அத்தியாயம் 60

வாழ்க்கை வளர்வதென்பது எளிதான விஷயமல்ல; அதற்கு ஒரு செயல்முறை தேவை, மேலும், உங்களால் விலைக்கிரயத்தைக் கொடுக்க முடியும், மற்றும் ஒரே இருதயத்துடன் நீங்கள் என்னுடன் ஒத்துழைப்பீர்கள், அதனால் என் பாராட்டை நீங்கள் பெறுவீர்கள். வானம், பூமி மற்றும் அனைத்தும் நான் கூறும் வார்த்தைகளால் நிறுவப்பட்டுள்ளன, மேலும் அவை முழுமையடைந்தன, மேலும், என் மூலமாக, எதையும் நிறைவேற்றலாம். நீங்கள் விரைவில் வளர்ந்து, என் தோள்களிலிருந்து சுமைகளை எடுத்து, உங்களின் தோள்களின் மேல் வைத்து, என் சார்பாக என் பணியைச் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே விருப்பம்; அப்போது தான் நான் திருப்தி அடைவேன். எந்த மகன் தன் தந்தையின் சுமைகளை நிராகரிப்பான்? எந்தத் தந்தை தன் குமாரனுக்காக இரவு பகலாக உழைக்காமல் இருப்பான்? இருப்பினும், என் சித்தம் குறித்தப் புரிதல் உங்களுக்கு இல்லை, மற்றும் என் பாரங்களைக் கருத்தில் கொள்ளவில்லை; என் வார்த்தைகளுக்கு உங்களிடம் மதிப்பில்லை, மேலும், நீங்கள் நான் கூறுவது போல் செய்வதில்லை. நீங்களே எப்போதும் உங்களின் எஜமானர்களாக இருக்கிறீர்கள்; எவ்வளவு சுயநலமாக இருக்கிறீர்கள்! நீங்கள் உங்களைப் பற்றி மட்டும் தான் சிந்திக்கிறீர்கள்!

என் சித்தத்தை உண்மையில் நீ புரிந்து கொண்டாயா, அல்லது புரியவில்லை என்று பாசாங்கு செய்கிறாயா? இத்தகைய தவறான நடத்தையில் நீ ஏன் எப்போதும் ஈடுபடுகிறாய்? அவ்வாறு செயல்படுவதில் நீ என் மூலமாகச் சரியானதைச் செய்கிறாய் என்று உன் மனசாட்சி கூறுகிறதா? பிணிக்கான காரணத்தைக் கண்டறிந்ததும், அதைக் குணப்படுத்துவதற்காக நீ ஏன் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை? நான் கூறுவதாவது: இந்த நாளிலிருந்து, உங்களின் உடலில் எந்தவொரு பிணிகளும் இருக்காது. உங்களின் சில பாகங்கள் சுகமில்லாதது போல் தோன்றினாலும், வெளிப்புறக் காரணத்தைத் தேடுவதில் மும்முரமாக இருக்காதீர்கள்; மாறாக, என் முன் வந்து, என் நோக்கத்தை அறிந்து கொள்ள நாட்டம் கொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவில் கொள்வீர்களா? இதுவே என் வாக்குத்தத்தம்: இந்த நாளிலிருந்து, நீங்கள் உங்களின் உடலிலிருந்து பிரிந்து ஆவிக்குரிய உலகத்திற்குள் முழுமையாக நடந்து செல்வீர்கள்; அதாவது, இனி உங்களின் உடலில் பிணியுடன் கூடிய சுமை இருக்காது. அதில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா? நீங்கள் மகிழ்ச்சிகரமாக உணர்கிறீர்களா? இதுவே என் வாக்குத்தத்தம். மேலும், அதைத் தான் நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட உங்களில் இது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எவ்வளவு அற்புதமாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது!

என் கிரியை பகலிரவாக முன்னேற்றமடைகிறது; நொடிக்கு நொடி, அது ஒருபோதும் நிற்பதில்லை. ஏனென்றால், என் சொந்த இருதயத்திற்குப் பிரியமானவனாக உன்னை மாற்றுவதே என் அவசர விருப்பமாகும், மற்றும் விரைவில் உங்களால் என் இருதயம் ஆறுதல் பெறும். என் குமாரர்களே! என் நன்மையின் ஆசீர்வாதங்களை நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது! கடந்த காலத்தில், என் நாமத்திற்காக நீங்கள் துன்பப்பட்டீர்கள், ஆனால் இப்போது உங்கள் சோதனையின் நாட்கள் முடிந்துவிட்டன. என் குமாரர்களின் தலைமுடியைக் காயப்படுத்த யாராவது துணிந்தால் கூட, நான் அவர்களை எளிதில் மன்னிக்க மாட்டேன், அல்லது அவர்களால் இனி எழவே முடியாது. இதுவே என் ஆட்சிமுறை ஆணையாகும், அதை மீறும் எவரும் அதை அவர்களின் சொந்த ஆபத்தில் செய்கிறார்கள். என் குமாரர்களே! உங்கள் இருதயங்களில் உள்ளவைகளால் களிப்படையுங்கள்! மகிழ்ச்சியுடன் பாடி ஆர்ப்பரியுங்கள்! நீங்கள் இனிக் கொடுமைப்படுத்தப்படவும், ஒடுக்கப்படவும் மாட்டீர்கள், மேலும், நீங்கள் இனிமேலும் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டீர்கள். என் மீதான உங்களின் விசுவாசம் குறித்து இனி நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; நீங்கள் பகிரங்கமாக என்னை விசுவாசிக்க வேண்டும். பிரபஞ்சத்தையும் பூமியின் எல்லைகளையும் அதிர வைக்கும் அளவுக்கு என் பரிசுத்த நாமத்தை உரக்க அழையுங்கள். யாரெல்லாம் அவர்களால் இழிவாகப் பார்க்கப்பட்டார்களோ, யாரெல்லாம் அவர்களால் நாசமாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்களோ, அவர்கள் அவர்களின் மேல் நின்று அவர்களை ஆட்சி செய்வதையும், ஆள்வதையும், மற்றும், மிகவும் முக்கியமாக, அவர்களை நியாயந்தீர்ப்பதையும் அவர்கள் காணட்டும்.

நீங்கள் பிரவேசிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள், நீங்கள் அனுபவிப்பதற்காகக் காத்திருக்கும் இன்னும் சிறப்பான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்கு அருளுவேன், மற்றும் ஒப்பிட முடியாத இனிமையையும், ஏராளமான இரகசியங்களையும் மற்றும் புரிந்துகொள்ள முடியாத ஆழத்தையும் உங்களால் நன்றாகச் சுவைக்க முடியும்!

முந்தைய: அத்தியாயம் 59

அடுத்த: அத்தியாயம் 61

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக