அத்தியாயம் 45

நான் ஒருமுறை என் வீட்டில் வைப்பதற்காக ஈடு இணையற்ற வளங்களைக் கொண்டிருக்கும், மற்றும் அப்படியே அலங்கரிக்கப்பட்டிருக்கும் சிறந்த பொருட்களைத் தெரிந்தெடுத்தேன், இதன் மூலம் நான் மகிழ்ச்சியைப் பெற்றேன். ஆனால், என்னைப் பற்றிய மனுஷனின் மனப்பான்மையாலும், ஜனங்களுடைய உந்துதல்களாலும், இந்தக் கிரியையை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு கிரியையைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாதிருந்தது. எனது கிரியையை நிறைவேற்ற மனுஷனின் உந்துதல்களைப் பயன்படுத்துவேன், எல்லாவற்றையும் என்னைச் சேவிக்கச் செய்ய நான் சாமர்த்தியமாகத் திட்டமிடுவேன், அதன் விளைவாக, என் வீட்டை இனி ஒருபோதும் இருளாகவும் சோகமாகவும் இருக்கச் செய்ய மாட்டேன். நான் ஒருமுறை மனுஷர்கள் மத்தியில் கவனித்தேன்: மாம்சம் மற்றும் இரத்தத்தினாலாகிய அனைத்தும் மயக்கத்தில் இருந்தன, நான் இருப்பதன் ஆசீர்வாதத்தை ஒன்று கூட அனுபவிக்கவில்லை. ஜனங்கள் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு பாக்கியவான்களாய் இருக்கிறார்கள் என்பதை அறியாதிருக்கிறார்கள். மனுஷகுலத்தின் மீதான எனது ஆசீர்வாதங்கள் இன்று வரை இல்லாதிருந்தால், மனுஷகுலத்தின் மத்தியில் யாரால் இன்று வரை அழிந்து போகாமல் நிலைத்து நின்றிருக்க முடியும்? அவன் முதலில் எதையும் பெற்றிருந்ததில்லை என்பதாலும், மேலும் அவன் முதலில் பூமியிலும் வானத்தின் கீழும் வாழ்வதற்கான மூலதனம் இல்லாமல் இருந்தான் என்பதாலும், மனுஷன் ஜீவிக்கிறான் என்பதே எனது ஆசீர்வாதம்தான், மேலும் அவன் என் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வாழ்கிறான் என்பதுதான் அதன் அர்த்தமாகும்; இன்று நான் மனுஷனுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன், அதனால்தான் மனுஷன், மரணத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்குப் போதுமான அதிர்ஷ்டசாலியாகி என் முன் நிற்கிறான். மனுஷன் இருப்பதற்கான இரகசியங்களை ஜனங்கள் திரட்டியுள்ளனர், ஆனால் இது எனது ஆசீர்வாதம் என்பதை ஒருபோதும் யாரும் உணர்ந்திருக்கவில்லை. இதன் விளைவாக, எல்லா ஜனங்களும் உலகத்தில் காணப்படுகிற அநீதியை சபிக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையால் என்னைப் பற்றி குறைகூறுகிறார்கள். என் ஆசீர்வாதங்கள் இல்லையென்றால், இந்த நாளை யார் பார்த்திருப்பார்கள்? ஜனங்கள் அனைவரும் என்னைப் பற்றி குறை கூறுகிறார்கள், ஏனென்றால் அவர்களால் ஆறுதலின் மத்தியில் வாழ முடியவில்லை. ஒரு மனுஷனின் வாழ்க்கை பிரகாசமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருந்தால், மனுஷனின் இருதயத்திற்குள் இதமான “வசந்த காலத்துத் தென்றலை” அனுப்பி, அவனது முழு சரீரத்திலும் அளவற்ற இன்பத்தை உண்டாக்கி, அவனுக்குச் சிறிதளவு வலியும் இல்லாதபடி செய்துவிட்டால், அப்போது, மனுஷர்கள் மத்தியில் யார் குறை கூறிக்கொண்டே மரிப்பார்கள்? மனுஷனின் முழுமையான நேர்மையைப் பெறுவதில் நான் பெரும் சிரமத்தைப் பெற்றிருக்கிறேன், ஏனென்றால், ஜனங்கள் வெறுமனே ஒருவனின் தலையைச் சுற்ற வைக்கப் போதுமான அளவு, அநேக தந்திரமான திட்டங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் நான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவர்கள் வேண்டுமென்றே என்னை அலட்சியப்படுத்துகிறார்கள், அவர்கள் என் மீது கவனம் செலுத்துவதில்லை, ஏனென்றால், என் எதிர்ப்புகள் அவர்களின் ஆத்துமாவைத் தொட்டிருக்கின்றன, அவர்களைத் தலை முதல் பாதம் வரை பக்திவிருத்தியடைய இயலாதவர்களாக்கியிருக்கின்றன, எப்போதும் நான் அவர்களை “வேதனை” அடையச்செய்ய விரும்புகிறபடியால், நான் இருப்பதை ஜனங்கள் வெறுக்கிறார்கள். என் வார்த்தைகளால், ஜனங்கள் பாடுகிறார்கள் மற்றும் நடனமாடுகிறார்கள்; என் வார்த்தைகளால், அவர்கள் மௌனமாகத் தங்கள் தலைகளைத் தாழ்த்துகிறார்கள்; என் வார்த்தைகளால் அவர்கள் சத்தமிட்டு அழுகிறார்கள். என் வார்த்தைகளில், ஜனங்கள் விரக்தியடைகிறார்கள்; என் வார்த்தைகளில், அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒளியைப் பெறுகிறார்கள். என் வார்த்தைகளால் அவர்கள் இரவும் பகலும் தூங்காமல் அரண்டு புரளுகிறார்கள், மற்றும் என் வார்த்தைகளால் அவர்கள் எல்லா இடங்களுக்கும் விரைகிறார்கள். என் வார்த்தைகள் ஜனங்களை பாதாளங்களில் அமிழ்த்துகின்றன, பின்னர் அவர்களை சிட்சையில் அமிழ்த்துகின்றன—ஆனால், அதை உணராமல், ஜனங்கள் என் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறார்கள். இதுதான் மனுஷனால் அடையப்படக் கூடியதா? ஜனங்களுடைய அயராத முயற்சிகளுக்குப் பலனாக இது வர முடியுமா? என் வார்த்தைகளின் திட்டங்களிலிருந்து யார் தப்பிக்க முடியும்? இவ்வாறு, மனுஷனுடைய தவறுகளின் காரணமாக, நான் மனுஷகுலத்திற்கு என் வார்த்தைகளை வழங்கி, என் வார்த்தைகளால் மனுஷனின் குறைபாடுகளைச் சரி செய்து, மனுஷகுலத்தின் வாழ்க்கையில் ஈடு இணையற்ற ஐசுவரியங்களைக் கொண்டு வருகிறேன்.

நான் அடிக்கடி ஜனங்களுடைய வார்த்தைகளையும் செயல்களையும் ஆராய்கிறேன். அவர்களின் நடத்தை மற்றும் முகபாவனைகளில், நான் பல “இரகசியங்களைக்” கண்டுபிடித்துள்ளேன். மற்றவர்களுடன் ஜனங்கள் தொடர்புகொள்வதில், “இரகசியச் செயல்முறைகள்” நடைமுறையில் பெருமை கொள்கின்றன—இதனால், நான் மனுஷனுடன் தொடர்புகொள்ளும்போது, நான் பெறுவது, மனுஷன் என்னை நேசிக்கவில்லை என்பதைக் காட்டுகிற, “மனுஷ தொடர்புகளின் இரகசியச் செயல்முறைகள்” ஆகும். அவனுடைய தவறுகளின் நிமித்தமாக, நான் அடிக்கடி மனுஷனைக் கடிந்துகொள்கிறேன், ஆனாலும் நான் அவனுடைய நம்பிக்கையைப் பெற இயலாதவராய் இருக்கிறேன். மனுஷன் அவனைக் கொன்றுபோட என்னை அனுமதிக்க விரும்புவதில்லை, ஏனென்றால், மனுஷனின் “மனுஷ தொடர்புகளின் இரகசியச் செயல்முறைகளில்”, மனுஷன் ஓர் அபாயகரமான பேரழிவைச் சந்தித்திருக்கிறான் என்று ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை—துரதிர்ஷ்ட காலத்தின் போது அவன் ஒரு சில பின்னடைவுகளை மட்டுமே சந்தித்திருக்கிறான். என் வார்த்தைகளால் ஜனங்கள் அழுகிறார்கள், அவர்களின் வேண்டுகோள்கள் எப்போதும் என் இதயமற்ற தன்மையைப் பற்றிய மனக்குறைகளைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் மனுஷனுக்கான என்னுடைய உண்மையான “அன்பைத்” தேடுவது போல் இருக்கிறது—ஆனால், அவர்களால் எப்படி என் கடுமையான வார்த்தைகளில் என் அன்பைக் கண்டுபிடிக்க முடியும்? இதன் விளைவாக, அவர்கள் எப்போதும் என் வார்த்தைகளால் நம்பிக்கையை இழந்து போகிறார்கள். அவர்கள் என் வார்த்தைகளை வாசித்தவுடன், அவர்கள் “மரண தூதனைக்” கண்டு பயந்து நடுங்குவது போல் இருக்கிறது. இது என்னை துக்கமடையச் செய்கிறது: மரணத்தின் மத்தியில் வாழும் மாம்சத்தினாலாகிய ஜனங்கள் ஏன் எப்போதும் மரணத்திற்குப் பயப்படுகிறார்கள்? மனுஷனும் மரணமும் கடுமையான எதிரிகளா? மரண பயமானது ஏன் ஜனங்களுக்கு எப்போதும் துன்பத்தை விளைவிக்கிறது? அவர்களுடைய வாழ்க்கைகளின் “விதிவிலக்கான” அனுபவங்கள் முழுவதும், அவர்கள் மரணத்தை மட்டும் அனுபவிக்கிறார்களா? ஏன், அவர்கள் சொல்வதில், ஜனங்கள் எப்போதும் என்னைப் பற்றி குறை கூறுகிறார்கள்? எனவே, மனுஷ வாழ்க்கைக்கான நான்காவது பழமொழியை நான் சுருக்கமாகக் கூறுகிறேன்: ஜனங்கள் என்னிடம் சிறிதளவு கீழ்ப்படிதலை மட்டுமே உடையவர்களாய் இருக்கிறார்கள், இதனால்தான், அவர்கள் எப்போதும் என்னை வெறுக்கிறார்கள். மனுஷனின் வெறுப்பின் காரணமாக, நான் அடிக்கடி விட்டுவிடுகிறேன். நான் ஏன் இதற்கு என்னை அடிபணியச் செய்ய வேண்டும்? நான் ஏன் எப்போதும் ஜனங்களிடத்தில் வெறுப்பைத் தூண்டிவிட வேண்டும்? நான் இருப்பதை ஜனங்கள் வரவேற்காததால், நான் ஏன் மனுஷனின் வீட்டிற்குள் வெட்கமின்றி வாழ வேண்டும்? எனது “சாமான் பையை” எடுத்துக்கொண்டு மனுஷனை விட்டு வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆனால், நான் போவதை ஜனங்களால் தாங்கிக் கொள்ள முடியாது, நான் வெளியேறுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. நான் போய்விடுவேன் என்றும், அதனால் தாங்கள் வாழ்வதற்கு சார்ந்து இருந்தவரை இழந்துவிடுவோம் என்றும் அதிகமாகப் பயந்து புலம்பி அழுகிறார்கள். அவர்களின் கெஞ்சும் பார்வையைக் கண்டு என் உள்ளம் நெகிழ்கிறது. உலகத்தினுடைய எல்லா சமுத்திரங்களுக்கும் மத்தியில், யார் என்னை நேசிக்கக் கூடியவர்கள்? மனுஷன் கடலின் சக்தியால் சூழப்பட்ட அசுத்தமான நீரில் மூழ்கியிருக்கிறான். மனுஷனின் கீழ்ப்படியாமையை நான் வெறுக்கிறேன், இருப்பினும், முழு மனுஷகுலத்தின் துரதிர்ஷ்டத்திற்காகவும் நான் மனதுருக்கத்தை உணர்கிறேன்—எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் இன்னும் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான். மனுஷன் பலவீனமானவனாகவும் சத்துவமில்லாதவனாகவும் இருக்கும்போது நான் எப்படி அவனைத் தண்ணீரில் போட முடியும்? அவன் பெலவீனமாக இருக்கும்போது அவனை உதைக்கும் அளவுக்கு நான் கொடூரமானவரா? என் இருதயம் இவ்வளவு இரக்கமற்றதா? மனுஷகுலத்தின் மீதான எனது அணுகுமுறையின் காரணமாகவே, மனுஷன் என்னுடன் சேர்ந்து இந்தக் காலத்திற்குள் நுழைகிறான், அதனால்தான் அவன் என்னுடன் இந்த விதிவிலக்கான பகல்களையும் இரவுகளையும் கடந்திருக்கிறான். இன்று, ஜனங்கள் மகிழ்ச்சியின் மத்தியிலும் வேதனையில் உள்ளனர், அவர்கள் என் பாசத்தின் அதிக உணர்வைக் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் என்னை முழு பலத்துடன் நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையில் ஜீவன் உள்ளது, மேலும் அவர்கள் பூமியின் எல்லையெங்கும் அலைந்து திரியும் கெட்ட குமாரர்களாக இருப்பதை நிறுத்துகிறார்கள்.

நான் மனுஷனுடன் வாழும் நாட்களில், ஜனங்கள் என்னை நம்பியிருக்கிறார்கள், மேலும் நான் எல்லாவற்றிலும் மனுஷனைக் கருத்தில் கொண்டும், அவன் மீதான என் அக்கறையில் கவனமாக இருப்பதாலும், வீசும் காற்று, கொட்டும் மழை அல்லது சுட்டெரிக்கும் சூரியன் ஆகிய இவைகளில் எதையும் சகிக்கத் தேவையில்லாமல், ஜனங்கள் எப்போதும் என் அன்பான அரவணைப்பில் வாழ்கிறார்கள்; ஜனங்கள் மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்கிறார்கள், என்னை ஓர் அன்பான தாயாகக் கருதுகிறார்கள். ஜனங்கள், “இயற்கை பேரழிவுகளின்” தாக்குதலைத் தாங்குவதற்கு முற்றிலும் திறனற்றதாகவும், ஒருபோதும் உறுதியாக நிற்கத் திறனற்றதாகவும் இருக்கிற, பசுமையான தோட்டத்தில் உள்ள பூக்களைப் போன்றவர்கள். இவ்வாறு நான் அவர்களை இரைச்சலிடும் கடல்களின் உபத்திரவங்களுக்கு மத்தியில் வைக்கிறேன், மேலும் இடைவிடாமல் “அலைக்கழிக்கப்படுவதை” அவர்களால் தவிர்க்க முடியாது. அவர்கள் எதிர்ப்பதற்கான வல்லமையை நடைமுறையில் பெற்றிருக்கவில்லை—மேலும் அவர்களின் வளர்ச்சி மிகவும் குறைவாகவும் அவர்களின் சரீரங்கள் மிகவும் பலவீனமாகவும் இருப்பதால், நான் பார உணர்வை உணர்கிறேன். இவ்வாறு, அவர்கள் மிகவும் பெலவீனமானவர்களாகவும், அலறும் காற்று மற்றும் சுட்டெரிக்கும் சூரியனுக்கு எதிராக நிற்க முடியாதவர்களாகவும் இருப்பதால், ஜனங்கள் இதை உணராமலேயே எனது சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுதான் எனது தற்போதைய கிரியை அல்லவா? ஏன் என் சோதனைகளை எதிர்கொள்ளும் போது, ஜனங்கள் எப்போதும் கண்ணீர் விடுகிறார்கள்? நான் அவர்களுக்கு அநீதி செய்கிறேனா? நான் வேண்டுமென்றே அவர்களை அழிக்கிறேனா? நேசிக்கப்படத்தக்க மனுஷனுடைய நிலை ஒருபோதும் உயிர்த்தெழுப்பப்படாத இயலாதபடி ஏன் மரிக்கிறது? ஜனங்கள் எப்பொழுதும் என்னைப் பற்றிக் கொள்கிறார்கள், மேலும் போகவிடுவதில்லை; அவர்கள் ஒருபோதும் சொந்தமாக வாழத் திறமையுள்ளவர்களாக இருந்ததில்லை என்பதால், வேறு யாராவது ஒருவரால் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று மிகவும் பயந்து, அவர்கள் எப்போதும் என் கரத்தால் வழிநடத்தப்படுவதற்குத் தங்களை அனுமதித்திருக்கிறார்கள். அவர்களின் முழு வாழ்க்கையும் என்னால் வழிநடத்தப்பட்டிருக்கவில்லையா? அவர்களின் கொந்தளிப்பான வாழ்க்கையில், அவர்கள் உயர்ந்த மேடு மற்றும் பள்ளத்தாக்கைக் கடக்கும்போது, அவர்கள் பல கொந்தளிப்பை அனுபவித்திருக்கிறார்கள்—இது என் கரத்திலிருந்து வந்ததல்லவா? என் இருதயத்தை ஏன் ஜனங்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலவில்லை? என்னுடைய நல்ல நோக்கங்கள் ஏன் அவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன? பூமியில் என் கிரியை ஏன் தொடர்ந்து செயல்பட முடியவில்லை? மனுஷனின் பலவீனத்தின் காரணமாக, நான் எப்போதும் மனுஷனைப் புறக்கணித்திருக்கிறேன், அது என்னை துக்கத்தால் நிரப்புகிறது: ஏன் எனது அடுத்த கட்டக் கிரியையை மனுஷனில் செயல்படுத்த முடியாது? எனவே, நான் அமைதியாக இருந்து, அவனைக் கவனமாக நிறுத்துப்பார்க்கிறேன்: மனுஷனின் குறைபாடுகளால் நான் ஏன் எப்போதும் கட்டுப்படுத்தப்படுகிறேன்? ஏன் எனது கிரியைக்கு எப்பொழுதும் தடைகள் காணப்படுகின்றன? இன்று, மனுஷனிடம் இன்னும் முழுமையான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனென்றால் மனுஷன் எப்போதும் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறான், அவன் ஒருபோதும் இயல்பாக இருப்பதில்லை; ஒன்று, அவன் அடியோடு என்னை வெறுக்கிறான், அல்லது என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். இயல்பான தேவனாகிய என்னால், மனுஷனிடமிருந்து வரும் இத்தகைய வேதனையை தாங்க முடியாது. மனுஷர்கள் எப்போதும் மனரீதியாக இயல்பாக இல்லாததால், நான் மனுஷனைப் பற்றி கொஞ்சம் பயத்துடன் இருப்பதாகக் காணப்படுகிறேன், அதனால் அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கவனிப்பது, அவனுடைய இயல்புக்கு மாறான தன்மையை என்னை நினைத்துப் பார்க்கச் செய்கிறது. நான் தற்செயலாக, மனுஷனிடம் உள்ள இரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன்: அது அவனுக்குப் பின்னால் ஒரு திட்டமிடும் மூளையாக மாறியிருக்கிறது; இதன் விளைவாகத்தான், அவர்கள் ஏதோ நியாயமான ஒன்றை செய்திருப்பதைப் போல, ஜனங்கள் எப்போதும் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். எனவே, ஜனங்கள் எப்போதுமே பெரியவர்களாய் இருப்பதைப் போல நடிக்கிறார்கள், மேலும் அவர்கள் “சிறு குழந்தை” போலத் தேனொழுகப் பேசுகிறார்கள். மனுஷனின் போலியான பாவனையைப் பார்த்து, என்னால் ஆத்திரமடையாமல் இருக்க முடியவில்லை: ஜனங்கள் ஏன் தங்களுக்குத் தாங்களே மிகவும் அன்பற்றவர்களாகவும் அவமரியாதையுடனும் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தங்களைத் தாங்களே அறியாதிருக்கிறார்கள்? என் வார்த்தைகள் ஜீவனற்றுப்போய் இருக்கின்றனவா? என் வார்த்தைகள் மனுஷனுக்கு சத்துருவாக இருக்கின்றனவா? அவர்கள் என் வார்த்தைகளை வாசிக்கும்போது, ஏன் ஜனங்கள் என்மீது வெறுப்படைகிறார்கள்? ஜனங்கள் ஏன் எப்போதும் தங்கள் சொந்த எண்ணங்களை என் வார்த்தைகளுடன் சேர்க்கிறார்கள்? நான் மனுஷனுக்கு மிகவும் பகுத்தறிவில்லாதவராக இருக்கிறேனா? எல்லா ஜனங்களும் என் வார்த்தைகளுக்குள் என்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பற்றி கடுமையாகச் சிந்திக்க வேண்டும்.

மே 24, 1992

முந்தைய: அத்தியாயம் 44

அடுத்த: அத்தியாயம் 46

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக