அத்தியாயம் 109

ஒவ்வொரு நாளும் என் கூற்றுக்களை நிகழ்த்தி, பேசி, என் பெரும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துகிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் என் ஆவியின் கிரியையை உள்ளடக்கியது. ஜனங்களின் கண்களில் நான் ஒரு மனிதன் மட்டுமே, ஆனால் இந்த மனிதனில் தான் நான் என்னுடைய எல்லாவற்றையும், என் வல்லமையையும் வெளிப்படுத்துகிறேன்.

நான் மனிதனாக இருப்பதை ஜனங்கள் அலட்சியப்படுத்தி என் செயல்களைப் புறக்கணிப்பதால், அவர்கள் இவை யாவும் ஒரு மனிதனால் செய்யப்பட்ட விஷயங்கள் என்று கருதுகிறார்கள். நான் செய்வதை ஒரு மனுஷனால் நிறைவேற்ற முடியுமா என்று நீ ஏன் நின்று யோசிக்கவில்லை? இந்த அளவுக்கு ஜனங்களுக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை; அவர்கள் என் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவில்லை, என் செயல்களை அவர்கள் விளங்கிக் கொள்ளவும் இல்லை. தீய, சீர்கெட்ட மனிதர்கள்! எப்போது நான் உன்னை விழுங்கிப் போடுவேன்? அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் உன்னை எப்போது புதைப்பேன்? பல முறை நான் உங்கள் குழுவில் இருந்து துரத்தப்பட்டிருக்கிறேன், பல முறை ஜனங்கள் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள், கேலி செய்திருக்கிறார்கள், பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள், மேலும் பல முறை ஜனங்கள் வெளிப்படையாக என்னை நியாயந்தீர்த்து என்னை எதிர்த்திருக்கிறார்கள். குருட்டு மனிதர்கள்! நீங்கள் என் உள்ளங்கையில் இருக்கும் வெறும் கையளவு மண் தான் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களேயன்றி வேறில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? என் கோபம் இப்போது வெளிப்படுகிறது, ஒருவராலும் அதற்கு எதிராய்த் தற்காத்துக் கொள்ள முடியாது. ஜனங்களால் திரும்பத் திரும்ப இரக்கத்துக்காகக் கெஞ்சத் தான் முடியும். இருந்தாலும், இந்த அளவு வரை என் கிரியை முன்னேறி இருப்பதால், அதை யாராலும் மாற்ற முடியாது. சிருஷ்டிக்கப்பட்ட யாவரும் மண்ணுக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் மிக அதிகமாகச் சீர்கெட்டு முரட்டாட்டக்காரர்களாய் இருப்பதால், சாத்தானால் நீங்கள் பிடிக்கப்பட்டு அதனுடைய கருவியாக மாறி இருப்பதால் தானே தவிர, இது நான் அநீதியுள்ளவராய் இருப்பதால் அல்ல; நான் தான் பரிசுத்தராகிய தேவன்; என்னைப் பரிசுத்தக் குலைச்சல் செய்ய முடியாது, அல்லது என்னால் ஒரு அசுத்தமான ஆலயத்தைக் கொண்டிருக்க முடியாது. இப்போதில் இருந்து, என் பற்றி எரியும் உக்கிரம் (கோபத்தை விடக் கடுமையானது) எல்லாத் தேசங்களின் மேலும் ஊற்றப்படத் தொடங்கி என்னில் இருந்து வந்த ஆனால் என்னை அறியாத கசடுகளைச் சிட்சிக்க உள்ளது. நான் மனுஷர்களை மிகவும் வெறுக்கிறேன். இனிமேலும் இரக்கம் காட்ட மாட்டேன்; மாறாக என் சாபங்களை எல்லாம் நான் பொழிவேன். இனிமேல் நிச்சயமாக இரக்கமும் அன்பும் சிறிதளவும் இருக்காது, எல்லாம் ஒன்றுமில்லாமல் எரிக்கப்படும். என் ராஜ்யம் மட்டுமே மீதி இருக்கும், ஆகையினால் என் ஜனங்கள் என் வீட்டில் என்னைத் துதிப்பார்கள். எனக்கு மகிமை அளிப்பார்கள், என்னை எப்போதும் போற்றுவார்கள் (இதுவே என் ஜனங்களின் பணி). என் வீட்டின் உள்ளும் புறம்பும் இருப்பவர்களை என் கரம் அதிகாரப்பூர்வமாக சிட்சிக்கத் தொடங்கும். என் பிடியில் இருந்தும் சிட்சையில் இருந்தும் பொல்லாப்பு செய்யும் ஒருவரும் தப்ப முடியாது. இதுவே என் மகத்துவம், அது மட்டுமல்லாமல், இது நான் தீயவர்களுக்காகப் பிரகடனப்படுத்தும் ஒரு ஆட்சிமுறை ஆணை. ஒருவராலும் வேறு யாரையும் பாதுகாக்க முடியாது. ஜனங்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் சரி, என் சிட்சையின் கரத்திலிருந்து அவர்களால் தப்ப முடியாது. என் ஆட்சிமுறை ஆணைகள் கடுமையானவை என்று சொல்லப்பட்டு வந்த காரணம் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இது எல்லா ஜனங்களும் தங்கள் கண்களால் காணக்கூடிய ஓர் உண்மை ஆகும்.

நான் கோபப்படத் தொடங்கும்போது, பெரியதும் சிறியதுமாகிய எல்லாப் பிசாசுகளும், குழப்பத்தாலும் என் கரம் அவற்றை அடித்துக் கொல்லும் பயத்தாலும் ஓடி விடும்—ஆனால் என் கரத்தில் இருந்து ஒன்றும் தப்ப முடியாது. தண்டனையின் எல்லாப் பொறிகளையும் நான் என் கையில் வைத்திருக்கிறேன்; என் கரம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது, எல்லாம் என் பிடியில் இருக்கின்றன, யாரும் தப்ப முடியாது. இதுவே என் ஞானம். நான் மனித மண்டலத்திற்கு வந்தபோது, ஏற்கெனவே நான் எல்லா வகையான ஆயத்தக் கிரியைகளையும் செய்து முடித்திருந்தேன், மனிதர்களுக்கு மத்தியில் என் கிரியைத் தொடங்குவதற்கு அஸ்திபாரம் இட்டிருந்தேன் (இது ஏனெனில் நானே ஞானமுள்ள தேவன், எதைச் செய்யவேண்டுமோ மற்றும் எதைச் செய்யக் கூடாதோ ஆகியவற்றை நான் சரியாகக் கையாளுகிறேன்). எல்லாம் சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர், நான் மாம்சமாகி மனிதர்களின் மண்டலத்திற்கு வந்தேன். இருந்தாலும், யாரும் என்னை அறிந்து கொள்ளவில்லை. நான் பிரகாசிப்பித்தவர்களைத் தவிர, கலகத்தின் புத்திரர் எல்லோரும் என்னை எதிர்க்கிறார்கள், என்னை அவமானப்படுத்துகிறார்கள், என்னை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆயினும், முடிவில், அவர்களை ஒழுங்காக நடந்து கொள்ளவும் கீழ்ப்படியவும் வைப்பேன். நான் அதிகம் செய்யாதது போல மனிதர்களுக்குத் தெரிந்தாலும், என் பெரும் கிரியை ஏற்கெனவே முடிந்து விட்டது. (மனிதனாக இருக்கும் எனக்கு ஜனங்கள் முற்றிலுமாக வார்த்தையாலும் இருதயத்தாலும் கீழ்ப்படிகிறார்கள்; இது ஓர் அடையாளம்.) இன்று, என்னை எதிர்க்கும் எல்லா வகையான பொல்லாத ஆவிகளையும் நான் எழுந்து சிட்சிக்கிறேன். அவை எவ்வளவு காலம் என்னைப் பின்பற்றியிருந்தாலும் என் பக்கத்தில் இருந்து அகல வேண்டும். எனக்கு எதிராக இருக்கும் யாரும் எனக்குத் தேவை இல்லை (ஆவிக்குரிய புரிதல் குறைவாக உள்ளவர்களும், தற்காலிகமாகப் பொல்லாத ஆவிகளால் பிடிக்கப்பட்டவர்களும், என்னை அறியாதவர்களுமே இவர்கள்). எனக்கு அவர்களில் ஒருவரும் தேவை இல்லை! எல்லோரும் அகற்றப்படுவார்கள் மற்றும் கேட்டின் புத்திரர்கள் ஆவார்கள்! இன்று எனக்கு ஊழியம் செய்துவிட்டு, அவர்கள் எல்லோரும் விலகிச் செல்ல வேண்டும்! என் வீட்டில் சுற்றித் திரிய வேண்டாம்; தொடர்ந்து வெட்கம் இல்லாமல் எல்லாவற்றையும் இலவசமாகப் பெறுவதை நிறுத்துங்கள்! சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் எல்லாரும் பிசாசின் புத்திரர்கள், நித்தியமாய் அழிந்து போவார்கள். என்னை விரோதிக்கும் யாவரும் அமைதியாக என் பக்கத்தில் இருந்து அகன்று போங்கள், இதனால் என் கிரியையின் வேகம் குறைவாகத் தடுக்கப்படும், மேலும் இடையூறுகள் இருக்காது. என் ஆணையின் கீழ் எல்லாம் தங்குதடை இன்றி நடைபெறும். எல்லாரும் என் பார்வையின் முன் விழுந்து என் சாம்பலாக்குதலில் அழிக்கப்படுவார்கள். இது என் சர்வவல்லமையையும் என் பரிபூரண ஞானத்தையும் காட்டுகிறது (நான் என் முதற்பேறான குமாரர்களிடத்தில் செய்தது). இது என் நாமத்துக்கு அதிக மகிமையைச் சேர்க்கும். அது எனக்கும் அதிக மகிமையைக் கூட்டும். நான் செய்வதில் இருந்தும் என் குரலின் தொனியில் இருந்தும், நான் என் வீட்டில் எல்லாக் கிரியைகளையும் முடித்து, புறஜாதியார் தேசங்களை நோக்கித் திரும்பி விட்டேன் என்பதை நீங்கள் எல்லாரும் பார்க்கலாம். நான் அங்கு என் கிரியையை ஆரம்பிக்கிறேன். என் கிரியையின் அடுத்தப் படிநிலையைச் செயல்படுத்துகிறேன்.

பெரும்பாலான என்னுடைய வார்த்தைகள் உங்கள் கருத்துக்களோடு பொருந்தாது—ஆனால் என் குமாரர்களே, விட்டுவிட வேண்டாம். மனிதக் கருத்துக்களோடு பொருந்தவில்லை என்பதால் அவை என் கூற்றுக்கள் இல்லை என்பது அர்த்தமில்லை. நான் தான் உண்மையில் அவற்றை உரைத்தேன் என்பதை அது சரியாக நிரூபிக்கிறது. என் வார்த்தைகள் மனிதக் கருத்துக்களோடு பொருந்தி வந்தால், பின்னர் அது அசுத்த ஆவிகளின் கிரியையாக இருக்கலாம். இப்படி, நீங்கள் என் வார்த்தைகளில் அதிக முயற்சியை செலுத்த வேண்டும், நான் செய்வதைச் செய்யுங்கள், நான் நேசிப்பதை நேசியுங்கள். இந்த இறுதிக் காலத்தில் மீண்டும் எல்லாப் பேரழிவுகளும் எழவும் செய்யும். மேலும் இந்தக் காலத்தில் தான் நான் என் மனநிலைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறேன். என் பரிசுத்த எக்காளங்கள் எல்லாம் ஒலிக்க ஆரம்பிக்கும் போது, ஜனங்கள் உண்மையாகவே பயப்படுவார்கள்; அந்த நேரத்தில், பொல்லாப்பு செய்ய ஒருவரும் துணிய மாட்டார்கள், அதற்குப் பதிலாக என் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுவார்கள், என் ஞானத்தையும் என் சர்வவல்லமையையும் பாராட்டுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நான், நானே ஞானமுள்ள தேவன். யாரால் என்னை மறுக்க முடியும்? எனக்கு விரோதமாக எழும்ப யார் துணிவார்கள்? என்னுடைய ஞானத்தை அனுமதிக்காமல் இருக்க யார் துணிவார்கள்? என் சர்வவல்லமையை அறியாமல் இருக்க யார் துணிவார்கள்? எல்லா இடங்களிலும் என் ஆவி பெரிய கிரியைகளைச் செய்யும் போது, ஒவ்வொருவரும் என் சர்வவல்லமையை அறிவார்கள். ஆனால் என் இலக்கு இன்னும் அடையப்படவில்லை. என்னுடைய கோபத்தின் விளைவாக, என் சர்வவல்லமையையும், என் ஞானத்தையும், என் ஆள்தத்துவத்தின் மகிமையையும் பார்க்க எனக்கு ஜனங்கள் தேவை. (இவை எல்லாம் முதற்பேறான குமாரர்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இது முற்றிலும் உண்மை. அவர்கள் தவிர, ஒருவரும் என் ஆள்தத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது; இது என்னால் நியமிக்கப்பட்டிருக்கிறது.) என் வீட்டில், மக்கள் புரிந்து கொள்ள முடியாத முடிவற்ற இரகசியங்கள் உள்ளன. நான் பேசும்போது, நான் மிகவும் இரக்கமற்று இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பலர் என்னை ஓரளவுக்கு ஏற்கனவே நேசிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பின், அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியார் என்று நான் ஏன் சுட்டிக் காட்டுகிறேன்? மேலும், நான் ஏன் அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கைவிடுவேன்? என் வீட்டில் அதிகமான ஜனங்கள் இருப்பது நல்லதல்லவா? இருப்பினும், நான் இந்த வகையிலேயே தொடர்ந்து செயல்படுகிறேன். நான் முன்குறித்ததில் ஓர் எண்ணிக்கை கூடுதலாகவோ ஓர் எண்ணிக்கை குறைவாகவோ இருக்காது. (இது என் ஆட்சிமுறை ஆணை. இதை எந்த ஒரு மனுஷனாலும் மாற்ற முடியாது என்பதோடு, என்னால் கூட அதை மாற்ற முடியாது, ஏனெனில் நான் சாத்தானுக்கு முன்பாக வளைந்து கொடுக்கக் கூடாது. என் ஞானத்தையும் மகத்துவத்தையும் வெளிப்படையாக்க இது ஒன்றே போதுமானது. நான் தான் ஒன்றான தேவனானவர். மனுஷர்கள் என் முன் பணிகிறார்கள்; நான் மனுஷர்கள் முன் வளைந்து கொடுப்பதில்லை.) இதுவே சாத்தானை அதிகமாக அவமானப்படுத்தும் சரியான கருத்தாகும். நான் தெரிந்துகொண்ட மனுஷர்கள் எல்லாரும், தாழ்மையும், பணிவும், கீழ்ப்படிதலும், நேர்மையும் கொண்டவர்கள். அவர்களால் தாழ்மையோடும் மறைவாகவும் ஊழியம் செய்ய முடியும். (என்னை அவமானப்படுத்த சாத்தான் இந்த உண்மையைப் பயன்படுத்த விரும்பினான், ஆனால் நான் சாத்தனை முறியடித்தேன்.) இந்த ஜனங்களில், என் மனநிலையைக் காணலாம். போரில் வெற்றிபெற்ற பின்னர் நான் திரும்பி வரும் போது, என் ராஜ்யத்தில் என் முதற்பேறான குமாரர்களை ராஜாக்களாக அபிஷேகம் செய்து வைப்பேன். அதன் பின் தான் நான் இளைப்பாற ஆரம்பிப்பேன், ஏனெனில் அவர்கள் என்னோடு ராஜாக்களாக அரசாளுவார்கள். என் முதற்பேறான குமாரர்கள் என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், மற்றும் அவர்கள் என்னை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் தாழ்மையான, மறைமுகமான ஊழியத்தில், அவர்கள் எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; தங்கள் நேர்மையில், அவர்கள் என்னுடைய வார்த்தைகளைச் செயல்படுத்துகிறார்கள்; தங்களுடைய நேர்மையில், நான் சொல்வதை அவர்கள் சொல்லுகிறார்கள்; தங்கள் தாழ்மையில், அவர்கள் என் நாமத்துக்கு மகிமையைக் கொண்டு வருகிறார்கள் (அவமரியாதையுடனும் இல்லை முரட்டாட்டத்துடனும் இல்லை, ஆனால் மகத்துவத்துடனும் உக்கிரத்துடனும்). என் முதற்பேறான குமாரர்களே! பிரபஞ்ச உலகத்தை நியாயந்தீர்க்கும் நேரம் இது! நான் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறேன், நான் உங்களுக்கு அதிகாரம் வழங்குகிறேன், ஓர் ஆசீர்வாதத்தின் பங்குடன் நான் உங்களுக்குப் பிரதிபலன் வழங்குகிறேன்! எல்லாம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. அது எல்லாம் உங்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, ஏனெனில் நான் உங்கள் பிதா, நான் உங்கள் வலிமையான கோட்டை, நான் உங்களுடைய அடைக்கலம், மற்றும் நான் உங்கள் பின்புலம். மேலும், நான் உங்கள் சர்வவல்லமையுள்ள ஒருவர்; நான் உங்கள் எல்லாம்! எல்லாம் என் கைகளில் இருக்கின்றன. எல்லாம் உங்கள் கைகளிலும் இருக்கின்றன. இது இன்றைய நாளை மட்டுமல்லாமல் நேற்றையும், நாளையையும் கூட உள்ளடக்கியுள்ளது! இது கொண்டாடத் தக்கது அல்லவா? இது உங்கள் சந்தோஷத்துக்குத் தகுதியானது அல்லவா? நீங்கள் எல்லோரும் என்னிடம் இருந்து உங்களுக்கு உரிய பாகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், நான் என்னுடைய எல்லாவற்றையும், எனக்காக ஒரு சிறு துணுக்கையும் வைத்துக் கொள்ளாமல் உங்களுக்கு அளிக்கிறேன், ஏனென்றால் என்னுடைய சொத்தெல்லாம் உங்களுடையது, என் வளங்கள் எல்லாம் உங்களுக்கானது. இதனால் தான் உங்களைச் சிருஷ்டித்த பின் “இது மிகவும் நல்லது” என்று கூறினேன்.

இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள், நினைக்கிறீர்கள், சொல்லுகிறீர்கள் என்பதை யார் வழிகாட்டுவது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் செயல்பாடுகளின் பின்னால் இருக்கும் நோக்கம் என்ன? நான் உங்களைக் கேட்கிறேன்: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் நீங்கள் எவ்வாறு கலந்து கொள்வீர்கள்? அது இன்றா? அல்லது அது எதிர்காலத்திலா? ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து என்றால் என்ன? உங்களுக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா? நல்லது, அப்படியானால் நான் அதை உங்களுக்கு விளக்குகிறேன்: நான் மனுஷனின் மண்டலத்துக்கு வந்தபோது, நான் எல்லா வகையான ஜனங்களையும், வஸ்துக்களையும், மனுஷனாக இன்றிருக்கும் எனக்கு ஊழியம் செய்யும் பொருட்களையும் ஏற்பாடு செய்தேன். இப்போது எல்லாம் முழுமை ஆகிவிட்டதால், நான் ஊழியம் செய்பவர்களை ஒருபுறம் தூக்கி எறிகிறேன். கலியாண விருந்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்த ஜனங்கள் எனக்கு ஊழியம் செய்தபோது—அதாவது, நான் ஆட்டுக்குட்டியாக ஆக்கப்பட்டபோது—நான் கலியாண விருந்தின் சுவையை உணர்ந்தேன். வேறு வார்த்தைகளில் கூறினால், நான் அனுபவித்த எல்லா வேதனைகளும், நான் செய்த எல்லா விஷயங்களும், நான் சொன்ன எல்லா விஷயங்களும், நான் எதிர்கொண்ட எல்லோரும், என் ஜீவித காலத்தில் நான் செய்த எல்லாம் கலியாண விருந்தை உள்ளடங்கியுள்ளன. மனுஷனாகிய நான் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர், நீங்கள் என்னைப் பின்பற்றத் தொடங்கினீர்கள் (மேலும் இந்த சமயத்தில்தான் நான் ஆட்டுக்குட்டியானேன்); இப்படி, என் தலைமையின் கீழ், நீங்கள் எல்லா வகையான வேதனைகளையும், பேரழிவையும் அனுபவித்தீர்கள், உலகத்தால் கைவிடப்பட்டு இழிவுபடுத்தப்பட்டீர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டீர்கள், மேலும் என் ஆசீர்வாதங்களின் கீழ் வாழ்ந்தீர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் ஆட்டுக்குடியானவரின் கலியாண விருந்தின் பகுதிகள். நான் “கலியாண விருந்தைப்” பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் உங்களைச் செய்ய வழிநடத்துவது அனைத்தும் உங்களைப் பெறுவதற்கான நோக்கத்திற்காகவே. இருப்பினும், இவை அனைத்தும் விருந்தின் ஒரு பகுதியாகும். ஒருவர் கூறலாம், எதிர்காலத்தில் அல்லது இன்று—நீங்கள் அனுபவிக்கும் எல்லாம், நீங்கள் அடைகிறது எல்லாம், என்னோடு நீங்கள் பகிர்ந்துகொள்ளும் ராஜ வல்லமை எல்லாம் விருந்தின் பகுதியாகும். என்னை நேசிக்கும் எல்லாருக்கும் என் அன்பு வருகிறது. நான் நேசிப்பவர்கள் என்றைக்கும் இருப்பார்கள், ஒரு போதும் அகற்றப்பட மாட்டார்கள், நித்தியமாக என் அன்புக்குள் இருப்பார்கள். அது என்றென்றைக்குமானது!

முந்தைய: அத்தியாயம் 108

அடுத்த: அத்தியாயம் 110

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக