அத்தியாயம் 79

குருடர்களே! அறிவற்றவர்களே! பயனற்ற குப்பைக் குவியல்களே! நீங்கள் என்னுடைய முழு தெய்வீகத் தன்மையிலிருந்து எனது சாதாரண மனிதத்தன்மையைப் பிரிக்கிறீர்கள்! இதை எனக்கு எதிரான பாவமாக நீங்கள் பார்க்கவில்லையா? மேலும், இது மன்னிக்கக் கடினமான ஒன்றாகும்! நடைமுறையின் தேவன் இன்று உங்கள் மத்தியில் வந்துள்ளார், இருப்பினும் நீங்கள் என்னுடைய ஒரு பக்கமான, எனது சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அறிவீர்கள், எனது முழுமையான தெய்வீகத் தன்மையாக இருக்கும் இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்க்கவே இல்லை. எனக்குப் பின்னால் யார் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்களென்று எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? நான் உன்னை விமர்சிக்கவில்லை; நீ எந்த நிலை வரை அடைய முடியும் என்பதையும், நீ இறுதியில் எப்படி முடிக்கப் போகிறாய் என்பதையும் பார்க்க நான் தெளிவாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கில் பேசப்பட்டன, ஆனாலும் நீங்கள் பல மோசமான விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் என்னை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்? உன் ஜீவனை இழக்காதபடி ஜாக்கிரதையாயிரு! நீ என் கோபத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தூண்டினால், நான் உனக்கு இரக்கங்காட்ட மாட்டேன், நீ வெளியே துரத்தப்படுவாய். முன்பு நீ எப்படி இருந்தாய், விசுவாசமாகவோ அல்லது வைராக்கியமாகவோ, நீ எவ்வளவு ஓடியிருக்கிறாய், அல்லது எனக்காக உன்னையே எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறாய் என்பதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன்; நான் இந்த விஷயங்களைப் பார்க்கவே மாட்டேன். இப்போது நீ என்னை கோபம் மட்டும் படுத்தினால், நான் உன்னைப் பாதாளக் குழியில் எறிந்து விடுவேன். இன்னும் யார் என்னை ஏமாற்ற முயற்சி செய்யத் துணிகிறார்கள்? இதை நினைவில் கொள்! இனிமேல், நான் கோபப்படும் போதெல்லாம், யாரிடத்தில் கோபங்கொள்கிறேன் என்பதைப் பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் எந்தப் பிரச்சனையும் வராமல் இருப்பதற்காகவும் நான் உன்னை இனிமேல் பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்காகவும் நான் உன்னை உடனடியாகச் சுத்திகரிப்பேன். நீ என்னை எதிர்த்து நின்றால், நான் உடனடியாக உன்னைத் தண்டிப்பேன். இதை நீங்கள் மனதில் கொள்வீர்களா? உங்களில் புத்திசாலிகள் உடனடியாக மனந்திரும்ப வேண்டும்.

இன்று—அதாவது, இப்போது—நான் கோபமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் மற்றும் உங்களை முழுவதுமாக எனக்கு வழங்க வேண்டும். இனி நீங்கள் தாமதிக்கக் கூடாது. நீ என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையென்றால் நான் என் கரத்தை நீட்டி உன்னை அடித்துக் கீழே தள்ளுவேன். இதைச் செய்வதன் மூலம், நான் என்னை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்; இந்த நாளில் நான் அனைவரிடமும் கோபமாகவும் மாட்சிமையாகவும் இருக்கிறேன் (இது என் நியாயத்தீர்ப்பை விட மிகக் கடுமையானது). நான் பல வார்த்தைகளை பேசியுள்ளேன், இருப்பினும் நீங்கள் எந்த எதிர்வினையையும் சிறிதாகிலும் ஆற்றவில்லை; நீங்கள் உண்மையில் அந்த அளவிற்கு மந்தபுத்தி உள்ளவர்களா? நீங்கள் அப்படி அல்ல என்று நான் நினைக்கிறேன். இது உங்களுக்குள் இருக்கும் பழைய பிசாசு தான், உங்களைத் தீங்கு செய்ய நடத்துகிறது. நீங்கள் இதைத் தெளிவாகப் பார்க்கிறீர்களா? ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர விரைந்து செயல்படுங்கள்! இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த நிலைக்கு முன்னேறியுள்ளது; நீங்கள் அதைப் பார்க்கவில்லையா? என்னுடைய நாமம் வீடுவீடாக, எல்லாத் தேசங்களிலும் எல்லாத் திசைகளிலும் பரவும், மேலும் பிரபஞ்ச உலகம் முழுவதும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வாய்களிலிருந்து ஒன்றுபோல உரக்கச் சொல்லப்படும்; இது ஒரு முற்றிலுமான உண்மையாகும். நான் தனித்துவமான தேவன், மேலும், நான் ஒருவரே தேவனுடையவரானவர். இன்னும் அதிகமாக, நான் மாம்சத்தின் முழுமையும், தேவனுடைய முழுமையான வெளிப்பாடுமானவர். என்னை வணங்காதபடித் துணிகிற யாரானாலும், தங்கள் கண்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிகிற யாரானாலும், எனக்கு விரோதமான வார்த்தைகளைச் சொல்லத் துணிகிற யாரானாலும் நிச்சயமாக என் சாபங்கள் மற்றும் கோபத்தால் மரித்துப் போவார்கள் (என் கோபத்தின் காரணமாக சாபம் உண்டாகும்). மேலும், என்னிடம் விசுவாசமற்று அல்லது பக்தியற்று இருக்கத் துணியும் யாரானாலும், என்னை ஏமாற்ற முயற்சிக்கும் யாரானாலும், என்னுடைய வெறுப்பால் நிச்சயம் மரித்துப் போவார்கள். என் நீதியும், மாட்சிமையும், நியாயத்தீர்ப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும். முதலில், நான் அன்பாகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தேன், ஆனால் எனது முழுமையான தெய்வீகத்தின் மனநிலை இதுவல்ல; நீதி, மாட்சிமை மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகியவை முழுமையான தேவனான என் மனநிலையை வெறுமனே உள்ளடக்கியதாகும். கிருபையின் காலத்தில், நான் அன்பாகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தேன். நான் முடிக்க வேண்டிய கிரியையின் காரணமாக நான் கிருபையும் இரக்கமும் கொண்டிருந்தேன்; ஆனாலும், அதற்குப் பிறகு, இதுபோன்ற விஷயங்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை (அதற்குப் பிறகு ஒருவரும் இருக்கவில்லை). இது அனைத்தும் நீதி, மாட்சிமை மற்றும் நியாயத்தீர்ப்பாகும், மேலும் இது எனது முழுமையான தெய்வீகத்தன்மைடன் இணைந்திருக்கும் எனது சாதாரணமான மனிதத்தன்மையின் முழுமையான மனநிலை ஆகும்.

என்னை அறியாதவர்கள் பாதாளக் குழியில் அழிவார்கள், அதே சமயம் என்னைப் பற்றி உறுதியாக இருப்பவர்கள், என் அன்பிற்குள் கவனித்துப் பாதுகாக்கப்படும்படி என்றென்றும் வாழ்வார்கள். நான் ஒரு வார்த்தையைக் கூறுகிற அந்தத் தருணத்தில், முழு பிரபஞ்சமும் பூமியின் கடையாந்தரங்களும் நடுங்கும். யாரால் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு பயத்தில் நடுங்காமல் இருக்க முடியும்? எனக்காகப் பயபக்தியினால் பொங்காமல் யாரால் தயங்கி நிற்க முடியும்? மேலும் என் செயல்களிலிருந்து என் நீதியையும் மாட்சிமையையும் அறிய இயலாதவர் யார்! என் செயல்களுக்குள் என் சர்வவல்லமையையும் ஞானத்தையும் பார்க்க முடியாதவர் யார்! கவனம் செலுத்தாதவர் நிச்சயமாக மரிப்பார்கள். ஏனென்றால் கவனம் செலுத்தாதவர்களும் என்னை எதிர்ப்பவர்களும் என்னை அறியாதவர்களுமாவர்; அவர்கள் பிரதான தூதரும், எந்த அக்கறையுமின்றி மோசமாக நடந்து கொள்பவர்களுமாவர். உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்: எந்த அக்கறையுமின்றி மோசமாக நடந்து கொள்பவர்களும், சுயநீதியுள்ள, அகந்தையும், ஆணவமும் கொண்ட எவரும் நிச்சயமாக என் வெறுப்புக்குரிய ஒரு பொருளாக இருக்கின்றனர், மேலும் அவர்கள் நிச்சயமாக அழிந்து போவார்கள்.

நான் இப்போது என் ராஜ்யத்தின் நிர்வாகக் கட்டளைகளைக் கூறுகிறேன்: எல்லாக் காரியங்களும் என் நியாயத்தீர்ப்புக்குள்ளும், எல்லாக் காரியங்களும் என் நீதிக்குள்ளும், எல்லாக் காரியங்களும் என் மாட்சிமைக்குள்ளும் உள்ளன, நான் அனைவரிடமும் என் நீதியைச் செயல்படுத்துகிறேன். என்னை நம்புவதாகக் கூறுபவர்கள் ஆனால், ஆழத்தில் எனக்கு முரண்படுபவர்கள் அல்லது என்னைக் கைவிட்ட இதயங்களை உடையவர்கள் வெளியேற்றப்படுவார்கள்—ஆனால் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட சரியான நேரத்தில் நடக்கும். என்னைப் பற்றி கேலி பேசும் மக்கள் ஆனால் மற்றவர்கள் கவனிக்காத வகையில் பேசுபவர்கள், உடனடியாக மரிப்பார்கள் (அவர்கள் ஆவி, சரீரம் மற்றும் ஆத்துமாவில் அழிவார்கள்). எனக்குப் பிரியமானவர்களை ஒடுக்குபவர்கள் அல்லது புறக்கணிப்பவர்கள் என் கோபத்தால் உடனடியாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், நான் நேசிப்பவர்கள் மீது பொறாமை கொள்பவர்கள், என்னை அநீதியுள்ளவர் என்று நினைப்பவர்கள், எனக்குப் பிரியமானவரால் நியாயந்தீர்க்கப்படும்படி ஒப்படைக்கப்படுவார்கள். நல்ல நடத்தை உள்ளவர்களும், எளிய மற்றும் நேர்மையான (ஞானம் இல்லாதவர்கள் உட்பட) மற்றும் ஒரே மனதுடன் நேர்மையாக என்னை நடத்துகிற அனைவரும் என் ராஜ்யத்தில் தொடர்ந்து இருப்பார்கள். பயிற்சி பெறாதவர்கள் அதாவது ஞானமும் அறிவும் இல்லாத நேர்மையான ஜனங்கள் என் ராஜ்யத்தில் அதிகாரம் பெறுவார்கள். இருப்பினும் அவர்களும் கையாளப்பட்டு உடைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி பெறாதவர்கள் முழுமையானவர்கள் அல்லர். மாறாக, இந்த விஷயங்களின் மூலமாக நான் அனைவருக்கும் என் சர்வவல்லமையையும் என் ஞானத்தையும் காண்பிப்பேன். என்னை இன்னும் சந்தேகிக்கும் அனைவரையும் நான் வெளியேற்றுவேன்; அவர்கள் ஒருவரையும் நான் விரும்பவில்லை (இதுபோன்ற நேரத்தில் என்னைச் சந்தேகிக்கும் மக்களை நான் வெறுக்கிறேன்). முழு பிரபஞ்சத்திலும் நான் செய்யும் செயல்களின் மூலம் நேர்மையான மக்களுக்கு எனது செயல்களின் அற்புதத்தை நான் காண்பிப்பேன், அதன் பிறகு அவர்களின் ஞானம், அறிவு மற்றும் பகுத்தறிவை வளரச் செய்வேன். எனது அதிசயச் செயல்களின் விளைவாக வஞ்சகமான மக்களை ஒரு நொடியில் அழித்து விடுவேன். என் நாமத்தை முதலில் ஏற்றுக் கொண்ட அனைத்து முதற்பேறான குமாரர்களும் (அதாவது அந்தப் பரிசுத்தமான மற்றும் கறைபடாத நேர்மையான மக்கள்) முதலாவதாக என் ராஜ்ஜியத்திற்குள் நுழைவார்கள் மற்றும் என்னுடன் இணைந்து எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்வார்கள், ராஜ்யத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்து எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் நியாயத்தீர்ப்பார்கள் (இது ராஜ்யத்தில் உள்ள அனைத்து முதற்பேறான குமாரர்களையும் குறிக்கிறது, மற்றவர்களை அல்ல). நியாயந்தீர்க்கப்பட்ட எல்லாத் தேசங்களிலும் எல்லா ஜனங்களிலும் மனந்திரும்பியவர்கள் என் ராஜ்யத்திற்குள் நுழைந்து என் ஜனங்களாக மாறுவார்கள், அதே நேரத்தில் பிடிவாதமாகவும் மனந்திரும்பாதவர்களாகவும் இருப்பவர்கள் பாதாளக்குழியில் (என்றென்றும் அழியும்படி) தள்ளப்படுவார்கள். ராஜ்யத்தில் செய்யப்படும் நியாயத்தீர்ப்பே கடைசியாக இருக்கும், மேலும் இது உலகத்திற்கான என்னுடைய முழுமையானச் சுத்திகரிப்பாகும். இனி எந்த அநீதியும், துக்கமும், கண்ணீரும், அல்லது பெருமூச்சுகளும் இருக்காது, இன்னும் அதிகமாக சொல்வதென்றால், உலகமும் கூட இனி இருக்காது. அனைத்தும் கிறிஸ்துவின் வெளிப்பாடாக இருக்கும், அனைத்தும் கிறிஸ்துவின் ராஜ்யமாக இருக்கும்! அத்தகைய மகிமை! அத்தகைய மகிமை!

முந்தைய: அத்தியாயம் 78

அடுத்த: அத்தியாயம் 80

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்

சரியான திருச்சபை வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் பிரசங்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் ஏன் இன்னும்...

துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக