அத்தியாயம் 41

நான் ஒருமுறை மனுஷர்களிடையே ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டேன், ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை, அதனால் நான் அதை அவர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்த என் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆயினும்கூட, மனுஷனால் என் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் அவன் என் திட்டத்தின் நோக்கத்தைக் குறித்து அறியாமலேயே இருந்தான். எனவே, அவர்களது குறைபாடுகள் மற்றும் பற்றாக்குறைகள் காரணமாக, மனுஷர்கள் எனது நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் விஷயங்களைச் செய்தனர், இது எல்லா வகையான அசுத்த ஆவிகளுக்கும் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது, இதனால் மனிதகுலம் அவைகளுக்குப் பலியாகி, அவர்கள் முற்றிலும் அசுத்தமாகும் வரைக்கும் இந்த அசுத்த ஆவிகளால் சித்ரவதைச் செய்யப்பட்டனர். அப்போதுதான் மனுஷனின் நோக்கங்களையும் இலக்குகளையும் நான் தெளிவாகக் கண்டேன். நான் மேகங்களுக்குள் இருந்து பெருமூச்சு விட்டு: மனுஷர்கள் ஏன் எப்போதும் தங்களுக்காகவே செயல்படுகிறார்கள்? என்னுடைய சிட்சைகள் அவர்களைப் பரிபூரணப்படுத்துவதற்காக இருக்கிறது அல்லவா? அவர்களின் நேர்மறையான அணுகுமுறையை நான் வேண்டுமென்றே தடுக்கிறேனா? மனுஷனுடைய மொழி மிகவும் அழகாகவும் மென்மையாகவும் இருக்கிறது, அதேசமயம் அவனுடைய செயல்கள் முற்றிலும் ஒழுங்கற்றதாக இருக்கின்றன. மனுஷனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் ஏன் எப்போதும் ஒன்றுமில்லாமல் போகிறது? நான் ஒரு நாயை மரத்தில் ஏறச் சொல்ல முடியுமா? நான் ஒன்றும் இல்லாததை மிகவும் பெரிதாக்குகிறேனா? எனது முழு நிர்வாகத் திட்டத்தின் போக்கில், நான் பலவிதமான “பரிசோதனை நிலங்களை” உருவாக்கியிருக்கிறேன்; இருப்பினும், நிலப்பரப்பானது பல வருடங்களாக அதன் மோசமான நிலை மற்றும் சூரிய ஒளி இல்லாத காரணத்தால், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, இது நிலத்தில் ஒரு “வெடிப்புக்கு” வழிவகுக்கிறது. அதனால், எனது ஞாபகத்தில், இதுபோன்ற எண்ணற்ற நிலங்களின் பொதியை நான் கைவிட்டிருக்கிறேன். இப்போது கூட, நிலத்தின் பெரும்பகுதி மாறிக்கொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்த நிலம் உண்மையாகவே வேறொரு வகையாக மாறினால், நான் அதை என் கையால் தூக்கி எறிந்துவிடுவேன்—தற்போதைய நிலையில் இது என்னுடைய மிகச் சரியான கிரியையல்லவா? ஆனால் மனிதகுலம் இதைப் பற்றி சிறிதும் அறிந்திருக்கவில்லை; அவர்கள் வெறுமனே எனது “வழிகாட்டலின்” கீழ் “சிட்சிக்கப்படுகிறார்கள்”. அதனால் என்ன பயன்? மனுஷனை சிட்சிக்க வெளிப்படையாக வருகிற தேவனாக நான் இருக்க முடியுமா? நான் மனுஷர்களுக்குள் வரும்போது, நான் அவர்களில் ஒருவராகிவிடுவேன், அதனால் நான் நேசிக்கும் அனைவரும் என்னுடன் நெருக்கமாக இருக்க முடியும் என்று மேலே பரலோகத்தில், நான் ஒருமுறை திட்டமிட்டேன். இருப்பினும், இன்று இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறது, மனுஷன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், என் சிட்சையின் காரணமாக என்னைத் தூரத்தில் வைத்திருக்கிறான். அவனது நிராகரிப்பின் நிமித்தமாக நான் அழுவதில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? மனுஷர்கள் அனைவரும், எந்த இசைக்கும் ஏற்ப இசைந்து பாடும் இசைக்கலைஞர்கள். மனுஷர்களை என் பிடியில் இருந்து “நழுவ” விடுவதற்கான எனது திறனில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், மேலும் “பிற பகுதிகளிலிருந்து” அவர்களை மீண்டும் எனது “தொழிற்சாலைக்குக்” கொண்டு வருவதற்கான எனது திறனில் நான் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில், மனுஷன் என்ன மனக்குறையைக் கொண்டிருக்க முடியும்? மேலும் மனுஷன் எனக்கு என்ன செய்ய முடியும்? மனுஷர்கள் சுவரின் மேல் வளரும் புல்லைப் போன்றவர்கள் அல்லவா? ஆனாலும் கூட, இந்தத் தவறுக்காக நான் மனுஷர்களுக்குத் தீமை செய்வதில்லை, மாறாக அவர்களுக்கு எனது ஊட்டச்சத்துக்களை வழங்குகிறேன். மனுஷர்கள் பலவீனமாகவும் வல்லமையற்றவர்களாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்; அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். என் அன்பான அரவணைப்பால் நான் மனுஷர்களின் அன்பில்லாத இருதயங்களை மறுரூபப்படுத்துகிறேன்: இத்தகைய காரியங்களை வேறு யாரால் செய்ய முடியும்? நான் ஏன் மனுஷர்கள் மத்தியில் இத்தகைய கிரியையை மேற்கொண்டிருக்கிறேன்? மனுஷனால் என் இருதயத்தை உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியுமா?

எல்லோருக்குள்ளும் யாரை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன், நான் ஒரு “வியாபாரத்தில்” ஈடுபட்டுள்ளேன், அதனால் முடிவில்லாத ஓட்டத்தில் எப்போதும் என் வீட்டில் ஜனங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் வணிகத்தைப் பற்றி விவாதிப்பது போல, எனது இடத்தில் பல்வேறு சம்பிரதாயங்களில் ஈடுபடுகிறார்கள், இது எனது கிரியையை மிகவும் பரபரப்பாக ஆக்குகிறது, சில சமயங்களில் அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகளை நான் கையாள வாய்ப்பில்லாமல் போகும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. என் பாரங்களுடன் இன்னும் பாரங்ககளைக் கூட்ட வேண்டாம் என்று நான் ஜனங்களைக் கேட்டுக்கொள்கிறேன்; அவர்கள் தொடர்ந்து என்னை நம்புவதை விட தங்கள் சொந்த போக்கைச் சிறப்பாக பட்டியலிட்டிருந்தனர். அவர்கள் என் வீட்டில் எப்போதும் குழந்தைகளாகவே இருந்துவிட முடியாது; அதனால் என்ன பலன் இருக்கும்? நான் செய்வது முக்கியமான தொழில்; நான் சில “அக்கம் பக்கத்து சிற்றுண்டிக் கடை” அல்லது வேறு சில சிறிய “வசதிக்கான கடை” நடத்துவதில்லை. மனுஷர்கள் அனைவரும் என் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள், அவர்கள் வேண்டுமென்றே என்னைப் பரியாசம் செய்வது போல, அவர்கள் அனைவரும் விளையாட்டின் மீது தீராத பசியுடன் இருக்கும் குறும்புக்காரக் குழந்தைகளைப் போல, முக்கியமான விஷயங்களை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை, இதனால் நான் அவர்களுக்குக் கொடுத்த “வீட்டுப்பாடத்தை” முடிக்காதபடிக்குப் பலரையும் தவறச் செய்திருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தங்கள் “ஆசிரியரிடம்” தங்களது முகத்தைக் காட்ட எப்படித் துணிச்சலைப் பெற்றிருக்க முடியும்? ஏன் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய ஒருபோதும் முன்வருவதில்லை? மனுஷனின் இருதயம் எத்தகைய பொருளால் ஆனது? இன்று வரையிலும், இது குறித்து நான் தெளிவில்லாமல் இருக்கிறேன். மனுஷனின் இருதயம் ஏன் தொடர்ந்து மாறுகிறது? இது ஜூன் மாதத்தில் ஒரு நாள் போன்றது: இப்போது சூரியன் சுட்டெரிக்கிறது, இப்போது அடர்ந்த மேகங்கள் வந்துவிட்டன, மேலும், இப்போது கொடூரமான காற்று பெரும் சத்தமிடுகிறது. அப்படியானால், மனுஷனால் ஏன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியவில்லை? ஒருவேளை நான் சொன்னது மிகைப்படுத்தலாக இருக்கலாம். மனுஷர்களுக்கு மழைக்காலத்தில் தங்களுடன் குடையைக் கூட எடுத்துச் செல்லத் தெரியவில்லை, எனவே, நான் வேண்டுமென்றே அவர்களைக் கிண்டல் செய்வது போலவும் வானத்திலிருந்து பெய்த மழையால் அவர்கள் எப்போதும் தாக்கப்பட்டது போலவும், அவர்களின் அறியாமையால், எண்ணற்ற முறை திடீரெனப் பெய்த மழையால் அவர்கள் முழுவதுமாக நனைந்திருக்கிறார்கள். அல்லது, ஒருவேளை நான் மிகவும் “கொடூரமானவராக” மனுஷர்களைத் திசை திரும்பப் பண்ணுகிறேன், அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் கவனம் சிதறடிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். எனது கிரியையின் இலக்கையோ முக்கியத்துவத்தையோ எந்த மனுஷனும் உண்மையாகப் புரிந்துகொள்ளவில்லை. இது இப்படியிருக்க, அவர்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே இடையூறு விளைவித்து, சிட்சிக்கும் கிரியையைச் செய்கிறார்கள். நான் உண்மையிலேயே மனுஷனை சிட்சிக்கத்தான் புறப்பட்டு வந்தேனா? மனுஷர்கள் ஏன் தங்களைத் தாங்களே தொந்தரவு செய்கிறார்கள்? அவர்கள் ஏன் எப்போதும் கண்ணிகளுக்குள் நடக்கிறார்கள்? அவர்கள் ஏன் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, மாறாக தங்களுக்குத் தாங்களே கிரியை செய்யும் வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்? நான் கொடுப்பது எல்லாம் மனுஷனுக்குப் போதுமானதாக இல்லாமல் இருக்குமோ?

என் “முதல் படைப்பை” முழு மனிதகுலத்திற்கு மத்தியிலும் நான் வெளியிட்டேன், மேலும் எனது வெளியீடு மனுஷர்கள் மத்தியில் மிகுந்த அபிமானத்தைத் தூண்டுவதால், அவர்கள் அனைவரும் அதை விரிவான மற்றும் கவனமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள், மேலும் இந்தக் கவனமான ஆய்வின் மூலம், அவர்கள் அதிகம் பெற்றிருக்கின்றனர். எனது எழுதப்பட்ட படைப்பு ஒரு அற்புதமான, மிகவும் சிக்கலான நாவலாகத் தெரிகிறது; இது ஒரு காதல் உரைநடைக் கவிதையாகத் தெரிகிறது; இது ஒரு அரசியல் திட்டத்தின் விவாதமாகத் தெரிகிறது; இது பொருளாதார ஞானத்தின் தொகுப்பாகத் தெரிகிறது. எனது எழுதப்பட்ட படைப்பு மிகவும் வளமானதாக இருப்பதால், அதைப் பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன, மேலும் என்னுடைய இந்தப் படைப்பைச் சுருக்கமாக எடுத்துரைக்கிற ஒரு முன்னுரையை யாராலும் வழங்க முடியவில்லை. மனுஷர்கள் “மிகச் சிறந்த” அறிவையும் தாலந்தையும் கொண்டிருக்கலாம், ஆனால் என்னுடைய இந்தப் படைப்பானது சாமர்த்தியமுள்ள மற்றும் திறமையுள்ள எல்லோரையும் குழப்புவதற்குப் போதுமானது. “இரத்தம் வழியலாம், கண்ணீர் சிந்தப்படலாம், ஆனால் ஒருவன் தன் தலையைத் தாழ்த்த வேண்டியதில்லை” என்று அவர்கள் கூறினாலும், அவர்கள் ஏற்கனவே அறியாமலேயே தலை குனிந்து எனது எழுதப்பட்ட படைப்பின் முன் கீழ்ப்படிந்ததை வெளிப்படுத்தியுள்ளனர். மனுஷன் தனது அனுபவத்தின் பாடங்களில் இருந்து, என் எழுதப்பட்ட படைப்பை வானத்திலிருந்து விழுந்த ஒரு பரலோகப் புத்தகம் போல் இருக்கிறது என்று சுருக்கமாகக் கூறினான். ஆயினும்கூட, மனுஷனை அதிக உணர்ச்சி வசப்படுகிறவனாக இருக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பார்வையில், நான் சொன்னது எல்லாம் மிகவும் சாதாரணமானதுதான்; இருப்பினும், ஜனங்கள் வாழ்வாதாரத்திற்கான ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை “ஜீவனின் சொற்களஞ்சியம்” என்ற என் படைப்பு உள்ளடக்கியிருக்கிறது; “மனுஷனின் இலக்கு” என்பதில், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடலாம்; “பரலோகத்தின் இரகசியங்கள்” என்பதில், அவர்கள் என் சித்தத்தைத் தேடலாம்; மற்றும் “மனிதகுலத்தின் பாதை” என்பதில், அவர்கள் வாழும் கலையைத் தேடலாம் என்று நான் நம்புகிறேன். இந்த வழியில் காரியங்கள் சிறப்பாக இருக்காதா? நான் மனுஷனை வற்புறுத்துவதில்லை; எனது எழுதப்பட்ட படைப்பில் யாராவது “ஆர்வமில்லாமல்” இருந்தால், அவர்களுக்கு எனது புத்தகத்துக்கான “பணத்தைத் திருப்பிக் கொடுத்தல்” மற்றும் அதோடு கூட “சேவைக் கட்டணத்தையும்” கொடுப்பேன். நான் யாரையும் வற்புறுத்துவதில்லை. இந்தப் புத்தகத்தின் ஆசிரியராக, வாசகர்கள் எனது படைப்பை விரும்புவார்கள் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருக்கிறது, ஆனால் ஜனங்களின் விருப்பங்கள் எப்போதும் வித்தியாசமாக இருக்கிறது. எனவே, மனுஷர்கள் தங்கள் எதிர்கால வாய்ப்புகளைச் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர்களால் முகதாட்சணியம் பார்க்காமல் இருக்க முடியாது. அவர்கள் அப்படிச் செய்ய வேண்டி இருந்தால், தயையுள்ள இருதயம் கொண்ட என்னால் இவ்வளவு பெரிய அவமானத்தை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? நீங்கள் எனது படைப்பை நேசிக்கும் வாசகர்களாக இருந்தால், எனது எழுத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான, உங்கள் சொந்த விலையேறப்பெற்ற ஆலோசனைகளை என்னிடம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன், இதனால் மனுஷனின் பிழைகள் மூலம் எனது எழுத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்ததாக இருக்கும். இது ஆசிரியர் மற்றும் வாசகர் ஆகிய இருவருக்கும் பயனளிக்கும், அப்படித் தானே? நான் சொல்வது சரிதானா என்று எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை இந்த வழியில் என்னால் எனது எழுத்துத் திறனை மேம்படுத்த முடியும், அல்லது ஒருவேளை நமக்கிடையேயான நட்பை வலுப்படுத்த முடியும். மொத்தத்தில், எல்லா ஜனங்களும் எனது கிரியைக்கு இடையூறு செய்யாமல் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன், இதனால் எனது வார்த்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும், வீட்டிற்கும் கொண்டு செல்லப்படும், அதனால், பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் என் வார்த்தைகளுக்குள் வாழ முடியும். இதுவே எனது இலக்கு ஆகும். என் வார்த்தைகளில் உள்ள ஜீவன் என்ற அத்தியாயத்தைப் படிப்பதன் மூலம், அனைவரும் எதையாவது பெற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், அது ஜீவனைப் பற்றிய அதிகபட்ச அறிவாகவோ, அல்லது மனித உலகில் ஏற்படும் தவறுகள் பற்றிய அறிவாகவோ, அல்லது மனுஷனிடம் நான் என்ன கோருகிறேன் என்பது பற்றிய, அல்லது இன்றைய ராஜ்யத்தின் ஜனங்களைப் பற்றிய “இரகசியங்களாகவோ” இருக்கலாம். இருப்பினும், “இன்றைய மனுஷர்களின் ஊழல்கள்” என்பதைப் பார்க்குமாறு மனுஷர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்; இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஜனங்களின் வாழ்க்கைக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் “சமீபத்திய ரகசியங்கள்” என்பதிலிருந்து அடிக்கடி வாசிப்பது தீங்கை ஏற்படுத்தாது. மீண்டும், முக்கிய தலைப்புகள் பத்தியை அடிக்கடி வாசிக்கவும்—இது ஜனங்களின் வாழ்க்கைக்கு இன்னும் அதிக பலனளிக்காதா? எனது அறிவுரையை ஆலோசிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, அது ஏதேனும் விளைவை ஏற்படுத்துகிறதா என்பதைப் பார்த்து, அதை வாசித்த பிறகு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று என்னிடம் பகிர்ந்து கொண்டால், சரியான மருந்தை என்னால் சிறப்பாகப் பரிந்துரைக்க முடியும், இறுதியில், முழு மனிதகுலத்தின் நோய்களையும் முற்றிலும் அழித்துவிட முடியும். எனது ஆலோசனைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவற்றை உங்கள் குறிப்புக்கான பொருட்களாக நீங்கள் கருதுவீர்கள் என்று நம்புகிறேன். அது எப்படி இருக்கும்?

மே 12, 1992

முந்தைய: அத்தியாயம் 40

அடுத்த: அத்தியாயம் 42

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக