அத்தியாயம் 77

என் வார்த்தைகளைக் குறித்து நிச்சயமற்றிருப்பது என் செயல்களைக் குறித்து மறுப்பு மனப்பான்மையை வைத்திருப்பதற்குச் சமமாகும். அதாவது, என் வார்த்தைகள் என் குமாரனுக்குள்ளிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, ஆனாலும் நீங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீங்கள் மிகவும் அற்பமானவர்கள்! என் குமாரனுக்குள்ளிருந்து அநேக வார்த்தைகள் வெளிவந்திருக்கின்றன, ஆனாலும் நீங்கள் சந்தேகத்துடனும் நிச்சயமற்றும் இருக்கிறீர்கள். நீங்கள் குருடர்கள்! நான் செய்திருக்கிற ஒவ்வொரு தனிப்பட்ட காரியத்திற்கும் பின்னால் உள்ள நோக்கம் உங்களுக்குப் புரியவில்லை. என் குமாரன் மூலம் நான் வெளிப்படுத்தும் வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகள் அல்லவா? நான் நேரடியாகக் குரல் கொடுக்க விரும்பாத சில விஷயங்கள் உள்ளன, அதனால் தான் நான் என் குமாரன் மூலமாகப் பேசுகிறேன். நான் ஏன் நேரடியாகப் பேச வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தும் அளவுக்கு நீங்கள் ஏன் மதியீனமாக இருக்கிறீர்கள்? நீங்கள் என்னைப் புரிந்து கொள்வதில்லை, என் செயல்கள் மற்றும் கிரியைகள் குறித்து நீங்கள் எப்போதும் சந்தேகம் கொண்டிருக்கிறீர்கள்! எனது ஒவ்வொரு அசைவும், மற்றும் எனது ஒவ்வொரு செயலும் கிரியையும் சரியானது என்று நான் முன்பே சொல்லவில்லையா? ஜனங்கள் அவற்றை ஆராய்வதை நிறுத்த வேண்டும். உன் அசுத்தமான கரங்ளை எடுத்து விடு! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்: நான் உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு முன்பே, நான் பயன்படுத்துகிற அனைத்து ஜனங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவர்களாவர், இன்று, அவர்களும் என்னால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களில் முயற்சி செய்கிறீர்கள், நான் இருக்கிற ஆள்தத்துவத்தைஆராய்ந்து, எனது செயல்களை ஆய்வு செய்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் பரிவர்த்தனை மனநிலை உள்ளது. இது மீண்டும் நேரிட்டால், நீங்கள் நிச்சயமாக என் கையால் தாக்கப்படுவீர்கள். நான் சொல்வது இதுதான்: என்னைச் சந்தேகிக்காதீர்கள், நான் செய்திருக்கிற விஷயங்களைப் பகுப்பாய்வு செய்யவோ அல்லது ஆழ்ந்து சிந்திக்கவோ வேண்டாம். இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் தலையிடக் கூடாது, ஏனென்றால் இது எனது ஆட்சிமுறை ஆணைகளுடன் தொடர்புடையது. இது சாதாரண விஷயம் அல்ல.

நான் அறிவுறுத்தியிருக்கிற அனைத்தையும் நீங்கள் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று பிடித்துக் கொள்ளுங்கள். நான் அதை மீண்டும், ஒரு எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்: வெளிநாட்டவர்கள் சீனாவுக்குள் வெள்ளம் போல் புகுந்து வரவிருக்கிறார்கள். இது முற்றிலும் உண்மை! பெரும்பாலான ஜனங்கள் இதைப் பற்றி சந்தேகிக்கிறார்கள் மற்றும் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், எனவே நீங்கள் விரைவில் வாழ்க்கையின் வளர்ச்சியை நாடவும், எனது சித்தத்தை விரைவில் நிறைவேற்றவும் வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இன்று முதல், சர்வதேச நிலைமை இன்னும் பதற்றமாக இருக்கும், மேலும் பல்வேறு நாடுகள் தங்களுக்குள் வீழ்ச்சியடையத் தொடங்கும். சீனாவில், மகிழ்ச்சியான நாட்கள் அதன் இறுதி நிலையை எட்டி இருக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள், மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டு வெளியேறுவார்கள், வணிகர்கள் வியாபாரம் செய்வதை நிறுத்துவார்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு பிழைக்க இயலாது என்பதாகும். சிறப்புப் பயிற்சி பெற்ற அந்தப் பணியாளர்கள் தப்பி பிழைத்துக் கொள்ள நிதி தயார் செய்யத் தொடங்குவார்கள் (இதுவும் எனது நிர்வாகத் திட்டத்திற்கு ஊழியம் செய்யவே ஆகும்), மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள மத்திய அரசுத் தலைவர்கள் அனைவரும் ஆயத்தங்களைச் செய்யும்போது, மற்றவர்களின் செலவுகளில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவதில் மிகவும் அலுவலாக இருப்பார்கள் (இது அடுத்த கட்டத்திற்கு ஊழியம் செய்வதாகும்). நன்றாகப் பாருங்கள்! இது சீனா மட்டுமல்ல, முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய ஒன்று, ஏனென்றால், எனது கிரியை உலகம் முழுவதையும் சார்ந்ததாகும். இருப்பினும், இது முதற்பேறான குமாரர்களாய் இருக்கிற ஜனங்கள் கூட்டத்திலிருந்து ராஜாக்களை உருவாக்கும் ஊழியமாகவும் இருக்கிறது. இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கிறீர்களா? விரைந்து தேடுங்கள்! நான் உங்களை அநியாயமாக நடத்த மாட்டேன்; உங்கள் இருதயம் மனநிறைவடையும் அளவுக்கு நான் உங்களை இன்பத்தை அனுபவகிக்க அனுமதிப்பேன்.

எனது செயல்கள் அற்புதமானவை. உலகத்தில் பெரும் பேரழிவுகள் வெளிப்படும்போது, மேலும் அனைத்துப் பொல்லாதவர்களும் ஆட்சியாளர்களும் தண்டனையைப் பெறுகையில்—அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், என் நாமத்திற்கு வெளியே இருக்கும் பொல்லாதவர்கள் துன்பப்படும்போது—நான் உங்கள் மீது என் ஆசீர்வாதங்களை வழங்கத் தொடங்குவேன். நான் கடந்த காலங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறபடி, “நீங்கள் பேரழிவுகளின் வேதனையையோ அல்லது தீங்கையோ நிச்சயமாக அனுபவிக்க மாட்டீர்கள்” என்ற வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தம் இதுதான். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? என்னால் பேசப்பட்ட “இந்தக் காலம்” என்பது என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரும் நேரத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிக விரைவான வேகத்தில் செய்யப்படுகிறது; நான் ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி கூட தாமதிக்கவோ அல்லது வீணாக்கவோ மாட்டேன். மாறாக, என் வார்த்தைகள் பேசப்பட்ட அதே தருணத்தில் நான் அதற்கு ஏற்றபடி செயல்படுவேன். இன்று நான் ஒருவரை புறம்பாக்குகிறேன் என்று சொன்னாலோ அல்லது நான் ஒருவரை வெறுக்கிறேன் என்று சொன்னாலோ அது உடனடியாக அந்த நபருடனே முடிந்துவிடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், என் பரிசுத்த ஆவியானவர் அவர்களிடமிருந்து உடனடியாக மீண்டும் எடுத்துக் கொள்ளப்படுவார், மேலும் அவர்கள் நடை பிணமாக, முற்றிலும் பயனற்றவர்களாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னும் சுவாசிக்கலாம், நடக்கலாம், பேசலாம், மற்றும் இன்னும் எனக்கு முன்பாக ஜெபிக்கலாம், ஆனால் நான் அவர்களை விட்டுவிட்டேன் என்பதை அவர்கள் ஒருபோதும் உணரமாட்டார்கள். அவர்கள் முற்றிலும் பயனற்ற ஜனங்களாக இருப்பார்கள். இது முற்றிலும் சரியானதும் மற்றும் உண்மையானதுமாகும்.

என் வார்த்தைகள் நான் இருக்கும் ஆள்தத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதை நினைவில் கொள்ளுங்கள்! சந்தேகப்பட வேண்டாம்; நீங்கள் முற்றிலும் நிச்சயமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது ஜீவனையும் மரணத்தையும் பற்றிய விஷயமாகும்! இது மிகவும் முக்கியமானது! என் வார்த்தைகள் பேசப்படுகிற அதே தருணத்தில், நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அது ஏற்கனவே நடந்திருக்கும். இந்த வார்த்தைகள் அனைத்தும் என் குமாரன் மூலம் பேசப்பட வேண்டும். உங்களில் இந்தக் காரியத்தை முக்கியமாகக் கருத்தில் கொண்டவர் யார்? இதை நான் வேறு எப்படி விளக்க முடியும்? எல்லா நேரத்திலும் கவலையுடனும் பயத்துடனும் இருப்பதை நிறுத்துங்கள். உண்மையில் நான் ஜனங்களுடைய உணர்வுகளில் கவனம் கொள்ளாதிருக்கிறேனா? நான் யாரை அங்கீகரிக்கிறேனோ அவர்களை நான் சாதாரணமாகத் துரத்திவிடுவேனா? நான் செய்கிற அனைத்தும் ஒழுங்கும் கிரமமுமானது. நான் ஏற்படுத்திய உடன்படிக்கையை நானே உடைத்துப் போட மாட்டேன், என் சொந்தத் திட்டத்தை நானே தடுக்க மாட்டேன். நான் உங்களைப் போல் அனுபவம் இல்லாதவர் அல்ல. என் கிரியை ஒரு மிகப் பெரிய காரியமாகும்; அது எந்த மனுஷனாலும் நிறைவேற்ற முடியாத ஒன்றாகும். நான் நீதியுள்ளவர் என்றும், என்னை நேசிப்பவர்களுக்கு நான் அன்பானவர் என்றும் சொல்லியிருக்கிறேன். இது உண்மை என்று நீ நம்பவில்லையா? நீ தொடர்ந்து தவறான எண்ணங்களைப் பெற்றிருக்கிறாய்! எல்லாவற்றைக் குறித்தும் உனக்குத் தெளிவான மனசாட்சி இருந்தால், நீ ஏன் இன்னும் பயப்படுகிறாய்? இதற்கெல்லாம் காரணம் உன்னை நீயே கட்டி வைத்திருக்கிறாய் என்பது தான் ஆகும். என் குமாரனே! துக்கமாக இருக்கவோ அல்லது கண்ணீர் சிந்தவோ வேண்டாம் என்று நான் உனக்குப் பலமுறை நினைவூட்டி இருக்கிறேன், மேலும் நான் உன்னை நிராகரிக்க மாட்டேன். உன்னால் இன்னும் என்னை நம்ப முடியவில்லையா? நான் உன்னைப் பிடித்துக் கொள்வேன், போகவிடமாட்டேன்; என் அன்பினால் நான் எப்போதும் உன்னைத் தழுவிக் கொள்வேன். நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன், உன்னைப் பாதுகாப்பேன், எல்லாவற்றிலும், உனக்கு வெளிப்பாடுகளையும் நுண்ணறிவுகளையும் தருவேன், அதனால் நானே உன் பிதா என்பதையும், நானே உன்னை ஆதரிப்பவர் என்பதையும் உன்னால் காண முடியும். உன்னுடைய பிதாவின் தோள்களில் உள்ள பாரத்தை எப்படி இலகுவாக்க முடியும் என்று நீ எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். இதுவே நான் உனக்குக் கொடுத்திருக்கிற பாரமாகும். அதை உதறித் தள்ளி விட முயற்சிக்காதே! இந்த நாட்களில் எத்தனை பேர் எனக்கு விசுவாசமாக இருக்க முடியும்? உன்னால் பயிற்சியை வேகப்படுத்தி விரைவாக வளர்ந்து, என் இருதயத்தைத் திருப்திப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். பிதாவானவர் இரவும் பகலும் தன் குமாரனுக்காக உழைக்கிறார், ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் பிதாவின் நிர்வாகத் திட்டத்தையும் குமாரன் கருத்தில் கொள்ள வேண்டும். இது நான் வழக்கமாகப் பேசுபவைகளுக்கு, நீங்கள் எனக்கு அளிக்கும் ஒத்துழைப்புச் செயலாகும்.

அனைத்தும் என் கிரியையாக இருக்கிறது. இன்று நான் பயன்படுத்தும் ஜனங்கள் மீது நான் ஒரு பாரத்தை வைப்பேன் மற்றும் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பேன், அதனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் என் சித்தத்திற்கு இணங்கும், அதனால் எனது ராஜ்யம் உணரப்படும், மற்றும் அதனால் ஒரு புதிய வானமும் பூமியும் வெளிப்படும். நான் பயன்படுத்தாத நபர்கள் முற்றிலும் எதிர்மாறானவர்கள்; அவர்கள் எப்போதும் மயக்கத்தில் இருக்கிறார்கள், அவர்கள் சாப்பிட்ட பிறகு தூங்குகிறார்கள், அவர்கள் தூங்கிய பிறகு சாப்பிடுகிறார்கள், எவ்வாறாயினும், பாரம் என்றால் என்ன என்பதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அத்தகைய ஜனங்களுக்குப் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இருப்பதில்லை, அவர்கள் என் திருச்சபையிலிருந்து விரைவில் வெளியேற்றப்பட வேண்டும். இப்போது நான் சில விஷயங்களைத் தரிசனங்கள் மூலமாகப் பேசுவேன்: திருச்சபையானது ராஜ்யத்திற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது; திருச்சபையானது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டப்பட்டவுடன் மட்டுமே ஜனங்களால் ராஜ்யத்திற்குள் நுழைய முடியும். யாராலும் நேரடியாக ராஜ்யத்தில் நுழைய முடியாது (என்னால் வாக்குப் பண்ணப்படாத பட்சத்தில்). திருச்சபையானது முதல் படி, ஆனால் ராஜ்யமே எனது நிர்வாகத் திட்டத்தின் குறிக்கோளாகும். ஜனங்கள் ராஜ்யத்திற்குள் நுழைந்தவுடன் எல்லாம் நிறைவு பெறும், மேலும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தற்போது, நானும் எனது முதற்பேறான குமாரர்களும் மட்டுமே ராஜ்யத்திற்குள் நுழைந்து அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் ஆளத் தொடங்கியுள்ளோம். அதாவது, என் ராஜ்யம் ஒழுங்கமைக்கத் தொடங்கி இருக்கிறது, ராஜாக்களாக அல்லது என் ஜனங்களாக இருப்பவர்கள் அனைவரும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால நிகழ்வுகள் உங்களுக்குப் படிப்படியாகவும் வரிசையாகவும் சொல்லப்படும்; அதிகமாக வியாகுலப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். நான் உனக்குச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நீ உண்மையிலேயே எனக்காக இருந்தால், நான் உண்மையாக உன்னுடன் பேசுவேன். வஞ்சகம் மற்றும் மாறுபாட்டைக் கடைப்பிடிப்பவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சரிக்கட்டுவேன், மற்றும் அத்தகைய நடத்தை யாருக்கு அழிவை ஏற்படுத்தும் என்பது பற்றிய தெளிவான பார்வையை அவர்கள் பெற்றிருக்கச் செய்வேன்.

முந்தைய: அத்தியாயம் 76

அடுத்த: அத்தியாயம் 78

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக