப்பட்டவை, மேலும் தேவன் தன்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வது இயல்பானது, தமக்கு விருப்பமானவர்களுக்கு தேவன் கொடுப்பார், இதுதான் தேவனுடைய நீதியுள்ள மனநிலை என்பதை யோபு கண்டிருந்தான். யோபு எந்த புகாரும் செய்யவில்லை, இன்னும் தேவனைப் புகழ்ந்து பேசினான். பேதுருவும் தன்னை அறிந்திருந்தான், “இன்று, என் எண்ணங்கள் மிகவும் சீர்கெட்டிருப்பதாலும், உம்மை சிருஷ்டிகராக என்னால் பார்க்க இயலாததாலும், என்னுடைய மனசாட்சியைப் பயன்படுத்தியும் எவ்வளவு அதிகமாக அன்பை நான் திருப்பிச் செலுத்துவதையும் வைத்து, உம்முடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவதில் நான் திருப்திப்படக்கூடாது. உம்மை நேசிக்க நான் இன்னும் தகுதியற்றவன் என்பதால், நான் என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதை நான் விருப்பத்துடன் செய்வேன். நீர் செய்த அனைத்தையும் நான் அறிந்திருக்க வேண்டும், வேறு தெரிவு இருக்கக்கூடாது, உம்முடைய அன்பை நான் காண வேண்டும், மேலும் உம்மைப் புகழ்ந்து பேசவும், உமது பரிசுத்தமான நாமத்தைப் புகழ்ந்து பேசவும் முடிந்திட வேண்டும், இதனால் நீர் என் மூலம் பெரும் மகிமையைப் பெற வேண்டும். நான் உமக்கான இந்த சாட்சியில் உறுதியாக நிற்கத் தயாராக இருக்கிறேன். ஓ தேவனே! உன் நேசம் மிகவும் விலையேறப்பெற்றது மற்றும் அழகானது. பொல்லாதவனின் கைகளில் நான் எப்படி வாழ விரும்புவேன்? நான் உம்மால் சிருஷ்டிக்கப்படவில்லையா? நான் எப்படிச் சாத்தானின் இராஜ்ஜியத்தின்கீழ் வாழ முடியும்? உமது சிட்சையின் மத்தியில் எனது முழு வாழ்க்கையும் வாழ விரும்புகிறேன். பொல்லாங்கனின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை. நான் சுத்தமாக்கப்பட்டு, என் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிக்க முடிந்தால், நான் சாத்தானை வெறுப்பதால், அதன் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ விரும்பவில்லை என்பதால், என் சரீரத்தையும் மனதையும் உம்முடைய நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் ஒப்புக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீர் என்னை நியாயந்தீர்ப்பதன் மூலம், உம்முடைய நீதியுள்ள மனநிலையை விளங்கப்பண்ணுகிறீர். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் சிறிய புகாரையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சிருஷ்டியின் கடமையை என்னால் செய்ய முடிந்தால், எனது முழு வாழ்க்கையும் உனது நியாயத்தீர்ப்போடு இணைந்திருக்க நான் தயாராக இருக்கிறேன், இதன் மூலம் உன்னுடைய நீதியான மனநிலையை நான் அறிந்துகொள்வேன், மேலும் பொல்லாங்கனின் ஆதிக்கத்திலிருந்து என்னை நானே விடுவித்துக்கொள்வேன்”, என்று தன் இருதயத்தில் அவன் ஜெபித்தான். பேதுரு எப்போதுமே இவ்வாறு ஜெபித்தாதான், எப்பொழுதும் இவ்வாறு தேடினான், ஒப்பிட்டுக் கூறினால், அவன் உயர்ந்த சாம்ராஜ்யத்தை அடைந்தான். தேவனின் அன்பை அவன் திருப்பிச் செலுத்த முடிந்தது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, ஒரு சிருஷ்டியாக தனது கடமையையும் நிறைவேற்றினான். அவன் தனது மனசாட்சியால் குற்றப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மனசாட்சியின் தரத்தையும் தாண்டிச்செல்ல அவரால் முடிந்தது. அவருடைய ஆசைகள் எப்போதும் உயர்ந்தவையாக இருந்து, தேவன்மீது அவர் கொண்டிருந்த அன்பு எப்போதும் அதிகமாக இருக்கும் அளவிற்கு அவருடைய ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக தொடர்ந்து கடந்து போயின. அவன் வேதனையான வலியை அனுபவித்த போதிலும், இருந்தபோதும் அவன் தேவனை நேசிக்க மறக்கவில்லை, இன்னும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளும் திறனை அடைந்திட முயன்றான். அவன் தனது ஜெபங்களில் பின்வரும் வார்த்தைகளை உச்சரித்தான்: “உம்முடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர வேறொன்றையும் நான் அடையவில்லை. நான் சாத்தானுக்கு முன்பாக உமக்கு சாட்சி பகிரவில்லை, சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து என்னை நானே விடுவித்திருக்கவில்லை, இன்னும் மாம்சத்தின் மத்தியில் தான் வாழ்கிறேன். சாத்தானைத் தோற்கடிக்கவும், வெட்கப்படுத்தவும், அதன் மூலம் உம் விருப்பத்தை நிறைவேற்றவும் என் அன்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். என்னைச் சிறிதளவும் சாத்தானிடம் கொடுக்காமல், என் முழுமையையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன், ஏனென்றால் சாத்தான் உமக்கு எதிரி”. இந்த நோக்கத்தில் அவன் எவ்வளவு அதிகமாகத் தேடினானோ, அவ்வளவு அதிகமாக அவன் தொடப்பட்டான், மேலும் இந்த காரியங்களைக் குறித்த அவனது அறிவு உயர்ந்தது. அதை உணராமல், அவர் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தன்னை முழுமையாக தேவனிடம் திருப்பித் தர வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டான். அவன் அடைந்த சாம்ராஜ்யம் இப்படியாகத் தான் இருந்தது. அவன் சாத்தானின் ஆதிக்கத்தை மீறி, மாம்சத்தின் இன்பங்கள் மற்றும் ஆனந்தங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டான், மேலும் தேவனின் சிட்சை மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பு இரண்டையும் இன்னும் ஆழமாக அனுபவிக்கத் தயாராக இருந்தான். “நான் உம்முடைய சிட்சையின் மத்தியிலும், உம்முடைய நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் வாழ்ந்தாலும், அது உள்ளடக்கியிருக்கும் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை, இன்னும் நான் சாத்தானின் தந்திரத்தால் பாதிக்கப்பட விரும்பவில்லை. உமது சாபங்களின் மத்தியில் வாழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சாத்தானின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழ்வதன் மூலம் வேதனையடைகிறேன். உமது நியாயத்தீர்ப்பின் மத்தியில் வாழ்வதன் மூலம் நான் உம்மை நேசிக்கிறேன், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைச் சுத்திகரிக்கும் பொருட்டு, இன்னும் அதிகமாக, என்னை இரட்சிக்கும் பொருட்டு, உமது சிட்சையும் நியாயத்தீர்ப்பும் நீதியும் பரிசுத்தமுமாக இருக்கின்றன. உமது நியாயத்தீர்ப்பின் மத்தியில் எனது முழு ஜீவியத்தையும் செலவிட விரும்புகிறேன், இதனால் நான் உம் கவனிப்பின் கீழ் இருப்பேன். நான் ஒரு கணம் கூட சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ விரும்பவில்லை. நான் உம்மால் சுத்திகரிக்கப்பட விரும்புகிறேன். நான் கஷ்டங்களை அனுபவித்தாலும், சாத்தானால் சுரண்டப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் நான் விரும்பவில்லை. இந்த சிருஷ்டியாகிய நான், உம்மால் பயன்படுத்தப்படவும், உம்மால் ஆட்கொள்ளப்படவும், உம்மால் நியாயந்தீர்க்கப்படவும், உம்மால் சிட்சிக்கப்படவும் வேண்டும். நான் உம்மால் சபிக்கப்படக் கூட வேண்டும். நீர் என்னை ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கும்போது என் இருதயம் களிகூருகிறது, ஏனென்றால் உம்முடைய அன்பை நான் கண்டிருக்கிறேன். நீரே சிருஷ்டிகர், நான் ஒரு சிருஷ்டி. நான் உம்மைக் காட்டிக்கொடுத்து சாத்தானின் இராஜ்ஜியத்தில் வாழக்கூடாது, சாத்தானால் நான் சுரண்டப்படவும் கூடாது. நான் சாத்தானுக்காக வாழ்வதற்கு பதிலாக, உமது குதிரையாகவோ அல்லது எருதாகவோ இருக்க வேண்டும். உடல் ரீதியான ஆனந்தமின்றி உம சிட்சையின் மத்தியில் நான் வாழ விரும்புகிறேன், உமது இரக்கத்தை நான் இழந்தாலும் இது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். உம்முடைய கிருபை என்னுடன் இல்லை என்றாலும், உம்மால் சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இது உம்முடைய சிறந்த ஆசீர்வாதம், உமது மிகப் பெரிய கிருபை. நீர் எப்போதும் என்னிடம் கம்பீரமாகவும் கோபமாகவும் இருந்தாலும், உம்மை விட்டுப்போக என்னால் இன்னும் இயலவில்லை, இன்னும் உம்மைப் போதுமான அளவிற்கு நேசிக்க முடியவில்லை. நான் உம் வீட்டில் ஜீவிக்க விரும்புகிறேன், நான் உம்மால் சபிக்கப்படுவதற்கும், சிட்சிக்கப்படுவதற்கும், அடிபடுவதற்கும் விரும்புகிறேன், மேலும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ நான் விரும்பவில்லை, நான் மாம்சத்திற்காக மட்டுமே அவசரமாக செயல்படவும் சுறுசுறுப்பாக இருக்கவும் நான் விரும்பவில்லை, மாம்சத்திற்காக வாழவும் விரும்பவில்லை”. பேதுருவின் நேசம் ஒரு தூய்மையான நேசம். இது பரிபூரணமாக்கப்படுகிற அனுபவமாகும், மேலும் இது பரிபூரணமாக்கப்படுவதற்கான மிக உயர்ந்த சாம்ராஜ்யமாகும். இதைவிட அதிக அர்த்தமுள்ள வாழ்க்கை வேறில்லை. அவன் தேவனின் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொண்டான், தேவனின் நீதியான மனநிலையை அவன் பொக்கிஷமாகக் கருதினான், மேலும் பேதுருவைக் குறித்த எதுவும் அதிக விலையேறப்பெற்றதாக இல்லை. “சாத்தான் எனக்கு பொருள்வகை இன்பங்களைத் தருகிறான், ஆனால் நான் அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுவதில்லை. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் என்மீது வந்துள்ளன. இதில் நான் கிருபை பெற்றிருக்கிறேன், இதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன், இதில் நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். தேவனின் நியாயத்தீர்ப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் ஒருபோதும் தேவனை நேசித்திருக்க மாட்டேன், நான் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்ந்திருப்பேன், இன்னும் அவனால் கட்டுப்படுத்தப்பட்டு ஆதிக்கம்பண்ணப்பட்டிருப்பேன். அப்படி இருந்திருந்தால், நான் ஒருபோதும் உண்மையுள்ள மனிதனாக மாறியிருந்திருக்க மாட்டேன், ஏனென்றால் நான் தேவனைத் திருப்திப்படுத்த முடிந்திருக்காது, என் முழுமையை தேவனுக்காக அர்ப்பணித்திருந்திருக்க மாட்டேன். தேவன் என்னை ஆசீர்வதிக்காவிட்டாலும், எனக்குள் நெருப்பு எரிவது போல என்னை ஆறுதல்படுத்தாமல், சமாதானமோ, மகிழ்ச்சியோ இல்லாமல் விட்டுவிட்டு, தேவனின் சிட்சையும் ஒழுக்கமும் என்னை ஒருபோதும் விலகியது இல்லை என்றாலும், தேவனின் சிட்சையிலும் நியாயத்தீர்ப்பிலும் அவருடைய நீதியான மனநிலையைக் காண என்னால் முடிகிறது. இதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் மதிப்புமிக்க அல்லது உண்மையுள்ள காரியம் எதுவும் இல்லை. அவருடைய பாதுகாப்பும் கவனிப்பும் இரக்கமற்ற சிட்சை, நியாயத்தீர்ப்பு, சாபங்கள் மற்றும் அடிப்பது போன்றவையாக மாறியிருந்தாலும், இன்னும் இந்த காரியங்களில் நான் இன்பம் கொள்கிறேன், ஏனென்றால் அவற்றால் என்னை நன்றாகச் சுத்திகரித்து என்னை மாற்ற முடியும், என்னை தேவனிடம் நெருங்கச் செய்ய முடியும், மேலும் தேவனை நேசிக்க என்னை அதிகமாக இயன்றவனாகச் செய்ய முடியும், தேவனின் மீதான என் அன்பை மேலும் தூய்மையாக்க முடியும். இது ஒரு சிருஷ்டியாக என் கடமையை நிறைவேற்ற எனக்கு உதவுகிறது, மேலும் என்னைச் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விலக்கி தேவனுக்கு முன்பாகக் கொண்டு விடுகிறது, இதனால் நான் இனி சாத்தானுக்குச் சேவை செய்கிறதில்லை. நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழாதபோது, நான் முழுமையாகத் திருப்தி அடைந்திருக்கும் போது, எதிலும் பின்வாங்காமல், என்னிடம் உள்ள அனைத்தையும், தேவனுக்கு என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் அர்ப்பணிக்க முடிகிறது. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் தான் என்னை இரட்சித்தது, தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து என் வாழ்க்கையைப் பிரிக்க முடியாது. பூமியில் என் வாழ்க்கை சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் உள்ளது, அது தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் எப்போதும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்ந்திருந்திருப்பேன், மேலும், உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு அல்லது வழிமுறைகள் கிடைத்திருந்திருக்காது. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் என்னை ஒருபோதும் விட்டு விலகவில்லை என்றால் மட்டுமே நான் தேவனால் சுத்திகரிக்கப்பட முடியும். தேவனின் கடுமையான வார்த்தைகள் மற்றும் நீதியான மனப்பான்மை மற்றும் தேவனின் கம்பீரமான நியாயத்தீர்ப்பால் மட்டுமே, நான் மிக உயர்ந்த பாதுகாப்பை ஆதாயம் செய்து, வெளிச்சத்தில் வாழ ஆரம்பித்து, தேவனின் ஆசீர்வாதங்களை ஆதாயம் செய்து கொண்டேன். சுத்திகரிக்கப்படுவதற்கும், சாத்தானிடமிருந்து என்னை விடுவிப்பதற்கும், தேவனின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்வதற்கும் இதுவே இன்றைய என் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம்”, என்று அவன் சொன்னார். இது பேதுரு அனுபவித்த மிக உயர்ந்த சாம்ராஜ்யமாகும்.

பரிபூரணமாக்கப்பட்ட பிறகு மனிதன் அடைந்திட வேண்டிய நிலை சரியாக இதுதான். நீ இந்தளவு அடைந்திட முடியாவிட்டால், நீ அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியாது. மனிதன் மாம்சத்தின் மத்தியில் வாழ்கிறான், அதாவது அவன் ஒரு மனித நரகத்தில் வாழ்கிறான், தேவனின் நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாமல் மனிதன் சாத்தானைப் போல அசுத்தமானவனாய் இருப்பான். மனிதன் எப்படிப் பரிசுத்தமாக இருக்க முடியும்? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் மனிதனின் சிறந்த பாதுகாப்பும் மிகப் பெரிய கிருபையும் என்று பேதுரு நம்பினான். தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனிதன் விழித்தெழும்பி மாம்சத்தை வெறுக்க முடியும், சாத்தானை வெறுக்க முடியும். தேவனின் கண்டிப்பான ஒழுக்கம் மனிதனை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கிறது, அவனுக்குச் சொந்தமான சிறிய உலகத்திலிருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் தேவனின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் அவனை வாழ அனுமதிக்கிறது. சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் விட சிறந்த இரட்சிப்பு எதுவுமில்லை! “ஓ தேவனே! நீர் என்னைச் சிட்சித்து நியாயத்தீர்க்கும் வரை, நீர் என்னை விட்டு விலகவில்லை என்பதை நான் அறிவேன். நீர் எனக்கு மகிழ்ச்சியையோ சமாதானத்தையோ கொடுக்காமல், என்னைத் துன்பத்தில் வாழவைத்து, எண்ணற்ற தண்டனைகளை என்மீது சுமத்தினாலும், நீர் என்னை விட்டு விலகாதவரை, என் இருதயம் அமைதியாக இருக்கும். இன்று, உம்முடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் எனது சிறந்த பாதுகாப்பாகவும், எனது மிகப்பெரிய ஆசீர்வாதமாகவும் மாறிவிட்டன. நீர் எனக்குக் கொடுக்கும் கிருபை என்னைப் பாதுகாக்கிறது. இன்று நீர் எனக்கு அளித்த கிருபை உமது நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடாகும், மற்றும் இது சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். மேலும், இது ஒரு சோதனை, அதை விட, இது துன்பமான வாழ்க்கையாகும்”, என்று பேதுரு ஜெபித்தார். தேவனின் சிட்சைலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இவ்வளவு கிருபையைப் பெற்றதால், மாம்சத்தின் இன்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆழமான அன்பையும் மேலான பாதுகாப்பையும் தேடுவதற்கு பேதுருவால் முடிந்தது. தனது வாழ்க்கையில், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு, அவனது மனநிலையில் மாற்றங்களை அடைந்திட விரும்பினால், உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும், ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் விரும்பினால், அவன் தேவனின் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டு, சாத்தானின் கையாளுதலிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்து, தேவனின் வெளிச்சத்தில் வாழும்படி, அவனிடமிருந்து விலகிச் செல்வதற்காக, தேவனின் ஒழுக்கப்படுத்துதலையும் தேவனின் அடிகளையும் தன்னைவிட்டு விலகிட அனுமதிக்கக்கூடாது. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்புமே ஒளி மற்றும் மனிதனின் இரட்சிப்பின் ஒளி என்பதையும், மேலும் மனிதனுக்கு இதைவிடச் சிறந்த ஆசீர்வாதம், கிருபை அல்லது பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான், மாம்சத்தில் இருக்கிறான். அவன் சுத்திகரிக்கப்படாமல், தேவனின் பாதுகாப்பைப் பெறாமல் இருந்தால், மனிதன் இன்னும் அதிகமாக நடத்தைகெட்டுவிடுவான். அவன் தேவனை நேசிக்க விரும்பினால், அவன் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டும். “தேவனே, நீர் என்னைத் தயவாக நடத்தும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆறுதலை உணர்கிறேன். நீர் என்னைச் சிட்சிக்கும்போது, நான் இன்னும் பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். நான் பலவீனமாக இருந்தாலும், சொல்லப்படாத துன்பங்களைச் சகித்துக்கொண்டாலும், கண்ணீர்களும் சோகமும் இருந்தாலும், இந்த துக்கம் என் கீழ்ப்படியாமையின் காரணமாகவும், என் பலவீனம் காரணமாகவும் இருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். உமது ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால் நான் அழுகிறேன், உமது தேவைகளுக்கு நான் போதுமானவனாக இல்லாததால் கவலையும் வருத்தமும் அடைகிறேன், ஆனால் நான் இந்த சாம்ராஜ்யத்தை அடைந்திடத் தயாராக இருக்கிறேன், உம்மைத் திருப்திப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உம் சிட்சை எனக்குப் பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது, மேலும் எனக்கு சிறந்த இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. உம் நியாயத்தீர்ப்பு, உம் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் மங்கச் செய்கிறது. உமது சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உமது இரக்கத்தையும் அன்பான கிருபையையும் நான் அனுபவிக்க மாட்டேன். இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக உம் அன்பு வானங்களைத் தாண்டி மற்ற எல்லாவற்றின் மேலும் சிறந்து விளங்குகிறது என்பதை முன்பை விட அதிகமாய் நான் காண்கிறேன். உன் அன்பு, இரக்கம் மற்றும் அன்பான கிருபை மட்டுமல்ல. அதை விட, அது சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உம் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் எனக்கு அதிகமாகக் கொடுத்திருக்கின்றன. உன் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், ஒருவர் கூட சுத்திகரிக்கப்பட மாட்டார்கள், மேலும் ஒரு மனிதனாலும் கூட சிருஷ்டிகரின் அன்பை அனுபவிக்க முடியாது. நான் நூற்றுக்கணக்கான சோதனைகளையும் உபத்திரவங்களையும் தாங்கிக் கொண்டாலும், மரணத்திற்கு அருகில் வந்திருந்தாலும், உம்மை உண்மையாக அறிந்து கொள்ளவும், உயர்ந்த இரட்சிப்பைப் பெறவும் அவை என்னை அனுமதித்திருக்கின்றன. உமது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் ஒழுக்கம் என்னிடமிருந்து விலகிவிட்டால், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ், இருளில் வாழ வேண்டும். மனிதனின் மாம்சத்திற்கு என்ன நன்மைகள் உள்ளன? உம்முடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் என்னை விட்டு விலகினால், நீர் இனி என்னுடன் இல்லை என்பது போல, உம்முடைய ஆவி என்னைக் கைவிட்டிருப்பதைப் போல இருக்கும். அப்படியானால், எப்படி நான் தொடர்ந்து ஜீவிக்க முடியும்? நீர் எனக்கு சுகவீனத்தைக் கொடுத்து, என் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும், நான் தொடர்ந்து ஜீவிக்க முடியும், ஆனால் உம்முடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் எப்போதாவது என்னை விட்டு விலகினால், எனக்கு தொடர்ந்து வாழ்வதற்கான வழி இருக்காது. உமது சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் நான் இருந்திருந்தால், உமது அன்பை நான் இழந்திருப்பேன், உமது அன்பு என்னால் விவரிக்க முடியாத ஆழமான அன்பாக இருக்கிறது. உமது அன்பு இல்லாமல், நான் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ வேண்டியதாயிருக்கிறது மற்றும் உம்முடைய மகிமையான முகத்தைக் காண முடியாது. நான் எப்படித் தொடர்ந்து வாழ்ந்திட முடியும்? அத்தகைய இருளை, அத்தகைய ஜீவியத்தை என்னால் தாங்க முடியவில்லை. உம்மை என்னுடன் வைத்திருப்பது உம்மைப் பார்ப்பதைப் போன்றதாகும், எனவே நான் உம்மை எப்படி விட்டுவிடுவேன்? உறுதியளிக்கும் ஒரு சில வார்த்தைகளாக இருந்தாலும், என் மிகப் பெரிய ஆறுதலை என்னிடமிருந்து எடுத்திட வேண்டாம் என்று நான் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். உமது அன்பை நான் அனுபவித்திருக்கிறேன், இன்று என்னால் உம்மிடமிருந்து விலகி இருக்க முடியாது. என்னால் உம்மை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்? உமது அன்பின் காரணமாக நான் அநேக துக்கத்தின் கண்ணீர்களை சிந்தியிருக்கிறேன், ஆனாலும் இது போன்ற ஒரு வாழ்க்கை மிகவும் உண்மையுள்ளதாகவும், என்னை வளப்படுத்தக்கூடியதாகவும், என்னை மாற்றக்கூடியதாகவும், அதிகமாக என்னை சிருஷ்டிகள் பெற்றிருக்க வேண்டிய சத்தியத்தை அடைந்திட அனுமதிப்பதுமாக இருக்கிறது என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்”, என்று பேதுரு ஜெபித்தான்.

மனிதனின் முழு வாழ்க்கையும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழப்பட்டு வருகிறது, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளக் கூடியவர் ஒருவர் கூட இல்லை. அனைவரும் அசுத்தமான, சீர்கேடான மற்றும் வெறுமையான ஒரு உலகில் சிறிதளவும் அர்த்தமோ மதிப்போ இல்லாமல் வாழ்கிறார்கள், அவர்கள் மாம்சத்துக்காகவும், இச்சைக்காகவும், சாத்தானுக்காகவும் இத்தகைய கவலையற்ற வாழ்க்கைகளை வாழ்கிறார்கள். அவர்கள் இருப்பதற்கு சிறிதும் மதிப்பு இருக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவிக்கும் சத்தியத்தை மனிதன் கண்டுபிடிக்க இயலாதவனாக இருக்கிறான். மனிதன் தேவனை விசுவாசித்தாலும், வேதாகமத்தை வாசித்தாலும், சாத்தானின் தாக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை எவ்வாறு விடுவிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. யுகங்கள் முழுவதும், மிகச்சில ஜனங்களே இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், மிகச் சிலரே அதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே, மனிதன் சாத்தானை வெறுக்கிறான் என்றாலும், மாம்சத்தை வெறுக்கிறான் என்றாலும், சாத்தானின் வலைக்குட்படுத்துகிற ஆதிக்கத்திலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என்று அவனுக்குத் தெரியாது. இன்று, நீங்கள் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் கீழ்ப்படியாதக் கிரியைகளுக்கு நீங்கள் வருத்தப்படுவதில்லை, மேலும் நீங்கள் அசுத்தமானவர்கள் மற்றும் கீழ்ப்படியாதவர்கள் என்று நீங்கள் உணர்வதில்லை. தேவனை எதிர்த்த பிறகு, உங்களுக்கு மன அமைதியும் கூட இருக்கிறது, மிகுந்த சமாதானத்தையும் உணர்கிறீர்கள். உன் மன அமைதி நீ சீர்கேடு நிறைந்தவன் என்பதால் அல்லவா? இந்த மன அமைதி உன் கீழ்ப்படியாமையால் வருகிறது அல்லவா? மனிதன் ஒரு மனித நரகத்தில் வாழ்கிறான், அவன் சாத்தானின் இருண்ட ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறான். நிலம் முழுவதும், பேய்கள் மனிதனுடன் சேர்ந்து வாழ்கின்றன, மனிதனின் மாம்சத்தை ஆக்கிரமிக்கின்றன. பூமியில், நீ ஒரு அழகான பரதீசில் வாழ்கிறதில்லை. நீ இருக்கும் இடம் பிசாசின் சாம்ராஜ்யம், ஒரு மனித நரகம், ஒரு கீழுலகம். மனிதன் சுத்திகரிக்கப்படாவிட்டால், அவன் அசுத்தமானவன். அவன் தேவனால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படாவிட்டால், அவன் இன்னும் சாத்தானால் சிறைப்படுத்தப்பட்டவன். அவன் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்படாவிட்டால், சாத்தானின் இருளின் ஆதிக்கத்தின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க எவ்வகையிலும் அவனுக்கு வழி இருக்காது. நீ காட்டும் சீர்கேடான மனநிலையும், நீ வாழும் கீழ்ப்படியாத நடத்தையும், நீ இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தின் கீழ் வாழ்கிறாய் என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருக்கின்றன. உன் மனமும் எண்ணங்களும் சுத்திகரிக்கப்படாமலும், உன் மனநிலையும் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்படாவிட்டால், உன் முழுமையும் இன்னும் சாத்தானின் இராஜ்ஜியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, உன் மனம் சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறது, உன் எண்ணங்கள் சாத்தானால் கையாளப்படுகின்றன, மேலும் உன் முழுமையும் சாத்தானின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இப்போது, பேதுருவின் தரத்திலிருந்து நீ எவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா? அந்தத் திறனை நீ கொண்டிருக்கிறாயா? இன்றைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்து நீ எவ்வளவு அறிந்து இருக்கிறாய்? பேதுருவுக்குத் தெரிய வந்ததிலிருந்து நீ எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாய்? இன்று, உன்னால் அறிய முடியாவிட்டால், இந்த அறிவை எதிர்காலத்தில் உன்னால் அடைய முடியுமா? சோம்பேறியாகவும் கோழைத்தனமாகவும் இருக்கும் உன்னைப் போன்ற ஒருவன் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அறிய இயலாமல் இருக்கிறான். நீ மாம்சத்தின் அமைதியையும், மாம்சத்தின் இன்பங்களையும் பின்பற்றினால், நீ சுத்திகரிக்கப்படுவதற்கு எந்த வழியும் இருக்காது, கடைசியில் நீ சாத்தானிடம் திரும்பி வந்திருப்பாய், நீ வாழ்வது எதுவோ அது சாத்தானுக்கேற்ப இருக்கிறது, அது மாம்சமாக இருக்கிறது. இன்றைய நிலையில், அநேகர் ஜீவனைத் தொடரவில்லை, அதாவது சுத்திகரிக்கப்படுவதைப் பற்றியோ அல்லது ஆழமான ஜீவனுக்குரிய அனுபவத்தில் பிரவேசிப்பதைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அப்படி இருப்பதால், அவர்கள் எவ்வாறு பரிபூரணாமாக்கப்பட முடியும்? ஜீவனைத் தொடராதவர்களுக்கு பரிபூரணப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை, தேவனைக் குறித்ததான ஒரு அறிவைப் பின்தொடராதவர்களும், தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தொடராதவர்களும், சாத்தானின் இருளின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க இயலாமல் இருக்கிறார்கள். வெறுமனே சடங்காச்சாரத்தைப் பின்பற்றி வழக்கமான ஆராதனைகளில் கலந்துகொள்கிறவர்களாய் மதத்தை விசுவாசிப்பவர்களைப் போலவே, அவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பற்றியும், அவர்களின் மனநிலையின் மாற்றங்களில் அவர்கள் பிரவேசிப்பதைப் பற்றியும் அவர்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்கவில்லை. அது நேரத்தை வீணாக்குவது அல்லவா? தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தில், ஜீவனுக்குரிய காரியங்களில் அவன் அக்கறையுடன் இருக்கவில்லை, சத்தியத்திற்குள் பிரவேசிப்பதைத் தொடரவில்லை, அவனுடைய மனநிலையின் மாற்றங்களைத் தொடரவில்லை என்றால், தேவனின் கிரியையைக் குறித்த அறிவைப் பின்தொடர்வது மிகக் குறைவு என்றால், அவன் பரிபூரணமாக்கப்பட முடியாது. நீங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், தேவனின் கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் முக்கியத்துவத்தையும், இந்தக் கிரியை ஏன் மனிதனின் மீது மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்த வகையான சிட்சையின் போது, நீ பேதுருவைப் போன்ற அனுபவங்களையும் அறிவையும் அடைந்திட முடியுமா? நீ தேவனைப் பற்றிய பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிய அறிவைப் பின்தொடர்ந்தால், உன் மனநிலையின் மாற்றங்களைத் தொடர்ந்தால், நீ பரிபூரணமாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்களுக்கு, ஜெயங்கொள்ளப்படவேண்டிய இந்தப் படி தவிர்க்க முடியாதது. மனிதன் ஒரே ஒரு முறை ஜெயங்கொள்ளப்பட்டால் மட்டுமே அவன் பரிபூரணமாக்கப்பபடுகிற கிரியையை அனுபவிக்க முடியும். ஜெயங்கொள்ளப்படும் பொறுப்பை மட்டுமே எடுத்துக் கொள்வதில் பெரிய மதிப்பு இல்லை, இது தேவனின் பயன்பாட்டிற்கு உங்களைப் பொருத்தமானவர்களாக்காது. நீ சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதில் உன் பொறுப்பைச் செயல்படுத்த எந்த வழிமுறைகளும் உனக்கு இருக்காது, ஏனென்றால் நீ தொடரவில்லை, மேலும் உனக்குள் மாற்றத்தையும் புதுப்பித்தலையும் தொடரவில்லை, எனவே உனக்கு ஜீவியத்தின் உண்மையான அனுபவம் இல்லை. இந்தப் படிப்படியான கிரியையின் போது, நீ ஒரு முறை ஊழியஞ்செய்பவனாகவும், பிரதிபலிப்புப் படலமாகவும் செயல்பட்டாய், ஆனால் இறுதியில் நீ பேதுருவாக இருக்கத் தொடரவில்லை என்றால், உன் நாட்டம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்டப் பாதையின்படி இல்லை என்றால், இயற்கையாகவே, உன் மனநிலையில் மாற்றங்களை நீ அனுபவிக்க மாட்டாய். நீ பரிபூரணமாக்கப்படுவதைத் தொடர்பவனாக இருந்தால், நீ சாட்சி பகிர்வாய், மேலும், “தேவனின் இந்தப் படிப்படியான கிரியையில், தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையை நான் ஏற்றுக்கொண்டேன், நான் மிகுந்த துன்பங்களைத் தாங்கினாலும், தேவன் மனிதனை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார் என்பதை நான் அறிய ஆரம்பித்தேன், தேவனால் செய்யப்பட்ட கிரியையை நான் பெற்றுள்ளேன், தேவனின் நீதியைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தேன், அவருடைய சிட்சை என்னை இரட்சித்திருக்கிறது. அவருடைய நீதியான மனநிலை என்மேல் வந்து ஆசீர்வாதங்களையும் கிருபையையும் கொண்டு வந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் தான் என்னைப் பாதுகாத்து சுத்திகரித்தது. நான் தேவனால் சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டிருக்காவிட்டால், தேவனின் கடுமையான வார்த்தைகள் என்மீது வந்திருக்காவிட்டால், நான் தேவனை அறிந்திருக்க முடியாது, நான் இரட்சிக்கப்பட்டிருக்கவும் முடியாது. ஒரு சிருஷ்டியாயிருந்து சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ஒருவர் அனுபவிப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, எல்லா சிருஷ்டிகளும் தேவனின் நீதியான மனநிலையையும் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தேவனின் மனநிலை மனிதனின் இன்பத்திற்குத் தகுதியானது என்பதை இன்று நான் காண்கிறேன். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஒரு சிருஷ்டியாக, ஒருவர் தேவனின் நீதியான மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவருடைய நீதியான மனநிலையில் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது, மற்றும் அதற்கு மேலாக, அங்கே மிகுந்த அன்பும் இருக்கிறது. இன்று தேவனின் அன்பை என்னால் முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும், அதைப் பார்க்கும் நல்ல அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, மேலும் இதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்”, என்றும் நீ கூறுவாய். பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிப்பவர்கள் நடந்துவந்த பாதை இதுதான், மற்றும் இது அவர்களால் பேசப்படும் அறிவாகும். அத்தகையவர்கள் பேதுருவைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பேதுருவைப் போன்ற அனுபவங்கள் உள்ளன. அத்தகையவர்கள் ஜீவனையும் பெற்றவர்கள், சத்தியத்தைக் கொண்டவர்கள். அவர்கள் கடைசி வரை அனுபவிக்கும் போது, தேவனின் நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் நிச்சயமாக சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்து, தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்.

ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களிடம் எந்தவிதமான மகத்தான சாட்சியும் இல்லை. அவர்கள் வெறுமனே சாத்தானை வெட்கப்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தை வாழ்ந்திருக்கவில்லை. நீ இரண்டாவது இரட்சிப்பைப் பெற்றிருக்கவில்லை. நீ வெறுமனே ஒரு பாவநிவாரணபலியைப் பெற்றிருக்கிறாய், ஆனாலும் நீ பரிபூரணமாக்கப்படவில்லை. இது ஒரு பெரிய இழப்பாகும். நீங்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவற்றில் நீங்கள் பிரவேசிக்க வேண்டும். முடிவில், நீ பரிபூரணமாக்கப்பட்டு இருப்பதை நிறைவேற்றவில்லை என்றால், நீ ஒரு உண்மையான மனிதனாக இருக்க மாட்டாய், மேலும் நீ வருத்தத்தால் நிரப்பப்படுவாய். ஆரம்பத்தில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் பரிசுத்த ஜனங்களாக இருந்தார்கள், அதாவது, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் இருந்த போது பரிசுத்தர்களாக இருந்தார்கள், அசுத்தத்தால் கறைபடாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் யேகோவாவுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள், யேகோவாவுக்குத் துரோகம் செய்வது பற்றி எதுவும் தெரியாமல் இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் தொல்லை இல்லாமல் இருந்தனர், சாத்தானின் விஷம் இல்லாமல் இருந்தனர், முழு மனுகுலத்திலும் பரிசுத்தமானவர்களாக இருந்தனர். அவர்கள், எந்த அசுத்தத்தாலும் மாசுபடாதவர்களாயும், மாம்சத்தால் ஆட்கொள்ளப்படாதவர்களாயும், யேகோவாவிடம் பயபக்தியுடையவர்களாயும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர்கள் பாம்பின் விஷத்தையும், யேகோவாவிற்குத் துரோகம்பண்ணும் ஆசையையும் கொண்டிருந்தார்கள், அவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தார்கள். ஆரம்பத்தில், அவர்கள் பரிசுத்தர்களாக இருந்தார்கள், அவர்கள் யேகோவாவிவிடம் பயபக்திகொண்டார்கள், இந்த நிலையில் மட்டுமே அவர்கள் மனிதர்களாக இருந்தனர். பிற்காலத்தில், அவர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்ட பிறகு, அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தார்கள். அவர்கள் படிப்படியாக சாத்தானால் பாழாக்கப்பட்டனர், மேலும் மனிதனின் நிஜ சாயலை இழந்தனர். ஆரம்பத்தில், மனிதன் யேகோவாவின் சுவாசத்தைக் கொண்டிருந்தான், சிறிதும் கீழ்ப்படியாமை இல்லாதவனாகவும், அவன் இருதயத்தில் எந்தத் தீமையும் இல்லாதவனாகவும் இருந்தான். அந்த நேரத்தில், மனிதன் உண்மையிலேயே மனிதனாக இருந்தான். சாத்தானால் பாழாக்கப்பட்ட பிறகு, மனிதன் ஒரு மிருகமாக மாறிப்போனான். அவனுடைய எண்ணங்கள் நன்மையும் பரிசுத்தமும் இல்லாமல், தீமையும் அசுத்தமும் நிறைந்தவையாக இருந்தன. இது சாத்தான் அல்லவா? தேவனின் பெரும்பாலான கிரியைகளை நீ அனுபவித்திருக்கிறாய், ஆனாலும் நீ மாற்றப்படவில்லை அல்லது சுத்தப்படுத்தப்படவில்லை. நீ இன்னும் சாத்தானின் இராஜ்ஜியன்கீழ் வாழ்கிறாய், இன்னும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. இவன் ஜெயம்கொள்ளப்பட்டும் பரிபூரணமாக்கப்படாதஒருவன். இத்தகைய நபர் பரிபூரணமாக்கப்படவில்லை என்று ஏன் கூறப்படுகிறது? ஏனென்றால், இந்த நபர் ஜீவனையோ அல்லது தேவனின் கிரியையைக் குறித்த அறிவையோ தொடரவில்லை, மேலும் மாம்சத்தின் இன்பங்களையும், தற்காலிக ஆறுதலையும் தவிர வேறொன்றையும் இச்சிக்கவில்லை. இதன் விளைவாக, அவர்களின் ஜீவனின் மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை, மேலும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதைப் போன்ற மனிதனின் நிஜ சாயலை அவர்கள் மீண்டும் பெறவில்லை. அத்தகையவர்கள் நடை பிணங்கள், அவர்கள் ஆவி இல்லாத மரித்துப்போனவர்கள்! ஆவியில் காரியங்களைக் குறித்த அறிவைப் பின்தொடராதவர்கள், பரிசுத்தத்தைத் தொடராதவர்கள், சத்தியத்தின்படி வாழ்வதைத் தொடராதவர்கள், எதிர்மறையான பக்கத்தில் மட்டும் ஜெயங்கொள்ளப்பட திருப்தியடைபவர்கள், தேவனுடைய வார்த்தைகளால் வாழமுடியாத பரிசுத்தமான மனிதர்களாக மாற முடியாதவர்கள். இவர்கள் இரட்சிக்கப்பட்டிராத ஜனங்கள். ஏனென்றால், அவன் சத்தியம் இல்லாமல் இருந்தால், தேவனின் சோதனைகளின் போது மனிதனால் உறுதியாக நிற்க முடியாது; தேவனின் சோதனைகளின் போது உறுதியாக நிற்கக்கூடியவர்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டவர்கள். பேதுரு போன்று, பரிபூரணமாக்கப்படுவதைத் தொடரும் ஜனங்ககளையே நான் விரும்புகிறேன். இன்றைய சத்தியம் அதற்காக ஏங்குகிறவர்களுக்கும் அதைத் தேடுவோருக்கும் கொடுக்கப்படுகிறது. தேவனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறவர்களுக்கு இந்த இரட்சிப்பு அளிக்கப்படுகிறது, மேலும் அது உங்களால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு மட்டுமல்ல. அதன் நோக்கம் என்னவென்றால், நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படலாம். தேவன் உங்களை ஆதாயப்படுத்துவதற்காக நீங்கள் தேவனை ஆதாயம் செய்கிறீர்கள். இன்று நான் இந்த வார்த்தைகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன், நீங்கள் அவற்றைக் கேட்டிருக்கிறீர்கள், நீங்கள் இந்த வார்த்தைகளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும். முடிவில், நீங்கள் இந்த வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் நேரம் இந்த வார்த்தைகளின் மூலம் நான் உங்களை ஆதாயம் செய்த தருணமாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் இந்த வார்த்தைகளை ஆதாயம் செய்தும் இருப்பீர்கள், அதாவது, இந்த உயர்ந்த இரட்சிப்பை நீங்கள் ஆதாயம் செய்து இருப்பீர்கள். நீங்கள் சுத்தப்படுத்தப்பட்டவுடன், நீங்கள் ஒரு உண்மையான மனிதராகிவிட்டீர்கள். சத்தியத்தின்படி வாழவோ, அல்லது பரிபூரணமாக்கப்பட்ட ஒருவரின் சாயலின்படி வாழவோ உன்னால் இயலவில்லை என்றால், நீ ஒரு மனிதனே இல்லை என்று சொல்லலாம், ஆனால் நடைப்பிணம் என்றும், மிருகம் என்றும் சொல்லலாம், ஏனென்றால், நீ சத்தியமில்லாமல் இருக்கிறாய், அதாவது நீ யேகோவாவின் சுவாசம் இல்லாமல் இருக்கிறாய், இவ்வாறு நீ ஆவி இல்லாத மரித்த மனிதனாய் இருக்கிறாய்! ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு சாட்யமளிக்க முடியும் என்றாலும், நீ பெற்றிருப்பது ஒரு சிறிய இரட்சிப்புதானேயன்றி வேறல்ல, மேலும் நீ ஒரு ஆவி கொண்ட ஒரு ஜீவனாக மாறவில்லை. நீ சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்திருந்தாலும், உன் மனநிலை புதுப்பிக்கப்படவில்லை அல்லது அதன் விளைவாக மாற்றம் பெறவில்லை. நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், நீ இன்னும் சாத்தானுக்கு உரியவன், மேலும் நீ சுத்திகரிக்கப்பட்டிருக்கிற ஒருவன் அல்ல. பரிபூரணமாக்கப்பட்டவர்கள் மட்டுமே மதிப்பானவர்கள், மேலும் இது போன்றவர்கள் மட்டுமே உண்மையான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு நாள், யாராவது உன்னிடம், “நீ தேவனின் கிரியையை அனுபவித்திருக்கிறாய், எனவே அவருடைய கிரியை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி பேசு. தாவீது தேவனின் கிரியையை அனுபவித்தான், யேகோவாவின் கிரியைகளைக் கண்டான், மோசேயும் யேகோவாவின் கிரியைகளைக் கண்டான், அவர்கள் இருவராலும் யேகோவாவின் கிரியைகளை விவரிக்க முடிந்தது, மேலும் யேகோவாவின் அதிசயத் தன்மையைப் பற்றி பேச முடிந்தது. கடைசி நாட்களில் தேவனுடைய மனுவுருவின் கிரியையை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்; அவருடைய ஞானத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? அவருடைய கிரியையின் அதிசயத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? தேவன் உங்களிடத்தில் என்ன கோரிக்கைகளை முன்வைத்தார், நீங்கள் அவற்றை எவ்வாறு அனுபவித்தீர்கள்? கடைசி நாட்களில் நீங்கள் தேவனின் கிரியையை அனுபவித்திருக்கிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய தரிசனம் என்ன? இதைப் பற்றி நீங்கள் பேச முடியுமா? தேவனின் நீதியான மனநிலையைப் பற்றி நீங்கள் பேச முடியுமா?” என்று கேட்பார்கள். இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளும்போது நீ எவ்வாறு பதிலளிப்பாய்? “தேவன் மிகவும் நீதியுள்ளவர், அவர் நம்மை சிட்சித்து நியாயந்தீர்க்கிறார், கடினமாய் எங்களை வெளியரங்கமாக்குகிறார்; தேவனின் மனநிலை உண்மையிலேயே மனிதனால் செய்யப்படும் குற்றங்களைச் சகிக்க முடியாதது; தேவனின் கிரியையை அனுபவித்தபின், எங்களுடைய சொந்த மிருகத்தன்மையை நான் அறிந்துகொண்டேன், தேவனின் நீதியான மனநிலையை நான் உண்மையிலேயே கண்டேன்”, என்றுநீ சொன்னால், “தேவனைப் பற்றி நீ வேறு என்ன அறிந்திருக்கிறாய்? ஒருவர் எவ்வாறு ஜீவனுக்குள் பிரவேசிக்கிறார்? உன்னிடம் தனிப்பட்ட ஆசைகள் ஏதேனும் உள்ளதா?” என்று மற்றவர் உங்களிடம் தொடர்ந்து கேட்பார். “சாத்தானால் பாழாக்கப்பட்ட பிறகு, தேவனின் சிருஷ்டிகள் மிருகங்களாக மாறின, மேலும் கழுதைகளிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவையாய் இருக்கவில்லை. இன்று, நான் தேவனின் கரங்களில் வாழ்கிறேன், எனவே சிருஷ்டிகரின் விருப்பங்களை நான் நிறைவேற்றி, அவர் கற்பிக்கும் அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். எனக்கு வேறு வழியில்லை”, என்று நீ பதிலளிப்பாய். நீ அத்தகைய பொதுவானவற்றில் மட்டுமே பேசினால், நீ என்ன சொல்கிறாய் என்பது அந்த நபருக்குப் புரியாது. தேவனின் கிரியையைப் பற்றி உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று அவர்கள் உன்னிடம் கேட்கும்போது, அவர்கள் உன் தனிப்பட்ட அனுபவங்களைக் குறிப்பிடுகிறார்கள். தேவனின் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி அதை அனுபவித்தபின் உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று அவர்கள் விசாரிக்கிறார்கள், இதில் அவர்கள் உன் தனிப்பட்ட அனுபவங்களைக் குறிப்பிடுகிறார்கள், மேலும் சத்தியத்தைக் குறித்த உன் அறிவைப் பற்றி நீ பேசும்படி கேட்கிறார்கள். நீ இதுபோன்ற காரியங்களைப் பற்றி பேச முடியாமல் இருந்தால், இது நீ இன்றைய கிரியைக் குறித்து எதுவும் அறியவில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ எப்போதும் உண்மை போலத் தோன்றுகிற அல்லது உலகளவில் அறியப்பட்ட வார்த்தைகளைப் பேசுகிறாய். உன்னிடம் குறிப்பிட்ட அனுபவங்கள் எதுவும் இல்லை, உன் அறிவின் சாராம்சம் மிகக் குறைவானது, உன்னிடம் உண்மையான சாட்சிகளும் இல்லை, எனவே மற்றவர்கள் உன்னை நம்பவில்லை. தேவனைச் செயலற்று பின்பற்றுபவராக இருக்காதே, உனக்கு ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களைத் தேட வேண்டாம். குளிருமில்லாமலும் அனலுமில்லாமலும் இருப்பதன் மூலம் நீ உன்னை நாசமாக்கி, உன் ஜீவனைத் தாமதப்படுத்துகிறாய். நீ இத்தகைய மந்தமான தன்மை மற்றும் செயலற்ற தன்மையிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும், மேலும் நேர்மறையான காரியங்களைப் பின்தொடர்வதிலும், உன் சொந்த பலவீனங்களை மேற்கொள்வதிலும் நீ திறமையானவனாகிட வேண்டும், இதனால் நீ சத்தியத்தைப் பெற்று சத்தியத்தின்படி வாழமுடியும். உன் பலவீனங்களைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை, உன் குறைபாடுகள் உன் மிகப்பெரிய பிரச்சினை அல்ல. நீ அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருந்து, சத்தியத்தைத் தேடுவதற்கான உன் விருப்பமின்மையே உனது மிகப்பெரிய பிரச்சினையும், மற்றும் உனது மிகப் பெரிய குறைபாடுமாகும். உங்கள் அனைவருக்குமான மிகப்பெரிய பிரச்சனை ஒரு கோழைத்தனமான மனநிலையாகும், இதன் மூலம் நீங்கள் காரியங்கள் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் மற்றும் செயலற்று காத்திருக்கிறீர்கள். இது உங்களுடைய மிகப்பெரிய தடையாகும், மேலும் நீங்கள் சத்தியத்தைத் தொடர்வதற்கான மிகப்பெரிய எதிரியாகும். நான் பேசும் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை என்பதால் மட்டுமே நீ கீழ்ப்படிந்தால், நீ உண்மையிலேயே அறிவைப் பெறவில்லை, மேலும் நீ சத்தியத்தைப் பொக்கிஷமாமாய்க் கருதவில்லை. உன்னுடையதைப் போன்ற கீழ்ப்படிதல் சாட்சியில்லை, அத்தகையக் கீழ்ப்படிதலை நான் ஏற்கிறதில்லை. “உன்னுடைய தேவன் சரியாக எங்கிருந்து வருகிறார்? உன்னுடைய இந்த தேவனின் சாராம்சம் என்ன?”, என்று யாராவது உன்னிடம் கேட்கலாம். “அவருடைய சாராம்சம் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும்”, என்று நீ பதிலளிப்பாய். “தேவன் மனிதனிடம் இரக்கமும் அன்பும் கொண்டவர் அல்லவா? உனக்கு இது தெரியாதா?” என்று பின்னர் அவர் தொடர்ந்து கேட்கலாம். “அது மற்றவர்களின் தேவன். மதத்திற்குரிய ஜனங்கள் விசுவாசிக்கிற தேவன் அது, அது எங்கள் தேவன் அல்ல”, என்று நீ கூறுவாய். உன்னைப் போன்றவர்கள் சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்தும்போது, நீ உண்மையான வழியைச் சிதைக்கிறாய், எனவே உனக்கு என்ன பயன்? உன்னிடமிருந்து மற்றவர்கள் உண்மையான வழியை எவ்வாறு ஆதாயம் செய்ய முடியும்? நீ சத்தியம் இல்லாமல் இருக்கிறாய், மேலும் சத்தியத்தைப் பற்றி எதுவும் பேச முடியாது, மேலும், உன்னால் சத்தியத்திற்காக வாழவும் முடியாது. தேவனுக்கு முன்பாக வாழ உன்னை எது தகுதியாக்குகிறது? நீ மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரஸ்தாபப்படுத்தும்போது, மற்றும் நீ சத்தியத்தைப் பற்றி ஐக்கியம் கொண்டு தேவனுக்கு சாட்சி பகிரும்போது, நீ அவர்களை வெல்ல இயலாது என்றால், அவர்கள் உன் வார்த்தைகளை மறுப்பார்கள். நீ ஒரு வீணானவனல்லவா? தேவனின் கிரியையை நீ அதிகம் அனுபவித்திருக்கிறாய், ஆனாலும் நீ சத்தியத்தைப் பற்றி பேசும்போது அர்த்தமற்றுப் பேசுகிறாய். நீ ஒன்றுக்கும் உபயோகமில்லாதவன் அல்லவா? உனக்கு என்ன பயன் இருக்கிறது? அவரைக் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாமல், தேவனின் கிரியையை நீங்கள் அதிகமாக எவ்வாறு அனுபவித்திருக்க முடியும்? தேவனைக் குறித்த உன்னுடைய உன்மையான அறிவு என்ன என்று அவர்கள் கேட்கும்போது, நீ எந்த வார்த்தைகளுமின்றி இருக்கிறாய், அல்லது தேவன் வல்லமைமிக்கவர், நீ பெற்ற பெரிய ஆசீர்வாதங்கள் உண்மையிலேயே தேவனால் கிடைத்த உயர்வு, மற்றும் தேவனை தனிப்பட்ட முறையில் பார்ப்பதை விட பெரிய பாக்கியம் எதுவுமில்லை என்று கூறி, பொருத்தமற்ற ஒன்றைக் கொண்டு பதிலளிக்கிறாய். இதைச் சொல்வதில் என்ன மதிப்பு இருக்கிறது? அவை பயனற்ற, வெறுமையான வார்த்தைகள்! தேவனின் அநேகக் கிரியைகளை அனுபவித்திருக்கிற உனக்கு, தேவனுடைய உயர்வு தான் சத்தியம் என்று மட்டுந்தான் தெரியுமா? தேவனின் கிரியையை நீ அறிந்திருக்க வேண்டும், அப்போதுதான் நீ தேவனுக்கு உண்மையான சாட்சி பகிருவாய். சத்தியத்தை ஆதாயம் செய்யாதவர்கள் எவ்வாறு தேவனுக்குச் சாட்சி பகிர முடியும்?

இவ்வளவு கிரியைகளும், அநேக வார்த்தைகளும் உன்மேல் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால், தேவனின் கிரியையைப் பரப்ப வேண்டிய நேரம் வரும்போது நீ உன் கடமையைச் செய்ய இயலாமல் இருப்பாய், மேலும் வெட்கப்படுவாய் மற்றும் அவமானப்படுத்தப்படுவாய். அந்த நேரத்தில், நீ தேவனுக்கு மிகவும் கடன்பட்டிருப்பதாயும், தேவனைக் குறித்த உன் அறிவு மிகவும் மேலோட்டமானது என்பதையும் நீ உணருவாய். அவர் கிரியை செய்யும் போது, நீ இன்று தேவனைக் குறித்த அறிவைப் பின்தொடரவில்லை என்றால், பின்னர் அது மிகவும் தாமதமாகிவிடும். முடிவில், உனக்குப் பேசுவதற்கு எந்த அறிவும் இருக்காது. நீங்கள் ஒன்றுமில்லாமல் வெறுமையாக விடப்படுவாய். தேவனுக்கு ஒரு கணக்கொப்புவிக்க நீ எதைப் பயன்படுத்துவாய்? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? உன் முயற்சியில் நீ இப்போதே கடினமாக உழைக்க வேண்டும், இதன் மூலம் தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் மனிதனுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதையும், அவருடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்பதையும் இந்தப் பாழான தேசத்தில் மிக ஆழமாக மூழ்கவும், சேற்றிற்குள் மிக ஆழமாக மூழ்கவும் தான் வேண்டும் என்பதையும், பேதுருவைப் போலவே நீ அறிந்து கொள்வாய். ஜனங்கள் சாத்தானால் பாழாக்கப்பட்டிருக்கிறார்கள், ஒருவருக்கொருவர் சதி செய்திருக்கிறார்கள், ஒருவரையொருவர் மிதித்துத் தள்ளுகிறார்கள், அவர்களின் தேவ பயத்தை இழந்துவிட்டார்கள். அவர்களின் கீழ்ப்படியாமை மிகப் பெரியது, அவர்களின் எண்ணங்கள் மிக அதிகம், மேலும் எல்லாம் சாத்தானுக்கு உரித்தானவை. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், மனிதனின் பாழான மனநிலை சுத்திகரிக்கப்பட முடியாது, அவன் இரட்சிக்கப்படவும் முடியாது. தேவனின் மனுவுருவால் மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் கிரியையானது துல்லியமாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுவதாகும், மேலும் அவர் செய்யும் கிரியை ஆவியானவரினால் செய்யப்படும் கிரியைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. இன்று, உனக்கு இந்த கிரியையைப் பற்றி எந்த அறிவும் இல்லையென்றால், நீ மிகவும் முட்டாளானவன், அதிகமாக இழந்து விட்டாய்! நீ தேவனின் இரட்சிப்பை ஆதாயப்படுத்தவில்லை என்றால், உன் நம்பிக்கை மத ரீதியான விசுவாசமே, நீ மதத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவனாக இருப்பாய். நீ செத்துப்போன கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதால், பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை இழந்திருக்கிறாய். தேவனின் அன்பைப் பின்தொடரும் மற்றவர்களால், சத்தியத்தையும் ஜீவனையும் ஆதாயம் செய்ய முடியும், நேர்மாறாக உன் விசுவாசமோ தேவனின் அங்கீகாரத்தை ஆதாயம் செய்ய இயலாததாக இருக்கிறது. அதற்கு பதிலாக, நீ, அழிவுண்டாக்குகிற மற்றும் வெறுக்கத்தக்க கிரியைகளைச் செய்கிற ஒருவனாய், ஒரு பொல்லாத செய்கைக்காரனாய் மாறியிருக்கிறாய். நீங்கள் சாத்தானின் கேலிக்கு இலக்காகவும், சாத்தானின் கைதியாகவும் மாறிவிட்டாய். தேவன் மனிதனால் விசுவாசிக்கப்பட அல்லாமல், அவனால் நேசிக்கப்பட, அவனால் பின்தொடரப்பட, ஆராதிக்கப்பட வேண்டும். நீ இன்று தொடரவில்லை என்றால், “முன்பு நான் ஏன் தேவனைச் சரியாகப் பின்பற்றவில்லை, அவரை சரியாகத் திருப்திப்படுத்தவில்லை, என் ஜீவனின் மனநிலையில் மாற்றங்களைத் தொடரவில்லை? அந்த நேரத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாமல் போனதையும், தேவனின் வார்த்தையைக் குறித்த அறிவைப் பின்பற்றாததையும் குறித்து நான் எப்படி வருந்தாமல் இருக்கிறேன். தேவன் அப்போது நிறைய சொன்னார்; நான் எப்படிப் பின்தொடராமல் இருந்தேன்? நான் மிகவும் முட்டாளாக இருந்திருக்கிறேன்!”, என்று நீ கூறும் நாள் வரும். நீ உன்னை ஓரளவு வெறுப்பாய். இன்று, நான் சொல்லும் வார்த்தைகளை நீ நம்பவில்லை, மற்றும் நீ அவற்றைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை. இந்தக் கிரியை பிரசித்தப்படுவதற்கான நாள் வரும்போது, நீ அதின் முழுமையையும் பார்க்கும்போது, நீ வருத்தப்படுவாய், அந்த நேரத்தில் நீ வாயடைத்துப்போவாய். ஆசீர்வாதங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை அனுபவிக்க உனக்குத் தெரியவில்லை, சத்தியம் இருக்கிறது, ஆனாலும் நீ அதைத் தொடராமல் இருக்கிறாய். உனக்கே நீ அவமானத்தை வருவித்துக் கொள்கிறாயல்லவா? இன்று, தேவனின் கிரியையின் அடுத்த கட்டம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், உன்னிடம் செய்யப்படும் கோரிக்கைகளையும் மற்றும் நீ வாழும்படி கேட்கப்படுவதையும் குறித்து அதிகமாக எதுவும் இல்லை. அநேகக் கிரியை இருக்கிறது, மற்றும் அநேக சத்தியங்களும் இருக்கின்றன. அவை உன்னால் அறியப்படுவதற்குத் தகுதியற்றவையா? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன் ஆவியை எழுப்ப இயலாததாய் இருக்கிறதா? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன்னை நீயே வெறுக்க வைக்க இயலாததாய் இருக்கிறதா? சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ், அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் மாம்சத்திற்குரிய வசதியுடனும் வாழ நீ திருப்தியடைகிறாயா? நீ எல்லா மக்களையும் விடத் தாழ்ந்தவன் அல்லவா? இரட்சிப்பைக் கண்டும் அதைப் பெறத் தொடராதவர்களை விட வேறு யாரும் முட்டாள்கள் அல்லர்; இவர்கள் மாம்சத்தில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டு சாத்தானை அனுபவிக்கிறார்கள். தேவன் மீதான உங்கள் விசுவாசம் எந்த சவால்களையும் இன்னல்களையும் அல்லது சிறிதளவு கஷ்டங்களையும் ஏற்படுத்தாது என்று நீ நம்புகிறாய். நீ எப்போதும் பயனற்றக் காரியங்களையே பின்தொடர்கிறாய், மேலும் நீ ஜீவனுடன் எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை, அதற்குப் பதிலாக உன்னுடைய சொந்த ஆடம்பரமான எண்ணங்களை சத்தியத்தின் முன் வைக்கிறாய். நீ மிகவும் பயனற்றவனாய் இருக்கிறாய்! நீ ஒரு பன்றியைப் போல வாழ்கிறாய். உனக்கும் பன்றிகளுக்கும் மற்றும் நாய்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சத்தியத்தைத் தொடராதவர்களும், அதற்குப் பதிலாக மாம்சத்தை நேசிப்பவர்களும், எல்லாரும் மிருகங்கள் அல்லவா? ஆவிகள் இல்லாத மரித்தவர்கள் அனைவரும் நடைப்பிணங்கள் அல்லவா? எத்தனை வார்த்தைகள் உங்கள் மத்தியில் பேசப்பட்டிருக்கின்றன? உங்களிடையே ஒரு சிறிய கிரியை மட்டுமா செய்யப்பட்டிருக்கிறது? உங்கள் மத்தியில் நான் எவ்வளவு கொடுத்துள்ளேன்? நீங்கள் ஏன் அதை ஆதாயம் செய்யவில்லை? நீ எதைப் பற்றி புகார் செய்ய வேண்டும்? நீ மாம்சத்தை மிகவும் நேசிப்பதால் நீ எதையும் பெறவில்லை என்பதுதான் காரியம் இல்லையா? மேலும் அது உன் எண்ணங்கள் மிகவும் ஆடம்பரமாக இருப்பதால் அல்லவா? நீ மிகவும் முட்டாளாக இருப்பதால் அல்லவா? இந்த ஆசீர்வாதங்களைப் ஆதாயம் செய்ய உன்னால் இயலாது என்றால், உன்னைக் இரட்சிக்காததற்காக தேவனை நீ குறை கூற முடியுமா? உன் பிள்ளைகள் நோயிலிருந்து விடுபடவும், உன் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும், உன் மகன் ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்கவும், உன் மகள் ஒரு நல்ல புருஷனைக் கண்டுபிடிக்கவும், உன் எருதுகள் மற்றும் குதிரைகள் நிலத்தை நன்றாக உழுதிடவும், உன் பயிர்களுக்கு நல்ல வருட வானிலை கிடைக்கவும், நீ தேவனை விசுவாசித்த பிறகு சமாதானத்தை ஆதாயம் செய்யவும் மட்டுமே அவரைப் பின்பற்றுகிறாய். இதைத்தான் நீ நாடுகிறாய். உன் குடும்பத்திற்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காற்று உங்களை கடந்து செல்லாமலிருக்கவும், உன் முகம் மண்துகள்களால் தீண்டப்படாமல் இருப்பதற்காகவும், உன் குடும்பத்தின் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்காகவும், நீ எந்தவொரு பேரழிவிலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தேவனின் அரவணைப்பில் வாழவும், வசதியான வீட்டில் வாழவும், இப்படியாக உன் நாட்டம் வசதியாக வாழ்வதற்கு மட்டுமே இருக்கிறது. எப்போதும் மாம்சத்தைப் பின்தொடர்கிற உன்னைப் போன்ற ஒரு கோழை—உனக்கு இருதயம் இருக்கிறதா, உனக்கு ஆவி இருக்கிறதா? நீ ஒரு மிருகம் அல்லவா? பதிலுக்கு எதையும் கேட்காமல் நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுக்கிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. தேவனை விசுவாசிக்கிறவர்களில் நீ ஒருவனா? உண்மையான மனித வாழ்க்கையை நான் உனக்கு வழங்குகிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. நீ ஒரு பன்றி அல்லது நாயிலிருந்து வேறுபடவில்லையா? பன்றிகள் மனிதனின் வாழ்க்கையைத் தொடர்வதில்லை, அவை சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்வதில்லை, வாழ்க்கை என்னவென்று அவற்றுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு நாளும், அவை நிரம்ப சாப்பிட்ட பிறகு, அவை வெறுமனே தூங்குகின்றன. நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுத்தேன், ஆனாலும் நீ அதை ஆதாயப்படுத்தவில்லை. நீ வெறுங்கையனாய் இருக்கிறாய். இந்த ஜீவியமான பன்றியின் ஜீவியத்தைத் தொடர நீ விரும்புகிறாயா? அத்தகையவர்கள் உயிருடன் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? உன் வாழ்க்கை வெறுக்கத்தக்கது மற்றும் இழிவானது, நீ அசுத்தத்திற்கும் ஒழுக்கக்கேடிற்கும் மத்தியில் வாழ்கிறாய் மற்றும் நீ எந்த இலக்குகளையும் பின்தொடர்வதில்லை. எல்லாவற்றிலும் உன் வாழ்க்கை மிகவும் இழிவானது அல்லவா? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? இந்த வழியில் நீ தொடர்ந்து அனுபவித்தால், நீ ஒன்றுமின்மையைத் தான் பெறுவாயல்லவா? உண்மையான வழி உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நீ கடைசியில் அதை ஆதாயம் செய்ய முடியுமா இல்லையா என்பது உன் சொந்த முயற்சியைப் பொறுத்து இருக்கிறது. தேவன் ஒரு நீதியுள்ள தேவன், மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடரும் வரை, அவர் நிச்சயமாக மனிதனிடம் நடுநிலையானவராக இருப்பார். ஏனென்றால் அவர் மிகவும் நீதியுள்ளவர் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். மனிதன் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்தால், மனிதனை ஒதுக்கி வைக்க அவரால் முடியுமா? நான் எல்லா மனிதர்களிடமும் நடுநிலையானவராக இருக்கிறேன், எல்லா மனிதர்களையும் என் நீதியுள்ள மனநிலையோடு நியாயந்தீர்க்கிறேன், ஆனாலும் நான் மனிதனிடமிருந்து எதிர்பார்க்கும் தேவைகளுக்குப் பொருத்தமான நிபந்தனைகள் உள்ளன, மேலும் அவர்கள் யார் என்றாலும், எல்லா மனிதர்களாலும் என் தேவைகளானவை நிறைவேற்றப்பட வேண்டும். உன் தகுதிகள் எப்படி இருக்கின்றன, அல்லது அவற்றை நீ எவ்வளவு காலம் கொண்டிருக்கிறாய் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நீ என் வழியில் நடக்கிறாயா, சத்தியத்தை நேசித்து அதற்காகத் தாகமாயிருக்கிறாயா இல்லையா என்பதை மட்டுமே நான் கவனிக்கிறேன். நீ சத்தியத்தைக் கொண்டிராமல், அதற்குப் பதிலாக என் நாமத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி, என் வழியின்படி கிரியை செய்யாமல், அக்கறையோ கவனிப்போ இல்லாமல் வெறுமனே பின்பற்றினால், அந்த நேரத்தில் உன் தீமைக்காக நான் உன்னை அடித்துக் கீழே தள்ளி தண்டிப்பேன், அப்போது சொல்வதற்கு உனக்கு என்ன இருக்கும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று உன்னால் சொல்ல முடியுமா? இன்று, நான் பேசிய வார்த்தைகளுக்கு நீ இணங்கியிருந்தால், நான் அங்கீகரிக்கும் நபர் நீ தான். தேவனைப் பின்தொடரும் போது நீ எப்போதும் கஷ்டப்பட்டிருக்கிறாய், நல்ல மற்றும் கெட்ட காலங்களிலும் அவரைப் பின்தொடர்ந்தாய் என்றும், நல்ல மற்றும் கெட்ட நேரங்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டாய் என்றும் நீ சொல்கிறாய், ஆனால் நீ தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளின்படி வாழவில்லை. நீ தேவனுக்காக அங்குமிங்கும் ஓடவும், ஒவ்வொரு நாளும் தேவனுக்காக உன்னையே ஒப்புக்கொடுக்கவும் மட்டுமே விரும்புகிறாய், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ ஒருபோதும் நினைத்ததில்லை. “எப்படியிருந்தாலும், தேவன் நீதியுள்ளவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவருக்காகக் கஷ்டப்பட்டேன், அவருக்காக ஓடினேன், அவருக்காக என்னை அர்ப்பணித்தேன், எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் கடுமையாக உழைத்தேன்; அவர் என்னை நினைவில் வைத்திருப்பது உறுதி”, என்று நீ கூறுகிறாய். தேவன் நீதியுள்ளவர் என்பது உண்மைதான், ஆனாலும் இந்த நீதியானது எந்த அசுத்தங்களாலும் கறைபடவில்லை. அதில் எந்த மனித சித்தமும் இல்லை, அது மாம்சத்தினால் அல்லது மனிதப் பரிவர்த்தனைகளால் களங்கப்படுத்தப்படவில்லை. கலகக்காரர்களாகவும், எதிரானவர்களாவும் உள்ள அனைவரும், அவருடைய வழிக்கு இணங்காத அனைவரும், தண்டிக்கப்படுவார்கள்; யாரும் மன்னிக்கப்படுவதில்லை, யாரும் காப்பாற்றப்படுவதில்லை! சில ஜனங்கள், “இன்று நான் உமக்காக ஓடுகிறேன்; முடிவு வரும்போது, நீர் எனக்கு ஒரு சிறிய ஆசீர்வாதம் தர முடியுமா?” என்று கேட்கிறார்கள். எனவே நான் உன்னிடம், “நீ என் வார்த்தைகளுக்கு இணங்கினாயா?” என்று கேட்கிறேன். நீ பேசும் நீதியானது ஒரு பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. நான் எல்லா மனிதர்களிடமும் நீதியுள்ளவராகவும், நடுநிலைத் தவறாதவனாகவும் இருக்கிறேன் என்றும், கடைசிவரை என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும் மட்டுமே நீ நினைக்கிறாய். “என்னைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவது உறுதி” என்ற எனது வார்த்தைகளுக்கு உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது: என்னைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் தான் என்னால் முழுமையாக ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவர்கள் தான் என்னால் ஜெயம் கொள்ளப்பட்ட பிறகு, சத்தியத்தைத் தேடி, பரிபூரணமாக்கப்படுகிறார்கள். நீ என்ன நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாய்? நீ கடைசி வரை என்னைப் பின்தொடர்வதை மட்டுமே சாதித்திருக்கிறதல்லாமல் வேறு என்ன சாதித்திருக்கிறாய்? நீ என் வார்த்தைகளுக்கு இணங்கியிருக்கிறாயா? எனது ஐந்து தேவைகளில் ஒன்றை நீ நிறைவேற்றியுள்ளாய், ஆனால் மீதமுள்ள நான்கை நிறைவேற்ற உனக்கு எந்த நோக்கமும் இல்லை. நீ வெறுமனே சிக்கலற்ற, எளிதான பாதையைக் கண்டுபிடித்து, அதிர்ஷ்டத்தைப் பெறும் நம்பிக்கையுள்ள மனப்பான்மையுடன் அதைப் பின்தொடர்ந்தாய். உன்னைப் போன்ற ஒரு நபருக்கு என் நீதியான மனப்பான்மை சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், அது நீதியான தண்டனையாகும், மேலும் அது எல்லாப் பொல்லாதவர்களுக்கும் நீதியான தண்டனையாகும்; என் வழியில் நடக்காத அனைவரும் கடைசிவரை பின்பற்றினாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். இது தேவனின் நீதியாகும். மனிதனின் தண்டனையில் இந்த நீதியான மனப்பான்மை வெளிப்படுத்தப்படும்போது, மனிதன் பேச்சில்லாதவன் போலாவான், மேலும் தேவனைப் பின்தொடரும் போதும், அவர் வழியில் நடக்கவில்லை என்று அவன் வருத்தப்படுவான். “அந்த நேரத்தில், நான் தேவனைப் பின்தொடரும் போது கொஞ்சம் கஷ்டம் மட்டுமே அடைந்தேன், ஆனால் தேவனின் வழியில் நடக்கவில்லை. என்ன சாக்குப்போக்குகள் உள்ளன? தண்டிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!” ஆனாலும் அவனது மனதில், “எப்படியிருந்தாலும், நான் கடைசிவரை பின்பற்றினேன், எனவே நீர் என்னைச் சிட்சித்தாலும், அது மிகவும் கடுமையான சிட்சையாக இருக்க முடியாது, மேலும் இந்த சிட்சையைச் செய்தபின்னும் நீர் என்னை விரும்புவீர். நீர் நீதியுள்ளவர் என்று எனக்குத் தெரியும், என்னை என்றென்றும் அவ்வாறு நடத்தமாட்டீர். எல்லாவற்றிற்கும் மேலாக, அழிக்கப்படுபவர்களைப் போல நான் இருக்கவில்லை; அழிக்கப்பட வேண்டியவர்களுக்குக் கடுமையான சிட்சை கிடைக்கும், அதேசமயம் என் சிட்சையோ இலகுவாக இருக்கும்” என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். நீதியான மனநிலை என்பது நீ சொல்வது போல் இல்லை. தங்கள் பாவங்களை அறிக்கைசெய்வதில் தேர்ந்தவர்கள் மென்மையுடன் கையாளப்படுகிறார்கள் என்பது காரியம் அல்ல. நீதியே பரிசுத்தம், இது மனிதனின் குற்றத்தைச் சகிக்கமுடியாத தன்மையுள்ள ஒரு மனநிலையாகும், மேலும் அசுத்தமான மற்றும் மாறாத எல்லாம் தேவனுடைய வெறுப்பின் இலக்காகும். தேவனின் நீதியான மனப்பான்மை சட்டம் அல்ல, ஆனால் நிர்வாகக் கட்டளையாக இருக்கிறது. இது ராஜ்யத்திற்குள்ளான நிர்வாகக் கட்டளையாகும், மேலும் இந்த நிர்வாக கட்டளை என்பது சத்தியத்தைக் கொண்டிராத மற்றும் மாறாத எவருக்கும் நீதியான தண்டனையாகும், மேலும் இரட்சிப்பிற்கு இடமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் வகையின்படி வகைப்படுத்தப்படும்போது, நல்லவர்களுக்குப் பலன் கிடைக்கும், பொல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மனிதனின் இலக்கு தெளிவுபடுத்தப்படும் போது இது நடக்கும். இரட்சிப்பின் கிரியை முடிவுக்கு வரும் காலம் இது, அதன் பிறகு, மனிதனை இரட்சிக்கும் கிரியை இனி செய்யப்படாது, தீமை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்படும். சில ஜனங்கள், “அடிக்கடி அவர் பக்கத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் தேவன் நினைவில் கொள்கிறார். அவர் நம்மில் ஒருவரையும் மறக்க மாட்டார். தேவனால் பரிபூரணமாக்கப்படுவோம் என்று எங்களுக்கு உத்தரவாதம் உண்டு. கீழேயுள்ள எவரையும் அவர் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார், கீழேயுள்ளவர்களில் பரிபூரணமாக்கப்படுபவர்கள், அடிக்கடி தேவனைச் சந்திக்கும் நம்மை விட நிச்சயம் குறைவானவர்களாகவே இருப்பார்கள்; நம்மிடையே யாரும் தேவனால் மறக்கப்படவில்லை, நாம் அனைவரும் தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம், தேவனால் பரிபூரணமாக்கப்படுவோம் என்று எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள். நீங்கள் அனைவரும் இதுபோன்ற எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். இதுவா நீதி? நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தினாயா இல்லையா? உண்மையில் நீ இது போன்ற வதந்திகளைப் பிரசித்தப்படுத்துகிறாய்—உனக்கு வெட்கமேயில்லை!

இன்று, சிலர் தேவனால் பயன்படுத்தப்படுவதைத் தொடர்கிறார்கள், ஆனால் ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு அவர்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இன்று பேசப்பபட்ட வார்த்தைகளைப் பொறுத்தவரை, தேவன் ஜனங்களைப் பயன்படுத்தும் போது, நீ இன்னும் அவற்றைச் செய்ய முடியவில்லை என்றால், நீ இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதன் பரிபூரணமாக்கப்பட்ட காலத்தின் முடிவின் வருகை மனிதன் தேவனால் புறம்பாக்கப்படுவானா அல்லது பயன்படுத்தப்படுவானா என்பதைத் தீர்மானிக்கும். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் செயலற்ற தன்மை மற்றும் எதிர்மறைக்கான உதாரணங்கள் அல்லாமல் வேறல்லர். அவர்கள் மாதிரிகள் மற்றும் உதாரணங்கள், ஆனால் அவர்கள் ஒரு எதிர்முனையேத் தவிர வேறல்லர். மனித ஜீவியத்தின் மனநிலை மாறினால் மட்டுமே, உள்ளும் புறம்பும் அவன் மாற்றங்களை அடைந்தால் மட்டுமே, அவன் முற்றிலும் முழுமையாக்கப்படுவான். இன்று, நீ எதை விரும்புகிறாய்: ஜெயம் கொள்ளப்பட வேண்டுமா, அல்லது பரிபூரணமாக்கப்பட வேண்டுமா? நீ எதை அடைந்திட விரும்புகிறாய்? நீ பரிபூரணமாக்கப்படுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளாயா? நீ இன்னும் எந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யாமல் இருக்கிறாய்? நீ உன்னை எவ்வாறு சித்தப்படுத்த வேண்டும், உன் குறைபாடுகளை எவ்வாறு நீ ஈடு செய்ய வேண்டும்? நீ பரிபூரணாமாக்கப்படுவதற்கான பாதையில் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும்? நீ எவ்வாறு முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்? நீ பரிபூரணமாக்கப்படும்படி கேட்கிறாய், எனவே நீ பரிசுத்தத்தைப் பின்பற்றுகிறாயா? நீ சுத்திகரிக்கப்படுவதற்காக சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க முற்படுபவனா நீ? நீ சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்கிறாய், எனவே நீ சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ளத் தயாரா? தேவனை அறிய வேண்டுமென நீ கேட்கிறாய், ஆனால் அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்த அறிவு உனக்கு இருக்கிறதா? இன்று, அவர் உன் மீது செய்கிற பெரும்பாலான கிரியைகள் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும். உன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கிரியையைக் குறித்த உன் அறிவு என்ன? நீ அனுபவித்த சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன்னைச் சுத்திகரித்ததா? இது உன்னை மாற்றியிருக்கிறதா? இது உன்னிடம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? சாபங்கள், நியாயத்தீர்ப்புகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற இன்றைய அதிகமான கிரியைகளில் நீ சோர்வடைகிறாயா அல்லது இந்த காரியங்கள் உனக்குப் பெரிதும் பயனளிக்கின்றன என்று நினைக்கிறாயா? நீ தேவனை நேசிக்கிறாய், ஆனால் நீ ஏன் அவரை நேசிக்கிறாய்? நீ ஒரு கொஞ்சம் கிருபையைப் பெற்றதால் தேவனை நேசிக்கிறாயா? அல்லது அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்ற பிறகு நீ தேவனை நேசிக்கிறாயா? அல்லது தேவனின் சிட்சையினாலும் நியாயத்தீர்ப்பினாலும் சுத்திகரிக்கப்பட்ட பிறகு நீ தேவனை நேசிக்கிறாயா? உன்னைத் தேவனை நேசிக்க வைப்பது சரியாக எது? பரிபூரணப்படுத்தப்படுவதற்கு பேதுரு எந்த நிபந்தனைகளை நிறைவேற்றினான்? அவர் பரிபூரணமாக்கப்பட்ட பிறகு, அது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான வழிமுறை என்ன? அவன் கர்த்தராகிய இயேசுவிற்காக ஏக்கம் கொண்டதாலோ, அவரைக் காண முடியாத காரணத்தினாலோ அல்லது அவன் நிந்திக்கப்பட்டதாலோ அவன் கர்த்தராகிய இயேசுவை நேசித்தான்? அல்லது அவன் உபத்திரவங்களின் துன்பங்களை ஏற்றுக்கொண்டு, மேலும் அவனுடைய அசுத்தத்தையும் கீழ்ப்படியாமையையும் அறிய வந்து, கர்த்தருடைய பரிசுத்தத்தை அறிய வந்ததினால் கர்த்தராகிய இயேசுவை இன்னும் அதிகமாக நேசித்தானா? தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் காரணத்தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ தேவனைக் குறித்த அவன் அன்பு சுத்தமாக மாறியது? எது அது? தேவனின் கிருபையினால் நீ தேவனை நேசிக்கிறாய், மேலும் இன்று அவர் உனக்குக் கொஞ்சம் ஆசீர்வாதம் அளித்ததினால் நேசிக்கிறாய். இது உண்மையான அன்பா? நீ தேவனை எவ்வாறு நேசிக்க வேண்டும்? அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீ ஏற்றுக் கொண்டு, மேலும், அவருடைய நீதியான மனநிலையைப் பார்த்த பிறகு, நீ முழுமையாக நம்பும்படியும், அவரை ஏற்றுக்கொள்ளும்படியும் அவரை உண்மையாக நேசிக்க வேண்டுமா? பேதுருவைப் போலவே, நீ தேவனைப் போதுமான அளவு நேசிக்க முடியாது என்று சொல்ல முடியுமா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் பின்னர் நீ ஜெயங்கொள்ளப்பட முயற்சிக்கிறாயா, அல்லது தண்டனை மற்றும் நியாயத்தீர்ப்பின் பின்னர் சுத்திகரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் கவனித்துக் கொள்ளப்படவும் வேண்டுமா? இவற்றில் நீ எதைத் தொடர்கிறாய்? உன் வாழ்க்கை அர்த்தமுள்ள ஒன்றா, அல்லது அது அர்த்தமற்றதும் மற்றும் மதிப்பும் இல்லாததா? நீ மாம்சத்தை விரும்புகிறாயா, அல்லது சத்தியத்தை விரும்புகிறாயா? நீ நியாயத்தீர்ப்பை விரும்புகிறாயா அல்லது ஆறுதலை விரும்புகிறாயா? தேவனின் கிரியையை அதிகம் அனுபவித்த பிறகு, தேவனின் பரிசுத்தத்தையும் நீதியையும் கண்ட பிறகு, நீ எவ்வாறு தொடர வேண்டும்? இந்தப் பாதையில் நீ எவ்வாறு நடக்க வேண்டும்? தேவன் மீதான உன் அன்பை நீ எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன்னில் ஏதேனும் ஒரு பலனை அடைந்ததா? தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றி உனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பது நீ எப்படி வாழ்கிறாய் என்பதையும், நீ தேவனை எந்த அளவுக்கு நேசிக்கிறாய் என்பதையும் பொறுத்து இருக்கிறது! உன் உதடுகள் நீ தேவனை நேசிக்கிறாய் என்று கூறுகின்றன, ஆனாலும் நீ பழைய, பாழான மனப்பான்மையின்படியே வாழ்கிறாய். உனக்குத் தேவபயம் இல்லை, உனக்கு மனசாட்சியும் இல்லை. இத்தகையவர்கள் தேவனை நேசிக்கிறார்களா? இத்தகையவர்கள் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? அவர்கள் தேவனின் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்களா? நீ தேவனை நேசிக்கிறாய் என்றும், அவரை விசுவாசிக்கிறாய் என்றும் சொல்கிறாய், ஆனாலும் நீ உன் எண்ணங்களை விட்டுவிடவில்லை. உன் கிரியையில், பிரவேசத்தில், நீ பேசும் வார்த்தைகளில் மற்றும் உன் வாழ்க்கையில், தேவன் மீதான உன் நேசத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை, மேலும் தேவனுக்கான பயபக்தியும் இல்லை. சிட்சையும் நியாயத்தீர்ப்பும் பெற்ற ஒருவர் இவரா? இது போன்ற ஒருவர் பேதுருவாக இருக்க முடியுமா? பேதுருவைப் போன்றவர்களுக்கு அறிவு மட்டுமே இருந்து, வாழ்ந்து காட்டுதல் இருக்காதா? இன்று, மனிதன் ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டியதற்கான நிபந்தனை என்ன? பேதுருவின் ஜெபங்கள் அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைத் தவிர வேறொன்றுமில்லையா? அவை அவனுடைய இருதயத்திற்குள் இருந்து வந்த வார்த்தைகள் அல்லவா? பேதுரு ஜெபிக்க மட்டும் செய்து, சத்தியத்தை நடைமுறைப்படுத்தவில்லையா? உன் பின் தொடர்தல் யாருக்காக? தேவனின் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் போது நீ எவ்வாறு பாதுகாப்பையும் சுத்திகரிப்பையும் பெற வேண்டும்? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் மனிதனுக்கு எந்த நன்மையும் அளிக்கவில்லையா? அனைத்து நியாயத்தீர்ப்பும் தண்டனையா? சமாதானமும் மகிழ்ச்சியும், பொருள் ஆசீர்வாதங்களும், தற்காலிக ஆறுதலும் மட்டுமே மனிதனின் ஜீவியத்திற்கு நன்மை பயக்குமா? நியாயத்தீர்ப்பின் வாழ்க்கை இல்லாமல், மனிதன் ஒரு இனிமையான மற்றும் வசதியான சூழலில் வாழ்ந்தால், அவன் சுத்திகரிக்கப்பட்ட முடியுமா? மனிதன் மாற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட விரும்பினால், அவன் பரிபூரணப்படுத்தப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? இன்று நீ எந்தப் பாதையை தேர்வு செய்ய வேண்டும்?

முந்தைய: மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்

அடுத்த: நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக