அத்தியாயம் 4

நொடிக்கு நொடி, ஆவியில் அமைதியாக நாம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்போம். சுத்தமான இருதயத்துடன் தேடுவோம். நமக்கு என்ன நேர்ந்தாலும், நாம் கண்மூடித்தனமாக பேசக்கூடாது. நாம் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க வேண்டும். அவருடன் தொடர்ந்து ஐக்கியம் கொள்ள வேண்டும். பின்னர் அவருடைய நோக்கங்கள் நிச்சயமாக நமக்கு வெளிப்படும். ஆவிக்குள், எல்லா நேரங்களிலும் நாம் வேறுபடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும், மேலும் தெளிவான மற்றும் உறுதியான ஆவி நம்மிடம் இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக இருக்கும், நம்முடைய வறண்ட ஆவிக்கு ஊட்டமளிக்கும் புத்துயிரூட்டும் ஜீவத்தண்ணீரிலிருந்து நாம் தண்ணீர் எடுத்து பருக வேண்டும். சுய நீதி, திமிர், கர்வம் மற்றும் சுய திருப்தி என்னும் சாத்தானுக்குரிய நமது மனநிலையிலிருந்து நம்மை நாம் தூய்மைப்படுத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் பெற நாம் நம் இருதயங்களைத் திறக்க வேண்டும். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் செயல்பட வேண்டும். அவருடைய வார்த்தையை நாம் அனுபவித்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதன் மூலம், அவருடைய வார்த்தையை நம்முடைய ஜீவனாக மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும். இது நம்முடைய பரலோகம் நமக்கு அனுப்பிய அழைப்பாகும்! தேவனுடைய வார்த்தையின்படி நாம் வாழும்போதுதான் நாம் ஜெயிக்க முடியும்!

இப்போதும் நம்முடைய யோசனைகள் மிகவும் அருவருப்பானவை. ஆவியானவருக்கு ஏற்ப செயல்பட முடியாமல் நாம் உண்மையில்லாமல் பேசுகிறோம், மோசமாக செயல்படுகிறோம். கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இன்று இல்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிக வேகமாக முன்னேறுகிறது. தேவனுடைய வார்த்தையை நாம் விரிவாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு யோசனையையும் சிந்தனையையும், ஒவ்வொரு இயக்கத்தையும், எதிர்வினையையும் நாம் நமது இருதயங்களில் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க முடிய வேண்டும். ஒருவரின் முகத்துக்கு முன்னாகவோ அல்லது அவர்களின் முதுகுக்கு பின்னாகவோ நாம் செய்யும் எந்த காரியமும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது. பரிசுத்த ஆவியானவர் ஆழ்ந்த அனுபவத்தின் ராஜ்யத்திற்கு நம்மை வழிநடத்தும் பணியில் இருக்கிறார். அங்கு நிச்சயமாக நாம் சர்வவல்லவரை நெருங்கி வருவோம்.

இந்த உலகத்தின் தேவன் நம் ஆவிக்குரியக் கண்களைத் திறந்துவிட்டார். ஆவிக்குரிய மர்மங்கள் தொடர்ந்து நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. சுத்தமான இருதயத்துடன் தேடுங்கள்! விலைக்கிரயத்தைச் செலுத்தத் தயாராக இருங்கள். ஒற்றுமையுடன் முன்னேறுங்கள். உங்களை மறுக்கத் தயாராக இருங்கள். இனிமேலும் பேராசைப்படாதீர்கள். பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுங்கள். தேவனுடைய வார்த்தையை அனுபவியுங்கள். அதன் பின் முழு பிரபஞ்சத்தின் புதிய மனிதர் தோன்றுவார். சாத்தான் அதன் முடிவைச் சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது. தேவனுடைய சித்தம் நிறைவடையும். உலக நாடுகள் அனைத்தும் கிறிஸ்துவின் ராஜ்யமாக மாறும். கிறிஸ்து பூமியில் ராஜாவாக என்றென்றும் ஆட்சி செய்வார்!

முந்தைய: அத்தியாயம் 3

அடுத்த: அத்தியாயம் 5

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே...

துன்மார்க்கன் நிச்சயமாக தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை...

உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஒரு...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக