அத்தியாயம் 19

எனது வார்த்தைகளை தங்கள் உயிர்பிழைப்புக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்வதே மனுஷர்களின் வேலையாக இருக்கிறது. என் வார்த்தைகளின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் தங்கள் பங்கை நிலைநாட்ட வேண்டும்; அவ்வாறு செய்யாதது அவர்களின் சொந்த அழிவைத் தேடுவதும், அவமதிப்பை அழைப்பதுமாக இருக்கும். மனுஷர்கள் என்னை அறியவில்லை, இதன் காரணமாகத், தங்கள் சொந்த வாழ்க்கையை என்னிடம் கொண்டுவருவதற்குப் பதிலாக, அவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் கையில் குப்பைகளுடன் எனக்கு முன்னால் அணிவகுத்துச் செல்கின்றனர், இதன் மூலம் என்னை திருப்திப்படுத்த முயல்கின்றனர். இருப்பினும், காரியங்களை எண்ணி திருப்தி அடைவதற்குப் பதிலாக, நான் தொடர்ந்து மனுஷர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் ஜனங்களின் பங்களிப்புகளை விரும்புகிறேன், ஆனால் அவர்களின் வேண்டுகோள்களை வெறுக்கிறேன். எல்லா மனுஷர்களுக்கும் பேராசை நிறைந்த இருதயங்கள் உள்ளன; இது மனுஷ இருதயத்தை பிசாசு அடிமைப்படுத்தி வைத்திருப்பது போலாகும், மேலும் யாராலேயும் அதிலிருந்து விடுபட்டு, தங்களுடைய இருதயத்தை என்னிடம் ஒப்புக்கொடுக்க முடியாது. நான் பேசும்போது, ஜனங்கள் என் குரலை மிகுந்த கவனத்துடன் கேட்கிறார்கள்; நான் அமைதியாக இருக்கும்போது, என் வார்த்தைகள் வெறுமனே அவர்களின் “காரியங்களுடன்” இணைந்திருப்பது போல அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த “காரியங்களை” ஆரம்பிக்கிறார்கள், என் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதை நிறுத்திவிடுகிறார்கள். நான் ஒருபோதும் மனுஷர்களுடன் அலட்சியமாக இந்ததில்லை, இன்னும் நான் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும்தான் இருக்கிறேன். எனவே, என் மென்மையின் காரணமாக, மனுஷர்கள் அனைவரும் தங்களை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள், மேலும் சுய அறிவு மற்றும் சுய பிரதிபலிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்; என்னை ஏமாற்ற என் பொறுமையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவரும் கூட என்மீது உண்மையாக அக்கறை காட்டவில்லை, ஒருவரும் கூட அவர்களின் இருதயத்திற்குப் பிரியமான ஒரு பொக்கிஷப் பொருளாக என்னை உண்மையிலேயே கருதவில்லை; ஓய்வாக இருக்கும் தருணங்களில் மட்டுமே அவர்கள் எனக்குச் சரியான மதிப்பைக் கொடுக்கிறார்கள். மனுஷர்களுக்காக நான் செய்த முயற்சி அளவிட முடியாதது; மேலும், நான் முன் எப்போதும் இல்லாத வகையில் மனுஷர்கள் மீது கிரியை செய்துள்ளேன், இதைத் தவிர, நான் அவர்களுக்கு ஒரு கூடுதல் சுமையை அளித்துள்ளேன், இதன் மூலம், என்னிடம் இருப்பதிலிருந்தும், நான் என்னவாக இருக்கிறேன் என்பதிலிருந்தும், அவர்கள் சில அறிவைப் பெற்று, சில மாற்றங்களுக்கு ஆளாகலாம். நான் ஜனங்களை “நுகர்வோர்களாக” மட்டும் இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை; சாத்தானைத் தோற்கடிக்கும் “உற்பத்தியாளர்களாகவும்” இருக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மனுஷர்கள் எதையும் செய்ய வேண்டும் என்று நான் கோரவில்லை என்றாலும், நான் வைக்கும் கோரிக்கைகளுக்கென தராதரங்கள் என்னிடம் உள்ளன, ஏனென்றால் நான் செய்யும் காரியத்தில் ஒரு நோக்கமும், எனது செயல்களுக்கு ஓர் அடிப்படையும் உள்ளது: ஜனங்கள் கற்பனை செய்வது போல் நான் எதையும் எதிர்பாராமல் செய்யவில்லை, நான் விரும்பியபடி பரலோகத்தையும் பூமியையும், எண்ணற்ற சிருஷ்டிப்புகளையும் வடிவமைக்கவில்லை. என் கிரியையில், மனுஷர்கள் எதையாவது பார்க்க வேண்டும், எதையாவது பெற வேண்டும். அவர்கள் இளமையின் வசந்த காலத்தை வீணாய்க் கழிக்கக்கூடாது, அல்லது கவனக்குறைவாகத் தூசி படிய அனுமதிக்கப்பட்ட ஆடைகளைப் போல தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூடாது; மாறாக, அவர்கள் தங்களைத் தாங்களே கடுமையாகக் காத்துக்கொள்ள வேண்டும், என் செல்வத்திலிருந்து தங்கள் சொந்த இன்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், என்னைக் காரணமாகக் கொண்டு, அவர்களால் சாத்தானை நோக்கித் திரும்ப முடியாது, என்னைக் காரணமாகக் கொண்டு, அவர்கள் சாத்தானுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தலாம். மனுஷர்களுக்கான எனது கோரிக்கைகள் இவ்வளவு எளிதானவை அல்லவா?

கிழக்கில் ஒரு மங்கலான வெளிச்சம் தெரியத் தொடங்கும் போது, பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்து ஜனங்களும் அதில் சற்று அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். இனி தூக்கத்தில் மூழ்காமல், மனுஷர்கள் கிழக்கில் தோன்றும் இந்த வெளிச்சம் உருவாகும் இடத்தைக் கவனிக்க முன்வருகிறார்கள். தங்களது மட்டுப்படுத்தப்பட்ட திறன் காரணமாக, இந்த வெளிச்சம் எங்கிருந்து உருவாகிறது என்பதை இதுவரை யாராலும் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்தும் முழுமையாக ஒளிரும் போது, மனுஷர்கள் தூக்கத்திலிருந்தும் கனவுகளிலிருந்தும் எழுந்துவிடுகிறார்கள், அப்போதுதான் என் நாள் படிப்படியாக வந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அனைத்து மனுஷர்களும் வெளிச்சத்தின் வருகையைக் கொண்டாடுகிறார்கள், எனவே இனியும் தூங்காமல் அல்லது முட்டாள்தனமாக இல்லாமல் இருப்பார்கள். என் வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், எல்லா மனுஷர்களும் தங்கள் மனதிலும் பார்வையிலும் தெளிவாகி, திடீரென்று வாழ்வின் மகிழ்ச்சியில் எழுகிறார்கள். மூடிய பனியின் கீழ், நான் உலகம் முழுவதையும் பார்க்கிறேன். விலங்குகள் அனைத்தும் ஓய்வில் உள்ளன; மங்கலான வெளிச்சத்தின் வருகையால், ஒரு புதிய வாழ்க்கை நெருங்குகிறது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக, விலங்குகளும் கூட, தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, உணவைத் தேடுகின்றன. தாவரங்களும் விதிவிலக்கல்ல, வெளிச்சத்தின் பிரகாசத்தில் அவற்றின் பச்சை இலைகள் பளபளப்புடன் மின்னுகின்றன, நான் பூமியில் இருக்கும்போது எனக்காகத் தங்கள் பங்கை வகிக்கக் காத்திருக்கின்றன. எல்லா மனுஷர்களும் வெளிச்சம் வரவேண்டும் என விரும்புகிறார்கள், ஆனால் அதன் வருகையை எண்ணி அவர்கள் அஞ்சுகிறார்கள், தங்கள் சொந்த அசிங்கத்தை இனி மறைக்க முடியாது என்று ஆழ்ந்த கவலையில் மூழ்குகிறார்கள். ஏனென்றால், மனுஷர்கள் முழு நிர்வாணமாக இருக்கிறார்கள், அவற்றை மறைக்க அவர்களிடம் எதுவும் இல்லை. இதனால், வெளிச்சம் வந்ததன் விளைவாக பலர் பீதியில் உள்ளனர், மேலும் அது தோன்றியதால் அதிர்ச்சி நிலையிலும் உள்ளனர். பல ஜனங்கள், வெளிச்சத்தைக் கண்டதும், எல்லையற்ற வருத்தத்தால் நிரப்பப்படுகிறார்கள், தங்கள் அசுத்தத்தை வெறுக்கிறார்கள், ஆனாலும், உண்மைகளை மாற்றுவதற்கு சக்தியற்றவர்களாக, நான் தண்டனையை உச்சரிப்பதற்காக காத்திருப்பதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. இருளில் துன்பத்தால் சுத்திகரிக்கப்பட்ட பலர், வெளிச்சத்தைக் கண்டதும், திடீரென்று அதன் ஆழமான அர்த்தத்தால் தாக்கப்பட்டு, அதன் பின்னர் அதை மீண்டும் இழக்க நேரிடும் என்று ஆழ்ந்த பயத்தில் வெளிச்சத்தைத் தங்கள் மார்போடு நெருக்கமாக அணைத்துக்கொள்கிறார்கள். வெளிச்சத்தின் திடீர் தோற்றத்தால் பலர் சுற்றுப்பாதையில் இருந்து தூக்கி எறியப்படுவதற்குப் பதிலாக, தினசரி கிரியைகளைச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் நீண்ட காலமாகக் குருடர்களாக இருந்திருக்கிறார்கள், எனவே வெளிச்சம் வந்துவிட்டது என்பதைக் கவனிப்பது மட்டுமல்லாமல், அதனால் திருப்தியடையவும் மறுக்கிறார்கள். மனுஷர்களின் இருதயங்களில், நான் உயர்ந்தவனுமல்ல, தாழ்ந்தவனுமல்ல. அவர்களைப் பொருத்தவரை, நான் இருக்கிறேனா இல்லையா என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை; நான் இல்லாவிட்டால் ஜனங்களின் வாழ்க்கை எந்தவொரு தனிமையையும் பெறாது, நான் இருந்தால் அவர்களின் வாழ்க்கை இனி மகிழ்ச்சியாகவும் இருக்காது. மனுஷர்கள் என்னைப் போற்றுவதில்லை என்பதால், நான் அவர்களுக்குக் கொடுக்கும் இன்பங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இருப்பினும், மனுஷர்கள் எனக்குச் சிறிதளவு அதிக மரியாதையைக் கொடுத்தவுடன், நான் அவர்களைப் பற்றி வைத்திருக்கும் மனப்பான்மையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவேன். இந்தக் காரணத்திற்காக, மனுஷர்கள் இந்த விதியைப் புரிந்துகொண்டால்தான் அவர்கள் தங்களை என்னிடம் அர்ப்பணிக்கவும், நான் என் கையில் வைத்திருக்கும் விஷயங்களைக் கேட்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். நிச்சயமாக அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு அவர்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமா? நிச்சயமாக அவர்கள் என்மீது வைத்திருக்கும் விசுவாசம், நான் கொடுக்கும் விஷயங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டவை, இல்லையா? என் வெளிச்சத்தைக் காணும்வரை, மனுஷர்களால் தங்கள் விசுவாசத்தின் மூலம் என்னை நேர்மையாக நேசிக்க முடியாதா? நிச்சயமாக அவர்களின் வலிமையும் வீரியமும் இன்றைய நிலைமைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லையா? என்னை நேசிக்க மனுஷருக்குத் தைரியம் தேவைப்படுமா?

நான் இருப்பதன் காரணமாக, எண்ணற்ற சிருஷ்டிகள் அவை வசிக்கும் இடங்களில் பணிவாகக் கீழ்ப்படிகின்றன, என் ஒழுக்கம் இல்லாத நிலையில், கட்டுப்பாடற்ற நிலையைக் கைவிடுவதில் ஈடுபட மறுக்கின்றன. ஆகையால், மலைகள் நிலத்தின் மீது தேசங்களுக்கிடையில் எல்லைகளாகின்றன; தண்ணீரானது வெவ்வேறு நாடுகளின் ஜனங்களைப் பிரித்து வைக்கும் தடையாக மாறுகிறது; காற்று, பூமிக்கு மேலே உள்ள இடங்களில் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்குப் பாய்கிறது. என் விருப்பத்தின் தேவைகளுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிய மனுஷரால் மட்டுமே இயலவில்லை; எல்லாப் படைப்புகளிலிருந்தும், மனுஷர்கள் மட்டுமே கீழ்ப்படியாதவர்களின் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று நான் சொல்வது இதனால்தான். மனுஷர்கள் ஒருபோதும் எனக்கு உண்மையாக அடங்கியிருக்கவில்லை, இந்தக் காரணத்திற்காக நான் மனுஷர்களைக் கடுமையான ஒழுக்கத்தின் கீழ் வைத்திருக்கிறேன். மனுஷர்களுக்கு மத்தியில், என் மகிமை முழு பிரபஞ்சத்திலும் பரவ வேண்டுமென்றால், நான் நிச்சயமாக என் மகிமை அனைத்தையும் எடுத்துச் சென்று மனுஷர்களின் முன் வெளிப்படுத்துவேன். ஏனென்றால், மனுஷர்கள் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளும்போது, என் மகிமையைப் பார்க்க தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் ஒருபோதும் திறந்தவெளிக்கு வரவில்லை, அதற்குப் பதிலாக மறைந்திருக்கிறேன்; இந்தக் காரணத்திற்காக, என் மகிமை அவர்களுக்கு முன் ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர்கள் எப்போதும் பாவத்தின் படுகுழியில் விழுகின்றனர். மனுஷர்களின் அநீதியை நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அவர்கள் அனைவருக்கும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று தெரியவில்லை, அதற்குப் பதிலாக எப்போதும் தங்களைத் தாங்களே பாவத்திற்கு வெளிக்காட்டிக் கொள்கிறார்கள், அதைத் தங்களுக்குத் தீங்கு விளைவிக்க அனுமதிக்கிறார்கள். இது மனுஷர்களின் சுய மரியாதை மற்றும் சுய அன்பின் குறைபாட்டைக் காட்டவில்லையா? மனுஷர்களுக்கு மத்தியில், யாராவது உண்மையிலேயே அன்பு செய்ய முடியுமா? மனுஷர்களின் ஆராதனை எவ்வளவு எடையைக் கொண்டிருக்க முடியும்? ஜனங்களின் நம்பகத்தன்மை என்று அழைக்கப்படுவதில் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் இல்லையா? அவர்களின் ஆராதனை ஒரு முழுமையான குழப்பம் அல்லவா? எனக்குத் தேவையானது அவர்களின் பிரிவினையற்ற அன்பு. மனுஷர்கள் என்னை அறிந்திருக்க மாட்டார்கள், அவர்கள் என்னை அறிய முற்பட்டாலும், அவர்கள் தங்கள் உண்மையான மற்றும் ஆர்வமுள்ள இருதயங்களை எனக்குத் தரமாட்டார்கள். மனுஷர்கள் கொடுக்க விரும்பாததை நான் அவர்களிடம் கேட்கவில்லை. அவர்கள் எனக்குத் தங்கள் ஆராதனையைக் கொடுத்தால், நான் அதை கண்ணியமாக மனச்சோர்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வேன். எவ்வாறாயினும், அவர்கள் என்னை நம்பவில்லை என்றால், தங்களின் ஒரு மிகச்சிறிய பகுதியைக் கூட எனக்கு வழங்க மறுத்துவிட்டால், அதை எண்ணி மேலும் கவலைப்படுவதை விட, நான் அவர்களை வேறு வழியில் அப்புறப்படுத்தி அவர்களுக்குப் பொருத்தமான இடத்தை ஏற்பாடு செய்வேன். வானத்தில் குறுக்கே சுழன்றடிக்கும் இடி மனுஷர்களைத் தாக்கும்; உயர்ந்த பர்வதங்கள் கவிழும்போது அவர்களைப் புதைக்கும்; பசியால் காட்டு மிருகங்கள் அவர்களை விழுங்கும்; திடீரெனக் கொந்தளிக்கும் பெருங்கடல்கள், அவர்களை மூழ்கடிக்கும். மனுஷர்கள் முரண்பாடான மோதலில் ஈடுபடுவதால், எல்லா மனுஷர்களும் தங்களுக்குள் எழும் பேரழிவுகளிலேயே தங்கள் சொந்த அழிவை நாடுவார்கள்.

ராஜ்யம் மனுஷருக்கு மத்தியில் விரிவடைகிறது, மனுஷருக்கு மத்தியில் உருவாகிறது, மனுஷருக்கு மத்தியில் நிற்கிறது; என் ராஜ்யத்தை அழிக்க எந்தச் சக்தியும் இல்லை. இன்றைய ராஜ்யத்தில் இருக்கும் என் ஜனங்களில், உங்களில் யார் மனுஷர்களுக்கு இடையே மனுஷராக இல்லை? உங்களில் யார் மனுஷ நிலைக்கு வெளியே உள்ளீர்கள்? எனது புதிய தொடக்கப் புள்ளி ஜனங்களுக்கு அறிவிக்கப்படும் போது, மனுஷர்கள் எவ்வாறு பிரதிபலிப்பர்? நீங்கள் மனுஷர்களின் நிலையை உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்கள்; நிச்சயமாக நீங்கள் இந்த உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் கொண்டிருக்கவில்லையா? நான் இப்போது என் ஜனங்களிடையே நடந்து கொண்டிருக்கிறேன், நான் அவர்களுக்கு மத்தியில் வாழ்கிறேன். இன்று, என்மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் பாக்கியவான்கள். எனக்குக் கீழ்படிகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தில் நிலைத்திருப்பார்கள். என்னை அறிந்தவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தில் அதிகாரம் செலுத்துவார்கள். என்னைத் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாகச் சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பித்து என் ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். தங்களைத் துறக்கக் கூடியவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிச்சயமாக என் வசம் நுழைந்து என் ராஜ்யத்தின் செல்வத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். எனக்காக ஓடுபவர்களை நான் நினைவில் கொள்வேன், எனக்காகச் செலவு செய்பவர்களை நான் மகிழ்ச்சியுடன் அரவணைப்பேன், எனக்குக் காணிக்கை கொடுப்பவர்களுக்கு நான் இன்பங்களைத் தருவேன். என் வார்த்தைகளில் இன்பத்தைக் கண்டவர்களை நான் ஆசீர்வதிப்பேன்; அவர்கள் நிச்சயமாக என் ராஜ்யத்தின் உத்திரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருப்பர், நிச்சயமாக அவர்களுக்கு என் வீட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கும், அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் எப்போதாவது ஏற்றுக்கொண்டதுண்டா? உங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நீங்கள் எப்போதாவது தேடியிருக்கிறீர்களா? நீங்கள் நிச்சயமாக, என் வெளிச்சத்தின் வழிகாட்டுதலின் கீழ் இருளினுடைய ஆதிக்கங்களின் கழுத்தை நெரிப்பீர்கள். இருளின் நடுவே, உங்களுக்கு வழிகாட்டும் வெளிச்சத்தை நீங்கள் நிச்சயமாக இழக்க மாட்டீர்கள். நீங்கள் நிச்சயமாக எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானராக இருப்பீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சாத்தானின் முன்னே ஜெயிப்பவராக இருப்பீர்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ராஜ்யத்தின் வீழ்ச்சியில், என் வெற்றிக்குச் சாட்சியம் அளிக்க, எண்ணற்ற கூட்டங்களுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக எழுந்து நிற்பீர்கள். நீங்கள் நிச்சயமாக சீனீம் தேசத்தில் உறுதியாகவும் அசையாமலும் நிற்பீர்கள். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மூலம், நீங்கள் என் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், நிச்சயமாக என் மகிமையை முழு பிரபஞ்சத்திலும் பரப்புவீர்கள்.

மார்ச் 19, 1992

முந்தைய: அத்தியாயம் 18

அடுத்த: அத்தியாயம் 20

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக