அத்தியாயம் 36

சர்வவல்லமையுள்ள உண்மையான தேவன், சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ராஜா, முழு பிரபஞ்சத்தையும் ஆளுகிறார், எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் சந்திக்கிறார், மேலும் வானத்தின் கீழுள்ள அனைத்தும் தேவனுடைய மகிமையால் பிரகாசிக்கிறது. இதை பிரபஞ்சத்திலும் பூமியின் கடைமுனைகளிலும் உள்ள அனைத்து உயிரினங்களும் பார்க்கும். மலைகள், ஆறுகள், ஏரிகள், நிலங்கள், பெருங்கடல்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் உண்மையான தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் தங்கள் திரைச்சீலைகளைத் திறந்தன, ஒரு கனவிலிருந்து எழுந்திருப்பது போல, முளைகள் மண்ணைப் பிளந்து வெளிவருவது போல அவை புத்துயிர் பெறுகின்றன.

ஆ! ஒரே மெய்யான தேவன் உலகத்தின் முன் தோன்றுகிறார்! எதிர்ப்புடன் அவரை அணுகத் துணிந்தவன் யார்? அனைவரும் பயத்துடன் நடுங்குகிறார்கள். அனைவரும் முற்றிலும் நம்பிக்கை வைக்கின்றனர், அனைவரும் மீண்டும் மீண்டும் மன்னிப்புக்காகக் கெஞ்சுகின்றனர். எல்லா ஜனங்களும் அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, எல்லா வாய்களும் அவரை ஆராதிக்கின்றன! கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள், மலைகள், ஆறுகள் எல்லாமே அவரை முடிவில்லாமல் துதிக்கின்றன! வசந்தகாலம் அதன் இதமான காற்றுடன் வருகிறது, நல்ல வசந்த மழையைத் தருகிறது. எல்லா ஜனங்களைப் போலவே, நீரோடைகளின் நீரோட்டங்கள் வருத்தத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாய்கின்றன, கடன்பட்ட நிலை மற்றும் சுய நிந்தனைக் கண்ணீர்களைச் சிந்துகின்றன. ஆறுகள், ஏரிகள், வெள்ளலை, அலை எழுச்சிகள் அனைத்தும் தேவனுடைய பரிசுத்த நாமத்தைப் பாடுகின்றன, பாராட்டுகின்றன! துதியின் சத்தமானது அத்தகைய தெளிவுடன் ஒலிக்கிறது! ஒருகாலத்தில் சாத்தானால் சிதைக்கப்பட்ட பழைய விஷயங்கள், அவை ஒவ்வொன்றும் புதுப்பிக்கப்பட்டு மாற்றப்பட்டு முற்றிலும் புதிய சாம்ராஜ்யத்திற்குள் நுழையும்…

இது பரிசுத்த எக்காளம், அது தொனிக்கத் தொடங்கிவிட்டது! அதற்குச் செவிகொடுங்கள்! அந்த சத்தம், மிகவும் இனிமையானது, சிங்காசனத்தின் சத்தம், நேரம் வந்துவிட்டது, இறுதி முடிவு வந்துவிட்டது என்று ஒவ்வொரு தேசத்துக்கும் ஜனத்துக்கும் அது அறிவிக்கிறது. எனது நிர்வாகத் திட்டம் முடிந்துவிட்டது. என் ராஜ்யம் பூமியில் வெளிப்படையாகத் தோன்றியது. உலக ராஜ்யங்கள் தேவனாகிய என்னுடைய ராஜ்யமாகிவிட்டன. எனது ஏழு எக்காளங்கள் சிங்காசனத்தில் இருந்து தொனிக்கின்றன, இதுபோன்ற அதிசயமான நிகழ்வுகள் நிகழும்! பூமியின் கடைமுனைகளில் உள்ள ஜனங்கள், சிலர் கடல்களில் பயணித்து, சிலர் விமானங்களில் பறந்து, சிலர் ஒவ்வொரு வடிவத்திலும் அளவிலும் உள்ள வாகனங்களில் சவாரி செய்து, சிலர் குதிரை மேல் சவாரி செய்து, ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரு பனிச்சரிவு மற்றும் இடிமின்னலின் வலிமையுடன் ஒன்றாக விரைந்து வருவார்கள். உற்று நோக்குங்கள்! கவனமாகக் கவனியுங்கள்! ஒவ்வொரு நிறத்தினுடைய, ஆவிகள் எழுப்பப்பட்ட, வலிமையான, அற்புதமான குதிரைகளின் இந்தக் குதிரையோட்டிகள், போர்க்களத்திற்குச் செல்வதுபோல, மரணத்தைக் குறித்து அலட்சியமாக இருக்கிறார்கள். குதிரைகளின் கனைப்புக்கும் மற்றும் உண்மையான தேவனுக்காக ஆரவாரமிடும் மக்களின் கூக்குரலுக்கும் இடையில் பல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரு கணத்தில் அவற்றின் குளம்புகளால் மிதிக்கப்படுவார்கள். சிலர் மரிப்பார்கள், சிலர் தங்கள் கடைசி மூச்சை விடுவார்கள், சிலர் சின்னாபின்னமாவார்கள், யாரும் அவர்களைக் காப்பாற்ற இல்லாமல், வெறித்தனமாக கூச்சலிட்டு, வலியால் அலறுவார்கள். கலகத்தின் குமாரர்களே, இது உங்களின் இறுதியான முடிவு அல்லவா?

என் குரலைக் கேட்டு, ஒவ்வொரு தேசத்திலிருந்தும் இடத்திலிருந்தும் கூடும் என் ஜனங்களை நான் மகிழ்ச்சியுடன் நோக்கிப் பார்க்கிறேன். எல்லா ஜனங்களும், உண்மையான தேவனை எப்போதும் தங்கள் வாய்களில் வைத்து, மகிழ்ச்சியினால் முடிவில்லாமல் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்கள் உலகுக்குச் சாட்சி பகிர்கிறார்கள், உண்மையான தேவனுக்கான அவர்களின் சாட்சியின் சத்தம் திரளான தண்ணீர்களின் இடிமுழக்கச் சத்தம் போன்றதாகும். எல்லா ஜனங்களும் என் ராஜ்யத்திற்குள் கூடி வருவார்கள்.

தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்ப, என் ஏழு எக்காளங்கள் தொனிக்கின்றன! சீக்கிரமாக எழுந்திருங்கள், இன்னும் தாமதமாகி விடவில்லை. உங்கள் வாழ்க்கையைக் கவனியுங்கள்! உங்கள் கண்களைத் திறந்து இப்போது நேரம் என்ன என்று பாருங்கள். தேடுவதற்கு என்ன இருக்கிறது? சிந்திக்க என்ன இருக்கிறது? பற்றிக் கொள்ள என்ன இருக்கிறது? என்னுடைய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்கும், நீ விரும்புகிற மற்றும் பற்றிக் கொள்கிற அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் இடையேயான மதிப்பின் வித்தியாசத்தை நீ ஒருபோதும் எண்ணிப் பார்க்கவில்லையா? இனி ஒருபோதும் தன்னிச்சையாகவோ விளையாட்டுத்தனமாகவோ இருக்காதே! இந்த வாய்ப்பை இழக்காதே. இந்த நேரம் மீண்டும் வராது! இப்போது எழுந்து நின்று, உன் ஆவிக்குப் பயிற்சி கொடு, சாத்தானுடைய ஒவ்வொரு சதி மற்றும் தந்திரத்தின் உண்மை இயல்பை அறிய, தடுத்து நிறுத்த பல்வேறு கருவிகளைப் பயன்படுத்து, சாத்தானை ஜெயித்து விடு, இதனால் உன் வாழ்க்கையின் அனுபவம் ஆழமடையும், மேலும் நீ என் மனநிலையின்படி வாழலாம், இதனால் உன் வாழ்க்கை முதிர்ச்சியடைந்ததாக மற்றும் அனுபவமுள்ளதாக மாறும், நீ எப்போதும் என் அடிச்சுவடுகளைப் பின்பற்றலாம். பயப்படாமல், பெலவீனமாக இல்லாமல், எப்போதும் முன்னேறி, படிப்படியாக சாலையின் இறுதிவரை பின்பற்றலாம்!

ஏழு எக்காளங்கள் மீண்டும் தொனிக்கும்போது, அது நியாயத்தீர்ப்புக்கான அழைப்பு, கலகத்தின் குமாரர்களின் நியாயத்தீர்ப்புக்கான, எல்லாத் தேசங்களுடைய எல்லா ஜனங்களுடைய நியாயத்தீர்ப்புக்கான அழைப்பாகும், ஒவ்வொரு தேசமும் தேவனுக்கு முன்பாகச் சரணடையும். தேவனுடைய மகிமையான முகம் நிச்சயமாக எல்லாத் தேசங்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றும். எல்லோரும் முற்றிலும் நம்பிக்கைகொண்டு, உண்மையான தேவனை முடிவில்லாமல் ஆர்ப்பரிப்பார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் மிகுந்த மகிமையுடையவராக இருப்பார். என் குமாரர்களும் நானும் மகிமையில் பங்குபெற்று, அரசாட்சியில் பங்குபெற்று, எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்த்து, தீமையைத் தண்டித்து, என்னுடையவர்களை இரட்சித்து இரக்கங்காட்டி, ராஜ்யத்தை உறுதியாகவும் நிலையாகவும் ஆக்குவோம். ஏழு எக்காளங்களின் சத்தத்தின் மூலம், ஏராளமான ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள், எனக்கு முன்பாக மண்டியிட்டு இடைவிடாமல் துதியுடன் ஆராதிக்கத் திரும்புவார்கள்.

ஏழு எக்காளங்கள் மீண்டும் தொனிக்கும்போது, அது யுகத்தின் முடிவாக, பிசாசாகிய சாத்தானுக்கு எதிரான வெற்றியின் எக்காள சத்தமாக, பூமியிலுள்ள ராஜ்யத்தில் வெளிப்படையாக வாழ்வதின் தொடக்கத்தை அடையாளப்படுத்தும் நல்வரவாக இருக்கும்! எவ்வளவு கம்பீரமான சத்தம், சிங்காசனத்தைச் சுற்றி எதிரொலிக்கும் இந்தச் சத்தம், வானத்தையும் பூமியையும் உலுக்கும் இந்த எக்காளத் தொனி, இது எனது நிர்வாகத் திட்டத்தின் வெற்றியின் அடையாளமாகும், இது சாத்தானுக்கான நியாயத்தீர்ப்பாகும்; இது இந்தப் பழைய உலகத்தை முழுவதுமாக முடிவில்லா பாதாளக்குழிக்குள் திருப்பியனுப்ப, மரணத்துக்குட்படுத்தி தண்டிக்கிறது! இந்த எக்காளத் தொனியானது கிருபையின் வாசல் மூடப்படவிருப்பதையும், சரியான மற்றும் முறையான ராஜ்யத்தின் வாழ்க்கை, பூமியில் தொடங்குவதையும் குறிக்கிறது. தம்மை நேசிப்பவர்களைத் தேவன் இரட்சிக்கிறார். அவர்கள் அவருடைய ராஜ்யத்திற்கு திரும்பியதும், பூமியிலுள்ள ஜனங்கள் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் எதிர்கொள்வார்கள், மேலும் தேவனுடைய ஏழு கலசங்களும் ஏழு வாதைகளும் அடுத்தடுத்து நடைமுறைக்கு வரும். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை!

முந்தைய: அத்தியாயம் 35

அடுத்த: அத்தியாயம் 37

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக