அத்தியாயம் 28

காலம் மிகவும் விரைந்தோடுகிறது என்பதையும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியை விரைந்து முன்னோக்கிச் செல்கிறது என்பதையும் நீ பார்க்கும்போது, நீ இத்தகைய மகத்தான ஆசீர்வாதங்களை அடையவும், பிரகாசிக்கும் சூரியனாகவும் ராஜ்யத்தின் ராஜாவாகவும் இருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிரபஞ்சத்தின் ராஜாவைப் பெறவும் வைத்துள்ளது—இவை அனைத்தும் என் கிருபை மற்றும் இரக்கம் ஆகும். என் அன்பிலிருந்து உன்னைப் பிரித்துவிடக் கூடியது இன்னும் என்ன இருக்கிறது? கவனமாகச் சிந்தித்துப் பார், தப்பிக்க முயற்சிக்காதே, ஒவ்வொரு தருணத்திலும் அமைதியாக எனக்கு முன் காத்திரு, எப்போதும் வெளியில் அலைந்து திரிய வேண்டாம். உன் இருதயம் என் இருதயத்துடன் நெருக்கமாக ஒட்டிக் கொள்ள வேண்டும், என்ன நடந்தாலும், கண்மூடித்தனமாக அல்லது தன்னிச்சையாக செயல்படாதே. நீ என் சித்தத்தைப் பார்த்து, நான் விரும்புவதை எல்லாம் செய்ய வேண்டும், மற்றும் நான் விரும்பாததைக் கைவிடுவதற்கு உறுதியுடன் இருக்க வேண்டும். நீ உன் உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படக் கூடாது, மாறாக, என்னைப் போலவே, உன் பெற்றோருக்காகக் கூட உணர்வுப் பூர்வமாக இல்லாமல், நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்திற்கு ஒத்துப் போகாத அனைத்தையும் நீ கைவிட வேண்டும், மற்றும் என்னை நேசிக்கும் சுத்த இருதயத்துடன், நீ எனக்காக உன்னையே காணிக்கையாக்கி, உன்னையே ஒப்புக் கொடுக்க வேண்டும். எந்தவொரு நபரின், நிகழ்வின் அல்லது காரியத்தினுடைய கட்டுப்பாட்டால் துன்பத்தை அனுபவிக்காதே; அது என் சித்தத்திற்கு ஒத்துப்போகும் வரை, என் வார்த்தைகளுக்கு ஏற்ப அதைக் கடைபிடி. பயப்படாதே, என் கரங்கள் உன்னை ஆதரிப்பதால், நான் உன்னை எல்லாப் பொல்லாதவர்களிடமிருந்தும் விலக்கி வைப்பேன். நீ உன்னுடைய இருதயத்தைக் காத்துக் கொண்டு, எல்லா நேரங்களிலும் எனக்குள் இருக்க வேண்டும், ஏனென்றால் உன் ஜீவன் தான் ஜீவிப்பதில் என் சொந்த ஜீவனைச் சார்ந்துள்ளது; நீ என்னை விட்டு விலகினால், அப்போது நீ உடனடியாக மிகுந்த பலவீனம் அடைந்து விடுவாய்.

இவை கடைசி நாட்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். சாத்தானாகிய பிசாசு, கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல, ஜனங்களை விழுங்கும்படி தேடி சுற்றித் திரிகிறான். எல்லா விதமான வாதைகளும் இப்போது வெளி வருகின்றன, மேலும் ஒவ்வொரு வகையான பொல்லாத ஆவிகளும் அநேகம் இருக்கின்றன. நான் மட்டுமே உண்மையான தேவன்; நான் மட்டுமே உனது அடைக்கலம். இப்போது என் மறைவிடத்தில் ஒளிந்து கொள்வதைத் தவிர உன்னால் வேறு எதுவும் செய்ய முடியாது, எனக்குள் மட்டுமே, பேரழிவுகள் உன் மீது வராது, மேலும் உன் கூடாரத்திற்கு அருகில் எந்த ஆபத்தும் நெருங்காது. நீ அடிக்கடி எனக்கு அருகில் வந்து, மறைவிடத்தில் என்னுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும்; மற்றவர்களுடன் எளிதில் ஐக்கியம் கொள்ளாதே. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும்—நீ ஐக்கியம் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்று நான் சொல்லவில்லை, மாறாக உனக்கு இன்னும் பகுத்தறிவு இல்லை என்றுதான் சொல்கிறேன். இந்தக் காலத்தில், பொல்லாத ஆவிகளுடைய கிரியை பரவலாக உள்ளது. உன்னிடம் ஐக்கியம் கொள்ள அவை எல்லா வகையான ஜனங்களையும் பயன்படுத்துகின்றன. வற்றின் வார்த்தைகள் மிகவும் இனிமையானவை, ஆனால் அவற்றுக்குள்ளே விஷம் இருக்கிறது. அவை சர்க்கரைப் பூசப்பட்ட தோட்டாக்கள், மேலும் நீ அதை அறிந்து கொள்ளும் முன்பே, அவை தங்கள் விஷத்தை உனக்குள் செலுத்திவிடும். இன்று பெரும்பாலான ஜனங்கள் குடிபோதையில் இருப்பதைப் போல நிலையற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் உன் கஷ்டங்களைப் பற்றி நீ பகிர்ந்து கொள்ளும் போது, அவர்கள் உனக்குச் சொல்வது வெறும் விதிமுறைகள் மற்றும் உபதேசங்கள் மட்டுமே, அது நீ என்னுடன் நேரடியாக ஐக்கியங்கொள்வதைப் போல நல்லதல்ல. எனக்கு முன்பாக வந்து, உனக்குள் இருக்கும் பழைய விஷயங்களை ஊற்றிவிடு; என்னிடத்தில் உன் இருதயத்தைத் திறந்து வை, என் இருதயம் நிச்சயமாக உனக்கு வெளிப்படுத்தப்படும். உன் இருதயம் எனக்கு முன் கவனமாக இருக்க வேண்டும். சோம்பேறியாக இருக்காதே, ஆனால் அடிக்கடி என் அருகில் வா—இதுவே உன் வாழ்க்கை மிக விரைவாக வளர்வதற்கான வழியாகும். நீ எனக்குள் ஜீவிக்க வேண்டும், மற்றும் நான் உனக்குள் ஜீவிப்பேன், மேலும் நான் உனக்கு ராஜாவாக இருந்து, எல்லாக் காரியங்களிலும் உன்னை வழிநடத்துவேன், மற்றும் நீ ராஜ்யத்தின் பங்கைப் பெற்றிருப்பாய்.

நீ இளமையாக இருப்பதால் உன்னைக் குறைத்து மதிப்பிடாதே. நீ உன்னையே எனக்குக் காணிக்கையாக்க வேண்டும். மேலோட்டமாக ஜனங்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை, அவர்கள் எவ்வளவு வயதானவர்கள் என்பதையும் நான் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் என்னை உண்மையாக நேசிக்கிறார்களா, அவர்கள் என் வழியைப் பின்பற்றுகிறார்களா, மற்றும் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து சத்தியத்தைப் பின்பற்றுகிறார்களா என்பதை மட்டுமே நான் கருத்தில்கொள்கிறேன். நாளையதினம் எப்படி இருக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு நீ என்னையே நம்பியிருக்கும் வரை, நான் நிச்சயமாக உன்னை வழிநடத்துவேன். சாத்தானால் அனுப்பப்பட்ட எண்ணமாகிய, “என் வாழ்க்கை மிகவும் குறுகியது, எனக்கு எதுவும் புரியவில்லை” என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காதே. நீ எல்லா நேரங்களிலும் எனக்கு அருகில் வருவதற்கும், சாலையின் இறுதிவரை என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் மட்டுமே நீ உன் இருதயத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ என் நிந்தனை மற்றும் எச்சரிக்கை வார்த்தைகளைக் கேட்கும்போது, உடனடியாக எழுந்திருந்து முன்னோக்கி ஓடு; நிற்காமல் என் அருகில் வா, மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடு, உன் கண்களால் நேராக நோக்கிப் பார். என் சமூகத்தில், நீ உன் தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகூர வேண்டும். ஊழியப் பாதையில், என் வார்த்தைகளை அடிக்கடி கருத்தில்கொள். சத்தியத்தைக் கைக்கொள்வதில், பலவீனமான இருதயத்தோடு இருக்காதே—ஒரு ஆண்மகனுக்கான மனவுறுதி மற்றும் தீர்மானத்துடன் பலமுள்ள இருதயத்தைப் பெற்றிரு; ஒரு வலிமையான இருதயத்தை உடையவனாய் இரு. நீ என்னை நேசிக்க விரும்பினால், நான் உன்னில் சாதிக்க விரும்பும் எல்லாவற்றிலும் நீ என்னைத் திருப்திப்படுத்த வேண்டும். நீ என்னைப் பின்பற்ற விரும்பினால், உன்னிடம் உள்ள அனைத்தையும், நீ விரும்பும் அனைத்தையும் நீ கைவிட வேண்டும்; ஒரு எளிமையான மனதுடன், நீ எனக்கு முன் பணிவுடன் கீழ்ப்படிய வேண்டும். மனம்போன போக்கில் ஆராயவோ சிந்திக்கவோ வேண்டாம், மாறாகப் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையுடன் இணைந்து செல்.

இங்கே, நான் உனக்கு ஆலோசனை கூறுகிறேன்: நான் உனக்குள் போதித்திருக்கிற எல்லாவற்றையும் உறுதியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி கவனமாயிரு, மேலும் அதை கடைப்பிடிப்பதிலும் உறுதியாயிரு.

முந்தைய: அத்தியாயம் 27

அடுத்த: அத்தியாயம் 29

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக