கற்றுக் கொள்ளாதவர்கள் மற்றும் அறியாமையில் இருப்பவர்கள்: அவர்கள் மிருகங்கள் அல்லவா?

இன்றைய பாதையில் நீங்கள் நடக்கும் போது மிகப் பொருத்தமான வகையான பின்தொடர்தல் எது? உன்னுடைய பின்தொடர்தலில், எவ்வகையான நபராக உன்னை நீயே பார்க்க வேண்டும்? இன்று உனக்கு நடக்கும் எல்லாவற்றையும், அது உபத்திரவங்கள் அல்லது கஷ்டங்களானாலும், அல்லது இரக்கமற்ற தண்டனை அல்லது சாபமானாலும், நீ அவற்றை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை அறிந்து கொள்வது உனக்கு அவசியமாகிறது. இவை எல்லாவற்றையும் எதிர்கொண்ட நீ ஒவ்வொரு விஷயத்திலும் அவற்றைக்குறித்துக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், இன்று உனக்கு நடக்கும் காரியங்கள் திரும்பத் திரும்ப நிகழ்கிற குறுகியகால சோதனைகள் தானே; ஒருவேளை உன்னைப் பொறுத்தவரை, அவை குறிப்பாக ஆவிக்குக் கடினமானதல்ல, எனவே நீ காரியங்களை அவற்றின் இயல்பான போக்கில் நகர அனுமதித்து, முன்னேற்றத்திற்கான பின்தொடர்தலில் அவற்றை ஒரு விலைமதிப்பற்ற சொத்தாகக் கருதுவதில்லை. நீ எவ்வளவு சிந்தனையற்றவன்! இந்த விலைமதிப்பற்ற சொத்தை உன் கண்களுக்கு முன்பாக மிதக்கும் மேகத்தைப் போல நீ நினைக்கும் அளவிற்கு, குறைந்த எடை போல உனக்குத் தெரியும் சிறிய அடிகளான, அவ்வப்போது மேலே விழும் இந்தக் கடுமையான அடிகளை முக்கியமாகக் கருதாமல், மாறாக குளிர்ந்த பற்றின்மையோடு அவற்றைப் பார்த்து, அவற்றை மனதில் கொள்ளாமல், ஏதோ ஒரு தற்செயலான அடியாகக் கருதுகிறாய். நீ மிகவும் திமிர்பிடித்தவன்! அவ்வப்போது வருகிற புயல்களுக்கு ஒத்த தாக்குதல்களான இந்த மூர்க்கமான தாக்குதல்களைக் குறித்து நீ பொறுப்பற்ற புறக்கணிப்பையே காட்டுகிறாய். நீ ஏன் இத்தகைய “துரதிர்ஷ்டங்களை” அனுபவிக்கிறாய் என்று ஒருமுறைகூட உனக்குள் நினைத்துப் பார்க்காததால், சில நேரங்களில் ஒரு அலட்சியமான புன்னகையைக் காண்பித்து முழுமையான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறாய். நான் மனிதனிடத்தில் மிகவும் அநியாயமாக நடந்து கொள்கிறேன் என்றாகுமா? உன்னிடத்தில் தவறு கண்டுபிடிப்பதை என்னுடைய வேலையாகக் கொண்டிருக்கிறேனா? நான் விவரித்ததைப் போல உன் மனநிலையில் உள்ள பிரச்சனைகள் தீவிரமாக இல்லாவிட்டாலும், உன்னுடைய வெளிப்புற அமைதியின் மூலம், நீ உன் உள்ளுலகின் சிறப்பான உருவப்படத்தைப் பல நாட்களுக்கு முன் வரைந்து வைத்திருக்கிறாய். பண்படுத்தப்படாத கடுஞ்சொற்களும், மற்றவர்களால் எளிதாகப் பகுத்தறிய முடியாத சோகத்தின் மங்கலான தடயங்கள் மட்டுமே உன் இருதயத்தின் ஆழங்களில் மறைந்திருக்கும் ஒரே விஷயம் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற சோதனைகளை அனுபவிப்பது மிகவும் நியாயமற்றது என்று நீ நினைப்பதால் நீ சபிக்கிறாய். இந்தச் சோதனைகள் உன்னை உலகத்தின் பாழ்நிலையை உணரச்செய்வதால் மனச்சோர்வினால் நிறைந்திருக்கிறாய். இந்த தொடர்ச்சியான அடிகளையும் ஒழுக்கச்செயல்களையும் மிகச் சிறந்த பாதுகாப்பாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அவற்றை நீ பரலோகத்தின் அறிவற்ற துன்புறுத்தும் பிரச்சனையாக பார்க்கிறாய், இல்லையென்றால் உன்மேல் வரும் பொருத்தமான தண்டனையாகப் பார்க்கிறாய். நீ மிகவும் அறிவற்றவன்! நீ நல்ல நேரங்களை இரக்கமின்றி இருளில் அடக்கி வைக்கிறாய்; அற்புதமான உபத்திரவங்களையும், ஒழுக்கத்திற்கான செயல்பாடுகளையும் எதிரிகளிடமிருந்து வரும் தாக்குதல்களாக நீ அடிக்கடி பார்க்கிறாய். உன் சூழலுடன் எவ்வாறு ஒத்துப்போவது என்று உனக்குத் தெரிவதில்லை, அவ்வாறு செய்ய முயற்சிப்பதற்குக்கூட நீ விரும்புவது இல்லை, ஏனென்றால் மீண்டும் மீண்டும் வருகிற, உனக்கு இரக்கமற்ற தண்டனையாகத் தோன்றுகிறதிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ள நீ விரும்புவதில்லை. நீ தேடவோ அல்லது ஆராயவோ எந்த முயற்சியும் எடுப்பதில்லை, மேலும், உன் தலைவிதிக்கு உன்னை நீயே விட்டு விடுகிறாய், அது உன்னை வழிநடத்தும் இடத்திற்குப் போகிறாய். தண்டனைக்கான கொடிய செயல்பாடுகளாய் உனக்குத் தெரிவது உன் இருதயத்தை மாற்றவில்லை, அவை உன் இருதயத்தைக் கட்டுப்படுத்தவும் இல்லை; அதற்குப் பதிலாக, அவை உன் இருதயத்தில் குத்துகிறது. நீ இந்தக் “கொடூரமான சிட்சையை” இவ்வாழ்க்கையில் உன் எதிரியாக மட்டுமே பார்க்கிறாய், எனவே நீ எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. நீ மிகவும் சுயநீதியுடையவன். உங்கள் சொந்த அவமதிப்பு காரணமாக இத்தகைய சோதனைகளை அனுபவிக்கிறாய் என்று நீ அரிதாக நம்புகிறாய்; அதற்குப் பதிலாக, நீ உன்னை துரதிர்ஷடசாலியாகக் கருதுகிறாய், அது மாத்திரமல்ல நான் உன்னிடத்தில் எப்போதும் குறைகாண்கிறேன் என்கிறாய். இப்போது காரியங்கள் இந்த அளவிற்கு முன்னேறியவுடன், நான் சொல்வது மற்றும் செய்வதைப் பற்றி உனக்கு உண்மையில் எந்த அளவிற்குத் தெரியும்? நீ வானங்களை விட சற்றுக் கீழானதும், ஆனால் பூமியைவிட மிகப் பெரிதானதுமான இயற்கையாகப் பிறந்த ஒரு மேதாவி என்று நினைக்காதே. நீ வேறு யாரை விடவும் புத்திசாலியாக இருக்கவில்லை, மேலும் பூமியில் அறிதிறனுள்ள எந்த ஜனத்தை விடவும் நீ எவ்வளவு முட்டாள்தனமானவனாக இருக்கிறாய் என்பது மிகவும் ரசிக்கத்தக்கது என்று கூட சொல்லலாம், ஏனென்றால், ஏதோ என் செயல்களிலுள்ள மிகச்சிறிய விவரத்தைக் கூட உன்னால் பார்க்க முடியும் என்பது போல நீ உன்னைக் குறித்து மிகவும் பெருமையாக எண்ணுகிறாய், ஒருபோதும் தாழ்வுமனப்பான்மையை நீ கொண்டிருக்கவில்லை. உண்மையில், அடிப்படையில் நீ அறிதிறன் இல்லாத ஒருவன், ஏனென்றால், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது, நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றியும் மிகக் குறைவாகவே நீ அறிந்திருக்கிறாய். ஆகவே, மனித வாழ்க்கையைப் பற்றிய மங்கலான பார்வை கூட இல்லாமல், அப்படியிருந்தும் நிலத்தைப் பண்படுத்துகையில் வானத்து ஆசீர்வாதங்கள் மேல் தன் முழு நம்பிக்கையையும் வைத்திருக்கிற, நிலத்தில் கடுமையாக உழைக்கும் ஒரு வயதுமுதிர்ந்த விவசாயிக்குக் கூட நீ சமமானவன் அல்ல என்று நான் சொல்கிறேன். நீ உன் வாழ்க்கைக்கென சிந்திப்பதற்கு ஒரு நொடி கூட ஒதுக்குவதில்லை, புகழைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது, உனக்கு சுய அறிவு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நீ “எல்லாவற்றிற்கும் மிக மேலாக இருக்கிறாய்”. உண்மையாகவே, மிகப் பகட்டான கோமாளிகளும், அழகான பதுமைகளுமான உங்களுக்காகக் கவலைப்படுகிறேன்: இன்னும் பெரிதான சோதனைகளின் கடுந்தாக்குதலுக்கு நீ எவ்வாறு நிற்கப்போகிறாய்? இந்த கோமாளிகள் தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளும் இக்கட்டான நிலையைக் குறித்து மிகவும் அலட்சியமாக உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை இது ஓர் அற்பமான விஷயமாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் இதைப் பற்றி எதையும் யோசிப்பதில்லை, எதிர்மறையாகவும் உணர்வதில்லை, தங்களைக் குறித்து தாழ்வாகவும் நினைப்பதில்லை; அதற்குப் பதிலாக முன்பைப் போலவே தங்கள் ரசிகர்களைத் தூண்டும்படி தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள். கற்றுக்கொள்ளாத, அறியாமையில் இருக்கும் இந்த “கவனிக்கத்தக்க ஜனங்கள்” பூமியில் இப்படிப்பட்ட காரியங்களை அவர்களிடம் நான் ஏன் சொல்கிறேன் என்பதைக் குறித்து ஒன்றுமே தெரியாதவர்களாவர்; அவர்கள் முகங்கள் எரிச்சலால் நிரம்பியுள்ளன, அவர்கள் வெறுமனே ஒரு சாதாரணமான பரிசோதனையைத் தங்களுக்கே செய்துகொண்டு, அதன் பின்னர் அவர்களின் தீய வழிகளை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே தொடர்கின்றனர்; அவர்கள் என்னை விட்டு விலகியவுடன் அவர்கள் மீண்டும் உலகில் வெறித்தனமாக ஓடத் தொடங்கி, செருக்குடன் நடந்து, மறுபடியும் வஞ்சிக்கின்றனர். எவ்வளவு சீக்கிரமாக உன் முகத்தின் பாவனை மாறுகிறது. எனவே, இப்படி மீண்டும் ஒரு முறை என்னை ஏமாற்ற நீ முயற்சிக்கிறாய்—உனக்கு எவ்வளவு தைரியம்! அந்த அழகிய இளம் பெண்கள் இன்னும் நகைப்புக்குரியவர்களாவர். எனது அவசர பேச்சுக்களைக் கேட்டு, அவர்கள் இருக்கும் இக்கட்டான நிலையைப் பார்த்து, அவர்கள் முகங்களில் தடையின்றி கண்ணீர் வழிந்து ஓடுகிறது, அவர்கள் சரீரங்கள் முன்னும் பின்னும் வளைந்து நெளிகிறது, மேலும் அவர்கள் ஏதோ ஒரு காட்சியை உருவாக்குகின்றனர்—எத்தனை அருவருப்பாய் இருக்கிறது! அவர்கள் தங்களின் சொந்த வளர்ச்சியை உணர்ந்து, தங்கள் படுக்கைகளில் ஓடிப் போய் அங்கே படுத்துக்கொண்டு, கிட்டத்தட்ட அவர்கள் கடைசி மூச்சில் திணறுவதைப் போல இடைவிடாமல் அழுகிறார்கள். மேலும் இந்த வார்த்தைகள் அவர்களுடைய சொந்த குழந்தைத்தனத்தையும் தாழ்வுமனப்பான்மையும் காட்டி இருக்கும்போது அவர்கள் தங்கள் கண்களில் இருந்து ஒளி வெளியேறிவிட்டதாக எதிர்மறையால் மிகவும் சோர்ந்து போகிறார்கள், என்னைக் குறித்து குறை சொல்வதுமில்லை, என்னை வெறுப்பதும் இல்லை, தங்கள் செயலற்ற தன்மையில் முற்றிலும் அசைவின்றி இருக்கிறார்கள் அதேபோல் அவர்கள் கற்றுக் கொள்ளத் தவறி, அறியாமையில் நிலைத்திருக்கிறார்கள். என்னை விட்டு விலகிய பிறகு அவர்கள், “இளவரசி சில்வர் பெல்லின்” சிரிப்பொலி போல குதூகலமாகச் சிரித்து விளையாடுகிறார்கள். அவர்கள் தங்கள் சுயஅன்பிலே எவ்வளவு பலவீனமாகவும் குறைவாகவும் இருக்கிறார்கள்! மனிதகுலத்தின் குறைபாடுள்ள நிராகரிப்புகளான நீங்கள் அனைவரும் மனிதத்தன்மையில் எவ்வளவு குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள்! உங்களை நீங்களே நேசிக்கவும் அல்லது உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளவும் உங்களுக்குத் தெரிவதில்லை, உங்களுக்கு எந்த உணர்வும் இல்லை, நீங்கள் உண்மையான வழியைத் தேடுவதில்லை, நீங்கள் உண்மையான ஒளியை நேசிப்பதில்லை, அதற்கும் மேலாக, உங்களை நீங்களே நேசித்துப் பேணுவதற்கு உங்களுக்குத் தெரிவதில்லை. நான் உங்களுக்கு மீண்டும் கொடுத்த போதனைகளைப் பொறுத்தவரை, நீங்கள் பல நாட்களுக்கு முன்பதாகவே, உங்கள் வீணான தருணங்களை மகிழ்ச்சியாக போக்குவதற்கான விளையாட்டுப் பொருட்களாக அவற்றைக் கருதும் அளவிற்கு, உங்கள் மனதிற்குப் பின்பாக அவற்றைத் தாழ்நிலைக்குத் தள்ளி விட்டீர்கள். இவை அனைத்தையும் நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த தனிப்பட்ட “தாயத்து” வெளிச்சத்தில் பார்க்கிறீர்கள். சாத்தானால் குற்றஞ்சாட்டப்படும்போது, நீங்கள் ஜெபிக்கிறீர்கள்; எதிர்மறையாக இருக்கும்போது, நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் போய் விடுகிறீர்கள்; மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் முரட்டுத்தனமாக ஓடுகிறீர்கள்; நான் உங்களைக் கடிந்து கொள்ளும்போது சிரம்தாழ்ந்து சங்கடப்படுகிறீர்கள்; பின்னர் நீங்கள் என் சமூகத்தில் இருந்து புறப்பட்டவுடன், தீமையான களிப்புடன் சிரிக்கிறீர்கள். மற்ற அனைவருக்கும் மேலாக நீ இருப்பதாக நினைத்துக் கொள்கிறாய், ஆனால் மிகவும் திமிர்பிடித்தவனாக உன்னை நீ பார்ப்பதே இல்லை, மேலும் எப்போதும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இறுமாப்புடன், மிகுதியான தன்னிறைவு கொண்டு மற்றும் செருக்குடன் இருக்கிறாய். கற்றுக் கொள்ளாத மற்றும் அறியாமையில் இருக்கும் இத்தகைய “நன்மகன்கள்,” “இளம்பெண்கள்,” “கனத்துக்குரிய ஆண்கள்” மற்றும் “கனத்துக்குரிய பெண்கள்” என்னுடைய வார்த்தைகளை விலைமதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதுவது எப்படி? நான் உன்னிடம் மீண்டும் கேட்கிறேன்: இவ்வளவு காலமாக என் வார்த்தைகளிலிருந்தும் என் கிரியையிலிருந்தும் நீ என்ன கற்றுக்கொண்டாய்? உன் வஞ்சகத்தில் மேலான திறன்களைப் பெற்றுக்கொண்டதா? அல்லது உன் மாம்சத்தில் மேலான செம்மையாக்கத்தைப் பெற்றுக் கொண்டதா? அல்லது என்னைப்பற்றிய உன் அணுகுமுறையில் அதிக அவமதிப்பைப் பெற்றுக்கொண்டதா? நான் நேரடியாக உனக்குச் சொல்லுகிறேன்: சுண்டெலியின் தைரியத்தைக் கொண்டிருந்த உன்னைத் தைரியமாய் மாற்றியது நான் செய்து முடித்த இந்த கிரியையே ஆகும். நான் மிகவும் இரக்கம் உள்ளவராக, வன்முறை வாயிலாக உன் மாம்சத்தின் மீது ஒருபோதும் தடைகளை விதிக்காமல் இருந்ததினால், என்னைக் குறித்து நீ உணரும் நடுக்கம் நாளுக்கு நாள் குறைகிறது. ஒருவேளை நீ அதை பார்ப்பதைப் போல நான் வெறுமனே கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறேன்—ஆனால் பெரும்பாலும் நான் உனக்குப் புன்னகையான முகத்தையே காட்டுகிறேன், உன் முகத்திற்கு நேராகப் பெரும்பாலும் உன்னைக் கண்டனம் செய்ததில்லை. அதுமட்டுமல்லாமல், உன் பெலவீனத்தை நான் எப்போதும் மன்னிக்கிறேன், முழுவதுமாக இந்த காரணத்தினாலேயே தயையுள்ள விவசாயியை சர்ப்பம் நடத்தியது போல நீ என்னை நடத்துகிறாய். மனித இனத்தின் அவதானிக்கும் சக்திகளில் உள்ள மிகத் தீவிரமான திறமை மற்றும் நுண்ணறிவை நான் எவ்வாறு போற்றுகிறேன்! நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன்: இன்று நீ பயபக்தியுள்ள இருதயத்துடன் இருக்கிறாயா இல்லையா என்பது அதிக முக்கியமில்லை; நான் அதைப் பற்றி விசாரப்படுவதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. ஆனால் நான் இதை உன்னிடம் சொல்ல வேண்டும்: கற்றுக் கொள்ளாமலும் அறியாமையிலும் இருக்கின்ற இந்தத் “திறமை வாய்ந்த நபரான” நீ உன்னுடைய சுயபோற்றுதலினாலும், அற்பமான புத்திசாலித்தனத்தாலும் இறுதியில் கீழே தள்ளப்படுவாய்—நீ துன்பப்படுகிற மற்றும் தண்டிக்கப்படுகிற ஒருவனாக இருப்பாய். நான் உன்னைப்போல இல்லாமல் இருப்பதால், நீ நரகத்தில் தொடர்ந்து பாடுபடும்போது உன்னுடன் சேர்ந்து கொள்ளுமளவிற்கு நான் முட்டாள்தனமாக இருக்கமாட்டேன். நீ என்னால் சபிக்கப்பட்ட ஓர் உயிருள்ள சிருஷ்டிப்பாக இருந்தாலும், என்னால் போதிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு இருக்கிறாய் என்பதையும், உன்னில் இருக்கும் எதைவிட்டும் பிரிந்துபோக நான் தயங்கமாட்டேன் என்றும் மறந்து விடாதே. எந்த நேரத்தில் நான் கிரியையை செய்தாலும், எந்த ஒரு நபராலோ, நிகழ்வாலோ அல்லது பொருளாலோ நான் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. என் அணுகுமுறையும், மனுக்குலத்தோடு தொடர்புள்ள என் பார்வையும் எப்போதும் அப்படியே இருக்கின்றன. நான் குறிப்பாக உன்னிடமாய் சாய்ந்துகொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் என் நிர்வாகத்திற்கு நீ ஓர் இணைப்பு மட்டுமே, மேலும் வேறு எந்த உயிரினத்தையும் விட நீ மிகச் சிறப்பானவன் அல்ல. இது உனக்கான என் அறிவுரை: நீ தேவனுடைய ஒரு சிருஷ்டிப்பே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பதை எல்லா நேரங்களிலும் நீ நினைவில் கொள்ளவேண்டும்! உன்னுடைய இருப்பை என்னுடன் நீ பகிர்ந்து கொள்ளலாம் என்றாலும், உன் சொந்த அடையாளத்தை நீ அறிந்திருக்க வேண்டும்; உன்னைக் குறித்து நீயே மேன்மையாக நினைக்க வேண்டாம். நான் உன்னைக் கண்டிக்காமல் அல்லது உன்னைக் கையாளாமல் இருந்து, ஆனால் சிரித்த முகத்துடன் உன்னை வாழ்த்தினாலும் நீ என்னை போன்றவனே என்று நிரூபிக்க இது போதாது. சத்தியம் மாத்திரமல்ல, சத்தியத்தைப் பின்தொடர நீ அறிந்திருக்க வேண்டும்! என் வார்த்தைக்கு ஏற்ப மாறிக்கொள்ள எல்லா நேரங்களிலும் நீ தயாராக இருக்க வேண்டும். நீ இதிலிருந்து தப்ப முடியாது. இந்த விலைமதிப்பற்ற நேரத்தில் உனக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும்போது, முயற்சி செய்து, ஏதாவது கற்றுக்கொள்ள உனக்கு அறிவுறுத்துகிறேன். என்னை முட்டாளாக்காதே; நீ என்னை முகஸ்துதி செய்து என்னை சோதிக்கவும் ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. நீ என்னைத் தேடுகிறது, முற்றிலும் என் தேவைக்காக அல்ல, மாறாக அது தனிப்பட்ட உனக்காகவே!

முந்தைய: மனிதனின் உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவனது மதிப்பு: அவை உண்மையில் என்ன மாதிரியானவை?

அடுத்த: தெரிந்துகொள்ளப்பட்ட சீன ஜனங்கள் இஸ்ரவேலின் எந்த ஒரு கோத்திரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவர்கள் அல்லர்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக