அத்தியாயம் 9

நீங்கள் என் வீட்டின் மக்களிடையே இருப்பதால், நீங்கள் என் ராஜ்யத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பதால், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் என் தேவைப்பாடுகளின் தரங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஒரு மிதக்கும் மேகத்திற்கு மேலாக இருக்கவேண்டும் என்று நான் கேட்கவில்லை, ஆனால் நீ பிரகாசிக்கும் பனியாக, அதன் சாராம்சத்தைக் கொண்டவனாக, அதற்கும் மேல் அதன் மதிப்பையும் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், நான் பரிசுத்த தேசத்திலிருந்து வருகிறேன், நான் தாமரையைப் போன்றவன் அல்ல, அதற்கு ஒரு பெயர் மட்டுமே உண்டு, சாரம் இல்லை, ஏனென்றால் அது சேற்றில் இருந்து வருகிறது, பரிசுத்தமான தேசத்தில் இருந்து அல்ல. ஒரு புதிய வானம் பூமியில் இறங்கி மேலும் ஒரு புதிய பூமி வானத்தில் பரவியிருக்கும் நேரமே துல்லியமாக நான் மனிதர்களிடையே முறைப்படி கிரியை செய்யும் நேரமாகும். மனிதர்களில் என்னை யார் அறிவார்கள்? நான் வந்த தருணத்தை யார் பார்த்தார்கள்? எனக்கு ஒரு பெயர் உண்டு என்பது மட்டுமல்ல, அதற்கும் மேல், சாரமும் கொண்டுள்ளேன் என்பதை யார் பார்த்தார்கள்? நான் வெண் மேகங்களை என் கையால் விலக்கிவிட்டு வானத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறேன்; விண்வெளியில் என் கையால் ஏற்பாடு செய்யப்படாதது எதுவும் இல்லை, அதற்குக் கீழே, என் வலிமைமிக்க முயற்சியின் சாதனைக்கு யாரும் அவனது அல்லது அவளது சிறு சொந்த முயற்சி மூலமாகவும் பங்களிப்பதில்லை. நான் பூமியிலுள்ள மக்களின் மீது கடுமையான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, ஏனென்றால் நான் எப்போதுமே நடைமுறை தேவனாகவே இருக்கிறேன், ஏனென்றால் நான் மனிதர்களைப் படைத்த சர்வவல்லமையுள்ளவர், அவர்களை நன்கு அறிவேன். எல்லா மக்களும் சர்வவல்லவரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறார்கள். பூமியின் தொலைதூர மூலைகளில் இருப்பவர்கள் கூட என் ஆவியின் கண்காணிப்பை எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்கள் என் ஆவியை “அறிந்திருக்கிறார்கள்” என்றாலும், அவர்கள் இன்னும் என் ஆவியைப் புண்படுத்துகிறார்கள். என் வார்த்தைகள் எல்லா மக்களின் அசிங்கமான முகங்களையும், அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும் தோலுரித்துக் காட்டுகின்றன, மேலும் பூமியிலுள்ள அனைவரையும் என் ஒளியால் தெளிவுபடுத்தி, என் கண்காணிப்புக்கு இடையில் வருமாறு செய்கின்றன. இருப்பினும், அவர்கள் கீழே வீழ்ந்தாலும், அவர்களின் இதயங்கள் என்னிடமிருந்து விலகிச் செல்வதற்குத் துணிவதில்லை. சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில், என் காரியங்களின் விளைவாக என்னை நேசிக்க வாராதவர் யார்? என் வார்த்தைகளின் விளைவாக எனக்காக ஏங்காதவர் யார்? என் அன்பின் விளைவாகப் பாசமான உணர்வுகள் யாரில் பிறக்கவில்லை? சாத்தானின் சீரழிவினால்தான் மனிதர்கள் எனக்குத் தேவையான நிலையை அடைய முடியவில்லை. சாத்தான் கலவரத்தை நடத்தும் மற்றும் வெறித்தனமான சர்வாதிகாரமாக இருக்கும் இந்த யுகம் அல்லது மனிதர்களின் உடல்கள் முழுவதுமாக அசுத்தமாக மூழ்கியிருக்கும் படிக்குச் சாத்தானால் மிதிக்கப்பட்ட காலத்தில்—இன்றைய நாளைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை, எனக்குத் தேவைப்படும் மிகக் குறைந்த தரநிலைகள் கூட மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகின்றன. எப்போது மனிதர்கள் தங்கள் மனச்சோர்வின் விளைவாக என் இருதயத்தைக் கவனித்துக்கொள்ளத் தவறியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை? நான் சாத்தானுக்காகப் பரிதாபப்படுகிறேன் என்று இருக்குமோ? என் அன்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறேன் என்று இருக்குமோ? மக்கள் எனக்குக் கீழ்ப்படியாதபோது, என் இருதயம் ரகசியமாக அழுகிறது; அவர்கள் என்னை எதிர்க்கும்போது, நான் அவர்களைச் சிட்சிக்கிறேன்; அவர்கள் என்னால் இரட்சிக்கப்படும்போது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படும்போது, நான் அவர்களை மிகுந்த கவனத்துடன் போஷிக்கிறேன்; அவர்களை என்னிடம் ஒப்புவிக்கும்போது, என் இதயம் எளிதாகிறது, மேலும் வானத்திலும் பூமியிலும் எல்லாவற்றிலும் பெரிய மாற்றங்களை நான் உடனடியாக உணர்கிறேன். மனிதர்கள் என்னைத் துதிக்கும்போது, நான் எப்படி அதை அனுபவிக்காமல் இருக்க முடியும்? அவர்கள் எனக்குச் சாட்சியம் அளிக்கும்போதும் என்னால் ஆதாயப்படுத்தப்படும்போதும் நான் எப்படி மகிமை அடையாமல் இருக்க முடியும்? இருப்பினும் மனிதர்களின் செயல்பாடுகளும் நடத்தையும் என்னால் நிர்வகிக்கப்படுவதும் வழிகாட்டப்படுவதும் இல்லை என்று இருக்குமோ? நான் வழிகாட்டுதல் வழங்காதபோது, மக்கள் எந்த அசைவும் இன்றி சும்மா இருப்பார்கள்; மேலும், என் முதுகுக்குப் பின்னால், அவர்கள் அந்த “பாராட்டத்தக்க” அசிங்கமான நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள். என்மீது நான் உடுத்திக் கொண்டுள்ள மாம்சத்துக்கு உன் செயல்கள், உன் நடத்தை மற்றும் உன் வார்த்தைகள் எதுவும் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? பல ஆண்டுகளாக நான் காற்றையும் மழையையும் தாங்கிக்கொண்டேன், மனித உலகத்தின் கசப்பையும் நான் அனுபவித்திருக்கிறேன்; இருப்பினும், கவனமான சிந்தனைக்குப்பிறகு, எந்தவிதமான துன்பங்களும் மாம்சமான மனிதர்கள் என்மீது நம்பிக்கை இழக்கும்படிச் செய்யாது, அதுபோலவே எந்தவொரு இனிமையும் மாம்சமான மனிதர்கள் என்மீது வெறுப்பை வளர்த்துக்கொள்ளவோ, மனச்சோர்வடையவோ அல்லது என்னை நிராகரிக்கவோ வழிவகுக்காது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு உண்மையில் ஒரு துன்பம் இல்லாமை அல்லது ஓர் இனிமையின் குறைபாடு ஆகியவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா?

இன்று, நான் மாம்சத்தில் வசிக்கிறேன், நான் செய்ய வேண்டிய கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்யத் தொடங்கியுள்ளேன். என் ஆவியின் குரலுக்கு மனிதர்கள் அஞ்சினாலும், அவர்கள் என் ஆவியின் சாரத்திற்கு எதிராகச் செல்கிறார்கள். என் வார்த்தைகளில் மாம்சமான என்னை அறிந்து கொள்வது மனிதக்குலத்திற்கு எவ்வளவு கடினம் என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை. நான் முன்பே கூறியது போல, எனது தேவைப்பாடுகளை நான் கடினமாக்கவில்லை, என்னைப் பற்றிய முழு அறிவைப் பெறுவது உங்களுக்கு அவசியமில்லை (ஏனென்றால் மனிதர்களுக்கு அது போதாது; இது ஓர் உள்ளார்ந்த நிலை, மற்றும் பெறப்படும் எந்த நிலைமையினாலும் அதனை ஈடுசெய்ய முடியாது). மாம்ச வடிவத்தில் என்னால் செய்யப்பட்ட மற்றும் சொல்லப்பட்ட அனைத்தையும் மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனது தேவைப்பாடுகள் கடினமாக இல்லாததால், நீங்கள் அனைவரும் இந்தச் செயல்களையும் சொற்களையும் அறிந்துகொண்டு, அவற்றை அடைய முடியும் என்பது எனது நம்பிக்கை. இந்த அருவருப்பான உலகில் உங்கள் அசுத்தங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும், இந்தப் பின்தங்கிய “பேரரசர்களின் குடும்பத்தில்” முன்னேற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், மேலும் நீங்கள் இதில் ஒருபோதும் தளர்வு காட்டக்கூடாது. நீ உன்னோடு கூடவே சிறிதளவு கூட தளர்வாக இருக்கக்கூடாது. ஒரு நாளில் நான் வெளிப்படுத்துவதை அறிந்து கொள்வதற்கு நீ அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய தேவை இருக்கும், மேலும் நான் பேசும் ஒரு வாக்கியத்திலுள்ள அறிவை அனுபவித்து உணரவும் அதைப் பெறவும் வாழ்நாள் முழுமையும் எடுத்துக் கொள்ளும். நான் பேசும் வார்த்தைகள் தெளிவற்றவை மற்றும் சுருக்கமானவை அல்ல; அவை வெற்றுப் பேச்சு அல்ல. பலர் என் வார்த்தைகளைப் பெறுவோம் என்று நம்புகிறார்கள், ஆனால் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பதில்லை; பலர் என் சம்பூரணத்தின் மீது தாகம் கொள்கிறார்கள், ஆனால் நான் அவர்களுக்குக் கொஞ்சம் கூட கொடுப்பதில்லை; பலர் என் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள், ஆனாலும் நான் அதை எப்போதும் மறைத்து வைத்திருக்கிறேன்; பலர் என் குரலைக் கவனமாகக் கேட்கிறார்கள், ஆனால் நான் கண்களை மூடிக்கொண்டு என் தலையைச் சாய்த்துக் கொள்கிறேன், அவர்களின் “ஏக்கத்திற்கு” அசைந்து கொடுப்பதில்லை; பலர் என் குரலின் சத்தத்திற்கு அஞ்சுகிறார்கள், ஆனால் என் வார்த்தைகள் எப்போதுமே தாக்குதல் செய்யக் கூடியவை; எனது முகத்தைப் பார்த்து பலர் அச்சமடைந்துள்ளனர், ஆனால் நான் வேண்டுமென்றே அவர்களைத் தாக்கும் வகையில் தோன்றுகிறேன். மனிதர்கள் என் முகத்தை உண்மையிலேயே பார்த்ததில்லை, என் குரலை அவர்கள் உண்மையிலேயே கேட்டதில்லை; அவர்கள் உண்மையிலேயே என்னை அறியாததே இதற்குக் காரணம். அவர்கள் என்னால் தாக்கப்பட்டாலும், அவர்கள் என்னை விட்டு விலகினாலும், அவர்கள் என் கரங்களால் தண்டிக்கப்பட்டாலும், இவையெல்லாம் உண்மையிலேயே என் சொந்த இருதயத்திற்குப் பின்னால் உள்ளதா என்பது அவர்களுக்கு அப்போதும் தெரிவதில்லை, நான் என் இதயத்தை யாருக்குத் துல்லியமாக வெளிப்படுத்துகிறேன் என்பது அப்போதும் தெரிந்து கொள்வதில்லை. உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து, யாரும் என்னை உண்மையாக அறிந்திருக்கவில்லை அல்லது உண்மையிலேயே என்னைப் பார்த்ததில்லை, நான் இன்று மாம்சமாக மாறியிருந்தாலும், நீங்கள் இன்னும் என்னை அறியவில்லை. இது உண்மையல்லவா? மாம்சத்தில் என் செயல்களையும் தன்மையையும் நீ எப்போதாவது கொஞ்சமாவது பார்த்திருக்கிறாயா?

பரலோகத்தில் நான் அமர்ந்திருப்பேன், வானத்திற்கு அடியில் நான் ஓய்வெடுக்கிறேன். நான் வசிக்க எங்காவது எனக்கு இடமுண்டு, என் வல்லமைகளைக் காண்பிப்பதற்கு எனக்கு ஒரு நேரம் உண்டு. நான் பூமியில் இல்லாதிருந்தால், நான் மாம்சத்திற்குள் என்னை மறைக்கவில்லை என்றால், நான் தாழ்மையும் மறைவும் இல்லாதிருந்தால், வானமும் பூமியும் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே மாற்றப்பட்டிருக்கும் அல்லவா? என் மக்களே, நீங்கள் ஏற்கனவே என்னால் பயன்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? இருப்பினும், எனது செயல்களுக்குள் ஞானம் இருக்கிறது, மனிதர்களின் ஏமாற்றுத்தனத்தை நான் முழுமையாக அறிந்திருந்தாலும், நான் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றவில்லை, மாறாக அதற்கு ஈடாக அவர்களுக்கு ஏதாவது கொடுக்கிறேன். ஆவிக்குரிய உலகில் என் ஞானம் விவரிக்க முடியாதது, மாம்சத்தில் என் ஞானம் நித்தியமானது. இது எனது செயல்கள் தெளிவுபடுத்தப்பட்ட தருணம் அல்லவா? ராஜ்யத்தின் யுகத்தில், இன்றுவரை, நான் பல முறை மனிதர்களை மன்னித்திருக்கிறேன். இதற்கு மேலும் எனது நேரத்தை உண்மையாகவே நான் தாமதப்படுத்த முடியுமா? எளிதில் நொறுங்கக்கூடிய மனிதர்களிடம் நான் ஓரளவு இரக்கமுள்ளவனாக இருந்தபோதிலும், என் கிரியை முடிந்ததும், பழைய கிரியைகளைச் செய்வதன் மூலம் எனக்கு இன்னமும் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? என் மீது குற்றம் சாட்டச் சாத்தானை நான் புத்திசாலித்தனமாக அனுமதிக்கலாமா? எனக்கு மனிதர்கள் எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை, ஆனால் என் வார்த்தைகளின் யதார்த்தத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என் வார்த்தைகள் எளிமையானவை என்றாலும், சாராம்சத்தில் அவை சிக்கலானவை, ஏனென்றால் நீங்கள் மிகவும் சிறியவர்கள், மேலும் மிகவும் உணர்ச்சியற்றவர்களாக வளர்ந்து விட்டீர்கள். நான் என் மர்மங்களை நேரடியாக வெளிப்படுத்தி, மாம்சத்தில் என் சித்தத்தைத் தெளிவுபடுத்தும்போது, நீங்கள் கவனிக்கவில்லை; நீங்கள் ஒலிகளைக் கேட்கிறீர்கள், ஆனால் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நான் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் மாம்சத்தில் இருந்தாலும், மாம்ச ஊழியத்தின் கிரியையை என்னால் செய்ய முடியவில்லை.

என் வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் மாம்சத்தில் நான் செய்த செயல்களை யார் அறிந்திருக்கிறார்கள்? எனது மர்மங்களை நான் எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்தும்போது, அல்லது அவற்றை உரக்கப் பேசும்போது, மக்கள் அனைவரும் வாயடைத்துப்போகிறார்கள்; அவர்கள் மௌனமாகக் கண்களை மூடுகிறார்கள். நான் சொல்வது மனிதர்களுக்கு ஏன் புரியவில்லை? என் வார்த்தைகளின் ஆழம் அவர்களுக்கு ஏன் புரியவில்லை? என் செயல்களைப் பார்ப்பதில் அவர்கள் ஏன் இவ்வளவு குருடர்களாக இருக்கிறார்கள்? யாரால் என்னைக் காணவும் மேலும் ஒருபோதும் மறக்காமலும் இருக்க முடியும்? அவர்களில் யாரால் என் குரலைக் கேட்டு, அதைக் கடந்து செல்ல அனுமதிக்க முடியும்? என் சித்தத்தை உணர்ந்து என் இருதயத்தை மகிழ்விப்பவர் யார்? நான் மக்களிடையே வாழ்கிறேன், அவர்களுடன் பழகுகிறேன்; நான் அவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க வந்திருக்கிறேன்—நான் மனிதக்குலத்திற்காக அவற்றை உருவாக்கிய பிறகு எல்லாம் நல்லது என்று நான் உணர்ந்தாலும், மனிதர்களிடையே வாழ்க்கையிலிருந்து நான் மகிழ்ச்சியடையவில்லை, அவர்களிடையே உள்ள எந்த மகிழ்ச்சியையும் கண்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. நான் அவர்களை வெறுக்கவில்லை, புறக்கணிக்கவில்லை, ஆனால் நான் அவர்களைப் பற்றி உணர்ச்சிவசப்படுவதில்லை—ஏனென்றால் மனிதர்கள் என்னை அறியாததால், இருளில் என் முகத்தைப் பார்ப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது; எல்லா ஆரவாரங்களுக்கும் மத்தியில், அவர்கள் என் குரலைக் கேட்பதில் சிரமப்படுகிறார்கள், நான் சொல்வதை அவர்களால் அறிய முடியவில்லை. எனவே, மேலோட்டமாக, நீங்கள் செய்வது எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுப்பதேயாகும், ஆனால் உங்கள் இருதயங்களில், நீங்கள் இன்னும் எனக்குக் கீழ்ப்படியவில்லை. மனிதக்குலத்தின் பழைய இயல்பு அனைத்தும் இதுபோலவே இருக்ககிறது என்று கூறலாம். ஒரு விதிவிலக்காக இருப்பவர் யார்? என் சிட்சிப்பின் பாத்திரமாக இல்லாதவர் யார்? இருப்பினும், என் சகிப்புத்தன்மையின் கீழ் யார் வாழவில்லை? என் கோபத்தால் மனிதர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டால், பரலோகத்தையும் பூமியையும் நான் படைத்ததன் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்? நான் ஒரு முறை பலரை எச்சரித்தேன், பலருக்கு வற்புறுத்திக் கூறினேன், பலருக்கு வெளிப்படையாக நியாயத்தீர்ப்பளித்தேன். மனிதர்களை நேரடியாக அழிப்பதை விட இது சிறந்ததல்லவா? எனது நோக்கம் மக்களை மரிக்கும்படி செய்வதல்ல, என் நியாயத்தீர்ப்பின் மத்தியில் அவர்கள் செய்த எல்லாச் செயல்களையும் அவர்களை அறிந்துகொள்ள வைப்பதாகும். நீங்கள் அதலபாதாளத்தில் இருந்து ஏறும் போது, அதாவது, நீங்கள் என் நியாயத்தீர்ப்பிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளும்போது, உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் மறைந்துவிடும், எல்லோரும் என்னைத் திருப்திப்படுத்த ஆசைப்படுவார்கள். இதில், நான் எனது இலக்கை அடைந்திருக்க மாட்டேனா?

மார்ச் 1, 1992

முந்தைய: அத்தியாயம் 8

அடுத்த: அத்தியாயம் 10

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக