பாதை … (2)

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தேவனுடைய கிரியையின் வரிசை, படிகள் மற்றும் முறைகள் பற்றி நம் சகோதர சகோதரிகளுக்குச் சில கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இந்த விஷயங்களைத் திரும்பிப் பார்ப்பது அல்லது விரைவான சுருக்கத்தை அளிப்பது இன்னும் தகுதியானது என்று நான் நினைக்கிறேன். என் இருதயத்தில் உள்ளதைச் சொல்ல நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவேன், இந்தக் கிரியைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நான் பேச மாட்டேன். சகோதரர்களும் சகோதரிகளும் என் மனநிலையைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் என் வார்த்தைகளைப் படிக்கும் அனைவரும் என் குறைந்த வளர்ச்சியையும், என் வாழ்க்கை அனுபவத்தின் பற்றாக்குறையையும், தேவனுக்கு முன்பாக என் தலையை உயர்த்திப்பிடிக்க இயலாமையையும் புரிந்துகொண்டு மன்னிக்கும்படிக்குத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இன்னும், இவைகள் வெறும் புறநிலைக் காரணங்கள் என்பதுதான் என் உணர்வாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எதுவாக இருந்தாலும் சரி, ஒரு நபரோ, நிகழ்வோ, விஷயமோ தேவனுக்கு முன்பாக ஐக்கியப்படுவதைத் தடுக்க முடியாது, மேலும் தேவனுக்கு முன்பாகக் கடினமாக உழைப்பதில் நம் சகோதர, சகோதரிகள் என்னுடன் சேர்ந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். நான் பின்வரும் ஜெபத்தைச் செய்ய விரும்புகிறேன்: “தேவனே! தயவுசெய்து எங்கள் மீது இரக்கமாயிரும், அதனால் நானும் எனது சகோதர சகோதரிகளும் எங்கள் பொதுவான கருத்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒன்றாகப் போராட முடியும், மரணபரியந்தம் உமக்கு உண்மையாக இருக்க முடியும், ஒருபோதும் எந்த வருத்தமும்பட வேண்டியதில்லை!” இந்த வார்த்தைகள் தேவனுக்கு முன்பான எனது தீர்மானமாக இருக்கின்றன, ஆனால் அவைகள் தேவனால் பயன்படுத்தப்படும், மாம்சத்தினாலாகிய ஒரு நபராக இருக்கிற எனக்கு, அவைகள் எனது சொந்த குறிக்கோளாக இருக்கின்றன என்றும் கூறலாம். இந்த வார்த்தைகளை நான் என் பக்கத்திலுள்ள சகோதர சகோதரிகளோடு ஐக்கியத்தில் பலமுறை பகிர்ந்திருக்கிறேன், அவற்றை என் அருகில் இருப்பவர்களுக்கு ஒரு செய்தியாகக் கொடுத்திருக்கிறேன். ஜனங்கள் அவைகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் எதுவாக இருந்தாலும் சரி, இந்த வார்த்தைகள் அகநிலை முயற்சியின் ஓர் அம்சமாக மட்டுமல்ல, அதோடு கூட, அவை புறநிலை கோட்பாட்டின் ஓர் அம்சத்தையும் கொண்டிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். இதன் காரணமாக, சிலருக்குச் சில கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது, மேலும் இந்த வார்த்தைகளை உன்னுடைய குறிக்கோளாக எடுத்துக்கொள்வதும் தேவனை நேசிப்பதற்கான உன்னுடைய உந்துதல் எவ்வளவு பெரிதாகிறது என்பதைப் பார்ப்பதும் நல்லது. இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது சிலர் ஒரு குறிப்பிட்ட கருத்தை வளர்த்துக் கொண்டு இவ்வாறு நினைக்கிறார்கள்: “மரணபரியந்தம் தேவனை நேசிப்பதற்கான மிகப்பெரிய முயற்சியை அனுதினமும் பெற்றிருக்கவேண்டுமென்று ஜனங்களுக்குச் சொல்வது சாதாரண விஷயமாக எப்படி இருக்க முடியும்? நாம் பேசிக்கொண்டிருக்கிற ‘பாதை’ என்ற தலைப்பிற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” குறிப்பாக இந்த வார்த்தைகள் வசீகரிப்பதாக இருக்காது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவை ஜனங்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல அனுமதிக்கும் என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன். மேலும் தேவன் மீதான விசுவாசத்தின் பாதையின் வழியாக மனம் தளர்ந்து போகாமலும் பின்வாங்காமலும் அனைத்து வகையான உபத்திரவங்களுக்கும் அவர்களை உட்படச்செய்யும். அதனால்தான் நான் அவைகளை எப்போதும் என் குறிக்கோளாகக் கருதுகிறேன். ஜனங்களும் கூட அதிக கவனமாக அவற்றைக் குறித்து சிந்திப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், எனது சொந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்படி அனைவரையும் கட்டாயப்படுத்துவது என் நோக்கம் அல்ல—இது ஒரு பரிந்துரை மட்டுமே. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உள் இயக்கத்தையும் புரிந்துகொள்கிறார் என்று நினைக்கிறேன். தேவன் நம் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து கிரியை செய்துகொண்டிருக்கிறார், அவருடைய கிரியை அயராதது. நாம் அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் பிறந்ததால், அவர் நம்மில் இந்த வழியில் கிரியை செய்கிறார். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் பிறந்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் இந்தக் கிரியையைப் பெற்றுக் கொள்வதற்கான அதிர்ஷ்டசாலிகளாய் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, நான் நேர்மை உணர்வையும், மரியாதைக்குரிய தகுதியையும் மற்றும் தேவனின் தயையையும் மிகப்பெரிய அளவில் பெற்றிருக்கிறேன். இதுவே நமக்கான தேவனுடைய பராமரிப்பாகும். ஏனெனில், இத்தகைய பின்தங்கிய, பழமைவாத, பண்டைய, மூடநம்பிக்கையுள்ள, மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சீரழிந்த பேரரசு தேவனிடமிருந்து இத்தகைய கிரியையைப் பெற முடியும் என்பது கடைசி காலத்தில் உள்ள ஜனக்கூட்டமாகிய நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாக, இந்தக் கிரியையைப் பார்க்க ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுவார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த நேரத்தில், நீ மகிழ்ச்சியுடன் நடனமாடுவதன் மூலம் தேவனுக்கு உன்னை வெளிப்படுத்தமாட்டாயா? உன் இருதயத்தில் உள்ள பாடலை தேவனுக்கு வழங்கமாட்டாயா? அந்த நேரத்தில், நீ தேவனிடம் உன்னுடைய மனவுறுதியைக் காட்டி, அவருக்கு முன்பாக வேறோரு திட்டத்தை உருவாக்கமாட்டாயா? தேவனை விசுவாசிக்கும் சாதாரண ஜனங்கள் இவை அனைத்தையும்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மனுஷர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக ஒருவித பாவனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். உணர்வுகள் உள்ள ஒரு நபர் இதைத்தான் செய்ய வேண்டும். நம் மத்தியில் உள்ள ஒவ்வொருவரின் திறனையும், நாம் பிறந்த இடத்தையும் பார்க்கும்போது, தேவன் நம் மத்தியில் வருவதற்காக எவ்வளவு சிறுமையைச் சகித்தார் என்பதைக் காட்டுகிறது. தேவனைப் பற்றிய ஓரளவு அறிவை நாம் பெற்றிருக்கலாம், ஆனால் நமக்குத் தெரிந்தவைகளாகிய—தேவன் மிகவும் பெரியவர், மிகவும் உயர்ந்தவர், மற்றும் மிகவும் கனம்பொருந்தியவர்—ஆகிய இவைகள் மனிதகுலத்தில் அவரது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டப் போதுமானவையாகும். ஆயினும் என்னுடைய இந்த வார்த்தைகள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை ஜனங்களால் எழுத்துக்களாகவும் கோட்பாடுகளாகவும் மட்டுமே கருத முடியும், ஏனென்றால் நம் மத்தியில் உள்ள ஜனங்கள் மிகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் மந்தப்புத்தியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால், இதை ஏற்றுக்கொள்ளும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்தப் பிரச்சினையை விளக்குவதற்கு அதிக முயற்சி செய்வதே என்னுடைய ஒரே விருப்பம் ஆகும், இதனால் நம் ஆவிகள் தேவனுடைய ஆவியானாவரால் ஏவப்பட முடியும். தேவன் நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறக்கட்டும், அதனால் தேவன் செலுத்தியிருக்கிற விலைக்கிரயம், அவர் செய்திருக்கிற முயற்சிகள் மற்றும் அவர் நமக்காகச் செலவு செய்திருக்கிற வல்லமை ஆகியவற்றைக் காண முடியும்.

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேவனுடைய ஆவியானவரை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவராக, நம்முடைய திறமை எவ்வளவு குறைவாக உள்ளது என்பதைக் குறித்த ஓர் ஆழமான உணர்வை நான் பெற்றிருக்கிறேன். (நம்முடைய சகோதர சகோதரிகள் இதன் காரணமாக எதிர்மறையாக உணரமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்—இதுதான் சூழ்நிலையின் உண்மைத்தன்மை.) நாம் எதைப் பெற்றிருக்கிறோம் மற்றும் எப்படி இருக்கிறோம் ஆகிய இவைகள் அனைத்தும் மிகவும் பின்தங்கியிருப்பதை என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் நான் தெளிவாகப் பார்த்திருக்கிறேன். முக்கிய அம்சங்களின் அடிப்படையில், இது நம் வாழ்விலும் தேவனுடனான நமது உறவிலும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதையும், சாதாரண அம்சங்களின் அடிப்படையில், இது நம்முடைய ஒவ்வொரு தனிப்பட்ட கருத்துக்களையும் எண்ணங்களையும் பொருத்ததாகும். இவை அனைத்தும் புறநிலையாக இருக்கும் விஷயங்கள், அவற்றை வார்த்தைகள் அல்லது போலிகளால் மறைப்பது மிகவும் கடினமாகும். எனவே, நான் இதைச் சொல்லும்போது, பெரும்பாலான ஜனங்கள் தலையை அசைத்து, அதை ஒப்புக்கொள்கிறார்கள், அவர்களுக்கு இயல்பான பகுத்தறிவு இல்லாதவரை அதை நம்புகிறார்கள்: அத்தகையவர்கள் என்னுடைய இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை நான் மிகவும் அநாகரீகமாக இருக்கிறேன், இந்த ஜனங்களை உண்மையான மிருகங்கள் என்று வெட்கத்துடன் குறிப்பிடுகிறேன். ஏனென்றால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில், அவர்கள் பன்றிகள் அல்லது நாய்களைப் போல மிகவும் தாழ்ந்தவர்களாவர். யாரும் திறமையில் மிகவும் குறைவானவர்கள் அல்ல; அவர்கள் தேவனுக்கு முன்பாக வரத் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். ஒருவேளை என் வார்த்தைகள் மிகவும் “மரியாதையற்றவையாக” இருக்கலாம். எனக்குள் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, இந்த வகையான மிருகம் போன்ற, அசுத்தமான உயிரினத்தை நான் சபிக்கிறேன், இதனால் என் சகோதர சகோதரிகள் பலவீனமடைவதில்லை என்று நம்புகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்மிடையே இல்லை என்பதற்கான சாத்தியம் உள்ளது, ஆனால் உண்மை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அப்படிப்பட்டவர்களை இவ்வாறுதான் நடத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?

சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சாம்ராஜ்யம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தது, அது முழுவதும் சீரழிந்துவிட்டது—மேலும் இது தேவனை எதிர்த்ததால், தேவனுடைய சிட்சைக்குப் பிறகு, அது தேவனுடைய சாபங்களையும் உக்கிர கோபத்தையும் சந்தித்திருக்கிறது. இந்த நாடு, தேவனால் சபிக்கப்பட்டு தொடர்ந்து இனப் பாகுபாட்டை அனுபவித்து, பின்தங்கிய நிலையில் இருக்கிறது. நாம் பிறந்த இந்த நாடு, அசுத்த ஆவிகளின் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தின் விளைவாகத் தடையின்றி செயல்படும் அனைத்து விதமான அசுத்த ஆவிகளால் நிறைந்து காணப்படுகிறது—அதாவது அவைகள் இங்கு பிறந்தவர்களை அவமானப்படுத்துகிறது. ஜனங்களுடைய பழக்கவழக்கங்கள், மரபுகள், யோசனைகள் மற்றும் கருத்துகள் பின்தங்கியவைகளும் பழங்கால பாணியுமாக இருக்கின்றன, எனவே அவர்கள் தேவனைப் பற்றிய அனைத்து விதமான கருத்துக்களையும் உருவாக்குகின்றனர், அவற்றை இதுவரை அவர்களால் உதறித் தள்ள முடியவில்லை. குறிப்பாக, அவர்கள் தேவனுக்கு முன்பாக ஒருவிதமாகவும், அவருடைய முதுகுக்குப் பின்னால் வேறு விதமாகவும் செயல்படுகிறார்கள், சாத்தான் தேவனுக்கு ஊழியம் செய்பவன் என்று தவறாக எண்ணி அவனை வணங்கினர், இது எல்லோரையும் விட அவர்கள் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதைக் காட்டுகிறது. சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேவன் பல கிரியைகளைச் செய்து முடித்திருக்கிறார் மற்றும் அவருடைய பல வார்த்தைகளைப் பேசியிருக்கிறார், ஆனால் ஜனங்கள் இன்னும் முற்றிலும் உணர்ச்சியற்றவர்களாகவும் அலட்சியமாகவும் இருக்கிறார்கள். தாங்கள் முன்பு செய்த கிரியையை அவர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள், மேலும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த புரிதல் அவர்களுக்கு முற்றிலும் இல்லை. எதிர்காலமும் இல்லை நம்பிக்கையும் இல்லை என்று தேவன் அறிவித்தபோது, கோடை வெப்பத்துடன் உயிரோடு இருந்த திருச்சபையானது உடனடியாகக் குளிர்ச்சியான குளிர்காலத்தில் விழுந்தது. ஜனங்களுடைய உண்மையான சுயம் பகலின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தப்பட்டது மற்றும் அவர்களின் முந்தைய நம்பிக்கை, அன்பு மற்றும் பலம் அனைத்தும் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. இன்று, அவர்களில் யாரும் தங்கள் ஜீவனை மீட்டெடுக்கவில்லை. தாங்கள் தேவனை நேசிப்பதாகத் தங்கள் வார்த்தைகளால் அவர்கள் சொல்கிறார்கள், எதுவாக இருந்தாலும் சரி, தங்கள் இருதயங்களில் குறைகூறத் துணிவதில்லை என்றாலும், அவர்கள் அந்த அன்பை மட்டும் பெற்றிருக்கவில்லை. அது எதைக் குறிக்கிறது? இந்த உண்மையை நம் சகோதர, சகோதரிகள் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். தேவன் நம்மை பிரகாசமாக்குவாராக, அதன்மூலம் நாம் அனைவரும் அவருடைய தயையை அறிந்து கொள்ளவும், நம் இருதயத்தின் ஆழத்தில் நம் தேவனை நேசிக்கவும், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைகளில் தேவன் மீது கொண்டிருக்கிற அன்பை வெளிப்படுத்தவும் முடியும்; தேவன் மீது வைக்கும் உண்மை அன்பிற்கான மாறாத இருதயங்களை நமக்கு அவர் அருள்வாராக—இதற்காகவே நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதைச் சொல்லும்போது, இந்த அசுத்த நிலத்தில் பிறந்த என் சகோதர சகோதரிகளுக்காகவும் கூட நான் கொஞ்சம் அனுதாபப்படுகிறேன், எனவே சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் மீதான வெறுப்பு எனக்குள் அதிகரித்தது. இது தேவன் மீதான நமது அன்பைத் தடுக்கிறது மற்றும் நம்முடைய எதிர்கால வாய்ப்புகளுக்கான நம்முடைய பேராசையைத் தூண்டிவிடுகிறது. இது எதிர்மறையாக இருப்பதற்கும், தேவனை எதிர்ப்பதற்கும் நம்மைத் தூண்டிவிடுகிறது. தேவனுடைய அன்பை முழு இருதயத்தோடு திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு, இதுவரை நம்மை வஞ்சித்து, நம்மை சீர்கெடுத்து, நம்மை அழித்தது சிவப்பான பெரிய வலுசர்ப்பமே ஆகும். நாம் நம்முடைய இருதயங்களில் உந்துதலைப் பெற்றிருக்கிறோம், ஆனால் நமது நிமித்தமாகவே, நாம் வல்லமையற்றவர்களாக இருக்கிறோம். நாம் அனைவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான். இந்தக் காரணத்தினாலேயே, நான் அதை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெறுக்கிறேன், மேலும் அதை அழிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியாது. இருப்பினும், நான் மீண்டும் நினைக்கும் போது, இது பயனளிக்காது என்றும், மேலும் இது தேவனுக்குத் தொந்தரவை மட்டுமே கொண்டுவரும் என்றும் நினைத்தேன், எனவே நான் இந்த வார்த்தைகளுக்குத் திரும்ப வந்து—அவருடைய சித்தத்தைச் செய்யவும்—தேவனை நேசிக்கவும் நான் என் இருதயத்தை அமைத்துக்கொண்டேன். இதுதான் நான் செல்லும் பாதை—அவருடைய சிருஷ்டிகளில் ஒருவராகிய நான் நடக்க வேண்டிய பாதையும் இதுதான். இப்படித்தான் நான் என் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும். இவைகள் என் இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாகும், இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு என் சகோதர சகோதரிகள் சற்று உற்சாகம் அடைவார்கள் என்று நம்புகிறேன், இதனால் என் இருதயம் சிறிதளவு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளும். ஏனெனில், என் குறிக்கோளானது தேவனுடைய சித்தத்தைச் செய்து, அதன்மூலம் ஓர் ஒளிரும் மற்றும் பிரகாசிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிடுவதுமே ஆகும். இதனால், மனநிறைவும் ஆறுதலும் நிறைந்த இருதயத்துடன், நான் வருத்தங்கள் இல்லாமல் மரிக்க முடியும். நீ அதைச் செய்ய விரும்புகிறாயா? நீ அத்தகைய மனவுறுதியுடன் இருக்கிற ஒருவனா?

“கிழக்கு ஆசியாவின் நோய்வாய்ப்பட்ட மனிதர்” என்று அழைக்கப்படும் பகுதியில் தேவனால் கிரியை செய்ய முடிகிறது என்பது அவருடைய மிகப்பெரிய வல்லமையே ஆகும். இது அவருடைய மனத்தாழ்மை மற்றும் மறைந்திருக்கும் தன்மையாக இருக்கிறது. நம் மீதான அவரது கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சையைப் பொருட்படுத்தாமல், அவருடைய மனத்தாழ்மைக்காக நாம் அவரை நம் இருதயங்களின் ஆழத்திலிருந்து துதிக்க வேண்டும், இதற்காக இறுதிவரை அவரை நேசிக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் கட்டப்பட்டிருக்கிற ஜனங்கள் தொடர்ந்து அதன் ஆதிக்கத்தில் கீழ் வாழ்ந்து வருகின்றனர், அதைத் தூக்கி எறிந்துவிடவில்லை. அவர்கள் தொடர்ந்து மிகக்கடுமையாக தேடினார்கள் மற்றும் போராடினார்கள். கடந்த காலத்தில் அவர்கள் தூபங்களைக் காட்டினார்கள், சாத்தானை வணங்கிக் கும்பிட்டார்கள், மேலும் அவர்கள் குடும்பம் மற்றும் மதச்சார்பற்ற சிக்கல்கள் மற்றும் சமூகத் தொடர்புகளில் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு இருந்தனர். அவர்களால் அவைகளைத் தூக்கி எறிந்துவிட முடியவில்லை. தான் வாழப் பிறரைக் கெடுக்கும் இந்த வகையான சமுதாயத்தில், ஒருவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை எங்கே கண்டுபிடிக்க முடியும்? ஜனங்கள் விவரிப்பது என்னவென்றால் துன்பத்தின் ஒரு வாழ்க்கையைத்தான், அதிர்ஷ்டவசமாக, நம் வாழ்வை அவரது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் வைத்து, தேவன் இந்த அப்பாவி ஜனங்களை இரட்சித்திருக்கிறார், இதனால் நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனி கவலைகள் அற்றதுமாய் இருக்கிறது. அவருடைய கிருபையின் கீழ் நாம் இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறோம். இது தேவனுடைய ஆசீர்வாதம் இல்லையா? தேவனுக்கு முன்பாக ஆடம்பரமான கோரிக்கைகளை வைப்பதற்கான துணிச்சலை யார் பெற்றிருக்க முடியும்? அவர் நமக்கு மிகவும் கொஞ்சம் கொடுத்திருக்கிறாரா? நீங்கள் இன்னும் திருப்தி அடையவில்லையா? தேவனுடைய அன்பை நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நாம் தேவன் மீதான விசுவாசத்தின் பாதையைப் பின்பற்றுவதால் நாம் சிறிதளவு கூட பரியாசம், அவதூறு மற்றும் உபத்திரவத்தை அனுபவிக்காமல் இருக்கலாம், ஆனால் இது ஓர் அர்த்தமுள்ள விஷயம் என்று நான் விசுவாசிக்கிறேன். எதுவாக இருந்தாலும் சரி, இது மகிமைக்கான ஒரு விஷயமாகும், அவமானத்திற்கானது அல்ல, நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள் பல உள்ளன. விரக்தியான எண்ணற்ற நேரங்களில், தேவனுடைய வார்த்தைகள் ஆறுதல்களைக் கொண்டுவந்தன, மேலும் நாம் அதை அறிவதற்கு முன்பே, துக்கம் சந்தோஷமாக மாறிவிட்டது. தேவையுள்ள எண்ணற்ற நேரங்களில், தேவன் ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தார், அவருடைய வார்த்தைகள் மூலமாக நாம் போஷிக்கப்பட்டிருக்கிறோம். வியாதிப்பட்ட எண்ணற்ற நேரங்களில், தேவனுடைய வார்த்தைகள் ஜீவனைக் கொண்டுவந்தன—நாம் ஆபத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம், ஆபத்திலிருந்து பாதுகாப்பிற்குத் திரும்பிவிட்டோம். இது போன்ற பல விஷயங்களை நீ உணராமலேயே ஏற்கனவே அனுபவித்திருக்கிறாய். இதைக் குறித்த எதுவும் உனக்கு நினைவில் இல்லையா?

முந்தைய: பாதை … (1)

அடுத்த: பாதை … (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக