அத்தியாயம் 13

உங்களின் தற்போதைய நிலையில், நீங்கள் உங்கள் சுயத்தின் கருத்துக்களை அதிகமாகக் கடைபிடிக்கிறீர்கள். உங்களுக்குள் மிகப் பெரிய மத இடையூறுகள் இருக்கின்றன. உங்களால் ஆவியில் செயல்பட முடியவில்லை. உங்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் புதிய ஒளியை நிராகரிக்கிறீர்கள். நீ பார்வையற்றவனாக இருப்பதால், பகல்நேர சூரியனை உன்னால் பார்க்க முடியவில்லை. நீ ஜனங்களை அறியவில்லை. உன் “பெற்றோரை” உன்னால் ஒருபோதும் விட்டுவிட முடியாது. உனக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இல்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ அங்கீகரிக்கவில்லை. என் வார்த்தையை எப்படி புசிக்கவும் குடிக்கவும் வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லை. சொந்தமாகப் புசிக்க மற்றும் குடிக்க உனக்குத் தெரியவில்லை என்பது ஒரு பிரச்சனையாகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் முன்னேறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஒளி தோன்றுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களும் தோன்றுகின்றன. எனினும், உனக்கு இது புரியவில்லை. அதற்குப் பதிலாக, நீ ஆராய்ச்சி செய்ய விரும்புகிறாய். அவற்றைக் கவனமாகக் கருத்தில் கொள்ளாமல் உன் தனிப்பட்ட விருப்பங்கள் என்னும் கண்ணாடி வழியாகப் பார்க்கிறாய். நீ ஒரு திகைப்புடன் கேட்கிறாய். நீ ஆவியில் விடாமுயற்சியுடன் ஜெபிக்க வேண்டாம். நீ என்னைப் பார்க்கவோ அல்லது என் வார்த்தைகளை அதிகம் சிந்திக்கவோ வேண்டாம். இவ்வாறு, உன்னிடம் உள்ளவை அனைத்தும் எழுத்துக்களும், விதிகளும் கோட்பாடுகளுமாக இருக்கின்றன. என் வார்த்தையை எப்படிப் புசிக்க வேண்டும் மற்றும் குடிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான யோசனை உனக்கு இருக்க வேண்டும். நீ என் வார்த்தையை அடிக்கடி என் முன் கொண்டு வர வேண்டும்.

இந்த நாட்களில் ஜனங்கள் தங்களை விட்டுவிட முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களைப் பூரணமானவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்தச் சிறிய உலகங்களில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் பூரணமான வகையைச் சேர்ந்த மனிதர்கள் அல்ல. அவர்கள் தவறான எண்ணங்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த விஷயங்களைத் தொடர்ந்தால், அவர்கள் நிச்சயமாக நியாயந்தீர்க்கப்படுவார்கள் மற்றும் அவை தீவிரமடைந்தால் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். என்னுடன் தொடர்ந்து ஐக்கியத்தைப் பேணுவதற்கு நீ அதிக முயற்சி எடுக்க வேண்டும். இது, நீ விரும்பும் யாருடனும் கொள்ளும் ஐக்கியம் போன்றதல்ல. நீ கலந்துரையாடும் மனிதர்களைப் பற்றிய புரிதல் உனக்கு இருக்க வேண்டும். ஜீவிதத்தில் உள்ள ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி நீ கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் நீ மற்றவர்களுக்கு ஜீவனை வழங்க முடியும் மற்றும் அவர்களின் குறைபாடுகளுக்கு ஈடுசெய்ய முடியும். நீ அவர்களுடன் போதனையின் தொனியில் பேசக்கூடாது. அது அடிப்படையில் தவறான நிலைப்பாடாகும். கலந்துரையாடலில், நீ ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். உனக்கு ஞானம் இருக்க வேண்டும் மற்றும் ஜனங்களின் இருதயத்தில் இருப்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்றால், நீ பூரணமான மனிதனாக இருக்க வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்தையும் நீ கலந்துரையாட வேண்டும்.

என்னுடன் கலந்துரையாடவும், என்னுடன் நெருக்கமாகத் தொடர்பு கொள்ளவும், சொந்தமாகப் புசிக்கவும் குடிக்கவும் மற்றும் தேவனுடன் நெருங்கிப் பழகவும் உன்னால் முடியும் என்பதே இப்போது முக்கியமான விஷயம். ஆவிக்குரிய விஷயங்களை நீ விரைவில் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் உன் சூழலையும் உன் சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷயங்களையும் நீ தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நான் யார் என்பதை நீ புரிந்து கொள்ள முடியுமா? உன்னிடம் இல்லாததை அடிப்படையாகக் கொண்டு நீ புசித்துக் குடித்து என் வார்த்தையின்படி ஜீவிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்! என் கரங்களை உணர்ந்து கொள். வழக்காட வேண்டாம். நீ வழக்காடிப் பிரிந்தால், தேவனின் கிருபையைப் பெறுவதற்கான வாய்ப்பை நீ இழக்க நேரிடும். என்னிடம் நெருங்கி வரத் தொடங்கு: உன்னிடம் எது குறைவாக உள்ளது? நீ எவ்வாறு என்னிடம் நெருங்கி வந்து என் இருதயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்? ஜனங்கள் என்னை நெருங்கி வருவது கடினம். ஏனென்றால், அவர்களால் சுயத்தை விட்டுவிட முடியவில்லை. அவர்களின் மனநிலைகள் எப்போதும் நிலையற்றும், தொடர்ந்து இருமனமாகவும் இருகின்றன. இந்த ஜனங்கள் இனிமையின் ஒரு சிறிய சுவை பெறும் தருணத்தில் மனம் வருந்துகிறார்கள் மற்றும் சுய திருப்தி அடைகிறார்கள். சிலர் இன்னும் விழிப்படையவில்லை. நீ சொல்வது எவ்வளவாக உன்னை விவரிக்கிறது? அதில் எவ்வளவு தற்காப்பாகவும் மற்றவர்களைப் பிரதிபலிப்பதாகவும், விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் இருக்கிறது? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ கிரகித்துக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை என்பதற்கான காரணம் என்னவென்றால், என்னை எப்படி நெருங்குவது என்பது உனக்குத் தெரியவில்லை. வெளிப்புறத்தில், நீ எப்போதும் விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாய். சுயமான மற்றும் உன் மனதின் கருத்துக்களை நம்பியிருக்கிறாய். நீ ரகசியமாக ஆராய்ச்சி செய்து அற்ப திட்டங்களில் ஈடுபடுகிறாய். அவற்றை நீ வெளியில் கொண்டு வரக் கூட முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது. சில காரியங்கள் தேவனிடமிருந்து வரவில்லை என்பதை நீ உண்மையாக அறிந்திருந்தால், எழுந்து நின்று அதை நிராகரிக்க ஏன் பயப்படுகிறாய்? எத்தனை பேர் எழுந்து நின்று எனக்காகப் பேச முடியும்? ஒரு ஆண் குழந்தையிடம் இருக்கும் மனவலிமையின் மிகச்சிறிய பகுதி கூட உன்னிடம் இல்லை.

உங்களின் ஜீவிதத்தில் நீங்கள் வளரவும், உங்கள் ஆவிகளை ஆர்வமாகவும் கூர்மையாகவும் மாற்றவும், தேவனிடமிருந்து வரும் விஷயங்கள் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறக்கவும் உங்களுக்குப் பயிற்சி அளிப்பதே தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எல்லாவற்றின் நோக்கமுமாகும். திறமையுடனும் பாரத்துடனும் ஊழியம் செய்யவும், ஆவியில் உறுதியுடன் இருக்கவும் தேவனிடமிருந்து வருவது உனக்கு உதவுகிறது. என்னிடமிருந்து வராத அனைத்தும் வெறுமையாக இருக்கின்றன. அவை உனக்கு எதையும் கொடுக்கவில்லை. அவை உன் ஆவிக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி, உன் விசுவாசத்தை இழக்கச் செய்கின்றன. உனக்கும் எனக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்தி, உன் மனதில் உன்னைச் சிறைபிடிக்கின்றன. இப்போதும் நீ ஆவிக்குள்ளாக வாழும்போது மதச்சார்பற்ற உலகில் உள்ள அனைத்தையும் கடந்து செல்லலாம். ஆனால் மனம் விரும்புவது போல் ஜீவிக்க நீ சாத்தானால் ஆட்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு முற்றுப்புள்ளியாகும். இப்போது இது மிகவும் எளிமையானது ஆகும்: உன் இருதயத்தால் என்னைப் பார், உன் ஆவி உடனடியாக பெலன் அடையும். நீ நடக்க வேண்டிய ஒரு பாதை இருக்கும். உன் ஒவ்வொரு அடியையும் நான் வழிநடத்துவேன். என் வார்த்தை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உனக்கு வெளிப்படும். எங்கே, எப்போது என எதுவாக இருந்தாலும் அல்லது சூழல் எவ்வளவு பாதகமாக இருந்தாலும், நான் உன்னை தெளிவாகக் காணச் செய்வேன். உன் இருதயத்தால் என்னைப் பார்த்தால் என் இருதயம் உனக்கு வெளிப்படும். இந்த முறையில், நீ முன்னால் சாலையில் ஓடுவாய். உன் வழியை ஒருபோதும் இழக்க மாட்டாய். சிலர் தங்கள் வழியை வெளிப்புறமாக உணர முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒருபோதும் தங்கள் ஆவிக்குள் இருந்து அவ்வாறு செய்வதில்லை. அவர்களால் பெரும்பாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடும்போது, அவர்கள் மேலும் குழப்பமடைகிறார்கள். அவர்கள் பின்பற்ற வழி இன்றி, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இந்த ஜனங்களுக்குப் பாதிப்பு என்னவென்று தெரியவில்லை. அவர்கள் பலவற்றைக் கொண்டிருக்கலாம் மற்றும் உள்ளாக மிகுதியாக நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றால் ஏதேனும் பயன் உள்ளதா? நீ உண்மையில் பின்பற்ற ஒரு பாதை இருக்கிறதா? உன்னிடம் ஏதேனும் வெளிச்சம் அல்லது அறிவொளி இருக்கிறதா? உன்னிடம் புதிய நுண்ணறிவு ஏதேனும் உள்ளதா? நீ முன்னேற்றம் அடைந்து விட்டாயா அல்லது பின்வாங்கினாயா? உன்னால் புதிய ஒளியைத் தொடர முடியுமா? உன்னிடம் சமர்ப்பணம் இல்லை. நீ அடிக்கடி குறிப்பிடும் சமர்ப்பணம் என்ற பேச்சைத் தவிர வேறொன்றும் இல்லை. நீ கீழ்ப்படிதலுள்ள ஜீவிதத்தை ஜீவித்தாயா?

ஜனங்களின் சுயநீதி, மனநிறைவு, சுய திருப்தி மற்றும் ஆணவம் ஆகியவற்றால் ஏற்படும் தடை எவ்வளவு பெரியதாக இருக்கிறது? நீ உண்மைக்குள் பிரவேசிக்க முடியாதபோது யார் மீது குற்றம் சொல்ல வேண்டும்? நீ ஒரு பூரணமான மனிதன் என்பதைப் பார்க்க உன்னை நீ கவனமாக ஆராய வேண்டும். உன் குறிக்கோள்களும் நோக்கங்களும் மனதில் என்னுடன் உருவாக்கப்பட்டுள்ளனவா? உன் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் என் முன்னிலையில் சொல்லப்பட்டு செய்யப்படுகின்றனவா? உன் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் நான் ஆராய்கிறேன். நீ குற்ற உணர்ச்சியை உணரவில்லையா? மற்றவர்கள் பார்க்க நீ ஒரு தவறான முன்னணியில் இருக்கிறாய். நீ அமைதியாக சுயநீதியின் காற்றை சுவாசிக்கிறாய். உன்னைப் பாதுகாக்க இதைச் செய்கிறாய். உன் தீமையை மறைக்க நீ இதைச் செய்கிறாய். அந்த தீமையை வேறொருவரிடம் தள்ளுவதற்கான வழிகளைப் பற்றியும் நீ சிந்திக்கிறாய். உன் இருதயத்தில் என்ன துரோகம் காணப்படுகிறது! நீ சொன்ன அனைத்தையும் சிந்தித்துப் பார். உன் ஆத்துமா தீங்கைப் பெறுமோ என பயந்து, நீ சாத்தானை மறைத்து, பின்னர் உன் சகோதர சகோதரிகளின் ஆகாரத்தையும் தண்ணீரையும் வலுக்கட்டாயமாக கொள்ளையடித்தது உன் சொந்த நலனுக்காக அல்லவா? உனக்கு நீயே என்ன சொல்ல வேண்டும்? இந்த முறை சாத்தான் எடுத்துச் சென்ற ஆகாரம் மற்றும் தண்ணீரை அடுத்த முறை நீ ஈடுகட்ட முடியும் என்று நினைக்கிறாயா? எனவே, நீ இப்போது அதை தெளிவாகக் காண்கிறாய். இது, நீ ஈடு செய்யக் கூடிய ஒன்றுதானா? இழந்த நேரத்தை நீ ஈடுசெய்ய முடியுமா? கடந்த சில கூட்டங்களில் ஏன் ஆகாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படவில்லை, யார் இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் என்பதை நீங்கள் கவனமாக ஆராய வேண்டும். இது தெளிவாகும் வரை ஒவ்வொன்றைப் பற்றியும் நீங்கள் கலந்துரையாட வேண்டும். அத்தகைய மனிதன் கடுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், உன் சகோதர சகோதரிகளுக்கு அது புரியாமல் போகும், பின்னர், அது மீண்டும் நடக்கும். உன் ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டுள்ளன. உன்னில் பலர் பார்வையற்றவர்கள்! மேலும், பார்ப்பவர்கள் அதைப் பற்றி கவனக்குறைவாக இருக்கிறார்கள். அவர்கள் நின்று பேசுவதில்லை. அவர்களும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். பார்த்தும் பேசாமல் இருப்பவர்கள் ஊமையாக இருக்கிறார்கள். ஊனமுற்றோராக இங்கே பலர் இருக்கின்றனர்.

சிலர் சத்தியம் என்ன, ஜீவன் என்ன, வழி என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு ஆவியைப் பற்றி புரியவில்லை. அவர்கள் என் வார்த்தையை வெறும் சூத்திரமாகவே கருதுகிறார்கள். இது மிகவும் கடுமையானதாகும். உண்மையான நன்றியும் துதியும் என்ன என்பது அவர்களுக்குப் புரியவில்லை. சிலரால் முக்கியமான மற்றும் முதன்மையான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இரண்டாம் நிலையை மட்டுமே புரிந்து கொள்கின்றனர். தேவனின் நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிப்பது என்றால் என்ன? திருச்சபையின் கட்டுமானத்தை இடிப்பதன் அர்த்தம் என்ன? பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு விளைவிப்பதன் அர்த்தம் என்ன? சாத்தானின் குறைபாடு என்றால் என்ன? இந்தச் சத்தியங்களைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், தெளிவற்ற முறையில் விவரிக்கக் கூடாது. இந்த நேரத்தில் புசித்தலும் குடித்தலும் இல்லாததற்கு காரணம் என்ன? சிலர் இன்று தேவனைச் சத்தமாகத் துதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவரை எப்படித் துதிக்க வேண்டும்? அவர்கள் பாடல்களைப் பாடி நடனமாடுவதன் மூலம் அவ்வாறு செய்ய வேண்டுமா? பிற துதியின் முறைகள் துதியாக எண்ணப்படவில்லையா? மகிழ்ச்சியான துதியே தேவனைத் துதிப்பதற்கான வழி என்ற கருத்துடன் சிலர் கூட்டங்களுக்கு வருகிறார்கள். ஜனங்களிடம் இந்த கருத்துக்கள் இருக்கின்றன. அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் கவனம் செலுத்துவதில்லை. இதன் இறுதி முடிவு என்னவென்றால், இன்னும் இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்தக் கூட்டத்தில் புசித்தலும் குடித்தலும் இல்லை. நீங்கள் அனைவரும் தேவனின் சுமையை கருத்தில் கொண்டுள்ளீர்கள் என்றும் திருச்சபையின் சாட்சியங்களைப் பாதுகாப்பீர்கள் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் உண்மையில் உன்னில் தேவனின் பாரத்தில் அக்கறை காட்டுபவர் யார்? உன்னை நீயே கேட்டுக்கொள்: நீ அவருடைய பாரத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனா? அவருக்காக நீதியைக் கடைப்பிடிக்க முடியுமா? எனக்காக நின்று பேச முடியுமா? சத்தியத்தை உறுதியுடன் கடைபிடிக்க முடியுமா? சாத்தானின் எல்லா செயல்களுக்கும் எதிராகப் போராட நீ தைரியமாக இருக்கிறாயா? என் சத்தியத்தின் பொருட்டு உன் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சாத்தானை அம்பலப்படுத்த முடியுமா? உன்னில் என் நோக்கங்கள் நிறைவேற அனுமதிக்க முடியுமா? மிக முக்கியமான தருணங்களில் உன் இருதயத்தை நீ ஒப்புக்கொடுத்திருக்கிறாயா? நீ என் விருப்பத்தைச் செய்கிற ஒருவனா? இந்தக் கேள்விகளை நீயே கேட்டுக்கொள். அவற்றைப் பற்றி அடிக்கடிச் சிந்தித்துப் பார். சாத்தானின் பரிசுகள் உனக்குள் இருக்கின்றன. அதற்காக நீ குற்றம் சுமத்தப்பட வேண்டும்—ஏனென்றால் நீ ஜனங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சாத்தானின் விஷத்தை நீ அறிந்து கொள்ளத் தவறிவிட்டாய். நீயே மரணத்தை நோக்கிச் செல்கிறாய். நீ முற்றிலும் திகைத்துப் போகிற அளவுக்கு சாத்தான் உன்னை முழுமையாக ஏமாற்றிவிட்டது. நீ விபச்சாரத்தின் மதுவைக் குடித்துவிட்டு, உறுதியான பார்வையை வைத்திருக்க முடியாமல், முன்னும் பின்னுமாக ஓடுகிறாய். நடைமுறைக்கு ஏற்ற பாதை உன்னிடம் இல்லை. நீ சரியாகப் புசிக்கவும் குடிக்கவுமாட்டாய். நீ கடுமையான யுத்தத்திலும் கலகத்திலும் ஈடுபடுகிறாய். தவறானது எது என்றும் சரியானது எது என்றும் உனக்குத் தெரியவில்லை. யார் வழிநடத்துகிறீர்களோ அவர்களைப் பின்பற்றுகிறாய். உன்னிடம் ஏதேனும் சத்தியம் இருக்கிறதா? சிலர் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள் மற்றும் ஏமாற்றத்திலும் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். ஆனால் அது அவர்களை ஒரு முற்றுப் புள்ளிக்கு இட்டுச் செல்கிறது. இந்த மனிதர்கள் தங்கள் நோக்கங்கள், குறிக்கோள்கள், உந்துதல்கள் மற்றும் மூலதனத்தைப் என்னிடமிருந்து பெறுகிறார்களா? உன் சகோதர சகோதரிகளிடமிருந்து ஆகாரம் மற்றும் தண்ணீர் பறிக்கப்பட்டதற்கு நீ ஈடுசெய்ய முடியும் என்று நினைக்கிறாயா? கலந்துரையாட ஒரு சிலரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் கேள். அவர்களுக்காக அவர்கள் பேசட்டும்: அவர்களுக்கு ஏதேனும் வழங்கப்பட்டதா? அல்லது அவர்களின் வயிறு அழுக்கு நீர் மற்றும் குப்பைகளால் நிரப்பப்பட்டு, பின்பற்றுவதற்கான பாதை இல்லாத நிலையில் விட்டுவிடப்பட்டுள்ளதா? அது திருச்சபையை இடிக்கும் அல்லவா? சகோதர சகோதரிகள் மத்தியிலான அன்பு எங்கே? யார் சரி, யார் தவறு என்று நீ ரகசியமாக ஆராய்ச்சி செய்கிறாய். ஆனால் நீ ஏன் திருச்சபைக்காக பாரம் சுமக்கவில்லை? பொதுவாக, நீ மேற்கோள்களைச் சொல்வதில் சிறப்பாக இருக்கும் போதிலும், விஷயங்கள் உண்மையில் நடக்கும் போது, அவற்றைப் பற்றி நீ நிச்சயமற்று இருப்பாய். சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அமைதியாக முணுமுணுக்கிறார்கள். மற்றவர்கள் புரிந்து கொள்வதைப் பேசுகிறார்கள். ஆனால் வேறு யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. தேவனிடமிருந்து வருகிறது என்ன, சாத்தானின் கிரியை என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. ஜீவிதத்தைப் பற்றிய உங்கள் உள் உணர்வுகள் எங்கே? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ வெறுமனே புரிந்து கொள்ள முடியவில்லை. அதை நீ அறிந்து கொள்ளவும் முடியவில்லை. புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்வது உனக்குக் கடினமாக இருக்கிறது. ஜனங்களின் கருத்துக்களுக்கு இணங்கக்கூடிய மத மற்றும் மதச்சார்பற்ற விஷயங்களை மட்டுமே நீ ஏற்றுக் கொள்கிறாய். இதன் விளைவாக, நீ விருப்பத்துடன் போராடுகிறாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எத்தனை பேர் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை பேர் உண்மையிலேயே திருச்சபைக்காகப் பாரத்தைச் சுமந்திருக்கிறார்கள்? நீ அதைப் புரிந்து கொள்கிறாயா? துதிப்பாடல்களைப் பாடுவது தேவனைத் துதிப்பதற்கான ஒரு வழியாகும். ஆனால் தேவனைத் துதிப்பதன் சத்தியத்தை நீ தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவரைத் துதிதப்பதில் நீ கடுமையாக இருக்கிறாய். அது உன்னிடம் உள்ள ஒரு கருத்து அல்லவா? நீ எப்போதுமே உன் சொந்தக் கருத்துக்களில் இடைவிடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறாய். பரிசுத்த ஆவியானவர் இன்று என்ன செய்யப் போகிறார் என்பதில் உன்னால் கவனம் செலுத்த முடியவில்லை. உன் சகோதர சகோதரிகள் எதை உணர்கிறார்கள் என்பதை உன்னால் உணர முடியவில்லை. அமைதியாக தேவனின் விருப்பத்தைத் உன்னால் தேட முடியவில்லை. நீ கண்மூடித்தனமாக காரியங்களைச் செய்கிறாய். நீ பாடல்களை நன்றாகப் பாடலாம், ஆனால் அதன் விளைவு முழுமையான குழப்பமாக இருக்கிறது. அது உண்மையிலேயே புசித்துக் குடிப்பதா? உண்மையில் யார் இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள் என்று நீ பார்க்கிறாயா? நீ முற்றிலுமாக ஆவியில் ஜீவிக்கவில்லை. மாறாக, நீ பல்வேறு கருத்துக்களைப் பிடித்துக் கொள்கிறாய். திருச்சபைக்காகப் பாரத்தைச் சுமக்க வழி என்னவாக இருக்கிறது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இப்போது இன்னும் வேகமாக முன்னேறி வருவதை நீங்கள் காண வேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் குருடராக இருக்கிறீர்கள் அல்லவா? இது ஒரு பூச்சி சுவர்களில் இடித்துக்கொண்டு சுற்றித் திரிவதற்கு ஒத்ததல்லவா? நீங்கள் இந்த முறையில் தொடர்ந்தால், நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.

பேரழிவுக்கு முன்னர் பூரணமானவர்கள் தேவனுக்கு அடிபணிந்தவர்கள் ஆவர். அவர்கள் கிறிஸ்துவை நம்பி ஜீவிக்கிறார்கள். அவர்கள் அவருக்கு சாட்சி கூறுகிறார்கள். அவர்கள் அவரை உயர்த்துகிறார்கள். அவர்கள் வெற்றிகரமான ஆண் குழந்தைகள் மற்றும் கிறிஸ்துவின் சிறந்த வீரர்கள். நீ உன்னை அமைதிப்படுத்திக் கொள்வதும், தேவனிடம் நெருங்கி வருவதும், அவருடன் கலந்துரையாடுவதும் இப்போது முக்கியமானதாகும். நீ தேவனிடம் நெருங்கி வர முடியாவிட்டால், நீ சாத்தானால் கைப்பற்றப்படும் ஆபத்தில் இருக்கிறாய். நீ என்னிடம் நெருங்கி வந்து என்னுடன் கலந்துரையாட முடிந்தால், எல்லா சத்தியங்களும் உனக்கு வெளிப்படும் மற்றும் நீ ஜீவிக்கவும் செயல்படவும் ஒரு தரநிலை இருக்கும். நீ எனக்கு நெருக்கமானவன் என்பதால், என் வார்த்தை ஒருபோதும் உன் பக்கத்தை விட்டு வெளியேறாது. உன் ஜீவகாலம் முழுவதும், ஒருபோதும் என் வார்த்தையிலிருந்து நீ விலக மாட்டாய். உன்னைப் பயன்படுத்திக் கொள்ள சாத்தானுக்கு வழி இருக்காது. அதற்குப் பதிலாக சாத்தான் வெட்கப்பட்டு தோல்வியில் தப்பி ஓடும். உனக்குள் காணாமல் போனதை நீ வெளிப்புறமாகப் பார்த்தால், சில சமயங்களில் நீ அதைக் காணலாம். ஆனால் நீ கண்டுபிடிப்பதில் பெரும்பாலானவை கட்டளைகள் மற்றும் உனக்குத் தேவையில்லாத விஷயங்கள் ஆகும். நீயே உன் நிலையை விட்டுவிட்டு, என் வார்த்தைகளை அதிகமாகப் புசித்துக் குடிக்க வேண்டும். அவற்றை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உனக்கு ஏதாவது புரியவில்லை என்றால், என்னுடன் நெருங்கி வந்து என்னுடன் அடிக்கடி கலந்துரையாடு. இவ்வாறு, நீ புரிந்து கொண்ட விஷயங்கள் யதார்த்தமானவையாகவும், உண்மையானவையாகவும், இருக்கும். நீ எனக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் தொடங்க வேண்டும். இது முக்கியமானதாகும்! இல்லையெனில், எவ்வாறு புசிக்க மற்றும் குடிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாமல் போகும். நீ நீயாகவே புசிக்கவும் குடிக்கவும் அறிந்து கொள்ள முடியாது. உண்மையில், உன் வளர்ச்சி மிகச் சிறியது ஆகும்.

முந்தைய: அத்தியாயம் 12

அடுத்த: அத்தியாயம் 14

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக