சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளில் எப்போதும் தங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் திருச்சபையைத் தொந்தரவு செய்கிறார்கள். அத்தகையவர்கள் ஒரு நாள் வெளியேற்றப்பட்டு புறம்பாக்கப்பட வேண்டும். தேவன்மீது ஜனங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில், தேவன் மீது பயபக்தியுள்ள இருதயம் இல்லாவிட்டால், தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயம் அவர்களுக்கு இல்லாவிட்டால், அவருக்காக அவர்களால் எந்தக் கிரியையும் செய்ய முடியாமல் போகும் என்பது மட்டுமல்ல, மாறாக அவருடைய கிரியையைத் தொந்தரவு செய்பவர்களாகவும் மற்றும் அவரை எதிர்ப்பவர்களாகவும் மாறிவிடுவார்கள். தேவன் மீது விசுவாசம் கொண்டு, ஆனால் அவருக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவரை வணங்காமல், மாறாக அவரை எதிர்ப்பது ஒரு விசுவாசிக்கு மிகப்பெரிய அவமதிப்பாகும். விசுவாசிகள் அவிசுவாசிகளைப் போலவே தங்கள் பேச்சிலும் நடத்தையிலும் சாதாரணமாகவும் கட்டுப்பாடற்றவர்களாகவும் இருந்தால், அவர்கள் அவிசுவாசிகளை விட தீயவர்கள்; அவர்கள் பிசாசுகளின் பிரதிநிதிகள். திருச்சபைக்குள் தங்கள் நச்சுமிக்க, தீங்கிழைக்கும் பேச்சை வெளிப்படுத்துபவர்கள், வதந்திகளைப் பரப்புகிறவர்கள், விரோதத்தைத் தூண்டுகிறவர்கள், மற்றும் சகோதர சகோதரிகளிடையே தனித்தனி குழுக்களை உருவாக்குகிறவர்கள்—அவர்கள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இப்போது தேவனின் கிரியையின் வேறுபட்ட யுகமாக இருப்பதால், இந்த ஜனங்கள் தடைசெய்யப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் நிச்சயமாகவே புறம்பாக்கப்பட வேண்டும். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவருக்கும் சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன. சிலருக்குச் சீர்கெட்ட மனநிலையைத் தவிர வேறொன்றும் இல்லை, மற்றவர்கள் வேறுபட்டவர்கள்: அவர்கள் சீர்கெட்ட சாத்தானின் மனநிலைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் இயல்பும் மிகவும் பொல்லாதது. அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் சீர்கெட்ட, சாத்தானின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல; மேலும், இந்த ஜனங்கள் உண்மையான தீய சாத்தான்களாக இருக்கின்றனர். அவர்களின் நடத்தை தேவனின் கிரியையில் இடையூறு செய்கிறது மற்றும் தொந்தரவு செய்கிறது, இது சகோதர சகோதரிகள் ஜீவனுக்குள் நுழைவதை பாதிக்கிறது, மேலும் இது திருச்சபையின் சாதாரண வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறது. விரைவில், ஆட்டுத்தோல் போர்த்திய இந்த ஓநாய்கள் அகற்றப்பட வேண்டும்; சாத்தானின் இந்த சேவகர்களை நோக்கி ஓர் இரக்கமற்ற மனப்பான்மை, நிராகரிக்கும் மனப்பான்மை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். இது மட்டுமே தேவனின் பக்கம் நிற்பதாகும், மற்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் சாத்தானுடன் சேற்றில் புரள்கிறார்கள். தேவனை உண்மையாக விசுவாசிக்கிற ஜனங்கள் எப்பொழுதும் அவரைத் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போதும் தேவன் மீது பயபக்தி கொண்டிருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களுக்குள் சுமக்கிறார்கள். தேவனை விசுவாசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும், மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் தேவனின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் மற்றும் அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தலைக்கனமிக்கவர்களாக, அவர்கள் விரும்பியதைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது; அது பரிசுத்த நடத்தைக்குப் பொருந்தாது. ஜனங்கள் பித்துப்பிடித்து ஓடக்கூடாது, எல்லா இடங்களிலும் ஏமாற்றும்போது மற்றும் வஞ்சிக்கும்போது தேவனின் கொடியை எல்லா இடங்களிலும் அசைக்கக்கூடாது; இது மிகவும் கலகத்தனமான நடத்தையாகும். குடும்பங்களுக்கு அவர்களுக்கான விதிகள் உள்ளன, மற்றும் நாடுகளுக்கு அவற்றுக்கான சட்டங்கள் உள்ளன—மேலும் இது தேவனுடைய வீட்டில் மிக அதிகமாக இல்லையா? இன்னும் அதிகமான கடுமையான தரநிலைகள் அதற்கு இல்லையா? இன்னும் அதிகமான நிர்வாக ஆணைகள் அதற்கு இல்லையா? ஜனங்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேவனின் நிர்வாக ஆணைகளை விருப்பப்படி மாற்ற முடியாது. தேவன் என்பவர் மனுஷர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவன்; அவர் ஜனங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தேவன். இது ஏற்கனவே ஜனங்களுக்குத் தெரியாதா?

ஒவ்வொரு திருச்சபையிலும் திருச்சபைக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அல்லது தேவனின் கிரியையில் தலையிடும் நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் தேவனின் வீட்டிற்குள் ஊடுருவிய சாத்தான்கள். அத்தகைய ஜனங்கள் நடிப்பதில் வல்லவர்கள்: அவர்கள் மிகுந்த பயபக்தியுடனும், பணிவுடனும் எனக்கு முன்பாக வந்து, கீழ்த்தரமான நாய்களைப் போல ஜீவித்து, தங்கள் சொந்த நோக்கங்களை அடைய அவர்களின் “அனைத்தையும்” அர்ப்பணிக்கிறார்கள்—ஆனால் சகோதர சகோதரிகளுக்கு முன்னால், அவர்கள் தங்கள் அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களை அவர்கள் பார்க்கும்போது, அவர்கள் அவர்களைத் தாக்கி ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; தங்களைவிட வல்லமையானவர்களை அவர்கள் காணும்போது, அவர்கள் முகஸ்துதி செய்து அவர்களிடம் பசப்புகிறார்கள். அவர்கள் திருச்சபையில் வரம்பு மீறி நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற “உள்ளூர் கொடுமைக்காரர்கள்” இது போன்ற “நாய்க்குட்டிகள்” பெரும்பான்மையான திருச்சபைகளில் உள்ளன என்று கூறலாம். அவர்கள் ஒன்றாகப் பிசாசுத்தனமாக செயல்படுகிறார்கள், ஒருவருக்கொருவர் கண்சிமிட்டல்களையும் இரகசிய சமிக்ஞைகளையும் அனுப்புகிறார்கள், மற்றும் அவர்களில் யாரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. யாருக்கு அதிக விஷம் இருக்கிறதோ அவன் “தலைமைப் பிசாசு”, மிக உயர்ந்த கெளரவத்தைக் கொண்டவன் அவர்களை வழிநடத்துகிறான், அவர்களின் கொடியை உயரமாகத் தூக்கிப் பிடிக்கிறான். இந்த ஜனங்கள் திருச்சபையின் வழியாகச் செல்கிறார்கள், தங்கள் எதிர்மறை எண்ணங்களைப் பரப்புகிறார்கள், மரணத்தைத் தூண்டுகிறார்கள், அவர்கள் விரும்பியபடி செயல்படுகிறார்கள், அவர்கள் விரும்புவதைச் சொல்கிறார்கள், அவர்களைத் தடுக்க யாரும் துணிவதில்லை. அவர்கள் சாத்தானின் மனநிலையினால் நிரம்பியிருக்கிறார்கள். மரணத்தின் காற்று திருச்சபைக்குள் நுழைந்ததும் அவர்கள் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் திருச்சபைக்குள் உள்ளவர்கள், தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாமல் கைவிடப்படுகிறார்கள், அதே நேரத்தில் திருச்சபையைத் தொந்தரவு செய்து மரணத்தைப் பரப்புபவர்கள் உள்ளுக்குள் கொந்தளிக்கிறார்கள், மேலும் என்னவென்றால், பெரும்பாலான ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய திருச்சபைகள் சந்தேகமின்றி, சாத்தானால் ஆளப்படுகின்றன; பிசாசு அவர்களின் ராஜா. திருச்சபையார்கள் எழுந்து தலைமைப் பிசாசுகளை நிராகரிக்காவிட்டால், அவர்களும் இறுதியில் அழிந்து போவார்கள். இனிமேல், இதுபோன்ற திருச்சபைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொஞ்சம் சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள் அதற்காக முயற்சிக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை அகற்றப்படும். ஒரு திருச்சபையானது சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லாதவர்கள் எவரையும், தேவனுக்காகச் சாட்சியாக நிற்கக்கூடிய எவரையும் கொண்டிருக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற திருச்சபைகளுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இது “புதைக்கும் மரணம்” என்று அழைக்கப்படுகிறது; சாத்தானைக் கைவிட்டதன் அர்த்தம் இதுதான். ஒரு திருச்சபையில் பல உள்ளூர் கொடுமைக்காரர்கள் இருந்தால், முற்றிலும் ஞானம் இல்லாத “சிறிய ஈக்களால்” அவர்கள் பின்தொடரப்படுவார்கள், மேலும் சத்தியத்தைப் பார்த்த பிறகும் கூட, இந்த விசுவாசிகளின் கூட்டம், இந்த கொடுமைக்காரர்களின் பிணைப்புகளையும் கையாளுதல்களையும் நிராகரிக்க முடியாமல் இருந்தால், பிறகு அந்த அனைத்து முட்டாள்களும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். இந்தச் சிறிய ஈக்கள் பயங்கரமான எதையும் செய்திராமல் இருக்கலாம், ஆனால் அவை இன்னும் வஞ்சிப்பதாய், நயமிக்கதாய் மற்றும் மழுப்பலானதாய் இருக்கும், மேலும் இது போன்ற அனைவரும் புறம்பாக்கப்படுவார்கள். ஒருவர் கூட மீதமிருக்கமாட்டார்! சாத்தானைச் சேர்ந்தவர்கள் சாத்தானிடம் திரும்பிச் செல்வார்கள், அதே சமயம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயமாக சத்தியத்தைத் தேடிச் செல்வார்கள்; இது அவர்களின் இயல்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. சாத்தானைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அழிந்துபோகட்டும்! அத்தகைய ஜனங்களுக்கு எந்தப் பரிதாபமும் காட்டப்படாது. சத்தியத்தைத் தேடுவோருக்கு அது வழங்கப்படட்டும், மற்றும் அவர்கள் தேவனின் வார்த்தையில் தங்கள் இருதயங்கள் நிறையும் அளவிற்கு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். தேவன் நீதியுள்ளவர்; அவர் யாருக்கும் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார். நீ ஒரு பிசாசு என்றால், உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாது; நீ சத்தியத்தைத் தேடும் ஒருவன் என்றால், நீ சாத்தானால் சிறைபிடிக்கப்பட மாட்டாய் என்பது உறுதி. இது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது.

முன்னேற்றத்திற்காகப் பாடுபடாத ஜனங்கள் எப்போதும் மற்றவர்கள் தங்களைப் போலவே எதிர்மறையாகவும் செயலற்றவர்களாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள், மற்றும் குழப்பமாகவும், பகுத்தறிவற்றும் இருப்பவர்களை எப்போதும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த ஜனங்கள் நிர்ப்பந்திக்கும் இந்த விஷயங்கள் உன்னைச் சீரழியச் செய்து, கீழ்நோக்கி வழுக்கச் செய்து, அசாதாரண நிலையை உருவாக்கி, இருள் நிறைந்திருக்கச் செய்யும். அவை உன்னை தேவனிடமிருந்து விலக்கி, மாம்சத்தைப் போற்றி, உன்னை ஈடுபடச் செய்யும். சத்தியத்தை நேசிக்காத, எப்போதும் தேவன் மீது ஈடுபாடற்று இருக்கும் ஜனங்கள் சுய விழிப்புணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள், அத்தகைய ஜனங்களின் மனநிலை மற்றவர்களை பாவங்களைச் செய்வதற்கும் தேவனை எதிர்த்து நிற்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவர்கள் பாவத்தை ஆதரிக்கிறார்கள், தங்கள் மீது வெறுப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தங்களையே தெரியாது, மற்றவர்கள் தங்களைத்தாங்களே தெரிந்து கொள்வதைத் தடுக்கிறார்கள்; மற்றவர்களும் சத்தியத்தை விரும்புவதை அவர்கள் தடுக்கிறார்கள். அவர்களால் ஏமாற்றப்படுவோரால் ஒளியைக் காண முடியாது. தங்களைத்தாங்களே அறியாதவர்கள் இருளில் விழுகிறார்கள், அவர்களுக்குச் சத்தியத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாது, மற்றும் தேவனிடமிருந்து மேலும் மேலும் தொலைவில் போகிறார்கள். அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, மற்றவர்களை சத்தியத்தைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுக்கிறார்கள், அந்த முட்டாள்கள் அனைவரையும் அவர்கள்முன் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதை விட, அவர்கள் தங்கள் முன்னோர்களை விசுவாசிக்கிறார்கள், அல்லது அவர்கள் விசுவாசிப்பது அவர்களின் இதயத்தில் உள்ள விக்கிரகங்களை என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். தேவனைப் பின்பற்றுவதாகக் கூறும் ஜனங்கள் கண்களைத் திறந்து, அவர்கள் யாரை விசுவாசிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகப் பார்ப்பதற்கு தெளிவாக ஆராய்ந்து பார்ப்பது சிறந்தது: நீ நிஜமாக தேவனை விசுவாசிக்கிறாயா அல்லது சாத்தானையா? நீ விசுவாசிப்பது தேவனை அல்ல, ஆனால் உனது சொந்த விக்கிரகங்களை என்று உனக்குத் தெரிந்தால், நீ ஒரு விசுவாசி என்று கூறிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீ உண்மையில் யாரை விசுவாசிக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை என்றால், பிறகு, மீண்டும், நீ ஒரு விசுவாசி என்று கூறிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்படிச் சொல்வது தேவதூஷணமாக இருக்கும்! தேவனை விசுவாசிக்க யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள்; இதுபோன்ற பேச்சை நான் போதுமான அளவிற்குக் கேட்டிருக்கிறேன், மற்றும் அதை மீண்டும் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் உங்கள் இருதயங்களில் உள்ள விக்கிரகங்களையும் உங்களிடையே உள்ள உள்ளூர் கொடுமைக்காரர்களையும் விசுவாசிக்கிறீர்கள். சத்தியத்தைக் கேட்கும்போது தங்கள் தலைகளை அசைத்து, மரணத்தைப் பற்றிய பேச்சைக் கேட்கும்போது பல்லிளிப்பவர்கள், அனைவரும் சாத்தானின் சந்ததியினர், அவர்கள்தான் புறம்பாக்கப்படுவார்கள். திருச்சபையில் உள்ள பலருக்குப் பகுத்தறிவு இல்லை. ஏமாற்றம் தரும் ஒன்று நிகழும்போது, அவர்கள் எதிர்பாராதவிதமாகச் சாத்தானின் பக்கம் நிற்கிறார்கள்; அவர்கள் சாத்தானின் சேவகர்கள் என்று அழைக்கப்பட்டால் கோபப்படுகிறார்கள். தங்களுக்குப் பகுத்தறிவு இல்லை என்று ஜனங்கள் கூறினாலும், அவர்கள் எப்போதும் சத்தியம் இல்லாத பக்கம் நிற்கிறார்கள், முக்கியமான நேரத்தில் அவர்கள் ஒருபோதும் சத்தியத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்து நின்று சத்தியத்திற்காக வாதிடுவதில்லை. அவர்களுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு இல்லையா? அவர்கள் ஏன் எதிர்பாராதவிதமாகச் சாத்தானின் பக்கம் நிற்கிறார்கள்? சத்தியத்திற்கு ஆதரவாக நேர்மையான மற்றும் நியாயமான ஒரு வார்த்தையைக்கூட அவர்கள் ஏன் ஒருபோதும் சொல்வதில்லை? அவர்களின் தற்காலிக குழப்பத்தின் விளைவாக இந்தச் சூழ்நிலை உண்மையிலேயே எழுந்ததா? ஜனங்களுக்கு எவ்வளவு குறைவான பகுத்தறிவு உள்ளதோ, சத்தியத்தின் பக்கம் அவர்களால் அவ்வளவு குறைவாகவே நிற்க முடியும். இது எதனைக் காட்டுகிறது? பகுத்தறிவு இல்லாதவர்கள் தீமையை நேசிக்கிறார்கள் என்பதை இது காட்டவில்லையா? அவர்கள் சாத்தானின் விசுவாசமான சந்ததியார் என்று அது காட்டவில்லையா? அவர்களால் ஏன் எப்போதும் சாத்தானின் பக்கம் நின்று அதன் மொழியைப் பேச முடிகிறது? அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும், அவர்களின் முகபாவங்கள் என அனைத்தும் அவர்கள் சத்தியத்தை நேசிப்போர் அல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்கின்றன; மாறாக, அவர்கள் சத்தியத்தை வெறுக்கும் ஜனங்கள். அவர்களால் சாத்தானின் பக்கம் நிற்க முடியும் என்பதே சாத்தானின் நிமித்தம் தங்கள் வாழ்க்கையைச் செலவழிக்கும் இந்தக் குட்டி பிசாசுகளைச் சாத்தான் உண்மையில் நேசிக்கிறான் என்பதை நிரூபிக்க போதுமானதாகும். இந்த உண்மைகள் அனைத்தும் மிகவும் தெளிவாக இல்லையா? நீ உண்மையிலேயே சத்தியத்தை நேசிக்கும் ஒரு நபராக இருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களை நீ ஏன் மதிக்கவில்லை, மற்றும் சத்தியத்தைச் சிறிதும் மதிக்காதவர்கள் இலேசாகப் பார்த்ததும் அவர்களை உடனடியாக ஏன் பின்பற்றுகிறாய்? இது என்ன வகையான பிரச்சினை? உனக்குப் பகுத்தறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ எவ்வளவு பெரிய விலை கொடுத்திருக்கிறாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. உனது வல்லமைகள் எவ்வளவு பெரியவை என்பதை நான் பொருட்படுத்தவில்லை, நீ ஓர் உள்ளூர் கொடுமைக்காரனா அல்லது கொடி ஏந்திய தலைவனா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. உனது வல்லமைகள் சிறந்தவை என்றால், அது சாத்தானின் பலத்தின் உதவியால் மட்டுமே சாத்தியம். உனது கெளரவம் உயர்வாக இருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் உன்னைச் சுற்றி மிகவும் அதிகமாக இருப்பதுதான் அதற்குக் காரணம். நீ வெளியேற்றப்படாவிட்டால், அதற்குக் காரணம் இது வெளியேற்றும் வேலைக்கான நேரம் அல்ல என்பதுதான்; மாறாக, புறம்பாக்கும் வேலைக்கான நேரம் இது. உன்னை வெளியேற்றுவதற்கு எந்த அவசரமும் இப்போது இல்லை. நீ புறம்பாக்கப்பட்ட பிறகு நான் உன்னை தண்டிக்கும் நாளுக்காக மட்டுமே காத்திருக்கிறேன். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத எவரும் புறம்பாக்கப்படுவர்!

தேவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் தேவனின் வார்த்தையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு சாட்சியமளிப்பதில் உண்மையிலேயே உறுதியாக நிற்கக்கூடிய ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பவர்களாகவும், உண்மையாகச் சத்தியத்தின் பக்கம் நிற்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். தந்திரத்தையும் அநீதியையும் நாடுகிற ஜனங்கள் அனைவரிடமும் சத்தியம் இருக்காது, அவர்கள் அனைவரும் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள். திருச்சபையில் சச்சரவுகளை ஏற்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் சாத்தானின் உருவகமாகவும் இருக்கின்றனர். அத்தகையவர்கள் மிகவும் தீங்கிழைக்கக்கூடியவர்கள். எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாதவர்களும், சத்தியத்தின் பக்கத்தில் நிற்க இயலாதவர்களும் தீய நோக்கங்களை மனதில் தேக்கிவைத்து, சத்தியத்தைக் களங்கப்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்கள் சாத்தானின் மூலப்படிம பிரதிநிதிகள். அவர்கள் மீட்பிற்கு அப்பாற்பட்டவர்கள், மற்றும் இயற்கையாகவே புறம்பாக்கப்படுவார்கள். தேவனின் குடும்பம் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது, திருச்சபையை வேண்டுமென்றே தகர்ப்பவர்களை நிலைத்திருக்க அனுமதிக்காது. இருப்பினும், வெளியேற்றும் வேலையைச் செய்ய இது நேரம் இல்லை; அத்தகைய ஜனங்கள் இறுதியில் அம்பலப்படுத்தப்படுவார்கள் மற்றும் புறம்பாக்கப்படுவார்கள். இந்த ஜனங்கள் மீது மேலும் பயனற்ற வேலை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது; சாத்தானைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்க முடியாது, அதேசமயம் சத்தியத்தை நாடுபவர்களால் முடியும். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத மக்கள் சத்தியத்தின் வழியைக் கேட்க தகுதியற்றவர்கள், சத்தியத்திற்குச் சாட்சியாக இருக்கத் தகுதியற்றவர்கள். சத்தியம் அவர்களின் காதுகளுக்கு மட்டுமே அல்ல; மாறாக, அதைக் கடைப்பிடிப்பவர்களை நோக்கி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபரின் முடிவும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு, திருச்சபையைத் தொந்தரவு செய்வோர் மற்றும் தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிப்போர் முதலில் இப்போதைக்கு ஒதுக்கி வைக்கப்படுவார்கள், பின்னர் அவர்கள் கையாளப்படுவார்கள். கிரியை நிறைவேறியதும், இந்த ஜனங்கள் ஒவ்வொருவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்கள் புறம்பாக்கப்படுவார்கள். தற்போதைக்கு, சத்தியம் வழங்கப்படும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். முழு சத்தியமும் மனுஷகுலத்திற்கு வெளிப்படுத்தப்படும் போது, அந்த ஜனங்கள் புறம்பாக்கப்பட வேண்டும்; எல்லா ஜனங்களும் தங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும் நேரமாக அது இருக்கும். பகுத்தறிவு இல்லாதவர்களின் அற்பமான தந்திரங்கள் துன்மார்க்கரின் கைகளில் அவர்கள் அழிவுக்கு வழிவகுக்கும், அவர்கள் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று அவர்களால் நயங்காட்டப்படுவார்கள். அவர்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தை நேசிக்கவில்லை, ஏனென்றால் அவர்களால் சத்தியத்தின் பக்கம் நிற்க இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் தீயவர்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் தீயவர்களின் பக்கம் நிற்கிறார்கள், மற்றும் அவர்கள் தீயவர்களுடன் இணைந்து, தேவனை எதிர்க்கிறார்கள். அந்தத் தீயவர்கள் வெளிப்படுத்துபவை தீயவை என்பதை அவர்கள் பரிபூரணமாக அறிவார்கள், ஆனாலும் அவர்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, அவர்களைப் பின்பற்றுவதற்காகச் சத்தியத்தைப் புறக்கணிக்கிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காத, ஆனால் அழிவுகரமான மற்றும் அருவருப்பான காரியங்களைச் செய்கிற இந்த ஜனங்கள் அனைவரும் தீமை செய்யவில்லையா? அவர்களில் தங்களை ராஜாக்களாக அலங்கரிப்பவர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தேவனை எதிர்க்கும் இயல்புகள் அனைத்தும் ஒன்றல்லவா? தேவன் அவர்களை இரட்சிக்கவில்லை என்பதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்ல முடியும்? தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர்கள் கூறுவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? அவர்களை அழிப்பது அவர்களின் சொந்தத் தீமை அல்லவா? அவர்களை நரகத்திற்குள் இழுத்துச் செல்வது அவர்களின் சொந்தக் கலகம் அல்லவா? சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் ஜனங்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக இரட்சிக்கப்பட்டு பரிபூரணப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், இறுதியில், சத்தியத்தின் காரணமாக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் கடைப்பிடிக்காதவர்களுக்கும் காத்திருக்கும் முடிவுகள் இவை. சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் திட்டமிடாதவர்கள் இன்னும் அதிகமான பாவங்களைச் செய்யாமல் இருக்க விரைவில் திருச்சபையை விட்டு வெளியேற வேண்டுமென்று நான் அறிவுறுத்துகிறேன். நேரம் வரும்போது, வருத்தப்பட்டு பயனில்லை. குறிப்பாக, குழுக்களை உருவாக்கி, பிளவுகளை உருவாக்குபவர்கள், மற்றும் திருச்சபைக்குள் இருக்கும் உள்ளூர் கொடுமைக்காரர்களும் விரைவில் வெளியேற வேண்டும். தீய ஓநாய்களின் இயல்பைக் கொண்ட இத்தகைய ஜனங்கள் மாறுவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆரம்ப சந்தர்ப்பத்தில் அவர்கள் திருச்சபையைவிட்டு வெளியேறினால், சகோதர சகோதரிகளின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது, இதன் மூலம் தேவனின் தண்டனையைத் தவிர்க்க முடியும். உங்களில் அவர்களுடன் சென்றவர்கள் உங்களைக் குறித்து சிந்திக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சிறப்பாகச் செயல்படுவார்கள். நீங்கள் தீயவர்களுடன் சேர்ந்து திருச்சபையை விட்டு வெளியேறுவீர்களா, அல்லது அங்கேயே இருந்து கீழ்ப்படிதலுடன் பின்பற்றுவீர்களா? இந்தக் காரியத்தை நீங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தேர்வு செய்வதற்கான இந்த ஒரு வாய்ப்பைத் தருகிறேன், உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

முந்தைய: பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்

அடுத்த: தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக