பாதை … (4)

ஜனங்களால் தேவனுடைய அன்பைக் கண்டறியவும், இன்றைய காலத்தில் தேவனை நேசிக்கும் வழியைத் தேடவும் முடிகிறது, இதனால் இன்றைய ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்—இவை அனைத்தும் தேவனுடைய கிருபையாகும், மேலும், இதுவே அவர் மனிதகுலத்தை உயர்த்துவதாகும். நான் இதை நினைக்கும்போதெல்லாம், தேவனுடைய அன்பின் வல்லமையான உணர்வு எனக்கு இருக்கிறது. தேவன் மெய்யாகவே நம்மை நேசிக்கிறார்; அவர் நேசிக்கவில்லையென்றால், அவருடைய அன்பை யாரால் கண்டறிய முடியும்? இவ்வாறு இந்தக் கிரியை அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது என்பதையும், ஜனங்கள் தேவனால் வழிநடத்தப்படுவதையும் இயக்கப்படுவதையும் மட்டுமே நான் பார்க்கிறேன். இதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் என் சகோதர சகோதரிகள் என்னுடன் சேர்ந்து தேவனைத் துதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: “எல்லா மகிமையும் உன்னதமான தேவனாகிய உமக்கே உண்டாவதாக! உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட்ட எங்களில் உமது மகிமை பெருகி வெளிப்படுவதாக.” தேவன் என்னை பிரகாசிப்பித்தார்: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் முன்குறிக்கப்பட்டிருந்தோம் என்பதையும், கடைசி நாட்களில் நம்மை ஆதாயப்படுத்திக்கொள்ள விரும்பினார் என்பதையும் அவர் எனக்குக் காட்டினார், இவ்வாறு பிரபஞ்சம் மற்றும் எல்லாம் தேவனுடைய மகிமையை முழுமையாக நம் மூலமாகக் காண அனுமதித்தார். இவ்வாறாக, நாம், ஆறாயிரம் வருட தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் படிகமயமாக்கலாக இருக்கிறோம்; நாம் முழு பிரபஞ்சத்திலும் தேவனுடைய கிரியையின் மாதிரிகள் மற்றும் மாதிரிச் சான்றுகளாய் இருக்கிறோம். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும், அவர் நம்மில் செய்யும் கிரியை மற்றும் அவர் சொல்லும் விஷயங்கள் கடந்த காலங்களை விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம் என்பதையும் இப்போதுதான் நான் உணர்ந்தேன். இஸ்ரவேலில் அல்லது பேதுருவில் கூட தேவன் தனிப்பட்ட முறையில் இவ்வளவு கிரியை செய்யவில்லை அல்லது பல வார்த்தைகளைப் பேசவில்லை—இந்த ஜனக்கூட்டமாகிய நாம் மெய்யாகவே மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், கடந்த கால பரிசுத்தவான்களைவிட ஒப்பிடமுடியாத அளவில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. இதனால்தான் இறுதி காலத்தின் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தேவன் எப்பொழுதும் சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நாம் தேவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் நமக்கு அளித்த ஆசீர்வாதங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; தேவனிடம் குறைகூறும் சிலர் இருக்கக்கூடும், ஆனால் இந்த ஆசீர்வாதங்கள் தேவனிடமிருந்து வந்தால், நாம் அவற்றுக்குத் தகுதியானவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. மற்றவர்கள் நம்மைக் குறித்துக் குறை கூறினாலும் அல்லது மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தாலும், தேவன் நமக்கு அளித்த ஆசீர்வாதங்களை வேறு யாராலும் சுதந்தரித்துக்கொள்ளவோ அல்லது அகற்றிவிடவோ முடியாது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் தேவனுடைய கிரியை நம்மில் செய்யப்படுகிறது, மேலும் அவர் நம்முடன் நேருக்கு நேர் பேசுகிறார்—நம்முடன் தான் பேசுகிறார், மற்றவர்களுடன் அல்ல—தேவன் தாம் விரும்புகிறபடி செய்கிறார். ஜனங்கள் நம்பவில்லை என்றால், அவர்கள் தங்களுக்கே ஊறு விளைவித்துக்கொள்வதில்லையா? அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் மீது அவமதிப்பை ஏற்படுத்திக்கொள்வதில்லையா? நான் ஏன் இத்தகைய விஷயங்களைச் சொல்கிறேன்? ஏனென்றால் இதை நான் மிக ஆழமாகப் புரிந்து வைத்திருக்கிறேன். உதாரணமாக, தேவன் என்னில் செய்யும் கிரியையை எடுத்துக் கொள்ளுங்கள்: என்னால் மட்டுமே இந்தக் கிரியையைச் செய்ய முடியும்—வேறு யாராவது அதைச் செய்ய முடியுமா? தேவனிடமிருந்து இந்தக் கட்டளையைப் பெறுவதற்கு நான் போதிய அளவு அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன்—திடீரென வேறு யாராவது இதைச் செய்ய முடியுமா? இருப்பினும், சகோதர சகோதரிகள் என் மனதைப் புரிந்துகொள்வார்கள் என்பது என் நம்பிக்கையாகும். நான் என் நம்பிக்கைகளைப் பற்றி பெருமை பேசவில்லை, மாறாக ஒரு பிரச்சினையை விளக்கிக்கொண்டிருக்கிறேன். எல்லா மகிமையும் தேவனுக்கே உரித்தாக வேண்டும், தேவன் நம் ஒவ்வொருவரின் இருதயத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் நம் இருதயங்கள் அவருக்கு முன்பாகத் தூய்மையாக்கப்படும். என் இருதயத்தில், நான் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக்கொள்ளப்படவும், பலிபீடத்தின் மீது பலியிடப்படுகிற ஒரு தூய கன்னிகையைப்போல மாறவும், மேலும், ஆட்டுக்குட்டியானவரின் கீழ்ப்படிதலைப் பெற்றிருக்கவும், மனிதகுலம் முழுவதிலும் ஓர் ஆவிக்குரிய பரிசுத்த சரீரமாகத் தோன்றவும் வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவே என் வாக்குறுதியும், தேவனுக்கு முன்பாக நான் செய்திருக்கிற பொருத்தனையுமாகும். நான் அதை நிறைவேற்றவும், அதன் மூலமாக தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்தவும் விரும்புகிறேன். நீ இதைச் செய்யத் தயாரா? என்னுடைய இந்த வாக்குறுதி அநேக வாலிப சகோதர சகோதரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும், மற்றும் இது அநேக வாலிபர்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, தேவன் வாலிபர்களை அதிக முக்கியமானவர்களாகக் கருதுகிறார் என்பதாய்த் தோன்றுகிறது. ஒருவேளை, இது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், ஆனால் வாலிபர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை இருப்பதாக நான் எப்போதும் உணர்கிறேன்; தேவன் வாலிபர்களிடத்தில் கூடுதல் கிரியை செய்கிறார் என்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு நுண்ணறிவு மற்றும் ஞானம் இல்லாமல் இருக்கலாம், மேலும் அவர்கள் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியைப் போல உற்சாகமானவர்களாகவும், விளையாட்டுத்தனமுள்ளவர்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அவர்கள் தகுதியற்றவர்களாக அல்ல என்று நான் நம்புகிறேன். அவர்களில் வாலிபத்தின் அப்பாவித்தனத்தையும், மற்றும் புதிய விஷயங்களை அவர்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதையும் நீங்கள் காணலாம். வாலிபர்கள் அகந்தை, உக்கிரம் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றிற்குப் பழகியவர்களாக இருந்தாலும், இது புதிய வெளிச்சத்தைப் பெறுவதற்கான அவர்களது திறனை பாதிக்காது, ஏனென்றால் வாலிபர்கள் பழைய, காலாவதியான விஷயங்களை அரிதாகவே பற்றிக் கொள்கிறார்கள். அதனால்தான் நான் வாலிபர்களிடம் எண்ணற்ற வாக்குறுதியையும், அவர்களின் உற்சாகத்தையும் காண்கிறேன்; இந்த காரணத்தினால்தான் அவர்கள் மீது எனக்கு ஒரு மென்மையான உணர்வு இருக்கிறது. மூத்த சகோதர சகோதரிகள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் அவர்களும் என் மீது எந்த ஆர்வமும் கொண்டிருப்பதில்லை—அதற்காக நான் அவர்களிடத்தில் என் உண்மையான மன்னிப்பைக் கோருகிறேன். ஒருவேளை நான் கூறியது ஒத்துப்போகாததாகவோ அல்லது அக்கறையற்றதாகவோ இருக்கலாம், ஆனால் நீங்கள் அனைவரும் எனது பொறுப்பற்றத் தன்மையை மன்னிக்க முடியும் என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் எப்படிப் பேசுகிறேன் என்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு நான் மிகவும் இளமையாக இருக்கிறேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், மொத்தத்தில், மூத்த சகோதர சகோதரிகளும் காரியத்துக்கு உதவுபவர்கள்—அவர்கள் முற்றிலும் உபயோகமற்றவர்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் விஷயங்களைக் கையாள்வதில் அனுபவமுள்ளவர்கள்; அவர்கள் விஷயங்களை எப்படி கையாளுகிறார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அதிகமான தவறுகளைச் செய்வதில்லை. இது அவர்களது பலம் அல்லவா? நாம் அனைவரும் தேவனுக்கு முன்பாகக் கூறுவோம்: “தேவனே! நாங்கள் அனைவரும் எங்கள் வெவ்வேறு நிலைகளில் எங்கள் சொந்த செயல்பாடுகளை நிறைவேற்றுவோமாக, மற்றும் உமது சித்தத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததைச் செய்வோமாக!” இது தேவனுடைய சித்தமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்!

என் அனுபவத்தில், இந்தப் பிரவாகத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர்களில் பலர்-தேவனுடைய ஆவியானவரை நேரடியாக எதிர்ப்பவர்களில் பலர்—வயதில் மூத்தவர்களாவர். இந்த ஜனங்கள் மிகவும் வலுவான மதக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர்; ஒவ்வொரு திருப்பத்திலும், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் காலாவதியான விஷயங்களுடன் ஒப்பிட்டு, கடந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களை தேவனுடைய வார்த்தைகளுடன் இணைத்து ஏற்றுக்கொள்ளவைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மூடர்கள் அல்லவா? தேவனால் ஒப்படைக்கப்பட்ட கிரியையை அத்தகைய ஜனங்களால் செய்து முடிக்க இயலுமா? அத்தகையவர்களை தேவன் தமது கிரியையில் பயன்படுத்த முடியுமா? பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட எந்த நாளுக்கும் அவருடைய கிரியைக்கான ஒரு முறையைக் கொண்டிருக்கிறார்; ஜனங்கள் பழங்கால விஷயங்களைப் பற்றிக்கொண்டால், அவர்கள் வரலாற்றின் காலகட்டத்திலிருந்து தள்ளப்படும் ஒரு நாள் வரும். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் புதிய நபர்களைப் பயன்படுத்துகிறார். காலாவதியான விஷயங்களைக் கொண்டு மற்றவர்களுக்கு போதனை செய்ய முயற்சி செய்பவர்கள் ஜனங்கள் மீது அழிவைக் கொண்டுவருகிறதில்லையா? மேலும் அவர்கள் தேவனுடைய கிரியையைத் தாமதிக்கச் செய்வதில்லையா? அப்படியானால், தேவனுடைய கிரியை எப்போது முடிவடையும்? நான் இப்போது கூறியதைப் பற்றி சில கருத்துகளைக் கொண்டவர்கள் இருக்கலாம். ஒருவேளை அவர்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் நீ கவலைப்படுவதை நான் விரும்பவில்லை: நீண்ட காலத்திற்கு முன்பே, இது போன்ற பல விஷயங்கள் நடக்கும், அவற்றை உண்மைகளால் மட்டுமே விளக்க முடியும். நாம் சில முக்கிய நபர்கள், சில மதிப்புமிக்க போதகர்கள் அல்லது வேதாகம வல்லுநர்களைச் சந்தித்து அவர்களுக்கு இந்தப் பாதையைப் பிரசங்கிப்போம். அவர்கள் முதலில் அதை வெளிப்படையாக எதிர்க்க மாட்டார்கள், அது நிச்சயம்—ஆனால் அவர்கள் உனக்கு சவால்விடும்படியாக வேதாகமத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் ஏசாயா புத்தகம் மற்றும் தானியேல் புத்தகத்தை உன்னை விவரிக்க வைப்பார்கள், மேலும் அவர்கள் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையும் உன்னையே விளக்க வைப்பார்கள். நீ அதிலிருந்து பேச முடியாவிட்டால், அவர்கள் உன்னை நிராகரித்து, உன்னை ஒரு கள்ளக் கிறிஸ்து என்று அழைப்பார்கள், மேலும் நீ முட்டாள்தனமான ஒரு வழியைப் பரப்புகிறாய் என்று கூறுவார்கள். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் உனக்கு விரோதமாக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள், அது உன்னை மூச்சுத் திணற வைக்கும். இது வெளிப்படையான எதிர்ப்பல்லவா? ஆனால் அது ஓர் ஆரம்பம்தான். தேவனுடைய கிரியையின் அடுத்த கட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது, நீண்ட காலத்திற்கு முன்பே, பரிசுத்த ஆவியானவர் அதை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவார். இது தவிர்க்க முடியாத போக்காகும்; இது மனுஷர்களால் செய்ய முடியாததும் ஜனங்களால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்றுமாகும். தேவனுடைய கிரியை பிரபஞ்சம் முழுவதும் தடையின்றி பரவும் என்று நான் நம்புகிறேன். இதுவே தேவனுடைய சித்தமாகும், அதை யாராலும் தடுக்க முடியாது. தேவன் நம்மைப் பிரகாசிப்பிக்கட்டும் மேலும் அதிகமான அளவில் புதிய வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ளவும், இந்த விஷயத்தில் தேவனுடைய நிர்வாகத்தில் குறுக்கிடாமல் இருக்கவும் நம்மை அனுமதிப்பாராக. அவருடைய மகிமையின் நாளின் வருகையை நாம் அனைவரும் காணும்படி, தேவன் நம் மீது இரக்கமாய் இருப்பாராக. பிரபஞ்சம் முழுவதும் தேவன் மகிமையில் வெளிப்படக்கூடிய நேரமே, நாம் அவருடன் சேர்ந்து மகிமையடையும் நேரமாக இருக்கும். என்னுடன் நடப்பவர்களிடமிருந்து நான் பிரிந்து செல்லும் நேரமும் அதுவாகவே இருக்கும் என்பதாய்த் தோன்றுகிறது. தேவனிடம் கெஞ்சி மன்றாட, என் சகோதரர்களும் சகோதரிகளும் என்னுடன் சேர்ந்து குரல் எழுப்புவார்கள் என்று நான் நம்புகிறேன்: எங்கள் வாழ்நாளில் அவருடைய மகிமையின் நாளை எங்களால் காண இயலும்படி. தேவனுடைய மகத்தான கிரியை விரைவில் முடிவடைவதாக. என் வாழ்நாளில் நான் தேவனுடைய சித்தத்தை அடைவேன் என்று இன்னும் நம்புகிறேன், தேவன் தமது கிரியையை நம்மில் தொடர்ந்து செய்வார் என்றும், ஒருபோதும் எந்தத் தடைகளும் இருப்பதில்லை என்றும் நம்புகிறேன். இதுவே எனது நித்திய ஆசையாகும். தேவன் எப்பொழுதும் நம் மத்தியில் இருப்பாராக, அவருடைய அன்பு நமக்கு இடையே பாலங்களை உருவாக்கட்டும், அதனால் நமக்கு இடையேயான நட்பு மிகவும் விலைமதிப்பற்றதாக மாறும். அன்பு நம்மிடையே மேலும் புரிதலை உருவாக்கும் என்றும், அன்பினால் நம்மை ஆழமான நெருக்கத்திற்குள் கொண்டுவர முடியும் என்றும், நமக்கிடையேயான தூரத்தை அகற்றக் கூடும் என்றும், நமக்கிடையேயான அன்பு ஆழமானதாகவும், விரிவானதாகவும், இனிமையானதாகவும் மாறக்கூடும் என்றும் நம்புகிறேன். இதுவே என் தேவனுடைய சித்தமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனது சகோதர சகோதரிகள் எனக்கு அதிக நெருக்கமானவர்கள் ஆவார்கள் என்று நம்புகிறேன், மேலும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும் குறுகிய நாட்களை பொக்கிஷமாக்குவோம் என்றும், அவைகள் நமக்கு அழகான நினைவுகளாக விளங்கும் என்றும் நான் நம்புகிறேன்.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தேவனுடைய கிரியையின் பல கட்டங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவை சிக்கலானவை அல்ல. அதைப் பற்றி நினைக்கும் போது, அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் காரணம் இருக்கிறது; ஒவ்வொன்றும் தேவனால் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது, மேலும் ஒவ்வொருவரும் இந்தக் கிரியையில் பங்கு வகித்திருக்கின்றனர். ஒவ்வொரு “காட்சியும்” உண்மையிலேயே நகைப்புக்குரியதாய் இருக்கிறது, இந்த ஜனங்கள் இதுபோன்ற ஒரு நாடகத்தை நடிப்பார்கள் என்று யார் கற்பனை செய்திருப்பார்கள், ஒவ்வொரு உபத்திரவத்தின் மத்தியிலும் அவர்களின் நடிப்பு வாழ்க்கைக்கு மிகவும் ஒத்ததாக உள்ளது, எல்லா விதமான நபர்களும் தேவனுடைய எழுதுகோலின் கீழ் மிகவும் தெளிவாகவும் முழுமையாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அவை ஒவ்வொன்றும் பகலின் வெளிச்சத்தில் அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது? ஆனால் இப்படிக் கூறுவதால், தேவன் தமது கிரியையின் மூலம் ஜனங்களுடன் விளையாடுகிறார் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. அதில் எந்த அர்த்தமும் இருக்காது; தேவனுடைய கிரியைக்கு ஒரு நோக்கம் உள்ளது, மேலும் அவர் ஒருபோதும் குறிக்கோளற்ற அல்லது பயனற்ற எதையும் செய்ய மாட்டார். அவர் செய்யும் அனைத்தும் ஜனங்களைப் பரிபூரணமுள்ளவர்களாய் மாற்றுவதற்காகவும், அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காகவும் செய்யப்படுகின்றன. இதிலிருந்து நான் மெய்யாகவே தேவனுடைய இருதயம் முற்றிலும் மனுஷனின் நன்மைக்காகவே இருக்கிறது என்று பார்க்கிறேன். நான் இதை நாடகம் என்று அழைத்திருக்கலாம், ஆனால் இந்த நாடகம் நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறலாம். இந்த நாடகத்தின் பொது இயக்குநரான தேவனுக்கு இந்தக் கிரியையை முடிப்பதற்கு அவருக்கு ஒத்துழைக்க ஜனங்கள் மட்டுமே இருக்கிறார்கள். இருப்பினும், மற்றொரு அர்த்தத்தில், தேவன் ஜனங்களை ஆதாயப்படுத்துவதற்கும், அவர்கள் அவரை அதிகமாக நேசிக்கச் செய்யவும் அவர் இதைப் பயன்படுத்துகிறார். இது தேவனுடைய சித்தம் இல்லையா? அதனால் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை என்று நம்புகிறேன். நீ தேவனுடைய சித்தத்தைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கிறாயா? நான் நிறைய சொல்லியிருக்கிறேன்—சகோதர சகோதரிகள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், என் இருதயத்தைத் தவறாகப் புரிந்திருக்கமாட்டார்கள் என்றும் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதையில் நடக்கிறார்கள். உங்கள் கால்களுக்குக் கீழே இருக்கும் ஒன்று தேவனால் திறக்கப்படட்டும், நீங்கள் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டியதாவது: தேவனே! என் ஆவி உம்மிடத்திற்குத் திரும்பும்படியாக, நீர் என்னை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன் ஆவியின் ஆழத்தில் தேவனுடைய வழிகாட்டுதலைத் தேட நீ ஆயத்தமா?

முந்தைய: பாதை … (3)

அடுத்த: பாதை … (5)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக