அத்தியாயம் 32
ஜனங்கள் என்னுடன் ஒன்றுகூடும்போது, என் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. ஜனங்கள் என்னுடன் கூடிவரும்படியாகவும், எனக்குக் கீழ்ப்படியாத சத்துருக்களாக இருக்காமல், என்னுடன் ஒத்துப்போகும் தோழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், உடனடியாக, நான் மனுஷன் மத்தியில் என் கரத்தின் ஆசீர்வாதங்களை வழங்குகிறேன். இவ்வாறு, நானும் மனுஷனை மனப்பூர்வமாக உபசரிக்கிறேன். எனது கிரியையில், மனுஷன் ஓர் உயர்மட்ட நிறுவனத்தின் உறுப்பினராகக் காணப்படுகிறான், அதனால் நான் அவனிடம் அதிகக் கவனம் செலுத்துகிறேன், ஏனென்றால் அவன் எப்போதும் என் கிரியையின் குறிக்கோளாகவே இருந்திருக்கிறான். ஜனங்களுடைய இருதயங்களில் எனது இடத்தை நான் நிலைநிறுத்தியுள்ளேன், அதனால் அவர்களின் இருதயங்கள் என்னை நோக்கிப் பார்க்கும்—ஆயினும் நான் ஏன் இதைச் செய்கிறேன் என்பதை அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் காத்திருப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. ஜனங்களின் இருதயங்களில் நான் ஓர் இடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நான் அங்கு வசிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதில்லை. மாறாக, தங்கள் இருதயங்களில் “பரிசுத்தர்” திடீரென்று வருவார் எனக் காத்திருக்கிறார்கள். எனது அடையாளம் மிகவும் “குறைவானது” என்பதால், ஜனங்களின் கோரிக்கைகளுக்கு நான் பொருத்தமானவராக இல்லை, ஆகவே, அவர்களால் துரத்திவிடப்படுகிறேன். அவர்கள் விரும்புவது என்னவென்றால், உயர்ந்த மற்றும் வல்லமையான “நான்”, ஆனால் நான் வந்தபோது நான் மனுஷனுக்கு இவ்வாறு தோற்றமளிக்கவில்லை, அதனால் அவர்கள் தங்கள் இருதயத்தில் இருக்கிற ஒருவருக்காக் காத்துக்கொண்டு, தூரத்தில் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் ஜனங்கள் முன் வந்தபோது, அவர்கள் ஜனக்கூட்டத்தின் முன்னிலையில் என்னை நிராகரித்தார்கள். இந்தக் குறைபாடுள்ள “தயாரிப்பு” மனுஷனால் “கையாளப்படுவதற்குக்” காத்துக்கொண்டும், எனக்கு அவ்வாறு செய்வதால் ஜனங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று பார்க்கும்படி கவனித்துக்கொண்டும், என்னால் ஒரு பக்கம் மட்டுமே நிற்க முடிந்தது. நான் ஜனங்களின் தழும்புகளைப் பார்ப்பதில்லை, ஆனால் அவர்களின் தழும்புகள் இல்லாத பகுதியைப் பார்க்கிறேன், இதிலிருந்து நான் திருப்தி அடைகிறேன். ஜனங்களின் பார்வையில், நான் வானத்திலிருந்து இறங்கி வந்திருக்கிற ஒரு “சிறிய நட்சத்திரமே அல்லாமல் வேறல்ல”; நான் வானத்தில் மிகவும் சிறியவர் மட்டுமே, மேலும் இன்று பூமியின் மீதான என் வருகை தேவனால் கட்டளையிடப்பட்டதாகும். இதன் விளைவாக, தேவனும் நானும் ஒன்றாகவும் மற்றும் ஒரே மாதிரியாகவும் இருப்பதாகக் கருதுவதற்கு ஜனங்கள் மிக அதிகமாகப் பயந்து “நான்” மற்றும் “தேவன்” என்ற வார்த்தைகளுக்கான அதிகமான விளக்கங்களுடன் வந்திருக்கின்றனர். எனது சாயல் தேவனுடைய தோற்றம் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதால், ஜனங்கள் அனைவரும் நான் தேவனுடைய குடும்பத்தைச் சேராத ஓர் ஊழியர் என்று நம்புகிறார்கள், மேலும், அவர்கள் இது தேவனுடைய சாயல் அல்ல என்று கூறுகிறார்கள். ஒருவேளை தேவனைப் பார்த்திருக்கும் ஜனங்கள் இருக்கலாம்—ஆனால் பூமியில் எனக்கு நுண்ணறிவு குறைவுபட்டிருப்பதால், தேவன் என்னிடம் ஒருபோதும் “தோன்றியிருக்கவில்லை”. ஒருவேளை எனக்கு “விசுவாசம்” மிகவும் குறைவாக இருந்திருக்கலாம், அதனால் ஜனங்கள் என்னைத் தாழ்ந்தவராகப் பார்க்கிறார்கள். ஒருவர் உண்மையிலேயே தேவனாக இருக்கிறார் என்றால், அவர் நிச்சயமாக மனுஷனின் மொழியில் புலமை பெற்றவராக இருப்பார் என்று ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள், ஏனென்றால் தேவன் சிருஷ்டிகராய் இருக்கிறார். ஆனால் உண்மைகள் துல்லியமாக எதிர்மாறாக உள்ளன: நான் மனுஷனுடைய மொழியில் புலமை பெற்றவர் இல்லை என்பது மட்டுமல்ல, மனுஷனின் “குறைபாடுகளுக்கானவைகளை” என்னால் “வழங்கக்” கூட முடியாத நேரங்களும் உள்ளன. இதன் விளைவாக, நான் சிறிது “குற்ற உணர்வை” உணர்கிறேன், ஏனென்றால் நான் ஜனங்களின் “கோரிக்கைக்கு” ஏற்றபடி செயல்படவில்லை, மாறாக, வெறுமனே பொருட்களைத் தயார் செய்து, அவர்கள் எதில் “குறைவுற்றிருக்கிறார்களோ” அதற்கு ஏற்றபடி கிரியை செய்கிறேன். மனுஷனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் எந்த வகையிலும் பெரியவை அல்ல, ஆனால் ஜனங்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் அவர்களின் “தாழ்மை” வெளிப்படுகிறது. நான் தொலைந்துவிடுவேனோ என்ற ஆழ்ந்த பயத்துடன், ஆழமான மலைகளுக்குள் இருக்கிற பழங்காலக் காடுகளுக்குள் அலைந்து திரிவேனோ என்று பயந்து, அவர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நடப்பதற்குக் கடமைப்பட்டவர்களாய் இருந்து, என்னை வழிநடத்துகிறார்கள். இதன் விளைவாக, நான் பாதாளச் சிறைக்குள் சென்றுவிடுவேன் என்ற ஆழ்ந்த பயத்தினால், ஜனங்கள் எப்போதும் என்னை முன்னே விட்டு வழிநடத்தினர். ஜனங்களின் விசுவாசம் மீது எனக்கு ஓரளவு “சாதகமான அபிப்பிராயம்” உள்ளது, ஏனென்றால், எனக்கான அவர்களது உழைப்பு உறக்கமில்லாத பகலையும் இரவையும், மற்றும் முதுமையையும் கூட அவர்களுக்கு விட்டுச் செல்லும் அளவிற்கு, அவர்கள் உணவையோ தூக்கத்தையோ நினைவில்கொள்ளாமல் எனக்காக “உழைத்திருக்கிறார்கள்”. அவர்களின் விசுவாசம் பிரபஞ்சங்களைக் “கடந்துவிட்டது” மற்றும் காலங்காலமாக வாழ்ந்த அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் “விஞ்சிவிட்டது” என்பதைக் காட்ட இது போதுமானதாகும்.
ஜனங்களுடைய சிறந்த திறமையின் காரணமாக நான் மகிழ்ச்சியுடன் கைதட்டுவதில்லை, அவர்களின் குறைபாடுகள் காரணமாக நான் அவர்களை அன்பில்லாமலும் பார்ப்பதில்லை. நான் என் கரங்களில் உள்ளதை மட்டுமே செய்கிறேன். நான் யாருக்கும் சிறப்புக் கவனிப்பை அளிக்கவில்லை, ஆனால் எனது திட்டத்தின்படி கிரியை மட்டுமே செய்கிறேன். ஆனாலும் ஜனங்கள் என் சித்தத்தை அறியாமல், நான் அவர்களுக்கு வழங்கிய ஐசுவரியம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதது போலவும், தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது போலவும் என்னிடமிருந்து பொருட்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில், ஜனங்கள் அனைவரும் “பணவீக்கம்” இருப்பதை உணர்கிறார்கள்—இதன் விளைவாக, நான் அவர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்தவைகளால் அவர்களின் கரங்கள் நிரம்பியிருக்கின்றன. இதனால்தான் அவர்கள் என்னைப் பற்றிச் சோர்ந்துபோகிறார்கள், மேலும் அதனால் அவர்களின் வாழ்க்கைகள் குழப்பத்தால் நிறைந்திருக்கின்றன, மேலும் அவர்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும்படி நான் கொடுத்த பொருட்களைச் சிலர் கூர்ந்து கவனித்து, இன்னும் உறுதியாகப் பற்றிக்கொண்டனர். ஜனங்கள் பஞ்சத்தால் அவதிப்பட்டு வந்ததாலும், இன்றைய நாளின் இன்பத்தை அனுபவித்தல் என்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல என்பதாலும், அவர்கள் அனைவரும் “முடிவின்றி நன்றியுள்ளவர்களாக” இருக்கிறார்கள், மேலும் என்னைக் குறித்த அவர்களின் மனப்பான்மையில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. அவர்கள் எனக்கு முன்பாக சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; நான் அவர்களுக்கு இவ்வளவு அதிகமாகக் கொடுத்ததால், அவர்கள் என் கரத்தைப் பிடித்துக்கொண்டு “நன்றியுணர்வின் சத்தத்தை” எழுப்புகிறார்கள். நான் பிரபஞ்சங்களுக்கு மேலே அசைவாடுகிறேன், மேலும் நான் நடக்கும்போது முழு பிரபஞ்சத்தின் ஜனங்களையும் கவனிக்கிறேன். பூமியில் உள்ள பெரும் திரளான ஜனங்கள் மத்தியில், என் கிரியைக்கு ஏற்றவர்களோ அல்லது என்னை உண்மையாக நேசிப்பவர்களோ இதுவரை ஒருவர்கூட இருந்ததில்லை. எனவே, இந்த நேரத்தில் நான் திகைப்புடன் பெருமூச்சு விடுகிறேன், நான் “அனைவரையும் ஒரே வலையில் பிடிப்பார்” என்ற ஆழ்ந்த பயத்துடன் இனி ஒன்றுகூட வேண்டாம் என்று, ஜனங்கள் உடனடியாகக் கலைந்து செல்கின்றனர். நான் மனுஷர்கள் மத்தியில் வந்து, எனக்குப் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, சிதறிப்போன இந்த ஜனங்கள் மத்தியில் என் கிரியையை, அதாவது ஏற்ற கிரியையைச் செய்ய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாதபடி, எனது சிட்சையின் மத்தியில் ஜனங்களைத் “தடுக்க” நான் விரும்பவில்லை. நான் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே செய்கிறேன். நான் மனுஷனின் “உதவியை” கேட்க வந்திருக்கிறேன்; எனது நிர்வாகத்தில் மனுஷனின் கிரியைகள் இல்லாததால், எனது கிரியையை வெற்றிகரமாக முடிப்பது சாத்தியமில்லை, இது எனது கிரியையைத் திறம்பட முன்னேறிச்செல்லவிடாமல் தடுக்கிறது. ஜனங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் எனக்கு நல்ல உணவைச் சமைத்துத் தருமாறோ, அல்லது எனக்குத் தலை சாய்க்கத் தகுந்த இடத்தை ஏற்பாடு செய்யுமாறோ, அல்லது எனக்காக அழகான ஆடைகளை உண்டுபண்ணுமாறோ நான் கேட்பதில்லை—ஏனென்றால், நான் இந்த விஷயங்களை சிறிதும் கருத்தில்கொண்டிருப்பதில்லை. ஜனங்களால் என் சித்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்து, என்னுடன் சேர்ந்து முன்னேறும்போது, அதோடு கூட, நான் என் இருதயத்தில் திருப்தி அடைவேன்.
பூமியில் யார் என்னைத் தங்கள் முழு இருதயத்தோடும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? இதுவரை என்னை முழு மனதுடன் நேசித்தவர்கள் யார்? ஜனங்களுடைய அன்பு எப்போதும் நீர்த்துப்போய்விடுகிறது; அவர்களின் அன்பு ஏன் வறண்டுபோகாமலும் நீர்த்துப்போகாமலும் இருக்க முடியாது என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு, மனுஷனுக்குள் பல “மர்மங்கள்” கூட உள்ளடங்கியிருக்கின்றன. சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில், மனுஷன் “அற்புதமான” மற்றும் “புரிந்துகொள்ள முடியாத” ஒருவனாகக் காணப்படுகிறான், அதனால் அவன் என்னுடன் சமமான அந்தஸ்தில் இருப்பதைப் போல, எனக்கு முன் “தகுதிகளைக்” கொண்டிருக்கிறான்—ஆனால் அவனது இந்த “அந்தஸ்து” குறித்து அவன் விசித்திரமான எதையும் பார்ப்பதில்லை. இதில், இந்த நிலையில் நின்று மகிழ்வதற்கு நான் ஜனங்களை அனுமதிக்கவில்லை என்பதாக அல்ல, மாறாக, அவர்கள் கண்ணியமான உணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைக்கக்கூடாது என்றும் நான் விரும்புகிறேன்; தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான எதையும் சொல்ல முடியாதபடிக்கு, வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு தூரம் உள்ளது. தேவனுக்கும் மனுஷனுக்கும் உள்ள தூரம் இன்னும் அதிகமாக இல்லையா? பூமியில், மனுஷனும் நானும் “ஒரே படகில்” இருக்கிறோம், மேலும் நாங்கள் “புயலை ஒன்றாக எதிர்கொள்கிறோம்.” மனுஷீக உலகின் துன்பங்களை அனுபவிப்பதில் இருந்து எனது அடையாளம் என்னை விலக்கி வைக்கவில்லை, அதனால்தான் நான், இன்று நான் இருக்கிற சூழ்நிலைக்குள் விழுந்திருக்கிறேன். நான் பூமியில் சமாதானத்துடன் வசிக்க ஓர் இடத்தை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை, அதனால்தான் ஜனங்கள், “மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்று சொல்கிறார்கள். இதன் விளைவாக, ஜனங்கள் எனக்காக மனதுருக்கத்தின் கண்ணீரை சிந்தியிருக்கின்றனர் மற்றும் எனக்காக ஒரு “நிவாரண நிதிக்காக” சில டஜன் யுவான்களை ஒதுக்கியுள்ளனர். இதனால் மட்டுமே, இளைப்பாறும் ஓர் இடத்தை நான் பெற்றிருக்கிறேன்; ஜனங்களுடைய “உதவி” இல்லாவிட்டால், நான் எங்கு சென்றிருப்பேன் என்று யாருக்குத் தெரியும்!
எனது கிரியை முடிவடையும்பொழுது, இனி இந்த “நிதி நிவாரணத்தை” நான் மனுஷனிடமிருந்து நாடமாட்டேன்; அதற்குப் பதிலாக, நான் எனது உள்ளார்ந்த செயல்பாட்டைச் செய்வேன், மேலும் “எனது வீட்டின் பொருட்கள்” அனைத்தையும் ஜனங்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்காகக் கொண்டு வருவேன். இன்று, என் உபத்திரவங்களுக்கு மத்தியில் அனைவரும் சோதிக்கப்படுகிறார்கள். என் கை முறைப்படி மனுஷனின் மீது வரும்போது, ஜனங்கள் இனி என்னைப் போற்றுதலுக்குரிய கண்களால் பார்க்க மாட்டார்கள், மாறாக, என்னை வெறுப்புடன் நடத்துவார்கள், இந்த நேரத்தில் அவர்களின் இருதயங்கள் ஒரு மாதிரியாக பயன்படுவதற்கு உடனடியாக என்னால் பிடுங்கப்படும். “நுண்ணோக்கியின்” கீழ் மனுஷனின் இருதயத்தை நான் ஆராய்ந்து பார்க்கிறேன்—அங்கே என் மீதான மெய்யான அன்பு இல்லை. பல ஆண்டுகளாக, ஜனங்கள் என்னை ஏமாற்றிக்கொண்டும், என்னை முட்டாளாக்கிக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்—இது அவர்களின் இடது இதயஊற்றறை மற்றும் வலது இதயக்கீழறைகள் இரண்டையும், என் மீதான வெறுப்பின் விஷத்தால் நிறைந்ததாக மாற்றியிருக்கிறது. அப்படியென்றால், அவர்கள் மீது எனக்கு அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பதில் ஆச்சரியமில்லை. இன்னும் அவர்கள் இதைப் பற்றி முற்றிலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், மற்றும் அதை ஒப்புக்கொள்வதும் இல்லை. என் ஆராய்ச்சியின் முடிவுகளை நான் அவர்களுக்குக் காட்டும்போது, அவர்கள் இன்னும் விழித்துக்கொள்வதில்லை; அவர்களின் மனதில், இவை அனைத்தும் கடந்த கால விஷயங்கள் மற்றும் இன்று மீண்டும் கொண்டு வரப்படக்கூடாது என்பது போல் உள்ளது. இவ்வாறு, ஜனங்கள் “ஆய்வக முடிவுகளை” அலட்சியத்துடன் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் விரிதாளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்கள். மேலும், “இவைகள் முக்கியமானவைகள் அல்ல, என் உடல்நலத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்பது போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள். நான் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கக்கூடாது, நான் செயலற்றவராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்ற ஒரு சிறிய அவமதிப்புப் புன்னகையை அவர்கள் அளிக்கிறார்கள், பின்னர் அவர்களின் கண்களில் சற்று பயமுறுத்தும் பார்வை இருக்கிறது. அவர்களின் அந்தரங்க இரகசியங்களைக் குறித்த என் வெளிப்படுத்துதலானது மனுஷனின் “விதிமுறைகளை” உடைத்துவிட்டது போல, அதனால் அவர்கள் என்மீது அதிக வெறுப்படைகிறார்கள். அப்போதுதான் ஜனங்களின் வெறுப்பின் மூல ஆதாரத்தைப் பார்க்கிறேன். ஏனென்றால், நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் இரத்தம் பாய்கிறது, மேலும் அவர்களுடைய சரீரத்தில் உள்ள தமனிகள் வழியாகக் கடந்து சென்ற பின்பு, அது இருதயத்திற்குள் நுழைகிறது, இந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு புதிய “கண்டுபிடிப்பு” காணப்படுகிறது. ஆனால் ஜனங்கள் இதைப் பற்றிய எதையும் நினைப்பதில்லை. அவர்கள் முற்றிலும் அக்கரையற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எதைப் பெறுகிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்பதைக் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை, இது “தன்னலமற்ற” பக்திக்கான அவர்களின் உற்சாகத்தைக் காட்ட போதுமானதாக இருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த உடல்நலத்தைக் கருத்தில்கொள்வதில்லை, மேலும் எனக்காக “மிகவும் விரைவாக செயல்படுகிறார்கள்”. இது அவர்களின் “விசுவாசம்” மற்றும் அவர்களைப் பற்றிய “மெச்சிக்கொள்ளத்தக்க” விஷயமாகும், எனவே, இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடையும்படியாக, நான் மீண்டும் ஒருமுறை ஒரு “பாராட்டு” கடிதத்தை அவர்களுக்கு அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் இந்தக் “கடிதத்தை” வாசிக்கும் போது, அவர்கள் உடனடியாகக் கொஞ்சம் எரிச்சலடைகிறார்கள், ஏனென்றால், அவர்கள் செய்யும் அனைத்தும் எனது மௌனமான கடிதத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செயல்படும் போது நான் எப்போதும் ஜனங்களை வழிநடத்தியிருக்கிறேன், ஆனாலும், அவர்கள் என் வார்த்தைகளை வெறுக்கிறார்கள் என்பதாகத் தோன்றுகிறது. ஆகவே, நான் என் வாயைத் திறந்தவுடன், அவர்கள் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, காதுகள் மீது கைகளை வைத்து அடைத்துக்கொள்கிறார்கள். என் அன்பின் நிமித்தமாக அவர்கள் என்னை மரியாதையுடன் நோக்கிப் பார்ப்பதில்லை, ஆனால் எப்போதும் என்னை வெறுத்திருக்கிறார்கள், ஏனென்றால் நான் அவர்களுடைய உடைமைகளில் உள்ள அனைத்துப் பொருட்களையும் வெளிப்படுத்தி, அவர்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினேன், இதனால் அவர்கள் தங்கள் தொழிலில் நஷ்டத்தை அனுபவித்திருக்கிறார்கள், மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் மறைந்துபோயிருக்கிறது. அதனால், என் மீதான அவர்களது வெறுப்பு அதிகரிக்கிறது.
ஏப்ரல் 14, 1992