அத்தியாயம் 29

ஜனங்களால் செய்யப்படும் கிரியைகளில், சில தேவனுடைய நேரடி அறிவுறுத்தலுடன் செய்யப்படுகின்றன, ஆனால், இன்றும் தேவனால் செய்யப்படுவதில், தேவன் குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்காத ஒரு பகுதி இன்னும் உள்ளது, இது இன்று தேவனால் செய்யப்பட்டிருப்பது இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை, அதாவது, நிறைய மறைக்கப்பட்டுள்ளது, இன்னும் வெளியரங்கமாக்கப்படவில்லை என்பதை இது போதுமான அளவு காட்டுகிறது. இருப்பினும், சில விஷயங்களை வெளியரங்கமாக்க வேண்டும், அதேநேரத்தில் மற்றவை ஜனங்களை ஐயங்கொள்ளவும், குழப்பமடையவும் செய்ய வேண்டும்; இதுவே தேவனுடைய கிரியைக்கு தேவையானதாகும். உதாரணமாக, மனுஷர்கள் மத்தியில் பரலோகத்திலிருந்து வரும் தேவனுடைய வருகை—அவர் எப்படி வந்தார், எந்த வினாடியில் வந்தார், அல்லது வானமும் பூமியும் மற்றும் அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டனவா இல்லையா—ஜனங்கள் குழப்பமடைய இந்த விஷயங்கள் தேவையாக இருக்கின்றன. இதுவும் உண்மையான சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது, ஏனென்றால், மனுஷனுடைய மாம்சத்தால் நேரடியாக ஆவிக்குரிய உலகலத்திற்குள் பிரவேசிக்க இயலாது. இவ்வாறு, தேவன் வானத்திலிருந்து பூமிக்கு எப்படி வந்தார் என்பதைத் தெளிவாகக் கூறினாலும், அல்லது “சகலமும் உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில், நான் மனுஷனிடையே வந்து, அவனுடன் அற்புதமான பகல்களையும் இரவுகளையும் கழிக்கிறேன்” என்று அவர் கூறும்போது, யாரோ ஒருவர் மரக் கிளையுடன் பேசுவதைப் போல, அத்தகைய வார்த்தைகளுக்கு—ஒரு சிறிய எதிர்வினையும் இல்லை, ஏனென்றால் ஜனங்கள் தேவனுடைய கிரியையின் படிகளைப் பற்றிய அறிவில்லாதிருக்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே அறிந்திருக்கும் போது கூட, தேவன் ஒரு தேவதூதனைப் போல வானத்திலிருந்து பூமிக்கு பறந்து வந்து மனுஷர்கள் மத்தியில் மீண்டும் பிறந்தார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுவே மனுஷனின் எண்ணங்களால் அடையக்கூடியதாகும். மனுஷனின் சாராம்சம் அப்படி இருப்பதால் தான் அவனால் தேவனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் ஆவிக்குரிய உலகத்தின் உண்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் சாராம்சத்தால் மட்டுமே, ஜனங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட இயலாது, ஏனென்றால், ஜனங்கள் இயல்பாகவே ஒரே மாதிரியானவர்கள், வேறுபட்டவர்கள் அல்ல. எனவேதான், பிறர் பின்பற்றும்படியான முன்மாதிரியாக இருக்க வேண்டும் அல்லது முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்று ஜனங்களைக் கேட்பது ஒரு காற்றுக் குமிழாக மாறுகிறது, அது தண்ணீரிலிருந்து நீராவி எழும்பி மறைந்து போவதைப்போல ஆகிவிடுகிறது அதேசமயம், “என்னிடம் என்ன இருக்கிறது மற்றும் நான் என்னவாக இருக்கிறேன் என்பதைப் பற்றி கொஞ்சம் அறிவைப் பெறுகிறார்கள்” என்று தேவன் கூறும்போது, இந்த வார்த்தைகள் மாம்சத்தில் தேவன் செய்யும் கிரியையின் வெளிப்பாடாக மட்டுமே குறிப்பிடப்படுகின்றன; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை தேவனுடைய உண்மையான முகத்தை—தெய்வீகத்தன்மையைக் குறிக்கின்றன, இது முதன்மையாக அவரது தெய்வீகத் தன்மைக்கான மனநிலையைக் குறிக்கிறது. அதாவது, தேவன் ஏன் இவ்வாறு செயல்படுகிறார், தேவனுடைய வார்த்தைகளால் எத்தகைய காரியங்களைச் சாதிக்க வேண்டும், தேவன் பூமியில் என்ன சாதிக்க விரும்புகிறார், மனுஷர்களிடையே அவர் எதைப் பெற விரும்புகிறார், தேவன் பேசும் வழிமுறைகள் மற்றும் மனுஷன் மீதான தேவனுடைய அணுகுமுறை எப்படிப்பட்டது போன்ற விஷயங்களைப் புரிந்து கொள்ளுமாறு ஜனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மனுஷனிடம் பெருமை பேசத் தகுந்த எதுவும் இல்லை—அதாவது, பிறர் பின்பற்றுவதற்கு முன்னுதாரணமாக அவனிடம் எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

இது துல்லியமாக, மாம்சத்தில் உள்ள தேவனுடைய இயல்பான தன்மையினாலும், பரலோகத்தில் இருக்கும் தேவனுக்கும், பரலோகத்தின் தேவனால் பிறந்ததாகக் காணப்படாத, மாம்சத்தில் உள்ள தேவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் காரணமாகவும், தேவன் கூறுகிறார், “நான் மனுஷனிடையே பல வருடங்களைக் கடந்துவிட்டேன், ஆனாலும் அவன் எப்போதும் அறியாமலேயே இருக்கிறான், என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.” தேவன் மேலும் கூறுகிறார் “என் அடிச்சுவடுகள் பிரபஞ்சத்திலும் பூமியின் முனைகளிலும் படும்போது, மனுஷன் தன்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவான், எல்லா ஜனங்களும் என்னிடம் வந்து என் முன் தரைமட்டும் குனிந்து, என்னை வணங்குவார்கள். இதுவே நான் மகிமை அடையும் நாளாகவும், நான் திரும்பும் நாளாகவும் மற்றும் நான் புறப்படும் நாளாகவும் இருக்கும்.” இந்த நாளில்தான் தேவனுடைய உண்மையான முகம் மனுஷனுக்குக் காட்டப்படுகிறது. இருப்பினும், அதன் விளைவாக, தேவன் தமது கிரியையை தாமதப்படுத்துவதில்லை, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் வெறுமனே செய்கிறார். அவர் நியாயந்தீர்க்கும்போது, மாம்சத்தில் உள்ள தேவனிடத்தில் அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் ஜனங்களைக் கண்டனம் செய்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் தேவனுடைய வார்த்தைகளின் முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். உதாரணமாக, “எனது நிர்வாகத் திட்டத்தின் நிறைவாகப் பிரபஞ்சம் முழுவதும் நான் முறையாக இறங்கியிருக்கிறேன். இந்தத் தருணத்திலிருந்து, எச்சரிக்கையற்ற எவரும் இரக்கமற்ற சிட்சையின் மத்தியில் மூழ்கடிக்கப்படுவார்கள், இது எந்த நேரத்திலும் நிகழக்கூடும்” என்று தேவன் கூறுகிறார். இது தேவனுடைய திட்டத்தின் உள்ளடக்கம், இது விநோதமானதோ அல்லது விசித்திரமானதோ அல்ல, ஆனால் அவருடைய கிரியையின் கட்டங்களின் அனைத்துப் பகுதிகளும் ஆகும். இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள ஜனங்கள் மற்றும் தேவனுடைய புத்திரர்கள், திருச்சபைகளில் அவர்கள் செய்யும் எல்லாவற்றின் அடிப்படையிலும் தேவனால் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள், எனவே தேவன் கூறுகிறார், “நான் கிரியை செய்யும் போது, எல்லா தேவதூதர்களும் என்னுடன் தீர்க்கமான யுத்தத்தில் இறங்குகிறார்கள், இறுதிக் கட்டத்தில் என் விருப்பங்களை நிறைவேற்றத் தீர்மானிக்கிறார்கள், இதனால் பூமியிலுள்ள ஜனங்கள் தேவதூதர்களைப் போல எனக்கு முன்பாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்களுக்கு என்னை எதிர்க்க விருப்பமுமில்லை, எனக்கு எதிராகக் கலகம் செய்யும் எதையும் செய்யவும் மறுக்கிறார்கள். இவையே பிரபஞ்சம் முழுவதும் எனது கிரியையின் இயக்கவியலாக இருக்கிறது.” பூமியெங்கும் தேவன் செய்யும் கிரியையில் உள்ள வித்தியாசம் இதுதான்; அவர்கள் யாரை நோக்கிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துகிறார். இன்று, திருச்சபைகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் ஏங்குகின்ற ஓர் இருதயத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் தொடங்கியுள்ளனர்—தேவனுடைய கிரியை அதன் முடிவை நெருங்குகிறது என்பதைக் காட்ட இது போதுமானது. வானத்திலிருந்து கீழே பார்ப்பது, இலையுதிர்காலக் காற்றினால் வீசப்படும் வாடிய கிளைகள் மற்றும் உதிர்ந்த இலைகளின் மந்தமான காட்சிகளை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்கு ஒப்பானது. மனுஷனிடையே ஒரு பேரழிவு ஏற்படப் போகிறது, எல்லாம் பாழாக்கப்படப் போகிறது போல் உணரப்படுகிறது. ஆவியானவரின் ஏவுதலின் காரணமாக, இருதயத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியற்ற உணர்வு இருக்கும், இருப்பினும் சிறிது துக்கத்துடன் இருந்தாலும், ஒரு துளி அமைதியான ஆறுதலை தாங்கிக்கொண்டிருப்பார்கள். “மனுஷன் தூக்கத்திலிருந்து விழிக்கிறான், பூமியில் உள்ள அனைத்தும் கிரமமாக இருக்கிறது, பூமியின் உயிர்பிழைக்கும் நாட்கள் இனியும் இருக்கப்போவதில்லை, ஏனென்றால் நான் வந்துவிட்டேன்!” என்ற தேவனுடைய வார்த்தைகளின் சித்தரிப்பாக இது இருக்கலாம். இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு ஜனங்கள் சற்றே எதிர்மறையாக இருக்கலாம் அல்லது தேவனுடைய கிரியையால் அவர்கள் கொஞ்சம் ஏமாற்றமடையலாம் அல்லது அவர்கள் தங்கள் ஆவியில் உள்ள உணர்வில் அதிக கவனம் செலுத்தலாம். ஆனால் பூமியில் தம்முடைய கிரியையை முடிப்பதற்கு முன்பு, தேவன் அத்தகைய மாயையை ஜனங்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக இருக்க முடியாது. உனக்கு உண்மையாகவே இத்தகைய உணர்வுகள் இருந்தால், நீ உன் உணர்வுகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறாய் என்பதையும், தான் விரும்புகிறபடியெல்லாம் செய்யும், தேவனை நேசிக்காத ஒருவன் என்பதையும் இது காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், மேலும் தேவனுக்கு செவி சாய்ப்பதே இல்லை என்பதை இது காட்டுகிறது. தேவனுடைய கரத்தின் நிமித்தம், ஜனங்கள் எப்படி வெளியேற முயன்றாலும், அவர்களால் இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தேவனுடைய கரத்திலிருந்து யாரால் தப்பிக்க முடியும்? உங்கள் நிலை மற்றும் சூழ்நிலைகள் எப்போது தேவனால் ஆயத்தம் பண்ணப்படாதிருந்தது? நீங்கள் துன்பப்பட்டாலும் சரி அல்லது ஆசீர்வதிக்கப்பட்டாலும் சரி, எப்படி நீங்கள் தேவனுடைய கரத்திலிருந்து நழுவிச் செல்ல முடியும்? இது ஒரு மனுஷனுடைய விஷயம் அல்ல, மாறாக முற்றிலும் தேவனுடைய தேவையைப் பற்றியது—இதன் விளைவாக யார் கீழ்ப்படியாமல் இருக்க முடியும்?

“என் கிரியையைப் புறஜாதியினரிடையே பரப்ப நான் சிட்சையைப் பயன்படுத்துவேன், அதாவது புறஜாதியார் அனைவருக்கும் எதிராக நான் பெலத்தைப் பயன்படுத்துவேன். இயற்கையாகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே எனது கிரியை செயல்படும் அதே நேரத்தில் இந்தக் கிரியை மேற்கொள்ளப்படும்.” இந்த வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம், தேவன் பிரபஞ்சம் முழுவதும் இந்த கிரியையைத் தொடங்குகிறார். இது தேவனுடைய கிரியையின் ஒரு படியாகும், இது ஏற்கனவே இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது; யாராலும் விஷயங்களை மாற்ற முடியாது. அவர்களை உலகத்துடன் சேர்ந்து அழிந்துபோகச் செய்வதன் மூலம், பேரழிவு மனிதகுலத்தின் ஒரு பகுதிக்குப் பங்காற்றுகிறது. பிரபஞ்சம் அதிகாரப்பூர்வமாக தண்டிக்கப்படும்போது, தேவன் அதிகாரப்பூர்வமாக எல்லா ஜனங்களுக்கும் தோன்றுகிறார். மேலும் அவரது தோன்றுதலினால், ஜனங்கள் தண்டிக்கப்படுகிறார்கள். மேலும், “நான் சுருளை முறையாகத் திறக்கும்போதுதான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகையில்” என்றும் தேவன் கூறினார். இதிலிருந்து, ஏழு முத்திரைகளின் உள்ளடக்கம், ஏழு முத்திரைகளுக்குள் பேரழிவு இருப்பதாகக் கூறப்படும் தண்டனையின் உள்ளடக்கம் என்பதைத் தெளிவாகக் காணலாம். இதனால், இன்று, ஏழு முத்திரைகள் இன்னும் திறக்கப்படவில்லை; இங்கு குறிப்பிடப்படும் “உபத்திரவங்கள்” என்பது மனுஷன் அனுபவிக்கும் தண்டனையாகும், மேலும் இந்தத் தண்டனையின் மத்தியில், தேவனால் வழங்கப்பட்ட “சான்றிதழை” அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு குழுவினர் ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள், இதனால் அவர்கள் தேவன் தம்முடைய ராஜ்யத்தில் ஜனங்களாக இருப்பார்கள். இவை தேவனுடைய புத்திரர்கள் மற்றும் ஜனங்களின் தோற்றமாகும், இன்று அவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, மேலும் அவை எதிர்கால அனுபவங்களுக்கு அடித்தளம் மட்டுமே அமைக்கின்றன. ஒருவன் மெய்யான ஜீவனைப் பெற்றிருந்தால், அவர்களால் சோதனைகளின் போது உறுதியாக நிற்க முடியும், அவர்கள் ஜீவனற்றவர்களாய் இருந்தால், தேவனுடைய கிரியை அவர்கள் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தியிருக்கவில்லை, அவர்கள் கலங்கிய நீரில் மீன்பிடிக்கிறார்கள், மேலும், தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதை இது போதுமான அளவு நிரூபிக்கிறது. ஏனென்றால், கிரியையை செய்வதற்குப் பதிலாக, இந்தக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே கடைசி நாட்களின் கிரியையாக இருப்பதால், தேவன் இவ்வாறு கூறுகிறார், “வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனுஷன் அனுபவிக்காத வாழ்க்கை இது, எனவே இதற்கு முன் செய்திடாத கிரியையை நான் இப்போது செய்திருக்கிறேன் என்று நான் கூறுகிறேன்.” மேலும் அவர் கூறுகிறார், “ஏனென்றால், எனது நாள் எல்லா மனுஷரிடமும் நெருங்கி வருகிறது, ஏனென்றால் அது தொலைவில் தோன்றாமல் மனுஷனின் கண்களுக்கு முன்பாகவே தோன்றுகிறது.” கடந்த காலங்களில், தேவன் தனிப்பட்ட முறையில் அநேக நகரங்களை அழித்தார், ஆனால் அவற்றில் எதுவுமே இறுதி நிகழ்வில் நடக்கும் அதே வழியில் அழிக்கப்படவில்லை. கடந்த காலத்தில் தேவன் சோதோமை அழித்தாலும், இன்றைய சோதோமானது கடந்த காலங்களில் இருந்ததைப் போல நடத்தப்படக்கூடாது—அது நேரடியாக அழிக்கப்படக்கூடாது, மாறாக, முதலில் அது ஜெயங்கொள்ளப்பட்டு பின்னர் நியாயந்தீர்க்கப்படும், இறுதியில், நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படும். இவை கிரியையின் படிகள், இறுதியில், உலகின் கடந்த கால அழிவின் அதே வரிசையில் இன்றைய சோதோமும் அழிக்கப்படும்—இதுவே தேவனுடைய திட்டமாகும். தேவன் தோன்றும் நாள் இன்றைய சோதோமின் அதிகாரப்பபூர்வ கண்டனத்தின் நாளாகும், மேலும் அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்துவது அதை இரட்சிப்பதற்காக அல்ல. எனவேதான், “நான் பரிசுத்த ராஜ்யத்திற்கு முன்பாகத் தோன்றுகிறேன், அதேசமயம் என்னை அசுத்த தேசத்திலிருந்து நானே மறைக்கிறேன்.” என்று தேவன் கூறுகிறார். இன்றைய சோதோம் தூய்மையற்றதாக இருப்பதால், தேவன் உண்மையில் அதற்குத் தோன்றுவதில்லை, ஆனால், அதைத் தண்டிக்க இந்த வழியைப் பயன்படுத்துகிறார்—இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கவில்லையா? தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்கும் திறன் பூமியில் எவருக்கும் இல்லை என்று சொல்லலாம். ஒருபோதும் தேவன் மனுஷனுக்குத் தோன்றியதில்லை, தேவன் எவ்வளவு உயர்ந்தவராய் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இதுதான் இன்றைய ஜனங்களை இந்தச் சூழலில் இருக்கும்படி தள்ளியிருக்கிறது. அவர்கள் தேவனுடைய முகத்தைக் கண்டால், அது நிச்சயமாக அவர்களின் முடிவு வெளிப்படும் நேரமாகவும், ஒவ்வொருவரும் தன்மைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்படும் நேரமாகவும் இருக்கும். இன்று, தெய்வீகத்தன்மைக்குள் இருந்து வரும் வார்த்தைகள் நேரடியாக ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன, இது மனிதகுலத்தின் கடைசி நாட்கள் வந்துவிட்டன, மேலும் நீண்ட காலம் நீடிக்காது என்பதை முன்னறிவிக்கிறது. தேவன் எல்லா ஜனங்களுக்கும் தோன்றும் நேரத்தில் ஜனங்கள் உபத்திரவங்களுக்கு உள்ளானதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு, ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்தாலும், அவர்களுக்கு ஒரு பெரிய பேரழிவு வரப்போகிறது என்பது போன்ற ஓர் அச்சுறுத்தும் உணர்வை எப்போதும் பெற்றிருக்கிறார்கள். இன்றைய ஜனங்கள் உறைந்த நிலங்களில் சிட்டுக்குருவிகளைப் போல இருக்கிறார்கள், அவர்கள் மீது மரணம் ஒரு கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் போலவும், அவர்களுக்கு உயிர் பிழைக்க வழிவிடாதது போலவும் இருக்கிறது. மனுஷனால் சம்பாதிக்கப்பட்ட கடனாகிய மரணத்தின் நிமித்தமாக, ஜனங்கள் அனைவரும் தங்கள் கடைசி நாட்கள் வந்துவிட்டதாக உணர்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஜனங்களின் இருதயங்களில் இதுதான் நடக்கிறது, அது அவர்களின் முகத்தில் வெளிப்படாவிட்டாலும், அவர்களின் இருதயத்தில் உள்ளதை என் கண்களிலிருந்து மறைக்க இயலாது—இது மனுஷனின் இயல்பு நிலையாகும். ஒருவேளை, பல வார்த்தைகள் முழுவதுமாக சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம்—ஆனால் சிக்கலைக் காட்ட இந்த வார்த்தைகள் மட்டுமே போதுமானதாகும். கடந்த காலமாக இருந்தாலும் சரி, நிகழ்காலமாக இருந்தாலும் சரி, தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிறைவேறும்; அவைகள் உண்மைகளை ஜனங்களுக்கு முன்பாக—அவர்களின் கண்களுக்கு ஒரு விருந்தாகத் தோன்றச் செய்யும்—அந்த நேரத்தில் அவர்கள் திகைத்து, குழப்பமடைவார்கள். இன்று எப்படிப்பட்ட காலம் என்பதை நீங்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவில்லையா?

முந்தைய: அத்தியாயம் 28

அடுத்த: அத்தியாயம் 30

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக