பேதுருவின் வாழ்க்கை

பேதுரு, மனிதகுலத்திற்கு தேவன் ஏற்படுத்திய முன்மாதிரியாகவும், எல்லோராலும் அறியப்பட்ட ஒரு தலைவனாகவும் இருந்தான். ஏன் இவ்வளவு குறிப்பிடத்தகாத ஒருவன் தேவனால் உதாரண புருஷனாக உயர்த்தப்பட்டான் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளால் போற்றப்பட்டான்? இது தேவன் மீதான அவனது அன்பின் வெளிப்பாட்டிலிருந்தும் தேவனை நேசிக்கும் தீர்மானத்திலிருந்தும் பிரிக்க முடியாதது என்று சொல்ல வேண்டியதில்லை. தேவன் மீதான அன்பு பேதுருவின் இருதயத்தால் எப்படி வெளிப்படுத்தப்பட்டது, அவனுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் உண்மையில் எப்படி இருந்தன என்பதைப் பொறுத்தவரை, அந்தக் காலத்தின் பழக்கவழக்கங்களை மீண்டும் பார்க்கவும், அந்தக் காலத்து பேதுருவை உற்று கவனிக்கவும் நாம் கிருபையின் காலத்திற்குத் திரும்ப வேண்டும்.

பேதுரு ஒரு சாதாரண யூத விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். அவனது பெற்றோர் விவசாயம் செய்வதன் மூலம் முழுக் குடும்பத்தையும் ஆதரித்து வந்தனர், மேலும் அவன் நான்கு சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பிறந்து, எல்லா பிள்ளைகளிலும் மூத்தவனாய் இருந்தான். நிச்சயமாக, நமது கதையின் முக்கிய பகுதி இதுவல்ல; பேதுருதான் நமது மையக் கதாபாத்திரமாய் இருக்கிறான். அவனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, பேதுருவின் பெற்றோர் அவனுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில், யூத ஜனங்கள் மிகவும் கல்வியறிவுமிக்கவர்களாய் இருந்தனர், மேலும் குறிப்பாக விவசாயம், தொழில் மற்றும் வணிகம் போன்ற துறைகளில் முன்னிலையில் இருந்தனர். அவர்களின் சமூகச் சூழலின் விளைவாக, பேதுருவின் பெற்றோர் இருவரும் உயர் கல்வியைப் பெற்றிருந்தனர். கிராமப்புறங்களில் இருந்து வந்தாலும், அவர்கள் நன்கு படித்தவர்களும் இன்றைய சராசரி பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒப்பிடத்தக்கவர்களுமாய் இருந்தார்கள். வெளிப்படையாக, பேதுரு அத்தகைய சாதகமான சமூக சூழ்நிலையில் பிறந்ததால் பாக்கியவானாய் இருந்தான். புத்திசாலித்தனமாகவும் விரைவாகவும் உள்வாங்கி, புதிய கருத்துக்களை எளிதில் உட்கிரகித்தான். அவன் தனது படிப்புகளைத் தொடங்கிய பிறகு, அவன் பாடங்களைப் படிக்கும்போது விஷயங்களை மிக எளிதாகப் புரிந்துகொண்டான். அவனது பெற்றோர் அத்தகைய புத்திசாலித்தனமான மகனைப் பெற்றதில் பெருமிதம் கொண்டனர், மேலும் அவனால் தன்னைத் தனித்துவப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் மற்றும் சமூகத்தில் ஏதேனும் ஓர் உத்தியோகபூர்வ பதவியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவனைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க எல்லா முயற்சிகளையும் செய்தனர். தன்னை அறியாமலேயே, பேதுரு தேவன் மீது ஆர்வம் காட்டினான், அதன் விளைவாக, பதினான்கு வயதில், அவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, அவன் படித்துக்கொண்டிருந்த பண்டைய கிரேக்க கலாச்சாரத்தின் பாடத்திட்டத்தில், குறிப்பாக கற்பனையான மனுஷர்கள் மற்றும் உருவாக்கப்பட்ட-பண்டைய கிரேக்க வரலாற்று நிகழ்வுகளில் வெறுப்படைந்தான். அப்போதிருந்து, தனது இளமைப் பருவத்தின் வசந்த காலத்திற்குள் பிரவேசித்திருந்த பேதுரு—மனுஷ வாழ்க்கை மற்றும் பரந்த உலகத்தைப் பற்றி மேலும் அறிய முயற்சி செய்யத் தொடங்கினான். ஜனங்கள் அனைவரும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு வாழ்வதையும், அவர்கள் அனைவரும் அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதையும், ஐசுவரியத்துக்காகவும் அங்கிகரிப்புக்காகவும் போராடுகிற தங்களது போராட்டத்தினால், தங்கள் சொந்த வாழ்க்கையைத் தாங்களே அழித்துக் கொண்டும் இருப்பதைத் தெளிவாகக் கண்டதால், அவனது பெற்றோர் சுமந்திருந்த வேதனைக்கான பலனைத் திருப்பிச் செலுத்த அவனது மனசாட்சி அவனை வற்புறுத்தவில்லை. அவனது நுண்ணறிவு பெரும்பாலும் அவன் வாழ்ந்த சமூகச் சூழலுடன் தொடர்புடையதாய் இருந்தது. மனுஷர்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறதோ, அந்தளவுக்கு அவர்களின் தனிப்பட்ட உறவுகள் மற்றும் உள் உலகங்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றன, எனவே அவ்வளவு அதிகமாக அவர்கள் வெறுமையில் வாழ்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பேதுரு தனது ஓய்வு நேரத்தை அதிக அளவிலான சந்திப்புகளில் செலவிட்டான், அவற்றில் பெரும்பாலானவை மத பிரமுகர்களிடம் இருந்தன. மனுஷ உலகில் விவரிக்க முடியாத அனைத்திற்கும் மதம் காரணமாக இருக்கலாம் என்ற குழப்பமான உணர்வு அவனது இருதயத்தில் தோன்றியது, எனவே அவன் அடிக்கடி அருகிலுள்ள ஜெப ஆலயத்திற்குச் சென்று ஆராதனைகளில் கலந்துகொள்வான். அவனது பெற்றோர் இதை அறியாதிருந்தார்கள், மேலும் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே, எப்போதும் நல்ல குணமும் சிறந்த புலமையும் கொண்டிருந்த பேதுரு, பள்ளிக்குச் செல்வதை வெறுக்கத் தொடங்கினான். அவனது பெற்றோரின் மேற்பார்வையில், அவன் உயர்நிலைப் பள்ளியைக் கஷ்டப்பட்டு முடித்துவிட்டான். அறிவுப் பெருங்கடலில் இருந்து நீந்திக் கரை சேர்ந்து, பெருமூச்சு வாங்கினான்; அப்போதிருந்து, யாரும் அவனுக்குக் கல்வி கற்பிக்கவோ அல்லது அவனைக் கட்டுப்படுத்தவோ இல்லை.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவன் எல்லா வகையான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினான், ஆனால் பதினேழு வயதில், அவன் இன்னும் பரந்து விரிந்த உலக அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, புத்தகங்களைப் படிக்கவும், மதரீதியான ஆராதனைகளில் கலந்து கொள்ளவும் தன்னால் முடிந்த அளவு நேரத்தை ஒதுக்கிக் கொண்டே விவசாயம் செய்து தன்னைத்தானே ஆதரித்தான். அவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த அவனது பெற்றோர், தங்கள் “கலகக்கார மகனுக்காக” பரலோகத்தை அடிக்கடி சபித்தனர், ஆனால் இது கூட நீதிக்கான அவனது பசி மற்றும் தாகத்தின் வழியில் குறுக்கே நிற்க முடியவில்லை. பேதுரு தனது அனுபவங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பின்னடைவுகளைச் சந்திக்கவில்லை, ஆனால் அவனது இருதயம் பேரார்வம் மிகுந்த ஒன்றாக இருந்தது, அவன் மழைக்குப் பிறகு வளரும் புல் போல் வளர்ந்தான். கொஞ்ச நாட்களுக்குள்ளேயே, அவன் மத உலகில் சில மூத்த நபர்களை சந்திக்கும் அளவுக்குப் போதிய “அதிர்ஷ்டசாலி” ஆகிவிட்டான், மேலும் அவனது ஏக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், எப்போதும் இல்லாத அளவுக்கு, அவன் ஏறக்குறைய தனது முழு நேரத்தையும் அவர்களுடன் செலவிட்டுக்கொண்டிருக்கும் வரைக்கும், அவன் அவர்களுடன் அடிக்கடி பழகத் தொடங்கினான். திருப்தியான மகிழ்ச்சியில் மூழ்கியதும், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் உதடுகளால் நம்புகிறார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் இருதயங்களைத் தங்கள் விசுவாசத்திற்குக் கொடுக்கவில்லை என்பதையும் அவன் திடீரென்று உணர்ந்தான். நேர்மையான மற்றும் தூய்மையான ஆத்துமாவை உடைய பேதுருவால் அத்தகைய அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அவன் பழகிய அனைத்து ஜனங்களும் மனித உடையில் இருந்த மிருகங்கள்—அவர்கள் மனித முகத்துடன் கூடிய விலங்குகள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நேரத்தில், பேதுரு மிகவும் அப்பாவியாக இருந்தான், எனவே பல சந்தர்ப்பங்களில் அவன் இருதயத்திலிருந்து அவர்களிடம் கெஞ்சினான். ஆனால் இந்தக் கபடமுள்ள, தந்திரமான மத பிரமுகர்கள் இந்த உணர்ச்சிவசப்பட்ட இளைஞனின் வேண்டுகோளுக்கு எப்படி செவிசாய்க்க முடியும்? இந்த நேரத்தில்தான் பேதுரு மனித வாழ்க்கையின் உண்மையான வெறுமையை உணர்ந்தான்: வாழ்க்கையின் கட்டத்தின் முதல் படியில், அவன் தோல்வியடைந்திருந்தான். ஒரு வருடம் கழித்து, அவன் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்கினான்.

18 வயதான பேதுருவை அந்தப் பின்னடைவு மிகவும் முதிர்ச்சியுடையவனாகவும், அதிநவீனமானவனாகவும் ஆக்கியது. இனி அவனுடைய இளமையின் அப்பாவித்தனத்துக்கான எந்தத் தடயமும் இல்லை; இளைஞர்களின் அப்பாவித்தனம் மற்றும் எளிமையான தன்மை ஆகியவை அவன் சந்தித்த பின்னடைவால் கடுமையாக நசுக்கப்பட்டு, அவன் ஒரு மீனவனாக வாழ்க்கையைத் தொடங்கினான். அதன்பிறகு, அவனுடைய படகில் அவன் பிரசங்கிப்பதை ஜனங்கள் கேட்பதைக் காணலாம். மீன்பிடித் தொழிலையே தன் வாழ்வாதாரமாகக் கொண்ட அவன், சென்ற இடமெல்லாம் செய்தியைப் பரப்புவான், அவன் பிரசங்கத்தைக் கேட்ட எல்லோரும் அவனுடைய பிரசங்கங்களால் மெய்மறந்து போயினர், ஏனென்றால், அவன் பேசியது சாதாரண ஜனங்களின் இருதயங்களைத் தாக்கியது. அவர்கள் அனைவரும் அவனது நேர்மையினால் ஆழமாகத் தொடப்பட்டனர். மற்றவர்களை இருதயத்திலிருந்து நடத்தவும், வானங்கள் மற்றும் பூமி மற்றும் எல்லாவற்றின் மீதும் சர்வவல்லமையுள்ளவரை அழைக்கவும், வெட்கக்கேடான செயல்களைச் செய்யும்படித் தங்கள் மனசாட்சியைப் புறக்கணிக்காதிருக்கவும், எல்லா விஷயங்களிலும் தங்கள் இருதயத்தில் நேசித்த தேவனைத் திருப்திப்படுத்தவும் அவன் ஜனங்களுக்கு அடிக்கடி கற்றுக் கொடுத்தான். அவனுடைய பிரசங்கங்களைக் கேட்ட பிறகு ஜனங்கள் அடிக்கடி ஆழமாகத் தொடப்பட்டனர்; அவர்கள் அனைவரும் அவனால் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தனர் மற்றும் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதனர். அந்தக் காலத்தில், அவனைப் பின்பற்றுபவர்களாயிருந்த, ஆதரவற்றவர்களாகவும், இயல்பாக, அந்தக் காலத்தில் இருந்த சமூகம் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாய் இருந்தாலும் அவர்கள் அனைவராலும் அவன் பெரிதும் போற்றப்பட்டான். பேதுரு அந்த சமயத்தில் சமூகத்தின் மதக் காரியங்களால் துன்புறுத்தப்பட்டான். இவையனைத்தும், இரண்டு வருடங்களாக, அவன் இடம் விட்டு இடம் பெயர்ந்து, தனிமையில் வாழ்வதற்கு வழிவகுத்தன. இந்த இரண்டு வருட அசாதாரண அனுபவங்களில், அவன் பல நுண்ணறிவுகளைப் பெற்றான், மேலும் அவன் இதற்கு முன் அறிந்திராத விஷயங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டான், அதாவது அவன் தனது 14 வயதினிலேயே அடையாளம் காண முடியாதவனாக ஆகிவிட்டான், அவனுடன் இப்போது எதுவும் பொதுவானதாக இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. இந்த இரண்டு ஆண்டுகளில், அவன் எல்லா வகையான ஜனங்களையும் சந்தித்தான் மற்றும் சமூகத்தைப் பற்றிய அனைத்து வகையான உண்மைகளையும் கண்டான். இதன் விளைவாக, அவன் படிப்படியாக மத உலகில் இருந்து வருகிற அனைத்து வகையான சடங்குகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளத் தொடங்கினான். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவன் ஆழமாகத் தொடப்பட்டான்; அது வரையில், இயேசு பல வருடங்களாகக் கிரியை செய்து கொண்டிருந்தார், எனவே பேதுருவின் கிரியையும் அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் தூண்டப்பட்டதாய் இருந்தது, இருப்பினும் அவன் இன்னும் இயேசுவை சந்தித்திருக்கவில்லை. இந்தக் காரணத்தினால்தான், பேதுரு பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, முந்தைய தலைமுறை பரிசுத்தவான்கள் ஒருபோதும் பெற்றிராத அநேக விஷயங்களைப் பெற்றான். நிச்சயமாக, அந்த நேரத்தில், அவன் இயேசுவைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தான், ஆனாலும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு இதுவரை கிடைத்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியினால் பிறந்த அந்த பரலோக உருவத்தைக் காண மட்டுமே அவன் நம்பிக்கையும் ஏக்கமும் கொண்டிருந்தான்.

ஒரு மாலைப் பொழுதின் அந்தி சாயும் நேரத்தில், பேதுரு தனது படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தான் (அப்போது கலிலேயா கடல் என்று அறியப்பட்ட கடற்கரைக்கு அருகில்). அவன் கைகளில் ஒரு மீன்பிடிக்கும் தூண்டில் இருந்தது, ஆனால் அவன் மனதிலோ வேறு விஷயங்கள் இருந்தன. அஸ்தமனமாகும் சூரியனானது தண்ணீரின் மேற்பரப்பை ஒரு பரந்த இரத்தக் கடல் போல ஒளிரச் செய்தது. அந்த ஒளி பேதுருவின் இளமையான, அதே சமயத்தில் அமைதியான மற்றும் சாந்தமான முகத்தில் பிரதிபலித்தது; அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றியது. அந்த நேரத்தில், ஒரு தென்றல் வீசியது, அவன் திடீரென்று தனது வாழ்க்கையின் தனிமையை உணர்ந்தான், அது உடனடியாக அவனுக்கு நம்பிக்கையற்ற உணர்வைக் கொடுத்தது. சமுத்திரத்தின் அலைகள் வெளிச்சத்தில் மினுமினுக்க, அவன் மீன் பிடிக்கும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவன் சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, திடீரென்று பின்னால் யாரோ ஒருவர், சொல்வதைக் கேட்டான், “யூதனாகிய சீமோன் பர்ஜோனாவே, உன் வாழ்க்கையின் நாட்கள் தனிமையானவையாக இருக்கின்றன. நீ என்னைப் பின்பற்றுவாயா?” திடுக்கிட்ட பேதுரு, தான் பிடித்திருந்த மீன்பிடித் தூண்டிலை உடனடியாகக் கீழே போட்டான், அது உடனடியாக கடலின் அடிப்பகுதியில் மூழ்கிவிட்டது. ஒரு மனுஷன் தன் படகில் நிற்பதைப் பார்க்க பேதுரு அவசரமாகத் திரும்பினான். அவன் அவரை மேலும் கீழும் பார்த்தான்: தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மனுஷனின் தலைமுடி, சூரிய ஒளியில் சிறிது தங்க நிறம் கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்தது, அவர் சாம்பல் நிற ஆடைகளை அணிந்திருந்தார், நடுத்தர உயரத்தில் இருந்தார், மேலும் தலை முதல் கால் வரை ஒரு யூத மனுஷனைப்போல உடையணிந்திருந்தார். மங்கிய வெளிச்சத்தில், அந்த மனுஷனின் சாம்பல் நிற ஆடை சற்று கறுப்பாகத் தெரிந்தது, அவரது முகத்தில் லேசான பிரகாசம் தெரிந்தது. பலமுறை, பேதுரு இயேசுவை சந்திக்க முயன்றிருக்கிறான், ஆனால் ஒருபோதும் கண்டிருந்ததில்லை. அந்த நேரத்தில், தனது உள்ளத்தின் ஆழத்தில், பேதுரு இந்த மனுஷன்தான் தனது இருதயத்தின் பரிசுத்தமானவராக இருக்க வேண்டும் என்று நம்பி, அதனால் அவன் மீன்பிடிக்கும் படகிலேயே சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, “பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வந்திருக்கிற கர்த்தர், நீராக இருக்கக் கூடுமோ? நான் உமது அனுபவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் பார்த்ததில்லை. நான் உம்மைப் பின்தொடர விரும்பியிருக்கிறேன், ஆனால் என்னால் உம்மைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறினான். அதற்குள், இயேசு படகின் அறைக்குச் சென்றார், அங்கு அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். “எழுந்து என் அருகில் உட்கார்!” என்று அவர் சொன்னார். “என்னை மெய்யாகவே நேசிப்பவர்களைத் தேட நான் இங்கு வந்திருக்கிறேன். நான் விசேஷமாகப் பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக வந்திருக்கிறேன், மேலும், என்னுடன் ஒரே மனதுள்ளவர்களைத் தேடுவதற்காக தேசம் முழுவதும் பயணிப்பேன். நீ ஆயத்தமாய் இருக்கிறாயா?” என்று கூறினார். பேதுரு பதிலளித்தான்: “பரலோகப் பிதாவினால் அனுப்பப்பட்டவரை நான் பின்பற்ற வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்டவரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் பரலோகப் பிதாவை நேசிப்பதால், உம்மைப் பின்பற்ற நான் எப்படி விருப்பமில்லாமல் இருக்க முடியும்?” பேதுருவின் வார்த்தைகள் மதக் கருத்துகளால் நிறைந்திருந்தாலும், இயேசு புன்னகைத்து, திருப்தியுடன் தலையசைத்தார். அந்த நேரத்தில், பேதுரு மீது தகப்பனுடைய அன்பின் உணர்வு அவருக்குள் பெருகியது.

பேதுரு பல ஆண்டுகளாக இயேசுவைப் பின்தொடர்ந்தான், மற்றவர்களிடம் இல்லாத அநேக காரியங்களைத் தனக்குள் கண்டான். ஒரு வருடம் அவரைப் பின்பற்றிய பிறகு, பன்னிரண்டு சீஷர்களின் மத்தியிலிருந்து பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டான். (நிச்சயமாக, இயேசு இதை உரக்கப் பேசவில்லை, மற்றவர்களும் இதைப் பற்றி அறிந்திருக்கவே இல்லை.) வாழ்க்கையில், இயேசு செய்த எல்லாவற்றினாலும் பேதுரு தன்னைத்தானே நிதானித்தறிந்தான். மிகக் குறிப்பாக, இயேசு பிரசங்கித்த செய்திகள் அவனது இருதயத்தில் பதிந்தன. அவன் இயேசுவுக்கு முற்றிலும் அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் இருந்தான், மேலும், அவன் ஒருபோதும் அவருக்கு எதிராக எந்தவித குறைகளையும் பேசவில்லை. இதன் விளைவாக, அவன், அவர் சென்ற இடமெல்லாம் இயேசுவின் விசுவாசமுள்ள தோழன் ஆனான். பேதுரு, இயேசுவின் போதனைகள், அவரது மென்மையான வார்த்தைகள், அவர் உணவாக என்ன எடுத்துக்கொண்டார், அவரது உடை, அவரது தங்குமிடம் மற்றும் அவர் எப்படி பயணம் செய்தார் என்பதைக் கவனித்தான். அவன் எல்லா விஷயங்களிலும் இயேசுவைப் பின்பற்றினான். அவன் ஒருபோதும் சுயநீதியுள்ளவனாக இருக்கவில்லை, ஆனால் காலாவதியான அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, வார்த்தையிலும் செயலிலும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றிக்கொண்டிருந்தான். அப்போதுதான், வானங்களும் பூமியும் மற்றும் அனைத்தும் சர்வவல்லமையுள்ளவரின் கரங்களில் இருந்ததாகவும், இந்தக் காரணத்திற்காகவே, அவன் தனிப்பட்ட விருப்பமின்றி இருப்பதாகவும் பேதுரு உணர்ந்தான். இயேசு எப்படி இருந்தார் என்ற அனைத்தையும் பேதுரு நன்கு உள்வாங்கி, அதை ஒரு முன்மாதிரியாகப் பயன்படுத்தினான். இயேசுவின் வாழ்க்கை அவர் செய்ததில் அவர் சுயநீதியுள்ளவராக இல்லை என்பதைக் காட்டுகிறது; தன்னைப் பற்றி பெருமையாகக் காட்டுவதற்குப் பதிலாக, ஜனங்களை அவர் அன்புடன் நடத்தினார். இயேசு எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதைப் பல்வேறு விஷயங்கள் காட்டின, இந்தக் காரணத்திற்காகவே, பேதுரு அவரைப் பற்றிய அனைத்தையும் பின்பற்றினான். பேதுருவின் அனுபவங்கள் அவனுக்கு இயேசுவின் மீதான அன்பின் அதிகப்படியான உணர்வை அளித்தன, மேலும் அவன் இதுபோன்ற விஷயங்களைச் சொன்னான்: “நான் சர்வவல்லவரைப் பிரபஞ்சம் முழுவதும் தேடியிருக்கிறேன், வானங்கள் மற்றும் பூமி மற்றும் எல்லாவற்றின் அதிசயங்களையும் கண்டிருக்கிறேன். மேலும் இவ்வாறு, சர்வவல்லவருடைய அழகின் ஆழமான உணர்வைப் பெற்றிருக்கிறேன். இருப்பினும், என் சொந்த இருதயத்தில் உண்மையான அன்பை நான் கொண்டிருந்திருக்கவில்லை, சர்வவல்லமையுள்ளவரின் அழகை நான் என் சொந்தக் கண்களால் பார்த்திருந்ததில்லை. இன்று, சர்வவல்லவரின் பார்வையில், நான் அவரால் தயவுடன் நோக்கிப் பார்க்கப்பட்டேன், இறுதியாக நான் தேவனுடைய அழகை உணர்ந்திருக்கிறேன். தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்திருப்பது மனிதகுலத்தை, அவரை நேசிக்கச் செய்வதற்காக மட்டுமல்ல என்பதை நான் இறுதியாகக் கண்டுபிடித்திருக்கிறேன்; எனது அன்றாட வாழ்வில், அவருடைய எல்லையற்ற தயவைக் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போது காணக்கூடியவற்றுடன் இது எவ்வாறு மட்டுப்படுத்தப்படலாம்?” காலம் செல்லச் செல்ல, அநேக அழகான விஷயங்கள் பேதுருவில் வெளிப்பட்டன. அவன் இயேசுவுக்கு மிகவும் கீழ்ப்படிந்தவனாய் ஆனான், உண்மையிலேயே, அவன் சில பின்னடைவுகளையும் சந்தித்தான். இயேசு அவனைப் பல்வேறு இடங்களுக்குப் பிரசங்கிக்க அழைத்துச் சென்றபோது, பேதுரு எப்போதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு இயேசுவின் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் அநேக வருடங்களாக இயேசுவைப் பின்பற்றியதன் காரணமாக, அவன் ஒருபோதும் கர்வம் கொள்ளவில்லை. தாம் வந்திருப்பதற்கான காரணம் சிலுவையில் அறையப்பட வேண்டும், அதன்மூலம் அவர் தம்முடைய கிரியையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்று இயேசுவால் சொல்லப்பட்ட பிறகு, பேதுரு அடிக்கடி தன் இருதயத்தில் வேதனையை உணர்ந்து, இரகசியமாகத் தனியாக அழுதான். ஆயினும்கூட, அந்த “துரதிர்ஷ்டவசமான” நாள் இறுதியாக வந்தது. இயேசு கைது செய்யப்பட்ட பிறகு, பேதுரு தன்னுடைய மீன்பிடிக்கும் படகில் தனியாக அழுது, இதற்காக பல ஜெபங்களை ஏறெடுத்தான். ஆனாலும் அவனது உள்ளத்தில், இது பிதாவாகிய தேவனுடைய சித்தம் என்றும், அதை யாராலும் மாற்ற முடியவில்லை என்றும் அவன் அறிந்திருந்தான். அவன் தனது அன்பினால் மட்டுமே வேதனையடைந்து கண்ணீரினால் நிறைந்த கண்களுடன் இருந்தான். இது நிச்சயமாக ஒரு மனுஷனுடைய பலவீனமாகும். இவ்வாறு, இயேசு சிலுவையில் அறையப்படுவார் என்று அறிந்ததும், அவன் இயேசுவிடம், “நீர் விட்டுச் சென்ற பின்பு, நீர் மீண்டும் எங்கள் மத்தியில் இருக்கவும், எங்களைக் கவனித்துக்கொள்ளவும் திரும்பி வருவீரா? எங்களால் இன்னும் உம்மைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டான். இந்த வார்த்தைகள் மிகவும் குழந்தைத்தனமானவையாகவும், மனுஷீகக் கருத்துக்கள் நிறைந்தவையாகவும் இருந்தாலும், பேதுரு அனுபவிக்கிற துன்பத்தின் கசப்பை இயேசு அறிந்திருந்தார், எனவே அவருடைய அன்பின் மூலம் அவர் பேதுருவின் பலவீனத்தைக் கருதி: “பேதுருவே, நான் உன்னை நேசித்திருக்கிறேன். அது உனக்குத் தெரியுமா? நீ சொல்வதில் எந்தக் காரணமும் இல்லை என்றாலும், என் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, 40 நாட்களுக்கு நான் ஜனங்களுக்கு முன்பாகத் தோன்றுவேன் என்று பிதாவானவர் வாக்குப்பண்ணி இருக்கிறார். என் ஆவியானவர் உங்கள் அனைவர் மீதும் அடிக்கடி கிருபை வழங்குவார் என்று நீ நம்புவதில்லையா?” என்று கூறினார். இதனால் பேதுரு சற்று ஆறுதலாக உணர்ந்தாலும், ஏதோ ஒன்று குறைவுற்றிருக்கிறது என்று உணர்ந்தான், அதனால், உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு அவனுக்கு முதல் முறையாக வெளிப்படையாகத் தோன்றினார். இருப்பினும், பேதுரு தனது எண்ணங்களைத் தொடர்ந்து சார்ந்துகொள்வதைத் தடுப்பதற்காக, பேதுரு அவருக்காகத் தயாரித்த ஆடம்பர உணவை இயேசு மறுத்து, கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டார். அந்தத் தருணத்திலிருந்து, பேதுரு இறுதியாக கர்த்தராகிய இயேசுவைப் பற்றி ஆழமான புரிதலைப் பெற்றிருந்து, அவரை இன்னும் அதிகமாக நேசித்தான். உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு பேதுருவுக்கு அடிக்கடி தோன்றினார். நாற்பது நாட்களுக்குப் பிறகு அவர் பேதுருவுக்கு இன்னும் மூன்று முறை தோன்றினார், அதன்பின்னர், அவர் பரலோகத்திற்கு ஏறிச்சென்றிருந்தார். பரிசுத்த ஆவியானவரின் கிரியை முடிவடைய இருக்கும் போது, புதிய கிரியை தொடங்க இருக்கும் போது ஒவ்வொரு தோற்றமும் சரியாக இருந்தது.

பேதுரு தனது வாழ்நாள் முழுவதும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்து வாழ்ந்தான், ஆனால் அதைவிட மேலாகப் பிரசங்கிப்பதற்காகவே வாழ்ந்தான். அவனது பிற்காலங்களில், அவன், பேதுரு எழுதின முதல் மற்றும் இரண்டாவது நிருபங்களையும், அதோடு கூட, அக்கால பிலதெல்பியா திருச்சபைக்குப் பல கடிதங்களையும் எழுதினான். இந்தக் காலத்து ஜனங்கள் அவனால் ஆழமாகத் தொடப்பட்டனர். அவன் தனது சொந்த நற்பெயர்களைப் பயன்படுத்தி ஜனங்களுக்கு போதிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைக்கான தேவையை வழங்கினான். இயேசு புறப்படுவதற்கு முன்பு அவருடைய போதனைகளை அவன் ஒருபோதும் மறக்கவில்லை, மேலும் அவனது வாழ்நாள் முழுவதும் அவைகளால் தொடப்பட்டான். இயேசுவைப் பின்பற்றும்போது, கர்த்தருடைய அன்பைத் தன்னுடைய மரணத்தின் மூலம் திருப்பிச் செலுத்தவும், எல்லாவற்றிலும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவும் அவன் தீர்மானித்தான். இயேசு இதற்கு ஒப்புக்கொண்டார், எனவே பேதுருவுக்கு 53 வயதாக இருந்தபோது (இயேசு சென்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பின்பு), அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற உதவுவதற்காக இயேசு அவனுக்குத் தோன்றினார். அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளில், பேதுரு தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டான். இந்த ஏழு வருடங்களின் முடிவில், ஒரு நாள், அவன் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டான், இவ்வாறு தனது அசாதாரண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

முந்தைய: அத்தியாயம் 6

அடுத்த: அத்தியாயம் 8

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக