அத்தியாயம் 9

எனது வார்த்தையைப் பற்றிய சிறிதளவு குழப்பமோ அல்லது அக்கறையின்மையோ இருப்பதும் கூட ஏற்கத்தக்கதல்ல என்பதை உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்; என் சித்தங்களுக்கு ஏற்ப, நீ பின்பற்றவும், கீழ்ப்படியவும் மற்றும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். நீ எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, அகந்தையுடனோ, சுய-நீதியுள்ள மனநிலையிலோ இருக்கக் கூடாது; உனக்குள் குடிகொண்டிருந்த பழைய, இயற்கையான மனநிலையையை நீக்குவதற்கு எல்லா நேரங்களிலும் என்னையே நீ சார்ந்திருக்க வேண்டும். எனக்கு முன்பாக நீ எப்போதும் இயல்பான நிலையிலேயே இருக்க வேண்டும், மற்றும் உறுதியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். உன் சிந்தனை நிதானத்துடனும் தெளிவாகவும் இருப்பதோடு, பிற எந்த ஒரு மனிதர், நிகழ்வு அல்லது பொருளாலும் அது கட்டுப்படுத்தப்படவோ ஆட்படுத்தப்படவோ கூடாது. என் முன்பாக நீ எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதோடு என்னுடன் தொடர்ச்சியான நெருக்கத்தையும், ஐக்கியத்தையும் நீ பராமரிக்க வேண்டும். நீ பெலனுடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும், மற்றும் எனக்கான உன் சாட்சியத்தில் உறுதியாக நிற்க வேண்டும்; என் சார்பாக மேலெழுந்து பேசு, பிறர் என்ன சொல்வார்களோ என பயம் கொள்ள வேண்டாம். என் சித்தங்களை நிறைவு செய், மேலும் யாரும் உன்னைக் கட்டுப்படுத்தாதிருக்கட்டும். நான் உனக்கு வெளிப்படுத்தியவை யாவும் என் சித்தத்திற்கேற்பத் தாமதமின்றிப் பின்பற்றப்பட வேண்டும். ஆழ் மனதில் நீ எவ்வாறு உணர்கிறாய்? நீ சங்கடமாக உணர்கிறாய், இல்லையா? நீ புரிந்து கொள்வாய். எனது பாரத்தை நீ கருதிப்பார்க்கும்போது, என் சார்பாக ஏன் உன்னால் எழுந்து நின்று பேச இயலவில்லை? அற்பமான செயல்களுக்கு நீ தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கிறாய், ஆயினும் என்னால் அனைத்தையும் தெளிவாகக் காண முடிகிறது. நான் உன் ஆதரவாகவும் கேடயமாகவும் இருக்கிறேன், அனைத்தும் என் கைகளில் உள்ளன. பின்னர் நீ ஏன் பயப்படுகிறாய்? நீ மிகவும் உணர்ச்சிவசப்படுகிறாய் அல்லவா? உன்னால் முடிந்த அளவு விரைவாக உனது உணர்ச்சிகளை உடனே ஒதுக்கித் தள்ள வேண்டும்; நான் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதில்லை, மாறாக நீதியுடன் செயல்படுகிறேன். உன் பெற்றோர் திருச்சபைக்குப் பயனில்லாத எதைச் செய்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது. எனது சித்தங்கள் உனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றை நீ புறக்கணிக்காதே. மாறாக, உனது கவனம் முழுவதையும் அவற்றின் மீதே செலுத்தி, மனப்பூர்வமாக இதனை மேற்கொள்ள பிற அனைத்தையும் நீ ஒதுக்கி வைக்கவேண்டும். எப்போதும் உன்னை என் கைகளில் வைத்திருப்பேன். எப்போதும் தன்னம்பிக்கையற்று, உனது கணவர் அல்லது மனைவியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டாம்; நீ எனது சித்தம் நிறைவேற அனுமதிக்க வேண்டும்.

விசுவாசமுள்ளவனாய் இரு! விசுவாசமுள்ளவனாய் இரு! நானே உனது சர்வவல்லவர். ஒருவேளை நீ இதனை ஓரளவு தெளிவாக அறிந்திருக்கலாம், ஆனாலும் நீ விழிப்புடனே இருக்க வேண்டும். திருச்சபை, எனது சித்தம் மற்றும் எனது மேலாண்மை ஆகியவற்றுக்காக, நீ முழுமையான பக்தி செலுத்த வேண்டும், மேலும் எல்லா இரகசியங்களையும், விளைவுகளையும் நீ தெளிவாகக் காணும்படி செய்யப்படும். இதில் மேலும் தாமதம் இராது; நாட்கள் முடிவுக்கு வருகின்றன. நீ என்ன செய்ய வேண்டும்? நீ எவ்வாறு வளர்ச்சி அடைந்து உனது வாழ்க்கையில் பக்குவம் அடைவாய்? எனக்குப் பயனுள்ளவனாக உன்னை நீயே எவ்வாறு விரைந்து ஆக்கப்போகிறாய்? எனது சித்தத்தை நீ எவ்வாறு செய்து முடிக்கப் போகிறாய்? இவ்வினாக்களுக்கு விடை தர மிகுந்த சிந்தனையும் என்னுடன் ஆழ்ந்த ஐக்கியமும் தேவை. என்னைச் சார்ந்துகொள், என்னை விசுவசி, ஒருபோதும் கவனக் குறைவாக இருக்காதே, மேலும் எனது வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளக் கூடியவனாக இரு. நீ சத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும், அடிக்கடி அதனையே புசித்துப் பானம்பண்ண வேண்டும். ஒவ்வொரு சத்தியமும் புரிந்து கொள்ளப்படுவதற்கு முன்பாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

உனக்குப் போதுமான நேரம் இல்லையென்று இப்போது உணர்கிறாயா? மனதிற்குள்ளே முன்பை விட நீ இப்போது வேறுபட்ட நிலையில் இருப்பதாக உணர்கிறாயா, மேலும் உனது பாரம் இப்போது மிகக் கனமாக உள்ளது போல் தெரிகிறதா? எனது சித்தங்கள் உன் மீதே உள்ளன; நீ தெளிவான சிந்தையுள்ளவனாக இருப்பதோடு, அவற்றிலிருந்து விலகிச் செல்லக் கூடாது, மற்றும் எப்போதும் என்னுடன் இணைந்திருக்க வேண்டும். என்னுடன் நெருங்கி இரு, என்னுடன் தொடர்பில் இரு, என் இருதயத்தின் மீது அக்கறை கொண்டவனாய் இரு, மேலும், மற்றவர்களுடன் இணைந்து ஊழியம் செய்யக்கூடியவாய் இரு. இதனால் என் சித்தங்கள் எப்போதும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். எந்த நேரத்திலும் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்! அதிகக் கவனம்! இம்மியளவும் தளர்வு வேண்டாம்; இது உனது கடமை, மேலும் எனது கிரியை இதனுள்ளேதான் உள்ளது.

இந்நிலையில், நீ ஓரளவு புரிதலைப் பெற்றிருக்கலாம், மேலும், இது மிகவும் அற்புதமானது எனவும் உணரலாம். கடந்த காலத்தில், இது மனிதரின் கொள்கைகள், கருத்துகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றில் இருந்து முழுக்க வேறுபட்டது என உணர்ந்து சந்தேகங்கள் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இப்போது நீ இதனை அடிப்படையில் புரிந்து கொண்டிருக்கிறாய். இது எனது வியப்புக்குரிய கிரியை ஆகும், மேலும் இது தேவனுடைய அற்புதமான கிரியையுமாகும்; இதனுள் புகும்போது, நீ முழுமையான பரந்த விழிப்புணர்வோடு காத்திருக்க வேண்டும். காலம் என் கைகளில் உள்ளது; அதனை வீணாக்க வேண்டாம், ஒரு கணமும் தளர்வுற வேண்டாம்; காலத்தை வீணாக்குவதால் எனது கிரியை தாமதப்படுவதோடு எனது சித்தமும் உன்னில் தடைபடுகிறது. நீ அடிக்கடி என்னை நினைத்துக் கொள்வதுடன் என்னுடன் ஐக்கியத்துடனும் இருக்கவேண்டும். மேலும் உனது செயல்கள், இயக்கங்கள், எண்ணங்கள், கருத்துகள்—உனது குடும்பம், கணவர், ஆண், பெண் பிள்ளைகள் ஆகிய அனைத்தையும் என் முன் நீ கொண்டுவர வேண்டும். உன் நடைமுறையில் சுயத்தின் மேல் சார்ந்திருக்காதே, அல்லது நான் சீற்றம் கொள்ள நேரிடும், மற்றும் உனது இழப்புகள் மீட்க முடியாதவை ஆகிவிடும்.

எல்லா நேரங்களிலும் கட்டுப்பாட்டுடன் நடை போடு, மேலும் என் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு எப்போதும் நடந்து கொள்ளவேண்டும். என் ஞானத்தை நீ பெற்றிருக்கவேண்டும். எவ்வித சிரமங்களை நீ எதிர்கொண்டாலும் என் முன்பாக வா, நான் உனக்கு வழிகாட்டுவேன். தொந்தரவு செய்யாதே அல்லது குழப்பத்துடன் பேசாதே. உனது வாழ்வு எவ்விதப் பலனும் பெறவில்லை எனில், அதற்குக் காரணம் உனது அறிவின்மையும், நன்மை மற்றும் தீமையான வார்த்தைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாமையுமே ஆகும். உனக்குத் துன்பம் நேராத வரை நீ இதனைப் புரிந்து கொள்ள மாட்டாய், மோசமான நிலைக்குச் செல்வாய், பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் இருக்க மாட்டாய், ஆனால் அப்போது காலம் கடந்துவிடும். காலம் இப்போது நெருக்குகிறது, எனவே வாழ்க்கைப் பந்தயத்தில் சிறிதும் பின் வாங்காதே; என் அடிச்சுவடுகளை நெருங்கிப் பின்தொடர். ஏதேனும் சிரமங்கள் எழுந்தால், என்னோடு நெருக்கமாக இருந்து அடிக்கடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடு, மற்றும் என்னுடன் நேரடியாக ஐக்கியம் கொள்ள வேண்டும். இந்தப் பாதையை நீ புரிந்துகொண்டு பின்பற்றினால், இது உனக்கு முன்னால் உள்ள நுழைவை எளிதாக்கும்.

எனது வார்த்தைகள் உனக்கு மட்டும் கூறப்பட்டவை அல்ல; திருச்சபைக்கு வரும் ஒவ்வொருவரும் பலவற்றில் குறைபாடு உள்ளவர்கள் ஆவர். நீங்கள் அதிகமாக ஐக்கியப்பட வேண்டும். உங்களின் சொந்த ஆவிக்குரிய வழிபாடுகளின் போது சுயமாகப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். முக்கியமான உண்மைகளைப் புரிந்து கொள்ளவும் உடனடியாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். எனது வார்த்தைகளின் யதார்த்தத்தை நீங்கள் உணர வேண்டும்: இதன் உண்மைப் பொருளையும் அதன் கொள்கைகளையும் இறுகப் பற்றிக் கொள்வதோடு, உங்களின் பிடியை நழுவவிடக் கூடாது. எப்போதும் என்னை ஆழ்ந்து சிந்திப்பதுடன் ஐக்கியத்துடனும் இருந்திடுங்கள், பின்னர் படிப்படியாக அனைத்தும் வெளிப்படுத்தப்படும். தேவனுக்கு முன்பாக காத்திருந்து அமைதியாக உனது இருதயம் வளராத வரை, ஏதேனும் உனக்கு நிகழ்ந்து அமைதி குலைந்தாலும், நீ தேவனுக்கு நெருக்கமாகச் சிறிதளவும் வர முடியாது. நீ எப்போதும் குழப்பத்துடனும், தெளிவற்றும் இருப்பதோடு, என் முகத்தைக் காண்பதற்கும் இயலாமல் இருக்கிறாய்; இதனால் நீ எனது இருதயத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்—நீ ஓரளவுக்குப் புரிந்து கொண்டாலும் கூட, நம்பிக்கையின்றி சந்தேகத்துடனேயே இருக்கின்றாய். நான் உன் மனதில் முழுவதுமாக நிறைந்திருக்கும்போது, உன் மனது எந்த உலக விஷயங்களாலும் குறுக்கிடப்படாமல் இருக்கும்போது, மேலும் தெளிந்த அமைதியான மனதுடன் நீ காத்திருக்கும்போது மட்டுமே, என் சிந்தைகளுக்கு இணங்க ஒவ்வொன்றாக உங்களுக்கு வெளிப்படுத்துவேன். என்னை நெருங்குவதற்கான இப்பாதையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் உன்னைத் தாக்கினாலும் அல்லது சாபமிட்டாலும் அல்லது பிறர் உனக்களிக்கும் விஷயங்கள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர்கள் தேவனுக்கு நெருக்கமாவதற்கு உன்னை அனுமதிக்காத வரை அவை ஏற்கத்தக்கவை அல்ல. உனது இருதயம் எனது பிடியில் இருக்கட்டும், என்னை விட்டு எப்போதும் பிரியாதிருப்பாயாக. இவ்வகையான நெருக்கமும் ஐக்கியமும் இருக்கையில், உனது பெற்றோர், கணவர், குழந்தைகள், பிற குடும்ப தொடர்புகள், மற்றும் உலகக் சிக்கல்கள் ஆகிய அனைத்தும் பறந்து போய்விடும். இதனால் நீ உனது இருதயத்தில் விவரிக்க முடியாத இனிமையை மகிழ்வுடன் கொண்டாடுவாய், மணம் மிக்க இனிமையான சுவையை அனுபவிப்பாய்; மேலும் நீ உண்மையாகவே என்னிடமிருந்து பிரிக்க முடியாதவனாகி விடுவாய். இம்முறையிலேயே நீங்கள் தொடர்ந்தால், என் மனதில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தொடர்ந்து முன்னேறுகையில், நீங்கள் உங்கள் வழியிலிருந்து தவறமாட்டீர்கள், ஏனெனில் நான் உங்கள் வழியாக இருக்கிறேன், மேலும் ஒவ்வொன்றும் என்னால் வாழ்கின்றன. உன் வாழ்க்கை எந்த அளவு முதிர்ச்சியானது, உலகப்பற்றிலிருந்து நீங்கள் விடுபடும்போது, நீ உனது உணர்ச்சிகளை ஒதுக்கி வைக்கும்போது, உனது கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு விலகி இருக்கும் போது, உனது வாழ்க்கை எப்போது முதிர்ச்சி அடைகிறது…இவை அனைத்தும் எனது நேரத்திற்கேற்பவே நிகழும். கவலை கொள்ளத் தேவையில்லை.

நேர்மறையான பக்கமிருந்தே நீ நுழைய வேண்டும். செயல்பாடின்றி நீ காத்திருந்தால், பின்னர் நீ இன்னும் எதிர்மறையாகவே இருப்பாய். என்னுடன் ஒத்துழைக்கையில் நீ செயலூக்கத்துடன் இருத்தல் வேண்டும்; விடாமுயற்சி வேண்டும், சோம்பலாக இருத்தல் எப்போதும் கூடாது. என்னுடன் எப்போதும் ஐக்கியத்துடன் இருப்பதோடு, ஆழ்ந்த நெருக்கத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். நீ புரிந்து கொள்ளவில்லை எனில், விரைந்து முடிவுகளைப் பெற பொறுமையை இழக்காதே. நான் உனக்குக் கூற மாட்டேன் என்பதல்ல; நீ என் முன்னால் இருக்கும்போது, என்னைச் சார்ந்திருக்கிறாய், என்னைச் சார்ந்திருப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறாயா என்பதே ஆகும். நீ எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும், அனைத்தையும் என் கைகளில் ஒப்புவிக்க வேண்டும். வீணாகத் திரும்பிச் செல்லாதே. அறியாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு நீ எனக்கு நெருக்கமாக இருந்ததன் பின்னர், உனக்கு என் சித்தங்கள் வெளிப்படுத்தப்படும். நீ அவற்றைப் புரிந்துகொண்டால், உண்மையாகவே எனக்கு நேருக்கு நேராக வந்து என் முகத்தை நீ காண்பாய். நீ மிகுந்த தெளிவும், உறுதியும் பெறுவாய், மேலும் சார்ந்திருக்க ஏதேனும் ஒன்றைப் பெறுவாய். பின்னர் ஆற்றலையும் நம்பிக்கையையும் கொள்வாய், மேலும், முன்னேறிச் செல்வதற்கான பாதையையும் நீ பெறுவாய். அனைத்தும் உன்னிடம் எளிதாக வந்து சேரும்.

முந்தைய: அத்தியாயம் 8

அடுத்த: அத்தியாயம் 10

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக