அத்தியாயம் 80

எல்லாவற்றிலும், ஒருவன் பிரகாசமடைவதற்கும் ஒளியூட்டப்படுவதற்கும் என்னுடன் மெய்யான தொடர்பு கொண்டிருப்பது அவசியமானதாகும்; இதன் மூலம் மட்டுமே ஆவி சமாதானமாக இருக்கும். இல்லையெனில், ஆவி எந்தச் சமாதானத்தையும் பெற்றிருக்காது. தற்போது, உங்களுக்கிடையே இருக்கும் மிக மோசமான வியாதி என்னவென்றால் எனது முழுமையான தெய்வீகத் தன்மையிலிருந்து எனது இயல்பான மனிதத் தன்மையை பிரிப்பதாகும்; மேலும், உங்களில் பெரும்பாலோர், என்னிடம் முழுமையான தெய்வீகத்தன்மையும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திராதது போல் எனது இயல்பான மனிதத் தன்மையை வலியுறுத்துகிறீர்கள். இது எனக்குத் தூஷணமாக இருக்கிறது! அது உங்களுக்குத் தெரியுமா? உங்களின் வியாதி மிகவும் மோசமானது, நீங்கள் விரைந்து குணமடையவில்லை என்றால், நீங்கள் எனது கரத்தால் கொல்லப்படுவீர்கள். எனது முகத்திற்கு முன்பாக நீங்கள் ஒரு விதமாக (மதிக்கப்படுகிற நபராகவும்; தாழ்மையுள்ளவராகவும், பொறுமையுள்ளவராகவும்) நடந்து கொள்கிறீர்கள், ஆனால் எனக்குப் பின்னால் நீங்கள் முற்றிலும் வித்தியாசமாக (முழுவதும் பாசாங்குக்காரராகவும், ஒழுக்கம் கெட்டவராகவும், கட்டுப்பாடு இல்லாதவராகவும், நீங்கள் செய்ய விரும்புவதையே செய்பவராகவும், பிரிவுகளை உருவாக்குபவராகவும், சுயாதீன ராஜ்யங்களை அமைப்பவராகவும், என்னை வஞ்சிக்க விரும்புகிறவராகவும்) நடந்து கொள்கிறீர்கள். நீ குருடாக இருக்கிறாய்! சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட உன் கண்களைத் திற! நான் உண்மையில் யார் என்று பாரு! நீ வெட்கமடைய வேண்டியதில்லை! எனது செயல்கள் அற்புதமானவைகள் என்பது உனக்குத் தெரியாது! எனது சர்வவல்லமை உனக்குத் தெரியாது! இன்னும் இரட்சிக்கவே படாத ஒருவரை கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய சொல்ல முடியுமா? நீ என்ன பாத்திரத்தை வகிக்கிறாய் என்று உனக்குத் தெரியாது! நீ உண்மையில் போலியானவனாக என் முன் வந்து, உனது கவர்ச்சியைக் காட்டுகிறாயே—மாபாவியே! நான் உன்னை என் வீட்டிலிருந்து துரத்துவேன்; நான் இந்த மாதிரியான நபரைப் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் நான் அவர்களை முன்குறிக்கவோ அல்லது தெரிந்தெடுக்கவோ இல்லை.

நான் சொல்வதையே செய்கிறேன். பொல்லாப்பு செய்பவர்கள் பயப்படக் கூடாது; நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. நான் எப்பொழுதும் எனது திட்டத்தின்படி செயல்படுகிறேன், என்னுடைய நீதியின்படி காரியங்களைச் செய்கிறேன். பொல்லாப்பு செய்பவர்கள் சிருஷ்டிக்கப்பட்டது முதலே சாத்தானின் சந்ததிகளாக இருந்து வருவதால், நான் அவர்களைத் தெரிந்தெடுக்கவில்லை; “மலைகளும் ஆறுகளும் மாறினாலும், ஒருவருடைய சுபாவம் மாறாது” என்ற பழமொழியின் அர்த்தம் இதுதான். மனுக்குலம் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில், எல்லாம் தெளிவாக்கப்பட்டுள்ளது, எதுவும் எனக்கு மறைவாக இல்லை. உன்னால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களின் கண்களில் இருந்து எதையாவது மறைக்க முடியும், மேலும் சிலரின் நம்பிக்கையை கூட வெல்ல முடியும், ஆனால் எனக்கு அது அவ்வளவு எளிதானது அல்ல. இறுதியில், உன்னால் எனது நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப முடியாது. மனிதகுலத்தின் பார்வை வரம்புக்குட்பட்டது, தற்போதைய சூழ்நிலையின் ஒரு சிறிய பகுதியைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் கூட சில திறன்களைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, எல்லாம் சீராக நடந்து வருகிறது, எதுவும் எனது வழியில் சிறிதளவும் இடறல் ஏற்படுத்தாது, ஏனென்றால் அனைத்தும் எனது கட்டுப்பாட்டிலும் ஏற்பாட்டிலும் உள்ளன. எனது அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல் இருக்கத் துணிபவன் யார்! எனது நிர்வகித்தலுக்கு இடையூறு செய்யத் துணிபவன் யார்! என்னிடம் விசுவாசமற்றவனாக அல்லது அன்பற்றவனாக இருக்கத் துணிபவன் யார்! என்னிடம் உண்மைக்குப் பதிலாக பொய்யை சொல்லத் துணிபவன் யார்! இவர்களில் ஒருவரும் எனது கடுங்கோபமான கரத்திலிருந்து தப்ப மாட்டார்கள். நீ இப்போது தோல்வியை ஒப்புக் கொண்டாலும், தண்டிக்கப்படுவதற்கும், பாதாளக்குழிக்குள் நுழைவதற்கும் தயாராக இருந்தாலும், நான் உன்னை தண்டிக்காமல் எளிதில் விட்டுவிட மாட்டேன். நான் உன்னைப் பாதாளக் குழியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும், இதனால் நீ மீண்டும் எனது கடுங்கோபமான ஆக்கினைத்தீர்ப்புக்கு (அதிகமான வெறுத்து ஒதுக்குதலுக்கு) உட்படுத்தப்படுவாய். நீ ஓடி ஒளியக்கூடிய இடங்கள் ஏதேனும் உள்ளதா? ஜனங்கள் எனது முழுமையான தெய்வீகத்தன்மையிலிருந்து எனது இயல்பான மனிதத்தன்மையை பிரிப்பதே நான் மிகவும் வெறுக்கும் விஷயம் ஆகும்.

என்னிடம் விசுவாசமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்; அதாவது, மனிதனுடைய இருதயத்தை ஆராய்ந்து அறியும் தேவனாக என்னை மெய்யாக அடையாளம் காண்பவர்கள் பாக்கியவான்கள். நிச்சயமாக நான் உனது ஆசீர்வாதங்களை விருத்தியாக்குவேன், உன்னை எனது ராஜ்யத்தில் எப்போதும் நல்ல ஆசீர்வாதங்களை அனுபவிக்க அனுமதிப்பேன். சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டு வர இதுவும் மிகச் சிறந்த வழியாகும். இருப்பினும், மிகவும் பொறுமையிழக்கவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம்; நான் எல்லாவற்றுக்கும் ஒரு நேரத்தை நிர்ணயித்திருக்கிறேன். நான் முன்குறித்த நேரம் இன்னும் வரவில்லை என்றால், ஒரு வினாடி முன்னதாக இருந்தாலும்கூட, நான் செயல்படமாட்டேன். நான் மிகச் சரியாகவும் ஒரு சீர்ப்பிராமணத்தின்படியும் செயல்படுகிறேன்; காரணம் இல்லாமல் நான் செயல்படுவதில்லை. மனிதனுடையக் கண்ணோட்டத்தில், நான் விசாரத்தால் சிறிதும் அழுத்தப்படவில்லை; நான் தாய் மலை போல நிலையாக இருக்கிறேன்—ஆனால் நான் தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பது உனக்குத் தெரியாதா? பொறுமையை இழக்க வேண்டாம்; எல்லாம் எனது கரத்தில் உள்ளது. அனைத்தும் ஏற்கனவே ஆயத்தமாக்கப்பட்டுள்ளது, எனக்கு ஊழியம் செய்வதற்காக எதுவும் காத்திருக்காது. வெளியிலிருந்து பார்க்கும்போது முழு பிரபஞ்ச உலகமும் பெரிய குழப்பத்தில் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் எனது பார்வையில், எல்லாம் ஒழுங்காக உள்ளது. உங்களுக்காக நான் ஆயத்தம் செய்திருப்பது நீங்கள் அனுபவிப்பதற்காக மட்டுமே. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? எனது நிர்வகித்தலில் உங்களை உட்புகுத்திக் கொள்ளாதீர்கள். எல்லா ஜனங்களும் எல்லா நாடுகளும் என் செயல்களின் மூலம் என் சர்வவல்லமையைக் காண வைப்பேன், மேலும் அவர்கள் எனது அற்புதமான கிரியைகளுக்காக எனது பரிசுத்த நாமத்தை போற்றவும் துதிக்கவும் வைப்பேன். ஏனென்றால், நான் சொன்னது போல், நான் எதையும் ஆதாரம் இல்லாமல் செய்யமாட்டேன்; மாறாக, எல்லாமே எனது ஞானத்தாலும், எனது வல்லமையாலும், என் நீதியினாலும், மகத்துவத்தினாலும், இன்னும் அதிகமாக, என் கடுங்கோபத்தினாலும் நிறைந்திருக்கிறது.

எனது வார்த்தைகளைக் கேட்டு உடனடியாக விழித்துக் கொண்டவர்கள் நிச்சயமாக என்னுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், நிச்சயமாக என்னுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் பெறுவார்கள். அவர்கள் சிட்சையின் வேதனையை அனுபவிக்க மாட்டார்கள்; மாறாக, அவர்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். இது உங்களுக்குத் தெரியுமா? வேதனை நித்தியமானது, மகிழ்ச்சி இன்னும் நித்தியமானது; இப்போதிலிருந்து அவை இரண்டும் அனுபவிக்கப்படும். நீ வேதனைப்படுகிறாயா அல்லது மகிழ்ச்சியை அனுபவிக்கிறாயா என்பது உன் பாவத்தை நீ ஒப்புக் கொள்ளும்போது நீ எந்த மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறாய் என்பதைப் பொறுத்ததாகும். நான் முன்குறித்தவர்களில் மற்றும் தெரிந்துகொண்டவர்களில் நீயும் ஒருவனா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, நீ கூறியவற்றின் வெளிச்சத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும். நீ ஜனங்களை முட்டாளாக்கலாம், ஆனால் என்னை முட்டாளாக்க முடியாது. நான் முன்குறித்து தெரிந்துகொண்டவர்கள் இன்று முதல் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; நான் முன்குறித்து தெரிந்துகொள்ளாதவர்களை இன்று முதல் கடுமையாக தண்டிப்பேன். இது உங்களுக்கு என்னுடைய சான்றாக இருக்கும். இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எனக்குப் பிரியமானவர்கள்; தண்டிக்கப்படுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்னால் முன்குறிக்கப்பட்டவர்களோ மற்றும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அல்ல என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்! அதாவது, இப்போது உனக்கு கிடைப்பதை நான் கையாள வேண்டி இருந்தாலோ, எனது கடுமையான நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை நீ பெற்றாலோ, நீ என் இருதயத்தில் வெறுக்கப்படுவாய், வெறுத்து ஒதுக்கவும்படுவாய், நான் நீக்கியவர்களில் நீயும் ஒருவனாக இருப்பாய். என்னுடைய சமாதானத்தையும், என்னுடைய வாழ்வுக்கான ஏற்பாடுகளையும் நீ பெற்றால், நீ எனக்குச் சொந்தமானவன்; நீ எனக்கு பிரியமானவர்களில் ஒருவன். எனது வெளித்தோற்றத்தின் அடிப்படையில் இதை உன்னால் தீர்மானிக்க முடியாது. இதில் உன் சிந்தையை இழக்காதே!

எனது வார்த்தைகள் ஒவ்வொரு நபரின் உண்மையான நிலையுடனும் பேசுகின்றன. நான் தொடர்பில்லாத தலைப்புகளைப் பற்றியே தொடர்ந்து பேசுகிறேன் அல்லது நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை! எனது ஒவ்வொரு வார்த்தையிலும் என் ஞானம் மறைந்திருக்கிறது. நீங்கள் எனது வார்த்தைகளை சத்தியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் குறுகிய காலத்தில், மெய்யான வழியைத் தேடும் வெளிநாட்டினர் உள்ளே வருவார்கள். அப்படி நிகழும்போது, நீங்கள் வாயடைத்துப் போவீர்கள், மேலும் சிறிதும் சிரமமின்றி அனைத்தும் நிறைவேற்றப்படும். நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், நீங்கள் அவற்றை உறுதியாக விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? நான் எந்தத் தவறும் செய்வதுமில்லை, பொய்யானக் கூற்றுகளைப் பேசுவதுமில்லை. இது உங்களுக்குத் தெரியுமா? எனவே, அவர்களை வழிநடத்தி மேய்ப்பதற்காக, எனது பயிற்சியை நீங்கள் விரைவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். இது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மூலம் நான் அவர்களைப் பரிபூரணமாக்குவேன். அதிலும் முக்கியமாக, உங்கள் மூலம் என்னுடைய மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்துவேன்; அதாவது, மனிதகுலத்தில் இழிவாகப் பார்க்கப்படுகிறவர்களில், என்னை வெளிப்படுத்தவும், எனது நாமத்தை மகிமைப்படுத்தவும், எனக்காக எல்லாவற்றையும் பொறுப்பேற்கவும், என்னுடன் இராஜாக்களாக அரசாளவும் ஒரு கூட்ட ஜனங்களை நான் தெரிந்தெடுத்துள்ளேன். எனவே, உன்னைப் பற்றிய எனது தற்போதைய பயிற்சியானது உலகின் மிகப்பெரிய நிர்வாகமாகும்; இது மனிதகுலத்தால் செய்ய முடியாத ஒரு அற்புதமான விஷயமாகும். உங்களைப் பரிபூரணமாக்குவதன் மூலம், நான் சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலும், பாதாளக் குழியிலும் தூக்கி எறிவேன், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை மீண்டும் எழ முடியாதவாறு அதன் மரணத்திற்கு முற்றிலுமாகத் தள்ளுவேன். எனவே, பாதாளக் குழிக்குள் தள்ளப்பட்ட அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததிகளாவர். நான் அவர்களை மிகவும் வெறுக்கிறேன். இதை நான் நடத்தியுள்ளேன். உங்களால் பார்க்க முடியவில்லையா? விசுவாசமற்றவர்கள், மாறுபாடு மற்றும் வஞ்சனை செய்பவர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். பெருமையுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், சுயநீதியுள்ளவர்கள் மற்றும் திமிரானவர்கள் பிரதான தூதனின் சந்ததிகள், மேலும் அவர்கள் சாத்தானுக்கு மிகவும் ஒத்தவர்கள்—அவர்கள் அனைவரும் எனது ஜென்ம விரோதிகளாகவும், என் எதிரிகளாகவும் இருக்கிறார்கள். எனது இருதயத்தில் உள்ள வெறுப்பைத் தணிக்க ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டும். நான் இதை ஒரே நேரத்தில் ஒவ்வொன்றாகச் செய்வேன், முறைப்படி ஒவ்வொருவராகத் தீர்ப்பேன்.

இப்போது, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் மற்றும் பாதாளக்குழி என்றால் என்ன? மனிதக் கற்பனையில், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் என்பது ஒரு பொருள் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் இது மிகவும் தவறான விளக்கம் என்று மனிதகுலம் அறியவில்லை. இருப்பினும், அது இன்னும் ஜனங்களின் சிந்தைகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் என்பது மனிதகுலத்தின் மீது எனது கரம் தண்டனையைக் கொடுப்பதாகும்; அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் எறியப்பட்டவர் எவரும் எனது கரத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஜனங்களின் ஆவிகள், ஆத்துமாக்கள் மற்றும் சரீரங்கள் என்றென்றும் வேதனையை அனுபவிக்கின்றன. எல்லாம் எனது கரங்களில் உள்ளது என்று நான் சொன்ன வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுதான். அப்படியானால், பாதாளக்குழி எதைக் குறிக்கிறது? மனிதர்கள் அதை முடிவில்லாத மற்றும் ஆழங்காண முடியாத அளவு ஒரு பெரிய படுகுழி என்று கருதுகின்றனர். சாத்தானின் ஆதிக்கம்தான் மெய்யான பாதாளக்குழி. ஒருவன் சாத்தானின் கைகளில் விழுந்தால், அவன் பாதாளக் குழியில் இருக்கிறான்; சிறகுகளை வளர்த்தாலும் அவர்களால் பறந்து வெளியே வர முடியாது. அதனால்தான் இது பாதாளக் குழி என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய ஜனங்கள் அனைவரும் நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்; இப்படித் தான் நான் அதை ஏற்பாடு செய்துள்ளேன்.

முந்தைய: அத்தியாயம் 79

அடுத்த: அத்தியாயம் 81

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக