தேவனுடைய கிரியையின் படிகள்

வெளியில் இருந்து பார்த்தால், தேவனுடைய தற்போதைய கிரியையின் படிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன; மனுஷன் ஏற்கனவே தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, தண்டனை, அடிக்கப்படுதல் மற்றும் புடமிடப்படுதல் ஆகியவற்றை அனுபவித்திருக்கிறான்; மேலும் சேவை செய்பவர்களின் உபத்திரவம், தண்டனைக் காலத்தின் புடமிடப்படுதல், மரணத்தின் உபத்திரவம், பிரதிபலிப்புப் படலங்களின் உபத்திரவம் மற்றும் தேவனை நேசிக்கும் காலம் ஆகிய இத்தகைய படிகளைக் கடந்துபோயிருப்பதாகத் தோன்றும். இருப்பினும், ஒவ்வொரு அடியிலும் பெரும் கஷ்டங்களை அனுபவித்த போதிலும், ஜனங்கள் தேவனின் சித்தத்தை அறியாமலே இருக்கிறார்கள். உதாரணமாக, சேவை செய்பவர்களின் உபத்திரவத்தைக் கவனியுங்கள்: அவர்கள் எதை ஆதாயப்படுத்தினார்கள், அவர்கள் எதை அறிந்தார்கள், மேலும் தேவன் அடைய விரும்பிய விளைவு குறித்தும் அவர்கள் இன்னும் தெளிவற்று காணப்படுகிறார்கள். தேவனுடைய கிரியையின் வேகத்தைப் பார்க்கும்போது, மனுஷன் இன்றைய வேகத்தைக் கடைப்பிடிக்க முற்றிலும் இயலாதவனாய் காணப்படுகிறான். தேவன் தனது கிரியையின் இந்தப் படிகளை முதலில் மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதையும், மனுஷன் கற்பனை செய்யக்கூடிய ஏதாவது ஒரு படிகளில் தேவையான ஒரு நிலையை அடைவதற்கு முன்பாக, அவர் ஒரு பிரச்சினையின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்பதைக் காணலாம். தேவன் ஒருவரை பரிபூரணமாக்குவதற்கு, அவர்களை உண்மையிலேயே அவர் ஆதாயப்படுத்திக்கொள்ளும்படியாக, அவர் மேலே உள்ள அனைத்து படிகளையும் செய்ய வேண்டும். இந்த கிரியையை செய்வதன் குறிக்கோள், ஒரு கூட்ட ஜனங்களை பூரணப்படுத்துவதற்கு தேவன் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகும். ஆகவே, வெளியில் இருந்து பார்த்தால், தேவனுடைய கிரியையின் படிகள் நிறைவடைந்துள்ளன—ஆனால் சாராம்சத்தில், அவர் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது தான் மனிதகுலத்தைப் பூரணப்படுத்தத் தொடங்கியுள்ளார். ஜனங்கள் இதைப் பற்றி தெளிவுடன் காணப்பட வேண்டும்: அவருடைய கிரியையின் படிகள்தான் முடிந்திருக்கின்றன; ஆனால் அந்த கிரியை தானே முடிவுக்கு வரவில்லை. ஆயினும்கூட, அவர்களின் எண்ணங்களில், தேவனுடைய கிரியையின் படிகள் அனைத்தும் மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன; எனவே தேவனின் கிரியை முடிந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த முறையில் காரியங்களைப் பார்ப்பது முற்றிலும் தவறானது. தேவனின் கிரியை மனுஷனின் எண்ணங்களுக்கு மாறுபட்டதாக இயங்குகிறது; மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் இதுபோன்ற கருத்துக்களைத் தடுக்கிறது; தேவனுடைய கிரியையின் படிகள், குறிப்பாக, மனுஷனின் கருத்துக்களுடன் முரண்படுகின்றன. இவை அனைத்தும் தேவனுடைய ஞானத்தை நிரூபித்துக் காட்டுகின்றன. மனுஷனின் எண்ணங்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் இடையூறு விளைவிப்பதைக் காணலாம், மேலும் மனுஷன் கற்பனை செய்யும் அனைத்தையும் தேவன் மீண்டும் தடுக்கிறார், இது உண்மையான அனுபவங்களின் போது தெளிவாகிறது. தேவன் மிகத் துரிதமாகச் செயல்படுகிறார்; தேவனுடைய கிரியையை அவர்கள் அறிந்துகொள்வதற்கு முன்பும், அவர்கள் எந்தவொரு புரிதலையும் பெறுவதற்கு முன்பும், அவர்கள் இன்னும் குழப்ப நிலையில் இருக்கும்போதே தேவனுடைய கிரியை முடிவுக்கு வந்து விடுகிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியிலும் அப்படித்தான் இருக்கிறது. தேவன் ஜனங்களுடன் விளையாடுகிறார் என்று பெரும்பாலான ஜனங்கள் நம்புகிறார்கள்—ஆனால் அது அவருடைய கிரியையின் நோக்கம் அல்ல. ஆழ்ந்து சிந்தித்து செயல்படுதலே அவர் பணியாற்றும் முறையாகும். குதிரையின் மேல் இருந்து, அது பாய்ந்தோடும்போது, முதலில் பூக்களை விரைவாகப் பார்ப்பது; பின்னர் அது பற்றிய விவரங்களுக்குச் செல்வது; அதன் பின்னர் அந்த விவரங்களை முழுமையாகத் தெளிவுபடுத்துவது போன்றதாகும்—இது ஜனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய தங்களால் முடியுமானால், தேவன் திருப்தி அடைவார் என்று நினைத்துக்கொள்கிறார்கள்; இவ்வாறு ஜனங்கள் தேவனை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில், மனுஷனின் முயற்சிகளால் தேவன் எவ்வாறு திருப்தி அடைய முடியும்? உகந்த விளைவை அடைய, ஜனங்கள் எதிர்பாராதபோது தேவன் அவர்களை அடித்து திடுக்கிடவைத்து கிரியைசெய்கிறார். இது அவர்களுக்கு அவருடைய ஞானத்தைப் பற்றிய அதிக அறிவையும், அவருடைய நீதியையும், கம்பீரத்தையும், தீங்கிழைக்கமுடியாத மனநிலையையும் பற்றிய அதிகப் புரிதலைத் தருகிறது.

இன்று, தேவன் மனுஷனின் பரிபூரணப்படுத்துதலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கிறார். பரிபூரணமடைய, ஜனங்கள் அவருடைய வார்த்தைகளின் வெளிப்படுத்துதல், நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அவர்கள் அவருடைய வார்த்தைகளின் உபத்திரவத்தையும் புடமிடப்படுதலையும் அனுபவிக்க வேண்டும் (சேவை செய்பவர்களின் உபத்திரவம் போன்றவை), அவர்கள் மரண உபத்திரவத்தில் நிலைநிற்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு, தண்டனை மற்றும் சோதனைகளுக்கு மத்தியில், தேவனுடைய சித்தத்தில் உண்மையாகவே நிலைநிற்பவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனைத் துதிக்கவும், தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து தங்களைக் விட்டுக்கொடுக்கவும் முடியும். இவ்வாறு நேர்மையான, இருமனமற்ற, தூய்மையான இதயத்துடன் தேவனை நேசிக்கிறார்கள். அத்தகையவன் ஒரு பரிபூரண நபராக இருக்கிறான். மேலும் இதுவே துல்லியமாக தேவன் செய்ய நினைக்கிற கிரியை; மற்றும் அவர் நிறைவேற்றி முடிக்கும் கிரியையும் அதுவே. தேவன் கிரியை செய்யும் முறையைப் பற்றிய முடிவுகளுக்கு ஜனங்கள் தாவி விடக்கூடாது. அவர்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை மட்டுமே நாட வேண்டும். இதுவே அடிப்படை. தேவனுடைய கிரியையின் வழிமுறையைத் தொடர்ந்து ஆராய வேண்டாம்; இது உங்கள் எதிர்கால வாய்ப்புகளுக்குத் தடையாக மட்டுமே காணப்படும். தேவன் கிரியை செய்யும் வழிமுறையை நீ எவ்வளவு பார்த்திருக்கிறாய்? நீ எவ்வளவு கீழ்ப்படிந்திருக்கிறாய்? அவருடைய கிரியையின் ஒவ்வொரு விதத்திலிருந்தும் நீ எவ்வளவு ஆதாயம் அடைந்திருக்கிறாய்? தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கு நீ விரும்புகிறாயா? நீ பரிபூரணமாக மாற விரும்புகிறாயா? இவை அனைத்தும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு நுழைய வேண்டிய விஷயங்கள்.

முந்தைய: விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

அடுத்த: சீர்கேடான மனிதன் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாதவன்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக