அத்தியாயம் 46

இந்த எல்லா வார்த்தைகளுக்கு மத்தியிலும், இன்றைய வார்த்தைகளை விட மிகவும் மறக்க முடியாதவைகள் எதுவும் இல்லை. தேவனுடைய வார்த்தைகள் முன்பு மனுஷனுடைய நிலைகள் அல்லது பரலோகத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தின, ஆனால் இந்தத் தற்போதைய வார்த்தை கடந்த காலத்தைப் போல் இல்லை. இது பரியாசம் பண்ணுவதோ கேலி செய்வதோ இல்லை, மாறாக, முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது: தேவன் உட்கார்ந்து அமைதியாக ஜனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் என்ன? “இன்று, நான் பிரபஞ்சங்களுக்கு மேல் புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன். நான் பூமியிலுள்ள ஜனங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளேன், மேலும் அவர்கள் அனைவரையும் என் வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜனங்கள் எப்பொழுதும் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதால், நான் அவர்களுக்குச் சுய விழிப்புணர்வோடு இருக்கவும், எப்போதும் என் கிரியையைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவும் அறிவுறுத்துகிறேன்.” என்று சொல்லும்போது நீ எதைப் பார்க்கிறாய்? தேவன் பேசுகிற இந்தப் “புதிய தொடக்கத்தைக்” என்ன? தேவன் முன்பு ஜனங்களை வெளியேற அறிவுறுத்தியிருந்தார், ஆனால் அப்பொழுது, தேவனுடைய நோக்கம் அவர்களின் விசுவாசத்தை சோதிப்பதாக இருந்தது. ஆகவே இன்று, அவர் வித்தியாசமான தொனியில் பேசும்போது, அவர் உண்மையானவரா அல்லது பொய்யானவரா? முன்பு, தேவன் சொன்ன உபத்திரவங்களை ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. ஊழியம் செய்பவர்களின் கிரியையின் கட்டத்தின் மூலம் மட்டும்தான் அவர்களின் கண்கள் பார்த்தன, மேலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தேவனுடைய சோதனைகளை அனுபவித்தனர். ஆகவே பேதுருவின் நூற்றுக்கணக்கான சோதனைகளின் உதாரணத்தின் காரணமாக, அந்தக் காலத்திலிருந்தே, ஜனங்கள் அடிக்கடி, “இது தேவனுடைய சோதனை” என்று நம்பி தவறாகப் புரிந்துகொண்டனர். மேலும், தேவனுடைய வார்த்தைகளில் உண்மைகள் அரிதாகவே வெளிவந்தன. எனவே, ஜனங்கள் தேவனுடைய சோதனைகள் குறித்த குருட்டு நம்பிக்கைகளில் இன்னும் ஆழமாக மூழ்கிவிட்டார்கள், அதனால் தேவனால் பேசப்படும் எல்லா வார்த்தைகளிலும், இது தேவனால் மேற்கொள்ளப்பட்ட செயல்களின் உண்மைகள் என்று அவர்கள் ஒருபோதும் நம்பவில்லை; அதற்குப் பதிலாக, தேவன், செய்வதற்கென்று வேறு எதுவும் இல்லாமல், குறிப்பாக, ஜனங்களைச் சோதிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் நம்பினர். நம்பிக்கையற்ற மற்றும் நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றிய இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் தான், ஜனங்கள் பின்தொடர்ந்தனர், அப்படியே, “எஞ்சியிருக்கும் அனைவரும் துரதிர்ஷ்டத்தையும் குறைந்த அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது” என்று தேவன் சொன்ன பிறகுதான், ஜனங்கள் பின்பற்றுவதில் இன்னும் தங்கள் கவனத்தை செலுத்தினர், எனவே, விட்டு விலகும் எண்ணத்தைப் பெற்றிருந்ததில்லை. இத்தகைய மாயைகளுக்கு மத்தியில் ஜனங்கள் பின்பற்றினர், அவர்களில் ஒருவர் கூட எந்த நம்பிக்கையும் இல்லை என்று உறுதியாக நம்பத் துணியவில்லை—இது தேவனுடைய வெற்றிக்கான ஆதாரத்தின் ஒரு பகுதியாகும். தேவனுடைய பார்வையானது, அவருக்கு ஊழியம் செய்ய அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டுக் கையாளுகிறார் என்பதைக் காட்டுகிறது. ஜனங்களின் மாயைகள், நேரத்தையோ இடத்தையோ பொருட்படுத்தாமல், தேவனை விட்டு விலக வேண்டாம் என்று அவர்களை ஊக்குவிக்கின்றன, எனவே இந்தக் கட்டத்தின் போது தேவன் தமக்கான சாட்சியைப் பகரச் செய்ய ஜனங்களின் பரிபூரணப்படாத நோக்கங்களைப் பயன்படுத்துகிறார், இது, “நான் ஜனங்களில் ஒரு பகுதியினரை ஆதாயப்படுத்தியிருக்கிறேன்” என்று தேவன் கூறும்போது, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சாத்தான் மனுஷனின் உந்துதல்களைத் தடைகளை ஏற்படுத்தப் பயன்படுத்துகிறான், அதேசமயம் தேவன் மனுஷனின் உந்துதல்களை, அவனை ஊழியம் செய்ய வைக்கப் பயன்படுத்துகிறார்—“ஜனங்கள் வளைந்து நெளிந்து உள்ளே நுழைந்துவிடலாம் என்று கற்பனை பண்ணி, அவர்களின் தவறான நுழைவுச் சீட்டுகளை என்னிடம் ஒப்படைக்கும்போது, நான் அவர்களை அதே இடத்திலேயே அக்கினிக் குழிக்குள் தள்ளிவிடுகிறேன், மேலும் ஜுவாலைகளில் தங்களது சொந்தக் ‘கடினமான முயற்சிகளைப்’ பார்த்து, அவர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்.” இதுதான் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தமாகும். தேவன் அவர்களை ஊழியம் செய்ய வைக்க எல்லா விஷயங்களையும் திட்டமிடுகிறார், அதனால் அவர் மனுஷனின் பல்வேறு கருத்துக்களைப் புறக்கணிப்பதில்லை, ஆனால் ஜனங்களிடம் வெளியேறும்படி தைரியமாகக் கூறுகிறார்; இதுவே தேவனுடைய கிரியைகளின் அற்புதம் மற்றும் ஞானமாய் இருக்கிறது—நேர்மையான வார்த்தைகளையும் முறையையும் ஒன்றாக இணைத்து, ஜனங்கள் மதி மயங்கும்படியும் திசைதிரும்பும்படியும் விட்டுவிடுகிறார். இதிலிருந்து, தேவன் உண்மையில் ஜனங்களைத் தம் வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்கிறார் என்பதையும், இது ஒருவித சோதனையல்ல என்பதையும், “இன்னும் நான் ஜனங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறத் தவறும்போது, யாரும் என்னைப் பற்றிக் குறைகூற இயலாது” என்று சொல்ல தேவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதையும் காண முடிகிறது. தேவனுடைய வார்த்தைகள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது, இருப்பினும் தேவன், ஜனங்களை நிலைப்படுத்தவும், அவர்கள் வெளியேறும் விருப்பத்தை அகற்றவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு, ஒரு நாள் அவர்கள் சபிக்கப்பட்டால், “கேட்க விரும்பத்தகாத வார்த்தைகள் நல்லவைகள்” என்று ஜனங்கள் சொல்வது போல், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளால் முன்னறிவிக்கப்பட்டிருப்பார்கள். இன்று, தேவன் மீதான ஜனங்களின் அன்பு ஊக்கமானதும் உண்மையானதுமாய் இருக்கிறது, எனவே, உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்று அவர்களால் சொல்ல முடியாத வார்த்தைகளால், அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டு தேவனை நேசிக்க ஆரம்பித்தார்கள், அதனால்தான் தேவன் “நான் ஏற்கனவே எனது மகத்தான கிரியையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்று கூறினார். “அவர்கள் உயிர்வாழ்வதற்கான தங்கள் சொந்தப் பாதையைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதில் நான் வல்லமையில்லாதவராய் இருக்கிறேன்” என்று தேவன் சொல்லும் போது, இந்த வார்த்தைகளை எல்லாம் தேவன் உச்சரித்ததன் யதார்த்தம் இதுதான்—ஆனாலும் ஜனங்கள் அவ்வாறு நினைப்பதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் சிறிதும் கவனம் செலுத்தாமல் எப்போதும் பின்பற்றியிருக்கிறார்கள். அதைப்போலவே, “எதிர்காலத்தில், இனி ஒருபோதும் எங்களுக்கு இடையே வார்த்தைகள் இருக்காது, இனிப் பேசுவதற்கு எதையும் நாங்கள் பெற்றிருப்பதில்லை, நாங்கள் ஒருவருக்கொருவர் தலையிட மாட்டோம், நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் செல்வோம்” என்று தேவன் சொல்லும் போது, இந்த வார்த்தைகள் உண்மையானவையாகவும் மற்றும் சிறிதளவும் கறைபடாதவையாகவும் இருக்கின்றன. ஜனங்கள் என்னவெல்லாம் நினைக்கிறார்களோ, அதுதான் தேவனுடைய “பகுத்தறிவின்மை” ஆகும். தேவன் ஏற்கனவே சாத்தானுக்கு முன்பாக சாட்சி பகர்ந்திருக்கிறார், மேலும் நேரத்தையோ இடத்தையோ பொருட்படுத்தாமல், எல்லா ஜனங்களையும் அவரை விட்டுவிலகாதபடி செய்வதாக தேவன் கூறினார்—எனவே இந்தக் கட்ட கிரியை நிறைவடைந்திருக்கிறது, மேலும் தேவன் மனுஷனின் குறைகூறுதல்களுக்குக் கவனம் செலுத்துவதில்லை. ஆனாலும் தேவன் இதை ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தியிருக்கிறார், அதனால் ஜனங்கள் உதவியற்றவர்களாக விடப்பட்டு, தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, தங்கள் நாவை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தம் முற்றிலும் மனுஷனை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனங்களுக்குத் தங்கள் மீதே கட்டுப்பாடு இல்லாதிருக்கிறது; தேவனும் சாத்தானும் திரைக்குப் பின்னால் இருந்து கயிறுகளை இழுப்பவர்களாய் இருக்கும்போது, அவர்கள் நன்றாகவும் உண்மையாகவும் செயல்படுகிற பொம்மைகளாக இருக்கிறார்கள். தேவன் தமக்காக சாட்சி பகர ஜனங்களைப் பயன்படுத்தும் போது, ஜனங்களை சாத்தானால் கையாளப்படவும், மேலும், தேவனால் வழிநடத்தப்படவும் அனுமதித்து, தமக்கு ஊழியம் செய்யும்படி ஜனங்களைப் பயன்படுத்த, அவர் நினைக்கும் அனைத்தையும், அவரால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். தேவன் பகர விரும்பும் சாட்சி நிறைவேறியிருக்கும்போது, அவர் ஜனங்களை ஒரு பக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு, அவருக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் நடந்துகொண்டு, அவர்களைத் துன்பப்படும்படி விட்டுவிடுகிறார். அவர் மீண்டும் ஜனங்களைப் பயன்படுத்த விரும்பும்போது, அவர் அவர்களை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பயன்படுத்துகிறார், மேலும் ஜனங்கள் இதைக் குறித்த விழிப்புணர்வு சற்றும் இல்லாதிருக்கிறார்கள். அவர்கள் தன் எஜமானுடைய விருப்பப்படி பயன்படுத்தப்படுகிற ஒரு எருது அல்லது குதிரையைப் போல இருக்கிறார்கள், அவைகளில் எதுவும் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டைப் பெற்றிருக்கவில்லை. இது கொஞ்சம் வருத்தமாகத் தோன்றலாம், ஆனால் ஜனங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்துகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுக்கு ஊழியம் செய்வது ஒரு கனத்துக்குரிய விஷயமாகும், வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல. தேவன் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என்பது போல இருக்கிறது. சர்வவல்லவரின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுவது பெருமைக்குரிய ஒன்றல்லவா? எனவே, நீ என்ன நினைக்கிறாய்? தேவனுக்கு ஊழியம் செய்ய நீ எப்போதாவது தீர்மானித்திருக்கிறாயா? உன் சொந்த சுதந்திரத்தைத் தேடுவதற்கான உரிமையை நீ இன்னும் வைத்திருக்க விரும்புகிறாயா?

எவ்வாறாயினும், தேவன் செய்யும் அனைத்தும் நல்லதும் பின்பற்றுவதற்கு தகுதியானதுமாய் இருக்கிறது, மேலும், பொதுவாக, மனுஷனும் தேவனும் வேறுபட்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த அடிப்படையில், உன் அன்பின் மீது தேவன் எந்த அக்கறையும் கொண்டிருக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ மனுஷ இருதயத்தால் தேவனை நேசிக்க வேண்டும். தேவனுடைய இருதயத்திற்குள் பெரும் சோகம் இருப்பதைக் கூட தேவனுடைய வார்த்தைகள் காட்டுகின்றன. தேவனுடைய வார்த்தைகளால் மட்டுமே ஜனங்கள் சுத்திகரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும் இந்தக் கிரியை நேற்றுதான் நடந்தது—எனவே, மிகச் சரியாக, தேவன் அடுத்து என்ன செய்வார்? இது இன்றுவரை ஓர் இரகசியமாகவே உள்ளது, இதனால்தான், ஜனங்கள் அதை அறிந்து கொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ இயலாதவர்களாய் இருக்கிறார்கள், மேலும் தேவனுடைய இசைக்கு ஏற்றவாறு பாடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடிவதில்லை. ஆயினும்கூட, தேவன் சொல்வதெல்லாம் உண்மையானவைகள், மேலும் அவை அனைத்தும் நிறைவேறுகின்றன—இதில் சந்தேகத்திற்கு இடமில்லை!

முந்தைய: அத்தியாயம் 44 மற்றும் 45

அடுத்த: முன்னுரை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக