அத்தியாயம் 86

நான் இரக்கமுள்ள தேவன் என்று ஜனங்கள் சொல்கிறார்கள்; நான் சிருஷ்டித்த அனைவருக்கும் இரட்சிப்பை அளிப்பேன் என்று அவர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் மனிதக் கருத்துகளின் அடிப்படையில் கூறப்படுகின்றன. நான் இரக்கமுள்ள தேவன் என்று என் முதற்பேறான குமாரர்களுக்குச் சொல்லப்படுகின்றன, மேலும் நான் அனைவருக்கும் இரட்சிப்பை அளிப்பேன் என்று என் குமாரர்களுக்கும் என் ஜனங்களுக்கும் கூறப்படுகின்றன. நான் ஞானமுள்ள தேவன் என்பதால், நான் யாரை நேசிக்கிறேன், யாரை வெறுக்கிறேன் என்பது எனது சிந்தையில் தெளிவாக உள்ளது. நான் யாரை நேசிக்கிறேனோ, நான் அவர்களை இறுதி வரை நேசிப்பேன், அந்த அன்பு என்றும் மாறாது. நான் வெறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எவ்வளவு நன்றாக நடந்து கொண்டாலும், நான் சிறிதும் அசைவதில்லை. ஏனென்றால், அவர்கள் என் மூலம் பிறக்கவில்லை, எனது பண்புகளையோ அல்லது என் ஜீவனையோ கொண்டிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் என்னால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்படவில்லை—ஏனென்றால் நான் ஒருபோதும் தவறிழைக்காதவர். அதாவது, எனது கிரியைகள் அனைத்தும் பரிசுத்தமானவை மற்றும் மேன்மையுள்ளவை என்று அழைக்கப்படுகின்றன, மேலும் நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை. ஜனங்களின் பார்வையில், நான் மிகவும் கொடுமையானவன்—ஆனால், நானே நீதியுள்ள மற்றும் மகத்துவமுள்ள தேவன் என்பதை நீ உணரவில்லையா? என்னுடையது அனைத்தும் சரியானது; நான் வெறுக்கிறவர்கள் நிச்சயமாக என் சாபங்களைப் பெறுவார்கள், நான் நேசிக்கிறவர்கள் நிச்சயமாக என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இது எனது பரிசுத்தமான மற்றும் மீறக்கூடாத மனநிலை, இதை யாராலும் மாற்ற முடியாது. இது முழுமையானது!

இன்று, உண்மையாக எனது நோக்கங்களுக்கு ஏற்ப இருப்பவர்கள் நிச்சயமாக என்னால் முழுமையாக்கப்படுவார்கள், ஏனென்றால் எனது கிரியை நேர்மையானது மற்றும் சம்பூரணமானது, மேலும் நான் எதையும் முடிக்காமல் விடவில்லை. நான் சபிக்கிறவர்கள் எரிக்கப்படுவார்கள். அப்படியானால், பெரும்பான்மையான ஜனங்கள் என்னால் சபிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அவர்கள் மீது தம் கிரியையைச் செய்துகொண்டிருப்பது ஏன் (இது ஒரு அசுத்தமான ஆலயத்தில் நான் வாசம் செய்யமாட்டேன் என்பது குறித்து கூறப்பட்டது)? எல்லா விஷயங்களும் எல்லா பொருட்களும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றன என்று சொல்வதன் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? நான் அவர்களின் ஊழியத்தைப் பயன்படுத்தும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலம் அவருடைய கிரியையைச் செய்கிறார், ஆனால் சாதாரணமாக, அவர்கள் எனது ஊழியத்தில் இல்லாத போது, அவர்கள் அடிப்படையில் ஆவிக்குரிய ரீதியில் பிரகாசிப்பிக்கப்படுவதில்லை. அவர்கள் தேடினாலும், அவர்கள் அதை வைராக்கியத்தால் செய்கிறார்கள், இது சாத்தானின் சூழ்ச்சியாகும்—ஏனென்றால் சாதாரண நேரங்களில், அவர்கள் எனது கிரியைக்குச் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை மற்றும் எனது பாரங்களைக் குறித்து முற்றிலும் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்போது எனது முதற்பேறான குமாரர்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டதால், நான் அவர்களை விரட்டுகிறேன்; இந்த காரணத்திற்காக, எனது ஆவி எல்லா இடங்களிலுமிருந்தும் விலக்கப்பட்டு, எனது முதற்பேறான குமாரர்களுக்கு விசேஷமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உங்களுக்குப் புரிகிறதா? அனைத்தும் எனது கிரியைகளையும், எனது முன்குறித்தல்களையும் மற்றும் எனது வாயிலிருந்து புறப்படும் எல்லா வார்த்தைகளையும் சார்ந்துள்ளது. எனது ஆசீர்வாதங்களைப் பெற்ற அனைத்து இடங்களும் அவசியம் நான் கிரியை செய்யும் மற்றும் எனது கிரியை மேற்கொள்ளப்படும் இடங்களாகும். சாத்தானை அதிகம் வழிபடும் நாடு சீனா, அதனாலேயே அது என்னால் சபிக்கப்பட்டது. மேலும், என்னைத் துன்புறுத்த அதிகமாகச் செய்த தேசமும் அது தான். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஜனங்கள் மீது நிச்சயமாக நான் எனது கிரியையைச் செய்ய மாட்டேன். எனது வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் புரிகிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக, என் குமாரர்களும் என் ஜனங்களுமாக இருப்பவர்கள் சிலரே. முற்றிலும் எல்லாம் எனது கரங்களில் உள்ளன; என்னால் தெரிந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டவர்கள் மீது ஆற்றல் செலுத்தப்பட்டு, அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எனது முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் விரைந்து செயல்பட வேண்டும், இதனால் அவர்கள் கூடிய சீக்கிரத்தில் எனது பாரங்களில் பங்கெடுத்து, எனது கிரியைக்காக அவர்களின் அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிக்க முடியும்.

எனக்காக ஊழியம் செய்பவர்களே, கேளுங்கள்! எனக்காக ஊழியம் செய்யும்போது எனது சில கிருபையைப் பெறுவீர்கள். அதாவது, எனது நடக்கவிருக்கும் கிரியை மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நீங்கள், தற்காலிகமாக, அறிவீர்கள்—ஆனால் நீங்கள் அவற்றை நிச்சயமாக விரும்ப மாட்டீர்கள். இது எனது கிருபை. உங்கள் ஊழியம் முடிந்ததும், தாமதிக்காமல், உடனடியாக வெளியேறுங்கள். உங்களில் எனது முதற்பேறான குமாரர்களாக இருப்பவர்கள் கர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டாம், ஆனால் நீங்கள் பெருமைப்படலாம், ஏனென்றால் நான் உங்களுக்கு முடிவில்லா ஆசீர்வாதங்களை அளித்துள்ளேன். உங்களில் அழிவுக்கு இலக்குகளாக இருப்பவர்கள் உங்கள் மீது பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்ளவோ, உங்கள் விதியை நினைத்து வருத்தப்படவோ கூடாது. நீ சாத்தானின் சந்ததி அல்லவா? எனக்காக உனது ஊழியத்தைச் செய்தபின், நீ பாதாளக்குழிக்குத் திரும்பலாம், ஏனென்றால் உன்னால் இனி எனக்கு எந்தப் பயனும் இல்லை. பின்னர் நான் எனது சிட்சையால் உங்ககளைக் கையாளத் தொடங்குவேன். நான் கிரியை செய்யத் தொடங்கியதும், நான் அதன் முடிவுவரை தொடருவேன்; எனது கிரியைகள் நிறைவேறும், எனது செயல் நிறைவேற்றல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். இவை அனைத்தும் எனது முதற்பேறான குமாரர்கள், என் குமாரர்கள் மற்றும் என் ஜனங்களுக்குப் பொருந்தும், மேலும் இது உங்களுக்கும் பொருந்தும்: உங்களைப் பற்றிய என் சிட்சைகள் நித்தியமாய் இருக்கும். என்னை எதிர்க்கும் பொல்லாதவர்கள் நிச்சயமாக என்னால் சிட்சிக்கப்படுவார்கள் என்று நான் உங்களிடம் முன்பு பலமுறை கூறியுள்ளேன். நீ என்னை எதிர்த்த பிறகு பரிசுத்த ஆவியானவரால் நீ கண்டிக்கப்படாவிட்டால், நீ ஏற்கனவே சபிக்கப்பட்டிருக்கிறாய், அதன் பிறகு நீ எனது கரத்தால் அழிக்கப்படுவாய். நீ என்னைப் பற்றி கெட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கும் போது பரிசுத்த ஆவியானவரால் நீ தண்டித்துத் திருத்தப்பட்டால், நீ என்னுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறாய்; இருப்பினும், நீ எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும், ஒருபோதும் அலட்சியமாகவோ, மற்றும் ஒருபோதும் கவனக்குறைவாகவோ இருக்கக் கூடாது.

முந்தைய: அத்தியாயம் 85

அடுத்த: அத்தியாயம் 87

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக