அத்தியாயம் 76

நான் பேசுகிற அனைத்தும் என் சித்தத்தின் வெளிப்பாடுகளாகும். என் பாரத்தை யாரால் கருத்தில் கொள்ள முடியும்? என் நோக்கத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களிடத்தில் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியையும் நீங்கள் கருத்தில் கொண்டிருக்கிறீர்களா? அத்தகைய கவனக்குறைவு! என் திட்டங்களுக்கு இடையூறு செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம்? நீங்கள் கட்டுப்பாடின்றி நடக்கிறீர்கள்! பொல்லாத ஆவிகளின் இத்தகைய கிரியைத் தொடருமானால், நான் அவற்றை உடனடியாகப் பாதாளக் குழிக்குள் வீசியெறிந்து கொன்று விடுவேன். பொல்லாத ஆவிகளின் பல்வேறு செயல்களை நீண்டகாலத்திற்கு முன்பாகவே தெளிவாகக் கண்டிருக்கிறேன். மேலும் பொல்லாத ஆவிகளால் பயன்படுத்தப்படுகிற ஜனங்களின் (தவறான நோக்கம் கொண்ட, மாம்சம் அல்லது செல்வத்தை இச்சிக்கிற, தங்களையே உயர்த்திக் கொள்கிற, திருச்சபையைச் சீர்குலைக்கிற, இன்னும் பலரின்) உண்மையான தன்மை என்னால் கண்டறியப்பட்டிருக்கிறது. பொல்லாத ஆவிகள் வெளியே துரத்தப்பட்டவுடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள். நான் உனக்குச் சொல்கிறேன்! இனிமேல் இந்த ஜனங்களை ஒருபோதும் பயன்படுத்தாதபடி, ஒவ்வொருவராக அகற்றுவேன்! அதாவது, பொல்லாத ஆவிகளால் சீர்கெடுக்கப்பட்ட எந்த ஒரு நபரும் என்னால் பயன்படுத்தப்பட மாட்டார்கள், அவர்கள் துரத்தப்படுவார்கள்! எனக்கு உணர்வுகள் இல்லை என்று நினைக்காதே! இதைத் தெரிந்து கொள்! நான் பரிசுத்தமான தேவன், நான் ஒரு அருவருப்பான ஆலயத்தில் வசிக்க மாட்டேன்! எனக்கு முற்றிலும் விசுவாசமுள்ளவர்களாய் மற்றும் என் பாரத்தை கருத்தில் கொள்ளக் கூடிய நேர்மையான மற்றும் ஞானமுள்ள நபர்களை மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் என்னால் முன்குறிக்கப்பட்டவர்கள், எந்தப் பொல்லாத ஆவிகளும் அவர்கள் மீது கிரியை செய்வதில்லை. நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன்: இனிமேல் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில்லாத அனைவரும் பொல்லாத ஆவிகளின் கிரியையைக் கொண்டிருக்கிறார்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்: பொல்லாத ஆவிகள் கிரியை செய்யும் ஒரு நபர் கூட எனக்கு வேண்டாம். அவர்கள் அனைவரும் தங்கள் மாம்சத்துடன் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள்.

கடந்த காலங்களில் உங்களிடத்தில் நான் வைத்த கோரிக்கைகள் கொஞ்சம் தளர்வாக இருந்தன, மேலும் மாம்சத்தைப் பொறுத்தவரை நீங்கள் ஒழுக்கங்கெட்டிருக்கிறீர்கள். இந்த நாளிலிருந்து, நான் உங்களை இப்படியே தொடர அனுமதிக்க மாட்டேன். உங்கள் வார்த்தைகளும் செயல்களும் எல்லா வகையிலும் என்னை வெளிப்படுத்தவில்லையென்றால், அல்லது அவை என் சாயலிலிருந்து சற்று வேறுபட்டாலும், நான் நிச்சயமாக உங்களை லேசாக விடமாட்டேன். இல்லையென்றால், நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டும் நகைச்சுவைப் பண்ணிக் கொண்டும், கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக் கொண்டும், கட்டுப்பாடில்லாமலும் இருப்பீர்கள். நீ ஏதாவது தவறு செய்யும்போது, நான் உன்னை விட்டுவிட்டேன் என்று நீ உணரவில்லையா? உனக்குத் தெரிந்திருந்தும் கூட, நீ ஏன் இன்னும் ஒழுக்கங்கெட்டிருக்கிறாய்? என் நியாயந்தீர்க்கிற கரத்தின் தொடுதலுக்காக நீ காத்திருக்கிறாயா? இன்று முதல், ஒரு நொடியாகிலும் என் நோக்கத்திற்கேற்ப செய்யாத எவரையும் நான் உடனடியாகத் தண்டிப்பேன். நீ எதையும் செய்யாமல் வீண்பேச்சு பேசிக் கொண்டிருந்தால், நான் உன்னை விட்டு விடுவேன். நீ ஆவிக்குரியத் தேவைகளைக் கொடுக்காவிட்டால் பேசாதே. உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை, ஆனால் இப்போது இருக்கிற கட்டத்திற்கு என் கிரியை முன்னேறி நடந்து விட்டதால், என்னுடைய திட்டத்தின்படி நான் தொடர்வேன் என்று சொல்கிறேன். நீங்கள் ஒன்றும் செய்யாமல் ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கையில் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால், நான் நிச்சயமாக உங்களுடன் இருப்பேன். உங்களில் யாரையும் நான் அநியாயமாக நடத்த மாட்டேன். நீ உன் வாயைத் திறந்தால், நான் உனக்கு உரிய வார்த்தைகளை வழங்குவேன். என் வார்த்தைகளுக்குள் இருந்து என் இருதயத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். ஊமையாக நடிக்கச் சொல்லி நான் உங்களிடத்தில் சொல்வதில்லை, தேவையில்லாத காரியங்களைக் குறித்த பேச்சில் ஈடுபடவும் நான் உங்களுக்குச் சொல்வதில்லை.

அதிக நேரம் இல்லை, எனது நாள் தாமதிக்கப்படக் கூடாது என்று நான் ஏன் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்? இதைப் பற்றி நீங்கள் கவனமாக யோசித்தீர்களா? என் வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு உண்மையாகப் புரிகிறதா? அதாவது, நான் பேசத் தொடங்கியதிலிருந்தே நான் கிரியை செய்து வருகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனது கிரியையின் இலக்காக இருக்கிறீர்கள். குறிப்பாக எந்த நபரும் அல்ல, மேலும் வேறு யாருமல்ல. நீங்கள் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சிந்திப்பதில்லை. நீங்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு பரிதாபகரமானவர்களாய் இருக்கிறீர்கள்? என் பாரத்தை நீங்கள் துளியும் கருத்தில் கொள்வதில்லை!

என்னுடைய கடினமான எல்லா முயற்சிகளும் நான் செலுத்திய விலைக்கிரயமும் உங்களுக்காகத்தான். எனது பாரத்தை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையென்றால், நீங்கள் உங்களைக் குறித்த எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவில்லை. நீங்கள் ஆட்சி செய்ய அனைத்து தேசங்களும் காத்திருக்கின்றன, மேலும் அனைத்து மக்களும் நீங்கள் அவர்களை ஆளக் காத்திருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் உங்கள் கரங்களில் ஒப்படைத்து விட்டேன். இப்போது, அதிகாரத்தில் உள்ள அனைவரும் பதவி விலகத் தொடங்கி வீழ்ச்சியடைந்து விட்டார்கள், அவர்கள் என் நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வரவே காத்திருக்கிறார்கள். தெளிவாகப் பாருங்கள்! உலகம் இப்போது தோற்றுக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் என் ராஜ்ஜியம் வெற்றிகரமாகக் கட்டப்பட்டுள்ளது. என் குமாரர்கள் தோன்றியுள்ளனர் மேலும் என் முதற்பேறான குமாரர்கள் என்னுடன் ராஜாக்களாக, பல்வேறு தேசங்களையும் மக்களையும் ஆட்சி செய்கிறார்கள். இது ஒரு தெளிவற்ற விஷயம் என்று நினைக்க வேண்டாம்; இது தெளிவான சத்தியம். அப்படித்தானே? நீங்கள் என்னிடம் ஜெபித்து என்னிடம் மன்றாடினவுடனே, நான் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உங்களைத் துன்புறுத்துபவர்களைத் தண்டித்து, உங்களைத் தொந்தரவு செய்பவர்களைக் கையாண்டு, உங்களை வெறுக்கிறவர்களை அழித்து, உங்களுக்கு ஊழியஞ்செய்யும் ஜனங்களையும், நிகழ்வுகளையும் மற்றும் காரியங்களையும் நிர்வாகம் பண்ணுவேன். நான் அதைப் பலமுறைக் கூறியுள்ளேன்: கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யும் எவருக்கும் (அதாவது என் குமாரனுக்கு ஊழியம் செய்யும் எவருக்கும்) நான் இரட்சிப்பைக் கொடுக்கமாட்டேன். என் குமாரனுக்கு ஊழியஞ்செய்வதினால் அவர்கள் நல்ல மனிதர்கள் என்று அர்த்தமல்ல; இது முழுக்க முழுக்க என் பெரிதான வல்லமை மற்றும் அற்புதமான செயல்களின் விளைவாகும். மனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அத்தகையவர்கள் நிச்சயமாகப் பரிசுத்த ஆவியின் கிரியையைக் கொண்டிருக்க மாட்டார்கள், மேலும் அவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைச் சிறிதளவும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இனி அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற பிறகு அவர்களால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்! இது உங்களுக்கான எனது உறுதிப்பாடாகும். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதீர்கள், புரிகிறதா?

குறைவான இன்னும் குறைவான நபர்களே உள்ளனர், ஆனால் அங்கத்தினர்கள் இன்னும் அதிகமாய்ச் சுத்திகரிக்கப்படுகிறார்கள். இது எனது கிரியையும், எனது நிர்வாகத் திட்டமும் மேலும் என் ஞானமும் மற்றும் என் சர்வவல்லமையுமாகும். இது எனது இயல்பான மனிதத்தன்மை மற்றும் எனது முழுமையானத் தெய்வீகத் தன்மையின் ஒருங்கிணைப்பாகும். நீங்கள் இதைத் தெளிவாகப் பார்க்கிறீர்களா? இந்தக் கருத்தைப் பற்றி உங்களுக்கு உண்மையானப் புரிதல் இருக்கிறதா? நான் என் சாதாரண மனிதத்தன்மையிலிருந்து பேசின ஒவ்வொன்றையும், என் தெய்வீகத் தன்மையின் மூலமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன். இதனால் தான் நான் சொல்வது எந்தக் குழப்பமுமில்லாமல் நிறைவேறும் என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; மாறாக, அவை அனைத்தும் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். நான் சொல்வது அனைத்தும் நிறைவேறும், நிச்சயம் கவனக் குறைவுடன் இருக்காது. நான் வெற்று வார்த்தைகளைப் பேசுவதில்லை மேலும் நான் தவறுகளைச் செய்வதில்லை. என்னை மதிப்பிடத் துணிந்தவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள், நிச்சயமாக அவர்களால் என் உள்ளங்கையிலிருந்து தப்பிக்க முடியாது. என் வார்த்தைகள் பேசப்பட்டவுடன், எதிர்க்கத் துணிவது யார்? யாருக்கு என்னை வஞ்சிக்கவும் அல்லது என்னிடமிருந்து எதையும் மறைக்கவும் தைரியமுண்டு? நான் முன்பே சொல்லியிருக்கிறேன்: நான் ஒரு ஞானமுள்ள தேவன். எல்லா மனிதர்களையும் சாத்தானிய நடத்தையையும் வெளிப்படுத்தவும், தவறான நோக்கங்கள் உடையவர்களையும், மற்றவர்களுக்கு முன்னால் ஒன்றாகவும், அவர்கள் முதுகுக்குப் பின்னால் இன்னொன்றாகவும் நடந்து கொள்பவர்களையும், என்னை எதிர்ப்பவர்களையும், எனக்கு விசுவாசமாய் இல்லாதவர்களையும், பணத்தை இச்சிப்பவர்களையும், என்னுடைய பாரத்தைக் கருத்தில் கொள்ளாதவர்களையும், தங்கள் சகோதர சகோதரிகளிடம் வஞ்சகத்திலும் பொல்லாப்பிலும் ஈடுபடுபவர்களையும், மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய நாவன்மையால் பேசுபவர்களையும், தங்கள் சகோதர சகோதரிகளுடன் தங்கள் இருதயத்திலும் மனதிலும் ஒருமனமாக ஒருங்கிணைந்து கொள்ள முடியாதவர்களையும் வெளிப்படுத்த நான் என்னுடைய சாதாரண மனிதத்தன்மையைப் பயன்படுத்துகிறேன். எனது சாதாரண மனிதத்தன்மை காரணமாக, எனது சாதாரண மனிதத்தன்மைக்கு தெரியாதென்று நினைத்துக் கொண்டு, பலர் என்னை இரகசியமாக எதிர்த்து வஞ்சகத்திலும் பொல்லாப்பிலும் ஈடுபடுகிறார்கள். மேலும் பலர் எனது சாதாரண மனிதத் தன்மைக்குச் சிறப்புக் கவனத்தைச் செலுத்தி, எனக்குச் சாப்பிடவும் குடிக்கவும் நல்ல காரியங்களை வழங்கி, வேலைக்காரர்களைப் போல என்னைச் சேவித்து, தங்கள் இருதயங்களில் இருப்பதை என்னிடம் பேசுகிறார்கள், அதே நேரத்தில் என் முதுகுக்குப் பின்னால் முற்றிலும் வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். குருட்டு மனிதர்களே! மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தைப் பார்க்கும் தேவனான என்னைப் பற்றி நீங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட நீ என்னை அறியவில்லை; நீ என்ன செய்கிறாய் என்பது எனக்குத் தெரியாது என்று நீ இன்னும் நினைக்கிறாய். மீண்டும் யோசித்துப்பார்: எனது சாதாரண மனிதத்தன்மை காரணமாக எத்தனை பேர் தங்களை அழித்துக் கொண்டார்கள்? விழித்தெழு! இனியும் என்னை வஞ்சிக்காதே. நீ உன்னுடைய நிர்வாகம் மற்றும் நடத்தையையும், உன் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் என் முன் வைக்க வேண்டும், மேலும் அவற்றைப் பற்றிய எனது தீவிர சோதனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 75

அடுத்த: அத்தியாயம் 77

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக