அத்தியாயம் 116
என்னுடைய வார்த்தைகளில் பலவும் ஜனங்களைப் பயமுறுத்துகின்றன. என்னுடைய வார்த்தைகளில் பலவும் ஜனங்களை பயத்தால் நடுங்க வைக்கின்றன, என் வார்த்தைகளில் பலவும் ஜனங்களைத் துன்புறுத்துகின்றன மற்றும் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன, அதை விட, அவை ஜனங்களை அழிக்கின்றன. என்னுடைய வார்த்தைகளின் செழிப்பை யாராலும் அளவிட முடியாது அல்லது அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. வாக்கியம் வாக்கியமாக நான் என்னுடைய வார்த்தைகளைச் சொல்லி, அவற்றை வெளிப்படுத்தினால் மட்டுமே உங்களால் பொதுவான விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும், அதே நேரத்தில் பிற குறிப்பான உண்மைகளின் உண்மை நிலை தெளிவாகப் புலப்படாமல் இருக்கும். இவ்வாறு, என்னுடைய வார்த்தைகளை எல்லாம் வெளிப்படுத்த நான் உண்மைகளைப் பயன்படுத்துவேன். அதன் மூலம் உங்களுக்கு அதிகமானப் புரிதலை அனுமதிப்பேன். என்னுடைய பேச்சின் பாணியை கருத்தில் கொண்டு, நான் வார்த்தைகளால் பேச மட்டும் செய்யாமல், அதை விட மேலாக, நான் என் வார்த்தைகளால் செயலாற்றுகிறேன்; “வார்த்தைகளும் சாதனைகளும் ஒரேநேரத்தில் நிகழ்கின்றன” என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். என்னைப் பொறுத்த வரையில் எல்லாம் இலவசமானது, எல்லாம் விடுவிக்கப்பட்டது, மேலும் இந்த அஸ்திபாரத்தின் மேல், நான் செய்வதெல்லாம் ஞானத்தால் நிரம்பி இருக்கிறது. நான் கவனமின்றிப் பேசமாட்டேன், மேலும் கவனமின்றி செயலாற்றவும் மாட்டேன். (மனிதத் தன்மைக்குள்ளாக இருந்தாலும் சரி தெய்வீகத் தன்மையில் இருந்தாலும் சரி, நான் ஞானத்தோடு தான் பேசுகிறேன், செயலாற்றுகிறேன், ஏனெனில் என்னுடைய மனிதத் தன்மை என்பது என்னில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.) இருந்தாலும் நான் பேசும்போது, யாரும் என் பேச்சின் தொனியில் கவனம் செலுத்துவதில்லை; நான் செயலாற்றும்போது, ஒருவரும் நான் செயலாற்றும் முறையில் கவனம் செலுத்துவதில்லை. இது மனிதனின் குறைபாடு. என் முதற்பேறான குமாரர்கள் மேல் மட்டுமல்லாமல், நான் எல்லா மனிதர்கள் மேலும் என் வல்லமையை வெளிப்படுத்துவேன், ஆனால் எல்லாத் தேசங்களுக்குள்ளும் எல்லா ஜனங்களின் மத்தியிலும் இன்னும் அதிகமாக என் வல்லமையை வெளிப்படுத்துவேன்; இப்படிச் செய்வதே சாத்தானை வெட்கப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சாட்சியாக இருக்கும். நான் முட்டாள்தனமாகச் செயல்படுவதில்லை. என்னுடைய முதற்பேறான குமாரர்களுக்கு நான் சாட்சி அளிப்பது தவறு என்று பெரும்பாலான ஜனங்கள் நினைக்கின்றனர்; எனக்கு வெளியில் பிற தேவர்கள் இருப்பதாகவும், நான் அறிவற்று செயல்படுவதாகவும், நான் என்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதாகவும் அவர்கள் சொல்லுகின்றனர்; மேலும் இதில், மனுஷனின் சீர்கேடு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. முதற்பேறான குமாரர்களுக்கு சாட்சி அளிப்பதில் நான் தவறு செய்ய முடியுமா? நான் தவறு செய்கிறேன் என்று சொல்கிறீர்களே, உங்களால் நிரூபிக்க முடியுமா? நான் உயர்த்தாமலும், சாட்சி அளிக்காமலும் இருந்தால், நீங்கள் என் குமாரனை இன்னும் உங்களுக்குக் கீழே தள்ளி விடுவீர்கள், இன்னும் அவரை மிக அலட்சியமாக நடத்துவீர்கள், மேலும் இன்னும் அவரை உங்கள் வேலையாளைப் போல நடத்துவீர்கள். பன்றிக் கூட்டமே! உன்னை ஒவ்வொருவராக அகற்றுவேன்! ஒருவரைக் கூட விட்டு வைக்க மாட்டேன். இயல்பான மனிதத் தன்மையைக் கொண்டிருக்கும் ஒரு நபரோடு இணக்கமாக இல்லாத இவர்கள் எந்த விதமான பொருட்கள் என்று எனக்குச் சொல்லுங்கள்? சந்தேகம் இல்லாமல் அவர்கள் பன்றிகளே! என்னால் அவர்களின் பார்வைக்கு முன்னால் நிற்கவே முடியாது. நான் உங்களின் சாட்சிக்காகக் காத்திருந்தால், என் கிரியை ஏற்கனவே தாமதமாகி இருக்கும்! பன்றிக் கூட்டமே! உங்களுக்கு மனிதத் தன்மை என்பதே இல்லை! நீ என் ஊழியத்துக்குத் தேவையே இல்லை! இங்கிருந்து உடனே வெளியே போ! நீ நீண்ட நாளாக என் குமாரனை கொடுமைப்படுத்தி ஒடுக்கினாய்; உன்னை கூழாக மிதித்துப் போடுவேன்! நீ இனிமேலும் முரட்டுத்தனமாக இருக்கத் துணிந்தால் என்ன நடக்கும் என்று பார்; என்னை நீ மீண்டும் அவமானப்படுத்தத் துணிந்தால் என்ன நடக்கும் என்று பார்! நான் ஏற்கனவே என் பெரிதான கிரியையை செய்து முடித்து விட்டேன்; நான் திரும்பி இந்த விலங்குக் கூட்டத்தை நிராகரித்து அகற்ற வேண்டும்.
எல்லாம் என் கரங்களால் நிறைவேற்றப்படுகின்றன (யாரிடம் நான் அன்புகூருகிறேனோ அவர்களைப் பொறுத்த வரையில்), மேலும் எல்லாம் என் கரங்களில் அழிக்கப்படுகின்றன (நான் வெறுக்கும் விலங்குகள், மேலும் நான் அருவருக்கும் ஜனங்கள், வஸ்துக்கள் மற்றும் பொருட்களைப் பொறுத்த வரையில்). நான் செய்யப் போவதை எல்லாம் என் முதற்பேறான குமாரர்கள் பார்ப்பதற்கு நான் அனுமதிப்பேன், நான் சீயோனில் இருந்து வந்ததில் இருந்து நான் செய்தவற்றை எல்லாம் பார்ப்பதற்காக அவர்களை முற்றிலுமாக புரிந்து கொள்ள அனுமதிப்பேன். அதன்பிறகு, நாங்கள் இணைந்து சீயோன் மலையில் பிரவேசிப்போம், யுகங்களுக்கு முன்னால் நாங்கள் இருந்த இடங்களுக்குள் பிரவேசிப்போம், மேலும் எங்கள் ஜீவிதத்தைப் புதிதாக ஜீவிப்போம். அப்போதில் இருந்து, உலகத்தோடும் இந்தப் பன்றிக் கூட்டங்களோடும் தொடர்பே இருக்காது. முழு சுதந்திரம் இருக்கும்; எல்லாம் தடுக்கப்படாமலும் தடையின்றியும் இருக்கும். என்னுடைய முதற்பேறான குமாரககளில் யாரையும் எதிர்க்கத் துணிகிறவர் யார்? என் முதற்பேறான குமாரர்களைத் தொடர்ந்து எதிர்க்கத் துணிபவர் யார்? நான் அவர்களைச் சுலபத்தில் விட்டுவிட மாட்டேன்! இருப்பினும் கடந்த காலத்தில் நீ என்னை வணங்கினாய், அப்படித் தான் இன்று என் முதற்பேறான குமாரர்களையும் வணங்க வேண்டும். எனக்கு முன்பாக ஒன்றாகவும், எனக்குப் பின்பாக வேறொன்றாகவும் இருக்காதே; ஒவ்வொரு நபரும் எப்படி பளிங்கு போல் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை நான் பார்கிறேன். என்னுடைய குமாரனுக்கு உண்மையாக இருக்கவில்லை என்பது எனக்குப் பெற்றோருக்குரிய கனத்தைக் கொடுக்கவில்லை என்பதாகும், இது ஒரு வெளிப்படையான உண்மை, ஏனெனில் நாங்கள் ஒரே சரீரமாக இருக்கிறோம். ஒருவர் என்னிடம் நன்றாக இருந்து விட்டு, என் முதற்பேறான குமாரர்களிடம் வேறாக நடந்தால், அவர்கள் சந்தேகமின்றி, குறிப்பிடத்தக்க பெரிய சிவப்பு வலுசர்ப்பத்தின் சந்ததியே, ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தை உடைக்கிறார்கள்; இந்தப் பாவம் ஒருநாளும் மன்னிக்கப்படுவதில்லை! நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் காண வேண்டும். எனக்கு சாட்சியாக இருப்பது உங்கள் கடமை, அதைவிட, முதற்பேறான குமாரர்களுக்குச் சாட்சியாக இருப்பது உங்கள் கடப்பாடு ஆகும். உங்களில் ஒருவரும் உங்கள் கடமைகளைத் தவிர்க்கக் கூடாது; இதைத் தடுக்கும் யாரையும் நான் உடனே வெளியேற்றுவேன்! உன்னை நீயே சிறப்பானவனாக நினைத்துக் கொள்ளாதே. நான் இப்போது உன்னிடம் கூறுகிறேன்: யார் அப்படி அதிகமாக இருக்கிறார்களோ, எனது கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள்! அப்படி அதிகமாக இருக்கும் யாராய் இருந்தாலும், அவர்களுக்கு மிகக் குறைந்த நம்பிக்கையே உண்டு, மேலும் அவன் மிகுதியும் அழிவின் மகனாவான். நான் உன்னை என்றென்றும் சிட்சிப்பேன்!
என்னுடைய கிரியை எல்லாம் என் ஆவியினால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன, அதில் குறுக்கிட நான் எந்த சாத்தானின் கூட்டத்தையும் அனுமதிப்பதில்லை. என்னுடைய திட்டங்களுக்கு இடையூறு செய்வதைத் தவிர்க்கவே இது. முடிவில் பெரியவர்கள் சிறியவர்கள் ஆகிய இருவரும் என்னையும், என் முதற்பேறான குமாரர்களையும் எழுந்து துதிக்கவும் என்னுடைய அதிசயமான செயல்களைத் துதிக்கவும் என் மனித உடலின் வெளிப்பாட்டைத் துதிக்கவும் அனுமதிப்பேன். முழு பிரபஞ்சத்திலும் பூமியின் கடைசி பரியந்தம் மட்டும், மலைகளையும், நதிகளையும், எல்லாவற்றையும் அசைக்கும்படி துதியின் சத்தம் முழங்கும்படி செய்வேன், மேலும் நான் முற்றிலுமாகச் சாத்தனை அவமானப்படுத்துவேன். இழிந்த மற்றும் மோசமான பழைய உலகத்தை முழுவதுமாக அழிக்க நான் என் சாட்சியைப் பயன்படுத்துவேன், மேலும் ஒரு பரிசுத்தமானதும் அசுத்தமாக்கப்படாததுமான புதிய உலகத்தை உருவாக்குவேன். (சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் விண் பொருட்கள் எதிர்காலத்தில் மாறாது என்று சொல்லும் போது, பழைய உலகம் இன்னும் இருக்கும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் முழு உலகமும் அழிக்கப்படும் மேலும் பழைய உலகம் மாற்றப்படும். பிரபஞ்சத்தை மாற்றம் செய்வதை நான் குறிக்கவில்லை.) அதன் பின்னர் தான் அது என் சித்தத்தோடு இணைந்த ஓர் உலகமாய் இருக்கும்; அதற்குள், இன்று இருப்பது போல் அடக்குமுறை இருக்காது, அல்லது ஜனங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் தற்போதைய நிகழ்வு இருக்காது. மாறாக, மாம்சத்துக்குள் ஒரு முழுமையான நேர்மையும் நியாயமும் இருக்கும். (நேர்மையும் நியாயமும் இருக்கும் என்று நான் கூறினாலும், அது மாம்சத்துக்குள் இருக்கும்; அது என்னுடைய ராஜ்யத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது—வானத்தையும் பூமியையும் போல வித்தியாசமானது; இரண்டையும் ஒப்பிட வழியே இல்லை—எப்படி இருந்தாலும், மனுஷ உலகம் என்பது மனுஷ உலகமே, மேலும் ஆவிக்குரிய உலகம் ஆவிக்குரிய உலகம்மே). அப்போது, அப்படிப்பட்ட உலகின் மீது நானும் என் முதற்பேறான குமாரர்களும் அதிகார வரம்பைப் பயன்படுத்துவோம் (இந்த உலகில் சாத்தானிடம் இருந்து எந்த இடையூறும் இருக்காது, ஏனெனில் என்னால் சாத்தான் முற்றிலுமாக அகற்றப்பட்டிருப்பான்), ஆனால் நம் ஜீவிதம் இன்னும் ராஜ்யத்தின் ஜீவிதமாக இருக்கும், இதை யாராலும் மறுக்க முடியாது. காலங்கள் முழுவதும், இந்த வகையான ஜீவிதத்தை அனுபவித்த மனுஷர்கள் யாரும் (எவ்வளவு தூரம் உண்மையாக இருந்த போதிலும்) இருந்ததில்லை, ஏனெனில் காலங்கள் முழுவதும், எனது முதற்பேறான குமாரனாகச் செயல்பட யாரும் இல்லை, மற்றும் அவர்கள் இன்னும் எனக்காகப் பின்னர் ஊழியம் செய்வார்கள். இந்த ஊழியம் செய்வோர் உண்மையாக இருந்தாலும், மொத்தத்தில் எப்படியிருந்தாலும் அவர்கள் என்னால் ஜெயங்கொள்ளப்பட்ட சாத்தானின் சந்ததியாராகவே இருக்கின்றனர், ஆகவே மாம்சத்தின் மரணத்துக்குப் பின், அவர்கள் இன்னும் எனக்கு ஊழியம் செய்ய மனுஷ உலகத்தில் பிறந்திருக்கிறார்கள்; இதுவே “குமாரர்கள் எல்லாம் மொத்தத்தில் குமாரர்களே மற்றும் ஊழியம் செய்பவர்கள் எல்லாம் மொத்தத்தில் சாத்தானின் சந்ததிகளே” என்பதன் உண்மையான அர்த்தம். காலங்கள் முழுவதும், இன்றைய முதற்பேறான குமாரர்களுக்கு ஊழியம் செய்ய எத்தனை ஜனங்கள் இருக்கிறார்கள் என்பது அறியப்படவில்லை; ஊழியம் செய்யும் எல்லோரிலும், யாரும் ஓடிவிட முடியாது, நான் அவர்களை எனக்கு என்றென்றும் ஊழியம் செய்ய வைப்பேன். அவர்களின் சுபாவங்களை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் யாவரும் சாத்தானின் குமாரர்கள், மேலும் அவர்கள் அனைவரும் என்னை எதிர்க்கிறார்கள், மேலும் அவர்கள் யாவரும் எனக்கு ஊழியம் செய்யும் போதிலும், அவர்கள் பலவந்தப்படுத்தப் பட்டதானாலேயே செய்கிறார்கள், அவர்களுக்கு வேறு மாற்று கிடையாது. இது ஏனெனில் எல்லாமே என் கரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆகவே நான் பயன்படுத்தும் ஊழியம் செய்பவர்கள் முடிவு பரியந்தம் எனக்கு ஊழியம் செய்ய வேண்டும். இவ்வாறு, காலங்களில் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களைப் போலவே சுபாவத்தைக் கொண்டிருக்கும் பல ஜனங்கள் இன்றும் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் எல்லோரும் ஒரே ஆவியை உடையவர்கள். இவ்வாறு, எனக்காக அங்குமிங்கும் ஓடும் உண்மையான ஊழியம் செய்பவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர், ஆனால் முடிவில் (ஆறாயிரம் ஆண்டுகளாக, அவர்கள் தொடர்ந்து எனக்கு ஊழியம் செய்து வருகிறார்கள், ஆகவே இந்த ஜனங்கள் ஊழியம் செய்வோர் மத்தியில் இருக்கிறார்கள்), காலங்கள் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டதை யாராலும் அடைய முடியாது, ஏனெனில் நான் உருவாக்கி வைத்திருப்பது அவர்களுக்கானது அல்ல.
என்னுடைய யாவும் ஏற்கனவே கண்களுக்கு முன்னால் நிறைவேற்றப்பட்டாகி விட்டது; நான் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் மறுபடியும் ஒன்றிணைய, என்னுடைய வாசஸ்தலத்திற்குத் திரும்பி வரவும், என்னருகே திரும்பி வரவும் செய்வேன். ஏனெனில் நான் வெற்றி பெற்று ஜெயத்தோடு திரும்பி வந்துள்ளேன் மேலும் நான் முற்றிலுமாக மகிமை அடைந்துள்ளேன், நான் உன்னைத் திருப்பிக் கொண்டு செல்ல வருகிறேன். கடந்த காலத்தில், சில ஜனங்கள் கணித்துள்ளனர் “ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள்.” இந்தக் கணிப்பு துல்லியமானதாக இல்லாவிட்டாலும், அது முற்றிலும் தவறானதும் இல்லை—இவ்வாறு, நான் உங்களுக்கு ஒரு விளக்கத்தைக் கூறுவேன். “புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மற்றும் புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள்” மொத்தமாக ஜனங்களின் எண்ணிக்கையையோ அல்லது ஒரு வகையான நபரையோப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. “புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள்” ஒரு ஜனங்களின் எண்ணிக்கையையும் “புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள்” ஒரு வகையான நபரையும் குறிக்கிறது, ஆனால் ஒன்றுகூட முதல்பேறான குமாரர்களைக் குறிக்கவில்லை, மாறாக, அவை சிருஷ்டிப்பைக் குறிக்கின்றன. இதனால் தான் அவர்கள் கடைசி நாட்களில் எண்ணெயைத் தயாரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்: (சிருஷ்டிப்பு என்னுடைய இயல்பைக் கொண்டிருக்கவில்லை; அவர்கள் புத்தியுள்ளவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் எண்ணெயைத் தயாரிக்க வேண்டும், மேலும் இவ்வாறு அவர்கள் என் வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.) “புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள்” நான் சிருஷ்டித்த மனுஷர்கள் மத்தியில் என் குமாரர்களையும் என் ஜனங்களையும் குறிக்கிறது. அவர்கள் “கன்னிகைகள்” என்று ஏன் அழைக்கப்படுகின்றனர் என்றால் பூமியில் அவர்கள் பிறந்த போதிலும், அவர்கள் என்னால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள்; அவர்கள் பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படலாம் என்பதால் அவர்கள் “கன்னிகைகள்” என்று அழைக்கப்படுகின்றனர். முன்னர் குறிப்பிடப்பட்ட “ஐந்து” என்பது என்னால் முன்குறிக்கப்பட்ட என்னுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. “புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள்” என்பது ஊழியம் செய்பவர்களைக் குறிக்கிறது, ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில் சிறிதும் பற்று இல்லாமல் புறம்பான விஷயங்களை மட்டுமே தேடி எனக்கு ஊழியம் செய்கின்றனர் (ஏனெனில் அவர்களுக்கு என்னுடைய இயல்பு இல்லை, அவர்கள் எதைச் செய்தாலும் சரி, அது ஒரு புறம்பான விஷயமே) மேலும் அவர்களால் என்னுடைய திறமையான உதவியாளர்களாக இருக்க முடியாது, அதனால் அவர்கள் “புத்தியில்லாத கன்னிகைகள்” என்று அழைக்கப்படுகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட “ஐந்து” சாத்தானைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் “கன்னிகைகள்” என்று அழைக்கப்பட்ட காரியம் என்னால் அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவர்கள், மேலும் எனக்கு ஊழியம் செய்ய வல்லவர்கள் என்பதைக் குறிக்கிறது—ஆனால் அத்தகைய ஜனங்கள் பரிசுத்தவான்கள் இல்லை, ஆகவே அவர்கள் ஊழியம் செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.