அத்தியாயம் 18

திருச்சபையைக் கட்டுவதென்பது உண்மையில் செய்வதற்கு எளிதான விஷயமல்ல! அதன் கட்டுமானத்தில் நான் என் முழு இருதயத்தையும் ஈடுபடுத்தியுள்ளேன், மேலும், அதை இடிப்பதற்காகச் சாத்தான் அவனால் முடிந்த அனைத்தையும் செய்வான். நீங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு தரிசனம் கொண்ட நபராக இருக்க வேண்டும்; நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, கிறிஸ்துவுக்குச் சாட்சி கூறி, அவரை உயர்த்திப் பிடித்து, எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நீங்கள் சாக்குப் போக்குகளைச் சொல்லக் கூடாது; மாறாக, நீங்கள் நிபந்தனையின்றிக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். நீங்கள் எந்தச் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு, என்னிடமிருந்து வரும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களை எப்படி வழிநடத்தினாலும் நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒரு வாஞ்சையுள்ள ஆவியையும், விஷயங்களை வேறுபடுத்திப் பார்க்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஜனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், மற்றும் அவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது; உங்களின் ஆவிக்குரிய கண்களைப் பிரகாசமாக வைத்திருக்க வேண்டும், மேலும், அனைத்துக் காரியங்களைக் குறித்தும் முழுமையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். என்னைப் போன்ற அதே மனதைக் கொண்ட ஜனங்கள் எனக்குச் சாட்சியாக நின்று, சாத்தானுக்கு எதிரான தீர்க்கமான போரில் போராட வேண்டும். நீங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கவும் வேண்டும், போரில் பங்கேற்கவும் வேண்டும். நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்; நான் உங்களை ஆதரிக்கிறேன், மற்றும் நான் உங்களின் அடைக்கலமாவேன்.

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்களை நீங்களே சுத்திகரித்துக்கொண்டு, ஒரு மாற்றமடைந்த நபராக மாறி, நிலையான சுபாவத்தைக் கொண்டிருப்பதாகும். உங்களின் சுற்றுப்புறம் நன்றாகவோ அல்லது மோசமாகவோ இருந்தாலும் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் என்னைச் சார்ந்திருக்க வேண்டும்; நீங்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது மற்ற எந்தவொரு அமைப்பில் இருந்தாலோ, வேறொருவர் காரணமாகவோ அல்லது சில நிகழ்வுகள் அல்லது பிரச்சனையின் காரணமாகவோ நீங்கள் தடுமாறக்கூடாது. மேலும், நீங்கள் உறுதியாக இருந்து, வழக்கம்போல், கிறிஸ்துவைப் போல் வாழ்ந்து தேவனை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் செயல்பாட்டைச் செய்து, உங்களின் கடமைகளை இயல்பாக நிறைவேற்ற வேண்டும்; இதை ஒரு முறை மட்டும் செய்யக் கூடாது, ஆனால் நீண்ட காலத்திற்குச் செய்ய வேண்டும். நீங்கள் என் இருதயத்தை உங்களுடையது போன்று எடுத்துக் கொள்ள வேண்டும், எனது நோக்கங்கள் உங்களின் சிந்தனைகளாக மாற வேண்டும், முக்கியமான விஷயத்தை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், உங்களிடமிருந்து கிறிஸ்து வெளிப்பட நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும், நீங்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து ஊழியம் செய்ய வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வேகத்திற்கு இணையாகப் பின்தொடர்ந்து, அவரது இரட்சிப்பின் பாதையில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை வெறுமையாக்கி, ஒரு அப்பாவியான, வெளிப்படையான நபராக மாற வேண்டும். உங்களின் சகோதர சகோதரிகளுடன் நீங்கள் ஐக்கியம் கொண்டு இயல்பாக ஈடுபட வேண்டும், ஆவியில் விஷயங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கவும், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், அவர்களின் பெலன்கள் உங்களின் பெலவீனங்களைச் சமநிலைப்படுத்தும்படி அனுமதிக்கவும், மற்றும் திருச்சபைக்குள் கட்டமைக்கப்பட்டிருக்க முயற்சிக்கவும் வேண்டும். அப்போது தான் ராஜ்யத்தில் உங்களுக்கு உண்மையிலேயே பங்கு கிடைக்கும்.

முந்தைய: அத்தியாயம் 17

அடுத்த: அத்தியாயம் 19

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக