தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)

பரிசுத்த ஆவியானவரால் கருத்தரித்ததன் மூலமே தேவன் முதன்முதலில் மாம்சமாகினார், இது அவர் செய்ய நினைத்த கிரியைக்குப் பொருத்தமாக இருந்தது. கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்த கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டு கிரியைகளைத் தொடங்கினார். ஆகவே, இன்றும் யேகோவாவின் வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பவர்கள், எல்லாவற்றையும் இன்னும் நியாயப்பிரமாண யுகத்தின் கிரியைக்கு ஏற்ப செய்பவர்கள்—நீ விதிகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லையா? நீ கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்ளவில்லையா? கடைசிக் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இயேசு வரும்போது, அவர் இன்னும் இயேசு என்றுதான் அழைக்கப்படுவாரா? மேசியா ஒருவர் வருவார் என்று யேகோவா இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார், ஆனால் அவர் வந்தபோது, அவர் மேசியா என்று அழைக்கப்படவில்லை, இயேசு என்று அழைக்கப்பட்டார். தாம் மீண்டும் வருவேன் என்றும், தாம் புறப்பட்டுச் சென்றபடியே வருவேன் என்றும் இயேசு கூறினார். இவை இயேசுவின் வார்த்தைகள், ஆனால் இயேசு புறப்பட்டுச் சென்ற விதத்தை நீ பார்த்தாயா? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார், ஆனால் அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது தான் தனிப்பட்ட முறையில் மனுஷரிடையே திரும்பி வருவாரா? அப்படி வந்தால், அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படமாட்டாரா? இயேசு மீண்டும் வரும்போது, யுகம் ஏற்கனவே மாறியிருக்கும், எனவே அவரை இன்னும் இயேசு என்று அழைக்க முடியுமா? இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை அறிய முடியுமா? ஒரு புதிய யுகத்தில் அவர் ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்பட மாட்டாரா? ஒருவரின் உருவமும், ஒரு குறிப்பிட்ட நாமமும் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிருபையின் யுகத்தின் முடிவில், இறுதி யுகம் வந்திருக்கிறது, இயேசு ஏற்கனவே வந்துவிட்டார். எப்படி அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படுவார்? எப்படி அவரால் மனுஷரிடையே இயேசுவின் உருவத்தை இன்னும் அணிந்திருக்க முடியும்? இயேசுவின் உருவம் ஒரு நசரேயனின் உருவம் தான் என்பதை நீ மறந்துவிட்டாயா? மனுஷகுலத்தின் மீட்பர் இயேசு மட்டுமே என்பதை நீ மறந்துவிட்டாயா? கடைசிக் காலத்தில் அவரால் எவ்வாறு ஜெயங்கொள்ளுதல் கிரியை மேற்கொண்டு மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும்? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார்—இதுதான் உண்மை—ஆனால் எப்படி அவர் மனுஷரிடையே ஒரு வெண்மையான மேகத்தின் மீது திரும்பி வர முடியும், அவர் எப்படி இயேசு என்றே இப்போதும் அழைக்கப்படுவார்? அவர் உண்மையில் ஒரு மேகத்தின் மீது வந்திறங்கினால், மனுஷன் எவ்வாறு அவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பான்? உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டனரா? அப்படியானால், இயேசு மட்டுமே தேவனாக இருக்க மாட்டாரா? அவ்வாறான நிலையில், தேவனின் உருவம் ஒரு யூதனின் தோற்றமாக இருக்கும், மேலும் அது எப்போதும் அதே மாதிரிதான் இருக்கும். தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தைகளின் மெய்யான அர்த்தம் உனக்குத் தெரியுமா? அவர் உன்னுடைய இந்தக் குழுவிற்குச் சொல்லியிருப்பாரா? அவர் புறப்பட்டுச் சென்ற மாதிரியே, அதாவது மேகத்தின் மீது சென்றவாறு, திரும்பி வருவார் என்று உனக்குத் தெரியும், ஆனால் தேவன் தமது கிரியையை எவ்வாறு செய்கிறார் என்று உனக்கு மிசச் சரியாகத் தெரியுமா? உன்னால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தால், இயேசு பேசிய வார்த்தைகள் மட்டும் எதற்காக விளக்கப்பட வேண்டும்? அவர் சொன்னார்: கடைசிக் காலத்தில் மனுஷகுமாரன் வரும்போது, அதை அவரே அறியமாட்டார், தேவதூதர்கள் அறிய மாட்டார்கள், பரலோகத்திலுள்ள தூதர்கள் அறிய மாட்டார்கள், சகலவித மனுஷரும் அறிய மாட்டார்கள். பிதா மட்டுமே அறிவார், அதாவது ஆவியானவர் மட்டுமே அறிவார். மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உன்னால் கண்டுகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியுமா? நீ உன் கண்களால் கண்டுகொண்டு அறிந்துகொள்ளும் அளவிற்கு வல்லவனாக இருந்தால், இந்த வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டதாக ஆகிவிடாதா? அந்த நேரத்தில் இயேசு என்ன சொன்னார்? “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். … நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” அந்த நாள் வரும்போது, மனுஷகுமாரனே அதை அறியமாட்டார். மனுஷகுமாரன் என்பது ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷரான மாம்சமாகிய தேவனைக் குறிக்கிறது. மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு கூறினார். அவர் வரும்போது, அவருக்கே அது தெரியாது, ஆனால் அவரால் எப்படி உனக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க முடியும்? அவருடைய வருகையை உன்னால் பார்க்க முடியுமா? அது நகைச்சுவையல்லவா? ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவதுதான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, “தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,” என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் “தேவன் மாறாதவர்” என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா? தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட. தேவன் கடைசிக் காலத்தில் கிரியையின் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறார். அவர் தம்முடைய மனநிலையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவார், அது இயேசுவின் காலத்தின் இரக்கமும் அன்பும் கொண்டதாக இருக்காது. அவர் கையில் புதிய கிரியை இருப்பதால், இந்தப் புதிய கிரியை ஒரு புதிய மனநிலையுடன் இருக்கும். ஆகவே, இந்தக் கிரியையை ஆவியானவர் செய்திருந்தால்—தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், அதற்குப் பதிலாக ஆவியானவர் நேரடியாக இடி மூலம் பேசியிருந்தால், அதனால் மனுஷனுக்கு அவருடன் தொடர்பு கொள்ள வழி இல்லை என்றால், மனுஷனால் அவருடைய மனநிலையை அறிய முடியுமா? அந்தக் கிரியையை ஆவியானவர் மட்டுமே செய்திருந்தால், தேவனின் மனநிலையை அறிந்து கொள்ள மனுஷனுக்கு வழி இருந்திருக்காது. அவர் மாம்சத்தில் வரும்போது, வார்த்தை மாம்சத்தில் தோன்றும்போது, மற்றும் மாம்சத்தின் மூலம் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்தும்போதுதான், ஜனங்கள் தங்கள் கண்களால் தேவனின் மனநிலையைப் பார்க்க முடியும். தேவன் உண்மையாக, மெய்யாக மனுஷரிடையே வாழ்கிறார். அவர் தொட்டுணரத்தக்கவர்; மனுஷனால் உண்மையில் அவரது மனநிலையுடன் இணைந்து செயல்பட முடியும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறாரோ அதனுடனும் இணைந்து செயல்பட முடியும்; இவ்வாறாக மட்டுமே மனுஷன் அவரை மெய்யாக அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், “தேவன் ஆண்களின் தேவன், தேவன் பெண்களின் தேவன்,” என்ற கிரியையையும் தேவன் நிறைவுசெய்துவிட்டார், மேலும் அவர் செய்த கிரியை முழுவதையும் மாம்சத்தில் நிறைவேற்றினார். அவர் எந்த யுகத்திலும் கிரியையை நகல் எடுப்பதில்லை. கடைசிக் காலம் வந்துவிட்டதால், அவர் கடைசிக் காலத்தில் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செயல்படுத்துவார், கடைசிக் காலத்தில் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துவார். கடைசிக் காலத்தைப் பற்றிப் பேசும்போது, அது ஒரு தனி யுகத்தைக் குறிக்கிறது, அதில் நீங்கள் நிச்சயமாகப் பேரழிவைச் சந்திப்பீர்கள், பூகம்பங்கள், பஞ்சங்கள் மற்றும் வியாதிகளைச் சந்திப்பீர்கள் என்று இயேசு சொன்னார். இது இனியும் பழைய யுகமான கிருபையின் யுகம் இல்லை, ஆனால் ஒரு புதிய யுகம் என்பதைக் காண்பிக்கும். ஜனங்கள் சொல்வது போல, தேவன் என்றென்றும் மாறாதவராக இருந்தால், அவருடைய மனநிலை எப்போதும் இரக்கமுள்ளதாகவும் அன்பானதாகவும் இருந்தால், அவர் தன்னை நேசிப்பதைப் போல மனுஷனையும் நேசிக்கிறார் என்றால், ஒரு மனுஷனைக் கூட வெறுக்காமல் சகலவித மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கிறார் என்றால், அவருடைய கிரியையால் எப்போதாவது முடிவுக்கு வர இயலுமா? இயேசு வருகைதந்து சிலுவையில் அறையப்பட்டபோது, எல்லாப் பாவிகளுக்காகவும் தியாகம் செய்து பலிபீடத்தின்மீது தன்னை ஒப்புக்கொடுத்தபோது, அவர் ஏற்கனவே மீட்பிற்கான கிரியையை நிறைவுசெய்துவிட்டு, கிருபையின் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். ஆகவே, அந்த யுகத்தின் கிரியையைக் கடைசிக் காலத்தில் மீண்டும் செய்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதையே மீண்டும் செய்வது இயேசுவின் கிரியையை மறுப்பதாக இருக்காதா? தேவன் இந்தக் கட்டத்தில் தோன்றி சிலுவையில் அறையப்படவேண்டிய கிரியையைச் செய்யாமல், அன்பும் இரக்கமும் கொண்டவராக இருந்திருந்தால், அவரால் அந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்திருக்குமா? அன்பான, இரக்கமுள்ள தேவனால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது.

தேவனின் ஆளுகை முழுவதிலும் அவரது பணி முற்றிலும் தெளிவாக இருக்கிறது: கிருபையின் யுகம் என்பது கிருபையின் யுகம் தான், கடைசிக் காலம் என்பது கடைசிக் காலம்தான். ஒவ்வொரு யுகத்திற்கும் வித்தியாசமான வேறுபாடுகள் இருக்கின்றன, ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அந்த யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரியையைச் செய்கிறார். கடைசிக் காலத்தின் கிரியையைச் செயல்படுத்த, யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு, கடுங்கோபம் மற்றும் அழிவு ஆகியவை இருக்க வேண்டும். கடைசிக் காலம் இறுதியான யுகத்தைக் குறிக்கின்றது. இறுதி யுகத்தின் போது, தேவன் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாரா? யுகத்தை முடித்துவைக்க, தேவன் தம்முடன் ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக மட்டுமே அவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். மனுஷன் தொடர்ந்து உயிர்பிழைப்பதும், ஜீவித்திருப்பதும், அவன் ஒரு சிறந்த வழியில் நிலைத்திருப்பதுமே இயேசுவின் நோக்கமாக இருந்தது. அவர் மனுஷனை பாவத்திலிருந்து இரட்சித்தார், இதனால் அவர் தமது வம்சாவளி சீரழிவதைத் தடுத்து, இனியும் பாதாளத்திலும் நரகத்திலும் ஜீவிக்க விடாமல் செய்தார். மேலும் மனுஷனை பாதாளத்திலும் நரகத்திலும் இருந்து இரட்சிப்பதன் மூலம், இயேசு அவனை ஜீவித்திருக்க அனுமதித்தார். இப்போது, கடைசிக் காலம் வந்துவிட்டது. தேவன் மனுஷனை நிர்மூலமாக்கி, மனுஷகுலத்தை முற்றிலுமாக அழித்துப்போடுவார், அதாவது அவர் மனுஷகுலத்தின் கலகத்தை மாற்றிப்போடுவார். இந்த காரணத்திற்காக, கடந்த காலத்தின் இரக்கமுள்ள மற்றும் அன்பான மனநிலையோடு, தேவன் யுகத்தை முடிவுக்கு கொண்டுவருவது அல்லது அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு யுகத்திலும் தேவனுடைய மனநிலையின் சிறப்பு பிரதிநிதித்துவம் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு யுகத்திலும் தேவனால் செயல்படுத்தப்பட வேண்டியக் கிரியைகள் இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் அவராகவே செயல்படுத்தியக் கிரியைகளில் அவருடைய மெய்மையான மனநிலையின் வெளிப்பாடு இருக்கிறது, மேலும் அவருடைய நாமம் மற்றும் அவர் செய்யும் கிரியைகள் ஆகியவையும் யுகத்துக்கு ஏற்ப மாறுகின்றன—அவை அனைத்தும் புதியவையாக இருக்கின்றன. நியாயப்பிரமாண யுகத்தின் போது, மனுஷகுலத்தை வழிநடத்தும் கிரியை யேகோவா என்ற நாமத்தில் செயல்படுத்தப்பட்டது, மேலும் பூமியில் முதல் கட்டக் கிரியையும் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டத்தில், ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டியெழுப்புவதும், விதிகளைப் பயன்படுத்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழிகாட்டுவதும் மற்றும் அவர்கள் மத்தியில் கிரியை செய்வதுமே கிரியைகளாக இருந்தன. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர் பூமியில் தனது கிரியைக்கு ஒரு அஸ்திபாரத்தைத் தொடங்கினார். இந்த அஸ்திபாரத்திலிருந்து, அவர் இஸ்ரவேலுக்கு அப்பால் தனது கிரியையை விரிவுபடுத்தினார். அதாவது, இஸ்ரவேலில் இருந்து தொடங்கி, அவர் தனது கிரியையை வெளிப்புறமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் பிற்காலத் தலைமுறையினர் யேகோவாவே தேவன் என்பதையும், வானங்களையும் பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டித்தவர் யேகோவா தான் என்பதையும், மேலும் சகல ஜீவஜந்துக்களை சிருஷ்டித்ததும் யேகோவாதான் என்பதையும் படிப்படியாக அறிந்து கொண்டனர். அவர் தம்முடைய கிரியையை இஸ்ரவேல் ஜனங்கள் மூலமாக அவர்களுக்கு அப்பால் பரப்பினார். பூமியில் யேகோவாவினுடைய கிரியையின் முதல் பரிசுத்தமான இடமாக இஸ்ரவேல் தேசம்தான் இருந்தது, மேலும் இஸ்ரவேல் தேசத்திற்கு தான் தேவன் முதன் முதலில் பூமியில் கிரியை செய்யச் சென்றார். அதுவே நியாயப்பிரமாண யுகத்தின் கிரியையாக இருந்தது. கிருபையின் யுகத்தில் மனுஷனை இரட்சித்த தேவன், இயேசு. அவர் கிருபையும், அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், தாழ்மையும், கவனிப்பும் கொண்டவராகவும், அதன் உருவாகவும் இருந்தார். அவர் செய்த பல கிரியைகள் மனுஷனின் மீட்பிற்காகவே இருந்தன. அவரது மனநிலை இரக்கமும் அன்பும் நிறைந்த ஒன்றாகும், மேலும் அவர் இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருந்ததால், தேவன் தம்மை நேசித்தது போலவே மனுஷனையும் நேசித்தார் என்பதைக் காண்பிக்க, மனுஷனுக்காக அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியிருந்தது, அந்த அளவுக்கு அவர் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது, அதாவது தேவன் என்பவர் மனுஷனை இரட்சித்த தேவனாக இருந்தார், அவர் இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவனாக இருந்தார். தேவன் மனுஷனுடன் இருந்தார். அவருடைய அன்பும், இரக்கமும், அவருடைய இரட்சிப்பும் ஒவ்வொரு மனுஷனுடனும் இருந்தன. இயேசுவின் நாமத்தையும் அவருடைய பிரசன்னத்தையும் ஏற்றுக்கொண்டதன் மூலம் மட்டுமே மனுஷனால் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற முடிந்தது, அவருடைய ஆசீர்வாதத்தையும், அவருடைய பரந்த மற்றும் ஏராளமான கிருபையையும், அவருடைய இரட்சிப்பையும் பெற முடிந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், அவரைப் பின்பற்றிய அனைவரும் இரட்சிப்பைப் பெற்றார்கள், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவனின் நாமம் இயேசு என்பதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிருபையின் யுகத்தின் கிரியைகள் முக்கியமாக இயேசு என்ற நாமத்தில் தான் செய்யப்பட்டன. கிருபையின் யுகத்தில், தேவன், இயேசு என்று அழைக்கப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டையும் தாண்டி புதிய கிரியையின் ஒரு கட்டத்தை மேற்கொண்டார், அவருடைய கிரியை சிலுவையில் அறையப்படுவதுடன் நிறைவு செய்யப்பட்டது. இதுவே அவருடைய கிரியையின் முழுமையாக இருந்தது. ஆகையால், நியாயப்பிரமாண யுகத்தின் போது தேவனின் நாமம் யேகோவா என்பதாக இருந்தது, கிருபையின் யுகத்தில் இயேசுவின் நாமமே தேவனைக் குறித்தது. கடைசிக் காலத்தில், அவருடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன், அதாவது சர்வவல்லவர் என்பதாக இருக்கிறது, அவர் மனுஷனை வழிநடத்தவும், மனுஷனை ஜெயங்கொள்ளவும், மனுஷனை ஆதாயப்படுத்தவும் தனது வல்லமையைப் பயன்படுத்துகிறார், இறுதியில், யுகத்தை முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஒவ்வொரு யுகத்திலும், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவனின் மனநிலை தெளிவாகத் தெரிகிறது.

ஆதியில், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் போது மனுஷனை வழிநடத்துவது ஒரு குழந்தையின் ஜீவிதத்தை வழிநடத்துவதைப் போல இருந்தது. ஆதிகால மனுஷகுலம் யேகோவாவிலிருந்து புதிதாகப் பிறந்தது; அவர்கள் தான் இஸ்ரவேலர். தேவனை எவ்வாறு வணங்குவது என்பது பற்றியோ அல்லது பூமியில் எப்படி ஜீவிப்பது என்பது பற்றியோ அவர்களுக்கு எந்தப் புரிதலும் இருக்கவில்லை. அதாவது, யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார், ஆனால் யேகோவாவை எவ்வாறு வணங்குவது அல்லது பூமியில் யேகோவாவின் விதிககளை எப்படிப் பின்பற்றுவது என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறன்களை அவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. யேகோவாவின் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல், இதை யாரும் நேரடியாக அறிய முடியாது, ஏனென்றால் ஆதியில் மனுஷன் அத்தகைய திறன்களைக் கொண்டிருக்கவில்லை. யேகோவாதான் தேவன் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் அவரை எவ்வாறு வணங்குவது, எந்த விதமான நடத்தை அவரை வணங்குவதாக அழைக்கப்படும், ஒருவன் எந்த விதமான மனதுடன் அவரை வணங்க வேண்டும், அல்லது அவரை வணங்க அவருக்கு என்ன காணிக்கை வழங்க வேண்டும், என இவை அனைத்திற்கும் மனுஷனுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. யேகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிலும் அனுபவிக்கக்கூடியதை எப்படி அனுபவிப்பது என்பது மட்டும் மனுஷனுக்கு தெரியும், ஆனால் பூமியில் எந்த வகையான ஜீவிதம் தேவனின் சிருஷ்டிப்புக்கு தகுதியானது என்பது பற்றி மனுஷனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அறிவுறுத்த யாருமில்லாமல், அவர்களை தனிப்பட்ட முறையில் வழிநடத்த யாருமில்லாமல், இந்த மனுஷரால் ஒருபோதும் மனுஷகுலத்திற்கு ஏற்ற ஜீவிதத்தை சரியாக வழிநடத்தியிருக்க முடிந்திருக்காது, மாறாக சாத்தானால் மறைமுகமாக சிறைபிடிக்கப்பட்டிருப்பர். யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது, மனுஷகுலத்தின் முன்னோர்களான ஏவாளையும் ஆதாமையும் அவர் சிருஷ்டித்தார், ஆனால் அவர் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த புத்தியையோ அல்லது ஞானத்தையோ வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பூமியில் வாழ்ந்துவந்தாலும், அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. எனவே, மனுஷகுலத்தை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை பாதி மட்டுமே முடிந்தது, முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை. அவர் களிமண்ணிலிருந்து மனுஷனின் உருவமாதிரியை மட்டுமே உருவாக்கி, அதற்கு அவரது சுவாசத்தைக் கொடுத்திருந்தார், ஆனால் மனுஷனுக்கு அவரை வணங்குவதற்குப் போதுமான சித்தத்தை அவர் வழங்கியிருக்கவில்லை. ஆதியில், மனுஷனுக்கு அவரை வணங்குவதற்கோ அல்லது அவருக்குப் பயப்படுவதற்கோ மனதில்லை. மனுஷன் அவரது வார்த்தைகளைக் கேட்க மட்டுமே அறிந்திருந்தான், ஆனால் பூமியிலுள்ள ஜீவிதத்திற்கான அடிப்படை அறிவையும் மனுஷ ஜீவிதத்தின் இயல்பான விதிகளையும் அறியாதவனாக இருந்தான். ஆகவே, யேகோவா ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து ஏழு நாட்களின் திட்டத்தை முடித்திருந்தாலும், மனுஷனுக்கான சிருஷ்டிப்பை அவர் எந்த வகையிலும் முடித்திருக்கவில்லை, ஏனென்றால் மனுஷன் ஒரு உமி மட்டுமே, மேலும் மனுஷனாக இருப்பதன் யதார்த்தம் அவனிடம் இருக்கவில்லை. மனுஷகுலத்தை படைத்தவர் யேகோவாதான் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் யேகோவாவின் வார்த்தைகளையோ விதிகளையோ எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதில் அவனுக்கு எந்தவிதமான அறிவும் இல்லை. ஆகவே, மனுஷகுலம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகும், யேகோவாவின் கிரியை முடிவடையவில்லை. மனுஷகுலத்தை தனக்கு முன்பாக வரும்படி செய்ய அவர் இன்னும் அதை முழுமையாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதனால் அவர்களால் பூமியில் ஒன்றாக ஜீவித்திருக்கவும் அவரை வணங்கவும் முடியும், மேலும் அவரது வழிகாட்டுதலுடன் பூமியில் சாதாரண மனுஷ ஜீவிதத்திற்காக சரியான பாதையிலும் அவர்களால் பிரவேசிக்க முடியும். இவ்வாறாக மட்டுமே யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகள் முழுமையாக நிறைவடைந்தன; அதாவது, இவ்வாறாக மட்டுமே உலகை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது. எனவே, மனுஷகுலத்தை அவர் சிருஷ்டித்ததால், அவர் பூமியிலுள்ள மனுஷகுலத்தின் ஜீவிதத்தை பல ஆயிரம் ஆண்டுகளாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதன்மூலம் மனுஷகுலம் அவருடைய கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு, பூமியில் ஒரு சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குபெற முடிந்தது. அப்போதுதான் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது. அவர் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபின் இந்தக் கிரியையை மேற்கொண்டார், யாக்கோபின் யுகம் வரை அதைத் தொடர்ந்தார், அந்த நேரத்தில் அவர் யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களையும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாக மாற்றினார். அந்தக் காலத்திலிருந்து, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பூமியில் அவரால் அதிகாரப்பூர்வமாக வழிநடத்தப்பட்ட மனுஷகுலமாக மாறினர், மேலும் இஸ்ரவேல் தேசம் பூமியில் அவர் தனது கிரியையைச் செயல்படுத்திய குறிப்பிட்ட இடமாக மாறியது. பூமியில் அவரிடமிருந்து பிறந்த எல்லா ஜனங்களும் அவரை எவ்வாறு வணங்குவது, பூமியில் எப்படி ஜீவித்திருப்பது என்று அறிந்துகொள்வர் என்பதற்காக, யேகோவா இந்த ஜனங்களை பூமியில் அதிகாரப்பூர்வமாக தனது கிரியையைச் செய்த முதல் ஜனக்கூட்டமாக ஆக்கினார், மேலும் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் அவருடைய கிரியையைத் தோற்றுவித்த இடமாக மாற்றினார், அவர்களை இன்னும் பெரிய கிரியைக்கான தொடக்கமாகப் பயன்படுத்தினார். ஆகவே, இஸ்ரவேலரின் கிரியைகள் புறஜாதி ஜனங்களால் பின்பற்றப்பட வேண்டிய ஒரு உதாரணமாக மாறியது, மேலும் இஸ்ரவேல் ஜனங்களிடையே சொல்லப்பட்டவை புறஜாதி ஜனங்களால் கேட்கப்பட வேண்டிய வார்த்தைகளாக மாறின. ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் யேகோவாவின் விதிகளையும் கட்டளைகளையும் பெற்றார்கள், மேலும் யேகோவாவின் வழிகளை எவ்வாறு வணங்குவது என்பதையும் முதலில் அறிந்தார்கள். அவர்கள் யேகோவாவின் வழிகளை அறிந்த மனுஷகுலத்தின் மூதாதையர்களாகவும், யேகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷகுலத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தனர். கிருபையின் யுகம் வந்தபோது, யேகோவா இனியும் மனுஷனை இந்த வழியில் வழிநடத்தவில்லை. மனுஷன் பாவம் செய்து தன்னை பாவத்திற்கு கைவிட்டுவிட்டான், ஆகவே அவர் மனுஷனை பாவத்திலிருந்து மீட்டெடுக்க ஆரம்பித்தார். இவ்வாறாக, மனுஷன் பாவத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படும் வரை அவர் மனுஷனை நிந்தித்தார். கடைசிக் காலத்தில், இந்தக் கட்டத்தின் கிரியைகளை நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும் எனும் வகையில் மனுஷன் அவ்வளவு மோசமான நிலைக்கு மூழ்கிவிட்டிருந்தான். இவ்வாறாக மட்டுமே கிரியையை நிறைவேற்ற முடியும். இது பல யுகங்களின் கிரியையாக இருந்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுகத்தை யுகத்திலிருந்து பிரித்து அவற்றுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்த தேவன் தமது நாமத்தையும், தம்முடைய கிரியையையும், தேவனின் வெவ்வேறு உருவங்களையும் பயன்படுத்துகிறார்; தேவனின் நாமமும் அவருடைய கிரியையும் அவருடைய யுகத்தையும் குறிக்கிறது மற்றும் ஒவ்வொரு யுகத்திலும் அவருடைய கிரியையைக் குறிக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் கிரியை எப்போதுமே ஒரே மாதிரியானது என்றும், அவர் எப்போதும் ஒரே நாமத்தால் அழைக்கப்படுகிறார் என்றும் வைத்துக் கொண்டால், மனுஷன் அவரை எப்படி அறிவான்? தேவனை யேகோவா என்று அழைக்க வேண்டும், யேகோவா என்று அழைக்கப்படும் தேவனைத் தவிர, வேறு எந்த நாமத்திலும் அழைக்கப்படுபவர் தேவன் அல்ல. இல்லையெனில் தேவன் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும், இயேசுவின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தினாலும் அவர் அழைக்கப்படக்கூடாது; இயேசுவைத் தவிர, யேகோவா என்பவர் தேவன் அல்ல, சர்வவல்லமையுள்ள தேவன் என்பவரும் தேவன் அல்ல. தேவன் சர்வவல்லவர் என்பது உண்மை என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவன் என்பவர் மனுஷனுடன் இருக்கும் தேவன் ஆவார், அவர் இயேசு என்று அழைக்கப்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனுஷனுடன் இருக்கிறார். இதைச் செய்வது கோட்பாட்டிற்கு இணங்குவதும், தேவனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குள் அடைப்பதும் ஆகும். எனவே, ஒவ்வொரு யுகத்திலும், தேவன் செய்யும் கிரியை, அவர் அழைக்கப்படும் நாமம், மற்றும் அவர் அணிந்துகொள்ளும் உருவம்—இன்றுவரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் செய்யும் கிரியை—இவை எந்தவொரு ஒழுங்குமுறையையும் பின்பற்றுவதில்லை, மற்றும் எந்தவொரு வரம்புகளுக்கும் உட்பட்டவை அல்ல. அவர்தான் யேகோவா, ஆனால் அவரேதான் இயேசுவும் கூட, மேசியாவும் அவர்தான், சர்வவல்லமையுள்ள தேவனும் அவர்தான். அவரது கிரியை படிப்படியாக அவருடைய நாமத்துடன் தொடர்புடைய மாற்றங்களுக்கு உட்படும். எந்த ஒரு நாமத்தாலும் அவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் அவர் அழைக்கப்படும் அனைத்து நாமங்களும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் ஒவ்வொரு யுகத்திலும் அவர் செய்யும் கிரியை அவருடைய மனநிலையை குறிக்கிறது. கடைசிக் காலம் வரும்போது, நீ பார்க்கும் தேவன் இயேசுவாகத் தான் இருப்பார், அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகிறார், மேலும் அவர் இன்னும் இயேசுவின் தோற்றத்தைக் கொண்டிருக்கிறார், அவர் பேசும் வார்த்தைகளும் இயேசுவின் வார்த்தைகளாகவே இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்: “நீங்கள் உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசிக்க வேண்டும், நீங்கள் உபவாசம் இருக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும், உங்கள் சொந்த ஜீவனை நேசிப்பது போல நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும், மற்றவர்களை சகித்துக்கொள்ளுங்கள், மற்றும் பொறுமையுடனும் தாழ்மையுடனும் இருங்கள். நீங்கள் என் சீஷர்களாக மாறுவதற்கு முன்பு நீங்கள் இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்வதன் மூலம், நீங்கள் என் ராஜ்யத்தினுள் பிரவேசிக்கலாம்.” இது கிருபையின் யுகத்தின் கிரியைக்குச் சொந்தமானதல்லவா? அவர் சொல்வது கிருபையின் யுகத்திற்கான வழி அல்லவா? இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? இது இன்னும் இயேசுவின் கிரியைதான் என்று நீங்கள் உணர மாட்டீர்களா? இது அதனை நகலெடுப்பதாக இருக்காதா? இதில் மனுஷன் இன்பம் காண முடியுமா? தேவனின் கிரியை தற்போது இருப்பது போன்றுதான் எப்போதும் இருக்கும், இதற்கு மேல் முன்னேறாது என்று நீங்கள் உணருவீர்கள். அவருக்கு அவ்வளவு வல்லமை மட்டுமே இருக்கிறது, மேலும் புதியக் கிரியைகள் எதுவும் இல்லை, அவர் தனது வல்லமையை அதன் எல்லைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருபையின் யுகத்திலும், மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்சமயத்திலும் அவர் கிருபையின் யுகத்தின் வழியைப் பிரசங்கித்து வருகிறார், ஜனங்களை இன்னும் மனந்திரும்ப வைக்கிறார். ஜனங்கள், “தேவனே, உமக்கு மட்டுமே இவ்வளவு வல்லமை இருக்கிறது. நீர் மிகவும் புத்திசாலி என்று நான் விசுவாசித்தேன், ஆனாலும் நீர் சகிப்புத்தன்மையை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள், பொறுமை மீது மட்டுமே அக்கறை காட்டுகிறீர். உமது எதிரியை எப்படி நேசிக்க வேண்டும் என்பது மட்டுமே உமக்குத் தெரியும், அதற்கு மேல் எதுவும் தெரியாது,” என்று கூறுவர். தேவன் கிருபையின் யுகத்தில் இருந்தபடியே எப்போதும் இருப்பார் என்றுதான் மனுஷன் தன் மனதில் நினைக்கிறான், மேலும் தேவன் அன்பானவர், இரக்கமுள்ளவர் என்றுதான் மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான். தேவனின் கிரியை எப்போதும் அதே பழைய வழியில்தான் செயல்படுத்தப்படும் என்று நீ நினைக்கிறாயா? எனவே, அவருடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் அவர் சிலுவையில் அறையப்படமாட்டார், மேலும் நீங்கள் பார்க்கிற மற்றும் தொடுகின்ற அனைத்தும் நீங்கள் கற்பனை செய்த அல்லது கேட்ட எதையும் போலல்லாமல் இருக்கும். இன்று, தேவன் பரிசேயர்களுடன் ஈடுபடுவதில்லை, உலகம் அறிய அவர் அனுமதிப்பதில்லை, அவரைப் பின்பற்றும் நீங்கள் மட்டுமே அவரை அறிந்தவர்கள், ஏனென்றால் அவர் மீண்டும் சிலுவையில் அறையப்பட மாட்டார். கிருபையின் யுகத்தில், இயேசு தம்முடைய சுவிசேஷ கிரியைக்காக தேசங்கள் முழுவதும் பகிரங்கமாகப் பிரசங்கித்தார். சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியைக்காக அவர் பரிசேயர்களுடன் ஈடுபட்டார்; அவர் பரிசேயர்களுடன் ஈடுபடாமல் இருந்திருந்தால், அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைப் பற்றி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றால், அவர் எவ்வாறு நிந்தனை செய்யப்பட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டிருப்பார்? எனவே, அவர் சிலுவையில் அறையப்படுவதற்காக பரிசேயர்களுடன் ஈடுபட்டார். இன்று, சோதனையைத் தவிர்ப்பதற்காக அவர் தனது கிரியையை ரகசியமாக மேற்கொள்கிறார். தேவனுடைய இரண்டு அவதாரங்களில், கிரியையும் முக்கியத்துவமும் வேறுபட்டவையாக இருக்கின்றன, மேலும் அமைப்பும் வேறுபட்டிருக்கிறது, எனவே அவர் செய்யும் கிரியை முற்றிலும் ஒரே மாதிரியாக எப்படி இருக்கும்?

“தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா? தேவனால் தமது மனநிலையை மாற்ற முடியாது என்பதால் தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்றும், வேறு எந்த நாமமும் அவருக்கு இல்லை என்றும் மனுஷன் கூறினால், அந்த வார்த்தைகள் உண்மையில் தூஷணமாகும்! தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமுள்ள இயேசு என்ற நாமத்தால் மட்டுமே தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று நீ நம்புகிறாயா? தேவன் பல நாமங்களால் அழைக்கப்படலாம், ஆனால் இந்தப் பல நாமங்களில், தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை, தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை. எனவே, தேவனுக்குப் பல நாமங்கள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பல நாமங்களால் தேவனின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் தேவனின் மனநிலை வளம் மிக்கது, அது அவரை அறிந்து கொள்ளும் மனுஷனின் திறனை மீறுகிறது. மனுஷனுக்கு, மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்தி, தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அடக்க மனுஷகுலத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம்தான் இருக்கிறது: மகத்துவமானவர், கனத்திற்குரியவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர், உயர்ந்தவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், ஞானமுள்ளவர், மற்றும் பல எனப் பல வார்த்தைகள் இருக்கின்றன! இந்த வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தால் தேவனின் மனநிலையைப் பற்றி மனுஷன் கண்ட சிறிய விஷயங்களை விவரிக்க இயலாது. காலப்போக்கில், பலர் தங்கள் இருதயங்களில் இருக்கும் உற்சாகத்தை விவரிக்க முடியும் என்று நினைத்த வார்த்தைகளை இதில் சேர்த்தனர்: தேவன் மிகவும் மகத்துவமானவர்! தேவன் மிகவும் பரிசுத்தமானவர்! தேவன் மிகவும் அழகானவர்! இன்று, இது போன்ற மனுஷ சொற்கள் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனாலும் மனுஷனால் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஒரு நாமம் அல்ல, பல நாமங்கள் இருக்கின்றன. ஏனென்றால் தேவன் வளம்மிக்கவர், மேலும் மனுஷனின் மொழி மிகவும் வறிய நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது நாமத்துக்கு தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை, எனவே அவருடைய நாமத்தை நிரந்தரமாக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? தேவன் மகத்துவம் மிக்கவர், மிகவும் பரிசுத்தமானவர், ஆனாலும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் அவருடைய நாமத்தை மாற்ற நீ அவரை அனுமதிக்க மாட்டாயா? ஆகையால், தேவன் தனது சொந்தக் கிரியையை தனிப்பட்ட முறையில் செய்யும் ஒவ்வொரு யுகத்திலும், அவர் செய்ய விரும்பும் கிரியையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கும் வகையில், யுகத்துக்கு ஏற்ற ஒரு நாமத்தைப் பயன்படுத்துகிறார். தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குறிப்பிட்ட நாமத்தை, அந்த யுகத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவன் தனது சொந்த மனநிலையை வெளிப்படுத்த மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார். அப்படியிருந்தும், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்ற மற்றும் தேவனை தனிப்பட்ட முறையில் பார்த்த அநேகரும் இந்த ஒரு குறிப்பிட்ட நாமத்தால் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது என்று நினைக்கிறார்கள்—ஐயோ, இதனால் உதவ முடியாது—எனவே மனுஷன் இனியும் எந்த நாமத்தாலும் தேவனைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் வெறுமனே அவரை “தேவன்” என்று அழைக்கிறான். இது மனுஷனின் இருதயம் அன்பால் நிறைந்திருப்பது போலவும், ஆனால் முரண்பாடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கிறது, ஏனென்றால் தேவனை எவ்வாறு விளக்குவது என்று மனுஷன் அறிந்திருக்கவில்லை. தேவன் வளம்மிக்கவராக இருப்பதால் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை விவரிக்க எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையை சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய எந்த ஒரு நாமமும் இல்லை, மேலும் தேவன் வைத்திருக்கும் மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் விவரிக்கக்கூடிய ஒரு நாமமும் இல்லை. யாராவது என்னிடம், “நீ எந்த நாமத்தைப் பயன்படுத்துகிறாய்?” என்று கேட்டால், நான் அவர்களிடம், “தேவன் தேவனே!” என்று கூறுவேன். இது தேவனுக்கு சிறந்த நாமம் அல்லவா? இது தேவனின் மனநிலையைச் சிறப்பாக உள்ளடக்கியிருக்கும் ஒரு நாமம் அல்லவா? இது அவ்வாறு இருப்பதால், தேவனின் நாமத்தைத் தேடுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? ஒரு நாமத்தின் பொருட்டு, உணவு மற்றும் நித்திரை இல்லாமல் உங்கள் மூளையை எதற்காகக் கசக்க வேண்டும்? தேவன், யேகோவா, இயேசு அல்லது மேசியா என்று அழைக்கப்படாத ஒரு நாள் வரும்—அவர் வெறுமனே சிருஷ்டிகராக இருப்பார். அந்த நேரத்தில், அவர் பூமியில் சூட்டிக்கொண்ட எல்லா நாமங்களும் முடிவுக்கு வரும், ஏனென்றால் பூமியில் அவர் செய்த கிரியைகள் முடிவுக்கு வரும், அதன் பிறகு அவருடைய நாமங்கள் இனி இருக்காது. சகலமும் சிருஷ்டிகரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்போது, அவருக்கு மிகவும் பொருத்தமான ஆனால் முழுமையற்ற நாமத்திற்கான தேவை என்ன? நீ இப்போதும் தேவனின் நாமத்தைத் தேடுகிறாயா? தேவன் யேகோவா என்று மட்டுமே அழைக்கப்படுகிறார் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனுக்கு எதிராக தூஷணம் செய்த பாவத்தை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தேவனுக்கு நாமம் என்பதே இல்லை என்பதை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒன்று, இரண்டு, அல்லது பல நாமங்களை மட்டுமே சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவருக்குக் கிரியைகள் இருந்தன, மனுஷகுலத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவர் எந்த நாமத்தால் அழைக்கப்பட்டாலும்—அதை அவர் சுதந்திரமாகத் தேர்வு செய்யவில்லையா? அதைத் தீர்மானிக்க அவருக்கு அவரது சிருஷ்டிப்புக்களில் ஒருவனான உன் உதவி தேவையா? தேவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் நாமமானது, மனுஷனின் மொழியுடன், மனுஷனால் புரிந்துகொள்ள முடியும் விஷயங்களுடன் உடன்படுவதாக இருக்கிறது, ஆனால் இந்த நாமம் மனுஷனால் பொதுமைப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல. பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார், அவர் தேவன் என்று அழைக்கப்படுகிறார், அவர் மிகுந்த வல்லமையுள்ள தேவன், அவர் மிகவும் புத்திசாலி, மிக உயர்ந்தவர், அதிசயமானவர், மறைபொருள் மிக்கவர், மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்று மட்டுமே உன்னால் சொல்ல முடியும், அதற்கு மேல் உன்னால் எதுவும் சொல்ல முடியாது; சிறிதளவு மட்டுமே உன்னால் அறிய முடிந்திருக்கிறது. இது அவ்வாறு இருப்பதால், இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கடைசிக் காலம் வரும்போது, தேவனே அவருடைய கிரியைகளைச் செய்கிறார் என்றாலும், அவருடைய நாமம் மாற வேண்டும், ஏனென்றால் அது வேறு யுகம்.

தேவன் பிரபஞ்சம் மற்றும் அதற்கும் மேலே இருக்கும் பிரபஞ்சத்தில் மிகப் பெரியவராக இருக்கிறார், அவரால் ஒரு மாம்சத்தின் உருவத்தைப் பயன்படுத்தி தம்மை முழுமையாக விளக்கிக் காட்ட முடியுமா? தேவன் தமது கிரியையின் ஒரு கட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த மாம்சத்தை அணிந்துகொள்கிறார். மாம்சத்தின் இந்த உருவத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, இது கடந்து செல்லும் யுகங்களுடனோ அல்லது தேவனின் மனநிலையுடனோ எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இயேசு தம்முடைய உருவத்தை நிலைத்திருக்க ஏன் அனுமதிக்கவில்லை? தம்முடைய உருவத்தைப் பிற்காலத் தலைமுறையினர் பார்க்கும் வகையில் அவர் ஏன் அதை வரைய அனுமதிக்கவில்லை? அவருடைய உருவம் தேவனின் சாயல் என்பதை ஜனங்களை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை? மனுஷனின் உருவம் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், மனுஷனின் தோற்றம் தேவனின் உயர்ந்த சாயலைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? தேவன் மாம்சமாகும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மாம்சத்தில் இறங்குகிறார். அவருடைய ஆவிதான் ஒரு மாம்சத்தில் இறங்குகிறது, அதன் மூலம் அவர் ஆவியானவரின் கிரியையைச் செய்கிறார். மாம்சத்தில் வெளிப்படுவது ஆவியானவர் தான், மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையைச் செய்வதும் ஆவியானவர் தான். மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரை முழுமையாக பிரதிபலிக்கிறது, மாம்சமானது கிரியையின் பொருட்டு மட்டுமே உள்ளது, அதனால் மாம்சத்தின் உருவம் தேவனின் உண்மையான உருவத்திற்கு மாற்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல; இது மாம்சமாகிய தேவனின் நோக்கமோ அல்லது முக்கியத்துவமோ அல்ல. அவர் மாம்சமாகிய காரணம், ஆவியானவர் அவருடைய கிரியைக்கு ஏற்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார் என்பதற்காகத் தான். மாம்சமாவது தான் அவருடைய கிரியையை அடையச் சிறந்தது, இதன்மூலம் ஜனங்கள் அவருடைய கிரியைகளைக் காணவும், அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய கிரியையின் அதிசயத்தை அறிந்து கொள்ளவும் முடியும். அவருடைய நாமம் அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது, அவருடைய கிரியை அவருடைய அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது, ஆனால் மாம்சத்தில் அவரது தோற்றம் அவருடைய உருவத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை; அது வெறுமனே மனுஷனின் கருத்து மட்டுமே. எனவே, தேவன் மாம்சமாகியதன் முக்கியமான அம்சங்கள் அவருடைய நாமம், அவருடைய கிரியை, அவருடைய மனநிலை மற்றும் அவரது பாலினம் ஆகியவை மட்டுமே. இந்த யுகத்தில் அவருடைய ஆளுகையைப் பிரதிநிதித்துவப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன. மாம்சத்தில் அவரது தோற்றம், அவருடைய ஆளுகையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, அந்த நேரத்தில் அவருடைய கிரியையின் பொருட்டு மட்டுமே அந்த மாம்சம் இருக்கிறது. ஆயினும், மாம்சமாகிய தேவன் குறிப்பிட்ட தோற்றம் எதுவும் கொண்டிருக்காமலிருக்க சாத்தியமில்லை, எனவே அவருடைய தோற்றத்தைத் தீர்மானிக்கப் பொருத்தமானக் குடும்பத்தை அவர் தேர்வு செய்கிறார். தேவனின் தோற்றம் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தால், அவரைப் போன்ற முக அம்சங்களைக் கொண்ட அனைவருமே தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பர். அது ஒரு மிகப் பெரிய தவறு அல்லவா? மனுஷன் இயேசுவை வணங்கக்கூடும் என்பதற்காகவே அவரது உருவப்படம் மனுஷனால் வரையப்பட்டது. அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் எந்தச் சிறப்பு அறிவுறுத்தல்களையும் கொடுக்கவில்லை, எனவே மனுஷன் அந்தக் கற்பனை உருவப்படத்தை இன்று வரை பயன்படுத்திவருகிறான். உண்மையில், தேவனின் உண்மையான நோக்கத்தின்படி, மனுஷன் இதைச் செய்திருக்கக்கூடாது. மனுஷனின் வைராக்கியத்தால் மட்டுமே இயேசுவின் உருவப்படம் இந்த நாள் வரை நிலைத்திருக்கிறது. தேவன் ஆவியானவர், இறுதி சோதனையில் தேவனின் உருவம் என்னவாக இருக்கும் என்பதைப் பொதுமைப்படுத்தும் திறன் மனுஷனுக்கு ஒருபோதும் இருக்க முடியாது. அவரது உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அவரது மூக்கு, அவரது வாய், அவரது கண்கள் மற்றும் அவரது தலைமுடி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்தவரை, இவை உன் பொதுமைப்படுத்தும் திறனை மீறியவையாக இருக்கின்றன. யோவானுக்கு வெளிப்பாடு வந்தபோது, அவன் மனுஷகுமாரனின் உருவத்தைக் கண்டான்: அவருடைய வாய்க்கு வெளியே கூர்மையான இரட்டை முனைகள் கொண்ட வாள் ஒன்று இருந்தது, அவருடைய கண்கள் நெருப்புச் சுடர்கள் போலவும், தலை மற்றும் தலைமுடி இரண்டும் கம்பளி போல வெண்மையாகவும், அவரது கால்கள் மெருகூட்டப்பட்ட வெண்கலம் போலவும் இருந்தன, மற்றும் அவரது மார்பைச் சுற்றி ஒரு தங்கக் கவசம் இருந்தது. அவனது வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருந்தாலும், அவன் விவரித்த தேவனின் உருவம் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருக்கவில்லை. அவன் பார்த்தது ஒரு தரிசனம் மட்டுமே, பொருள் உலகைச் சேர்ந்த ஒருவனின் உருவத்தை அல்ல. யோவான் ஒரு தரிசனத்தைக் கண்டான், ஆனால் அவன் தேவனின் மெய்மையான தோற்றத்தைக் காணவில்லை. மாம்சமாகிய தேவனின் உருவம், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உருவமாக இருப்பதால், அதனால் தேவனின் மனநிலையை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது. யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் தம்முடைய சாயலிலேயே அவ்வாறு செய்தார் என்றும், ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்தார் என்றும் கூறினார். அந்த நேரத்தில், அவர் தேவனின் சாயலில் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்ததாகக் கூறினார். மனுஷனின் உருவம் தேவனின் உருவத்தை ஒத்திருந்தாலும், மனுஷனின் தோற்றம் தான் தேவனின் உருவம் என்று அர்த்தப்படுவதாகக் கருத முடியாது. தேவனின் உருவத்தை முழுமையாக எடுத்துக்காட்டுவதற்கு உன்னால் மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் தேவன் மிகவும் உயர்ந்தவர், மகத்துவம் மிக்கவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர்!

இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, அது பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் படி இருந்தது; அவர் பரிசுத்த ஆவியானவர் விரும்பியபடியே செய்தார், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் படியோ அல்லது யேகோவாவின் கிரியையின் படியோ செய்யவில்லை. இயேசு செய்ய வந்த கிரியையானது யேகோவாவின் விதிகளையோ அல்லது யேகோவாவின் கட்டளைகளையோ பின்பற்றுவதில்லை என்றாலும், அவற்றின் ஆதாரம் ஒன்றுதான். இயேசு செய்த கிரியை இயேசுவின் நாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அது கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; யேகோவா செய்த கிரியையைப் பொறுத்தவரை, அது யேகோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் அது நியாயப்பிரமாண யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அவர்களின் கிரியைகள் இரண்டு வெவ்வேறு யுகங்களில் செயல்படுத்தப்பட்ட ஒரே ஆவியானவரின் கிரியைகள் ஆகும். இயேசு செய்த கிரியை கிருபையின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், யேகோவா செய்த கிரியை பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா இஸ்ரவேல், எகிப்து ஜனங்களுக்கும், மற்றும் இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட எல்லா தேசங்களுக்கும் மட்டுமே வழிகாட்டினார். புதிய ஏற்பாட்டினுடைய கிருபையின் யுகத்தில் இயேசுவின் கிரியைகள் இயேசு என்ற நாமத்தில் தேவனின் கிரியைகளாக இருந்தன, ஏனென்றால் அந்த யுகத்தை வழிநடத்தியவர் இயேசு. இயேசுவின் கிரியை யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டது என்றும் நீ சொன்னால், அவர் எந்தப் புதிய கிரியையையும் தொடங்கவில்லை என்றும், அவர் செய்ததெல்லாம் யேகோவாவின் வார்த்தைகளின்படி மட்டுமே என்றும், யேகோவாவின் கிரியை மற்றும் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களின்படி மட்டுமே என்றும் நீ சொன்னால், இயேசு மாம்சமாகியிருக்க மாட்டார். அவர் தம்முடைய கிரியையை இந்த வழியில் நடத்தியிருந்தால், அவர் ஒரு அப்போஸ்தலராகவோ அல்லது நியாயப்பிரமாண யுகத்தின் ஊழியராகவோ இருந்திருப்பார். நீ சொல்வது போல் இருந்தால், இயேசுவினால் ஒரு யுகத்தைத் தொடங்கியிருக்க முடியாது, வேறு எந்தக் கிரியைகளையும் செய்திருக்க முடியாது. அதேபோல், பரிசுத்த ஆவியானவர் முதன்மையாக யேகோவாவின் மூலமாக அவருடைய கிரியையைச் செய்ய வேண்டும், மேலும் யேகோவாவின் மூலமாக அல்லாமல் பரிசுத்த ஆவியானவர் வேறு யார் மூலமாகவும் எந்தப் புதிய கிரியையையும் அவரால் செய்திருக்க முடியாது. இயேசுவின் கிரியையை மனுஷன் இவ்வாறு புரிந்துகொள்வது தவறு. இயேசு செய்த கிரியையானது யேகோவாவின் வார்த்தைகளுக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களுக்கும் ஏற்ப செய்யப்பட்டது என்று மனுஷன் நம்பினால், இயேசு, மாம்சமாகிய தேவனா, அல்லது அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவரா? இந்தக் கண்ணோட்டத்தின் படி பார்த்தால், கிருபையின் யுகமே இருந்திருக்காது, இயேசு மாம்சமாகிய தேவனாக இருந்திருக்க மாட்டார், ஏனென்றால் அவர் செய்த கிரியையால் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடிந்திருக்காது, ஆனால் பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடிந்திருக்கும். இயேசு புதிய கிரியையைச் செயல்படுத்த, ஒரு புதிய யுகத்தைத் தொடங்க, இஸ்ரவேலில் முன்பு செய்த கிரியையை முறித்துக் கொள்ள, அவருடைய கிரியையை இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியைக்கு ஏற்ப இல்லாமல், அல்லது அவரது பழைய விதிகளுக்கு ஏற்ப இல்லாமல், அல்லது எந்தவொரு விதிமுறைகளுக்கும் இணங்காமல், மாறாக அவர் செய்ய வேண்டியப் புதிய கிரியையைச் செய்தால் மட்டுமே ஒரு புதிய யுகம் இருக்கும். தேவனே யுகத்தைத் தொடங்க வருகிறார், மேலும் தேவனே யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். யுகத்தைத் தொடங்குவதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனுஷனால் இயலாது. இயேசு வந்தபின் அவர் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை என்றால், அவர் வெறுமனே ஒரு மனுஷன் மட்டுமே, அவரால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதற்கு இதுவே சான்றாக இருந்திருக்கும். இயேசு வந்து யேகோவாவின் கிரியையை முடித்ததாலும், யேகோவாவின் கிரியையைத் தொடர்ந்ததாலும், மேலும், அவருடைய சொந்தக் கிரியையை, ஒரு புதிய கிரியையைச் செய்ததாலும், இது ஒரு புதிய யுகம் என நிரூபிக்கப்படுகிறது, மேலும் இயேசுதான் தேவன் என்பதையும் நிரூபிக்கிறது. அவர்கள் கிரியையின் இரண்டு வெவ்வேறு கட்டங்களைச் செய்தார்கள். ஒரு கட்டம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஆலயத்திற்கு வெளியே நடத்தப்பட்டது. ஒரு கட்டம் விதிகளின்படி மனுஷனின் ஜீவிதத்தை வழிநடத்துவதும், மற்றொன்று பாவநிவாரணபலியை வழங்குவதுமாக இருந்தன. கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாக இருந்தன; இது புதிய யுகத்தை பழையதிலிருந்து பிரிக்கிறது, மேலும் அவை இரண்டும் வெவ்வேறு யுகங்கள் என்று சொல்வது முற்றிலும் சரியானதாக இருக்கிறது. அவர்களது கிரியைகளின் இருப்பிடம் வேறுபட்டதாக இருந்தன, அவர்களது கிரியைகளின் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருந்தன, மற்றும் அவர்களது கிரியைகளின் நோக்கமும் வேறுபட்டதாக இருந்தன. எனவே, அவற்றை இரண்டு யுகங்களாகப் பிரிக்கலாம்: புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள், அதாவது புதிய மற்றும் பழைய யுகங்கள். இயேசு வந்தபோது அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, இது யேகோவாவின் யுகம் முடிந்துவிட்டது என்பதை நிரூபித்தது. ஆலயத்தில் யேகோவாவின் கிரியை முடிந்துவிட்டதால் அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. மீண்டும் அதைச் செய்வது, செய்த கிரியையை மீண்டும் செய்வதாக ஆகிவிடும். ஆலயத்தை விட்டு வெளியேறி, ஒரு புதிய கிரியையைத் தொடங்கி, ஆலயத்திற்கு வெளியே ஒரு புதிய பாதையைத் தொடங்கியதன் மூலம் மட்டுமே, தேவனின் கிரியையை அதன் உச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடிந்தது. அவர் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திற்கு வெளியே சென்றிருக்காவிட்டால், தேவனின் கிரியை ஆலயத்தின் அஸ்திவாரங்களில் தேக்கமடைந்து, புதிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் போயிருக்கும். ஆகவே, இயேசு வந்தபோது, அவர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை, ஆலயத்தில் அவருடைய கிரியைகளைச் செய்யவில்லை. அவர் ஆலயத்திற்கு வெளியே தனது கிரியைகளைச் செய்தார், சீஷர்களை வழிநடத்தி, அவருடைய கிரியைகளைச் சுதந்திரமாகச் செய்தார். தேவன் தனது கிரியையைச் செய்ய ஆலயத்திலிருந்து புறப்படுவது, தேவன் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அவரது கிரியை ஆலயத்திற்கு வெளியே நடத்தப்படவிருந்தது, அது செயல்படுத்தப்படும் விதத்தில் கட்டுப்படுத்தப்படாத புதிய கிரியையாக இருந்திருக்க வேண்டும். இயேசு வந்திறங்கியவுடனேயே, பழைய ஏற்பாட்டினுடைய யுகத்தில் யேகோவாவின் கிரியையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் இரண்டு வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், அதே ஆவியானவர்தான் கிரியையின் இரு கட்டங்களையும் நிறைவேற்றியது, மேலும், செயல்படுத்தப்பட்ட கிரியை தொடர்ச்சியானதாக இருந்தது. நாமமும் கிரியையின் உள்ளடக்கமும் வேறுபட்டதாக இருந்ததால், யுகமும் வேறுபட்டதாக இருந்தது. யேகோவா வந்தபோது, அது யேகோவாவின் யுகம்; இயேசு வந்தபோது, அது இயேசுவின் யுகம். எனவே, ஒவ்வொரு வருகையிலும், தேவன் ஒரு நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரு யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் அவர் ஒரு புதிய பாதையைத் தொடங்குகிறார்; ஒவ்வொரு புதிய பாதையிலும், அவர் ஒரு புதிய நாமத்தைச் சூட்டிக்கொள்கிறார், இது தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பதையும், அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதையும் காட்டுகிறது. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு கணத்திலும், தேவனின் ஆவியானவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒருபோதும் பழைய வழிகளையோ விதிகளையோ பற்றிக்கொள்வதில்லை. அவருடைய கிரியை இதுவரை நிறுத்தப்படவில்லை, ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அது நிறைவேறுகிறது. பரிசுத்த ஆவியின் கிரியை மாறாதது என்று நீ சொன்னால், யேகோவா ஏன் ஆசாரியர்களை ஆலயத்தில் சேவிக்கும்படிக் கேட்டார்? இயேசு வந்தபோது, அவர் பிரதான ஆசாரியராக இருந்தார் என்றும், அவர் தாவீதின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், பிரதான ஆசாரியரும் பெரிய ராஜாவுமாக இருந்தார் என்றும் கூறியபோதும் ஏன் இயேசு ஆலயத்திற்குள் நுழையவில்லை? அவர் ஏன் பலிகளைக் கொடுக்கவில்லை? ஆலயத்திற்குள் நுழைவதாகட்டும் அல்லது நுழையாததாகட்டும்—இவை அனைத்தும் தேவனின் கிரியைகள் அல்லவா? மனுஷன் கற்பனை செய்வதுபோல, இயேசு மீண்டும் வருவார், கடைசிக் காலத்திலும் இயேசு என்று அழைக்கப்படுவார், ஒரு வெண்மையான மேகத்தின் மீது வந்து, இயேசுவின் சாயலில் மனுஷரிடையே இறங்குவார்: அது அவருடைய கிரியையை மறுபடியும் செய்வது போலில்லையா? பரிசுத்த ஆவியானவர் பழையதையே பற்றிக்கொண்டிருப்பவரா? மனுஷன் நம்புகிறதெல்லாம் கருத்துக்களை மட்டும்தான், மற்றும் மனுஷன் நேரடி அர்த்தத்திற்கு ஏற்பவும், அவனது கற்பனைக்கு ஏற்பவும்தான் அனைத்தையும் புரிந்துகொள்கிறான்; அவை பரிசுத்த ஆவியினுடைய கிரியையின் கொள்கைகளுடன் முரண்படுகின்றன, மேலும் தேவனின் நோக்கங்களுடனும் அவை ஒத்துப்போவதில்லை. தேவன் அவ்வாறு செயல்பட மாட்டார்; தேவன் அவ்வளவு முட்டாள்தனமானவரோ மதிகெட்டவரோ அல்ல, மேலும் அவருடைய கிரியை நீ கற்பனை செய்வது போல அவ்வளவு எளிதானதல்ல. மனுஷன் கற்பனை செய்யும் சகலத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து உங்களுக்கு மத்தியில் இறங்குவார். மேகத்தின் மீது வந்திறங்கிய அவரை நீங்கள் காண்பீர்கள், தாம் இயேசு என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். நீங்கள் அவருடைய கைகளில் உள்ள ஆணி அடிக்கப்பட்ட தழும்புகளைக் கண்டு, அவரை இயேசு என்று அறிந்து கொள்வீர்கள். அவர் உங்களை மீண்டும் இரட்சிப்பார், மேலும் அவர் உங்களது வலிமைமிக்க தேவனாக இருப்பார். அவர் உங்களை இரட்சிப்பார், உங்களுக்கு ஒரு புதிய நாமத்தைக் கொடுப்பார், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பார், அதன் பிறகு நீங்கள் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டு பரலோகத்தில் பெறப்படுவீர்கள். இத்தகைய நம்பிக்கைகள் மனுஷனின் கருத்துக்கள் அல்லவா? தேவன் மனுஷனின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படுகிறாரா, அல்லது மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறாரா? மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து பெறப்பட்டவை அல்லவா? மனுஷர் அனைவரும் சாத்தானால் சீர்கெட்டுப் போகவில்லையா? தேவன் தனது கிரியையை மனுஷனின் கருத்துக்களின்படி செய்திருந்தால், அவர் சாத்தானாக மாறியிருக்கமாட்டாரா? அவர் தனது சொந்த சிருஷ்டிப்புகளைப் போலவே இருந்திருக்க மாட்டாரா? அவருடைய சிருஷ்டிப்புகள் இப்போது சாத்தானால் மிகவும் சீர்கெட்டிருப்பதால், மனுஷன் சாத்தானின் உருவமாகிவிட்டான், தேவன் சாத்தானின் விஷயங்களின்படி செயல்படுவதாக இருந்தால், அவர் சாத்தானுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டாரா? தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? ஆகையால், தேவன் ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களின்படி செயல்படமாட்டார், மேலும் நீ கற்பனை செய்யும் வழிகளில் ஒருபோதும் செயல்பட மாட்டார். தேவன் ஒரு மேகத்தில் வருவார் என்று அவரே சொன்னதாகச் சொல்பவர்களும் உண்டு. தேவன் அவராகவே சொன்னார் என்பது உண்மைதான், ஆனால் தேவனின் மறைபொருட்களை எந்த மனுஷனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது உனக்குத் தெரியாதா? தேவனின் வார்த்தைகளை எந்த மனுஷனாலும் விளக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியானவரால் நீ ஞானமும் தெளிவும் பெற்றிருக்கிறாய் என்பதில் சந்தேக நிழலுக்கு அப்பாலும் நீ உறுதியாக இருக்கிறாயா? உனக்கு இதுபோன்ற நேரடியான முறையில் காட்டியவர் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று உன்னால் நிச்சயமாகக் கூறமுடியுமா? உனக்கு அறிவுறுத்தியது பரிசுத்த ஆவியானவரா, அல்லது உன் சொந்தக் கருத்துக்கள் உன்னை அவ்வாறு சிந்திக்க வழிவகுத்ததா? “இது தேவனால் கூறப்பட்டது,” என்று நீ சொன்னாய். ஆனால் தேவனின் வார்த்தைகளை அளவிட நம் சொந்த கருத்துகளையும் மனதையும் பயன்படுத்த முடியாது. ஏசாயா பேசிய வார்த்தைகளைப் பொறுத்தவரை, அவருடைய வார்த்தைகளை முழுமையான உறுதியுடன் உன்னால் விளக்க முடியுமா? அவருடைய வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? ஏசாயாவின் வார்த்தைகளை விளக்க உனக்கு துணிவில்லை என்பதால், இயேசுவின் வார்த்தைகளை விளக்க மட்டும் நீ ஏன் துணிகிறாய்? இயேசுவா அல்லது ஏசாயாவா, இவர்களில் மிகவும் உயர்ந்தவர் யார்? பதில் இயேசு என்பதால், இயேசு பேசிய வார்த்தைகளை நீ ஏன் விளக்குகிறாய்? தேவன் தனது கிரியையை முன்கூட்டியே உனக்குச் சொல்வாரா? ஒரு சிருஷ்டியால் கூட அறிய முடியாது, பரலோகத்திலுள்ள தூதர்களோ, மனுஷகுமாரனோ கூட அறிய முடியாது, எனவே உன்னால் மட்டும் எப்படி அறிந்து கொள்ளமுடியும்? மனுஷன் பலவற்றைக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு இப்போது முக்கியமானது என்னவென்றால், கிரியையின் மூன்று கட்டங்களை அறிந்து கொள்வதுதான். யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்தத் தற்போதைய கட்டம் வரை, என இந்த மூன்று கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியைதான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

முந்தைய: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)

அடுத்த: வேதாகமத்தைக் குறித்து (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக