அத்தியாயம் 44 மற்றும் 45

எல்லாப் பாடங்களிலும் மிக முக்கியமானதாகிய “தேவன் மீதான அன்பை” பற்றி தேவன் மனுஷனுக்குக் கூறிய காலத்திலிருந்தே, எல்லா ஜனங்களையும் மனுஷ வாழ்க்கையில் உள்ள வெறுமையை அறிய முயற்சி செய்ய வைத்து, அதன்மூலம் அவர்களுக்குள் இருக்கும் மெய்யான அன்பைத் தோண்டி எடுக்கச் செய்வதற்கு, அவர் “ஏழு ஆவிகளின் வார்த்தைகள்” என்ற இந்தத் தலைப்பைப் பற்றி பேசுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். தற்போதைய கட்டத்தில் இருப்பவர்கள் தேவன் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள்? உங்களுக்குத் தெரியுமா? “தேவனை நேசித்தல்” என்ற பாடத்திற்கு வரம்புகள் இல்லை. மனுஷ வாழ்க்கையைப் பற்றி எல்லா ஜனங்களும் எத்தகைய புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்? தேவனை நேசிப்பது குறித்த அவர்களின் மனப்பான்மை எப்படிப்பட்டது? அவர்கள் விருப்பமாயிருக்கிறார்களா அல்லது விருப்பமில்லாமல் இருக்கிறார்களா? அவர்கள் பெரும் ஜனக் கூட்டத்தைப் பின்பற்றுகிறார்களா, அல்லது மாம்சத்தை வெறுக்கிறார்களா? இவை அனைத்தும் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். உண்மையில் ஜனங்களுக்குள் எதுவுமே இல்லையா? “மனுஷன் என்னை உண்மையாக நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இருப்பினும், இன்றும் ஜனங்கள் தங்களின் உண்மையான அன்பை என்னிடம் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களின் கற்பனையில், அவர்கள் தங்கள் உண்மையான அன்பை என்னிடம் கொடுத்தால், அவர்களுக்கென்று ஒன்றும் இல்லாது போய்விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.” இந்த வார்த்தைகளில், “உண்மையான அன்பை” என்பது உண்மையிலேயே எதைக் குறிக்கிறது? “எல்லா ஜனங்களும் தேவனை நேசிக்கும்” இந்த காலகட்டத்தில் தேவன் ஏன் இன்னும் ஜனங்களுடைய உண்மையான அன்பைக் கேட்கிறார்? எனவே, உண்மையான அன்பின் அர்த்தத்தை ஒரு விடைத்தாளில் எழுதும்படி மனுஷனைக் கேட்பதுதான், தேவனுடைய நோக்கமாக இருக்கிறது, எனவே இது துல்லியமாக மனுஷனுக்கு தேவன் வைத்திருக்கிற வீட்டுப்பாடமே ஆகும். இன்றைய நாட்களின் இந்த கட்டத்தைப் பொறுத்தவரை, தேவன் மனுஷனிடம் பெரிய கோரிக்கைகளை வைக்கவில்லை என்றாலும் கூட, மனுஷனிடத்தில் வைக்கிற தேவனுடைய உண்மையான கோரிக்கைகளை ஜனங்கள் இன்னும் அடைந்திருக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் தேவனை நேசிப்பதில் தங்கள் முழு பலத்தையும் இன்னும் முதலீடு செய்திருக்கவில்லை. இவ்வாறு, அவர்களின் விருப்பமின்மைக்கு மத்தியிலும், இந்தக் கிரியை ஒரு பலனைப் பெற்றிருந்து, இந்த கிரியையில் அவர் மகிமை அடையும் வரையிலான அந்தச் சமயம் வரைக்கும், தேவன் இன்னும் ஜனங்களிடம் தமது கோரிக்கைகளை வைக்கிறார். உண்மையில், பூமியின் மீதான கிரியை தேவன் மீதான அன்பினால் நிறைவு செய்யப்படுகிறது. இவ்வாறு, தேவன் தமது கிரியையை நிறைவு செய்யும் போது மட்டுமே, எல்லாவற்றிலும் மிக முக்கியமான கிரியையை அவர் மனுஷனுக்கு சுட்டிக்காட்டுகிறார். அவருடைய கிரியை முடிவடையும் நேரத்தில், அவர் மனுஷனுக்கு மரணத்தைக் கொடுத்தால், மனுஷனின் நிலை என்னவாகும், தேவனுடைய நிலை என்னவாகும், சாத்தானின் நிலை என்னவாகும்? பூமியில் மனுஷனின் அன்பு வெளிப்படும் போதுதான், “தேவன் மனுஷனை ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று சொல்ல முடியும். இல்லை என்றால், தேவன் மனுஷனைக் கொடுமைப்படுத்துகிறார் என்றும், இதனால் தேவன் அவமானப்படுத்தப்படுவார் என்றும் ஜனங்கள் கூறுவார்கள். ஒரு சிறிய சத்தமும் இல்லாமல் தனது கிரியையை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு தேவன் புத்தியில்லாதவராக இருக்க மாட்டார். இவ்வாறு, கிரியை விரைவில் முடிவடைய இருக்கும்போது, தேவனை நேசிப்பதற்கான ஆர்வ அலை எழுகிறது, மேலும் தேவனை நேசிப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக மாறுகிறது. நிச்சயமாகவே, தேவனுடைய இந்த அன்பு மனுஷனால் கறைபடவில்லை; இது ஓர் உண்மையுள்ள மனைவி தன் கணவரிடம் காட்டும் அன்பு அல்லது பேதுருவின் அன்பு போன்ற கலப்படமற்ற அன்பாகும். தேவன் யோபு மற்றும் பவுலின் மீதான அன்பை விரும்புவதில்லை, மாறாக, யேகோவாவின் மீதான இயேசுவின் அன்பை, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே உள்ள அன்பை விரும்புகிறார்: “தனிப்பட்ட நஷ்டத்தையோ அல்லது ஆதாயத்தையோ கருத்தில் கொள்ளாமல், பிதாவை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருத்தல், வேறு எதையும் கேட்காமல், வேறு யாரையும் நேசிக்காமல் பிதாவை மட்டுமே நேசித்தல்.” மனுஷனுக்கு இதற்கான திறன் இருக்கிறதா?

நாங்கள் முழுமையான மனிதத் தன்மையில் இல்லாத இயேசு செய்ததுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நாங்கள் என்ன நினைக்கிறோம்? உங்களது முழுமையான மனிதத் தன்மையில் நீங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்? இயேசு செய்ததில் பத்தில் ஒரு பங்கை அடைய உங்களால் முடியுமா? தேவனுக்காகச் சிலுவைக்குச் செல்ல நீங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? தேவன் மீதான உங்கள் அன்பு சாத்தான் மீது அவமானத்தைக் கொண்டுவர முடியுமா? மேலும் மனுஷனுக்கான உங்களது அன்பை நீங்கள் எவ்வளவு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்? அது தேவன் மீதான அன்பாக மாற்றப்பட்டிருக்கிறதா? நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய அன்பிற்காக அனைத்தையும் தாங்குகிறீர்களா? கடந்த காலங்களில் வாழ்ந்த பேதுருவைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், இன்றைய நாளில் இருக்கிற உங்களையும் நோக்கிப் பாருங்கள்—உண்மையிலேயே, மிகப்பெரிய முரண்பாடு காணப்படுகிறது. நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கத் தகுதியற்றவர்கள். உங்களுக்குள், தேவன் மீது அதிக அன்பு உள்ளதா, அல்லது பிசாசு மீது அதிக அன்பு உள்ளதா? இது தராசின் இடது மற்றும் வலது பக்கங்களில் மாறி மாறி வைக்கப்பட வேண்டும், இதன் மூலம் எது உயர்ந்தது என்று பார்க்க வேண்டும்—உண்மையிலேயே, உங்களுக்குள் தேவன் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது? நீங்கள் தேவனுக்காக மரிப்பதற்குத் தகுதியானவர்களாக இருக்கிறீர்களா? இயேசு சிலுவையில் நிற்க முடிந்ததற்கான காரணம் என்னவென்றால் பூமியில் அவருடைய அனுபவங்கள் சாத்தான் மீது அவமானத்தைக் கொண்டுவருவதற்குப் போதுமானதாக இருந்ததே ஆகும், அந்தக் காரணத்திற்காகவே, பிதாவாகிய தேவன் அவரை அந்தக் கட்ட கிரியையை முடிக்க தைரியமாக அனுமதித்தார்; அதற்குக் காரணமும் அவர் அனுபவித்த கஷ்டங்களும் அவர் தேவன்மீது கொண்டிருந்த அன்புமே ஆகும். ஆனால் நீங்கள் அவ்வளவு தகுதியானவர்கள் அல்ல. எனவே, உங்கள் இருதயத்தில் தேவனைக் கொண்டிருப்பதை நீங்கள் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும், அடைய வேண்டும், வேறு எதுவும் இல்லை—இதை உங்களால் நிறைவேற்ற முடியுமா? இதிலிருந்து, நீ தேவனை எவ்வளவு வெறுக்கிறாய், நீ தேவனை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை அறியலாம். தேவன் மனுஷனிடம் அதிகமாகக் கோருகிறார் என்பதல்ல, மாறாக, மனுஷன் கடினமாக உழைக்கவில்லை என்பதேயாகும். சூழ்நிலையின் யதார்த்தம் இது அல்லவா? இல்லையென்றால், தேவனிடத்தில் நீ எவ்வளவு நேசிக்கப்படத்தக்கதைக் கண்டறிவாய், மேலும் எவ்வளவு வெறுக்கத்தக்க விஷயத்தை உன்னிடத்தில் நீ கண்டுபிடிப்பாய்? இந்த விஷயங்களில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும். வானங்களுக்குக் கீழே உள்ள சிலர் மட்டுமே தேவனை நேசிக்கிறார்கள் என்று சொல்வது நியாயமானது—ஆனால், உலக சாதனையை முறியடித்து தேவனை நேசிப்பதன் மூலம், உன்னால் ஒரு முன்னோடியாக இருக்க முடியுமா? தேவன் மனுஷனிடம் எதையும் கேட்பதில்லை. இதன் மூலம், மனுஷனால் அவரை கொஞ்சமும் கனம்பண்ண முடியாதா? இதைக்கூட நீங்கள் சாதிக்க முடியாதவர்களா? சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

முந்தைய: அத்தியாயம் 42

அடுத்த: அத்தியாயம் 46

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக