அத்தியாயம் 27

மனித நடத்தை என் இருதயத்தை ஒருபோதும் தொட்டதில்லை, ஒருபோதும் அது எனக்கு விலையேறப்பெற்றதாகத் தோன்றவில்லை. மனிதனுடைய பார்வையில், நான் எப்போதும் அவனிடம் கண்டிப்பாக இருக்கிறேன், எப்போதும் அவன்மீது அதிகாரம் செலுத்துகிறேன். மனிதனின் எல்லா செயல்பாடுகளிலும், எதுவும் என் பொருட்டு செய்யப்படுவது அரிதாகவே உள்ளது, என் கண்களுக்கு முன்பாக உறுதியாக நிற்கும் எதுவும் அரிதாகவே உள்ளது. இறுதியில், மனிதனுக்குரிய எல்லாமே ஒரு சலசலப்பும் இல்லாமல் என் முன் கவிழ்ந்துபோகின்றன; அதன்பிறகுதான் நான் எனது கிரியைகளை வெளிப்படுத்துகிறேன், ஒவ்வொருவரும் தங்கள் தோல்வியின் மூலம் என்னை அறிந்துகொள்ளச் செய்கிறேன். மனித இயல்பு மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது. அவர்களின் இருதயத்தில் இருப்பது என் சித்தத்திற்கு ஏற்ப இல்லை, எனக்குத் தேவையானது அது இல்லை. மனிதனிடம் உள்ள பிடிவாதம் மற்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரியத் தலைப்படும் தன்மை இவற்றையே நான் மிகவும் வெறுக்கிறேன், ஆனால் என்னை அறியத் தவறுவதற்கு, எப்போதும் என்னைத் தூரத்தில் வைத்திருப்பதற்கு, எனக்கு முன்பாக என் சித்தத்திற்கு ஏற்ப ஒருபோதும் செயல்படாமல் அதற்கு மாறாக என்னை என் முதுகுக்குப் பின்னால் எதிர்ப்பதற்கு மனிதனைத் தூண்டும் சக்தி எது? இதுதான் அவர்களது விசுவாசமா? இதுதான் அவர்கள் என்மீது காட்டும் அன்பா? அவர்களால் ஏன் மனந்திரும்பி மறுபடியும் பிறக்க முடியவில்லை? சேறு இல்லாத இடத்திற்குப் பதிலாகச் சகதியில் வாழ மக்கள் ஏன் எப்போதும் விரும்புகிறார்கள்? நான் அவர்களைத் தவறாக நடத்தியிருக்கக் கூடுமோ? நான் அவர்களுக்குத் தவறான திசையில் வழிகாட்டியிருக்கக் கூடுமோ? நான் அவர்களை நரகத்திற்கு வழிநடத்தியிருக்கக் கூடுமோ? எல்லோரும் “நரகத்தில்” வாழவே விரும்புகிறார்கள். வெளிச்சம் வரும்போது, அவர்களின் கண்கள் உடனடியாகக் குருடாகிவிடுகிறது, ஏனென்றால் அவர்களிடம் உள்ள அனைத்தும் நரகத்திலிருந்து வருகிறது. இருந்தாலும்கூட மக்கள் இதை அறியாதிருக்கிறார்கள், வெறுமனே இந்த “நரகத்தின் ஆசீர்வாதங்களை” அனுபவிக்கிறார்கள். நான் இந்தப் பொக்கிஷங்களைப் பறித்துக்கொண்டு, “அவை இருந்த தடயம்கூட” இல்லாமல் அவர்களை விட்டுவிடுவேன் என்று பயந்து, அவற்றைப் பொக்கிஷங்களாகத் தங்கள் மார்பில் பற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். மக்கள் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள், அதனால்தான், நான் பூமிக்கு வரும்போது, அவர்கள் என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறார்கள், எனக்கு அருகில் நெருங்குவதை வெறுக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் “தங்களுக்குத் தாங்களே தொந்தரவு ஏற்படுத்திக்கொள்ள” விரும்பவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் “பூமியில் மகிழ்ச்சியை” அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் குடும்பத்திற்குள் நல்லிணக்கத்தைப் பராமரிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பியபடி செய்து கொள்வதற்கு என்னால் மனிதர்களை அனுமதிக்க முடியாது, ஏனென்றால் மனிதனின் குடும்பத்தை அழிப்பதுதான் மிகச் சரியாக நான் இங்குச் செய்யவிருக்கிறேன். நான் வந்த தருணத்திலிருந்து, அவர்களின் வீடுகளில் இருந்து அமைதி போய்விட்டது. மனிதனின் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், நான் எல்லா தேசங்களையும் சில்லு சில்லாக அடித்து நொறுக்க விரும்புகிறேன். என் பிடியில் இருந்து யார் தப்பிக்க முடியும்? ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள் அவர்களது விருப்பமின்மை காரணமாகத் தப்பிக்க முடியுமா? தண்டனை பெற்றுத் துன்பப்படுபவர்கள் தங்கள் பயத்தின் காரணமாக எப்போதாவது என் அனுதாபத்தைப் பெற முடியுமா? எனது எல்லா வார்த்தைகளிலும், மக்கள் என் சித்தத்தையும் எனது கிரியைகளையும் பார்த்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய சொந்த எண்ணங்களின் சிக்கலில் இருந்து யாரால் விடுபடமுடியும்? என் வார்த்தைகளின் உள்ளே இருந்து அல்லது அவற்றின் வெளியே இருந்து ஒரு வழியை யார் கண்டுபிடிக்க முடியும்?

மனிதன் என் அரவணைப்பை அனுபவித்திருக்கிறான், மனிதன் விசுவாசத்துடன் எனக்குச் சேவை செய்திருக்கிறான், என் சமூகத்தில் எனக்காக எல்லாவற்றையும் செய்து, மனிதன் என் முன் விசுவாசத்துடன் கீழ்ப்படிந்திருக்கிறான். ஆயினும்கூட இது இன்றைய மக்களால் அடைய முடியாதது; பசியுள்ள ஓநாய்களால் பறிக்கப்பட்டதைப் போல அவர்கள் ஆவிகளுக்குள் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள், அவர்கள் உதவியற்றவர்களாக இடைவிடாமல் என்னிடம் கதறிக்கொண்டு என்னைப் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் முடிவில், அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் என் சமூகத்தின் முன்பாக வாக்குறுதிகளை அளித்ததையும், என் வாஞ்சையை அவர்களின் பாசத்தினால் திருப்பிச் செலுத்துவதாகக் கடந்த காலங்களில் என் சமூகத்தின் முன்பாக வானத்தின் மீதும் பூமியின் மீதும் எப்படி சத்தியம் செய்துகொடுத்தார்கள் என்பதை நான் திரும்பவும் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் சமூகத்தின் முன்பாகத் துக்கத்துடன் அழுதார்கள், அவர்களுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டால் மனம் உடைந்துபோகும், தாங்க முடியாது. அவர்களின் மன உறுதிப்பாடு காரணமாக, நான் அடிக்கடி மக்களுக்கு உதவி செய்வேன். எண்ணற்ற முறை, மக்கள் என் சமூகத்திற்குக் கீழ்ப்படிதலுக்காக வந்திருக்கிறார்கள், அவர்களின் அற்புதமான நடத்தைப் பாங்கு மறக்க முடியாதது. எண்ணற்ற முறைகள், அவர்களது விசுவாசத்தில் தடுமாற்றம் இன்றி அவர்கள் என்னை நேசித்திருக்கிறார்கள், அவர்களின் விசுவாசம் போற்றத்தக்கது. எண்ணற்ற முறைகள், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு என்னை நேசித்திருக்கிறார்கள், அவர்கள் தங்களைவிட அதிகமாக என்னை நேசித்தார்கள், அவர்களின் நேர்மையைப் பார்த்து, நான் அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டேன். எண்ணற்ற முறைகள், அவர்கள் என் சமூகத்தின் முன்பாக தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், என் பொருட்டு மரணத்தை அலட்சியம் செய்திருக்கிறார்கள், நான் அவர்களின் புருவங்களில் தெரியும் கவலையை எளிதாக்கினேன், அவர்களின் முகத்தோற்றங்களைக் கவனமாகப் பரிசீலித்திருக்கிறேன். நெஞ்சார நேசிக்கும் பொக்கிஷத்தைப் போல நான் அவர்களை நேசித்த எண்ணற்ற நேரங்களும் இருந்துள்ளன, என் சொந்தச் சத்துருவாக நான் அவர்களை வெறுத்த எண்ணற்ற நேரங்களும் இருந்துள்ளன. ஆயினும்கூட, என் மனதில் இருப்பது மனிதன் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது. மக்கள் சோகமாக இருக்கும்போது, நான் அவர்களை ஆறுதல்படுத்த வருகிறேன், அவர்கள் பலவீனமாக இருக்கும்போது, அவர்களுக்கு ஏதுவாக உதவுவதற்கு வருகிறேன். அவர்கள் தொலைந்து போகும்போது, நான் அவர்களை வழிநடத்துகிறேன். அவர்கள் அழும்போது, நான் அவர்களின் கண்ணீரைத் துடைக்கிறேன். ஆனால் நான் சோகமாக இருக்கும்போது, யார் தங்கள் இதயங்களால் என்னை ஆறுதல்படுத்த முடியும்? நான் மிகுந்த கவலையில் இருக்கும்போது, என் உணர்வுகளில் யார் அக்கறை காட்டுகிறார்கள்? நான் துக்கப்படுகையில், என் இதயத்தில் உள்ள காயங்களை யார் சரிசெய்ய முடியும்? எனக்கு யாராவது தேவைப்படும்போது, என்னுடன் ஒத்துழைக்க முன்வருபவர் யார்? என்மீது மக்கள் கொண்டிருந்த முந்தைய அணுகுமுறை இப்போது தொலைந்துவிட்டது, அது ஒருபோதும் திரும்பி வராதா? அவர்களின் நினைவுகளில் அது எதுவும் ஏன் மிஞ்சாமல் போய்விட்டது? மக்கள் இதையெல்லாம் எப்படி மறந்துபோனார்கள்? இவை அனைத்துக்கும் காரணம் மனிதனை அவனது சத்துரு சீரழித்ததனால்தான் இல்லையா?

தேவதூதர்கள் என்னைத் துதித்து இசையை மீட்டும்போது, இது மனிதன் மீதான எனது அனுதாபத்தைத் தூண்டாமல் இருக்க முடியாது. என் இதயம் இக்கணமே சோகத்தால் நிரம்பியுள்ளது, இந்த வேதனையான உணர்ச்சியிலிருந்து என்னை விடுவிப்பது என்பது சாத்தியமில்லை. மனிதனிடமிருந்து விலகிய பின்னர் மீண்டும் மனிதனுடன் ஒன்றிணைவதால் ஏற்படும் சந்தோஷங்களிலும் துக்கங்களிலும், நம்மால் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. மேலே பரலோகத்திலும், கீழே பூமியிலுமாகப் பிரிக்கப்பட்டிருப்பதால், மனிதனும் நானும் சந்திக்கக்கூடிய காலங்கள் அரிதானவை. முந்தைய நாட்களின் உணர்வுகளின் ஏக்கத்திலிருந்து யார் விடுபட முடியும்? கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்தக்கூடியவர் யார்? கடந்த கால உணர்வுகள் தொடர்வதை எதிர்பாராதவர்கள் யார்? நான் திரும்பி வருவதற்காக ஏங்காதவர் யார்? நான் மனிதனுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு நீண்ட காலமாக ஏக்கம் கொள்ளாதிருப்பவர் யார்? என் இருதயம் ஆழ்ந்த சஞ்சலத்தில் உள்ளது, மனிதனின் ஆவி ஆழ்ந்த கவலையில் உள்ளது. ஆவியில் ஒருமித்தவர்களாக இருந்தாலும், நாம் அடிக்கடி ஒன்றாக இருக்க முடியாது, நாம் ஒருவருக்கொருவர் அடிக்கடி பார்க்க முடியாது. இவ்வாறு எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் துக்கத்தால் நிறைந்திருக்கின்றன, உயிர்ச்சக்தி இல்லாது போய்விட்டது, ஏனென்றால் மனிதன் எப்போதும் எனக்காக ஏங்குகிறான். ஏதோ மனிதர்கள் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்ட பொருட்கள் போல; அவர்கள் பூமியில் என் பெயரைச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள், அவர்கள் தங்கள் பார்வையைத் தரையிலிருந்து என்னிடம் உயர்த்துகிறார்கள்—ஆனால் அவர்கள் எப்படிப் பெரும்பசி கொண்ட ஓநாயின் தாடைகளிலிருந்து தப்பிக்க முடியும்? அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் சோதனைகளிலிருந்து அவர்கள் எவ்வாறு தங்களை விடுவிக்க முடியும்? எனது திட்டத்தின் ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படிவதால் மனிதர்கள் எவ்வாறு தங்களைப் பலியாகத் தராமல் இருப்பார்கள்? அவர்கள் சத்தமாக மன்றாடும்போது, நான் என் முகத்தை அவர்களிடமிருந்து விலக்குகிறேன், இனிமேலும் பார்த்துக்கொண்டிருப்பதற்கு என்னால் முடியாது; ஆனால் அவர்களின் கண்ணீர் அழுகையை எப்படி நான் கேட்க முடியாமல் போயிற்று? மனித உலகின் அநீதிகளை நான் சரிசெய்வேன். சாத்தான் என் மக்களுக்கு மீண்டும் தீங்கு விளைவிப்பதையும் சத்துருக்கள் மீண்டும் அவர்கள் விரும்புவதைச் செய்வதையும் தடுத்து, உலகம் முழுவதிலும் என் சொந்தக் கைகளால் என் கிரியையைச் செய்வேன். நான் பூமியில் ராஜாவாகி, என் சிங்காசனத்தை அங்கே நகர்த்துவேன், என் சத்துருக்கள் அனைவரும் தரையில் விழுந்து, தங்கள் குற்றங்களை என் சமூகத்தின் முன்பாக ஒப்புக்கொள்வார்கள். என் சோகத்தில், கோபம் கலந்துள்ளது, நான் யாரையும் விட்டு வைக்காமல் முழு பிரபஞ்சத்தையும் தட்டையாக மிதித்துப் போடுவேன், என் சத்துருக்களின் இதயங்களில் அச்சத்தை உண்டுபண்ணுவேன். இனிமேல் அவர்கள் மனிதனைச் சீரழிக்கக்கூடாது என்பதற்காக நான் முழு பூமியையும் இடிபாடுகளாகச் சிதைத்து, என் சத்துருக்களை இடிபாடுகளுக்குள் தள்ளுவேன். எனது திட்டம் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது, வேறு யாரும், அவர்கள் யாராக இருந்தாலும் அதை மாற்றக்கூடாது. நான் பிரபஞ்சத்திற்கு மேலே கம்பீரமான ஆடம்பரத்துடன் சஞ்சரிப்பதால், மனிதர்கள் அனைவரும் புதியவர்களாக மாறுவார்கள், எல்லாமே புத்துயிர் பெறும். மனிதன் இனிமேல் அழமாட்டான், இனிமேல் என்னிடம் உதவிக்காக அழமாட்டான். அப்பொழுது என் இதயம் மகிழ்ச்சி அடையும், மக்கள் என்னிடம் கொண்டாட்டத்துடன் திரும்புவார்கள். பிரபஞ்சம் முழுவதும், மேலிருந்து கீழ்வரை, மகிழ்ச்சியில் குதூகலிக்கும்…

இன்று, உலகத்தில் இருக்கும் தேசங்களுக்கு இடையே, நான் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டுள்ள கிரியைகளையே நான் செய்கிறேன். நான் மனிதரின் நடுவே உலாவுகிறேன், எல்லாக் கிரியைகளையும் என் திட்டத்திற்குள் செய்கிறேன், எல்லா மனிதர்களும் என் சித்தத்திற்கு ஏற்ப எஞ்சிய தேசங்களை உடைக்கிறார்கள். பூமியிலுள்ள மக்கள் தங்கள் சொந்த முடிவின் மீது தங்கள் கவனத்தை வைத்திருக்கிறார்கள், ஏனென்றால் அந்த நாள் உண்மையில் நெருங்கி வருகிறது, தேவதூதர்கள் தங்கள் எக்காளங்களை ஊதுகிறார்கள். இனி தாமதங்கள் இருக்காது, அதன்பிறகு எல்லாச் சிருஷ்டிகளும் சந்தோஷத்தில் நடனமாடத் தொடங்குவார்கள். அவர்கள் விருப்பத்தின்படி எனது நாளை நீட்டிக்கக் கூடியவர் யார்? பூமியில் உள்ள ஒருவரா? அல்லது வானத்தில் உள்ள நட்சத்திரங்களா? அல்லது தேவதூதர்களா? இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பைத் தொடங்க நான் ஓர் உபதேசத்தைச் செய்யும்போது, மனிதர்கள் எல்லோருக்கும் எனது நாள் நெருங்குகிறது. ஒவ்வொரு மனிதனும் இஸ்ரவேல் திரும்பி வருவதைக் கண்டு அஞ்சுகிறான். இஸ்ரவேல் திரும்பி வரும்போது, அது என் மகிமையின் நாளாக இருக்கும், ஆகவே, எல்லாமே மாறி, புதுப்பிக்கப்படும் நாளாகவும் அது இருக்கும். நீதியான நியாயத்தீர்ப்பு முழு பிரபஞ்சத்தையும் நெருங்கி வரும்போது, எல்லா மனிதர்களும் அஞ்சி நடுங்கி பயம் கொள்கிறார்கள், ஏனென்றால் இது மனித உலகில் கேள்விப்படாத நீதியாகும். நீதியின் சூரியன் தோன்றும்போது, கிழக்கு வெளிச்சமடையும், பின்னர் அது முழு பிரபஞ்சத்தையும் வெளிச்சம் பெறச்செய்து, அனைவரையும் சென்றடையும். உண்மையிலேயே என் நீதியை மனிதன் நிறைவேற்றினால், பயப்படுவதற்கு என்ன இருக்கும்? என் மக்கள் அனைவரும் என் நாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் என் நாளின் வருகைக்காக ஏங்குகிறார்கள். நீதியின் சூரியன் என்ற எனது பங்குப்பணியில் மனிதர்கள் எல்லோரையும் பழிவாங்கவேண்டும், மனிதர்களின் முடிவை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். எனது ராஜ்யம் முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக வடிவம் பெறுகிறது, என் சிங்காசனம் கோடானு கோடி மக்களின் இருதயங்களை ஆளுகை செய்யும். தேவதூதர்களின் உதவியுடன், எனது அரும்பெரும் சாதனை விரைவில் பலனளிக்கத் தொடங்கும். என் மகன்கள் மற்றும் என் மக்கள் அனைவரும் என் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள், மீண்டும் ஒருபோதும் பிரிக்கப்படாமல் அவர்களுடன் நான் ஒன்றிணைய வேண்டும் என்று ஏங்குகிறார்கள். நான் அவர்களுடன் ஒன்றாக இருப்பதால் என் ராஜ்யத்தின் மிகப் பெரிய திரளான மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டி போடமாட்டார்களா? இது எந்தவொரு விலைக்கிரயமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரு மறு ஐக்கியமாக இருக்க முடியுமா? எல்லா மனிதர்களின் பார்வையிலும் நான் கௌரவமானவன், அனைவரின் வார்த்தைகளிலும் இவ்வாறு நான் அறிவிக்கப்படுகிறேன். மேலும், நான் திரும்பி வரும்போது, எல்லா சத்துரு படைகளையும் நான் வெல்வேன். அதற்கான நேரம் வந்துவிட்டது! நான் என் கிரியைகளைத் தொடங்குவேன், மனிதர்களிடையே ராஜாவாக ஆட்சி செய்வேன்! நான் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறேன்! நான் புறப்படவிருக்கிறேன்! எல்லோரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான். மனிதர்கள் அனைவரையும் என் நாளின் வருகையைக் காணச் செய்வேன், அவர்கள் அனைவரும் என் நாளின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்!

ஏப்ரல் 2, 1992

முந்தைய: அத்தியாயம் 26

அடுத்த: அத்தியாயம் 28

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக