அத்தியாயம் 20

தேவன் முழு மனிதகுலத்தையும் சிருஷ்டித்தார், மேலும் முழு மனிதகுலத்தையும் இன்றுவரை வழிநடத்தியிருக்கிறார். இவ்வாறு, மனிதனிடையே நடக்கும் அனைத்தையும் தேவன் அறிவார்: மனித உலகில் உள்ள கசப்பை அவர் அறிவார், மனித உலகில் உள்ள இனிமையையும் புரிந்துகொள்கிறார், எனவே ஒவ்வொரு நாளும் அவர் முழு மனிதகுலத்தினுடைய ஜீவிதத்தின் நிலைமைகளையும் விவரிக்கிறார், மேலும், முழு மனிதகுலத்தின் பலவீனத்தையும் சீர்கேட்டையும் கையாளுகிறார். முழு மனிதகுலமும் பாதாளத்தில் தள்ளப்படுவதோ அல்லது முழு மனிதகுலமும் இரட்சிக்கப்படுவதோ தேவனுடைய இருதயத்தின் ஆசை அல்ல. தேவனுடைய செயல்களுக்கு எப்பொழுதும் ஒரு கொள்கை உள்ளது, இருப்பினும் அவர் செய்யும் அனைத்தின் சட்டங்களையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய மகத்துவத்தையும் கோபத்தையும் பற்றி ஜனங்கள் அறியும்பொழுது, தேவன் உடனடியாக தொனியை இரக்கம் மற்றும் அன்பிற்கு மாற்றுகிறார், ஆனால் ஜனங்கள் தேவனுடைய இரக்கம் மற்றும் அன்பைப் பற்றி அறியும் பொழுது, அவர் மறுபடியும் உடனடியாகத் தொனியை மாற்றி உயிருள்ள கோழியைப் புசிப்பதைப் போல அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதற்குக் கடினமாக்குகிறார். தேவனுடைய வார்த்தைகளில் எல்லாம், துவக்கம் ஒருபோதும் திரும்பத் திரும்ப துவங்கப்படவில்லை, மற்றும் நேற்றைய வாக்கியங்களின் கொள்கையின்படி அவரது வார்த்தைகள் எதுவும் ஒருபோதும் பேசப்படவில்லை; தொனி கூட ஒரே மாதிரியானதாக இல்லை, மற்றும் உள்ளடக்கத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை—இவை அனைத்தும் ஜனங்களை இன்னும் அதிகமான குழப்பத்தை உணர வைக்கிறது. இதுவே தேவனுடைய ஞானம் மற்றும் அவருடைய மனநிலையின் வெளிப்பாடு ஆகும். தேவனுடைய கிரியைகளை விஷமாக்குவதற்கான வாய்ப்பை சாத்தானிடமிருந்து பறித்து, சாத்தானை குழப்பிவிடும்படியாக, ஜனங்களின் கருத்துக்களைச் சிதறடிக்க அவர் தமது பேச்சின் தொனியையும் விதத்தையும் பயன்படுத்துகிறார். தேவனுடைய செயல்களின் அதிசயமானது, தேவனுடைய வார்த்தைகளால் ஜனங்களுடைய மனதை உலுக்க வைக்கிறது. அவர்கள் தங்களுடைய சொந்த நுழைவாயில் கதவை அரிதாகவே கண்டுபிடிக்க முடிகிறது, மேலும் அவர்கள் எப்போது சாப்பிட வேண்டும் அல்லது இளைப்பாற வேண்டும் என்று கூட தெரியாதவர்களாய் இருக்கிறார்கள், இவ்வாறு உண்மையிலேயே “தேவனுக்காக ஒப்புக்கொடுக்க உறக்கத்தையும் உணவையும் கைவிடுதல்” மூலமாக அடைகிறார்கள். ஆயினும், இந்தக் கட்டத்தில் கூட, தேவன் தற்போதைய சூழ்நிலைகளினால் திருப்தியடையாமலேயே இருக்கிறார், மேலும் மனுஷன் மீது எப்போதும் கோபமாக இருக்கிறார், அவனது உண்மையான இருதயத்தை வெளிப்படுத்தும்படி அவனைக் கட்டாயப்படுத்துகிறார். இல்லையென்றால், தேவன் சிறிதளவு தயவைக் காட்டியவுடன், ஜனங்கள் உடனடியாகக் “கீழ்ப்படிந்து” மந்தமாகிவிடுவார்வார்கள். இதுவே மனுஷனுடைய தாழ்வுநிலை; அவனால் அசைய முடியாது, ஆனால் அவனை நகர்த்துவதற்கு அவன் அடிக்கப்பட வேண்டும் அல்லது இழுக்கப்பட வேண்டும். “நான் காண்பவர்களில், ஒருவரும் என்னை வேண்டுமென்றோ, நேரடியாகவோ தேடியிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் எனக்கு முன்பாக வருகிறார்கள், அநேகரைப் பின்பற்றுகிறார்கள், அவர்கள் அதற்கான விலையைச் செலுத்தவோ அல்லது தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த நேரத்தைச் செலவிடவோ தயாராக இல்லை.” பூமியில் உள்ள அனைவரின் சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இவ்வாறு, அப்போஸ்தலர்களின் அல்லது தலைவர்களின் கிரியை இல்லாமல், எல்லா ஜனங்களும் நீண்ட காலமாக சிதறிப்போயிருப்பார்கள், எனவே, காலங்காலமாக, அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கான பஞ்சமே இருந்ததில்லை.

இந்த வாக்கியங்களில், முழு மனிதகுலத்தினுடைய வாழ்க்கை நிலைமைகளையும் சுருக்கமாகக் கூறுவதில் தேவன் சிறப்பு கவனம் செலுத்துகிறார். பின்வரும் வார்த்தைகள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை: “மனுஷனின் வாழ்க்கையில் சிறிதளவும் வெதுவெதுப்பு இல்லை, மனுஷர்கள் அல்லது வெளிச்சத்தின் எந்தத் தடயமும் இல்லை—ஆனாலும் அவன் எப்போதுமே தன் இன்பத்தில் திளைப்பவனாக இருக்கிறான், வாழ்நாள் முழுவதும் மதிப்பைக் குறைத்து, எதையும் சாதிக்காமல் விரைந்து செல்கிறான். கண் இமைக்கும் நேரத்தில், மரணிக்கும் நாள் நெருங்குகிறது, மனுஷன் துன்புற்று மரணிக்கிறான்.” தேவன் இன்று வரை மனிதகுலத்தின் வாழ்வை வழிநடத்தி, மனுஷனின் உலகில் வாழ்க்கையின் வெறுமையை வெளிப்படுத்துவது ஏன்? மேலும் அவர் ஏன் அனைத்து ஜனங்களின் முழு வாழ்க்கையையும் “அவசரமாக வந்து அவசரமாகப் புறப்படுவதைப் போல” விவரிக்கிறார்? இவை, எல்லாமே தேவனுடைய திட்டம் என்றும், இவை அனைத்தும் தேவனால் நியமிக்கப்பட்டவை என்றும் கூறலாம், மேலும் இதைப் போலவே மற்றொரு வகையில், இது தெய்வீக வாழ்வைத் தவிர மற்ற அனைத்தையும் தேவன் எவ்வாறு வெறுக்கிறார் என்பதைப் பிரதிபலிக்கிறது. தேவன் முழு மனிதகுலத்தையும் சிருஷ்டித்திருந்தாலும், அவர் முழு மனிதகுலத்தின் வாழ்விலும் உண்மையிலேயே ஒருபோதும் இன்பம் அடையவில்லை, எனவே அவர் மனிதகுலத்தை வெறுமனே சாத்தானுடைய சீர்கேட்டின் கீழ் இருக்க அனுமதிக்கிறார். மனிதகுலம் இந்தச் செயல்முறைக்கு உள்ளான பிறகு, அவர் மனிதகுலத்தை அழிப்பார் அல்லது இரட்சிப்பார், இதனால் மனுஷன் பூமியில் வெறுமையாக இல்லாத ஒரு வாழ்க்கையை அடைவான். இவை அனைத்தும் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, மனுஷனின் நினைவில் எப்போதும் ஒரு குற்றமில்லாத மரணத்தை மகிழ்ச்சியுடன் மரிக்க ஒருவரையும் அனுமதித்திராத ஒரு விருப்பம் இருக்கிறது—ஆனால் இந்த விருப்பத்தை அடைவது கடைசி நாட்களின் ஜனங்கள் மட்டுமே ஆவர். இன்றும், ஜனங்கள் மீள முடியாத வெறுமையின் மத்தியில் வாழ்கிறார்கள், அவர்கள் இன்னும் அந்த கண்ணுக்குத் தெரியாத விருப்பத்திற்காக காத்திருக்கிறார்கள்: “நான் என் கரங்களால் என் முகத்தை மூடிக்கொண்டு, நிலத்திற்கு அடியில் ஜனங்களை அழுத்தினால், அவர்கள் உடனடியாக மூச்சுத் திணறலை உணர்கிறார்கள், மேலும் உயிர்பிழைப்பது மிகக் கடினமாகிறது. நான் அவர்களை அழித்துவிடுவேன் என்று பயந்து, அவர்கள் அனைவரும் என்னை நோக்கிக் கூக்குரலிடுகிறார்கள், ஏனென்றால், நான் மகிமை அடையும் நாளை அவர்கள் அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள்.” இன்று எல்லா ஜனங்களின் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் அனைவரும் “ஆக்ஸிஜன்” இல்லாமல் “வெற்றிடத்தில்” வாழ்கின்றனர், இது சுவாசிப்பதை அவர்களுக்குக் கடினமாக்குகிறது. தேவன் முழு மனிதகுலமும் உயிர்வாழ்வதற்கு உதவி செய்ய மனுஷனின் நினைவில் உள்ள விருப்பத்தைப் பயன்படுத்துகிறார்; இல்லாவிட்டால், அனைவரும் “துறவிகளாக மாற வீட்டை விட்டு வெளியேறுவார்கள்,” இதன் விளைவாக மனிதகுலம் அழிந்து, முடிவுக்கு வரும். இவ்வாறு, தேவன் மனுஷனுக்கு அளித்த வாக்குத்தத்தத்தால்தான் இன்று வரை மனுஷன் உயிர் பிழைத்திருக்கிறான். இதுதான் உண்மை, ஆனால் ஒருபோதும் மனுஷன் இந்தச் சட்டத்தைக் கண்டுபிடித்திருக்கவே இல்லை, அதனால் “இரண்டாவது முறை மரணம் வந்துவிடுமோ என்ற ஆழ்ந்த பயத்தில்” ஏன் இருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது. மனிதர்களாக இருந்து, வாழ்வதைத் தொடர யாருக்கும் தைரியம் இல்லை, இருப்பினும், மரிப்பதற்கான தைரியமும் யாருக்கும் ஒருபோதும் இருந்ததில்லை, எனவேதான், ஜனங்கள் “கசப்பான மரணத்தையே அடைகிறார்கள்” என்று தேவன் கூறுகிறார். மனுஷர்களிடையே உள்ள உண்மை நிலை இதுதான். ஒருவேளை, சில ஜனங்கள் தங்களின் வாய்ப்புகளில் பின்னடைவுகளை எதிர்கொண்டு மரணத்தை நினைத்திருக்கலாம், ஆனால் இந்த எண்ணங்கள் ஒருபோதும் பலனளிக்கவில்லை; ஒருவேளை, சிலர் குடும்ப மோதல்கள் காரணமாக மரணத்தை நினைத்திருக்கலாம், ஆனால் தங்கள் அன்புக்குரியவர்கள் மீதான அக்கறையால் அவர்கள் தங்கள் விருப்பத்தை அடைய முடியாமல் இருக்கிறார்கள்; மேலும் ஒருவேளை, சிலர் தங்கள் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மரணத்தைப் பற்றி நினைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதன் வழியாகக் கடந்து செல்ல விரும்பவில்லை. இவ்வாறு, ஜனங்கள் தங்கள் இருதயங்களில் துயரத்துடன் அல்லது நிரந்தர வருத்தங்களுடன் மரிக்கின்றனர். எல்லா ஜனங்களின் பல்வேறு நிலைகளும் இப்படித்தான் இருக்கின்றன. மனிதனின் பரந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டு, முடிவில்லாத போக்கில் ஜனங்கள் வந்து செல்கிறார்கள், வாழ்வதை விட மரணத்தில் அதிக மகிழ்ச்சி இருக்கும் என்று அவர்கள் உணர்ந்தாலும், இன்னும் அவர்கள் உதட்டளவிலேயே பேசுகிறார்கள், மரித்துப் பின் மீண்டும் திரும்பி வந்து, மரணத்தின் மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பது என்று உயிருடன் இருப்பவர்களுக்குச் சொல்லி, உதாரணத்தின் மூலம் யாரையும் வழிநடத்தியிருக்கவில்லை. ஜனங்கள் வெறுக்கத்தக்க அளவிற்கு மோசமானவர்கள்: அவர்களுக்கு வெட்கமோ சுயமரியாதையோ இல்லை, அவர்கள் எப்போதும் தாங்கள் சொல்வதைச் செய்யாதவர்களாய் இருக்கிறார்கள். தேவன் தமது திட்டத்தில், தமது வாக்குத்தத்தத்தை அனுபவிக்கும் ஒரு கூட்ட ஜனங்களை முன்குறித்தார், இதனால்தான் தேவன் இவ்வாறு கூறுகிறார், “அநேக ஆவிகள் மாம்சத்தில் வாழ்ந்திருக்கின்றன, அநேக ஆவிகள் மரித்துப் பூமியில் மறுபிறப்பை எடுத்திருக்கின்றன. ஆயினும்கூட அவற்றில் எதற்கும் இன்று ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.” இன்று ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும் அனைவரும், தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து அவரால் முன்குறிக்கப்பட்டவர்களாவர். கடைசி நாட்களில் இந்த ஆவிகள் மாம்சத்தில் வாழ தேவன் ஏற்பாடு செய்தார், இறுதியில், தேவன் இந்த ஜனக் கூட்டத்தை ஆதாயப்படுத்தி, அவர்கள் சீனிமில் இருக்க ஏற்பாடு செய்வார். சாராம்சத்தில், இந்த ஜனங்களின் ஆவிகள் தேவதூதர்களாக இருப்பதால், தேவன் கூறுகிறார், “உண்மையிலேயே மனுஷனின் ஆவியில் என்னைப் பற்றிய தடயம் ஏதாவது ஒருபோதும் இருந்ததில்லையா?” உண்மையில், ஜனங்கள் மாம்சத்தில் வாழும்போது, அவர்கள் ஆவிக்குரிய உலகின் விவகாரங்களைப் பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். “மனுஷன் விருப்பமில்லாத பார்வையை என் மீது வீசுகிறான்”—என்ற இந்த சாதாரண வார்த்தைகளிலிருந்து தேவனுடைய மனநிலையைக் காணலாம். இந்த சாதாரண வார்த்தைகளுக்குள், தேவனுடைய சிக்கலான உளவியல் வெளிப்படுகிறது. சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரை, தேவனுடைய இருதயத்தில் கோபம் மற்றும் நியாயத்தீர்ப்புடன் கூடிய துக்கம் எப்போதும் இருந்திருக்கிறது, ஏனென்றால், “மனுஷன் ஒரு மலைவாழ் காட்டுமிராண்டி போன்றவன்” என்று தேவன் சொல்வதைப் போலவே, பூமியில் உள்ள ஜனங்கள் தேவனுடைய இருதயத்தின் ஆசை மீது கவனம் செலுத்த இயலாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனாலும் தேவன், “மனுஷன் வலிமைமிக்க சமுத்திரத்தின் நடுவில் இருந்து என் பக்கமாக நீந்தி வரும் நாள் வரும், அதனால் அவன் பூமியில் உள்ள அனைத்து ஐசுவரியங்களையும் அனுபவித்து, சமுத்திரத்தினால் விழுங்கப்படும் அபாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும்” என்று சொல்கிறார். இது தேவனுடைய சித்தத்தின் நிறைவேறுதலாகும், மேலும் இதைத் தவிர்க்க முடியாத போக்காகவும் விவரிக்க முடியும், மேலும் இது தேவனுடைய கிரியையை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது.

ராஜ்யம் முற்றிலுமாக பூமியில் இறங்கி வரும்பொழுது, எல்லா ஜனங்களும் தங்கள் உண்மையான சாயலை மீட்டெடுப்பார்கள். எனவே, தேவன் கூறுகிறார், “நான் என் சிங்காசனத்தின் மேல் இருந்து அனுபவிக்கிறேன், நான் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வாழ்கிறேன். தேவதூதர்கள் எனக்குப் புதிய பாடல்களையும் புதிய நடனங்களையும் அர்ப்பணிக்கிறார்கள். இனி அவர்களின் சொந்த பலவீனம் அவர்களின் முகங்களில் கண்ணீரை வழிந்தோடச் செய்யாது. இனி, எனக்கு முன்பாக, தேவதூதர்கள் அழும் சத்தத்தை நான் கேட்பதில்லை, இனி யாரும் என்னிடம் துன்பம் குறித்து குறைகூற மாட்டார்கள்.” தேவன் முழுமையான மகிமை அடையும் நாள்தான், மனுஷன் இளைப்பாறுதலை அனுபவிக்கும் நாள் என்பதை இது காட்டுகிறது; சாத்தானுடைய தொந்தரவுகளின் விளைவாக ஜனங்கள் இனி அவசரப்படுவதில்லை, உலகம் முன்னோக்கி முன்னேறிச் செல்வதை நிறுத்துகிறது, ஜனங்கள் இளைப்பாறுதலில் ஜீவிக்கிறார்கள்—ஏனென்றால் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்கள் புதிதாக்கப்பட்டிருக்கின்றன, மேலும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் பல, மேலும் வானத்திலும் பூமியிலும் உள்ள மலைகள் மற்றும் ஆறுகள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. மனுஷன் மாறிவிட்டதால், தேவனும் மாறிவிட்டார், ஆகவே அனைத்தும் மாறும். இதுவே தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் இறுதி நோக்கமாகும், இதுவே இறுதியாக நிறைவேற்றப்படும். இந்த வார்த்தைகள் அனைத்தையும் பேசுவதன் தேவனுடைய நோக்கம், முக்கியமாக மனுஷன் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளை ஜனங்கள் புரிந்து கொள்வதில்லை. தேவன் செய்யும் அனைத்தும் தேவனாலேயே திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் தேவன் யாரையும் குறுக்கிட அனுமதிக்க விரும்புவதில்லை; மாறாக, அனைத்தும் அவரால் ஏற்படுத்தப்பட்டவை மற்றும் மனிதனால் அடைய முடியாதவை என்பதைக் காண அவர் ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனால் அதைப் பார்க்க முடிந்தாலும், அல்லது கற்பனை செய்வதற்குக் கடினமாக இருந்தாலும், அனைத்தும் தேவனால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன, மேலும் சிறிதளவு மனுஷீக சிந்தனையாலும் அது கறைபடுவதை தேவன் விரும்புவதில்லை. பங்குகொள்ளும் எவரையும் தேவன் நிச்சயமாக சிறிதளவேனும் மன்னிக்கமாட்டார்; தேவன் மனுஷனைக் குறித்து எரிச்சலுள்ள தேவனாய் இருக்கிறார், மேலும் குறிப்பாக இந்த விஷயத்தில் தேவனுடைய ஆவியானவர் மிகவும் உணர்வுள்ளவராகக் காணப்படுகிறார். எனவே, யாரெல்லாம் குறுக்கிடுவதற்கான நோக்கத்தை சிறிதளவேனும் பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அக்கினியில் சாம்பலாக மாற்றும்படியாக, அவர்கள் உடனடியாக தேவனுடைய பட்சிக்கும் அக்கினி ஜுவாலையால் சூழப்படுவார்கள். ஜனங்கள் தங்கள் வரங்களை தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் காட்ட தேவன் அனுமதிப்பதில்லை, ஏனென்றால், வரம் பெற்ற அனைவரும் ஜீவனற்றவர்களாய் இருக்கிறார்கள்; சொல்லப்படுகிற இந்த வரங்கள் தேவனுக்கு மட்டுமே ஊழியம் செய்கின்றன, மேலும் சாத்தானிடமிருந்து தோன்றுகின்றன, எனவே குறிப்பாக எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாத தேவனால் வெறுக்கப்படுகின்றன. ஆயினும்கூட, பெரும்பாலும் ஜீவனற்ற ஜனங்கள் தேவனுடைய கிரியையில் பங்கேற்க வாய்ப்புள்ளது, மேலும், அவர்களின் பங்கேற்பு கண்டுபிடிக்கப்படாததாக உள்ளது: ஏனெனில், அது அவர்களின் வரங்களால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. காலங்காலமாக, வரம் பெற்றவர்கள் ஒருபோதும் உறுதியாக நிற்கவில்லை, ஏனென்றால், அவர்கள் ஜீவனற்றவர்களாக இருக்கிறார்கள், இதனால் எதிர்ப்பதற்கான வல்லமை எதுவும் இல்லாதிருக்கிறார்கள். எனவே, தேவன் கூறுகிறார், “நான் தெளிவாகப் பேசாவிட்டால், மனுஷன் ஒருபோதும் தன் நினைவுக்கு வரமாட்டான், அறியாமலே என் தண்டனையில் விழுவான்—ஏனென்றால் என் மாம்சத்தில் மனுஷன் என்னை அறிந்திருக்க மாட்டான்.” மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய அனைவரும் தேவனால் வழிநடத்தப்படுகிறார்கள், ஆனாலும் சாத்தானுடைய அடிமைத்தனத்திலும் வாழ்கிறார்கள், எனவே இச்சை அல்லது வழிபாடு அல்லது அவர்களின் சுற்றுச்சூழலின் ஏற்பாடுகள் காரணமாக ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் ஒருபோதும் இயல்பான உறவைக் கொண்டிருந்ததில்லை. இத்தகைய அசாதாரண உறவுகளே பெரும்பாலும் தேவன் வெறுப்பவைகளாகும், எனவே இதுபோன்ற உறவுகளால்தான் பின்வரும் வார்த்தைகள் தேவனுடைய வாயிலிருந்து வருகின்றன: “நான் விரும்புவது ஜீவனுள்ள ஜந்துக்களைத்தான், மரணத்தில் மூழ்கியிருக்கும் பிரேதங்களை அல்ல. நான் ராஜ்யத்தின் மேஜையில் சாய்ந்திருப்பதால், பூமியில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் என் பார்வையிடலைப் பெறும்படி கட்டளையிடுவேன்.” தேவன் முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் அவர் மாம்சம் மற்றும் இரத்தத்தினாலாகியவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறார், அவற்றில் ஒன்றைக் கூட அவர் கவனிக்கத் தவறியதில்லை. இவைகளே தேவனுடைய கிரியைகள். எனவே, எல்லா ஜனங்களையும் தங்கள் சொந்த எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் செயல்களை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீ தேவனுக்கு அவமானத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று நான் கேட்பதில்லை, மாறாக, தேவனுடைய மகிமையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும், உங்கள் செயல்கள், வார்த்தைகள் மற்றும் வாழ்க்கை அனைத்திலும் நீங்கள் சாத்தானின் நகைச்சுவைக்கு இலக்காகாதீர்கள். இதுவே எல்லா ஜனங்களுக்குமான தேவனுடைய கோரிக்கையாகும்.

முந்தைய: அத்தியாயம் 19

அடுத்த: அத்தியாயம் 21

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக