அத்தியாயம் 29

காலம் குறுகியிருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? எனவே, சீக்கிரமாகவே, நீ என்னைச் சார்ந்து, எனது மனநிலைக்கு ஒத்துப் போகாதவைகளாகிய அறியாமை, எதிர்வினையாற்றுவதில் தாமதம், தெளிவற்ற எண்ணங்கள், இளகிய மனம், பலவீனமான விருப்பம், மதியீனம், அதிகப்படியான உணர்ச்சிகள், குழப்பம் மற்றும் பகுத்தறிவு இல்லாமை ஆகிய இப்படிப்பட்ட அனைத்தையும் உன்னிடமிருந்து தூக்கி எறிய வேண்டும். இவற்றைக் கூடிய விரைவில் தூக்கி எறிய வேண்டும். நான் சர்வவல்லமையுள்ள தேவன்! நீ என்னுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் வரை, உனக்கு ஏற்படும் அனைத்து நோய்களையும் என்னால் குணப்படுத்த முடியும். நான் ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தை நோக்கிப் பார்க்கும் தேவனாக இருக்கிறேன்; உன்னுடைய எல்லா நோய்களையும், உன்னுடைய குறைபாடுகள் எங்கு இருக்கின்றன என்பதையும் நான் அறிகிறேன். இவையே உன்னை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் விஷயங்களாகும், விரைவில் அவை தூக்கி எறியப்பட வேண்டும். இல்லையெனில், உன் மீது என் சித்தத்தை நிறைவேற்ற முடியாது. நான் அறிவுறுத்துகிற உன்னுடைய எல்லாவற்றையும் தூக்கி எறியும்படியும், எப்போதும் என்னாலேயே வாழவும், என்னுடன் நெருக்கமாக இருக்கவும், எல்லாச் செயல்களையும் நடத்தைகளையும் என் சாயலுக்கு ஏற்ப மேற்கொள்ளவும் என்னைச் சார்ந்துகொள். நீ புரிந்து கொள்ளாததைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு அடிக்கடி என்னுடன் ஐக்கியம் கொள், மேலும் நீ முன்னேறிச் செல்லும்படி நான் உனக்கு வழிகாட்டுவேன். நீ நிச்சயமில்லாதவனாய் இருந்தால், அவசரப்பட்டுச் செயல்பட வேண்டாம், ஆனால் என்னுடைய நேரத்திற்காகக் காத்திரு. ஒரு நிலையான மனநிலையை காத்துக் கொள், உன்னுடைய உணர்ச்சிகளைச் சீரற்று இயங்க விடாதே; என்னை எப்போதும் பயபக்திக்குரியவராக வைத்திருக்கும் ஒரு இருதயத்தை நீ கொண்டிருக்க வேண்டும். நீ எனக்கு முன்பாகவும் மற்றும் நான் பார்க்காத போதும் என்ன செய்கிறாய் என்பவை எப்போதும் என் சித்தத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். உன் கணவராக இருந்தாலும் சரி, உன் குடும்பமாக இருந்தாலும் சரி, என் சார்பாக யாரிடமும் ஈவு இரக்கம் காட்டாதே; அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். நீ சத்தியத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீ என்னை நேசித்தால், நான் உனக்கு மகத்தான ஆசீர்வாதங்களை வழங்குவேன். எதிர்ப்பவர்களை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் நேசிப்பவர்களை நேசித்திடு, நான் வெறுப்பவர்களை வெறுத்திடு. எந்த மனுஷனையோ, நிகழ்வையோ, பொருளையோ கவனிக்க வேண்டாம். உன்னுடைய ஆவியிலிருந்து பார், நான் பயன்படுத்தும் ஜனங்களைத் தெளிவாகப் பார்; ஆவிக்குரிய ஜனங்களுடன் அடிக்கடி தொடர்புகொள். அறியாமையில் இருக்க வேண்டாம்—நீ வேறுபடுத்திக் காட்ட வேண்டும். கோதுமை எப்பொழுதும் கோதுமையாகத்தான் இருக்கும், மேலும் களை ஒருபோதும் கோதுமையாக வளராது—நீ வெவ்வேறு வகையான ஜனங்களை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, நீ உன்னுடைய பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் எனது நோக்கத்திற்கான பாதையில் உன்னுடைய கால்களை வைத்திருக்க வேண்டும். இந்த வார்த்தைகள் அனைத்தையும் கவனமாகக் கருத்தில்கொள். நீ உடனடியாக உன்னுடைய கலகத்தனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, என் உபயோகத்திற்கு ஏற்றவனாக மாற வேண்டும், அதன்மூலம், நீ என் இருதயத்தைத் திருப்திப்படுத்தலாம்.

முந்தைய: அத்தியாயம் 28

அடுத்த: அத்தியாயம் 30

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக