தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்

மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் எவ்வளவாக இருக்கிறது, மனுஷனின் அனுபவம் எவ்வளவாக இருக்கிறது? இந்தக் கேள்விகளை ஜனங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறலாம், அதற்கான காரணம் அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான். “மனுஷனின் கிரியை” என்று நான் கூறும்போது, நான் நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டவர்களின் அல்லது பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களின் கிரியையைக் குறிப்பிடுகிறேன். நான் மனுஷனின் விருப்பத்திலிருந்து தோன்றும் கிரியையைக் குறிப்பிடவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் எல்லைக்குள் வரும் அப்போஸ்தலர்கள், ஊழியக்காரர்கள் அல்லது சாதாரண சகோதர சகோதரிகளின் கிரியையைக் குறிப்பிடுகிறேன். இங்கே, “மனுஷனின் கிரியை” என்பது மாம்சமாகிய தேவனின் கிரியையைக் குறிப்பிடவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஜனங்கள் மீது செய்யும் கிரியையின் நோக்கம் மற்றும் கொள்கைகளைக் குறிப்பிடுகிறது. இந்தக் கொள்கைகள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கொள்கைகள் மற்றும் நோக்கம்தான் என்றாலும், அவையும் மாம்சமாகிய தேவனின் கொள்கைகளும் நோக்கமும் ஒன்றல்ல. மனுஷனின் கிரியையானது மனுஷனின் சாராம்சம் மற்றும் கொள்கைகளைக் கொண்டுள்ளது, மேலும் தேவனின் கிரியையானது தேவனின் சாராம்சம் மற்றும் கொள்கைகளைக் கொண்டுள்ளது.

பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கும் கிரியையானது, அது தேவனின் சொந்தக் கிரியை அல்லது பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை என எதுவாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான். தேவனின் சாராம்சமாக இருப்பவர் ஆவியானவர்தான், இவரை பரிசுத்த ஆவியானவர் அல்லது ஏழு மடங்கு தீவிரப்படுத்தப்பட்ட ஆவியானவர் என்று அழைக்கலாம். மொத்தத்தில், தேவனுடைய ஆவியானவர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாமங்களில் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் தேவனுடைய ஆவியானவர்தான். அவர்களின் சாராம்சம் இன்னும் ஒன்றுதான். ஆகையால், தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான், அதே சமயம் மாம்சமாகிய தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியையை விடக் குறைவானதல்ல. பயன்படுத்தப்படுபவர்களின் கிரியையும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைதான். ஆயினும், தேவனின் கிரியையானது பரிசுத்த ஆவியானவரின் முழுமையான வெளிப்பாடாக இருக்கிறது, இது முற்றிலும் உண்மை, அதேசமயம் பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியையானது மனுஷன் தொடர்பான பல விஷயங்களுடன் கலக்கப்படுகிறது, மேலும் அது பரிசுத்த ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாக இருப்பதில்லை, அவருடைய முழுமையான வெளிப்பாடாகவும் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை மாறுபட்டதாக இருக்கிறது, மேலும் எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாததாக இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை வெவ்வேறு ஜனங்களில் வேறுபடுகிறது; இது வெவ்வேறு சாராம்சங்களை வெளிப்படுத்துகிறது, மேலும் இது காலம் மற்றும் தேசத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது. நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர் பல வழிகளில் மற்றும் பல கொள்கைகளின்படி கிரியை செய்கிறார் என்றாலும், கிரியை எவ்வாறு செய்யப்படுகிறது அல்லது எந்த வகையான ஜனங்கள் மீது செய்யப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், அதன் சாராம்சம் எப்போதும் வேறுபட்டதாக இருக்கிறது; வெவ்வேறு ஜனங்கள் மீது செய்யப்படும் அனைத்து கிரியைகளும் அவற்றின் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை அனைத்தும் அவற்றினுடைய பொருட்களின் சாராம்சத்தைக் குறிக்கின்றன. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையானது குறிப்பிட்ட எல்லை கொண்டதாகவும் மற்றும் அளவிடப்பட்டதாகவும் இருக்கிறது. மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஜனங்கள் மீது மேற்கொள்ளப்படும் கிரியையைப் போன்றதல்ல, மேலும் அது மேற்கொள்ளப்படும் நபரின் திறனுக்கேற்ப கிரியையும் மாறுபடுகிறது. மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியைகள் ஜனங்கள் மீது செய்யப்படுவதில்லை, மேலும் இது ஜனங்கள் மீது செய்யப்பட்ட அதே கிரியையும் இல்லை. சுருக்கமாக சொல்வதானால், கிரியையானது எவ்வாறு செய்யப்பட்டாலும், வெவ்வேறு பொருள்களில் நிகழ்த்தப்படும் கிரியையானது ஒருபோதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, மேலும் அவர் கிரியை செய்யும் கொள்கைகளானது அவர் கிரியை செய்யும் வெவ்வேறு ஜனங்களின் நிலைகள் மற்றும் சுபாவங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு ஜனங்களின் உள்ளார்ந்த சாராம்சத்தின் அடிப்படையில் கிரியை செய்கிறார், மேலும் அவர் அந்த சாராம்சத்தை மீறும் வகையிலான கோரிக்கைகளை அவர்களிடம் வைப்பதில்லை, அவர்களுடைய உள்ளார்ந்த திறனை மீறும் வகையிலும் அவர் கிரியை செய்வதில்லை. எனவே, மனுஷன் மீதான பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது அந்த கிரியையினுடைய நோக்கத்தின் சாராம்சத்தை காண ஜனங்களை அனுமதிக்கிறது. மனுஷனின் உள்ளார்ந்த சாராம்சம் மாறுவதில்லை; அவனது உள்ளார்ந்த திறமை குறைவாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுடைய திறமையின் வரம்புகளுக்கு ஏற்ப அவர் அவர்களை பயன்படுத்துகிறார் அல்லது அவர்கள் மீது கிரியை செய்கிறார், அதன்மூலம் அவர்கள் பயனடைகிறார்கள். பயன்படுத்தப்படும் ஜனங்கள் மீது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது, அந்த ஜனங்களின் செயல் திறன்களும் உள்ளார்ந்த திறமையும் தடுத்து நிறுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவர்களின் உள்ளார்ந்த திறமையானது கிரியையின் சேவையில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கிரியையில் முடிவுகளை அடைவதற்காக, அவருடைய கிரியையில் பயன்படுத்தக்கூடிய மனுஷரின் பகுதிகளை அவர் பயன்படுத்துகிறார் என்று கூறலாம். இதற்கு நேர்மாறாக, மாம்சமாக அவதரித்த மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது ஆவியானவரின் கிரியையை நேரடியாக வெளிப்படுத்துகிறது, மேலும் அது மனுஷ மனம் மற்றும் எண்ணங்களால் கலப்படமடையாமல் இருக்கிறது; மனுஷனின் வெகுமதிகளால், அல்லது மனுஷனின் அனுபவத்தால், அல்லது மனுஷனின் உள்ளார்ந்த நிலையால் கூட அதை அடைய முடியாது. பரிசுத்த ஆவியானவரின் எண்ணற்ற கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு நன்மை செய்வதற்கும் அவனை மேம்படுத்துவதற்குமே செய்யப்படுகின்றன. இருப்பினும், சிலர் பரிபூரணமாக்கப்படும் அதே வேளையில், மற்றவர்கள் பரிபூரணத்திற்கான நிலைகளைக் கொண்டிருப்பதில்லை, அதாவது அவர்களால் பரிபூரணமாக்கப்படவும் முடியாது, அவர்களை இரட்சிக்கவும் முடியாது. அதாவது பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அவர்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை மேம்படுத்துவதாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்ற அனைவருமே முழுமையாக பரிபூரணமாக்கப்படுவார்கள் என்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனென்றால் பலர் தங்கள் நாட்டத்தில் பின்பற்றும் பாதையானது பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாக இருப்பதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒருதலைப்பட்சக் கிரியையை மட்டுமே கொண்டிருக்கிறார்கள், உள்ளார்ந்த மனுஷ ஒத்துழைப்பையோ அல்லது சரியான மனுஷ நாட்டத்தையோ அவர்கள் கொண்டிருப்பதில்லை. இவ்வாறு, இந்த ஜனங்கள் மீது பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பரிபூரணமாக்கப்படுபவர்களுக்கு சேவை செய்யத்தான் வருகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஜனங்களால் நேரடியாகப் பார்க்க முடியாது, மேலும் அதை நேரடியாக ஜனங்களால் தொடவும் முடியாது. கிரியையின் வரத்தைக் கொண்டவர்களால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும், அதாவது ஜனங்கள் செய்யும் வெளிப்பாடுகளின் மூலம்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பல வகையான ஜனங்கள் மற்றும் பல வகையான நிலைமைகளின் மூலம் நிறைவேற்றப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. மாம்சமாகிய தேவனின் கிரியையால் ஒரு முழு யுகத்தின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு முழு யுகத்தில் ஜனங்கள் பிரவேசிப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றாலும், ஜனங்களின் பிரவேசம் பற்றிய விவரங்கள் தொடர்பான கிரியை பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் மனுஷரால்தான் இன்னும் செய்யப்பட வேண்டும், மனுவுருவான தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷரால் அல்ல. எனவே, தேவனின் கிரியை, அல்லது தேவனின் சொந்த ஊழியமானது மாம்சமாகிய தேவனின் கிரியை ஆகும், இதனை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது பல்வேறு வகையான ஜனங்கள் மூலம் முடிக்கப்படுகிறது; எந்தவொரு தனி நபராலும் அதை முழுமையாகச் செய்து முடிக்க முடியாது, மேலும் எந்த ஒரு நபராலும் அதை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. திருச்சபைகளை வழிநடத்துபவர்களாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது; அவர்களால் சில முன்னெடுத்து செல்லும் கிரியைகளை மட்டுமே செய்ய முடியும். பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: தேவனின் சொந்தக் கிரியை, பயன்படுத்தப்படும் ஜனங்களின் கிரியை, பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் உள்ள அனைவருக்குமான கிரியை ஆகியவை தான் அவை. முழு யுகத்தையும் வழிநடத்துவதே தேவனின் சொந்தக் கிரியை ஆகும்; பயன்படுத்தப்படுபவர்களின் கிரியையானது, தேவனைப் பின்பற்றுபவர்களை வழிநடத்த, தேவன் தனது சொந்த கிரியையைச் செய்தபின் கட்டளைகள் அனுப்பப்படுவதன் மூலமோ அல்லது பெறுவதன் மூலமோ செய்யப்படுகிறது, இவர்கள்தான் தேவனுடைய கிரியைக்கு ஒத்துழைப்பவர்களாக இருக்கிறார்கள்; பிரவாகத்தில் இருப்பவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையானது அவருடைய எல்லாக் கிரியைகளையும் பராமரிப்பதற்காகச் செய்யப்படுகிறது, அதாவது பரிபூரணப்படுத்தக்கூடியவர்களை பரிபூரணப்படுத்தும் அதே வேளையில் அவருடைய முழு நிர்வாகத்தையும் அவருடைய சாட்சியத்தையும் பராமரிப்பதற்காக செய்யப்படுகிறது. மொத்தத்தில், இந்த மூன்று பகுதிகளும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான கிரியை ஆகும், ஆனால் தேவனின் கிரியை இல்லாமல், நிர்வாகக் கிரியை முழுவதுமாக தேக்கமடைந்துபோகும். தேவனின் கிரியையானது மனுஷகுலத்தின் அனைத்து கிரியைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது, மேலும் இது முழு யுகத்தின் கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதாவது தேவனின் சொந்தக் கிரியையானது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒவ்வொரு வல்லமையையும் போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதேசமயம் அப்போஸ்தலர்களின் கிரியையானது தேவனின் சொந்தக் கிரியைக்கு பிறகு வருகிறது, அதிலிருந்து தொடர்கிறது. அது யுகத்தை வழிநடத்துவதும் இல்லை, முழு யுகத்திலும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. மனுஷன் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள், அதற்கும் நிர்வாகக் கிரியைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. தேவன் அவராகவே செய்யும் கிரியையானது நிர்வாகக் கிரியைக்குள் இருக்கும் ஒரு திட்டமாகும். மனுஷனின் கிரியையானது பயன்படுத்தப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமே ஆகும், அதற்கும் நிர்வாக கிரியைக்கும் தொடர்பில்லை. அவை இரண்டும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ற போதிலும், கிரியையின் அடையாளங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றின் வேறுபாடுகள் காரணமாக, தேவனின் சொந்தக் கிரியைக்கும் மனுஷனின் கிரியைக்கும் இடையே தெளிவான மற்றும் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையின் அளவு வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட பொருள்களில் மாறுபடுகிறது. இவையே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கொள்கைகள் மற்றும் நோக்கம் ஆகும்.

மனுஷனின் கிரியையானது அவனது அனுபவத்தையும் மனுஷத்தன்மையையும் குறிக்கிறது. மனுஷன் எதை வழங்குகிறானோ அதுவும், அவன் செய்யும் கிரியையும் அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மனுஷனின் நுண்ணறிவு, மனுஷனின் பகுத்தறிவு, மனுஷனின் தர்க்கம் மற்றும் அவனது செழிப்பான கற்பனை ஆகிய அனைத்தும் அவனது கிரியையில் சேர்க்கப்பட்டுள்ளன. மனுஷனின் அனுபவத்தால் குறிப்பாக அவனது கிரியையைக் குறிக்க முடிகிறது, மேலும் ஒரு நபரின் அனுபவங்கள் அவனது கிரியையின் கூறுகளாகின்றன. மனுஷனின் கிரியையால் அவனது அனுபவத்தை வெளிப்படுத்த முடியும். சிலர் எதிர்மறையாக அனுபவிக்கும் போது, அவர்கள் பேசும் பெரும்பாலான மொழி எதிர்மறை கூறுகளைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் அனுபவம் நேர்மறையாக இருந்து, அவர்கள் குறிப்பாக நேர்மறையான அம்சத்தில் ஒரு பாதையைக் கொண்டிருந்தால், அவர்களின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது, மேலும் ஜனங்கள் அவர்களிடமிருந்து நேர்மறையான காரியங்களைப் பெறவும் முடியும். ஒரு ஊழியக்காரன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்மறையாக மாறினால், அவனுடைய பேச்சும் எப்போதும் எதிர்மறையான கூறுகளைக் கொண்டிருக்கும். இந்த வகையான பேச்சு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, மற்றவர்கள் அவனது பேச்சுக்குப் பிறகு தங்களை அறியாமலேயே மனச்சோர்வடைந்து போவார்கள். தலைவரின் நிலையைப் பொறுத்து பின்பற்றுபவர்களின் நிலை மாறுகிறது. ஓர் ஊழியக்காரன் அவனது அகத்தில் எப்படி இருந்தாலும், அதையேதான் அவன் வெளிப்படுத்துகிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை பெரும்பாலும் மனுஷனின் நிலைக்கு ஏற்ப மாறுகிறது. அவர் ஜனங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கிரியை செய்கிறார், அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் அனுபவத்தின் இயல்பான போக்கிற்கு ஏற்ப ஜனங்களிடம் கோரிக்கைகளை வைக்கிறார். மனுஷனின் பேச்சு தேவனின் வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது என்பதே இதன் அர்த்தம். ஜனங்களின் பேச்சானது அவர்களின் தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் தெரிவிக்கிறது, தேவனுடைய கிரியையின் அடிப்படையில் அவர்களின் நுண்ணறிவுகளையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவன் கிரியை செய்தபின் அல்லது பேசியபின், அவர்கள் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பதும், பின்னர் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்குவதும் அவர்களின் பொறுப்பு ஆகும். எனவே, மனுஷனின் கிரியை அவனது பிரவேசித்தலையும் நடைமுறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிச்சயமாக, இத்தகைய கிரியை மனுஷ பாடங்கள் மற்றும் அனுபவம் அல்லது சில மனுஷ எண்ணங்களுடன் கலக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்தாலும், அதாவது மனுஷன் மீதோ அல்லது மாம்சமாகிய தேவன் மீதோ, ஊழியக்காரர்கள் எப்போதுமே அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதை வெளிப்படுத்துகிறார்கள். பரிசுத்த ஆவியானவர்தான் கிரியை செய்கிறார் என்றாலும், மனுஷன் இயல்பாகவே என்னவாக இருக்கிறான் என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அடித்தளமின்றி கிரியை செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரியையானது ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து வருவதில்லை, ஆனால் எப்போதும் உண்மையான சூழ்நிலைகள் மற்றும் உண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும் மற்றும் அவனது பழைய கருத்துகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற முடியும். மனுஷன் வெளிப்படுத்துவது என்னவென்றால், அவன் பார்ப்பது, அனுபவிப்பது, கற்பனை செய்யக்கூடியது ஆகியவைதான். அது கோட்பாடுகள் அல்லது கருத்துகளாக இருந்தாலும் கூட அது மனுஷனின் சிந்தனையால் அடையக்கூடியதுதான். மனுஷனின் கிரியையானது அந்தக் கிரியையின் அளவைப் பொருட்படுத்தாமல், மனுஷனுடைய அனுபவத்தின் அளவையும், மனுஷன் எதைப் பார்க்கிறானோ அதையும், அல்லது மனுஷனால் கற்பனை செய்யவோ அல்லது எண்ணவோ முடியாததையும் மீறாததாக இருக்கிறது. தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அதை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இது மனுஷனால் அடைய முடியாதது—அதாவது மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லா மனுஷரையும் வழிநடத்தும் தமது கிரியையை அவர் வெளிப்படுத்துகிறார், இது மனுஷ அனுபவத்தின் விவரங்களுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது, ஆனால் அதற்குப் பதிலாக அவருடைய சொந்த நிர்வாகத்துடன் தொடர்புடையாதாகும். மனுஷன் அவனது அனுபவத்தைத்தான் வெளிப்படுத்துகிறான், அதே சமயம் தேவன் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், இது அவருடைய உள்ளார்ந்த மனநிலை, மனுஷனால் இதை அடையமுடியாது. மனுஷனின் அனுபவம் என்பது தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட அவனது நுண்ணறிவு மற்றும் அறிவு ஆகியவை ஆகும். இத்தகைய நுண்ணறிவும் அறிவும் மனுஷனின் இருப்பு என்று அழைக்கப்படுகின்றன, அவற்றின் வெளிப்பாட்டின் அடிப்படையானது மனுஷனின் உள்ளார்ந்த மனநிலை மற்றும் திறமை ஆகியவையாக இருக்கின்றன—இதனால்தான் அவை மனுஷனின் இருப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. மனுஷனால் அவன் அனுபவிப்பதையும் பார்ப்பதையும் பேச முடிகிறது. அவர்கள் அனுபவிக்காத, பார்த்திராத, அல்லது அவர்களின் சிந்தனையை அடைய முடியாதவற்றை யாராலும் பேச முடியாது, அவை அவர்களுக்குள் இல்லாத விஷயங்களாகும். மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்திலிருந்து வந்ததில்லை என்றால், அது அவனது கற்பனை அல்லது கோட்பாடாகத்தான் இருக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், அவனது வார்த்தைகளில் எந்த யதார்த்தமும் இல்லை. நீ ஒருபோதும் சமுதாய விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், உன்னால் சமூகத்தின் சிக்கலான உறவுகளைத் தெளிவாகப் பேச முடியாது. உனக்குக் குடும்பம் இல்லையென்றால், மற்றவர்கள் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினால், அவர்கள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, மனுஷன் பேசுவதும், அவன் செய்யும் கிரியையும் அவனது உள்ளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய தனது புரிதலை ஒருவன் பேசி, உனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை என்றால், நீ அவனுடைய அறிவை மறுக்கத் துணிவதில்லை, அதில் நூறு சதவிகிதம் நம்பிக்கையுடனும் இருக்கத் துணிவதுமில்லை. ஏனென்றால், அவர்களின் பேச்சு நீ அனுபவிக்காத ஒன்றாகவும், நீ அறியாத ஒன்றாகவும் இருக்கிறது, உன் மனதால் அதை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்கள் அறிந்ததிலிருந்து, நீ செய்ய வேண்டியது எதிர்காலத்தில் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதற்கான பாதையில் செல்வதே ஆகும். ஆனால் இந்தப் பாதை கோட்பாட்டு அறிவில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்; இந்தப் பாதையால் உனது சொந்தப் புரிதலின் இடத்தை நிரப்ப முடியாது, உனது அனுபவத்தின் இடத்தையும் நிரப்ப முடியாது. அவர்கள் சொல்வது மிகவும் சரியானதுதான் என்று நீ நினைக்கிறாய், ஆனால் உனது சொந்த அனுபவத்தில், இது பல வழிகளில் சாத்தியமற்றது என்று நீ கருதுகிறாய். நீ காது கொடுத்துக் கேட்கும் சில விஷயங்களை நீ முற்றிலும் சாத்தியமற்றதாக உணர்கிறாய்; அந்த நேரத்தில் நீ அதைப் பற்றிய கருத்துக்களை மனதில் கொள்கிறாய், நீ அதை ஏற்றுக்கொண்டாலும், நீ அதைத் தயக்கத்துடன் மட்டுமே செய்கிறாய். ஆனால் உனது சொந்த அனுபவத்தில், நீ கருத்துக்களைப் பெற்ற அறிவானது உனது நடைமுறைக்கான வழிமுறையாக மாறுகிறது, மேலும் நீ நடைமுறைப்படுத்தும் போது, நீ காது கொடுத்துக் கேட்ட வார்த்தைகளின் உண்மையான மதிப்பு மற்றும் அர்த்தத்தை நீ புரிந்துகொள்கிறாய். நீ உனது சொந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, நீ அனுபவித்தவற்றைப் பற்றி நீ கொண்டிருக்க வேண்டிய அறிவைப் பற்றி பேசலாம். மேலும், யாருடைய அறிவு உண்மையானது மற்றும் நடைமுறைக்குரியது என்பதையும், யாருடைய அறிவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பயனற்றது என்பதையும் உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியும். எனவே, நீ கூறும் அறிவானது சத்தியத்துடன் ஒத்துப்போகிறதா என்பது பெரும்பாலும் அதில் உனக்கு நடைமுறை அனுபவம் உள்ளதா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உனது அனுபவத்தில் சத்தியம் இருக்கும் இடத்தில், உனது அறிவானது நடைமுறையானதாகவும் மற்றும் மதிப்புமிக்கதாகவும் இருக்கும். உனது அனுபவத்தின் மூலம், உன்னால் விவேகத்தையும் நுண்ணறிவையும் பெற முடியும், உனது அறிவை ஆழப்படுத்த முடியும், மேலும் நீ உன்னை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய உனது ஞானத்தையும் பொது அறிவையும் அதிகரிக்கவும் முடியும். சத்தியத்தைக் கொண்டிருக்காத ஜனங்கள் வெளிப்படுத்தும் அறிவானது, அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது கோட்பாடாகத்தான் இருக்கிறது. மாம்ச விஷயங்களைப் பொறுத்தவரை இந்த வகை நபர் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய விஷயங்களில் அத்தகைய தனித்தன்மை இருப்பதில்லை. ஏனென்றால், அத்தகையவர்களுக்கு ஆவிக்குரிய விவகாரங்கள் எதிலும் அனுபவம் இருப்பதில்லை. இவர்கள் ஆவிக்குரிய விவகாரங்களில் தெளிவு இல்லாதவர்கள், ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். நீ எந்த வகையான அறிவை வெளிப்படுத்தினாலும், அது உனதாக இருக்கும் வரை, அது உனது தனிப்பட்ட அனுபவமாகவும் உனது உண்மையான அறிவாகவும் இருக்கிறது. கோட்பாட்டைப் பற்றி மட்டுமே பேசும் ஜனங்கள்—சத்தியமோ யதார்த்தமோ இல்லாதவர்கள்—விவாதிப்பது அவர்களுடையதாக இருக்கிறது என்றும் அழைக்கப்படலாம், ஏனென்றால் அவர்கள் தங்கள் கோட்பாட்டிற்கு ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக மட்டுமே வந்தடைந்திருக்கிறார்கள், மேலும் அது அவர்களின் ஆழ்ந்த சிந்தனையின் விளைவும் ஆகும். ஆயினும்கூட அது வெறும் கோட்பாடு மட்டும்தான், கற்பனையைத் தவிர வேறில்லை! எல்லா வகையான ஜனங்களின் அனுபவங்களும் அவர்களுக்குள் இருக்கும் விஷயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எந்தவொரு ஆவிக்குரிய அனுபவமும் இல்லாத எவரும் சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பற்றியோ, பல்வேறு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான அறிவைப் பற்றியோ பேச முடியாது. மனுஷன் அகத்தில் எப்படி இருக்கிறானோ அதைத்தான் வெளிப்படுத்துகிறான்—இது நிச்சயம். ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய அறிவையும், சத்தியத்தைப் பற்றிய அறிவையும் பெற்றிருக்க நீ விரும்பினால், உனக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும். மனுஷ ஜீவிதத்தில் பொது அறிவு பற்றி உன்னால் தெளிவாகப் பேச முடியாவிட்டால், எப்படி உன்னால் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேச முடியும்? திருச்சபைகளை வழிநடத்தி, ஜனங்களுக்கு ஜீவனை வழங்குகிறவர்களாகவும், ஜனங்களுக்கு அப்போஸ்தலர்களாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான புரிதலும், சத்தியத்தைப் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். அத்தகையவர்கள் மட்டுமே திருச்சபைகளை வழிநடத்தும் ஊழியக்காரர்களாக அல்லது அப்போஸ்தலர்களாக இருக்க தகுதியுடையவர்கள். இல்லையெனில், அவர்கள் மிகத் தாழ்ந்தவர்களாக இருந்து பின்பற்ற மட்டுமே முடியும், வழிநடத்த முடியாது, மேலும் ஜனங்களுக்கு ஜீவனை வழங்கக்கூடிய அப்போஸ்தலர்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அப்போஸ்தலர்களின் செயல்பாடு விரைவாக செயல்படுவதோ அல்லது போராடுவதோ அல்ல; ஜீவனுக்கு ஊழியம் செய்யும் கிரியையை செய்வதற்கும் மற்றவர்களை அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கு வழிவகுக்கும் கிரியையைச் செய்வதும்தான் அப்போஸ்தலர்களின் செயல்பாடாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டைச் செய்பவர்கள் ஒரு கனமான பொறுப்பை ஏற்க நியமிக்கப்படுகிறார்கள், இந்தப் பொறுப்பானது யாராலும் தோள்களில் சுமக்க முடியாததாக இருக்கிறது. இந்த வகையான கிரியையை ஜீவனை அறிந்தவர்கள், அதாவது சத்திய அனுபவமுள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். வெறுமனே கைவிடக்கூடிய, விரைந்து செயல்படக்கூடிய, அல்லது தங்களையே செலவழிக்க விரும்பும் எவராலும் இதை மேற்கொள்ள முடியாது; சத்திய அனுபவம் இல்லாதவர்கள், கிளைநறுக்கப்படாதவர்கள் அல்லது நியாயந்தீர்க்கப்படாதவர்கள் ஆகியோரால் இந்த வகை கிரியைகளைச் செய்ய இயலாது. எந்த அனுபவமும் இல்லாத ஜனங்களால், யதார்த்தம் இல்லாத ஜனங்களால் யதார்த்தத்தை தெளிவாகக் காண முடிவதில்லை, ஏனென்றால் அவர்களும் இந்த வகையானவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வகையான நபரால் தலைமைதாங்கும் கிரியைகளைச் செய்ய இயலாது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நீண்ட காலம் சத்தியம் இல்லாமல் இருந்தால், அவர்கள் புறம்பாக்கப்பட வேண்டும். நீ வெளிப்படுத்தும் நுண்ணறிவானது நீ ஜீவிதத்தில் அனுபவித்த கஷ்டங்கள், நீ சிட்சிக்கப்பட்டதற்கான விஷயங்கள் மற்றும் நீ நியாயந்தீர்க்கப்பட்டதற்கான சிக்கல்களுக்கு சான்றாக நிற்க முடியும். சோதனைகளுக்கான விஷயங்களுக்கும் இதுதான் உண்மையாக இருக்கிறது: நீ சுத்திகரிக்கப்பட்ட இடத்தில், நீ பலவீனமாக இருக்கிறாய்—இவையெல்லாம் உனக்கு அனுபவமுள்ள பகுதிகள், இவற்றில் உனக்கு ஒரு பாதையும் இருக்கிறது. உதாரணமாக, திருமணத்தில் யாராவது விரக்தியடைந்தால், அவர்கள் பெரும்பாலும், “தேவனுக்கு நன்றி, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் தேவனுடைய இருதயத்தின் ஆசையை நிறைவேற்றி, அவருக்கு என் முழு ஜீவிதத்தையும் வழங்க வேண்டும், மேலும் எனது திருமணத்தை தேவனின் கைகளில் வைக்க வேண்டும். எனது முழு ஜீவிதத்தையும் தேவனிடம் பிணையம் வைக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று சொல்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அவன் பேசுவதன் மூலம் நிரூபிக்க முடியும். ஒரு நபரின் பேச்சின் வேகம், அவர்கள் சத்தமாகவோ அல்லது அமைதியாகவோ பேசினாலும்—இதுபோன்ற விஷயங்கள் அனுபவத்தின் விஷயங்களாக இருப்பதில்லை, மேலும் அவற்றில் என்ன இருக்கிறது என்பதையும் அவை என்னவாக இருக்கிறது என்பதையும் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. இந்த விஷயங்களால் ஒரு நபரின் குணம் நல்லதா அல்லது கெட்டதா, அல்லது அவர்களின் சுபாவம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை மட்டுமே சொல்ல முடியும், ஆனால் ஒருவருக்கு அனுபவம் உள்ளதா என்பதை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பேசும்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன், அல்லது பேச்சுத் திறமை அல்லது வேகம் என்பது நடைமுறைக்கான ஒரு விஷயமாக இருக்கிறது, இதனால் உனது அனுபவத்தை மாற்ற முடியாது. உனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி நீ பேசும்போது, நீ முக்கியமானவை என்று கருதும் மற்றும் உனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் நீ பேசுகிறாய். என் பேச்சு நான் இருப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் நான் சொல்வது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாக இருக்கிறது. நான் சொல்வது மனுஷன் அனுபவிக்கும் விஷயமாக இருப்பதில்லை, அது மனுஷனால் பார்க்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை; இது மனுஷனால் தொடக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை, ஆனால் அதுதான் நான். நான் அனுபவித்ததை மட்டுமே பேசுகிறேன் என்று சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடு என்பதை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக, நான் அனுபவித்த விஷயங்கள் பற்றிதான் நான் சொல்கிறேன். ஆறாயிரம் ஆண்டுகளாக நிர்வாகக் கிரியைகளைச் செய்தது நான் தான். மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் ஆதி முதல் இப்போது வரை அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்; என்னால் அதை எப்படி விவாதிக்காமல் இருக்க முடியும்? மனுஷனின் சுபாவத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், நான் அதைத் தெளிவாகக் கண்டிருக்கிறேன்; நான் அதை நீண்ட காலத்திற்கு முன்பே கவனித்தேன். இவ்வாறாக இருப்பின் இதைப் பற்றி என்னால் எப்படித் தெளிவாகப் பேசாமல் இருக்க முடியும்? மனுஷனின் சாராம்சத்தை நான் தெளிவாகக் கண்டதால், மனுஷனை சிட்சிப்பதற்கும் அவனை நியாயந்தீர்ப்பதற்கும் நான் தகுதியானவனாக இருக்கிறேன், ஏனென்றால் மனுஷர் அனைவரும் என்னிடமிருந்து வந்தவர்கள், ஆனால் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறார்கள். நிச்சயமாக, நான் செய்த கிரியையை மதிப்பிடுவதற்கான தகுதியும் எனக்கு உண்டு. இந்தக் கிரியை என் மாம்சத்தால் செய்யப்படவில்லை என்றாலும், இது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவே இருக்கிறது, என்னிடம் இருப்பது இதுதான், நான் என்னவாக இருக்கிறேனோ அதுவும் இதுதான். எனவே, அதை வெளிப்படுத்தவும், நான் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் நான் தகுதியானவனாக இருக்கிறேன். ஜனங்கள் அவர்கள் அனுபவித்ததை மட்டும்தான் சொல்கிறார்கள். இதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்களது மனங்கள் அடையக்கூடியது இதுதான், அவர்களின் புலன்களால் கண்டறிய முடிவதும் இதுதான். இதைத்தான் அவர்கள் பேச முடியும். மாம்சமாகிய தேவனால் பேசப்படும் வார்த்தைகளானது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனை மாம்சம் அனுபவித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, ஆனாலும் அவர் இன்னும் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் மாம்சத்தின் சாராம்சம் ஆவியானவராக இருக்கிறார், மேலும் ஆவியானவரின் கிரியையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். மாம்சத்தால் அடையமுடியாத போதிலும், இந்தக் கிரியையானது ஆவியானவரால் ஏற்கெனவே செய்யப்பட்ட கிரியையாக இருக்கிறது. மாம்சமான பிறகு, மாம்சத்தின் வெளிப்பாட்டின் மூலம், தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் ஜனங்களுக்கு உதவுகிறார், மேலும் தேவனின் மனநிலையையும் அவர் செய்த கிரியையையும் பார்க்க ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனின் கிரியையானது ஜனங்களுக்கு அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகத் தெளிவைத் தருகிறது; சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஜனங்களை வழிநடத்துவதும் இதில் அடங்கும். மனுஷனை நிலைநிற்கச் செய்வதே மனுஷனின் கிரியையாக இருக்கிறது; தேவனின் கிரியையானது மனுஷகுலத்திற்கான புதிய பாதைகளையும் புதிய யுகங்களையும் திறந்து வைப்பது, இறந்துபோகக்கூடியவர்களால் அறியப்படாதவற்றை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது, அவருடைய மனநிலையை ஜனங்கள் அறிந்து கொள்ள அனுமதிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கிறது. மனுஷகுலம் முழுவதையும் வழிநடத்துவதே தேவனின் கிரியையாகும்.

பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளும் ஜனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் செய்யப்படுகின்றன. இது ஜனங்களை மேம்படுத்துவது பற்றியதாக இருக்கிறது; ஜனங்களுக்கு பயனளிக்காத எந்தக் கிரியையும் இருப்பதில்லை. சத்தியம் ஆழமானதா அல்லது ஆழமற்றதா என்பது முக்கியமல்ல, சத்தியத்தை ஏற்றுக்கொள்பவர்களின் திறமை எதுவாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் என்ன செய்தாலும், அது ஜனங்களுக்குப் பயனளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நேரடியாகச் செய்ய முடியாது; அதை அவருடன் ஒத்துழைக்கும் ஜனங்கள் மூலமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறாக மட்டுமே பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் முடிவுகளைப் பெற முடியும். நிச்சயமாக, பரிசுத்த ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அது கலப்படம் செய்யப்படுவதில்லை; ஆனால் பரிசுத்த ஆவியானவர் மனுஷன் மூலமாகக் கிரியை செய்யும்போது, அது மிகவும் கறைபடிந்து பரிசுத்த ஆவியானவரின் அசல் கிரியையாக இருப்பதில்லை. இது இவ்வாறு இருப்பதால், சத்தியமானது மாறுபட்ட அளவுகளுக்கு மாறுகிறது. பின்பற்றுபவர்கள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான நோக்கத்தைப் பெறுவதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, மனுஷனின் அனுபவம் மற்றும் அறிவின் கலவையை அவர்கள் பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை சரியானது என்பதையே பின்பற்றுபவர்கள் பெறுவதன் ஒரு பகுதியாக இருக்கிறது, அதேசமயம் ஊழியக்காரர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதால் பின்பற்றுபவர்கள் பெறும் மனுஷனின் அனுபவமும் அறிவும் வேறுபடுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் தெளிவு மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய ஊழியக்காரர்கள் இந்தத் தெளிவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனுபவங்களைப் பெறுவார்கள். இந்த அனுபவங்களுக்குள் மனுஷனின் மனம் மற்றும் அனுபவம், மனுஷத்தன்மையின் இருப்பு ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன, பின்னர் அவற்றில் இருக்க வேண்டிய அறிவு அல்லது நுண்ணறிவை அவர்கள் பெறுகின்றனர். சத்தியத்தை அனுபவித்த பிறகு இதுவே மனுஷனின் நடைமுறையாக இருக்கிறது. இந்த நடைமுறையானது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஏனென்றால் ஜனங்கள் வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள், மேலும் ஜனங்கள் அனுபவிக்கும் விஷயங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. இவ்வாறாக, பரிசுத்த ஆவியானவரின் அதே தெளிவு வெவ்வேறு அறிவையும் நடைமுறையையும் விளைவிக்கிறது, ஏனென்றால் தெளிவைப் பெறுபவர்கள் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் நடைமுறையில் சிறிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள், சிலர் தவறுகளைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், ஜனங்கள் புரிந்துகொள்ளும் திறனில் வேறுபடுகிறார்கள், மேலும் அவர்களின் உள்ளார்ந்த திறன்களும் வேறுபடுகின்றன. சிலருக்கு ஒரு செய்தியைக் கேட்டபின் ஒருவித புரிதல் ஏற்படுகிறது, மேலும் சிலருக்கு ஒரு சத்தியத்தைக் கேட்டபின் வேறு மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. சிலர் சற்றே விலகுகிறார்கள், சிலருக்குச் சத்தியத்தின் உண்மையான அர்த்தம் புரிவதேயில்லை. எனவே, ஒருவனின் புரிதலானது அவன் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவான் என்பதைக் கூறுகிறது; இதுதான் சத்தியம், ஏனென்றால் ஒருவனின் கிரியை என்பது ஒருவர் இருப்பதற்கான வெளிப்பாடாகும். சத்தியத்தைப் பற்றிய சரியான புரிதல் உள்ளவர்கள் தலைமையிலான ஜனங்களுக்கும் சத்தியத்தைப் பற்றிய சரியான புரிதல் இருக்கும். புரிதலில் பிழைகள் கொண்டவர்கள் இருந்தாலும், அவர்களில் மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள், ஆனால் அனைவருக்கும் பிழைகள் இருப்பதில்லை. ஒருவனுக்குச் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் பிழைகள் இருந்தால், அவனைப் பின்பற்றுபவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி பிழை கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் பிழை கொண்டவர்களாக இருப்பார்கள். பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்கு உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும்பாலும் ஊழியக்காரர்களைப் பொறுத்து இருக்கிறது. நிச்சயமாக, தேவனிடமிருந்து வரும் சத்தியம் சரியானதாகவும் பிழையில்லாமலும் இருக்கிறது, அது முற்றிலும் நிச்சயமானதாக இருக்கிறது. எவ்வாறாயினும், ஊழியக்காரர்கள் முற்றிலும் சரியானவர்களாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் முற்றிலும் நம்பகமானவர்கள் என்றும் கூறிவிட முடியாது. சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு ஊழியக்காரர்களுக்கு மிகவும் நடைமுறையான ஒரு வழி இருந்தால், பின்பற்றுபவர்களுக்கும் நடைமுறைப்படுத்த ஒரு வழி இருக்கும். ஊழியக்காரர்களுக்குச் சத்தியத்தை கடைப்பிடிக்க ஒரு வழி இல்லை, ஆனால் கோட்பாடு மட்டும் இருக்கிறது என்றால், பின்தொடர்பவர்களுக்கு எந்த யதார்த்தமும் இருக்காது. பின்தொடர்பவர்களின் திறனும் தன்மையும் பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்றன, அவை ஊழியக்காரர்களுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் பின்தொடர்பவர்கள் எந்த அளவிற்குச் சத்தியத்தை புரிந்துகொண்டு தேவனை அறிகிறார்கள் என்பது ஊழியக்காரர்களைப் பொறுத்தது (இது சிலருக்கு மட்டுமே). ஓர் ஊழியக்காரன் எப்படியாக இருக்கிறானோ, அவன் வழிநடத்தும் விசுவாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள். ஓர் ஊழியக்காரன் எவ்விதத் தடையும் இல்லாமல் தன்னை வெளிப்படுத்துகிறான். அவனைப் பின்பற்றுபவர்களிடம் அவன் வைக்கும் கோரிக்கைகளானது அவன் அவனாகவே அடைய விருப்பப்படும் அல்லது அவனாகவே அடைய முடிகிறவையாக இருக்கின்றன. பெரும்பாலான ஊழியக்காரர்கள் அவர்கள் தங்களுக்கு என்ன செய்துகொள்கிறார்களோ, அவர்களைப் பின்பற்றுபவர்களால் அதை ஒருபோதும் அடைய முடியாது என்றாலும், அதையே தங்களைப் பின்பற்றுபவர்களின் கோரிக்கைகளை வைப்பதற்கு ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள்—மேலும் ஒருவனால் அதை அடைய முடியவில்லை எனில், அவனே அவனது பிரவேசத்திற்குத் தடையாகிறான்.

கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களின் கிரியையில் மிகக் குறைவான விலகலே இருக்கிறது, மேலும் அவர்களுடைய கிரியையின் வெளிப்பாடு மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. கிரியை செய்ய தங்கள் சுபாவத்தை நம்பியிருப்பவர்கள் மிகப் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியையானது அவர்களின் இயல்புத்தன்மையை அதிகமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நபரின் திறமை எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கட்டளையின் கிரியையைச் செய்வதற்கு முன்பு அவர்கள் கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, நியாந்தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால், அவர்களின் கிரியையானது எவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் சத்தியத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது, அது எப்போதும் அவர்களின் இயல்புத்தன்மை மற்றும் மனுஷனின் நற்குணம் ஆகியவற்றின் விளைவாகவே இருக்கும். கிளைநறுக்கப்படாமல், கையாளப்படாமல் மற்றும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படாதவர்களின் கிரியையை விட கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு மற்றும் நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களின் கிரியையானது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. நியாத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், மனுஷ மாம்சம் மற்றும் எண்ணங்களைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்துவதில்லை, அவர்கள் அதிக மனுஷ நுண்ணறிவு மற்றும் உள்ளார்ந்த திறமைகளின் கலவையாக இருக்கிறார்கள். இது தேவனுடைய கிரியைக்கான மனுஷனின் துல்லியமான வெளிப்பாடு இல்லை. அத்தகையவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய இயல்பான திறமையால் அவர்களுக்கு முன் கொண்டு வரப்படுகிறார்கள். தேவனின் உண்மையான நோக்கத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு, அதிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் மனுஷனின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை அவை அதிகம் வெளிப்படுத்துவதால், இந்த வகை நபரின் கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர முடியாது, ஆனால் அவர்களை மனுஷனுக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. எனவே, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்படாதவர்கள் தேவனின் கட்டளை கிரியையைச் செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். ஒரு தகுதிவாய்ந்த ஊழியக்காரனின் கிரியையால் ஜனங்களைச் சரியான பாதையில் கொண்டு வந்து அவர்களுக்குச் சத்தியத்திற்கு அதிக பிரவேசங்களை வழங்க முடியும். அவனுடைய கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வர முடியும். மேலும், அவன் செய்யும் கிரியையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், மேலும் இது விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஜனங்களுக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும், மேலும் ஜீவிதத்தில் படிப்படியாக வளரக்கூடிய திறனையும் அனுமதிக்கிறது, இதனால் சத்தியத்தில் இன்னும் ஆழமான பிரவேசம் இருக்கும். தகுதியற்ற ஊழியக்காரனின் கிரியையானது மிகக் குறைவானதாக இருக்கிறது. அவனது கிரியை முட்டாள்தனமானது. அவனால் ஜனங்களை விதிகளுக்குள் மட்டுமே கொண்டுவர முடியும், மேலும் அவன் ஜனங்களிடம் கோருவதும் மனுஷனுக்கு மனுஷன் வேறுபட்டதாக இருப்பதில்லை; அவன் ஜனங்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்வதில்லை. இந்த வகைக் கிரியைகளில், பல விதிகள் மற்றும் பல கோட்பாடுகள் இருக்கின்றன, மேலும் இதனால் ஜனங்களை யதார்த்தத்திற்குக் கொண்டு வர முடியாது, அல்லது ஜனங்களை ஜீவித வளர்ச்சியின் சாதாரண நடைமுறைக்கும் கொண்டுவர முடியாது. பயனற்ற சில விதிகளை மட்டுமே கடைபிடிக்க இது ஜனங்களுக்கு உதவும். இத்தகைய வழிகாட்டுதலால் ஜனங்களை வழிதவறி வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். அவன் உன்னை அவனைப்போல் மாற்ற உன்னை வழிநடத்துகிறான்; அவனிடம் என்ன இருக்கிறதோ அதற்கும் மற்றும் அவன் என்னவாக இருக்கிறானோ அதற்கும் உன்னை கொண்டுவர அவனால் முடியும். தலைவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பின்பற்றுபவர்கள் கண்டறிய, அவர்கள் வழிநடத்தும் பாதை மற்றும் அவர்களது கிரியைகளின் முடிவுகளைப் பார்ப்பது, மற்றும் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்கு ஏற்ப கொள்கைகளைப் பெறுகிறார்களா என்பதையும், மற்றும் அவர்கள் தங்களது மாறுதலுக்கு ஏற்ற நடைமுறை பாதைகளைப் பெறுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். நீ வெவ்வேறு வகையான நபர்களின் வெவ்வேறு கிரியைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; நீ முட்டாள்தனமாக பின்பற்றுபவராக இருக்கக்கூடாது. இது ஜனங்களின் பிரவேசம் பற்றிய விஷயத்தைச் சேர்ந்தது. எந்த நபரின் தலைமையில் பாதை இருக்கிறது, எதில் இல்லை என்பதை உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், நீ எளிதில் ஏமாற்றப்படுவாய். இவை அனைத்தும் உனது சொந்த ஜீவிதத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பரிபூரணமடையாதவர்களின் கிரியையில் அதிகமான இயல்புத்தன்மை இருக்கிறது; இது மனுஷ விருப்பத்துடன் அதிகமாகக் கலந்திருக்கிறது. அவர்கள் இயல்புத்தன்மை கொண்டிருக்கிறார்கள்—அவர்கள் அதனுடன் பிறந்தவர்கள். இது கையாளப்பட்டதற்குப் பிறகான ஜீவிதமோ அல்லது மாற்றப்பட்டதற்குப் பிறகான யதார்த்தமோ இல்லை. அத்தகைய நபரால் ஜீவனைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியும்? மனுஷனுக்கு உண்மையாக இருக்கும் ஜீவனானது அவனது உள்ளார்ந்த புத்திசாலித்தனம் அல்லது திறமை ஆகியவைதான். இந்த வகையான புத்திசாலித்தனம் அல்லது திறமையானது மனுஷனுக்கான தேவனின் சரியான கோரிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு மனுஷன் பரிபூரணப்படுத்தப்படாமலும், அவனுடைய சீர்கெட்ட மனநிலை கிளைநறுக்கப்படாமலும், கையாளப்படாமலும் இருந்தால், அவன் வெளிப்படுத்தும் விஷயத்திற்கும் சத்தியத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருக்கும்; அவன் வெளிப்படுத்தும் விஷயங்களானது அவனது கற்பனை மற்றும் ஒருதலைப்பட்ச அனுபவம் போன்ற தெளிவற்ற விஷயங்களுடன் கலக்கப்படும். மேலும், அவன் எவ்வாறு கிரியை செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்த குறிக்கோளும் இல்லை, எல்லா ஜனங்களின் பிரவேசத்திற்கு ஏற்ப சத்தியமும் இல்லை என்பதை ஜனங்கள் உணர்கிறார்கள். மதில்சுவர்களில் வாத்துகளை உட்கார வைத்திருப்பதைப் போல, ஜனங்களிடம் கோரப்பட்டவற்றில் பெரும்பாலானவை அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இது மனுஷ விருப்பத்திற்கான கிரியையாக இருக்கிறது. மனுஷனின் சீர்கெட்ட மனநிலை, அவனது எண்ணங்கள் மற்றும் அவனது கருத்துக்கள் அவனது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. மனுஷன் சத்தியத்தை கடைப்பிடிக்கும் உள்ளுணர்வோடு பிறப்பதில்லை, சத்தியத்தை நேரடியாகப் புரிந்து கொள்ளும் உள்ளுணர்வும் அவனுக்கு இருப்பதில்லை. இதனை அந்த மனுஷனின் சீர்கெட்ட மனநிலையுடன் சேர்த்தால்—இந்த வகையான சுபாவம் கொண்ட நபர் கிரியை செய்யும்போது, இது குறுக்கீடுகளை ஏற்படுத்தாதா? ஆனால் பரிபூரணமான ஒரு மனுஷனுக்கு ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியத்தின் அனுபவமும், அவர்களின் சீர்கெட்ட மனநிலையைப் பற்றிய அறிவும் இருக்கிறது, இதனால் அவனது கிரியையில் உள்ள தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்கள் படிப்படியாகக் குறைந்து, மனுஷக் கலப்படம் குறைந்து, அவனுடைய கிரியையும் சேவையும் தேவனுக்குத் தேவைப்படும் தரங்களுக்கு மிக நெருக்கத்தில் வரும். இவ்வாறு, அவனது கிரியை சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் நுழைந்திருக்கிறது, அது யதார்த்தமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மனுஷனின் மனதில் உள்ள எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கின்றன. மனுஷனுக்கு வளமான கற்பனையும் நியாயமான தர்க்கமும் இருக்கிறது, மேலும் அவன் விவகாரங்களைக் கையாண்ட நீண்ட அனுபவத்தையும் கொண்டிருக்கிறான். மனுஷனின் இந்த அம்சங்கள் கிளைநறுக்கப்பட்டு மற்றும் திருத்தப்படாவிட்டால், இவை அனைத்தும் கிரியை செய்வதற்கான தடைகளாகத்தான் இருக்கும். எனவே, மனுஷனின் கிரியையானது மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது, குறிப்பாக பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியை மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது.

மனுஷனின் கிரியையானது ஓர் எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. மனுஷனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் கிரியையை மட்டுமே செய்ய முடியும், முழு யுகத்தின் கிரியையையும் செய்ய முடியாது—இல்லையெனில், அவன் ஜனங்களை விதிகளுக்கு மத்தியில் அழைத்துச் செல்வான். மனுஷனின் கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், மனுஷனின் அனுபவத்திற்கு எல்லை இருக்கிறது. மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. மனுஷன் நடக்கும் வழிகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய அவனது அறிவு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். மனுஷன் பயணிக்கும் பாதையானது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் சித்தம்தான் என்று உன்னால் கூற முடியாது, ஏனென்றால் மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தெளிவு பெற முடியும், மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் முழுமையாக நிரம்பியிருக்கவும் முடியாது. மனுஷன் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சாதாரண மனுஷத்தன்மையின் எல்லைக்குள் இருக்கின்றன, மேலும் அவற்றால் சாதாரண மனுஷ மனதில் இருக்கும் எண்ணங்களின் வரம்பை மீற முடியாது. சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடிந்தவர்கள் இந்த வரம்பிற்குள்தான் அனுபவிப்பார்கள். அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கும்போது, அது எப்போதும் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனுபவமாகவே இருக்கிறது; இது சாதாரண மனுஷ ஜீவிதத்திலிருந்து விலகிச் செல்லும் அனுபவமாக இருப்பதில்லை. தங்கள் மனுஷ ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான அஸ்திபாரத்தில் பரிசுத்த ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட சத்தியத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். மேலும், இந்தச் சத்தியமானது நபருக்கு நபர் மாறுபடுகிறது, அதன் ஆழமானது அந்த நபரின் மனநிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அவர்கள் நடந்துகொண்டிருக்கும் பாதையானது சத்தியத்தைப் பின்தொடரும் ஒருவரின் சாதாரண மனுஷ ஜீவிதம்தான் என்று உன்னால் சொல்ல மட்டுமே முடியும், மேலும் இது பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற ஒரு சாதாரண மனுஷன் நடந்து சென்ற பாதை என்றும் அழைக்கப்படலாம். அவர்கள் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதைதான் என்று உன்னால் சொல்ல முடியாது. சாதாரண மனுஷ அனுபவத்தில், பின்பற்றுபவர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும், ஜனங்கள் அனுபவிக்கும் சூழல்களும் அவர்களின் அனுபவத்தின் வரம்புகளும் ஒரே மாதிரியாக இல்லாததாலும், அவர்களின் மனம் மற்றும் எண்ணங்களின் கலவையின் காரணமாகவும், அவர்களின் அனுபவமானது வெவ்வேறு அளவுகளில் கலக்கப்படுகிறது. ஒவ்வொருவனும் வெவ்வேறு, தனிப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்கிறான். சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் முழுமையடையாமல் இருக்கிறது, மேலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மனுஷனின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மனுஷன் அனுபவிக்கும் சத்தியத்தின் நோக்கமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இவ்வாறாக, வெவ்வேறு நபர்களால் வெளிப்படுத்தப்படும் ஒரே சத்தியத்தின் அறிவானது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, மனுஷனின் அனுபவமானது எப்போதுமே வரம்புகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அனுபவத்தால் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனுஷனால் வெளிப்படுத்தப்படும் விஷயங்கள் தேவனின் சித்தத்திற்கு மிக நெருக்கமாக ஒத்திருந்தாலும் கூட, மேலும் மனுஷனின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவர் செய்யும் பரிபூரணமாக்கும் கிரியைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையாக உணர்ந்துகொள்ள முடியாது. மனுஷன் தேவனின் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும், தேவன் அவனிடம் ஒப்படைக்கும் கிரியையைச் செய்யும் ஊழியனாக மட்டுமே அவனால் இருக்க முடியும். மனுஷனால் பரிசுத்த ஆவியானவரால் தெளிவுபடுத்தப்பட்ட அறிவையும் அவனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சத்தியங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மனுஷன் தகுதியற்றவன், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துபவனாக இருப்பதற்குத் தேவையான நிபந்தனைகளை அவன் பூர்த்தி செய்வதில்லை. அவனுடைய கிரியையானது தேவனின் கிரியை என்று சொல்ல அவனுக்கு உரிமை இல்லை. மனுஷனிடம், மனுஷனின் கிரியை செய்வதற்கான கொள்கைகள் இருக்கின்றன, மேலும் எல்லா மனுஷரும் வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட நிலைமைகளையும் கொண்டுள்ளனர். மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவிற்குக் கீழ் இருக்கும் அவனது அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்த அனுபவங்களால் மனுஷன் இருப்பதை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், தேவன் இருப்பதை அல்லது பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகையால், மனுஷன் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் மனுஷனின் கிரியையால் தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனுஷனின் கிரியையும் அனுபவமும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான சித்தமல்ல. மனுஷனின் கிரியையானது எளிதில் விதிகளுக்குள் சிக்கிக்கொள்கிறது, மேலும் அவனது கிரியையின் முறையானது எளிதில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அதனால் ஜனங்களை ஒரு சுதந்திரமான வழியில் அழைத்துச் செல்ல இயலாது. பின்பற்றும் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் முறையும் அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனுஷனின் அனுபவமானது எப்போதும் குறைவானதாகவே இருக்கிறது; அவனுடைய கிரியையின் முறையும் ஒரு சில வகைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனுஷனின் அனுபவமானது இறுதியில் குறைவானதாகவே இருக்கிறது. தேவன் தமது கிரியையை எப்படிச் செய்தாலும், அது விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதில்லை; அது எவ்வாறாக செய்யப்பட்டாலும், அது ஒரேயொரு முறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை—அவருடைய எல்லா கிரியைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருக்கின்றன. மனுஷன் அவரைப் பின்தொடர எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவன் கிரியை செய்யும் முறைகளை ஆளும் எந்த சட்டங்களையும் அவனால் வடிகட்டிட முடியாது. அவரது கிரியையானது கொள்கை ரீதியானது தான் என்றாலும், அது எப்போதும் புதிய வழிகளில் செய்யப்படுகிறது, எப்போதும் புதிய முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. ஒரே காலகட்டத்தில், தேவனுக்குப் பல்வேறு வகையான கிரியைகள் மற்றும் ஜனங்களை வழிநடத்தும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம், இதன் மூலம் ஜனங்கள் எப்போதும் புதிய பிரவேசங்களையும் மாற்றங்களையும் கொண்டிருப்பார்கள். அவருடைய கிரியையின் சட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் எப்போதும் புதிய வழிகளில் கிரியை செய்கிறார், இதனால் மட்டுமே தேவனைப் பின்பற்றுபவர்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனின் கிரியையானது எப்போதுமே ஜனங்களின் கருத்துக்களைத் தவிர்த்து, அவற்றை எதிர்க்கிறது. உண்மையான இருதயத்தோடு தேவனைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே அவர்களின் மனநிலையை மாற்றியமைத்து சுதந்திரமாக வாழ முடியும், எந்தவொரு விதிகளுக்கும் உட்படுத்தப்படாமலும் அல்லது எந்த மதக் கருத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க முடியும். மனுஷனின் கிரியையானது அவனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அவனால் எதை அடைய முடியும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஜனங்களுக்குக் கோரிக்கைகளை வைக்கிறது. இந்த கோரிக்கைகளின் தரமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது, மேலும் நடைமுறைக்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இவ்வாறு, பின்பற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர்; காலம் செல்லச் செல்ல, இவை விதிகளாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றன. ஒரு காலகட்டத்தின் கிரியையானது தேவனின் தனிப்பட்ட பரிபூரணத்திற்கு உட்படுத்தப்படாத மற்றும் நியாயத்தீர்ப்பைப் பெறாத ஒருவனால் வழிநடத்தப்பட்டால், அவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தேவனை எதிர்ப்பதில் மதவாதிகளாகவும் நிபுணர்களாகவும் மாறுவார்கள். எனவே, ஒருவன் ஒரு தகுதி வாய்ந்த தலைவராக இருந்தால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு, பரிபூரணமடைவதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தாலும், தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். காலப்போக்கில், அவர்கள் ஜனங்களை தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதிகளுக்கு வழிநடத்திச் சென்றுவிடுவார்கள். தேவன் செய்யும் கிரியையானது மனுஷனின் மாம்சத்துடன் ஒத்துப்போவதில்லை. இது மனுஷனின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதில்லை, ஆனால் மனுஷனின் கருத்துக்களை எதிர்க்கிறது; இது தெளிவற்ற மதச் சாயங்களுடன் களங்கப்படுத்தப்படுவதும் இல்லை. தேவனுடைய கிரியையின் முடிவுகளை அவரால் பரிபூரணப்படுத்தப்படாத ஒருவனால் அடைய முடியாது; அவை மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை.

மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவைதான். தேவனின் ஆறாயிரம் ஆண்டுக்காலக் கிரியைகளில் இருக்கும் ஏதேனும் சட்டங்களை நீ அறிவாயா? மனுஷன் செய்யும் கிரியையில் பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, மேலும் மனுஷ மூளை மிகவும் இறுமாப்புள்ளதாக இருக்கிறது. ஆகவே, மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்தின் எல்லைக்குள் இருக்கும் அறிவு மற்றும் புரிதலாகவே இருக்கிறது. இதைத் தவிர மனுஷனால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மனுஷனின் அனுபவங்கள் அல்லது அறிவானது அவனது உள்ளார்ந்த வரங்களிலிருந்தோ அல்லது அவனது உள்ளுணர்விலிருந்தோ எழுவதில்லை; அவை தேவனின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி வழிநடத்துதல் காரணமாக எழுகின்றன. இந்த வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும் மனத்திறன் மட்டுமே மனுஷனிடம் இருக்கிறது, ஆனால் தெய்வீகத்தன்மை என்பது என்ன என்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடிய எந்த மனத்திறனும் இல்லை. மனுஷனால் ஊற்றாக இருக்க முடியாது; அவனால் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்க முடியும். இதுவே மனுஷனின் உள்ளுணர்வு ஆகும், ஒரு மனுஷனாக இருக்க வேண்டியவனிடம் இருக்கக்கூடிய மனத்திறன் இதுதான். தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனத்திறனை மனுஷன் இழந்து, உள்ளுணர்வையும் இழந்தால், அவன் மிகவும் விலையேறப்பெற்றதை இழந்து, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் கடமையையும் இழக்கிறான். ஒருவன் தேவனின் வார்த்தையையோ அல்லது அவரது கிரியையையோ அறிந்திருக்கவில்லை அல்லது அதைப்பற்றிய அனுபவம் அவனுக்கு இல்லை என்றால், அவன் தனது கடமையை இழக்கிறான், அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக அவன் செய்ய வேண்டிய கடமை, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் என்ற மேன்மையையும் இழக்கிறான். தெய்வீகம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது தேவனின் உள்ளுணர்வாக இருக்கிறது, இது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் அல்லது நேரடியாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டாலும்; இது தேவனின் ஊழியம்தான். மனுஷன் தேவனின் கிரியையின் போது அல்லது அதற்குப் பிறகு தனது சொந்த அனுபவங்களை அல்லது அறிவை வெளிப்படுத்துகிறான் (அதாவது, அவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறான்); இதுவே மனுஷனின் உள்ளுணர்வும் கடமையுமாகும், மேலும் மனுஷன் அடைய வேண்டியதும் இதுதான். மனுஷனின் வெளிப்பாடு தேவன் வெளிப்படுத்துவதை விட மிகக் குறைவுதான் என்றாலும், மனுஷனின் வெளிப்பாடு பல விதிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், மனுஷனானவன் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும், மேலும் அவன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மனுஷன் தன் கடமையை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அவனுக்குச் சிறிதளவு தயக்கமும் இருக்கக்கூடாது.

பல ஆண்டுகளாக கிரியை செய்த பிறகு, மனுஷன் தனது பல வருட கிரியையின் அனுபவத்தையும், அவன் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தையும் விதிகளையும் சுருக்கமாகக் கூறுவான். நீண்ட காலமாக கிரியை செய்தவனுக்கு பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஏவுதலை எவ்வாறு உணர முடியும் என்பது தெரியும்; பரிசுத்த ஆவியானவர் எப்போது கிரியை செய்கிறார், எப்போது கிரியை செய்வதில்லை என்பதை அவன் அறிவான்; ஆத்துமபாரம் கொண்டிருக்கும்போது எப்படிப் பேசுவது என்று அவனுக்குத் தெரியும்; பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் இயல்பான நிலை மற்றும் ஜீவிதத்தில் ஜனங்களுடைய வளர்ச்சியின் சாதாரண நிலை குறித்து அவன் அறிந்திருக்கிறான். அத்தகைய நபர் பல ஆண்டுகளாக கிரியை செய்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்திருக்கிறான். நீண்ட காலமாக கிரியை செய்தவர்கள் உறுதியாகவும், நிதானமாகவும் பேசுகிறார்கள்; அவர்களுக்குப் பேச எதுவும் இல்லாதபோதும் கூட, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தங்களுக்குள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேட தொடர்ந்து ஜெபிக்க முடியும். அவர்கள் கிரியை செய்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள். நீண்ட காலமாகக் கிரியை செய்த, அதிக அனுபவமுள்ள மற்றும் பல பாடங்களைக் கற்றுக் கொண்ட ஒருவன், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கும் அளவுக்கு தனக்குள் விஷயங்களைக் கொண்டிருக்கிறான்; இது அவனது நீண்டகாலக் கிரியையின் குறைபாடாக இருக்கிறது. இப்போது கிரியை செய்யத் தொடங்கியவன் மனுஷ படிப்பினைகள் அல்லது அனுபவத்தால் கலப்படமற்றவனாக இருக்கிறான், குறிப்பாக பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது குறித்துத் தெரியாமல் இருக்கிறான். இருப்பினும், கிரியையின் போது, பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை எப்படி உணரவேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக்கொள்கிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், மற்றவர்களின் பெலவீனத்தை சரியாகத் தாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், மற்றும் கிரியை செய்பவர்கள் வைத்திருக்க வேண்டிய பிற பொதுவான அறிவையும் அறிந்துகொள்கிறான். காலப்போக்கில், அவன் தனது கையின் பின்புறத்தை அறிந்துகொள்வது போல அத்தகைய ஞானத்தையும், கிரியை செய்வதற்கான பொதுவான அறிவையும் அறிந்துகொள்கிறான், மேலும் அவன் கிரியை செய்யும் போது அவற்றை எளிதாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் தாம் கிரியை செய்யும் முறையை மாற்றும்போது, அவன் தனது பழைய கிரியையின் அறிவையும் பழைய கிரியையின் விதிகளையும் கடைப்பிடிக்கிறான், மேலும் கிரியையின் புதிய வல்லமைகள் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறான். பரிசுத்த ஆவியானவரின் பல வருட கிரியையும் அவரது பிரசன்னமும் வழிகாட்டுதல்களும் நிறைந்திருப்பது அவனுக்கு கிரியையைப் பற்றிய கூடுதல் படிப்பினைகளையும் அதிக அனுபவத்தையும் தருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பெருமை இல்லாத தன்னம்பிக்கையால் அவனை நிரப்புகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவன் பெற்றுள்ள பொதுவான அறிவால் அவன் தனது சொந்தக் கிரியை மற்றும் உள்ளடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். குறிப்பாக, மற்றவர்கள் பெறாத அந்த விஷயங்களைப் பெற்றுக் கொண்டாலோ அல்லது உணர்ந்தாலோ அது அவனுக்கு இன்னும் அதிக நம்பிக்கையைத் தருகிறது; அவனுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அணைக்க முடியாது என்று தெரிகிறது, அதே நேரத்தில் மற்றவர்கள் இந்தச் சிறப்பு உபசரிப்புக்குத் தகுதி பெற்றிருக்கவில்லை. அவனைப் போன்ற ஜனங்கள், அதாவது பல ஆண்டுகளாகக் கிரியை செய்தவர்கள் மற்றும் அவர்களைப் பயன்படுத்துவது கணிசமான மதிப்பை தரும் என்பவர்கள் மட்டுமே அதை அனுபவிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை அவன் ஏற்றுக்கொள்வதற்கு இந்த விஷயங்கள் பெரும் தடையாக இருக்கின்றன. புதிய கிரியையை அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ஒரே இரவில் அவனால் அவ்வாறு செய்ய முடியாது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவன் பல திருப்பங்களைக் கடந்து செல்வான் என்பது உறுதி. இந்த நிலைமையை அவனுடைய பழைய கருத்துக்கள் தீர்க்கப்பட்டு, அவனது பழைய மனநிலை நியாயந்தீர்க்கப்பட்டப் பிறகு படிப்படியாகத்தான் மாற்றியமைக்க முடியும். இந்த படிகளுக்கு உள்ளாகாமல் அவன் தனது பழைய கருத்துக்களுடன் ஒத்துப்போகாத புதிய போதனைகளையும், கிரியைகளையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனுஷனுடன் சமாளிக்க வேண்டிய விஷயங்களில் இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது, மேலும் அதை மாற்றுவதும் எளிதல்ல. ஓர் ஊழியக்காரன் என்ற முறையில், அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிய புரிதலை அடையவும், அதன் வல்லமையைச் சுருக்கமாகவும் அறிந்து கொள்ள முடிந்தால், மற்றும் அவன் தனது கிரியைக்கான அனுபவங்களால் கட்டுப்படுத்தப்படாமலும், அவனால் பழைய கிரியையின் வெளிச்சத்தில் புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளவும் முடிந்தால், அவன்தான் புத்திசாலியான மனுஷன், தகுதியான ஊழியக்காரன். ஜனங்கள் பெரும்பாலும் இதுபோன்றவர்கள் தான்: அவர்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் கிரியையின் அனுபவத்தைச் சுருக்கமாகக் கூற முடியாமல் கிரியை செய்கிறார்கள், அல்லது, கிரியை பற்றிய அவர்களின் அனுபவத்தையும் ஞானத்தையும் சுருக்கமாகக் கூறிய பின்னர், அவர்கள் புதிய கிரியையை ஏற்றுக்கொள்வதில் தடை ஏற்படுகிறது, மேலும் அவர்களால் பழைய மற்றும் புதிய கிரியைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ அல்லது சரியாக நடத்தவோ முடிவதில்லை. ஜனங்களைக் கையாளுவது என்பது மிகவும் கடினமான விஷயம்! உங்களில் பெரும்பாலோர் இது போன்றவர்கள்தான். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பல ஆண்டுகளாக அனுபவித்தவர்களால் புதிய கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது, மேலும் அவர்கள் எப்போதும் ஒதுக்கி வைக்க முடியாத கருத்துக்கள் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் கிரியை செய்யத் தொடங்கிய ஒரு மனுஷனுக்கு கிரியை குறித்தப் பொதுவான அறிவு இருப்பதில்லை, சில எளிய விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்று கூடத் தெரிவதில்லை. ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கடினமானவர்கள்! அனுபவத்தில் மூத்தவர்கள் சிலர் மிகவும் பெருமிதம் கொள்கிறார்கள், மேலும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இளையவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள், ஆனாலும் அவர்களால் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, மேலும் பல ஆண்டுகளாக அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் கருத்துக்களையும் விட்டுவிட முடிவதில்லை. அந்த இளமையான அறிவற்ற ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடிந்து, அதை எண்ணி மிகவும் உற்சாகமாக இருந்தாலும் கூட, அவர்கள் எப்போதும் குழப்பமடைந்து, பிரச்சினைகள் ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அவர்கள் உற்சாகமானவர்கள் தான், ஆனால் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர்களுக்குச் சிறிதளவு அறிவு மட்டுமே இருக்கிறது, மேலும் அவர்களால் அதை அவர்களின் ஜீவிதங்களில் பயன்படுத்த முடிவதில்லை; இது முற்றிலும் பயனற்ற ஒரு கோட்பாடாக இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் பலர் இருக்கின்றனர்; உங்களில் எத்தனை பேர் பயன்படுத்த ஏற்றவர்கள்? பரிசுத்த ஆவியானவரின் தெளிவு மற்றும் வெளிச்சத்திற்குக் கீழ்ப்படிந்து தேவனின் சித்தத்திற்கு இணங்க நிர்வகிக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்களில் தற்போதுவரை பின்பற்றுபவர்களாக இருப்பவர்கள் மிகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகத் தெரிகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் கருத்துக்களை விட்டுவிடவில்லை, நீங்கள் இன்னும் வேதாகமத்தில் தேடுகிறீர்கள், தெளிவற்ற தன்மையை விசுவாசிக்கிறீர்கள், அல்லது கருத்துக்களில் அலைந்து திரிகிறீர்கள். இன்றைக்கான உண்மையான கிரியையைக் கவனமாக ஆராய்பவர்கள் அல்லது அதற்குள் ஆழமாகச் செல்பவர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் பழைய கருத்துகளுடன் இன்றைய வழியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்தகைய நம்பிக்கையுடன் உங்களால் எதைப் பெற முடியும்? உங்களுக்குள் வெளிப்படுத்தப்படாத பல கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றை எளிதில் வெளிப்படுத்தாமல், அவற்றை மறைக்க நீங்கள் வெறுமனே அதிகபட்ச முயற்சி செய்கிறீர்கள் என்றும் கூறலாம். நீங்கள் புதிய கிரியையை நேர்மையாக ஏற்பதில்லை, உங்கள் பழைய கருத்துக்களை விட்டுவிடவும் நீங்கள் திட்டமிடுவதில்லை; ஜீவிப்பதற்கான பல தத்துவங்கள் உங்களிடம் இருக்கின்றன, அவை மிகவும் கணிசமாக இருக்கின்றன. நீங்கள் உங்கள் பழைய கருத்துக்களை விட்டுவிடவில்லை, மேலும் புதிய கிரியையை நீங்கள் தயக்கத்துடன் கையாளுகிறீர்கள். உங்கள் இருதயங்கள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன, மேலும் நீங்கள் புதிய கிரியையின் படிகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. உங்களைப் போன்ற கழிவுகளால் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான கிரியையைச் செய்ய முடியுமா? அதை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்பும் கிரியையை உங்களால் மேற்கொள்ள முடியுமா? உங்களுடைய இந்த நடைமுறைகள் உங்கள் மனநிலையை மாற்றுவதற்கும் தேவனை அறிவதிலிருந்தும் உங்களைத் தடுக்கின்றன. நீங்கள் இவ்வாறு தொடர்ந்தால், நீங்கள் புறம்பாக்கப்படுவீர்கள்.

தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்தக் கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை. தேவனின் கிரியையிலிருந்து, அவர் எந்த வகையான நபர் என்று மனுஷனால் சொல்ல முடியாது. அவரது கிரியையின் அடிப்படையில் அவர் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபர் என்று மனுஷனால் வகைப்படுத்தவும் முடியாது. அவரது இருப்புநிலையானது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக அவரை வகைப்படுத்த முடியாததாக ஆக்குகிறது. மனுஷனால் அவரை மனுஷனல்லாத ஒருவராக மட்டுமே கருத முடியும், ஆனால் அவரை எந்தப் பிரிவில் வைக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரிவதில்லை, எனவே மனுஷன் அவரை தேவனின் பிரிவில் பட்டியலிட நிர்பந்திக்கப்படுகிறான். மனுஷன் அவ்வாறு செய்வது நியாயமற்றதாக இல்லை, ஏனென்றால் மனுஷனால் செய்ய முடியாத அளவுக்கு தேவன் ஜனங்களிடையே அதிகக் கிரியை செய்திருக்கிறார்.

தேவன் செய்யும் கிரியையானது அவருடைய மாம்சத்தினுடைய அனுபவத்தின் பிரதிநிதியாக இருப்பதில்லை; மனுஷன் செய்யும் கிரியையானது அவனது அனுபவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேவனால் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியும், அதே சமயம் மனுஷனால் சத்தியத்தை அனுபவித்ததற்கு ஒத்த அனுபவத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும். தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை, மேலும் அந்தக் கிரியையானது காலம் அல்லது நிலம் ஏற்படுத்தும் தடைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவரால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார். மனுஷனின் கிரியைக்கு நிபந்தனைகளும் சூழலும் இருக்கின்றன; அவை இல்லாமல், அவனால் கிரியை செய்ய இயலாது மற்றும் தேவனைப் பற்றிய அவனது அறிவை அல்லது சத்தியத்தின் அனுபவத்தை அவனால் வெளிப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை தேவனின் கிரியை என்றோ அல்லது மனுஷனின் கிரியை என்றோ சொல்ல, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நீ ஒப்பிட வேண்டும். தேவனால் செய்யப்பட்ட எந்தக் கிரியையும் இல்லை, மனுஷனின் கிரியை மட்டுமே இருக்கிறது எனில், மனுஷனின் போதனைகள்தான் உயர்ந்தவை என்றும், அவை வேறு யாருடைய திறனுக்கும் அப்பாற்பட்டவை என்றும் நீ வெறுமனே அறிந்து கொள்ளுவாய்; அவர்கள் பேசும் தொனிகளும், விஷயங்களைக் கையாள்வதில் அவர்களின் கொள்கைகளும், கிரியை செய்யும் அனுபவமும் நிலையான முறையும் மற்றவர்களுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. நல்ல திறமை வாய்ந்த மற்றும் உயர்ந்த அறிவைக் கொண்ட இந்த ஜனங்களை நீங்கள் அனைவரும் பாராட்டுகிறீர்கள், ஆனால் தேவனின் கிரியை மற்றும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மனுஷத்தன்மையானது எவ்வளவு உயர்ந்தது என்பதை உன்னால் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர் சாதாரணமானவராக இருக்கிறார், கிரியை செய்யும் போது அவர் இயல்பானவராகவும், உண்மையானவராகவும் இருந்தாலும் மனுஷரால் அளவிடமுடியாதவராக இருக்கிறார், ஆகவே அந்த விஷயமானது ஜனங்களை அவர்மீது ஒருவித பயபக்திகொள்ள வைக்கிறது. ஒரு நபரின் கிரியையில் அவனது அனுபவமானது குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், அல்லது அவனது கற்பனையும் பகுத்தறிவும் குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், மேலும் அவனது மனுஷத்தன்மையும் குறிப்பாக நல்லதாக இருக்கலாம்; இத்தகைய பண்புக்கூறுகளால் ஜனங்களின் போற்றுதலைத்தான் பெற முடியும், ஆனால் அவர்களின் பிரமிப்பையும் பயத்தையும் தூண்டாது. நன்றாகக் கிரியை செய்யக்கூடியவர்களையும், குறிப்பாக ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களையும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களையும் ஜனங்கள் அனைவரும் போற்றுகிறார்கள், ஆனால் அத்தகையவர்களால் ஒருபோதும் பயபக்தியை வெளிப்படுத்த முடியாது, போற்றுதலையும் பொறாமையையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால் தேவனின் கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைப் போற்றுவதில்லை; அதற்குப் பதிலாக, அவருடைய கிரியையானது மனுஷனுக்கு அப்பாற்பட்டது என்றும், மனுஷனுக்குப் புரியாதது என்றும், அது புதியது மற்றும் அற்புதமானது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவைதான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்குக் கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்குக் கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனைச் சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துவத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்குத் தகுதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவருடைய கிரியையை அனுபவித்தவர்கள், அவரை உண்மையாக அறிந்தவர்கள் அனைவரும் அவரைப் பயபக்தியுடன் உணர்கிறார்கள். இருப்பினும், அவரைப் பற்றிய தங்கள் கருத்துக்களை விட்டுவிடாதவர்களுக்கு—அவரை தேவனாகக் கருதாதவர்களுக்கு—அவரைப் பற்றி எந்தப் பயபக்தியும் இருப்பதில்லை, அவர்கள் அவரைப் பின்பற்றினாலும், அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதில்லை; அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படியாத ஜனங்கள் ஆவர். இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் அடைய விரும்புவது என்னவென்றால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவன்களும் சிருஷ்டிகருக்கு மரியாதைக்குரிய இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், நிபந்தனையின்றி அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆகியவைதான். அவருடைய அனைத்து கிரியைகளும் அடைய வேண்டிய இறுதி முடிவு இதுதான். இதுபோன்ற கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைச் சிறிதளவு கூட வணங்கவில்லை என்றால், மேலும் அவர்களின் கடந்த கால கீழ்ப்படியாமையானது மாறாவிட்டால், அவர்கள் புறம்பாக்கப்படுவது உறுதி. தேவனுக்கான ஒரு நபரின் அணுகுமுறையானது அவரைப் போற்றுவதோ அல்லது தூரத்திலிருந்தே அவருக்கு மரியாதை செலுத்துவதோ மட்டுமாக இருந்து, அவரைச் சிறிதளவு கூட நேசிப்பதாக இல்லை என்றால், இதுவே தேவன்மீது அன்பு இல்லாத ஒரு நபர் வந்துள்ளதன் விளைவாகும், மேலும் அந்த நபர் பரிபூரணமடைவதற்கான நிபந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. இவ்வளவு கிரியைகளாலும் ஒரு நபரின் உண்மையான அன்பைப் பெற முடியாவிட்டால், அந்த நபர் தேவனைப் பெறவில்லை என்றும், சத்தியத்தை உண்மையாகப் பின்தொடரவில்லை என்றும் அர்த்தமாகிறது. தேவனை நேசிக்காதவன் சத்தியத்தை நேசிப்பதில்லை, அதனால் அவனால் தேவனைப் பெற்றுக்கொள்ள முடியாது, தேவனின் அங்கீகாரத்தையும் பெற முடியாது. அத்தகையவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவித்தாலும், அவர்கள் நியாயத்தீர்ப்பை அனுபவித்தாலும், அவர்களால் தேவனை வணங்க முடிவதில்லை. இவர்களின் சுபாவம் மாறாததாக இருக்கிறது, மேலும் மிகவும் பொல்லாத மனநிலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனை வணங்காத அனைவருமே புறம்பாக்கப்பட வேண்டும், தண்டனைக்குரிய பொருள்களாக இருக்க வேண்டும், பொல்லாப்பு செய்பவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும், அநீதியான காரியங்களைச் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமாகத் துன்பப்பட வேண்டும்.

முந்தைய: ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்

அடுத்த: தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக