அத்தியாயம் 41

திருச்சபையில் எழுகிற பிரச்சினைகள் குறித்து, இது போன்ற கடுமையான சந்தேகங்களால் நிறைந்திருக்க வேண்டாம். திருச்சபையைக் கட்டியெழுப்பும்போது தவறுகள் தவிர்க்க முடியாதவையாகும், ஆனால் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்கும்போது பீதியடைய வேண்டாம். மாறாக, அமைதியாகவும் உணர்ச்சிக் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லவில்லையா? அடிக்கடி என் முன் வந்து ஜெபம்பண்ணு, என் நோக்கங்களை நான் உனக்குத் தெளிவாகக் காண்பிப்பேன். திருச்சபையானது என் இருதயமும், என் முழு நோக்கமும் ஆகும், அதனால் நான் அதை எப்படி நேசிக்காமல் இருப்பேன்? பயப்படாதே, இதுபோன்ற விஷயங்கள் திருச்சபையில் நடக்கும்போது, அவை என் அனுமதியுடன் நடக்கின்றன. என் சார்பாக நின்று பேசு. எல்லா விஷயங்களும், காரியங்களும் என் சிங்காசனத்தினால் அனுமதிக்கப்படுகின்றன என்றும் அவற்றுள் என் நோக்கங்கள் உள்ளன என்றும் விசுவாசம் கொண்டிரு. நீ பொறுப்பற்ற வகையில் தொடர்ந்து ஐக்கியம் கொண்டால் பிரச்சினைகள் இருக்கும். பின்விளைவுகளைப் பற்றி நீ யோசித்தாயா? இவ்வகையான காரியத்தைச் சாத்தான் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வான். அடிக்கடி என் முன் வா. நான் தெளிவாகப் பேசுவேன்: எனக்கு முன் வராமல் நீ ஏதாவது செய்யப் போகிறாய் என்றால், உன்னால் அதைச் செய்து முடிக்க முடியும் என்று கற்பனை செய்யாதே. இந்த நிலைக்கு என்னைத் தள்ளியதே நீங்கள் தான்.

சோர்வடைய வேண்டாம், பலவீனமாக இருக்க வேண்டாம், நான் உனக்கு விஷயங்களைத் தெளிவுபடுத்துவேன். ராஜ்யத்திற்குரிய பாதை அவ்வளவு சமமாக இல்லை; எதுவும் அவ்வளவு எளிதானதல்ல! உனக்கு ஆசீர்வாதங்கள் எளிதில் வரவேண்டுமென்று விரும்புகிறாய், இல்லையா? இன்று, எதிர்கொள்ளும்படி கசப்பான உபத்திரவங்கள் அனைவருக்கும் இருக்கும். இத்தகைய உபத்திரவங்கள் இல்லாமல் நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பான இருதயம் வலுவடையாது, மேலும் நீங்கள் என்மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்க மாட்டீர்கள். இந்த உபத்திரவங்கள் வெறுமனே சாதாரண சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலும், எல்லோரும் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்; உபத்திரவங்களின் துன்பம் மட்டுமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும். உபத்திரவங்கள் என்னிடமிருந்து வரும் ஒரு ஆசீர்வாதமே, உங்களில் எத்தனை பேர் எனக்கு முன்பாக அடிக்கடி வந்து, என்னுடைய ஆசீர்வாதங்களுக்காக உங்கள் முழங்காலில் நின்று கெஞ்சுகிறீர்கள்? முட்டாள்தனமான பிள்ளைகளே! ஒரு சில அநுகூலமான வார்த்தைகளை என் ஆசீர்வாதம் என்று நீங்கள் எப்போதும் நினைக்கிறீர்கள், ஆனால் கசப்பும் என் ஆசீர்வாதங்களில் ஒன்று என்று நீங்கள் கண்டுணர்ந்து கொள்வதில்லை. என் கசப்பில் பங்கெடுப்பவர்கள் நிச்சயமாக என் இனிமையிலும் பங்கு கொள்வார்கள். அதுவே என் வாக்குத்தத்தமும் உங்களுக்கான என் ஆசீர்வாதமும் ஆகும். என் வார்த்தைகளைப் போஜனபானம்பண்ணி அனுபவிக்கத் தயங்காதீர்கள். இருள் கடந்து செல்லும்போது, ஒளி ஒன்றாய்ச் சேர்கிறது. விடியலுக்கு முன் இருளாக இருக்கிறது; இந்த நேரத்திற்குப் பின் வானம் படிப்படியாக வெளிச்சமடைந்து, அதன்பின் சூரியன் உதிக்கிறது. பயப்படவோ அதைரியப்படவோ வேண்டாம். இன்று நான் என் குமாரர்களை ஆதரித்து, அவர்களுக்காக என் வல்லமையைப் பிரயோகிக்கிறேன்.

திருச்சபைக் காரியங்களைப் பொறுத்தவரை, உங்கள் பொறுப்பை எப்போதும் தவிர்க்காதீர்கள். நீங்கள் மனசாட்சியுடன் விஷயத்தை என் முன் கொண்டு வந்தால், நீங்கள் ஒரு வழியைக் காண்பீர்கள். இதுபோன்ற ஒரு அற்பமான சிக்கல் ஏற்படும்போது, என்ன செய்வது என்று பயந்து, பீதியடைந்து, நிச்சயமற்று உணர்கிறீர்களா? “அடிக்கடி என்னிடம் நெருங்கி வாருங்கள்!” என்று நான் பலமுறை கூறியுள்ளேன். நான் உங்களைச் செய்யச் சொல்லும் விஷயங்களை நீங்கள் மனசாட்சியுடன் நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்களா? எத்தனை முறை என் வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்தீர்கள்? நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், அப்போது உங்களுக்குத் தெளிவான நுண்ணறிவு இல்லை. இது உங்களால் ஆனதல்லவா? நீங்கள் மற்றவர்களைக் குறை கூறுகிறீர்கள் ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் ஏன் உங்களிடமே வெறுப்புணர்ச்சியை உணரவில்லை? நீங்கள் காரியங்களை கெடுப்பீர்கள், பின்னர் நீங்கள் கவனக்குறைவாகவும், அக்கறையற்றும் இருப்பீர்கள்; நீங்கள் என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

கீழ்ப்படிகிறவர்கள் மற்றும் அர்ப்பணிக்கிறவர்கள் பெரிதான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். திருச்சபையில், எனக்கான உங்களுடைய சாட்சியத்தில் உறுதியாக நில்லுங்கள், சத்தியத்தை ஆதரியுங்கள்; சரியானது சரியானதே மற்றும் தவறானது தவறானதே. தெளிவானதைக் குழப்ப வேண்டாம். நீங்கள் சாத்தானுடன் போரிட்டு, அவனை மீண்டும் ஒருபோதும் எழும்பாதபடி முற்றிலுமாக அழித்துப் போட வேண்டும். என் சாட்சியத்தைப் பாதுகாக்க நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். இதுவே உங்கள் செயல்களின் குறிக்கோளாக இருக்கும், இதை மறந்து விடாதீர்கள். ஆனால் இப்போது, விசுவாசத்திலும், காரியங்களை வேறுபடுத்தும் திறனிலும் நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்கள், மேலும் என் வார்த்தைகளையும் என் நோக்கங்களையும் உங்களால் எப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும்கூட, கவலைப்பட வேண்டாம்; எல்லாம் என் அடிகளின்படியே தொடர்கிறது, மேலும் கவலை மட்டுமே சிக்கலைத் தோற்றுவிக்கிறது. எனக்கு முன் அதிக நேரம் செலவிடுங்கள், சரீரத்திற்கான உணவு மற்றும் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். என் நோக்கங்களை அடிக்கடித் தேடுங்கள், அவை என்ன என்பதை நான் உனக்குத் தெளிவாகக் காண்பிப்பேன். படிப்படியாக எல்லாவற்றிலும் நீ என் நோக்கங்களைக் காண்பாய், இதனால் ஒவ்வொரு மனிதனையும் பயன்படுத்த ஒரு வழியை நான் தடையின்றிப் பெறுவேன். இது என் இருதயத்தைத் திருப்திப்படுத்தும், மேலும் நீங்கள் என்றென்றும் என்னுடன் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்!

முந்தைய: அத்தியாயம் 40

அடுத்த: அத்தியாயம் 42

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக