அத்தியாயம் 6

எல்லாவற்றிற்கும் தலைவரான சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய ராஜ வல்லமையை அவருடைய சிங்காசனத்தில் இருந்து பிரயோகிக்கிறார். அவர் பிரபஞ்சத்தையும், எல்லாவற்றையும் ஆளுகிறார், மேலும் பூமியெங்கிலும் நமக்கு வழிகாட்டும் கிரியையைச் செய்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவருடன் நெருக்கமாக இருப்போம், ஒருபோதும் ஒரு தருணத்தையும் இழக்காமல், எல்லா நேரங்களிலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகளுடன் அவருக்கு முன் அமைதியுடன் வருவோம். சுற்றியுள்ள சூழலில் இருந்து ஜனங்கள், செயல்பாடுகள் மற்றும் விஷயங்கள் அனைத்தும் அவருடைய சிங்காசனத்தின் அனுமதியால் இருக்கின்றன. எந்த ஒரு காரணத்தினாலும், உங்கள் இருதயத்தில் மனக்குறைகள் எழும்பக்கூடாது, இல்லையென்றால் தேவன் தம்முடைய கிருபையை உங்களுக்கு அளிக்க மாட்டார். நோய் வரும்போது, இது தேவனுடைய அன்பு, நிச்சயமாக அவருடைய அன்பான நோக்கங்கள் அதற்குள் மறைந்துள்ளன. உங்கள் சரீரம் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டாலும், சாத்தானிடமிருந்து எந்த யோசனைகளையும் வரவேற்க வேண்டாம். நோயின் மத்தியில் தேவனைத் துதியுங்கள், உங்கள் துதியின் மத்தியில் தேவனை அனுபவியுங்கள். நோயை எதிர்கொள்ளும்போது நம்பிக்கையை இழக்காதீர்கள், விட்டு விடாமல் மீண்டும் மீண்டும் தேடுங்கள், தேவன் தம்முடைய ஒளியால் உங்களை ஒளிரச் செய்வார். யோபுவின் நம்பிக்கை எப்படி இருந்தது? சர்வவல்லமையுள்ள தேவன் எல்லாம் வல்ல மருத்துவராவார். நோயில் தங்கியிருப்பது நோய்வாய்ப்படுவதாகும், ஆனால் ஆவியில் தங்கியிருப்பது ஆரோக்கியமாக இருப்பதாகும். ஆதலால் உனக்குக் கடைசி சுவாசம் இருக்கும் வரையிலும், தேவன் உன்னை மரிக்கவொட்டார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவன் நமக்குள் இருக்கிறது. நிச்சயமாகவே, தேவ சமூகத்தில் நாம் விசுவாசத்தில் குறைவுபட்டிருக்கிறோம்: தேவன் நமக்குள் உண்மையான விசுவாசத்தை வைப்பாரா? உண்மையில் தேவனுடைய வார்த்தை இனிமையானது! தேவனுடைய வார்த்தை ஆற்றல்மிக்க மருந்து! அது பிசாசுகளையும் சாத்தானையும் வெட்கப்படுத்துகிறது! தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்வது நமக்கு ஆதரவளிக்கிறது. அவருடைய வார்த்தை நம் இருதயங்களை இரட்சிக்க வேகமாக கிரியை செய்கிறது. அது எல்லாவற்றையும் அகற்றி, எல்லாவற்றிலும் சமாதானத்தை ஏற்படுத்துகிறது. விசுவாசமானது ஒற்றை மரப்பாலம் போன்றது: வாழ்க்கையை இழிவான வகையில் பற்றிக்கொள்பவர்கள் அதைக் கடப்பதற்கு சிரமப்படுவார்கள், ஆனால் தங்களையே அர்ப்பணிக்க தயாராய் இருப்பவர்கள் தடுமாறாமல், கவலையற்று கடந்து செல்லலாம். தேவனை அடையும்படி நாம் விசுவாசப் பாலத்தை கடந்து போய் விடுவோம் என்ற பயத்தில், சாத்தான் அவர்களை முட்டாளாக்கினதே மனிதன் கோழையான, பயப்படுகிற எண்ணங்களைக் கொண்டிருப்பதன் காரணமாகும். அவன் எண்ணங்களை நமக்கு அனுப்பும்படி சாத்தான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறான். தேவன் தம்முடைய ஒளியால் நம்மை ஒளிரச் செய்ய வேண்டும் என்று நாம் ஒவ்வொரு நொடியும் ஜெபிக்க வேண்டும், நமக்குள்ளிருந்து சாத்தானுடைய விஷத்தை வெளியேற்றும்படி நாம் ஒவ்வொரு நொடியும் தேவனைச் சார்ந்து கொள்ள வேண்டும், தேவனிடம் எப்படி நெருங்குவது என்று ஒவ்வொரு நொடியும் நம் ஆவியில் பயிற்சி செய்ய வேண்டும், தேவன் நம் முழு இருப்பின்மீதும் அதிகாரம் செய்யட்டும்.

முந்தைய: அத்தியாயம் 5

அடுத்த: அத்தியாயம் 7

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்

எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தை புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதை கைக்கொள்ளத்...

சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக்...

உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஒரு...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக