தேவன் மீதான உண்மையான அன்பு தானாகத் தோன்றுவது

தேவனுடைய வார்த்தைகளின் நிமித்தமாக சகல ஜனங்களும் சுத்திகரிப்புக்கு ஆளாகியுள்ளனர். தேவன் மாம்சமாகாமல் இருந்திருந்தால், இந்த சுத்திகரிப்பின் மூலமாக மனுக்குலமானது துன்பம் என்னும் ஆசீர்வாதத்தை நிச்சயமாக பெற்றிருக்காது. இதை வேறு விதமாகச் சொன்னால், தேவனுடைய வார்த்தைகளின் நிமித்தம் உபத்திரவங்களை ஏற்றுக்கொள்ளத் திராணியுள்ள எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான். ஜனங்களுடைய இயல்பான திறமை, அவர்களுடைய நடத்தை மற்றும் தேவன் மீதான அவர்களுடைய மனப்பான்மை ஆகியவற்றின் அடிப்படையில், இவ்விதமான சுத்திகரிப்பைப் பெற அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தேவனால் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால், அவர்கள் இந்த ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கின்றனர். தேவனுடைய முகத்தைக் காண்பதற்கோ அல்லது அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கோ அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தனர் என்று ஜனங்கள் சொல்லுவதுண்டு. இன்று, தேவனுடைய மேன்மை மற்றும் அவருடைய இரக்கத்தின் நிமித்தமாகவே அவருடைய வார்த்தைகளின் சுத்திகரிப்பை ஜனங்கள் பெற்றுள்ளனர். கடைசி நாட்களில் பிறந்த ஒவ்வொரு நபரின் ஆசீர்வாதம் இதுவே, நீங்கள் இதைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறீர்களா? ஜனங்கள் எந்த அம்சங்களில் துன்பங்களையும் தடைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டுள்ளன, அது ஜனங்களுடைய சொந்தத் தேவைகளின் அடிப்படையில் அல்ல. இது சந்தேகத்திற்கிடமில்லாத உண்மையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வார்த்தைகளினால் உண்டாகும் உபத்திரவங்களை ஏற்றுக்கொள்ளும் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்குள் துன்பப்படும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இது உங்களுக்குத் தெளிவாக தெரிகிறதா? ஆகவே, நீ அனுபவித்த துன்பங்களுக்கு கைமாறாக, நீ இன்றைய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறாய்; நீ தேவனுக்காகத் துன்பப்படவில்லை என்றால், உன்னால் அவருடைய பாராட்டைப் பெற முடியாது. ஒருவேளை நீ கடந்த காலத்தில் குறை கூறியிருக்கலாம், ஆனால், நீ எவ்வளவு குறை கூறியிருந்தாலும், தேவன் உன்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இன்று வந்துவிட்டது, நேற்றைய விவகாரங்களைக் குறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை.

சிலர் தாங்கள் தேவனை அன்பு செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் சொல்லுகின்றனர். அதன்பின், தேவன் புறப்படப்போகிறார் என்பதை அவர்கள் கேட்கும் போது, அவர்கள் திடீரென்று அவர் மீதான தங்கள் அன்பை உணர்கின்றனர். சிலர் பொதுவாகச் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, தேவன் கோபத்தில் புறப்படப்போகிறார் என்பதை அவர்கள் கேட்கும்போது, அவர்கள் அவருக்கு முன்பாக வந்து ஜெபம் செய்கின்றனர்: “ஓ தேவனே! தயவுசெய்து போகாதிரும். எனக்கு ஒரு வாய்ப்புத் தாரும். தேவனே! கடந்த காலத்தில் நான் உம்மைத் திருப்திப்படுத்தவில்லை; நான் உமக்குக் கடன்பட்டிருக்கிறேன், மேலும் உம்மை எதிர்த்தேன். இன்று என் சரீரத்தையும் இருதயத்தையும் முழுமையாகக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், இதனால் நான் உம்மை இறுதியாகத் திருப்திப்படுத்தவும், உம்மை நேசிக்கவும் கூடும். இந்த வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்காது.” நீ அவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்திருக்கிறாயா? யாராவது இவ்விதமாக ஜெபித்தால், தேவனுடைய வார்த்தைகளால் அவர்களுடைய மனசாட்சி ஏவப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். மனுஷர் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களாகவும், மந்தபுத்தியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் சிட்சிப்புக்கும் சுத்திகரிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள், ஆனால் இதன் மூலம் தேவன் என்ன நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தேவன் இவ்விதமாகக் கிரியை செய்திருக்கவில்லை என்றால், ஜனங்கள் இன்னும் குழப்பத்திலேயே இருந்திருப்பார்கள்; எந்த மனுஷனாலும் ஜனங்களுடைய இருதயங்களில் ஆவிக்குரிய உணர்வுகளைத் தூண்ட இயலாது. ஜனங்களை நியாயந்தீர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் தேவனுடைய வார்த்தைகளால் மட்டுமே அந்தப் பலனைத் தர முடியும். ஆகவே, சகலமும் தேவனுடைய வார்த்தைகளால் அடையப்படுகிறது மற்றும் நிறைவேற்றப்படுகிறது, மேலும் அவருடைய வார்த்தைகளின் நிமித்தமாக மட்டுமே தேவன் மீதான மனுக்குலத்தின் அன்பு தூண்டப்பட்டுள்ளது. மனுஷனுடைய மனச்சாட்சியின் அடிப்படையிலான தேவனுடைய அன்பு மட்டுமே விரும்பிய பலனை அடையாது. கடந்த காலங்களில் ஜனங்கள் தங்களுடைய மனச்சாட்சியின் அடிப்படையில் தேவன் மீதான தங்கள் அன்பைக் கொண்டிருக்கவில்லையா? தன் சொந்த முயற்சியில் தேவனை அன்பு செய்த ஒருவர் உண்டா? தேவனுடைய வார்த்தைகளின் ஊக்கத்தினால் மாத்திரமே ஜனங்கள் தேவனிடத்தில் அன்பு செலுத்தினார்கள். சிலர் சொல்கின்றனர்: “நான் தேவனைப் பல ஆண்டுகளாகப் பின்தொடர்ந்திருக்கிறேன், அவருடைய அளப்பரிய கிருபையையும், பல ஆசீர்வாதங்களையும் அனுபவித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகளிலிருந்து வரும் சுத்திகரிப்புக்கும் நியாயத்தீர்ப்புக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். ஆகவே, நான் அதிகம் புரிந்துகொண்டிருக்கிறேன், தேவனுடைய அன்பைக் கண்டிருக்கிறேன். நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், நான் அவருடைய கிருபையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். நான் மரணத்தின் மூலமாக தேவனை திருப்திப்படுத்துவேன், மேலும் என் மனசாட்சியின் அடிப்படையில் அவர் மீது அன்பு கொண்டிருப்பேன்.” ஜனங்கள் தங்கள் மனச்சாட்சியின் உணர்வுகளை மட்டுமே கேட்டால் தேவனுடைய தயவை அவர்களால் உணர இயலாது. அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியை மட்டுமே நம்பினால், தேவன் மீதான அவர்களுடைய அன்பு பலவீனமானதாக இருக்கும். தேவனுடைய கிருபையையும் அன்பையும் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி மட்டுமே நீ பேசினால், அவர் மீதான உன் அன்பில் உனக்கு எந்த உந்துதலும் இருக்காது; உன் மனசாட்சியினுடைய உணர்வுகளின் அடிப்படையில் அவரை அன்பு செய்வது ஒரு எதிர்மறையான அணுகுமுறையாகும். இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை என்று நான் ஏன் சொல்கிறேன்? இது ஒரு நடைமுறைப் பிரச்சினை. தேவன் மீதான உங்கள் அன்பு எத்தகையது? அது தேவனை முட்டாளாக்குவதாகவும், அவருக்கான நகர்வுகளைக் கடந்து செல்வதாகவும் மட்டுமே இல்லையா? தேவனை நேசிப்பதற்கு எந்த வெகுமதியும் கிடையாது, அவரை அன்பு நேசிக்காததற்காக அதே மாதிரியாக ஒருவர் சிட்சிக்கப்படுவார் என்பதனால், மொத்தத்தில், பாவம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆகையால் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர், தேவனை அன்பு நேசிப்பதும், ஒருவருடைய மனச்சாட்சியின் உணர்வுகளின் அடிப்படையில் அவரது அன்பைத் திருப்பிச் செலுத்துவதும் ஒரு எதிர்மறையான அணுகுமுறையாகும், மேலும் அது தேவன் மீதான அன்பு அல்ல. அது ஒருவருடைய இருதயத்திலிருந்து தானாக வருகிறது. தேவன் மீதான அன்பு என்பது ஒரு நபரின் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஓர் உண்மையான உணர்வாக இருக்க வேண்டும். சிலர் சொல்கின்றனர்: “நான் தேவனைத் தேடவும் அவரைப் பின்பற்றவும் தயாராக இருக்கிறேன். இப்போது தேவன் என்னைக் கைவிட விரும்பினாலும், நான் அவரைப் பின்பற்றுவேன். அவர் என்னை விரும்புகிறாரோ இல்லையோ, நான் இன்னும் அவரை நேசிக்கிறேன், இறுதியில், நான் அவரை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் என் இருதயத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன், அவர் என்ன செய்தாலும், நான் அவரை என் ஆயுள் முழுவதும் பின்பற்றுவேன். எப்படி இருந்தாலும், நான் தேவனை நேசிக்கவேண்டும், நான் அவரை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும்; நான் அவரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் வரை ஓயமாட்டேன்.” உன்னிடம் இந்த மாதிரியான மனவுறுதி உள்ளதா?

தேவனை விசுவாசிக்கும் பாதையும் அவரை நேசிக்கும் பாதையும் ஒன்றே. நீ அவரை விசுவாசித்தால், நீ அவரை நேசிக்கவேண்டும்; ஆனாலும், அவரை நேசிப்பதுஅவருடைய அன்பைத் திருப்பிச் செலுத்துவதையோ அல்லது உன் மனச்சாட்சியினுடைய உணர்வுகளின் அடிப்படையில் அவரை நேசிப்பதையோ குறிக்காது, இது தேவன் மீதான ஒரு சுத்த அன்பாகும். சில நேரங்களில் ஜனங்கள் தங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் மட்டுமே தேவனுடைய அன்பை உணர இயலாது. “தேவனுடைய ஆவியானவர் நமது ஆவிகளை ஏவலாமா?” என்று நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்: தேவனை நேசிக்க ஜனங்களுடைய மனசாட்சியை ஏவுவது பற்றி நான் ஏன் பேசவில்லை? ஏனென்றால், ஜனங்களுடைய மனச்சாட்சியால் தேவனுடைய தயவை உணர முடியாது. இந்த வார்த்தைகளால் நீ திருப்தியாகவில்லை என்றால், அவருடைய அன்பை உணர உன் மனச்சாட்சியைப் பயன்படுத்த முயற்சி செய். இந்த நேரத்தில் உன்னிடம் கொஞ்சம் தூண்டுதல் இருக்கலாம், ஆனால் அது சீக்கிரம் மறைந்துவிடும். உன் மனச்சாட்சியினால் தேவனுடைய தயவை மட்டுமே நீ உணர்ந்தால், நீ ஜெபம் செய்யும்போது தூண்டப்படுவாய், ஆனால் அந்தத் தூண்டுதல் உடனே மங்கி மறைந்துவிடும். அது ஏன்? நீ உன் மனச்சாட்சியை மட்டுமே பயன்படுத்தினால், தேவன் மீதான உன் அன்பைத் தூண்ட முடியாது. நீ உன் இருதயத்தில் தேவனுடைய தயவை உண்மையிலேயே உணரும்போது, உன் ஆவி அவரால் ஏவப்படும், இந்த நேரத்தில் தான் உன் மனச்சாட்சியினால் தன் உண்மையான பங்கை ஆற்ற முடியும். அதாவது, தேவன் மனுஷனுடைய ஆவியை ஏவும் போது, மனுஷனுக்கு அறிவு இருந்து, அவனுடைய இருதயத்தில் ஊக்கமளிக்கப்படும்போது, அதாவது, அவன் அனுபவத்தைப் பெற்றிருக்கும் போதுதான், அவனால் தனது மனச்சாட்சியைக் கொண்டு தேவனைச் சிறப்பாக நேசிக்கமுடியும். உங்கள் மனச்சாட்சியைக் கொண்டு தேவனை நேசிப்பது தவறல்ல. இதுதான் தேவன் மீதான மிகக் குறைந்த அளவிலான அன்பாகும். “தேவனுடைய கிருபைக்கு நீதி செய்வதன் மூலம்” மட்டுமே நேசிப்பது மனுஷனை முன்கூட்டியே பிரவேசிக்கத் தூண்டாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளில் சிலவற்றை ஜனங்கள் பெறும்போது, அதாவது தங்கள் நடைமுறை அனுபவத்தில் தேவனுடைய அன்பை அவர்கள் கண்டு உணரும்போது, அவர்கள் தேவனைப் பற்றிய கொஞ்சம் அறிவைக் கொண்டிருந்து மனுக்குலத்தின் அன்பிற்கு தேவன் மிகவும் தகுதியுள்ளவராக இருக்கிறார் மற்றும் அவர் எவ்வளவு தயவுள்ளவராய் இருக்கிறார் என்பதை உண்மையிலேயே காணும்போதுதான், அவர்களால் தேவனை உண்மையிலேயே நேசிக்க முடிகிறது.

ஜனங்கள் தங்கள் இருதயங்களில் தேவனைத் தொடர்புகொள்ளும்போது, அவர்களுடைய இருதயங்கள் அவரிடம் முழுமையாகத் திரும்ப இயலும்போது, இதுவே தேவன் மீதான மனுஷனுடைய அன்பின் முதல் படியாக இருக்கிறது. நீ தேவனை நேசிக்க விரும்பினால், நீ முதலில் உன் இருதயத்தை அவரிடம் திருப்பத் திராணியுள்ளவனாக இருக்க வேண்டும். உன் இருதயத்தை தேவனிடம் திருப்புவது என்றால் என்ன? நீ உன் இருதயத்தில் நாடும் சகலமும் தேவனை நேசிப்பதற்கும் ஆதாயப்படுத்துவதற்குமே ஆகும். நீ உன் இருதயத்தை தேவனிடம் முழுமையாக திருப்பியிருக்கிறாய் என்பதை இது காண்பிக்கிறது. தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் தவிர, உன் இருதயத்தில் வேறு எதுவும் (குடும்பம், செல்வம், கணவன், மனைவி, குழந்தைகள் போன்றவர்கள்) இல்லை. அப்படி எதுவும் இருந்தாலும், இத்தகைய காரியங்களால் உன் இருதயத்தை ஆக்கிரமிக்க முடியாது, நீ உன் எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்காமல் தேவனை நேசிப்பதை மட்டுமே நாடுவாய். இத்தகைய நேரத்தில் நீ உன் இருதயத்தை தேவனிடம் முழுமையாகத் திருப்பியிருப்பாய். நீ இன்னும் உன் இருதயத்தில் உனக்காகத் திட்டங்களை வகுத்து, எப்போதும் தனிப்பட்ட முறையிலான இலாபத்தையே நாடி, “என்னால் எப்போது தேவனிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தை வைக்க முடியும்? என் குடும்பம் எப்போது செல்வச் செழிப்புள்ளதாக மாறும்? நான் சில நல்ல ஆடைகளைப் பெறுவது எப்படி? …” என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தால், உன் இருதயம் தேவனிடம் முழுமையாகத் திரும்பவில்லை என்பதைக் காட்டும் ஒரு நிலையில் நீ ஜீவித்து வந்தால். உன்னுடைய இருதயத்தில் தேவனுடைய வார்த்தைகள் மட்டுமே இருந்து, உன்னால் அவரிடம் ஜெபிக்கவும், எல்லா நேரங்களிலும் அவருடன் நெருக்கமாகவும் இருக்க முடிந்தால், அவர் உனக்கு மிகவும் அருகிலுள்ளது போலவும், தேவன் உனக்குள் இருப்பது போலவும், நீ அவருக்குள் இருப்பது போலவுமான ஒரு நிலையில் நீ இருந்தால், உன் இருதயம் தேவனுடைய சமூகத்தில் உள்ளது என்று அர்த்தமாகும். நீ தேவனிடம் ஜெபித்து, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, எப்போதும் திருச்சபையின் கிரியையைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பாயானால், தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொண்டு, அவரை உண்மையாக நேசிக்கவும், அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தவும் உன் இருதயத்தை நீ பயன்படுத்துவாயானால், அப்போது உன் இருதயம் தேவனுக்குச் சொந்தமாகும். உன் இருதயமானது வேறு பல காரியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அது இன்னும் சாத்தானால்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அது உண்மையிலேயே தேவனிடம் திரும்பவில்லை. ஒருவருடைய இருதயமானது உண்மையிலேயே தேவனை நோக்கித் திரும்பும்போது, அவர்கள் அவர் மீது உண்மையான, இயல்பான அன்பைக் கொண்டிருப்பார்கள், அவர்களால் தேவனுடைய கிரியையைக் கருத்தில் கொள்ள முடியும். அவர்களிடம் இன்னும் மூடத்தனம் மற்றும் பகுத்தறிவின்மைக்கான தருணங்கள் காணப்பட்டாலும், தேவனுடைய வீட்டின் நலன்கள், அவருடைய கிரியை மற்றும் மனநிலையில் தங்களுடைய சொந்த மாற்றம் ஆகியவற்றில் அவர்கள் அக்கறை காண்பிக்கின்றனர், அவர்களுடைய இருதயம் சரியான இடத்தில் உள்ளது. சிலர் உண்மையில் தங்களுக்கு நன்மைபயக்கவே கிரியை செய்தாலும் தாங்கள் செய்யும் சகலமும் திருச்சபைக்காகவே செய்வதாக எப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியானவர்கள் தவறான உள்நோக்கம் கொண்டுள்ளனர். அவர்கள் கபடமானவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருக்கின்றனர், அவர்கள் செய்யும் பெரும்பாலான காரியங்கள் தங்கள் சொந்த நலனுக்கானதாகவே இருக்கின்றன. இவ்விதமான நபர் தேவனுடைய அன்பை நாடுவதில்லை; அவர்களுடைய இருதயங்கள் இன்னும் சாத்தானுக்குச் சொந்தமானவையாகவும், தேவனை நோக்கித் திரும்ப முடியாதவையாகவும் இருக்கின்றன. அதனால் இவ்விதமான நபரை ஆதாயப்படுத்துவதற்கு தேவனுக்கு எந்த வழியுமில்லை.

நீ மெய்யாகவே தேவனில் அன்பு கூரவும், அவரால் ஆதாயப்படுத்தப்படவும் விரும்பினால், உன் இருதயத்தை முழுவதுமாக தேவனுக்கு நேராகத் திருப்புவதே முதல் படியாகும். நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், உன்னையே தேடி இக்கேள்விகளைக் கேள்: “நான் தேவனில் அன்புகூரும் இருதயத்தின் அடிப்படையில் இதைச் செய்கிறேனா? இதற்குப் பின்னால் தனிப்பட்ட நோக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? இதைச் செய்வதில் எனது உண்மையான குறிக்கோள் என்ன?” நீ உன் இருதயத்தை தேவனிடம் ஒப்படைக்க விரும்பினால், நீ முதலில் உன் சொந்த இருதயத்தை அடக்கவும், உன் சொந்த நோக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு, தேவனுக்காக முழுமையாக இருக்கும் ஒரு நிலையை அடையவும் வேண்டும். இதுதான் உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பதைப் பயிற்சி செய்யும் பாதையாகும். ஒருவரின் சொந்த இருதயத்தை அடக்குவது என்பது எதைக் குறிக்கிறது? இது வசதிக்கும் அந்தஸ்தின் நன்மைகளுக்கும் ஆசைப்படாமல், ஒருவருடைய மாம்சத்தின் ஆடம்பரமான ஆசைகளை விட்டுவிடுவதாகும். இது தேவனை திருப்திப்படுத்தவே சகலத்தையும் செய்கிறது, மேலும் ஒருவருடைய இருதயத்தை தனக்காக அல்லாமல் அவருக்காக முழுமையாக உருவாக்குகிறது. இது போதுமானது.

தேவன் மீதான உண்மையான அன்பானது இருதயத்தின் ஆழத்திலிருந்து வருகிறது. இது தேவனைக் குறித்து மனுஷன் கொண்டுள்ள அறிவின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் ஓர் அன்பாகும். ஒருவருடைய இருதயமானது தேவனை நோக்கி முழுவதுமாகத் திரும்பும் போதுதான், அவர்களிடம் தேவன் மீதான அன்பு உள்ளது, ஆனால் அந்த அன்பு தேவையான அளவு தூய்மையானதும் அல்ல, தேவையான அளவு முழுமையானதும் அல்ல. ஒரு நபருடைய இருதயமானது தேவனை நோக்கி முழுவதுமாகத் திரும்புவதற்கும், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், அவரை உண்மையாக வணங்குவதற்கும் இடையில் இன்னும் கொஞ்சம் இடைவெளி இருப்பதே இதற்குக் காரணமாகும். மனுஷன் தேவனுடைய மெய்யான அன்பை அடைந்து, தேவனுடைய மனநிலையை அறிந்து கொள்ளும் வழியே அவனுடைய இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்புவதாகும். மனுஷன் தனது உண்மையான இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கும்போதுதான், அவன் ஜீவியத்தின் அனுபவத்திற்குள் பிரவேசிக்க ஆரம்பிக்கிறான். இவ்வாறு, அவனுடைய மனநிலையானது மாற ஆரம்பிக்கிறது, தேவன் மீதான அவனுடைய அன்பு படிப்படியாக வளர்கிறது, மேலும் தேவனைக் குறித்த அவனுடைய அறிவும் படிப்படியாக அதிகரிக்கிறது. ஆகவே, ஒருவருடைய இருதயத்தை தேவனிடம் திருப்புவது என்றால் ஜீவிய அனுபவத்தின் சரியான பாதையில் செல்வதற்கான முன் நிபந்தனை மட்டுமேயாகும். ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாக வைக்கும்போது, அவருக்காக ஏங்குகிற ஒரு இருதயத்தை மட்டுமே அவர்கள் கொண்டிருக்கின்றனரே தவிர அவர் மீது அன்பு வைத்திருப்பதில்லை, ஏனென்றால் அவர்களிடம் அவரைப் பற்றிய ஒரு புரிதல் இல்லை. இச்சூழலில் அவர் மீது அவர்களிடம் கொஞ்சம் அன்பு காணப்பட்டாலும், அது இயல்பானதும் அல்ல, அது உண்மையானதும் அல்ல. ஏனென்றால், மனுஷனுடைய மாம்சத்திலிருந்து வரும் எதுவும் உணர்ச்சியின் பலனாகும், அது உண்மையான புரிதலில் இருந்து வருவதில்லை. இது ஒரு கணநேர தூண்டுதல்தான். இது நீண்டகால ஆராதனையை ஏற்படுத்த முடியாது. ஜனங்களிடம் தேவனைக் குறித்த ஒரு புரிதல் இல்லாத போது, தங்கள் சொந்த விருப்பங்கள் மற்றும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அவர்களால் தேவனை அன்பு செய்ய முடியும். இவ்வகையான அன்பை இயல்பான அன்பு என்று அழைக்கவும் முடியாது, மெய்யான அன்பு என்று அழைக்கவும் முடியாது. ஒரு மனுஷனுடைய இருதயம் உண்மையாகவே தேவனிடம் திரும்பலாம், சகலத்திலும் தேவனுடைய நலன்களைப் பற்றி சிந்திக்கும் திராணியுள்ளதாக இருக்கலாம், ஆனால் அவனுக்கு தேவனைப் பற்றிய புரிதல் இல்லையென்றால், அவன் உண்மையிலேயே இயல்பான அன்பைக் கொண்டிருக்கத் தகுதியுள்ளவனாக இருக்க மாட்டான். அவனால் செய்ய முடிவதெல்லாம் திருச்சபைக்கான சில செயல்பாடுகளை நிறைவேற்றுவதோ அல்லது சிறிதளவு அவனது கடமையைச் செய்வதோ ஆகும், ஆனால் அவன் அடிப்படையில்லாமல் அவ்வாறு செய்வான். இவ்வகையான நபரின் மனநிலையை மாற்றுவது கடினமாகும். இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதுமில்லை, அதைப் புரிந்துகொள்வதுமில்லை. ஒருவர் தங்கள் இருதயத்தை முழுவதுமாக தேவனிடம் திருப்பியிருந்தாலும் கூட, தேவனை நேசிக்கும் அவர்களுடைய இருதயம் முற்றிலும் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல, ஏனென்றால் தங்களுடைய இருதயங்களில் தேவனைக் கொண்டிருப்பவர்கள் தங்கள் இருதயங்களில் தேவன் மீது நிச்சயமாகவே அன்பைக் கொண்டிருப்பதில்லை. இது தேவனைப் பற்றிய புரிதலை நாடுகிற அல்லது நாடாத ஒருவருக்கு இடையிலான வேறுபாட்டைக் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஒருவருக்கு அவரைப் பற்றிய ஒரு புரிதல் வந்ததும், அவர்களுடைய இருதயம் முழுவதுமாக தேவனுக்கு நேராகத் திரும்பியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது, அவர்களுடைய இருதயத்தில் காணப்படும் தேவன் மீதான உண்மையான அன்பு இயல்பானது என்பதை இது காட்டுகிறது. இவ்வகையான ஜனங்கள் மட்டுமே தங்கள் இருதயங்களில் தேவனைக் கொண்டிருக்கின்றனர். தேவனுக்கு நேராக ஒருவருடைய இருதயத்தைத் திருப்புவது என்றால் தேவனைப் புரிந்துகொள்வதற்கான, தேவனுடைய அன்பை அடைவதற்கான சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முன்நிபந்தனையாகும். இது தேவனை அன்பு செய்வதற்கு ஒருவருடைய கடமையை நிறைவு செய்வதற்கான ஒரு அளவுகோலும் அல்ல, அவர் மீது உண்மையான அன்பைக் கொண்டிருப்பதற்கான ஒரு அளவுகோலும் அல்ல. யாரேனும் தேவன் மீதான உண்மையான அன்பை அடைவதற்கான ஒரே வழி என்னவென்றால் அவருடைய இருதயத்தை அவருக்கு நேராக திருப்புவதேயாகும், இதுவும் அவருடைய சிருஷ்டிப்புகளில் ஒருவராக செய்ய வேண்டிய முதல் காரியமாகும். தேவனை நேசிக்கிற எல்லோருமே ஜீவனைப் பின்தொடர்கிறவர்களாக இருக்கின்றனர், அதாவது, சத்தியத்தைப் பின்தொடர்கிறவர்களாகவும், மெய்யாகவே தேவனை விரும்புகிறார்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரிடமும் பரிசுத்த ஆவியின் அறிவூட்டுதல் உள்ளது, மேலும் அவர்கள் அவரால் ஏவப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோராலும் தேவனுடைய வழிகாட்டுதலைப் பெற முடிகிறது.

தாங்கள் தேவனுக்கு கடன்பட்டிருப்பதாக யாராவது உணர முடிந்தால், அவர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டுள்ளனர் என்பதே இதற்குக் காரணமாகும். இவ்விதமாக உணரக்கூடியவர்கள் ஏங்குகிற ஓர் இருதயத்தைக் கொண்டிருக்க முற்படுகின்றனர், மேலும் அவர்களால் ஜீவனுக்குள் பிரவேசிப்பதைப் பின்தொடர முடிகிறது. ஆனால் நீ ஒரு குறிப்பிட்ட படியில் நிறுத்தினால், உன்னால் ஆழமாகச் செல்ல முடியாது; சாத்தானுடைய வலையில் சிக்குவதற்கான ஆபத்து இன்னும் உள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவும், அதனைத் தொடர்ந்து தாங்கள் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதை உணருவதற்கும் தேவனுடைய ஒளி அவர்களை அனுமதிக்கிறது. அவருடன் ஒத்துழைப்பதற்கு அவர்கள் விருப்பமுள்ளவர்களாகி, அவரைப் பிரியப்படுத்தாத காரியங்களை விட்டுவிடுகின்றனர். இதுதான் தேவனுடைய கிரியையைக் குறித்த கொள்கையாகும். நீ உன் ஜீவிதங்களில் மற்றும் தேவனுடைய அன்பில் வளர்வதையே நாட விரும்புகிறாய், அதனால் நீ உன் மேலோட்டமான வழிகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறாயா? நீ மேலோட்டமான வழிகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு, சீர்குலைவான மற்றும் பெருமையான நடத்தையிலிருந்து விலகி இருந்தால், அது உண்மையில் உன் ஜீவியத்தில் வளர்வதை பின்தொடர்வதாகுமா? நீ உன் மேலோட்டமான நடத்தைகள் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு, ஆனாலும் தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்கவில்லை என்றால், நீ தீவிரமாக முன்னேற்றமடையவில்லை என்பதை இது காண்பிக்கிறது. மேலோட்டமான நடத்தைக்கான மூலக் காரணம் என்ன? உன் ஜீவியத்தில் வளரும் பொருட்டு உன் நடவடிக்கைகள் உள்ளனவா? தேவனுடைய ஜனங்களில் ஒருவனாக நீ தேர்ச்சி பெறுவதை நாடுகிறாயா? நீ எதில் கவனம் செலுத்துகிறாயோ அதிலேயே நீ ஜீவிப்பாய். நீ மேலோட்டமான நடத்தையில் கவனம் செலுத்தினால், அப்போது உன் இருதயம் பெரும்பாலும் வெளிப்புறமாக இழுக்கப்படும், உன் ஜீவியத்தில் வளர்வதற்கு உனக்கு எந்த வழியும் இருக்காது. தேவன் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கேட்கிறார், ஆனால் நீ எப்போதும் வெளிப்புற காரியங்களையே நாடுகிறாய். இவ்வகையான நபரால் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள இயலாது! ஜீவிதத்தில் முதிர்ச்சியை அடைவதற்கான செயல்முறையில், எல்லோரும் ஒரு வழியைப் பின்பற்ற வேண்டும்: அவர்கள் நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும், தேவனுடைய வார்த்தைகளின் பரிபூரணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உன்னிடம் தேவனுடைய வார்த்தைகள் இல்லாமல், நீ உன் சொந்த நம்பிக்கை மற்றும் விருப்பத்தை மட்டுமே நம்பியிருந்தால், நீ செய்கிற அனைத்தும் ஆர்வத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதாவது, உன் ஜீவிதத்தில் நீ வளர்ச்சியை விரும்பினால், நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவும், அதிகமாகப் புரிந்துகொள்ளவும் வேண்டும். அவருடைய வார்த்தைகளால் பரிபூரணமாக்கப்பட்ட எல்லோராலும் அவற்றில் ஜீவிக்க இயலும். அவருடைய வார்த்தைகளின் சுத்திகரிப்புக்கு உள்ளாகாதவர்களும், அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாதவர்களும் அவரால் பயன்படுத்தப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், நீ அவருடைய வார்த்தைகளில் எந்த அளவிற்கு ஜீவிக்கிறாய்? தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணவும், உன் சொந்த ஜீவிய நிலையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, நான் உருவாக்கிய பிரச்சினைகளின் வெளிச்சத்தில் ஒரு நடைமுறைப் பாதையைக் கண்டுபிடித்தால், உங்கள் நடைமுறையானது சரியானதாகவும் தேவனுடைய சித்தத்திற்கு இணக்கமானதாகவும் இருக்கும். இவ்வகையான நடைமுறையைக் கொண்டுள்ள ஒருவரிடம் மட்டுமே தேவனை அன்பு செய்வதற்கான விருப்பம் உள்ளது.

முந்தைய: தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்

அடுத்த: ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக