அத்தியாயம் 5

மனுஷர்களுக்கு விளக்குவதற்குக் கடினமான கோரிக்கைகளை தேவன் வைக்கும் போது, அவருடைய வார்த்தைகள் மனுஷ இருதயத்தை நேரடியாகத் தாக்கும் போது, ஜனங்கள் தங்கள் நேர்மையான இருதயங்களை அவர் அனுபவிக்க காணிக்கையாக்கும் போது, தேவன் அவர்களுக்கு ஆழ்ந்து சிந்திக்கவும், ஒரு தீர்மானம் எடுக்கவும் நடப்பதற்கான ஒரு பாதையைத் தேடவும் வாய்ப்பளிக்கிறார். இவ்வாறே, அவருடைய ஜனங்களாகிய அனைவரும் மீண்டும் ஒருமுறை, உறுதியுடன் முஷ்டிகளை மடக்கிக்கொண்டு, தங்களை முழுமையாக தேவனுக்குக் காணிக்கையாக்குகிறார்கள். சிலர், ஒருவேளை, தேவனுடைய நிர்வாக திட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் பொருட்டு, மேலும் அதன் முடிவை நோக்கி விரைவுபடுத்துவதற்காக தங்கள் வலிமையை அர்ப்பணித்து, அவர்கள் கடினமாக உழைக்கத் தங்களைத் திரட்டிக் கொள்ள தயாராகி, ஒரு திட்டத்தை வரைவு செய்து, தினசரி அட்டவணையை உருவாக்கலாம். இந்த மனநிலையை ஜனங்கள் கொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்யும்போது, பேசும்போது, வேலை செய்யும் போது, இந்த விஷயங்களை மனதில் நெருக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, தேவன் மீண்டும் பேசத் தொடங்குகிறார்: “என் ஆவியின் குரல் என் மனநிலையின் முழு வெளிப்பாடாகும். உங்களுக்குப் புரிகிறதா?” மனுஷர்கள் எவ்வளவு அதிக உறுதியுடன் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றிக்கொள்ள மிகுந்த பதைப்புடன் ஏங்குவார்கள், மேலும் தேவன் தங்களிடம் கோரிக்கைகளை வைப்பதற்காக அதிக ஆர்வத்துடன் ஏங்குவார்கள். இந்தக் காரணத்திற்காக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட காலமாகத் தயாராக இருந்த அவரது வார்த்தைகளை, அவர்களுடைய ஜீவனின் உள்ளார்ந்த பகுதிகளுக்குள் தெரிவிப்பதற்கு, தேவன் ஜனங்களுக்கு அவர்கள் விரும்புவதைக் கொடுப்பார். இந்த வார்த்தைகள் சற்றுக் கடுமையாக அல்லது முரட்டுத்தனமாக தோன்றினாலும், மனுக்குலத்திற்கு அவை ஒப்பிட முடியாத அளவுக்கு இனிமையாக இருக்கும். திடீரென்று, அவர்கள் பரலோகத்தில் இருப்பதைப் போல அல்லது வேறொரு உலகிற்கு—வெளி உலக விவகாரங்கள் மனுகுலத்திற்கு இனி தடையாக இல்லாத கற்பனையின் உண்மையான சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைப் போல, அவர்களின் இருதயங்கள் மகிழ்ச்சியுடன் மலர்கின்றன. நேரிடக்கூடிய சம்பவத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகக், கடந்த காலத்தில் ஜனங்களிடம் இருந்த பழக்கத்தை போல, வெளியிலிருந்து பேசுகிறார்கள், வெளியிலிருந்து செயல்படுகிறார்கள், அதனால் சரியான வேர்களைப் பதிக்கத் தவறிவிடுகிறார்கள், மக்கள் தங்கள் இதயங்களில் விரும்பியதை அடைந்தவுடன் மேலும், அதற்கும் மேலாக, அவர்கள் உணர்ச்சிமிக்க உற்சாகத்துடன் வேலைக்கு செல்லத் தயாரானதும், தேவன் அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு பேசும் விதத்தை இன்னும் மாற்றியமைக்கிறார், மேலும் அவர்கள் இருதயங்களுக்குள் வைத்திருக்கும் அனைத்து ஆர்வ முனைப்பையும் மதச் சடங்கையும் சுருக்கமாக மற்றும் பின்வாங்காமல் மறுக்கிறார். தேவன் சொல்லியிருப்பது போல, “இதற்குள் அடங்கியுள்ள முக்கியத்துவத்தை நீங்கள் மெய்யாகவே பார்த்தீர்களா?” மனுஷர்கள் எதையாவது தீர்மானிப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, தேவனை அவருடைய செயல்களிலோ அல்லது வார்த்தைகளிலோ அறிந்து கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மாறாக, “தேவனுக்காக நான் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் முக்கியப் பிரச்சினை!” அதனால்தான் தேவன் கூறுகிறார். “என் முகத்திற்கு முன்பாகவே நீங்கள் உங்களை என் ஜனங்கள் என்று நீங்களே அழைத்துக் கொள்ளும் துணிவு உங்களிடம் உள்ளது—உங்களுக்கு வெட்கம் கிடையாது, அதற்கும் கீழாக, எந்த உணர்வும் கிடையாது!” தேவன் இந்த வார்த்தைகளைச் சொன்னவுடன், மின்சார அதிர்ச்சியைத் தாங்குவது போல, ஜனங்கள் உடனடியாக அவற்றை உணர்ந்துகொள்கிறார்கள், இரண்டாவது முறை தேவனுடைய கோபத்தைத் தூண்டிவிடுவோமோ என்று மிகுந்த அச்சத்தில், அவர்கள் தங்கள் மார்பினைப் பாதுகாக்கத் தங்கள் கைகளை விலக்கிக் கொள்கிறார்கள். இதோடுகூட, தேவன் மேலும் கூறியுள்ளார், “விரைவில் அல்லது அப்பால், உங்களைப் போன்றவர்கள் எனது வீட்டிலிருந்து புறம்பே தள்ளப்படுவார்கள்! நீங்கள் எனக்கு சாட்சியமாக இருந்தீர்கள் என்பதைக் கருதிக் கொண்டு பழைய போர்ச்சேவகராக என்னுடன் வர வேண்டாம்!” இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டால், ஜனங்கள் ஒரு சிங்கத்தைப் பார்த்தது போல் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் இருதயங்களை நன்கு அறிவார்கள். சிங்கம் அவர்களைச் சாப்பிடுவதை அவர்கள் விரும்பவில்லை, மறுபுறம், எப்படித் தப்பிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தில், மனுஷ இருதயத்தில் உள்ள திட்டம் ஒரு தடயமும் இல்லாமல் முற்றிலும் மற்றும் துப்புரவாக மறைந்துவிடுகிறது. தேவனுடைய வார்த்தைகள் மூலம், மனுகுலத்தின் வெட்கக்கேட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் என்னால் பார்க்க முடிவது போல உணர்கிறேன்: கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைப் போல, குற்றமிழைத்தவர் நடந்துகொள்வதுபோல தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள், உயர்ந்த இலட்சியங்கள், மகிழ்ச்சியான குடும்பம், பிரகாசமான எதிர்காலம் போன்ற இன்னும் பலவற்றையும் சொல்லலாம், அத்துடன் 2,000 ஆம் ஆண்டளவில் நான்கு நவீனமயமாக்கல்கள், இவை அனைத்தும் வெறும் வெற்றுப் பேச்சுகளாக மாறி, அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் வரும் ஒரு கற்பனைக் காட்சியை உருவாக்கியுள்ளன. இது செயல்படும் கூறுகளுக்குச் செயலற்றவற்றைப் பரிமாறிக்கொள்வதாகும், இதனால் ஜனங்களைத் தங்கள் செயலற்ற தன்மைக்கு மத்தியில், தேவன் அவர்களுக்கு ஒதுக்கிய நிலையில் நிற்கச் செய்துள்ளார்கள். விதிவிலக்கான முக்கியமான உண்மை என்னவென்றால், இந்த முறையீட்டை இழந்துவிடுவதற்கு மனுஷர்கள் மிகவும் பயப்படுகிறார்கள்; எனவே, அவர்கள் தங்கள் சொந்த அலுவலகப் பதவிகளில் தங்கள் நேசத்துக்குரிய வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள், யாரேனும் தங்களை அபகரிக்க முயற்சிப்பார்கள் என்று மிகவும் பயப்படுகிறார்கள். மனுகுலம் இந்த மனநிலையில் இருக்கும்போது, ஜனங்கள் செயலற்றவர்களாகிவிடுவார்கள் என்று தேவன் கவலைப்படுவதில்லை, எனவே அவர் தமது நியாயத்தீர்ப்பு வார்த்தைகளை விசாரணை வார்த்தைகளாக மாற்றுகிறார். அவர் ஜனங்களுக்கு மூச்சு விடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு முன்பு இருந்த அபிலாஷைகளை எடுத்து எதிர்காலக் குறிப்புக்காக அவற்றை வரிசைப்படுத்தவும் அவர் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்: பொருத்தமில்லாத எதனையும் மாற்றலாம். இது ஏனென்றால், தேவன் இன்னும் தமது கிரியையைத் தொடங்கவில்லை—இது பெரும் துரதிர்ஷ்டத்திற்கு மத்தியில் இது ஒரு நல்ல அதிர்ஷ்டம்—மேலும், இது அவர்களைக் கண்டிக்கவில்லை. எனவே, நான் தொடர்ந்து முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்!

அடுத்து, உனது பயத்தின் காரணமாக நீ தேவனுடைய வார்த்தைகளை ஒதுக்கி வைக்கக்கூடாது. தேவன் ஏதேனும் புதிய கோரிக்கைகள் வைத்திருக்கிறாரா என்று ஒரு பார்வை பாருங்கள். நிச்சயமாக, நீ இது போன்ற ஒன்றைக் கண்டுபிடிப்பாய்: “இந்த நேரத்திலிருந்து, எல்லா விஷயங்களிலும், நீ நடைமுறையின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்; கடந்த காலங்களில் நீ செய்ததைப் போல, வீணான பேச்சு மட்டும் பேசுவது இனிமேல் உன்னைப் பாதுகாக்காது.” இங்கே இன்னும் தேவனுடைய ஞானம் வெளிப்படுகிறது. தேவன் எப்பொழுதும் தமது சொந்தச் சாட்சிகளைப் பாதுகாத்து வருகிறார், கடந்த கால வார்த்தைகளின் உண்மை அதன் முடிவை எட்டும்போது, யாராலும், அது யாராக இருந்தாலும் “நடைமுறையின் யதார்த்தம்” அறிவின் ஆழத்தை அளவிட முடியாது. தேவன் சொன்ன சத்தியத்தை நிரூபிக்க இது போதுமானது: “கிரியையை நானே செய்ய ஒப்புக்கொள்கிறேன்.” தெய்வீகத்தன்மையில் கிரியை செய்தல் என்பதன் உண்மையான அர்த்தத்துடன் இது தொடர்புடையது, மேலும் ஒரு காரணம் என்னவென்றால், மனுக்குலம், ஒரு புதிய தொடக்கப் புள்ளியை அடைந்த போதிலும், தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை இன்னும் அறிய இயலவில்லை. இது ஏனென்றால், கடந்த காலத்தில், பெரும்பான்மையான ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள யதார்த்தத்துடன் தொடர்ந்து இருந்து வந்தனர், ஆனால் இன்று நடைமுறையின் யதார்த்தத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தத் தடயமும் இல்லை, அவர்கள் இந்த வார்த்தைகளின் மேலோட்டமான அம்சங்களை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அவற்றின் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதில்லை. அதைவிட முக்கியமாக, இன்று அதன் காரணம் என்னவென்றால், ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதில், யாரும் தலையிட அனுமதிக்கப்படவில்லை, ஆனால் தானியங்கி இயந்திரங்கள் போல தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது மட்டுமே அவர்கள் செய்யக் கூடியதாகும். இதை நன்றாக நினைவில் வையுங்கள்! தேவன் கடந்த காலத்தை நினைவுகூரும் ஒவ்வொரு முறையும், இன்றைய உண்மையான சூழ்நிலையைப் பற்றி அவர் பேசத் தொடங்குகிறார்; இது முன்னால் வருவது எது, பின்னால் வருவது எது என்பதற்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்குகின்ற ஒரு பேச்சு வடிவமாகும், மேலும் இந்தக் காரணத்திற்காக இன்னும் சிறந்த பலன்களை அடைய முடியும், ஜனங்கள் கடந்த காலத்துடன் நிகழ்காலத்தைப் பொருத்தி பார்க்க இது உதவுகிறது, மேலும் இந்த வழியில் இரண்டையும் குழப்புவதைத் தவிர்க்கிறது. இது தேவனுடைய ஞானத்தின் ஓர் அம்சமாகும், மேலும் அதன் நோக்கம் கிரியையின் பலனை அடைவதாகும். இதற்குப் பிறகு, மனுஷர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை புசித்துப் பானம்பண்ண மறக்கக் கூடாது என்பதற்காக, மேலும் முக்கியமாக, அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவேண்டும், இதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் மீண்டும் ஒருமுறை மனுக்குலத்தின் அசிங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்த வார்த்தைகளைப் பேசிய பிறகு, தேவன் தமது அசல் நோக்கமாக இருந்த விளைவுகளை அடையப் பெற்றார். எனவே, மனுக்குலம் அவரைப் புரிந்துகொண்டதா இல்லையா என்பதில் கூடுதல் கவனம் செலுத்தாமல், அவர் இதை ஒரு சில வாக்கியங்களில் கடந்து செல்கிறார், ஏனென்றால் சாத்தானின் வேலைக்கு மனுகுலத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை—இதைப்பற்றி மனுகுலத்திடம் எந்தத் தடயமும் இல்லை. இப்போது, ஆவிக்குரிய உலகத்தை விட்டுவிட்டு, தேவன் எவ்வாறு மனுக்குலத்திடம் கோரிக்கைகளை முன்வைக்கிறார் என்பதை மேலும் பார்க்கவும்: “என் வாசஸ்தலத்தில் இருந்துகொண்டு, நான் உன்னிப்பாகக் கவனிக்கிறேன்: பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் ‘உலகைச் சுற்றிலும் பயணம்’ செய்வது பற்றிப் பரபரப்பாக இருக்கிறார்கள், முன்னும் பின்னுமாக விரைந்து செல்கிறார்கள், இவை அனைத்துமே அவர்களின் விதி மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான். என் ராஜ்யத்தைக் கட்டியெழுப்பத் தனது சக்தியைக் கொடுக்க முடிந்தாலும்கூட, மூச்சு விடும் அளவுக்கான சிரமம் மேற்கொள்ளவும்கூட ஒருவர் இல்லை.” பிறகு மனுஷர்களுடன் சந்தோஷமான விஷயங்களைப் பரிமாறிக்கொண்டபின், தேவன் இன்னும் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை, ஆனால் ஆவியானவரின் கண்ணோட்டத்தில் தொடர்ந்து பேசுகிறார், மேலும் இந்த வார்த்தைகள் மூலம், மனுக்குலத்தின் வாழ்க்கையின் பொதுவான சூழ்நிலைகளை முழுமையாக வெளிப்படுத்துகிறார். “உலகைச் சுற்றிலும் பயணம்” மற்றும் “முன்னும் பின்னுமாக விரைந்து செல்தல்,” மூலமாகப் பார்க்கும்போது மனுஷ வாழ்க்கை முற்றிலும் உள்ளடக்கம் இல்லாதது என்பது பார்க்கத் தெளிவாக உள்ளது. தேவனுடைய சர்வவல்லமையுள்ள இரட்சிப்பு இல்லாவிட்டால், குறிப்பாகச் சீனாவின் ஏகாதிபத்திய வம்சாவளியின் வீழ்ச்சியடைந்த, பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள், ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் வீணாக வாழ சாத்தியமுள்ளது, மேலும் அவர்கள் உலகிற்கு வருவதை விடப் பாதாளம் அல்லது நரகத்தில் விழுவது நல்லது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஆதிக்கத்தின் கீழ், அவர்கள் தங்களை அறியாமல், தேவனைப் புண்படுத்தினர், எனவே இயல்பாகவும் அறியாமலும் தேவனுடைய சிட்சைக்கு உள்ளானார்கள். இந்தக் காரணத்திற்காக, தேவன் “மீட்டிருக்கிறார்” மற்றும் “நன்றிகெட்டவர்கள்” இவர்களை எடுத்துக்கொண்டு மனுஷர்கள் தங்களை இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்காக அவர்களை ஒருவருக்கொருவர் முரணாக வைக்கிறார், இதிலிருந்து அவருடைய இரட்சிக்கும் கிருபைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலத்தை உருவாக்குகிறார். இது இன்னும் கூடுதலான திறம்பட்ட பலனைத் தரவில்லையா? நிச்சயமாக, தேவனுடைய கூற்றுகளின் உள்ளடக்கத்திலிருந்து, ஜனங்கள் பழிவாங்கும் ஒரு கூறு, இரட்சிப்பு மற்றும் முறையீட்டின் ஒரு கூறு மற்றும் சோகத்தின் ஒரு சிறிய தகவலை ஊகிக்க முடியும் என்பதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்த வார்த்தைகளைப் படித்து, ஜனங்கள் தங்களை அறியாமலேயே மன உளைச்சலை உணரத் தொடங்குகிறார்கள், மற்றும் அவர்களால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை… இருப்பினும், தேவன் ஒரு சில துக்க உணர்வுகளால் கட்டுப்படுத்தப்பட மாட்டார், அல்லது முழு மனுக்குலத்தின் சீர்கேடு காரணமாக, அவர் தமது ஜனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அவர்களிடம் கோரிக்கைகளை வைப்பதற்கும் தமது கிரியையைக் கைவிட மாட்டார். இதன் காரணமாக, அவரது தலைப்புகள் இன்று இருப்பது போன்ற சூழ்நிலைகளை நேரடியாகத் தொடுகின்றன, மேலும், அவர் தமது நிர்வாக ஆணைகளின் மகத்துவத்தை மனுக்குலத்திற்கு அறிவிக்கிறார், இதனால் அவரது திட்டம் தொடர்ந்து முன்னேறும். அதனால்தான், இதனைத் தொடர்ந்து, இரும்பு சூடாக இருக்கும்போது, எல்லா வேகத்துடனும், அடிப்பதுடன், தேவன் இந்த இக்கட்டான தருணத்தில் ஓர் அரசியலமைப்பை வெளியிடுகிறார்—தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பு ஒவ்வொரு உட்பிரிவையும் கவனமாகக் கவனித்து, மனுஷர்கள் படிக்க வேண்டிய அரசியலமைப்பு. இப்போதைக்கு இதற்கு மேல் செல்ல வேண்டிய அவசியமில்லை; எளிதாக, ஜனங்கள் மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும்.

இன்று, இங்குள்ள இந்த ஜனக்கூட்டமாகிய உங்களால் மட்டுமே தேவனுடைய வார்த்தைகளை உண்மையிலேயே பார்க்க முடியும். அப்படியிருந்தும், தேவனை அறிவதில், இன்றைய ஜனங்கள் கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு நபரையும் விட மிகவும் பின்தங்கியுள்ளனர். இந்தப் பல ஆயிரம் ஆண்டுகளில் சாத்தான் ஜனங்களை எவ்வளவு ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும், அது மனுஷகுலத்தை எந்தளவுக்குச் சீர்கெடுத்திருக்கிறது என்பதையும் இது போதுமான அளவு தெளிவுபடுத்துகிறது—தேவன் மிகப் பெருமளவில் எத்தனையோ வார்த்தைகள் பேசினாலும், மனுக்குலம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவரை அறியவும் இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக எழுந்து அவரை பகிரங்கமாக எதிர்க்க துணிகிறது. எனவே, தேவன் பெரும்பாலும் கடந்த கால ஜனங்களை இன்றைய ஜனங்களுடன் ஒப்பிடுகிறார், பிந்தியவர்கள், உணர்ச்சியற்றவர்களாகவும் மழுங்கியவர்களாளவும் இருப்பதால் அவர்களுக்கு யதார்த்தமான குறிப்புரைகளைத் தருகிறார். மனுஷர்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு இல்லாததாலும், அவர் மீது உண்மையான விசுவாசம் இல்லாததாலும், தேவன் மனுக்குலத்தைத் தகுதிகள் மற்றும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று மதிப்பிட்டார்; ஆகவே, அவர் மீண்டும் மீண்டும் ஜனங்களுக்குச் சகிப்புத்தன்மையைக் காட்டி அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்துள்ளார். இந்த வழிகளில் ஆவிக்குரிய உலகத்தில் ஒரு போர் நடைபெறுகிறது: மனுக்குலத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சீர்கெடுத்து, உலகத்தை அசுத்தமாகவும் தீயதாகவும் ஆக்கி, அதனுடன் சேர்த்து ஜனங்களைச் சேற்றில் இழுத்து, தேவனுடைய திட்டத்தை அழிப்பது சாத்தானின் வீண் நம்பிக்கை ஆகும். இருப்பினும், தேவனுடைய திட்டம், மனுக்குலம் முழுவதையும் அவரை அறிந்த ஜனங்களாக மாற்றுவது அல்ல, மாறாக ஒட்டுமொத்தமான அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும். ஒரு பகுதியைத் தேர்ந்தெடுப்பதும், மீதமுள்ளவர்களைக் குப்பைக் குவியல் மீது வீசப்பட வேண்டிய கழிவுப் பொருட்களாக, குறைபாடுள்ள பொருட்களாக விட்டுவிடுவதும் ஆகும். எனவே, சாத்தானின் பார்வையில் ஒரு சில நபர்களை ஆட்கொள்வது தேவனுடைய திட்டத்தை அழிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகத் தோன்றினாலும், தேவனுடைய நோக்கத்தைப் பற்றி சாத்தான் போன்ற ஓர் எளிய நபருக்கு என்ன தெரியும்? “இந்த உலகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நான் என் முகத்தை மூடிக்கொண்டேன்” என்று நீண்ட காலத்திற்கு முன்பே தேவன் சொன்னதற்கு இதுவே காரணம். இதைப் பற்றி நாம் கொஞ்சம் அறிந்திருக்கிறோம், மேலும் மனுஷர்கள் எதையும் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் கேட்கவில்லை; மாறாக, அவர் செய்வது அதிசயமானது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது என்பதை அவர்கள் உணர்ந்து, தங்கள் இருதயங்களில் அவரை மரியாதையுடன் வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மனுஷர்கள் கற்பனை செய்வது போல், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் தேவன் அவர்களைத் தண்டிப்பாரானால், முழு உலகமும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிந்திருக்கும். இது சாத்தானின் வலையில் விழுவதற்குச் சமமாக இருந்திருக்கும் அல்லவா? எனவே, தேவன் அவர் மனதில் இருக்கும் பலன்களை அடைய அவரது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், ஆனால் உண்மைகள் வருவது அரிதாகவே உள்ளது. இது அவருடைய வார்த்தைகளுக்கு ஓர் உதாரணம் இல்லையா, “உங்களுக்குத் தகுதிகள், காரணம் மற்றும் நுண்ணறிவு இல்லாததற்கு நான் பரிதாபப்படாவிட்டால், நீங்கள் அனைவரும் என் சிட்சைக்கு இடையில் அழிந்து போவீர்கள், உயிர்வாழ்வதில் இருந்து துடைத்தெடுக்கப் படுவீர்கள். ஆயினும்கூட, பூமியில் எனது கிரியை முடியும் வரை, நான் மனிதகுலத்திடம் இரக்கத்தோடே இருப்பேன்?”

முந்தைய: அத்தியாயம் 4

அடுத்த: அத்தியாயம் 6

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக