பயிற்சி (8)

நீங்கள் இன்னும் சத்தியத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்வதில்லை, உங்கள் பயிற்சியில் இன்னும் அதிகமான தவறுகள் மற்றும் மாறுபாடுகள் உள்ளன; அநேகப் பகுதிகளில், நீங்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளால் வாழ்கிறீர்கள், பயிற்சிக்கான கொள்கைகளை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறீர்கள். எனவே, சரியான பாதையில் பிரவேசிக்கும்படி ஜனங்களை வழிநடத்துவது இன்னும் அவசியமாய் இருக்கிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களால் தங்கள் மனுஷீக மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைகளைச் சீரமைக்கவும், இரண்டு அம்சங்களையும் பயிற்சிக்குள் கொண்டுவரவும் முடிகிறது, இதனால் அவர்கள் அடிக்கடி ஆதரிக்கப்படவோ அல்லது வழிநடத்தப்படவோ தேவையில்லை. அப்போதுதான் அவர்கள் உண்மையான வளர்ச்சியைப் பெற்றிருப்பார்கள். எதிர்காலத்தில் உனக்கு வழிகாட்ட யாரும் இல்லாவிட்டாலும், உன்னால் இன்னும் அனுபவிக்க முடியும். இன்று, சத்தியத்தின் எந்த அம்சங்கள் முக்கியமானவை, எது முக்கியமில்லாதவை என்பதை நீ புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் உன்னால் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும். இன்று, நீங்கள் சரியான பாதையில் வழிதடத்தப்படுகிறீர்கள், அநேக சத்தியங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள், எதிர்காலத்தில் உங்களால் இன்னும் ஆழமாகச் செல்ல முடியும். இப்போது ஜனங்களுக்குப் புரிய வைப்பதுதான் மிகவும் தூய்மையான வழி என்று சொல்லலாம். இன்று, நீ சரியான பாதையில் வழிநடத்தப்படுகிறாய்—ஒரு நாள், உன்னை வழிநடத்த யாரும் இல்லாத போது, நீ எல்லா வழிகளிலும் தூய்மையான பாதையாகிய இதன்படி பயிற்சி செய்து அதிகமாக முன்னேறுவாய். இன்று, எந்த வகையான பயிற்சிகள் சரியானவை, எவை மாறுபட்டவை என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறார்கள். இந்த விஷயங்களைப் புரிந்து கொண்ட பிறகு, எதிர்காலத்தில், அவர்களின் அனுபவங்கள் ஆழமாகச் செல்லும். இன்று, உங்கள் பயிற்சியில் உள்ள கருத்துக்கள், கற்பனைகள் மற்றும் மாறுபாடுகள் தலைகீழாக மாறி வருகின்றன, மேலும் பயிற்சி மற்றும் பிரவேசத்திற்கான பாதை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும், அதன் பிறகு இந்தக் கட்ட கிரியை முடிவடையும், மேலும் மனுஷர்களாகிய நீங்கள் நடக்க வேண்டிய பாதையில் நடக்கத் தொடங்குவீர்கள். பிறகு, என் கிரியை முடிவடையும், அதுமுதல் நீங்கள் ஒருபோதும் என்னைச் சந்திக்க மாட்டீர்கள். இன்று, உங்கள் வளர்ச்சி இன்னும் குறைவாகவே உள்ளது. மனுஷனின் சுபாவம் மற்றும் சாராம்சத்திலிருந்து எழும் பல சிரமங்கள் உள்ளன, மேலும், சில ஆழமாக வேரூன்றிய விஷயங்களும் கூட இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் உள்ளன. ஜனங்களின் சுபாவம் மற்றும் சாராம்சத்தின் நுணுக்கமான விவரங்களை நீங்கள் புரிந்து கொள்வதில்லை, இன்னும் நான் அவைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதாய் இருக்கிறது, இல்லையெனில், உங்களால் அவைகளை அடையாளம் காண முடியாது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உங்கள் எலும்புகள் மற்றும் இரத்தத்தில் உள்ள விஷயங்கள் வெளிப்படும் போது, இதுவே சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு என்று அறியப்படுகிறது. எனது கிரியை முழுமையாகவும் முற்றிலுமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது மட்டுமே நான் அதை முடிப்பேன். உங்கள் சீர்கெட்ட சாராம்சங்கள் எவ்வளவு ஆழமாக அம்பலப்படுத்தப்படுகின்றனவோ, அவ்வளவு அதிகமான அறிவை நீங்கள் பெற்றிருப்பீர்கள், மேலும் இது உங்கள் எதிர்கால சாட்சி மற்றும் பரிபூரணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை முழுமையாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே எனது கிரியை நிறைவடையும், மேலும் எனது சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீங்கள் என்னை அறிவீர்கள். என்னுடைய மனநிலையையும் நீதியையும் நீங்கள் அறிவீர்கள் என்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, என்னுடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீங்கள் அறிவீர்கள். உங்களில் பலருக்கு எனது கிரியையின் புதுமை மற்றும் விவரத்தின் அளவு பற்றிய சிறந்த கருத்துக்களைப் பெற்றிருக்கிறீர்கள். எவ்வாறாயினும், எனது கிரியை புதியதும் விரிவானதுமாய் இருக்கிறது, மேலும் உங்களைக் கைப்பிடித்து நேருக்கு நேர் பயிற்சி செய்ய நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இது மட்டுமே உங்களின் பயிற்சிக்கும், எதிர்காலத்தில் உறுதியாக நிற்கும் உங்கள் திறனுக்கும் பயனளிக்கும்; இல்லையெனில், நீங்கள் இலையுதிர் கால இலைகள் போல் வாடி, மஞ்சள் நிறமாகி மற்றும் உலர்ந்துபோய், ஒரு துளி மதிப்பு கூட இல்லாமல் போயிருப்பீர்கள். உங்கள் இருதயங்கள் மற்றும் ஆவிகளில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; நான் செய்யும் கிரியையும் நான் பேசும் வார்த்தைகளும் மிகவும் நுட்பமானவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனநிலை மற்றும் திறமையின் அடிப்படையில், நீங்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே எனது சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு பற்றிய உங்கள் அறிவு தெளிவாகும், மேலும் இன்று உனக்குத் தெரியாவிட்டாலும், நாளை நீ அறிந்துகொள்வாய். எந்த ஒரு மனுஷனும் என்னை எதிர்ப்பதை நான் சகித்துக் கொள்ளாததால், என் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளுக்கு மத்தியில் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினமும் விழுந்து போகும்.

நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த வாழ்க்கையை நியாயமான முறையில் சீர்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் நீங்கள் விரும்புகிறபடி எப்படி வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம்; உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் செய்ய உங்களுக்கு சுதந்திரம் உண்டு; நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கலாம், பாடல்கள் அல்லது பிரசங்கங்களைக் கேட்கலாம் அல்லது தியானக் குறிப்புகளை எழுதலாம்; உங்களுக்கு ஆர்வமிருந்தால், நீங்கள் பாடல்களை எழுதலாம். இவையனைத்தும் சரியான வாழ்க்கையை கட்டியெழுப்புவதில்லையா? இவை அனைத்தும் ஒரு மனுஷ வாழ்க்கையை உருவாக்க வேண்டிய விஷயங்களாய் இருக்கின்றன. ஜனங்கள் இயல்பாக வாழ வேண்டும்; அவர்கள் தங்களின் இயல்பான மனிதத்தன்மையிலும் ஆவிக்குரிய வாழ்விலும் பலன்களை அறுவடை செய்திருக்கும் போதுதான், அவர்கள் இயல்பான வாழ்க்கைக்குள் பிரவேசித்துவிட்டதாகக் கருத முடியும். இன்று, மனிதகுலத்தைப் பொறுத்தவரை மட்டுமே, உங்களுக்கு நுண்ணறிவும் பகுத்தறிவும் குறைவுபட்டிருக்கவில்லை. ஜனங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், மற்றும் நீ சந்திக்கிற பாடங்கள் அனைத்தும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்தான் என்பது போன்ற, ஜனங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய பல தரிசனங்களும் உள்ளன. நீ சூழலுக்கு ஏற்றவாறு இருக்கக்கூடியவனாக வேண்டும். உன் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், அது பலனளிக்கும்படி நீண்ட காலத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டும். இயல்பான, மனித வாழ்க்கைக்கு நீங்கள் உங்களைச் சீர்படுத்திக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, மேலும் ஜீவனுக்குள்ளான உங்கள் பிரவேசத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, நீ தேவனுடைய அநேக வார்த்தைகளைப் புரிந்து கொண்டாய்—அந்த நேரத்தில் நீ புரிந்து கொள்ளாதவைகளை—இப்போது மீண்டும் வாசிக்கிறாய், உன் இருதயம் மேலும் உறுதியானதாயிருக்கிறது. இவைகளும் நீ பெற்ற பலன்கள்தான். எந்த நாளில் நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுகிறாயோ உனக்குள் ஒரு சிறிய புரிதல் இருக்கும், நீ உன் சகோதர சகோதரிகளுடன் விடுதலையுடன் ஐக்கியங்கொள்ளலாம். நீ பெற்றிருக்க வேண்டிய வாழ்க்கை இதுவல்லவா? சில சமயங்களில், சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன, அல்லது நீ ஒரு தலைப்பைப் பற்றி சிந்திக்கிறாய், அது உன்னை பகுத்தறிவதில் சிறந்தவனாக்குகிறது, மேலும் உனக்கு அதிக நுண்ணறிவையும் ஞானத்தையும் தருகிறது, சில சத்தியங்களைப் புரிந்துகொள்ள உன்னை அனுமதிக்கிறது—அது இன்று பேசப்படுகிற ஆவிக்குரிய வாழ்க்கையில் உள்ளதல்லவா? ஆவிக்குரிய வாழ்வின் ஒரு அம்சத்தை மட்டும் நடைமுறைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல; தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் பானம்பண்ணுதல், ஜெபம் செய்தல் மற்றும் பாடல்களைப் பாடுதல் அனைத்தும் ஆவிக்குரிய வாழ்க்கையை உருவாக்குகின்றன, மேலும் நீங்கள் ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையைப் பெற்றிருக்கும்போது, நீங்கள் இயல்பான மனிதத்தன்மையுள்ள வாழ்க்கையையும் கொண்டிருக்க வேண்டும். இன்று, சொல்லப்பட்டவற்றில் பெரும்பாலானவை ஜனங்களுக்குப் பகுத்தறிவையும் நுண்ணறிவையும் வழங்குவதற்காகவும், அவர்கள் இயல்பான மனிதத் தன்மையுள்ள வாழ்க்கையைப் பெற அனுமதிப்பதற்காகவும் உள்ளன. நுண்ணறிவு கொண்டிருப்பது என்றால் என்ன; இயல்பான ஒருவருக்கொருவர் இடையிலான தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன; நீ ஜனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்—தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலம் நீ இந்த விஷயங்களில் உன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும், உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது சாதாரண மனிதத்தன்மையின் மூலம் அடையக்கூடியதே ஆகும். நீ மேம்படுத்த வேண்டிய விஷயங்களில் உன்னை மேம்படுத்து, மேலும் சரியானதை மீறாதே; சிலர் எல்லாவிதமான வார்த்தைகளையும் சொற்களஞ்சியத்தையும் பயன்படுத்துகிறார்கள், இதில் அவர்கள் தங்கள் வசீகரத்தைப் பறைசாற்றுகிறார்கள். எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கும் மற்றவர்களும் இருக்கிறார்கள், அதன் மூலம் அவர்கள் மாம்சத்தின் இச்சைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உலகின் பெரிய மனுஷர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் சுயசரிதைகள் மற்றும் மேற்கோள்களைப் படிக்கிறார்கள் மற்றும் பின்பற்றுகிறார்கள், மற்றும் ஆபாசப் புத்தகங்களையும் படிக்கிறார்கள்—இது இன்னும் சிரிப்பாக இருக்கிறது! இது போன்றவர்களுக்கு ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான பாதையும் தெரிவதில்லை, இன்றைய தேவனுடைய கிரியையை அவர்கள் அறிந்திருப்பதுமில்லை. ஒவ்வொரு நாளையும் எப்படிக் கழிப்பது என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் வாழ்வின் வெறுமை அப்படி! அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பது பற்றி முற்றிலும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். பேசுவது அவர்களின் சொந்த பிரவேசத்தை மாற்றுவது போல, அவர்கள் செய்வது எல்லாம் பேசுவதும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதும்தான். அவர்களுக்கு வெட்கமே இருப்பதில்லையா? இந்த ஜனங்கள் எப்படி வாழ வேண்டுமென்று தெரியாதவர்கள், மனுஷ வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்கள்; அவர்கள் நாள் முழுவதும் தங்கள் முகங்களை அலங்கரித்து, அர்த்தமற்ற காரியங்களைச் செய்கிறார்கள்—இப்படி வாழ்வதில் என்ன பயன்? பலருக்கு வேலை செய்வது, புசிப்பது, உடை உடுத்துவது தவிர, அவர்களின் பொன்னான நேரமானது, வேடிக்கையாக அல்லது முட்டாள்தனமாக சுற்றித்திரிதல், வதந்திகளைப் பரப்புதல் அல்லது நாள் முழுவதும் தூங்குவது போன்ற அர்த்தமற்ற விஷயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதுதான் ஒரு பரிசுத்தவானுடைய வாழ்க்கையா? இதுவா ஓர் இயல்பான மனுஷனின் வாழ்க்கை? அத்தகைய வாழ்க்கை தாழ்ந்த, பின்தங்கிய, மற்றும் அக்கறையற்ற நிலையில் இருக்கும்போது உன்னைப் பரிபூரணமாக்க முடியுமா? நீ ஒன்றுமில்லாத விஷயத்திற்காகச் சாத்தானுக்கு உன்னை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறாயா? ஜனங்களின் வாழ்க்கை சுலபமாக இருந்து, அவர்களின் சூழலில் எந்தத் துன்பமும் இல்லை என்றால், அவர்கள் அனுபவிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். வசதியான சூழலில், ஜனங்கள் சீரழிந்து போவது எளிது—ஆனால் பாதகமான சூழல்கள் உன்னை அதிக அவசரத்துடன் ஜெபிக்க வைக்கின்றன, மேலும் நீ தேவனை விட்டுவிடத் துணியாதபடி செய்கின்றன. அசட்டையாகவும் மந்தமாகவும் இருக்கும் ஜனங்களின் வாழ்க்கையானது, வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர்கள் உணரும் வகையில், மேலும் அவர்கள் மரித்துவிடுவது நல்லது என்று கூட உணரும் வகையில் காணப்படுகின்றன. இப்படித்தான் சீர்கெட்ட ஜனங்களின் மாம்சம் இருக்கிறது; அவர்கள் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே பயனடைவார்கள்.

இயேசுவின் அந்தக் கட்ட கிரியையானது யூதேயாவிலும் கலிலேயாவிலும் செய்யப்பட்டது, புறஜாதியார் அதை அறிந்திருக்கவில்லை. அவர் செய்த கிரியை மிகவும் இரகசியமாக இருந்தது, இஸ்ரவேலைத் தவிர வேறு எந்த நாடுகளும் அதை அறிந்திருக்கவில்லை. இயேசு தம்முடைய கிரியையை முடித்ததும், அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியபோதுதான் ஜனங்கள் அதை அறிந்தார்கள், அந்த நேரத்தில் அவர் புறப்பட்டுவிட்டார். இயேசு ஒரு கட்ட கிரியையைச் செய்ய வந்தார், சிலரை ஆதாயப்படுத்தி, ஒரு கட்ட கிரியையை முடித்தார். தேவன் எந்தக் கட்டத்தில் கிரியை செய்தாலும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அது தேவனால் மட்டுமே செய்யப்பட்டால், அது அர்த்தமற்றதாக இருக்கும்; அந்தக் கட்ட கிரியையை அவர் முடிவு பரியந்தம் நிறைவேற்றும் வரை தேவனைப் பின்பற்ற ஜனங்கள் இருக்க வேண்டும். தேவனுடைய கிரியை முடிந்த பின்பு மட்டுமே ஜனங்கள் தேவனால் கட்டளையிடப்பட்ட கிரியையைச் செய்யத் தொடங்குகிறார்கள், அப்போதுதான் தேவனுடைய கிரியை பரவத் தொடங்குகிறது. தேவன் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் கிரியையை மட்டுமே செய்கிறார்; அதைத் தொடர்வதே ஜனங்களின் வேலையாகும். எனவே, இன்றைய கிரியை நீண்ட காலம் நீடிக்காது; மனுஷனுடனான எனது வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது. நான் என் கிரியையை மட்டுமே நிறைவேற்றுகிறேன், மேலும் நீங்கள் செய்ய வேண்டிய கடமையை நீங்கள் செய்ய வேண்டும், இதனால் இந்தக் கிரியையும் இந்த சுவிசேஷமும் புறஜாதிகளிடையேயும் மற்ற தேசத்தினர்களிடையேயும் கூடிய விரைவில் பரவ முடியும்—இதனால் மட்டுமே நீங்கள் மனுஷர்களாக உங்கள் கடமையை நிறைவேற்ற முடியும். இன்றைய காலமானது எல்லாவற்றிலும் மிகவும் விலையேறப்பெற்றது. நீ அதைப் புறக்கணித்தால், நீ ஒரு முட்டாள்; இந்தச் சூழலில், நீ இந்த வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, இந்தக் கிரியையை அனுபவித்தும், இன்னும் உனக்கு சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான மனவுறுதி இல்லாதிருந்தால், மற்றும் பாரத்தைக் குறித்து சிறிதளவு உணர்வும் இல்லாதிருந்தால்—உன்னுடைய எதிர்காலம் எப்படிப்பட்டதாய் இருக்கும்? உன்னைப் போன்ற ஒரு நபர் புறம்பாக்கப்படுதலுக்குத் தகுதியானவன் அல்லவா?

முந்தைய: பயிற்சி (7)

அடுத்த: இஸ்ரவேலர்கள் செய்ததைப் போல ஊழியம் செய்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக