அத்தியாயம் 87

நீங்கள் உங்கள் வேகத்தை விரைவுபடுத்தி நான் செய்ய விரும்பியதை செய்ய வேண்டும்—இதைத் தான் நான் உங்களுக்காக மிகுந்த ஆர்வத்துடன் எண்ணினேன். இப்போதும் கூட, எனது வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? எனது எண்ணம் உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? நான் அதிகத் தெளிவுடன் பேசியிருக்கிறேன், அதிகமதிகமாக கூறியிருக்கிறேன், ஆனால் எனது வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் முயற்சி செய்யவில்லையா? சாத்தானே, எனது திட்டத்தை அழிக்க முடியும் என்று நினைக்காதே! சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்—அதாவது சாத்தானின் சந்ததி (இது சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்களைக் குறிக்கிறது, எனவே, நிச்சயமாக அவர்கள் சாத்தானின் ஜீவனைக் கொண்டிருக்கின்றனர், அதனால் தான் அதன் சந்ததி என்று கூறப்படுகின்றனர்)—என் காலடியில் இரக்கத்திற்காக, அழுது, பல்லைக் கடித்துக்கொண்டு மன்றாடுகிறார்கள். இருப்பினும், அத்தகைய முட்டாள்தனமான செயலை நான் செய்ய மாட்டேன்! என்னால் சாத்தானை மன்னிக்க முடியுமா? சாத்தானுக்கு என்னால் இரட்சிப்பைக் கொண்டு செல்ல முடியுமா? அது சாத்தியமற்றது! நான் சொல்வதையேச் செய்வேன், நான் அதைக் குறித்து ஒருபோதும் வருத்தப்படமாட்டேன்!

நான் சொல்வதெல்லாம் நடக்கும். அது அப்படித் தானே இல்லையா? ஆயினும்கூட, நீங்கள் தொடர்ந்து என்னை நம்பாமல், எனது வார்த்தைகளைச் சந்தேகிக்கிறீர்கள், மேலும் நான் உங்களுடன் விளையாடுவதாக நினைக்கிறீர்கள். இது மிகவும் கேலிக்குரியது. நானே தேவன்! உங்களுக்குப் புரிகிறதா? நானே தேவன்! எனக்கு ஞானமோ வல்லமையோ இல்லையென்றால், நான் எனது விருப்பப்படி செய்யவோ சொல்லவோ முடியுமா? நீங்கள் இன்னும் என்னை நம்பவில்லை. நான் இந்த விஷயங்களை உங்களிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன், மேலும் அவற்றை உங்களிடம் அவ்வப்பொழுது கூறியுள்ளேன். உங்களில் பெரும்பாலோர் ஏன் இன்னும் விசுவாசிக்கவில்லை? உங்களுக்கு ஏன் இன்னும் சந்தேகம் இருக்கிறது? உங்கள் சொந்த எண்ணங்களில் ஏன் இறுக்கமாக ஒட்டிக் கொள்கிறீர்கள்? அவற்றால் உன்னை இரட்சிக்க முடியுமா? நான் சொல்வதையே செய்கிறேன். நான் உங்களிடம் எனது வார்த்தைகளை உண்மையாகக் கருதுங்கள், சந்தேகப்பட வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளேன். நீங்கள் அவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொண்டீர்களா? உங்களால் சுயமாக எதுவும் செய்ய முடியாது, இருந்தும் உங்களால் நான் செய்வதை விசுவாசிக்க முடியவில்லை. அத்தகையவர்களைக் குறித்து என்ன சொல்வது? வெளிப்படையாகச் சொல்வதென்றால், நான் உங்களை ஒருபோதும் சிருஷ்டித்ததே இல்லை என்பது போல் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீ எனக்கு ஊழியம் செய்வதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவன். அனைவரும் எனது வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும்! அனைவரும் சோதனையில் ஜெயிக்க வேண்டும்; யாரையும் நழுவ விடமாட்டேன். நிச்சயமாக, விசுவாசிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள். எனது வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் நிச்சயமாக என்னுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், அது உன் விசுவாசத்துக்கு ஏற்ப உனக்கு அருளப்பட்டு உன்னில் நிறைவேற்றப்படும். எனது முதற்பேறான குமாரர்களே! நான் இப்போது உங்களுக்கு எனது எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுக்கத் தொடங்குகிறேன். திருமணம், குடும்பம், புசித்தல், உடுத்துதல், உறங்குதல், மற்றும் அனைத்து இயற்கைப் பேரழிவுகள் (காற்று, வெயில், மழை, கடும்புயல், பனிப்பொழிவின் துன்பம், மற்றும் நீங்கள் வெறுக்கும் மற்ற அனைத்தும்) போன்ற வெறுக்கத்தக்க மாம்சப் பிணைப்புகள் அனைத்தையும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கித் தள்ள தொடங்குவீர்கள். நீங்கள் இடம், நேரம் அல்லது நிலப்பரப்பு ஆகியவற்றின் எந்த தடைகளாலும் பாதிக்கப்படாமல் கடல்கள், நிலம், மற்றும் ஆகாய மார்க்கமாக சென்று, எனது அன்பான அரவணைப்பிலும், எனது அன்பான கவனிப்பின்கீழ் எல்லாவற்றின் பொறுப்பிலும் நீங்கள் மனதார அனுபவித்து மகிழ்ந்திருப்பீர்கள்.

நான் முழுமைப்படுத்திய முதற்பேறான குமாரர்களைப் பற்றி யார் தான் பெருமைப்பட மாட்டார்கள்? அவர்கள் நிமித்தம் எனது நாமத்தைத் துதிக்காதவர் யார்? நான் ஏன் இப்போது உங்களுக்கு பல இரகசியங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்? ஏன் கடந்த காலத்தில் அல்லாமல் இப்போது விரும்புகிறேன்? இதுவும் ஒரு இரகசியம்தான்; அது உங்களுக்குத் தெரியுமா? சீனா நான் சபித்த தேசம் என்று கடந்த காலத்தில் நான் ஏன் குறிப்பிடவில்லை? எனக்கு ஊழியம் செய்பவர்களைக் குறித்து நான் ஏன் தெரியப்படுத்தவில்லை? இன்று, நான் உங்களுக்கு இதையும் சொல்கிறேன்: இன்று, எனது கருத்துப்படி, எல்லாமே நிறைவேறிவிட்டன, மேலும் எனது முதற்பேறான குமாரர்களைக் குறித்து நான் இதைச் சொல்கிறேன் (இன்றைக்கு, எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் சேர்ந்து ஆட்சி செய்ய வந்திருக்கிறார்கள்—அவர்கள் வளர்ச்சியடையத் தொடங்கியது மட்டுமல்லாமல், உண்மையில் என்னுடன் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். தற்போது, யாரில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறாரோ அவர்கள் நிச்சயமாக என்னுடன் ஆட்சி செய்வார்கள்—இது நேற்று அல்ல, நாளையும் அல்ல, இப்போது வெளிப்படுத்தப்படுகிறது.) இன்று நான் எனது இயல்பான மனிதத்தன்மையின் அனைத்து இரகசியங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன், ஏனென்றால் நான் வெளிப்படுத்த விரும்பும் மக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர், இதுவே எனது ஞானம். எனது கிரியை இந்த நிலைக்கு முன்னேறியுள்ளது: அதாவது, இந்தக் காலகட்டத்தில், நான் குறிப்பாக இந்தக் காலத்திற்கு முடிவு செய்த ஆட்சிமுறை ஆணைகளின் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதுபோல, முதற்பேறான குமாரர்கள், குமாரர்கள், ஜனங்கள் மற்றும் ஊழியம் செய்பவர்கள் ஆகியோருக்கு நான் தகுந்த உறுதிப்பாடுகளை வழங்குகிறேன், ஏனென்றால் எனக்கு அதிகாரம் உள்ளது மற்றும் நியாயத்தீர்ப்பை வழங்குவேன், மேலும் நான் இருப்புக்கோலால் ஆளுகை செய்வேன். கீழ்ப்படிதலோடு எனக்காக ஊழியம் செய்யத் துணியாதவர் யார்? என்னிடம் முறையிடத் துணிந்தவர் யார்? நான் நீதியின் தேவன் அல்ல என்று சொல்ல யார் துணிவார்கள்? எனக்கு தெரியும், உங்கள் பேய்த்தன சுபாவம் எனக்கு முன்பாக நீண்ட காலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது: நான் நல்லவராக இருப்பவரிடம் நீங்கள் பொறாமையையும் வெறுப்பையும் உணர்கிறீர்கள். இது முற்றிலும் சாத்தானிய சுபாவம்! நான் என் குமாரர்களுக்கு நல்லவன்; நான் அநீதியானவன் என்று நீ கூறத் துணிவாயா? என்னால் உன்னை முழுவதுமாக வெளியேற்ற முடியும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உனக்காக, நீ எனக்காக ஊழியம் செய்வதால், இப்போது அதற்கான நேரம் இல்லை; இல்லையெனில், நான் உன்னை வெளியேற்றியிருப்பேன்!

சாத்தானின் பிள்ளைகளே! காட்டுமிராண்டிகளாக இருப்பதை நிறுத்துங்கள்! இனி பேசாதீர்கள்! இனி செயல்பட வேண்டாம்! எனது கிரியை ஏற்கனவே நான் தெரிந்தெடுத்த குமாரர்கள் மற்றும் ஜனங்களில் மேற்கொள்ளப்படத் தொடங்கியுள்ளது, மேலும் இது ஏற்கனவே சீனாவிற்கு வெளியே இருக்கிற அனைத்து நாடுகளிலும், அனைத்து மதப்பிரிவுகளிலும், அனைத்து மதங்களிலும், அனைத்து சமூகங்களிலும் பரவி வருகிறது. எனக்காக ஊழியம் செய்பவர்கள் ஆவிக்குரிய ரீதியில் ஏன் எப்போதும் தடுக்கப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்வதே இல்லை? ஏன் இந்த ஜனங்களில் எனது ஆவி ஒருபோதும் கிரியை செய்யவில்லை? பொதுவாகச் சொன்னால், நான் முன்னரே முன்குறிக்கப்படாத அல்லது தெரிந்துகொள்ளப்படாதவர்களுக்காக என்னால் அதிக முயற்சியை மேற்கொள்ள முடியாது. எனது முந்தைய பாடுகள் அனைத்தும், எனது கடினமான பராமரிப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும், எனது முதற்பேறான குமாரர்களுக்காகவும், ஒரு சிறிய பகுதி குமாரர்கள் மற்றும் ஜனங்களுக்காகவும் இருக்கின்றன; மேலும், எனது எதிர்கால கிரியைகள் தடையின்றி முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், எனது சித்தம் தடையின்றி இருக்கும் என்பதற்காகவும் இந்தக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நானே ஞானமுள்ள தேவன் என்பதால், ஒவ்வொரு கட்டத்துக்கும் சரியான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். நான் எந்த ஒரு நபரையும் தக்கவைக்க எந்த முயற்சியும் செய்வதில்லை (இது தெரிந்துகொள்ளப்படாத அல்லது முன்குறிக்கப்படாதவர்களை நோக்கி இருக்கிறது), அல்லது எந்த ஒரு நபரையும் நான் சாதாரணமாகத் தாக்குவதும் இல்லை (இது தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் முன்குறிக்கப்பட்டவர்களை நோக்கி இருக்கிறது): இது எனது ஆட்சிமுறை ஆணை, இதை யாராலும் மாற்ற முடியாது! நான் வெறுக்கிறவர்களிடம் இரக்கமற்றவராக இருக்கிறேன்; நான் நேசிக்கிறவர்களிடம், கவனத்துடனும் பாதுகாப்பளிக்கிறவராகவும் இருக்கிறேன். எனவே, நான் சொல்வதையேச் செய்கிறேன் (என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்தான், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், என்னால் முன்குறிக்கப்பட்டவர்கள்தான், முன்குறிக்கப்பட்டவர்கள்; இவை சிருஷ்டிப்புக்கு முன்பே என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட எனது காரியங்கள்).

எனது இருதயத்தை யாரால் மாற்ற முடியும்? எனது திட்டத்துக்கு ஏற்ப எனது விருப்பப்படி செயல்படுவதைத் தவிர, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் அவசரப்பட்டுச் செயல்படத் துணிபவர் யார்? இவை அனைத்தும் எனது ஆட்சிமுறை ஆணைகள்; அவற்றில் ஒன்றையாவது என்னிடமிருந்து அகற்றத் துணிபவர் யார்? அனைத்தும் என் கட்டளைப்படியே இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் மிகவும் பாடுபட்டுள்ளார் என்றும், நேர்மையுள்ளவர் என்றும், எனது இருதயத்தை முற்றிலும் எண்ணிப் பார்க்கிறவர் என்றும் சிலர் கூறுகிறார்கள். அப்படியானால், நான் ஏன் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை? இதுவும் என்னுடைய ஆட்சிமுறை ஆணையாகும். ஒருவன் எனது சித்தங்களுடன் இசைந்து போகிறான் என்று நான் சொன்னால், அவனே எனது சித்தங்களுடன் இசைந்து போகிறான், நான் அவனை நேசிக்கிறேன்; நான் ஒருவனை சாத்தானின் பிள்ளை என்று சொன்னால், அவனை நான் வெறுக்கிறேன். யாருடைய தயவையும் பெற முயற்சி செய்யாதே! அந்த நபரை உன்னால் உண்மையிலேயே பார்க்க முடியுமா? இவை அனைத்தையும் நான் தான் தீர்மானிக்கிறேன். ஒரு குமாரன் எப்போதும் ஒரு குமாரனாக இருப்பான், சாத்தான் எப்போதும் சாத்தானாக இருப்பான்; வேறு விதத்தில் சொன்னால், மனிதனின் சுபாவம் மாறாது. நான் அவர்களை மாற்றாத வரை, அனைவரும் அவரவர் தங்கள் சொந்த வழியில் நடப்பார்கள், மேலும் அவர்களை மாற்ற முடியாது!

எனது கிரியை முன்னோக்கிச் செல்லும்போது எனது இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன். எனது கிரியை எந்தப் படிக்கு முன்னேறியுள்ளது என்று உண்மையில் உங்களுக்குத் தெரியுமா? நான் செய்வதைச் செய்யவும், நான் சொல்வதைச் சொல்வதற்கும் நீங்கள் உண்மையில் எனது ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவீர்களா? சீனாவை நான் சபித்த தேசம் என்று ஏன் குறிப்பிடுகிறேன்? முதலாவதாக, இன்றைய சீன மக்களை எனது சாயலில் சிருஷ்டித்தேன். அவர்களிடம் ஆவி இல்லை, ஆரம்பத்தில், அவர்கள் சாத்தானால் சீர்கெட்டு இருந்தார்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியவில்லை. இதனாலேயே நான் இவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை சபித்தேன். நான் இந்த மக்களை மிகவும் வெறுக்கிறேன், அவர்கள் குறிப்பிடப்படும் போதெல்லாம் நான் கோபமடைகிறேன், ஏனென்றால் அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் பிள்ளைகள். உலக நாடுகள் சீனாவை இணைத்துக் கொண்ட காலத்தை இது நினைவுபடுத்துகிறது. இன்றுவரை அது அப்படியே இருக்கிறது, அது எல்லாம் என்னுடைய சாபமாக இருக்கிறது—சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துக்கு எதிரான எனது மிகவும் சக்திவாய்ந்த நியாயத்தீர்ப்பு. இறுதியாக, நான் மற்றொரு வகையான ஜனங்களை சிருஷ்டித்தேன், அவர்களுக்குள் நான் என் முதற்பேறான குமாரர்கள், என் குமாரர்கள், என் ஜனங்கள் மற்றும் எனக்காக ஊழியம் செய்பவர்களை முன்குறித்தேன். எனவே, இன்று நான் செய்யும் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முன்பே நான் ஏற்பாடு செய்தவை. சீனாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏன் உங்களை திரும்பத் திரும்ப துன்புறுத்தி ஒடுக்குகிறார்கள்? சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனது சாபத்தால் மகிழ்ச்சியற்று, என்னை எதிர்த்து நிற்கிறது. இருப்பினும், இந்த வகையான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலின் கீழ், நான் எனது முதற்பேறான குமாரர்களை முழுமையாக்குகிறேன், இதனால் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் மற்றும் அதன் பிள்ளைகளுக்கு எதிராக வலுவான எதிர்த்தாக்குதல் நடக்கலாம். நான் அவற்றை பின்னர் சரி செய்வேன். இப்போது, எனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நீங்கள் என்னுடன் ஆட்சி செய்ய நான் அனுமதித்ததன் முக்கியத்துவத்தை நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்கிறீர்களா? சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தனது மரணத்திற்கு முற்றிலுமாக தள்ளப்பட்டுள்ளது என்று நான் சொல்லும் அதே நேரம், எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ஆட்சி செய்யும் நேரமாகும். முதற்பேறான குமாரர்களின் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் துன்புறுத்தல் எனக்கு அதிகம் ஊழியம் செய்கிறது, எனது குமாரர்கள் வளர்ந்து, எனது வீட்டின் காரியங்களை நிர்வகிக்க முடியும் போது, அந்த பொல்லாத வேலைக்காரர்கள் (ஊழியம் செய்பவர்கள்) ஒதுக்கித் தள்ளப்படுவார்கள். என் முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ஆட்சி செய்து, என் நோக்கங்களை நிறைவேற்றுவார்கள் என்பதால், நான் ஊழியம் செய்பவர்களை ஒவ்வொருவராக அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளுவேன்: அவர்கள் எப்படியும் சென்றாக வேண்டும்! சாத்தானின் சந்ததிகளும் எனது ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பதையும், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் திரும்ப விரும்பவில்லை என்பதையும் நான் முழுமையாக அறிவேன்; இருப்பினும், எனது ஆட்சிமுறை ஆணைகள் என்னிடம் உள்ளன, அவற்றை அனைவரும் கடைப்பிடித்து செயல்படுத்த வேண்டும்—மேலும் யாராலும் விலக்கு பெற முடியாது. பின்னர், எனது ஆட்சிமுறை ஆணைகள் மீறப்படுவதை தடுப்பதற்காக அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நான் உங்களுக்குச் சொல்லுவேன்.

முந்தைய: அத்தியாயம் 86

அடுத்த: அத்தியாயம் 88

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக