அத்தியாயம் 18

ஒரு மின்னலின் பிரகாசத்தில், ஒவ்வொரு மிருகமும் அதன் உண்மையான வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே, என் வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்ட மனுஷன், முன்பு அவனிடமிருந்த புனிதத்தை மீண்டும் பெற்றிருக்கிறான். ஓ, சீர்கெட்ட பழைய உலகமே! கடைசியில், நீ அசுத்தமான தண்ணீரில் கவிழ்ந்து, நீரினுள் மூழ்கி, சேற்றோடு சேறாகக் கரைந்துவிட்டாய்! ஓ, என்னால் படைக்கப்பட்ட சகல மனுஷர்களே! கடைசியில் வெளிச்சத்தின் உதவியோடு நீங்கள் மீண்டும் உயிரோடு வந்து, ஜீவிதத்திற்கான அஸ்திபாரத்தைக் கண்டுபிடித்து, சேற்றில் போராடுவதை நிறுத்திவிட்டீர்கள்! ஓ, நான் என் கைகளில் வைத்திருக்கும் படைப்பின் எண்ணற்ற விஷயங்களே! என் வார்த்தைகளின் மூலம் நீங்கள் எவ்வாறு புதுப்பிக்க முடியாது போகும்? வெளிச்சத்தினால் உங்களின் செயல்பாடுகளுக்கு எப்படி உயிர் கொடுக்க முடியாது போகும்? பூமி இனி மரண அசைவில்லாமலும் அமைதியாகவும் இருப்பதில்லை, வானம் இனி பாழடைந்ததாகவும் சோகமாகவும் இருப்பதில்லை. வானமும் பூமியும் இனி வெற்றிடத்தால் பிரிக்கப்படாது, ஒன்றாக ஒன்றிணைக்கப்படுகின்றன, மீண்டும் ஒருபோதும் அழிக்கப்படாது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், இந்த மன மகிழ்ச்சிமிக்க தருணத்தில், என் நீதியும் என் பரிசுத்தமும் பிரபஞ்சம் முழுவதும் விரிவடைந்துள்ளன, மேலும் எல்லா மனுஷர்களும் அவற்றை நிறுத்தாமல் புகழ்கிறார்கள். வானத்தில் இருக்கும் நகரங்கள் மகிழ்ச்சியுடன் சிரிக்கின்றன, பூமியின் ராஜ்யம் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது. இந்த நேரத்தில், யார் மகிழ்ச்சியடையவில்லை, யார் அழவில்லை? பூமி அதன் ஆதிகால நிலையில் வானத்திற்குச் சொந்தமானது, வானம் பூமியுடன் ஒன்றிணைந்துள்ளது. மனுஷனே வானத்தையும் பூமியையும் ஒன்றிணைக்கும் நூல், மனுஷனின் புனிதத்தன்மை காரணமாக, மனுஷன் புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக, வானம் இனி பூமியிலிருந்து மறைக்கப்படுவதில்லை, பூமி இனி வானத்தை நோக்கி அமைதியாக இருப்பதில்லை. மனுஷரின் முகங்களில் மனநிறைவு கொண்ட புன்னகை என்ற மாலை அணிவிக்கப்படுகின்றது, மேலும் அவர்களின் எல்லா இருதயங்களிலும் மறைந்திருப்பவை எல்லைகள் எதுவும் தெரியாத இனிமையான விஷயங்களாகும். மனுஷன் மற்றொரு மனுஷனுடன் சண்டையிடுவதில்லை, மனுஷர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் இல்லை. என் வெளிச்சத்தில், மற்றவர்களுடன் நிம்மதியாக வாழாதவர்கள் யாராவது உண்டா? என் நாளில், என் நாமத்தை இழிவுபடுத்தும் நபர் யாராவது இருக்கிறார்களா? எல்லா மனுஷர்களும் தங்கள் பயபக்தியான பார்வையை என்னை நோக்கிச் செலுத்துகிறார்கள், அவர்கள் இருதயங்களில் என்னிடம் இரகசியமாகக் கூக்குரலிடுகிறார்கள். மனுஷரின் ஒவ்வொரு செய்கையையும் நான் தேடினேன்: சுத்தமாக்கப்பட்ட மனுஷர்களில், எனக்கு கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை, என்னை நியாயந்தீர்ப்பவர்கள் யாரும் இல்லை. எல்லா மனுஷர்களும் என் நியாயத்தால் நிரப்பப்பட்டுள்ளனர். எல்லா மனுஷர்களும் என்னை அறிந்துகொண்டு வருகிறார்கள், என்னிடம் நெருங்கி வருகிறார்கள், என்னை வணங்குகிறார்கள். நான் மனுஷனின் ஆவிக்குள் நிலைத்திருக்கிறேன், மனுஷனின் கண்களுக்கு மிக உயர்ந்த உச்சத்திற்கு உயர்ந்தவராகத் தெரிகிறேன், மனுஷனின் நரம்புகளில் இரத்தத்தின் வழியே பாய்கிறேன். மனுஷனின் இதயத்தில் இருக்கும் மகிழ்ச்சியான உயர்ந்த எண்ணம் பூமியின் முகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் நிரப்புகிறது; காற்று விறுவிறுப்பாகவும், புதியதாகவும் இருக்கிறது; அடர்த்தியான மூடுபனி இனி நிலப்பரப்பைப் போர்வை போல் மூடாது, சூரியன் பிரகாசமாகப் பிரகாசிக்கிறது.

இப்போது, என் ராஜ்யத்தைப் பாருங்கள், நான் எல்லாவற்றிற்கும் மேலாக ராஜாவாக இருக்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் அதிகாரம் செலுத்துகிறேன். படைப்பின் ஆரம்பம் முதல் இன்று வரை, என்னால் வழிநடத்தப்பட்ட என் புத்திரர்கள், வாழ்க்கையின் பல கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர், உலகின் பல அநீதிகளை, மனுஷ ராஜ்யத்தின் பல விசித்திரங்களை அனுபவித்துள்ளனர், ஆனால் இப்போது அவர்கள் என் வெளிச்சத்தில் வாழ்கிறார்கள். நேற்றைய அநீதிகளுக்கு யார் தான் அழவில்லை? இன்று அடையக்கூடிய கஷ்டங்களுக்கு யார் கண்ணீர் வடிக்கவில்லை? மீண்டும், என்னிடம் தங்களை அர்ப்பணிக்க இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் யாராவது உண்டா? தங்கள் இருதயத்திலிருந்து வரும் உணர்ச்சி வீக்கத்தை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள் யாராவது உண்டா? இந்த நேரத்தில், அவர்கள் அனுபவித்தவற்றிற்குக் குரல் கொடுக்காதவர்கள் யாராவது உண்டா? இந்த நேரத்தில், எல்லா மனுஷர்களும் தங்களில் இருக்கும் சிறந்ததை என்னிடம் புனிதப்படுத்துகிறார்கள். நேற்றைய முட்டாள்தனங்களுக்காக எத்தனை பேர் வருத்தத்துடன் தங்களையே துன்புறுத்திக்கொள்கிறார்கள், நேற்றைய நாட்டங்களுக்காக எத்தனை பேர் தங்களையே அருவருப்பாக நினைக்கிறார்கள்! மனிதர்கள் அனைவரும் தங்களை அறிந்து கொண்டார்கள், அவர்கள் அனைவரும் சாத்தானின் செயல்களையும் என் அற்புதத்தன்மையையும் பார்த்திருக்கிறார்கள், அவர்களுடைய இருதயங்களுக்குள் இப்போது எனக்கு ஓர் இடம் இருக்கிறது. இனிமேல் நான் மனுஷர்களிடையே வெறுப்பையோ அல்லது நிராகரிப்பையோ சந்திக்க மாட்டேன், ஏனென்றால் என் பெரிய கிரியை ஏற்கனவே நிறைவேறிவிட்டது, இனி அது தடையாக இருக்கப்போவது இல்லை. இன்று, என் ராஜ்யத்தின் புத்திரர்களுக்கிடையே, தங்கள் சொந்த கவலைகளைச் சிந்திக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? எனது கிரியை செய்யப்படுவதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டு அதிக கவனம் செலுத்தாதவர்கள் யாராவது உண்டா? என் பொருட்டு உண்மையாகத் தம்மை முன்வைத்தவர்கள் யாராவது உண்டா? உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் அசுத்தங்கள் குறைந்துவிட்டனவா? அல்லது அவை அதிகரித்துள்ளனவா? உங்கள் இருதயங்களில் உள்ள தூய்மையற்ற விஷயங்கள் குறையவுமில்லை அதிகரிக்கவுமில்லை என்றால், உங்களைப் போன்றவர்களை நான் நிச்சயமாகத் தூக்கி எறிவேன். நான் விரும்புவது என் சொந்த இருதயத்தைப் பின்பற்றும் புனித மக்களைத்தான், எனக்கு எதிராகக் கலகம் செய்யும் அசுத்தமான பேய்களை அல்ல. மனுஷர்களுக்கான எனது கோரிக்கைகள் அதிகம் இல்லை என்றாலும், மனுஷர்களின் இருதயங்களின் உள் உலகம் மிகவும் சிக்கலானது, மனுஷரால் என் விருப்பத்திற்கு உடனடியாக இணங்கவோ அல்லது உடனடியாக என் நோக்கங்களை நிறைவேற்றவோ முடியாது. வெற்றி எனும் இறுதி மாலையைக் கைப்பற்றும் நம்பிக்கையில் மனுஷர்களில் பெரும்பான்மையானவர்கள் ரகசியமாகத் தங்களைத் தாங்களே ஈடுபடுத்துகிறார்கள். இரண்டாவது முறையாகச் சாத்தானிடம் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற ஆழ்ந்த பயம் இருப்பதால் பெரும்பான்மையான மனுஷர்கள் தங்கள் முழு வலிமையுடனும் பாடுபடுகிறார்கள், ஒரு கணம் கூட மந்தமடையத் துணிவதில்லை. அவர்கள் இனி எனக்கு எதிரான குறைகளைத் தெரிவிக்கத் துணிய மாட்டார்கள், ஆனால் எனக்கு முன்பாகத் தங்கள் விசுவாசத்தைக் காண்பிப்பதில் நிலையாக இருப்பார்கள். பலர் பேசும் இருதயப்பூர்வமான வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன், துன்பத்தின் மத்தியில் அவர்களின் வலி அனுபவங்களைப் பற்றி பலரிடமிருந்து கேட்டிருக்கிறேன்; நான் பலரைக் கண்டிருக்கிறேன், கடுமையான நெருக்கடிகளில் என்னிடம் தங்கள் விசுவாசத்தைத் தவறாமல் முன்வைக்கிறவர்களை; கரடுமுரடான பாதையில் நடந்து செல்வதனால், அதிலிருந்து வெளியேற ஒரு வழியைத் தேடும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழ்நிலைகளில், அவர்கள் ஒருபோதும் புகார் செய்யவில்லை; வெளிச்சத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் சற்றே அதிருப்தி அடைந்த போதிலும், அவர்கள் ஒருபோதும் புகார் செய்யவில்லை. ஆனால், பலர் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து சாபங்களைத் தூற்றுவதையும், வானத்தைப் பழி சொல்வதையும், பூமியைக் குற்றம் சாட்டுவதையும் நான் கேட்டிருக்கிறேன், மேலும், பலரும் தங்கள் துயரத்தின் மத்தியில் விரக்தியிலிருந்து தங்களைத் தாங்களே கைவிட்டு, தங்களையே அசுத்தமாக்கிக் கொள்ளவும் கறை ஏற்படுத்திக் கொள்ளவும் தங்களையே தூக்கி எறிந்து விடுகிறார்கள் ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்படும் குப்பையை போல. நிலை மாற்றத்தின் காரணமாகப் பலரும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நான் கேட்டிருக்கிறேன், இது அவர்களின் முக மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது சக மனிதர்களுடனான உறவை மாற்றுகிறது, இதனால் நண்பர்கள் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறி, ஒருவருக்கொருவர் தங்கள் நாக்குகளால் தாக்கிக்கொள்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இயந்திர துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாக்கள் போல என் சொற்களைப் பயன்படுத்தி, அறியாதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள், மனுஷர்களின் உலகம் எல்லா இடங்களிலும் அமைதியைக் குலைக்கும் ஆரவாரத்தால் நிரம்பும் வரை. அதிர்ஷ்டவசமாக, இந்த நாள் இப்போது வந்துவிட்டது; இல்லையெனில், இந்த இயந்திர துப்பாக்கிச்சூட்டின் இடைவிடாத சுத்தம் செய்தலின் கீழ் எத்தனை பேர் அழிந்து போயிருப்பர் என்பது யாருக்குத் தெரியும்.

என் வார்த்தைகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, எல்லா மனுஷர்களுடைய நிலைமைகளின் வேகத்துடன் இணைந்து, என் ராஜ்யம், படிப்படியாகப் பூமியில் இறங்குகிறது. இனி மனுஷன் கவலைக்குரிய எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளவோ, மற்றவர்களுடன் தன்னை “ஈடுபடுத்திக்கொள்ளவோ” அல்லது அவர்கள் சார்பாக “சிந்திக்கவோ” மாட்டான். எனவே, பூமியில் சர்ச்சைக்குரிய மோதல்கள் இனி இருப்பதில்லை, என் வார்த்தைகள் வெளியானதைத் தொடர்ந்து, நவீன யுகத்தின் பல்வேறு “ஆயுதங்கள்” திரும்பப் பெறப்படுகின்றன. மனுஷன் மனுஷனுடன் மீண்டும் சமாதானத்தைக் காண்கிறான், மனுஷ இருதயம் மீண்டும் ஒரு நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்துகிறது, இனி யாரும் இரகசியத் தாக்குதலுக்கு எதிராகத் தங்களைக் காத்துக் கொள்ள தேவையில்லை. எல்லா மனுஷர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிட்டனர். புதிய சூழலில் வசிப்பவர்களை, நல்ல எண்ணிக்கையிலான மக்கள் முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்ததைப் போல சுற்றிப் பார்க்கிறார்கள், இதன் காரணமாக, அவர்களால் இப்போதே தற்போதையச் சூழலுடன் ஒத்துப்போகவோ அல்லது ஒரே நேரத்தில் சரியான பாதையில் நுழையவோ முடிவதில்லை. ஆகவே, மனுஷரைப் பொருத்தவரை “ஆவி தயாராக இருக்கிறது, ஆனால் மாம்சம் பலவீனமாக இருக்கிறது” என்பதற்கு இது ஒரு காரணம். மனுஷனைப் போல துன்பத்தின் கசப்பை நான் சுவைக்கவில்லை என்றாலும், மனுஷனின் குறைபாடுகளைப் பற்றி அனைத்தையும் நான் அறிவேன். மனுஷனின் தேவைகளை நான் நெருக்கமாக அறிந்திருக்கிறேன், அவனுடைய பலவீனங்களைப் பற்றிய எனது புரிதல் முழுமையானது. இந்தக் காரணத்திற்காக, மனுஷனின் குறைபாடுகளுக்காக நான் அவனைக் கேலி செய்வதில்லை; அவனுடைய அநீதியைப் பொறுத்து, “கல்வியின்” பொருத்தமான நடவடிக்கையாக மட்டுமே நான் அதை நிர்வகிக்கிறேன். அனைவரையும் சரியான பாதையில் செல்லச் செய்வது சிறந்தது, இதனால் மனுஷர்கள் அனாதைகளாக அலைந்து திரிவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வீடு என்று அழைக்கும் ஓர் இடத்தில் குழந்தைகளாக இருப்பார்கள். ஆயினும்கூட, எனது செயல்கள் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. என்னுள் இருக்கும் ஆனந்தத்தை மனுஷர்கள் அனுபவிக்க விரும்பவில்லை என்றால், நான் அவர்கள் தங்கள் இருதயத்தை அமைத்துக் கொண்ட வழியில் மட்டுமே சென்று, அவர்களைப் பாதாளத்திற்குள் அனுப்ப முடியும். இந்தக் கட்டத்தில், இனி யாரும் தங்கள் இருதயத்தில் குறைகளை வைக்கக்கூடாது, ஆனால் நான் செய்த ஏற்பாடுகளில் என் நீதியை அனைவராலும் காண முடியும். என்னை நேசிக்கச் சொல்லி மனுஷர்களை நான் கட்டாயப்படுத்தவில்லை, என்னை நேசிக்காததற்காக எந்த மனுஷனையும் நான் தாக்கவும் இல்லை. என்னில் இருப்பது மொத்தச் சுதந்திரமும், மொத்த விடுதலையும்தான். மனுஷனின் தலைவிதி என் கைகளில் இருந்தாலும், நான் மனுஷனுக்கு அவனுடைய விருப்பத்தை அளித்துள்ளேன், அது என் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. இந்த வழியில், எனது நிர்வாக ஆணைகளின் காரணமாக மனுஷர்கள் “சிக்கலில்” சிக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க மாட்டார்கள், மாறாக, எனது மகத்துவத்தை நம்பி, “விடுதலையைப்” பெறுவார்கள். எனவே, என் கட்டுப்பாட்டில் இருப்பதை விட, பலரும் தங்கள் சொந்த வழிகளில் செல்ல தங்கள் விடுதலையை நாடுகிறார்கள்.

நான் எப்போதுமே மனுஷர்களை உதாரத்துவமான கையால்தான் நடத்தினேன், ஒருபோதும் தீர்க்கமுடியாத பிரச்சினைகளைக் கொண்ட மனுஷர்களுக்கு ஒருபோதும் தடை ஏற்படுத்தவில்லை, எந்த ஒரு நபரையும் ஒருபோதும் சிரமத்திற்குள்ளாக்கவில்லை. இது அப்படியல்லவா? ஏராளமான மக்கள் என்னை நேசிக்கவில்லை என்றாலும், இந்த மாதிரியான அணுகுமுறையால் கவலைப்படுவதைத் தவிர்த்து, நான் அவர்களுக்கு விடுதலை அளித்துள்ளேன், கசப்பான மற்றும் துன்பம் மிகுந்த கடலில் சுதந்திரமாக நீந்துவதற்கு அவர்களுக்குப் பாதை அமைக்க அனுமதிக்கிறேன். மனுஷன் ஓர் அவமானகரமானபாத்திரம்; நான் என் கையில் வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை அவன் கண்டாலும், அதை அனுபவிப்பதில் அவனுக்கு எந்த ஆர்வமும் இல்லை, மாறாக சாத்தானின் கையிலிருந்து சாட்டைகளைப் பறிப்பான், இதன் மூலம் சாத்தான் இவனை “ஊட்டச்சத்து” என்று உட்கொள்வான். நிச்சயமாக, சிலர் என் வெளிச்சத்தைக் கண்களால் பார்த்திருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் தற்போதைய காலத்தின் தெளிவற்ற மூடுபனிகளில் வாழ்ந்தாலும், அவர்கள் இந்த மூடுபனிகள் காரணமாக, வெளிச்சத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை, தடைகள் நிறைந்த ஒரு பாதையாக இருந்தாலும் அந்த மூடுபனிகள் ஊடே தேடுவதைத் தொடர்கிறார்கள். மனுஷன் எனக்கு எதிராகக் கலகம் செய்யும்போது, என் கோபத்தை அவன் மீது வீசுகிறேன், அதனால் மனுஷன் அவனது அவநம்பிக்கையால் அழிந்து போகக்கூடும். அவன் எனக்குக் கீழ்ப்படியும்போது, நான் அவனிடமிருந்து மறைந்திருக்கிறேன், இப்படியாக அவனது இதயத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பை உற்சாகப்படுத்துகிறேன்; என்னை ஏமாற்றாத, அதே நேரத்தில் எனக்கு இன்பம் தர முற்படும் ஓர் அன்பை உற்சாகப்படுத்துகிறேன். மனுஷனின் என்னைப் பற்றிய தேடலில் பல முறை, அவனுடைய உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக, நான் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறேன். ஆனால் நான் பேசாதபோது, மனுஷனின் நம்பிக்கை ஒரு நொடியில் மாறுகிறது, அப்போது நான் பார்ப்பது எல்லாம் அவனுடைய “பொய்யான விஷயங்கள்” தான், ஏனென்றால் மனுஷன் என்னை ஒருபோதும் நேசிக்கவில்லை. நான் என்னை வெளிப்படுத்தும்போதுதான், மனுஷர்கள் அனைவரும் “விசுவாசத்தை” ஒரு மகத்தான விஷயமாகக் காட்டுகிறார்கள்; ஆனால் நான் என் இரகசிய இடத்தில் மறைந்திருக்கும்போது, அவர்கள் என்னைப் புண்படுத்த பயப்படவில்லை என்பது போல பலவீனமாகவும் தைரியமில்லா இருதயத்தைக் கொண்டவர்களாகவும் வளர்கிறார்கள்; சிலர் என் முகத்தைப் பார்க்க முடியாமல், என்னை ஓர் “ஆழமான செயலாக்கத்திற்கு” உட்படுத்துகிறார்கள், இதனால் எனது இருப்பின் உண்மையை மறுக்கிறார்கள். பலர் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்; பலருக்கு இந்த மனநிலைதான் இருக்கிறது. தங்களுக்குள் அசிங்கம் இருப்பதை மூடிமறைக்க எல்லா மனுஷர்களும் ஒருதலைபட்சமாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் சொந்தக் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தத் தயங்குகிறார்கள், மேலும் என் வார்த்தைகளின் உண்மையை நறநறக்கும் பற்களாலும் மறைத்து வைத்த முகங்களாலும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மார்ச் 17, 1992

முந்தைய: அத்தியாயம் 17

அடுத்த: அத்தியாயம் 19

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக