அத்தியாயம் 64

நீங்கள் என் வார்த்தைகளைத் தப்பாகவும் தவறான வழியிலும் புரிந்து கொள்ளக் கூடாது; எல்லா நிலைகளிலிருந்தும் நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் ஒரு நாள் அல்லது ஒரு இரவுக்கு மட்டுமல்ல அவற்றை அதிகம் ஆராயவும், மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் முயற்சி செய்ய வேண்டும். என்னுடைய சித்தம் எங்கே இருக்கிறது என்றும் அல்லது எந்த நிலைகளில் நான் கடினமான விலைக்கிரயம் கொடுத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியாது; எனது சித்தத்திற்கு உங்களால் எப்படி தயவு காட்ட முடியும்? ஜனங்களாகிய நீங்கள் விவரங்களை முழுமையாக ஆராய இயலாதவர்களாகவும், மேலோட்டமாக மட்டுமே கவனம் செலுத்துகிறவர்களாகவும் மற்றும் பார்த்துப் பின்பற்றும் திறனுள்ளவர்களாக மட்டுமே இருக்கிறீர்கள். இதை எப்படி ஆவிக்குரிய தன்மை என்று அழைக்க முடியும்? இது வெறும் மனிதனின் ஆர்வமே; இது நான் பாராட்டாத ஒன்று, மேலும், நான் வெறுத்து ஒதுக்கும் ஒன்று. நான் இதை உனக்குச் சொல்கிறேன்: நான் வெறுக்கும் அனைத்து விஷயங்களும் நீக்கப்பட வேண்டும், பேராபத்தில் தவிக்க வேண்டும், மேலும் எனது எரிச்சலுக்கும் நீயத்தீர்ப்புக்கும் உள்ளாக வேண்டும். இல்லையெனில், பயப்படுவதன் அர்த்தம் என்னவென்று ஜனங்களுக்குத் தெரியாமல் மிகவும் சீர்கெட்டு இருப்பார்கள், எப்போதும் மனிதக் கண்களால் என்னைப் பார்க்கிறார்கள்—அவர்கள் அதிக முட்டாள்களாக இருக்கிறார்கள்! சாத்தானுடைய எண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கான சிறந்த வழி, என்னிடம் கிட்டிச் சேர்ந்து, என்னுடன் ஐக்கியப்படுவதுதான். நீங்கள் அனைவரும் இந்த ஆளுகைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் உங்கள் வாழ்க்கையில் நியாயந்தீர்க்கப்படுவதையும் இழப்பை சந்திப்பதையும் தவிர்க்கலாம்.

மனிதர்களைக் கையாள்வது மிகவும் கடினம், எப்போதும் வெளி நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் மற்றும் அவர்களின் சொந்த கருத்துக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் எனக்காக நல்ல சாட்சிப் பகர முடியவில்லை மற்றும் என்னுடன் நன்றாக ஒத்துழைக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். நான் தொடர்ந்து உங்களை ஆதரித்து வளர்த்து வருகிறேன், ஆனால் நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறீர்கள். இவை அனைத்தும் என்னைப் பற்றிய உங்கள் புரிதலின் குறைபாட்டை விரிவாகக் காட்டுகின்றன. நேரம் வரும்போது—இனி என்னைக் குறித்து உனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாதபோது—நீ மெய்யான வழியில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது, மேலும் எந்த மனித எண்ணங்களும் உன் மீது ஆதிக்கம் செலுத்தாது. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? எனது பேச்சுகளின் அர்த்தத்தை நீ உண்மையிலேயே புரிந்து கொள்கிறாயா? இது போன்ற வார்த்தைகளை நான் தெளிவுபடுத்தும் போதுதான் நீங்கள் கொஞ்சம் புரிதல் பெறுகிறீர்கள். ஜனங்கள் மிகவும் முட்டாள்களாகவும் மன வலிமை அற்றவர்களாவும் இருக்கிறார்கள். ஊசி எலும்பைத் தாக்கும் போதுதான் அவர்கள் சிறிதளவு வலியை உணரத் தொடங்குகிறார்கள். அதாவது, உன் வியாதிக்கான காரணத்தை என்னுடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டும் போதுதான் நீ முழுமையாக நம்புகிறாய். ஆயினும் கூட, நீங்கள் இன்னும் சில நேரங்களில் எனது வார்த்தைகளைப் பின்பற்றவோ அல்லது உங்களை அறிந்து கொள்ளவோ விரும்புவதில்லை. ஏன், இந்த நேரத்திலும், மனிதர்களைக் கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? எனது வார்த்தைகள் வெளிப்படையாகவோ அல்லது தெளிவாகவோ இல்லையா? நான் விரும்புவது என்னவென்றால் நீங்கள் என்னுடன் வாஞ்சையோடும் உண்மையாகவும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், நீங்கள் இனிமையாகத் தொனிக்கும் எந்த வார்த்தைகளைப் பேசினாலும் பேசாவிட்டாலும், நீங்கள் என்னுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் வரைக்கும் மற்றும் உண்மையாக என்னை ஆராதிக்க முடியும் வரைக்கும், நீங்கள் என் பாதுகாப்பின் கீழ் வருவீர்கள். இந்த வகையான நபர் அதிக அறியாமையில் இருந்தாலும், அவர்கள் அறியாமையைப் போக்குவதற்காக நான் அவர்களைப் பிரகாசமாக்குவேன். ஏனென்றால், எனது செயல்கள் எனது வார்த்தைகளுக்கு ஏற்பவே இருக்கின்றன; நான் சர்வவல்லமையுள்ள தேவன், நான் ஒருபோதும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியைக் கொடுப்பதில்லை.

திருச்சபைகளுக்கும் மற்றும் அனைத்து முதற்பேறான குமாரர்களுக்கும் எனது சித்தத்தை நான் உடனடியாக வெளிப்படுத்துவேன், மேலும் அனைத்தும் வெளிப்படுத்தப்படும் நாள் வந்துவிட்டதால், இனி ஒருபோதும் எதுவும் மறைக்கப்படாது. அதாவது, “மறைக்கப்பட்ட” என்ற வார்த்தை, இனிமேல், மீண்டும் பயன்படுத்தப்படாது, மறைக்கப்பட்ட எதுவும் தொடர்ந்து இல்லாமல் போகும். மறைக்கப்பட்ட ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் அனைத்தும் நிச்சயமாக ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்படும். நான் முழு அதிகாரத்தையும் கொண்ட ஞானமுள்ள தேவன். எல்லா நிகழ்வுகளும், எல்லா விஷயங்களும், ஒவ்வொரு தனி நபரும் என் கரங்களுக்குள் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர நான் எனது சொந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன், அவற்றை ஒவ்வொன்றாக ஒரு ஒழுங்கான முறையில் வெளிப்படுத்துவேன். என்னை வஞ்சிக்கவோ அல்லது என்னிடமிருந்து எதையும் மறைக்கவோ யாராவது துணிந்தால், அவர்கள் மீண்டும் உயர எழாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன். நான் இவ்விதமாகவே நடவடிக்கை எடுப்பேன், அதனால் உங்களுக்குப் பார்ப்பதற்கு எல்லாம் தெளிவாக இருக்கும். தெளிவாகப் பாருங்கள்! நான் செலுத்திய கடினமான விலைக்கிரயம் வீணாகவில்லை; அது பலன் தரும். யார் செவிமடுக்கவில்லையோ அல்லது கீழ்ப்படியவில்லையோ அவர்கள் உடனடியாக என் நியாயத்தீர்ப்பைச் சந்திப்பார்கள். இன்னும் என்னை எதிர்த்து நிற்கத் துணிந்தவர் யார்? நீங்கள் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உனக்கு இதைச் சொல்கிறேன்: நான் சொல்வதும் செய்வதும், இன்று என்னிடம் இருக்கும் ஒவ்வொரு செயல், யோசனை, சிந்தனை மற்றும் திட்டம் அனைத்தும் முற்றிலும் சரியானவை; அவை மேலும் கருத்தில் கொள்ளப்படுவதற்கு மனிதனுக்கு முற்றிலும் இடமளிக்கவில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பின்பற்றுவதே தவிர, அதைப் பற்றி மேலும் யோசிக்கத் தேவையில்லை என்றும் நான் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்? இது இந்தக் காரணத்திற்காக தான். நான் இதை உனக்கு இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமா?

உங்கள் எண்ணங்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் நீங்கள் போதுமான முயற்சி எடுக்காதது தான் காரணம் என்று நீங்கள் இன்னும் நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, நான் உங்களுக்குப் போதிக்கவில்லை என்று கூறி காரணங்களுக்காக நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். இது என்ன வகையான பேச்சு? நீங்களே எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், எப்போதும் என்னிடம் குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன்! நீங்கள் இப்படியே சென்றால், தொடர்ந்து எந்த விலைக்கிரயமும் செலுத்தாமல் இருந்தால், நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்! உங்களை அச்சுறுத்துவதற்காக நான் எந்நாளும் பெருமையாக பேச மாட்டேன். இது உண்மையில் ஒரு உண்மை: நான் சொல்வதையே நான் செய்கிறேன். என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டவுடன், அவை உடனடியாக நிறைவேறத் தொடங்குகின்றன. முன்பு, நான் சொன்ன வார்த்தைகள் மெதுவாக நிறைவேறின; இருப்பினும், இப்போது விஷயங்கள் வேறுபட்டவை, இனி மெதுவாக நடக்காது. எளிமையாகச் சொன்னால், நான் இனி காலந்தள்ளவோ அல்லது நயந்து பேசவோ மாட்டேன்; அதற்குப் பதிலாக, நான் உங்களை உந்தித் தள்ளி கட்டாயப்படுத்துகிறேன். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், தொடர்ந்து கடைப்பிடிக்கக்கூடியவர்கள் அதைச் செய்வார்கள், அதே சமயம் கடைப்பிடிக்க முடியாதவர்கள் மற்றும் முன்னோக்கித் தொடர முடியாதவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். நான் உங்களிடம் எல்லா வகையிலும் பொறுமையாகப் பேச முயற்சித்தேன், ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை. இப்போது இந்த கட்டம் வரை கிரியை தொடர்ந்ததால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் உண்மையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறீர்களா? அத்தகையவர்களை முழுமையாக்க முடியாது, ஆனால் என்னால் நிச்சயமாக புறம்பாக்கப்படுவார்கள்!

முந்தைய: அத்தியாயம் 63

அடுத்த: அத்தியாயம் 65

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக