அத்தியாயம் 62

என் சித்தத்தைப் புரிந்து கொள்வது என்பது வெறுமனே நீ அதை அறிந்து கொள்வதற்காக அல்ல. ஆனால் நீ என் நோக்கங்களின்படி செயல்பட வேண்டும் என்பதற்காகும். ஜனங்கள் வெறுமனே என் இருதயத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரு திசை கிழக்கு என்று நான் கூறும்போது, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் வேண்டுமென்றே: “அது உண்மையில் கிழக்கு தானா? ஒருவேளை அது அவ்வாறு இல்லாமல் இருக்கலாம். என்னால் அதை விசுவாசிக்க முடியாது. நானே அதைத் தேட வேண்டும்” என்று யோசிக்கிறார்கள். நீங்கள் எந்த அளவிற்குக் கையாளக் கடினமாக இருக்கிறீர்கள் என்பதற்கு இதுவே அளவீடாகும். உண்மையான சமர்ப்பணம் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. எனது நோக்கங்களை நீங்கள் அறிந்திருக்கும் போது, நீங்கள் அவற்றைச் செயல்படுத்துவது குறித்து மட்டுமே கவலைப்படுங்கள்—சிந்திக்க வேண்டாம்! நான் சொல்வதை நீ எப்போதும் தவறாகவே எடுத்துக் கொள்கிறாய். அதை ஏற்றுக் கொள்வதற்கான அபத்தமான வழி உன்னிடம் உள்ளது. அது எவ்வாறு உண்மையான நுண்ணறிவை அளிக்கும்? நீங்கள் ஒருபோதும் என் வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க மாட்டீர்கள். நான் முன்பு கூறியது போலவே, ஜனங்களுடைய எண்ணிக்கையில் உள்ள சிறப்பைக் காட்டிலும், அவர்களிடம் உள்ள சிறப்பையே நான் விரும்புகிறேன். என் வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க கவனம் செலுத்தாத ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் நல்ல யுத்த வீரராக இருக்க தகுதியற்றவர் ஆவர். அதற்குப் பதிலாக, அவர்கள் சாத்தானுடைய ஊழியர்களாக செயல்படுகிறார்கள். என் கிரியைக்கு இடையூறு செய்கிறார்கள். இதை ஒரு சிறிய விஷயம் என்று நினைக்க வேண்டாம். எனது கிரியைக்கு இடையூறு செய்யும் ஒவ்வொருவரும் எனது ஆளுகையின் பிரமாணங்களை மீறுகிறார்கள். அத்தகையவர்களை நான் கடுமையாகச் சிட்சிப்பேன் என்பது உறுதியானதாகும். இதன் அர்த்தம் என்னவென்றால், இனி, நீ ஒரு கணப்பொழுது என்னைவிட்டு விலகினால், உன் மீது நியாயத்தீர்ப்பு வரும். நீ என் வார்த்தைகளை நம்பவில்லை என்றால், என் முகத்தின் வெளிச்சத்தில் ஜீவிப்பதன் நிலை என்னவென்பதையும், என்னை விட்டு விலகுவதன் நிலை என்னவென்பதையும் நீயே பார்த்துக்கொள்.

நீ ஆவிக்குரியவனாக ஜீவிக்கவில்லை என்றால் உன்னைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தற்போதைய நிலைக்கு எனது கிரியை முன்னேறியுள்ளது, இந்நிலையில் நீ என்ன செய்ய முடியும்? கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நான் செய்யும் எல்லாவற்றிற்கும் அதற்கான படிகள் உள்ளன. என்னுடைய கிரியையை நானே செய்வேன். நான் செயல்பட்டவுடன், அனைவரும் முற்றிலுமாக நம்புவார்கள். அவர்கள் நம்பவில்லையென்றால், நான் அவர்களை இரு மடங்கு தீவிரத்தோடு சிட்சிப்பேன். இது எனது ஆளுகையின் பிரமாணங்களைக் குறிக்கிறது. ஆளுகையின் பிரமாணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் தொடங்கப்பட்டுவிட்டன. இனியும் அவை மறைவாக இருக்காது. இதை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும்! இப்போது, அனைத்தும் எனது ஆளுகையின் பிரமாணங்களைக் குறிக்கிறது. அவற்றை மீறுபவர் இழப்பைச் சந்திக்க வேண்டும். இது சிறிய விஷயமல்ல. இதைப் பற்றி உங்களுக்கு உண்மையிலேயே சில நுண்ணறிவு இருக்கிறதா? இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கிறீர்களா? நான் கலந்துரையாடத் தொடங்குகிறேன்: எல்லா நாடுகளும், உலக ஜனங்களும் என் கரங்களில் ஆளுகை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய மதத்தைப் பொருட்படுத்தாமல், அவர்கள் மீண்டும் என் சிங்காசனத்திற்கு வர வேண்டும். நிச்சயமாக, சிலர் நியாயந்தீர்க்கப்பட்ட பின்னர், பாதாளத்திற்குள் தள்ளப்படுவார்கள் (அழிவின் பொருட்களாக முற்றிலும் எரிக்கப்படுவார்கள். இனி இருக்க மாட்டார்கள்), சிலர் நியாயந்தீர்க்கப்பட்ட பின்னர், என் நாமத்தை ஏற்றுக்கொண்டு என் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறுவார்கள் (அவற்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமாக அனுபவிபார்கள்). எவ்வாறாயினும், நித்திய காலமாக நீங்கள் என்னுடன் ராஜ்யபாரத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் முன்பு எனக்காக துன்பப்பட்டதால், உங்கள் துன்பங்களை உங்களுக்கு முடிவில்லாத ஆசீர்வாதங்களாக நான் மாற்றுவேன். என் ஜனங்ளாக இருப்பவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வார்கள். இங்கே இன்பம் என்று அழைக்கப்படுவது இன்பம் மட்டுமல்லாமல், அந்த ஜனங்கள் பேரழிவுகளின் பாதிப்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது. உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் இப்போது மிகவும் கண்டிப்பாக இருப்பதற்கும், இப்போது அனைத்தும் எனது ஆளுகையின் பிரமாணங்களைக் குறிப்பிடுவதற்கான உள்ளார்ந்த அர்த்தம் இதுதான். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் எனது வழிமுறையை ஏற்கவில்லை என்றால், நீங்கள் சுதந்தரமாகக் கொண்டிருப்பதை உங்களுக்குத் தர எனக்கு வழி இல்லாமல் போகும் என்பதேயாகும். அப்படியிருந்தும், நீங்கள் இன்னும் துன்பத்துக்கு அஞ்சுகிறீர்கள். உங்கள் ஆத்துமாக்கள் காயமடையும் என்று பயப்படுகிறீர்கள். எப்போதும் மாம்சத்தைப் பற்றி யோசித்து, தொடர்ந்து உங்களுக்காக ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்கிறீர்கள். உங்களுக்கான எனது ஏற்பாடுகள் உங்களுக்கு பொருத்தமற்றவையா? அப்படியானால், எதற்கு நீயே தொடர்ந்து ஏற்பாடு செய்கிறாய்? நீ என்னை இழிவுபடுத்துகிறாய்! அது அப்படியல்லவா? நான் உனக்காகச் சிலவற்றை ஏற்பாடு செய்கிறேன். பின்னர் நீ அதை முற்றிலுமாக நிராகரித்து உன் சொந்த திட்டங்களை உருவாக்குகிறாய்.

நீங்கள் சிறப்பாகப் பேசலாம், ஆனால் உண்மையில், நீங்கள் என் சித்தத்தைக் கவனிக்கவில்லை. நான் சொல்வதைக் கேளுங்கள்! என்னுடைய சித்தத்தின் மீது உண்மையான அக்கறை காட்டும் திறன் கொண்ட ஒருவர் உங்களுக்குள் இருப்பதாக நான் நிச்சயமாக சொல்ல மாட்டேன். உன் செயல்கள் என் சித்தத்திற்கு இணங்கக் கூடும் என்றாலும், நான் நிச்சயமாக உன்னைப் புகழ மாட்டேன். அது எனது இரட்சிப்பின் முறையாகும். அப்படியிருந்தும், நீங்கள் இன்னும் சில சமயங்களில் பதற்றம் இன்றி இருக்கிறீர்கள். மற்ற அனைவரையும் அவமதிக்கும் போது உங்களைப் பெரிதாக நினைத்துக் கொள்கிறீர்கள். இது மனிதனுடைய சீர்கேடான மனநிலையின் ஒரு அம்சமாகும். நான் கூறும் இந்த விஷயத்தை நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்வது ஒரு மேலோட்டமானதாகும். உண்மையிலேயே மாறுவதற்கு, நீங்கள் என்னிடம் நெருங்கி வர வேண்டும். என்னுடன் கலந்துரையாடு, நான் உனக்குக் கிருபையைத் தருவேன். சிலர் சும்மா உட்கார்ந்து மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்ய விரும்புகிறார்கள், ஆடை அணிவதற்கு தங்கள் கரங்களை மட்டுமே நீட்ட வேண்டும், புசிப்பதற்கு தங்கள் வாய்களை மட்டுமே திறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதனால் தங்கள் ஆகாரத்தை மற்றவர்கள் மென்று, அவர்கள் அதை விழுங்குவதற்கு முன் தங்கள் வாய்களில் வைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். அத்தகையவர்கள் மிகப் பெரிய முட்டாள்கள். மற்றவர்களால் மெல்லப்பட்டதைப் புசிக்க விரும்புகிறார்கள். அது மனிதனுடைய உச்சகட்ட சோம்பல் அம்சத்தின் வெளிப்பாடாகும். என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதால், நீங்கள் இனி அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. உங்கள் கவனத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் மட்டுமே நீங்கள் சரியாகச் செய்ய முடியும். அப்போது தான் நீங்கள் என் சித்தத்தை நிறைவேற்றுவீர்கள். இத்தகைய சமர்ப்பணம் மற்றும் கீழ்ப்படிதலே சிறப்பானதாகும்.

முந்தைய: அத்தியாயம் 61

அடுத்த: அத்தியாயம் 63

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக