அத்தியாயம் 35

ஜனங்களை என்னைப் போலவே அதே பாதையில் வாழ அனுமதிப்பதன் மூலம், நான் மனிதகுலத்தின் மத்தியில் எனது கிரியையைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். நான் எனது கிரியையை முடிக்கும்போது, நான் இன்னும் மனிதகுலத்தின் மத்தியில் இருப்பேன், ஏனென்றால் எனது முழு நிர்வாகத் திட்டத்திலும் அவர்கள்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லா காரியங்களிலும் தேறினவர்களாக வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தக் காரணத்திற்காகவே, நான் தொடர்ந்து மனிதகுலத்தின் மத்தியில் நடந்து வருகிறேன். மனிதகுலமும் நானும் தற்போதைய யுகத்தில் நுழைகையில், நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன், ஏனென்றால் எனது கிரியையின் வேகம் துரிதப்பட்டிருக்கிறது. மனுஷர்களால் எப்படி ஈடுகொடுக்க முடியும்? உணர்ச்சியற்ற மற்றும் மந்தப்புத்தியுள்ள ஜனங்கள் மத்தியில் நான் அதிகமான கிரியை செய்திருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னை மதிக்காததால் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றும் ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. நான் எல்லா ஜனங்கள் மத்தியிலும் வசித்து, பூமிக்கு மேலே மற்றும் கீழே இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்திருக்கிறேன். “என்னை எதிர்ப்பது” மனுஷனின் வேலையாக இருப்பதைப் போலவும், இந்த வேலையைச் செய்யாவிட்டால், அது அவர்களை யாராலும் தத்தெடுக்கப்படாத அலைந்து திரிந்த அனாதைகளாக்கிவிடும் என்பதைப் போலவும், “மனுஷர்கள்” என்று வகைப்படுத்தப்பட்ட அனைவரும் என்னை எதிர்க்கிறார்கள். இருப்பினும், அவர்களின் செயல்கள் மற்றும் நடத்தையின் அடிப்படையில் நான் தன்னிச்சையாக ஜனங்களை தண்டிப்பதில்லை. மாறாக, அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நான் அவர்களுக்கு ஆதரவளித்து வழங்குகிறேன். எனது முழு நிர்வாகத் திட்டத்தின் மையக் கதாபாத்திரங்கள் மனுஷர்கள் என்பதால், “மனுஷன்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, நான் அதிக வழிகாட்டுதலை வழங்குகிறேன், அதனால் அவர்கள் முழு மனதுடனும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சிறப்பாகவும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும். அதனால், நான் இயக்கும் இந்த நாடகம் மகத்தான வெற்றிகரமானதாக இருக்கும். இதுவே மனிதகுலத்திற்கான எனது வேண்டுகோளாகும். நான் மனிதகுலத்திற்காக ஜெபிக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போய்விடுவார்களா? ஜனங்கள் என்னிடம் கேட்பதை என்னால் நிறைவேற்ற முடியும், ஆனால் நான் அவர்களிடம் கேட்பதை அவர்களால் நிறைவேற்ற முடியாது என்றாகிவிடுமா? மனிதகுலத்தை ஒடுக்குவதற்கு எனது வல்லமையை நான் பயன்படுத்தவில்லை என்று கூறலாம். மாறாக, இது நான் அவர்களிடம் முழு ஆர்வத்துடனும் உண்மையுடனும் மன்றாடுகிற எனது இறுதி வேண்டுகோளாகும். நான் கேட்பதை அவர்கள் உண்மையிலேயே செய்ய இயலாதவர்களாய் இருக்கிறார்களா? நான் பல ஆண்டுகளாக ஜனங்களுக்குக் கொடுத்து வருகிறேன், ஆனாலும் அதற்கு ஈடாக எதையும் திரும்பப் பெற்றிருக்கவில்லை. எப்போதாவது எனக்கு எதையாவது கொடுத்தவன் யார்? என் இரத்தமும், வியர்வையும், கண்ணீரும் மலையின் மூடுபனி போல இருக்க வேண்டுமா? நான் பல முறை ஜனங்களுக்குத் “தடுப்பூசிகளைப்” போட்டிருக்கிறேன், மேலும் அவர்களுக்கான எனது கோரிக்கைகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்று அவர்களிடம் கூறினேன். அப்படியானால், ஜனங்கள் ஏன் தொடர்ந்து என்னை விலக்கி வைக்கிறார்கள்? பிடிபட்டவுடனே கொல்லப்பட இருக்கும் கோழிக் குஞ்சுகளைப் போல நடத்துவேன் என்பதற்காகவா? நான் உண்மையிலேயே மிகவும் கொடூரமானவராகவும் மனிதாபிமானமற்றவராகவும் இருக்கிறேனா? மனுஷர்கள் எப்பொழுதும் என்னைத் தங்கள் சொந்த எண்ணங்களால் அளவிடுகிறார்கள். நான் அவர்களின் எண்ணங்களில் இருப்பதைப் போலவும், நான் பரலோகத்தில் இருப்பதைப் போலவும் இருக்கிறேனா? ஜனங்களின் கருத்துக்கள் எனது இன்பத்திற்கான பொருளாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. மாறாக, அவர்களின் இருதயங்களைப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகவே நான் பார்க்கிறேன். இருப்பினும், அவர்களின் மனசாட்சியால் நான் மிகவும் எரிச்சலடைகிறேன், ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை, நான் ஒன்றைப் பெற்றிருக்கவில்லை. எனவே, அவர்களின் மனசாட்சி பற்றி எனக்கு இன்னும் பல கருத்துகள் உள்ளன. எப்படியாயினும், அவர்களின் மனசாட்சியை நேரடியாக விமரிசிக்க மறுக்கிறேன்; மாறாக, நான் அவர்களை பொறுமையாகவும் முறையாகவும் தொடர்ந்து வழிநடத்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர்கள் பலவீனமானவர்களும், எந்தக் கிரியையும் செய்ய இயலாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

இன்று, நானும் மனிதகுலத்துடன் இணைந்து அனுபவிக்கிற எல்லையற்ற சிட்சைப் பகுதிக்குள் நான் அதிகாரபூர்வமாக நுழைகிறேன். என் கரத்தால், நானும் கட்டளை பிறப்பிக்கிறேன், மேலும் என் கட்டளையின் கீழ், மனிதகுலம் நன்றாக நடந்து கொள்கிறது; யாரும் என்னை எதிர்க்கத் துணிவதில்லை. அனைவரும் எனது வழிகாட்டுதலின் கீழ், நான் நியமித்திருக்கிற கிரியையைச் செய்கிறார்கள், ஏனென்றால், இதுவே அவர்களின் “வேலை” ஆகும். வானத்திலும், வானத்தின் கீழும் உள்ள எல்லாவற்றிலும், என் திட்டங்களுக்கு அடிபணியாதவர் யார்? என் பிடியில் இல்லாதவர் யார்? என் வார்த்தைகள் மற்றும் என் கிரியைக்காகப் புகழ்ந்து துதியை ஏறெடுக்காதவர் யார்? மனுஷர்கள் என் செயல்களையும் கிரியைகளையும் போற்றுகிறார்கள், அதனால், என்னுடைய ஒவ்வொரு அசைவின் காரணமாகவும், அவர்கள் என் கிரியையின் பாதையில் தங்களை அர்ப்பணித்துவிடுகிறார்கள். யார் தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்ள முடியும்? நான் ஏற்பாடு செய்திருக்கிற கிரியையிலிருந்து யார் தப்பிச்செல்ல முடியும்? எனது ஆட்சிமுறை ஆணையின்படி, மனுஷர்கள் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; அப்படி இல்லையென்றால், அவர்கள் அனைவரும் “முன் வரிசையில்” இருந்து பின்வாங்கி, “கைவிடப்பட்டவர்களாகி” இருந்திருப்பார்கள். மரணத்தைக் கண்டு அஞ்சாதவன் யார்? ஜனங்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்க்கையைத் துணிவுடன் ஆபத்தில் வைக்க முடியுமா? நான் யார் மீதும் கட்டாயமாகத் திணிப்பதில்லை, ஏனென்றால் நான் நீண்ட காலத்திற்கு முன்பே மனித சுபாவத்தைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்றுவிட்டேன். இதனால், ஜனங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் செய்யாத திட்டங்களை நான் எப்போதும் மேற்கொண்டு வருகிறேன். எனது கிரியையை யாராலும் நிறைவேற்ற முடியாததால், சாத்தானுடன் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் ஈடுபட நான் நேரில் போர்க்களத்தில் கால் பதித்துள்ளேன். இந்நாட்களிலெல்லாம், சாத்தான் அதிதீவிரமாகத் தலைவிரித்து ஆடுகிறான். எனது கிரியையின் நோக்கத்தைக் காட்டவும், எனது வல்லமையை வெளிப்படுத்தவும் இந்த வாய்ப்பை நான் ஏன் பயன்படுத்தக்கூடாது? நான் முன்பே கூறியது போல், நான் சாத்தானின் சூழ்ச்சியை என் பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்துகிறேன்; இது சிறந்த வாய்ப்பு அல்லவா? இப்போதுதான் நான் ஒரு திருப்தியடைந்த புன்னகையை வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எனது இலக்கை அடைந்திருக்கிறேன். நான் இனி அலைந்து திரிந்து மனுஷர்களிடம் “உதவி” கேட்க மாட்டேன். நான் பரபரப்பாவதை நிறுத்திவிட்டேன், இனி நாடோடி வாழ்க்கையை வாழமாட்டேன். இப்போதிருந்து நான் சமாதானமாக வாழ்வேன். அதேபோல், மனுஷர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள், ஏனென்றால் என்னுடைய நாள் வந்திருக்கிறது. பூமியில், நான் ஒரு மனுஷனின் அலுவல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தேன், அதில் பல அநீதிகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. மனுஷர்களின் பார்வையில், அவர்களின் இன்ப துன்பங்களையும், கடினமான சூழ்நிலைகளையும் பகிர்ந்திருக்கிறேன். மனுஷர்களைப் போலவே, நானும் பூமியிலும் வானத்தின் கீழும் வாழ்ந்திருக்கிறேன். அதனால் அவர்கள் எப்போதும் என்னை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாகவே பார்த்திருக்கிறார்கள். நான் பரலோகத்தில் இருப்பதைப் போல மனுஷர்கள் என்னைப் பார்த்திராததால், அவர்கள் என் சார்பாக அதிக முயற்சியை மேற்கொண்டதில்லை. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், ஜனங்கள் தங்கள் தலைவிதியின் எஜமானும், மேகங்களில் இருந்து பேசும் பேச்சாளரும் நானே என்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவேதான், மனுஷர்கள் ஆராதனையில், எனக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்திருக்கிறார்கள். இது எனது வெற்றிகரமான திரும்பி வருதலுக்கான ஆதாரம் அல்லவா? இது எதிராயிருக்கிற அனைத்து வல்லமைகள் மீதான எனது ஜெயத்தின் சித்தரிப்பு அல்லவா? உலகம் முடிவுக்கு வருகிறது, மனிதகுலம் ஒரு பெரிய சுத்திகரிப்புக்கு உட்படும் என்று எல்லா ஜனங்களுக்கும் முன்னறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், உண்மையில், நான் அவர்களிடம் கேட்பதை முழுமனதோடு அவர்களால் செய்ய முடியவில்லை, எனவே எனது சிட்சையில் அழுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. என்ன செய்ய முடியும்? மனுஷர்களைக் கீழ்ப்படியாமல் இருக்கச் சொன்னது யார்? அவர்களைக் கடைசிக் காலத்தில் பிரவேசிக்கச் சொன்னது யார்? ஏன் கடைசி காலத்தில் மனித உலகில் பிறந்தார்கள்? ஒவ்வொரு விஷயமும் தனிப்பட்ட முறையில் என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுத் திட்டமிடப்பட்டிருக்கிறது. யார் குறைகூற முடியும்?

உலகத்தின் சிருஷ்டிப்பு முதல், அவர்களின் பூமிக்குரிய வாழ்க்கையில் அவர்களுக்குத் தோழமையுடன் இருந்து, நான் மனிதகுலத்தின் மத்தியில் அலைந்து திரிந்திருக்கிறேன். எவ்வாறாயினும், முந்தைய தலைமுறைகளில், ஒரு நபர் கூட என்னால் தெரிந்துகொள்ளப்படவில்லை; எனது மௌன கடிதத்தால் அனைவரும் நிராகரிக்கப்பட்டனர். ஏனென்றால், கடந்த காலத்தில் ஜனங்கள் எனக்குப் பிரத்தியேகமாக ஊழியம் செய்யவில்லை, அதனால் பதிலுக்கு, நான் அவர்களைப் பிரத்தியேகமாக நேசிக்கவில்லை. அவர்கள் சாத்தானின் “பரிசுகளை” எடுத்துக்கொண்டு திரும்பி வந்து என்னிடம் கொடுத்தார்கள். இது எனக்கு எதிரான அவமதிப்பு அல்லவா? அவர்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகையில், நான் என் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை; மாறாக, எனது நிர்வாகத்தின் பொருட்களில் இந்தப் “பரிசுகளை” சேர்ப்பதன் மூலம் அவர்களின் திட்டத்தை எனது சொந்தப் பயன்பாட்டிற்கு மாற்றினேன். பின்னர், அவை இயந்திரம் மூலம் செயலாக்கப்பட்டவுடன், நான் உள்ளே இருக்கும் கழிவை எரித்துவிடுவேன். தற்போதைய காலத்தில், மனுஷர்கள் எனக்கு அநேக “பரிசுகளை” வழங்கியிருக்கவில்லை, ஆனாலும், அதற்காக நான் அவர்களைக் கண்டிப்பதில்லை. இந்த ஜனங்கள் எப்போதும் ஆதரவற்றவர்களாகவும் வெறுங்கையுடனும் இருந்திருக்கிறார்கள்; எனவே, அவர்களுடைய நிலைமையின் யதார்த்தத்தை உணர்ந்ததும், நான் மனித உலகத்திற்கு வந்ததில் இருந்து, அவர்களை நியாயமற்ற கோரிக்கைகளுக்கு ஒருபோதும் உட்படுத்தியிருக்கவில்லை. மாறாக, அவர்களுக்குப் “பொருட்களைக்” கொடுத்த பிறகு நான் விரும்பும், “முடிக்கப்பட்ட தயாரிப்பை” நான் தேடியிருக்கிறேன், ஏனென்றால், இது மனுஷர்களால் அடையக்கூடிய அளவில்தான் இருக்கிறது. தகுந்த கோரிக்கையை முன்வைப்பதற்கு முன், ஒரு மனுஷனாக வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்வதிலேயே நான் பல வருடங்களைக் கஷ்டத்தில் கழித்துவிட்டேன். நான் மனித வாழ்க்கையை அனுபவிக்காமல் இருந்திருந்தால், ஜனங்கள் விவாதிக்கக் கடினமாக இருக்கும் விஷயங்களை நான் எப்படி புரிந்துகொண்டிருந்திருப்பேன்? ஆயினும்கூட, மனுஷர்கள் அதை இவ்வாறு பார்ப்பதில்லை; நான் எல்லா-வல்லமையுள்ள, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன் என்று அவர்கள் கூறுகிறார்கள். எல்லா மனுஷர்களும் வரலாறு முழுவதிலும் கொண்டிருந்த, அவர்கள் இன்றும் கொண்டிருக்கிற கருத்து இது அல்லவா? பூமியில் என்னை உண்மையாகவும் முழுமையாகவும் அறியக்கூடியவர்கள் யாரும் இல்லை என்று நான் சொன்னேன். இந்தக் கருத்து அதன் தாக்கங்களைக் கொண்டுள்ளது; அது வெறும் வெற்றுப் பேச்சு அல்ல. இதை நானே அனுபவித்து கவனித்திருக்கிறேன், எனவே விவரங்கள் பற்றிய புரிதலை நான் பெற்றிருக்கிறேன். நான் மனித உலகத்திற்கு இறங்கி வராமல் இருந்திருந்தால், என்னை அறிய யாருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்? என் வார்த்தைகளை யாரால் நேரில் கேட்க முடிந்திருக்கும்? அவர்களுக்கிடையே என் உருவத்தை யாரால் பார்க்க முடிந்திருக்கும்? காலங்காலமாக, நான் எப்போதும் மேகங்களுக்குள் மறைந்திருக்கிறேன். ஆரம்பத்தில், நான் முன்னதாகவே இவ்வாறு சொன்னேன்: “முன்மாதிரியாக ஊழியம் செய்ய, கடைசி நாட்களில் நான் மனித உலகத்திற்கு இறங்கி வருவேன்.” இதனால்தான், இன்றைய ஜனங்கள் மட்டுமே, தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். இது நான் அவர்கள் மீது வைத்திருக்கும் தயவு அல்லவா? உண்மையில், என் கிருபையை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லையா? மனுஷர்கள் ஏன் மிகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் மந்தப்புத்தியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? இவ்வளவு தூரம் அவர்கள் வந்திருக்கிறார்கள்; அவர்கள் ஏன் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை? நான் இந்த உலகில் பல வருடங்களாக இருந்திருக்கிறேன், ஆனால் என்னை யாருக்குத் தெரியும்? நான் ஜனங்களை சிட்சிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. அவர்கள் எனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான பொருட்களாகத்தான் தோன்றுகிறார்கள்; சுடப்பட்டவுடனே அனைத்தும் “தப்பிச் சென்றுவிடும்” என் துப்பாக்கியில் உள்ள தோட்டாக்களாக அவர்கள் இருப்பதைப் போலத் தெரிகிறது. ஜனங்கள் அதை அப்படித்தான் கற்பனை செய்கிறார்கள். நான் மனுஷர்களை எப்போதும் மதித்திருக்கிறேன்; நான் அவர்களைத் தன்னிச்சையாக ஒருபோதும் சுரண்டவோ அல்லது அடிமைகளைப் போல அவர்களை விற்றதோ இல்லை. ஏனென்றால், நான் அவர்களை விட்டுவிட முடியாது, என்னையும் அவர்களால் விட்டுவிட முடியாது. இதனால், எங்களுக்கு இடையே ஜீவனும் மரணமும் என்ற பந்தம் உருவாகியுள்ளது. நான் எப்போதும் மனிதகுலத்தை நேசித்திருக்கிறேன். மனிதகுலம் என்னை ஒருபோதும் நேசித்திருக்கவில்லை என்றாலும், அவர்கள் எப்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அதனால்தான் நான் அவர்களுக்காக முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறேன். நான் என் சொந்தப் பொக்கிஷம் போல, ஜனங்களை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர்கள்தான் பூமியில் என் நிர்வாகத்தின் “மூலதனமாக” இருக்கிறார்கள்; எனவே, நான் நிச்சயமாக அவர்களை அகற்றிவிட மாட்டேன். மனுஷர்கள் மீதான எனது சித்தம் என்றும் மாறாது. என் பிரமாணத்தை அவர்களால் உண்மையிலேயே நம்ப முடியுமா? எனக்காக அவர்கள் எப்படி என்னையே திருப்திப்படுத்த முடியும்? இது முழு மனிதகுலத்திற்கும் நியமிக்கப்பட்ட பணியாகும்; அது நான் அவர்களுக்கு நியமித்திருக்கிற “வீட்டுப்பாடம்” ஆகும். அதை நிறைவேற்ற அவர்கள் அனைவரும் கடுமையாக உழைப்பார்கள் என்பதுதான் எனது நம்பிக்கை ஆகும்.

ஏப்ரல் 23, 1992

முந்தைய: அத்தியாயம் 34

அடுத்த: அத்தியாயம் 36

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக