அத்தியாயம் 90

குருடராய் இருக்கும் எல்லோரும் என்னை விட்டு அகன்று போகவேண்டும், இனி ஒரு நொடி கூட இருக்கக் கூடாது, ஏனெனில் என்னை அறிந்து கொள்ளக் கூடியவர்களும், என்னைப் பார்க்கக் கூடியவர்களும் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் அடையக் கூடியவர்களும் மட்டுமே எனக்குத் தேவை. மேலும் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் யாரால் அடைய முடியும்? மிகவும் நிச்சயமாக இந்த வகையானவர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர் மேலும் அவர்கள் உறுதியாக என் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். நான் இந்த ஜனங்களை நேசிக்கிறேன். நான் அவர்களை ஒவ்வொருவராக என் வலது கரமாகவும் என் வெளிப்பாடாகவும் இருப்பதற்காகத் தெரிந்தெடுப்பேன். இந்த ஜனங்களுக்காக எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் இடைவிடாமல் என்னைப் புகழவும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கவும் செய்வேன். ஓ, சீயோன் மலையே! ஜெயக்கொடியை ஏற்றி எனக்காக ஆர்ப்பரி! ஏனென்றால் இங்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னால், மலைகள், நதிகள் மற்றும் எல்லாவற்றின் ஒவ்வொரு மூலையையும் கடந்து நான் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் கடைசி மட்டும் செல்லுவேன். நீதியோடும், நியாயத்தீர்ப்போடும், கோபத்தோடும், எரிச்சலோடும் இன்னும் கூட என் முதல்பேறான குமாரர்களோடும் நான் ஜெயத்துடன் திரும்பி வருவேன். நான் வெறுக்கும் எல்லா விஷயங்களையும் எல்லா ஜனங்களையும், வஸ்துக்களையும், நான் அருவருக்கும் பொருட்களையும் தூரமாயத் எறிந்து விடுவேன். நான் ஜெயங்கொண்டவர் மேலும் நான் விரும்பிய எல்லாவற்றையும் முடித்து விட்டேன். நான் என் கிரியைகளை நிறைவேற்றவில்லை என்று யார் சொல்லத் துணிவான்? நான் என் முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்தவில்லை என்று சொல்லத் துணிபவன் யார்? நான் ஜெயத்தோடு திரும்பி வரவில்லை என்று சொல்லத் துணிபவன் யார்? அத்தகைய ஜனங்கள் நிச்சயமாக சாத்தான் போன்றவர்களே; அவர்கள் எனது மன்னிப்பைப் பெற கஷ்டப்படுபவவர்கள். அவர்கள் குருடர்கள், அவர்கள் இழிவானப் பிசாசுகள், நான் அவர்களை மிகவும் வெறுக்கிறேன். இந்த விஷயங்களின் மீது நான் என்னுடைய உக்கிரத்தையும் என் நியாயத்தீர்ப்பின் முழுமையையும் வெளிப்படுத்தத் தொடங்குவேன், மேலும், என் எரியும் அக்கினியைக் கொண்டு, பிரபஞ்சத்தையும் பூமியின் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரைக்கும் நெருப்பை மூட்டி, ஒவ்வொரு மூலையையும் ஒளியூட்டுவேன்—இதுவே என் ஆட்சிமுறை ஆணை.

என் வார்த்தைகளை நீங்கள் புரிந்து கொண்டவுடன், நீங்கள் அவற்றில் இருந்து ஆறுதலைப் பெற வேண்டும்; கேட்காமல் அவற்றை நீங்கள் கடந்து போக விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பின் பேச்சுக்கள் நிகழ்கின்றன, ஆகையால் நீங்கள் ஏன் மந்த புத்தியோடும் செயலற்றும் இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் என்னுடன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் நரகத்துக்குச் செல்ல மிகவும் விருப்பத்துடன் இருக்கிறீர்களோ? நான் என் முதல் பேறான குமாரர்களுக்கு, என் குமாரர்களுக்கு மற்றும் என் ஜனங்களுக்கு இரக்கமுள்ள தேவனாய் இருக்கிறேன் என்று நான் கூறுகிறேன், ஆகையால் இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ளுகிறீர்கள்? இது ஒரு சாதாரண அறிக்கை அல்ல, மேலும் இதை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் இருந்து விளங்கிக் கொள்ள வேண்டும். ஓ, குருடர்களான மனுக்குலமே! நீங்கள் என் வாக்குத்தத்தத்தை அடையும்படி சாத்தானின் பிடியில் இருந்தும், சிட்சையில் இருந்தும் வெளிக்கொண்டுவந்து நான் உங்களைப் பலமுறை இரட்சித்து விட்டேன். இருந்தாலும் நீங்கள் ஏன் என் இருதயத்துக்காக எந்த ஒரு சிரத்தையையும் காட்டவில்லை? இந்த வகையில் உங்களில் யாரொருவதாவது இரட்சிக்கப்பட முடியுமா? என்னுடைய நீதி, மகத்துவம் மற்றும் நியாயத்தீர்ப்பு சாத்தானுக்கு எந்த ஒரு இரக்கமும் காட்டாது. ஆனால் உங்களைப் பொறுத்த வரையில், இந்த விஷயங்களின் நோக்கம் உங்களை இரட்சிப்பதே, ஆனாலும் நீங்கள் என் மனநிலையைப் புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாக இருக்கிறீர்கள், மேலும் என்னுடைய செயல்களுக்குப் பின் இருக்கும் கொள்கைகளும் உங்களுக்குத் தெரியவில்லை. என்னுடைய பல்வேறு செயல்களில் இருக்கும் கடுமைகளை நான் வேறுபடுத்துவதில்லை என்றும் என்னுடைய செயல்களின் இலக்குகளுக்கு இடையில் நான் எந்த வேறுபாடுகளையும் காட்டுவதில்லை என்றும் நீங்கள் நினைத்தீர்கள்—எவ்வளவு அறியாமை! எல்லா ஜனங்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் என்னால் தெளிவாகப் பார்க்க முடியும். ஒவ்வொரு மனுஷனின் சாராம்சத்தையும் முழுத் தெளிவோடு நான் புரிந்து கொள்கிறேன், அதாவது ஒருவன் தனக்குள் வைத்திருக்கும் விஷயங்களை நான் ஊடுருவிப் பார்க்கிறேன். ஒரு நபர் யேசபேலா அல்லது ஒரு விபச்சாரியா என்று என்னால் தெளிவாகப் பார்க்க முடியும், மேலும் யார் இரகசியமாக என்ன செய்கிறார்கள் என்று நான் அறிவேன். நீசனே, என் முன்னால் உன் மயக்குவித்தைகளை அரங்கேற்றாதே! இப்போதே இங்கிருந்து ஓடிப்போ! அதனால் என் நாமத்துக்கு அவமானம் வருவதைத் தவிர்க்க, இத்தகைய நபரை நான் எதற்கும் பயன்படுத்துவதில்லை! அவர்களால் என் நாமத்துக்குச் சாட்சி அளிக்க முடியாது, ஆனால் அதற்கு மாறாக எதிர்விளைவாகச் செயல்பட்டு என் குடும்பத்துக்கு நிந்தையைக் கொண்டு வருகிறார்கள்! அவர்கள் என் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் எனக்குத் தேவையில்லை. ஒரு நொடி தாமதத்தைக் கூட நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்! அவர்கள் எப்படித் தேடினாலும் சரி, அந்த ஜனங்களுக்கு அது வீணே, ஏனெனில் என் ராஜ்யத்தில் எல்லோரும் எந்த வகையிலும் பரிசுத்தமாகவும் குற்றமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். யாராவது ஒருவரை நான் வேண்டாம் என்று கூறினால்—அதில் என் சொந்த ஜனங்கள் அடங்கி இருந்தாலும்—நான் கூறியது கூறியதே; நான் என் மனதை மாற்றிக் கொள்ள காத்திருக்க வேண்டாம். இதற்கு முன்னால் நீ எனக்கு எவ்வளவு நல்லவனாக இருந்தாய் என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை!

ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன். நான் பேசும் முறை உங்களுக்குத் தெரியுமா? எதன் அடிப்படையில் நான் என் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்? உங்களுக்குத் தெரியுமா? சரியான நேரத்தில் வழங்கும் தேவன் என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள், ஆகவே இந்த அம்சங்களை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ளுகிறீர்கள்? என் கிரியையின் கட்டங்களுக்கு ஏற்ப நான் என் இரகசியங்களை ஒவ்வொன்றாக உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன், மேலும் என் திட்டத்துக்கு ஏற்ப, மேலும் அதிகமாக, உங்களுடைய உண்மையான வளர்ச்சிக்கு ஏற்ப நான் உங்களுக்கு வழங்குகிறேன் (என் ஏற்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம், அது ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் குறிக்கிறது). நான் பேசும் விதம் இப்படியாகும்: என் வீட்டில் இருக்கும் ஜனங்களுக்கு நான் ஆறுதலை அளிக்கிறேன்—நான் அவர்களுக்கு வழங்குகிறேன் மற்றும் அவர்களை நியாயந்தீர்க்கிறேன்; சாத்தானுக்கு நான் எள்ளளவும் இரக்கம் காட்டுவதில்லை, மேலும் யாவும் உக்கிரமும் எரிபந்தமும்தான். நான் முன்குறிக்காதவர்களை அல்லது தெரிந்துகொள்ளாதவர்களை என் வீட்டில் இருந்து புறம்பே தள்ள என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை நான் பயன்படுத்துவேன். கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் அசல் வடிவங்களைக் வெளிப்படுத்தும்படி செய்த பின் (முடிவு வரும்போது என் குமாரர்களுக்கு அவர்கள் சேவை செய்த பிறகு) அவர்கள் பாதாளத்துக்குத் திரும்பி வருவார்கள், இல்லையென்றால் நான் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டேன் மற்றும் ஒருபோதும் விட்டுவிட மாட்டேன். ஜனங்கள் எப்போதும் நரகத்தையும் பாதாளத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் எதைக் குறிக்கின்றன, மேலும் அவற்றிற்கு இடையிலான வித்தியாசம் என்ன? அவை உண்மையில் ஏதோ குளிர்ந்த, இருண்ட மூலையைக் குறிக்கின்றனவா? தங்களின் சொந்தச் சீரற்ற சிந்தனைகள் முற்றிலும் சிறந்தது என்று நினைத்து, மனுஷ மனங்கள் எப்போதும் என் நிர்வாகத்துக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கின்றன! ஆனால் இவை எல்லாம் அவர்களின் சொந்தக் கற்பனைகளேயன்றி வேறில்லை. முன்னர் சாத்தான் அல்லது அசுத்த ஆவிகள் வாழ்ந்த அசுத்தத்தின் கோவில்களே பாதாளமும் நரகமும். அதாவது, முன்னர் சாத்தானாலும் அசுத்த ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தவர்களே—அவர்களே பாதாளமும் நரகமுமாய் இருக்கிறார்கள்—இதில் தவறு ஏதும் இல்லை! அதனால் தான் கடந்த காலத்தில் நான் திரும்பத் திரும்ப ஓர் அசுத்தமான கோவிலில் நான் ஜீவிப்பதில்லை என்று வலியுறுத்தி வந்தேன். என்னால் (தேவன் தாமே) பாதாளத்தில் அல்லது நரகத்தில் ஜீவிக்க முடியுமா? அது அபத்தமான முட்டாள்தனமாக இருக்காதா? நான் இதைப் பலமுறை கூறி விட்டேன், ஆனால் நீங்கள் நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிந்து கொள்ளவில்லை. நரகத்தோடு ஒப்பிடும்போது, பாதாளம் சாத்தானால் மிகக் கடுமையாக சீர்கெடுக்கப்பட்டுள்ளது. பாதாளத்துக்காக இருப்பவர்கள் மிகவும் கடுமையான நிலையில் இருப்பவர்கள், மேலும் நான் இந்த ஜனங்களை முன்குறிக்கவே இல்லை; நரகத்துக்குச் செல்ல இருப்பவர்கள் என்னால் முன்குறிக்கப்பட்டவர்கள், பின்னர் புறம்பாக்கப்பட்டவர்கள். எளிமையாகக் கூறினால், நான் இவர்களில் ஒருவரைக் கூடத் தெரிந்தெடுக்கவில்லை.

என் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதில் அடிக்கடி ஜனங்கள் திறமை வாய்ந்தவர்களாய் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். நான் தெளிவாகச் சுட்டிக்காட்டி கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்களைத் தெளிவுபடுத்தவில்லை என்றால் உங்கள் மத்தியில் யார் புரிந்து கொள்ளுவீர்கள்? நான் பேசும் வார்த்தைகளைக்கூட நீங்கள் பாதியளவே விசுவாசிக்கிறீர்கள், முன்னர் குறிப்பிடப்பட்ட விஷயங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போது, எல்லா தேசங்களுக்குள்ளும் உட்தகராறுகள் தொடங்கி விட்டன: தொழிலாளர்கள் தலைவர்களோடு, மாணவர்கள் ஆசிரியர்களோடு, குடிமக்கள் அரசு அதிகாரிகளோடு தகறாறு செய்கிறார்கள், மேலும் இத்தகைய அமைதியின்மையை உருவாக்குகிற காரியங்கள் எல்லாம் முதலில் ஒவ்வொரு தேசங்களுக்குள்ளும் எழுகின்றன, மேலும் இவையெல்லாம் எனக்காகச் செய்யப்படும் சேவையின் ஒரு பகுதிதான். இந்த விஷயங்கள் மூலம் எனக்குச் சேவை செய்யப்படுவதாக நான் ஏன் கூறுகிறேன்? ஜனங்களின் துரதிர்ஷ்டத்தில் நான் இன்பம் காண்கிறேனா? கேளாதவாறு எதையும் செய்யாமல் நான் அமர்ந்திருக்கிறேனா? நிச்சயமாக இல்லை! ஏனெனில் இது சாத்தான் தனது மரணாவஸ்தையினால் கடுமையாகத் தாங்குவதுதான், மேலும் இவையனைத்தின் நோக்கமெல்லாம் எதிர்மறையை வசப்படுத்தி என்னுடைய வல்லமைக்கும் எனது அதிசய செயல்களுக்கும் பிரதிபலிப்புப் படலமாக செயல்பட வைப்பது தான். இவை எல்லாம் எனக்கு வலிமையான சாட்சியாக இருக்கின்றன, மேலும் சாத்தானைத் தாக்க ஓர் ஆயுதமாகவும் இருக்கிறது. உலகின் எல்லா தேசங்களும் நிலத்துக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, என்னுடைய முதற்பேறான குமாரர்களும் நானும் ராஜாக்களாக ஆளுகை செய்து அவர்களைக் கையாளுவோம், மற்றும் அது அவர்களது கற்பனைக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாக இருக்கும், இந்த வெறுக்கத்தக்க சுற்றுச்சூழலின் நிலையில், என் ராஜ்யம் மனுஷர்களின் மத்தியில் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படும் மேலும், அவர்கள் அதிகாரத்துக்குப் போட்டியிட்டு மற்றவர்களை நியாயந்தீர்க்க விரும்பும்போது, மற்றவர்களும் அவர்களை நியாயந்தீர்க்கும்போது அவர்கள் என் கோபத்தால் எரிக்கப்படுகிறார்கள்—எவ்வளவு பரிதாபகரமானது! எவ்வளவு பரிதாபகரமானது! என் ராஜ்யம் மனிதர்களின் மத்தியில் ஸ்தாபிக்கப்படுகிறது—எத்தகைய மகத்தான நிகழ்ச்சி இது!

மனுஷர்களாக (என்னுடைய ராஜ்யத்தின் ஜனங்களாகவோ அல்லது சாத்தானின் சந்ததியாகவோ), நீங்கள் எல்லோரும் என் அதிசயமானச் செயல்களைக் காண வேண்டும், இல்லையெனில் நான் இந்த விஷயத்தை முடிக்க மாட்டேன். நீ என்னுடைய நியாத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ள விருப்பமாக இருந்தாலும், நீங்கள் என் அதிசயச் செயல்களைக் காணாவிட்டால் அது நடக்காது. எல்லா ஜனங்களும் இருதயத்தாலும், வார்த்தையாலும், காட்சியாலும் நம்ப வேண்டும், மேலும் ஒருவர் கூட லேசாக விடப்படமாட்டார்கள். எல்லா ஜனங்களும் என்னை மகிமைப்படுத்த வேண்டும். கடைசியில், நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் எழுந்து என் வெற்றிக்காக என்னைத் துதிக்கும்படி செய்வேன். இதுவே என் ஆட்சிமுறை ஆணை—அதை நீ நினைவில் கொள்வாயா? எல்லா ஜனங்களும் முடிவில்லாமல் என்னைத் துதித்து எனக்கு மகிமை செலுத்த வேண்டும்!

முந்தைய: அத்தியாயம் 89

அடுத்த: அத்தியாயம் 91

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக