அத்தியாயம் 14

யுகங்கள் முழுவதும், எந்த மனிதனும் ராஜ்யத்திற்குள் நுழைந்ததில்லை, இதனால் யாரும் ராஜ்யத்தின் காலத்தினுடைய கிருபையை அனுபவிக்கவில்லை, ராஜ்யத்தின் ராஜாவைக் கண்டதுமில்லை. என் ஆவியின் வெளிச்சத்தின் கீழ் பலர் ராஜ்யத்தின் அழகைப் பற்றித் தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்தாலும், அவர்கள் அதன் வெளிப்புறத்தை மட்டுமே அறிவார்கள், ஆனால் அதன் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை அல்ல. இன்று, ராஜ்யம் பூமியில் முறையாக இருப்பதற்கு வருவதால், மனிதகுலத்தின் பெரும்பகுதி இன்னும் சரியாக செய்து முடிக்கவேண்டியது என்ன அல்லது ராஜ்யத்தின் காலத்தின்போது என்னென்ன ராஜ்ய ஜனங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லோரும் இதைப் பற்றி குழப்பமான நிலையில் இருப்பதாக நான் பயப்படுகிறேன். ராஜ்யம் முழுமையாக அடையப்பெறும் நாள் இன்னும் முழுமையாக வரவில்லை என்பதால், எல்லா மனிதர்களும் குழப்பமடைந்துள்ளனர், அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. தெய்வீகத்தில் எனது கிரியை முறையாக ராஜ்யத்தின் காலத்துடன் தொடங்குகிறது, மேலும் ராஜ்யத்தின் காலத்தின் இந்த முறையான துவக்கத்தில்தான் எனது மனநிலை படிப்படியாக மனிதகுலத்திற்கு வெளிப்படத் தொடங்குகிறது. எனவே, இந்தத் தருணத்தில்தான் பரிசுத்தமுள்ள எக்காளம் முறையாக ஒலிக்கத் தொடங்குகிறது, அனைவருக்கும் பிரகடனப்படுத்துகிறது. நான் அதிகாரப்பூர்வமாக என் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, ராஜ்யத்தில் ராஜாவாக ஆட்சி செய்யும்போது, என் ஜனங்கள் அனைவரும் காலப்போக்கில் என்னால் பரிபூரணமடைவார்கள். உலக நாடுகள் அனைத்தும் இடையூறு செய்யப்படும்போது, துல்லியமாக அந்தச் சமயத்திலே என் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு உருவாக்கப்படும், அதே போல, அதே நேரத்தில் நான் மறுரூபமாகி முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளுவேன். அந்த நேரத்தில், எல்லா ஜனங்களும் என் மகிமையுள்ள முகத்தைப் பார்த்து, என் உண்மையான முகத்தோற்றத்திற்குச் சாட்சி கொடுப்பார்கள். உலகத்தைச் சிருஷ்டித்ததிலிருந்து, ஜனங்களைச் சாத்தான் சீர்கெட்டுப்போகச் செய்யத் தொடங்கி இன்று எதுவரை சீர்கெட்டுப் போயிருக்கிறார்களோ அந்த அளவிற்கு, அவர்களின் சீர்கேட்டின் காரணமாகவே, நான் அவர்களின் பார்வையில், மென்மேலும் மறைவாகவும் மேலும் அதிகமாக ஆழங்காண முடியாதவாறும் ஆகிவிட்டேன். மனிதர்கள் என் உண்மையான முகத்தை ஒருபோதும் பார்த்ததில்லை, நேரடியாக ஒருபோதும் என்னுடன் தொடர்பு கொண்டதுமில்லை. மனிதர்களின் கற்பனையில் “நான்” என்பது கேள்விப்பட்டதாகவும் புராணக்கதையாகவுமே இருக்கிறது. ஆகவே, நான் இந்த மனித கற்பனையுடன்—அதாவது மனித எண்ணங்களுடன்—ஜனங்களின் மனதில் உள்ள “என்னைக்” கையாள்வதற்காக, பல ஆண்டுகளாக அவர்கள் வளர்த்துக்கொண்டுள்ள “நான்” என்ற நிலையை மாற்றுவதற்கு நான் உடன்படுகிறேன். இது எனது கிரியையின் கோட்பாடு. ஒரு நபரால் கூட முழுக்க முழுக்க அதை அறிந்து கொள்ள முடியவில்லை. மனிதர்கள் தாமாகவே என்னிடம் அடிபணிந்து இருந்தாலும், என்னை வணங்குவதற்கு என் முன்பாக வந்தாலும், இது போன்ற மனிதச் செயல்களை நான் அநுபவிக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் இருதயத்தில், ஜனங்கள் என் உருவத்தை வைத்திருக்கவில்லை, ஆனால் என்னுடையது அல்லாத ஓர் உருவத்தை வைத்திருக்கிறார்கள். ஆகையால், எனது மனநிலையைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லாததால், ஜனங்கள் என் உண்மையான முகத்தைக் கொஞ்சம்கூட அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவாக, அவர்கள் என்னை எதிர்த்தார்கள் அல்லது எனது நிர்வாக ஆணைகளை மீறிவிட்டார்கள் என்று அவர்கள் நம்பும்போது, நான் இன்னும் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறேன்—ஆகவே, அவர்களின் நினைவுகளில், நான் அவர்களைத் தண்டிப்பதை விட ஜனங்களுக்கு இரக்கம் காட்டும் தேவன், அல்லது அவரது வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்ற சிரத்தை கொள்ளாத தேவன். இவை அனைத்தும் மனித சிந்தனையிலிருந்து பிறந்த கற்பனைகள், அவை உண்மைகளுடன் ஒத்துப்போகவில்லை.

ஒவ்வொரு நாளும் நான் பிரபஞ்சத்தைக் கவனித்து வருகிறேன், நான் தாழ்மையுடன் என் வாசஸ்தலத்தில் ஒளிந்திருக்கிறேன், மனித ஜீவிதத்தை அனுபவித்து, மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் நெருக்கமாக ஆய்வு செய்கிறேன். யாரும் உண்மையாகத் தங்களை எனக்கு ஒப்புக்கொடுக்கவில்லை; யாரும் சத்தியத்தைப் பின்தொடரவில்லை. யாரும் என்னிடத்தில் மனசாட்சியுடன் இருந்ததில்லை அல்லது எனக்கு முன் தீர்மானங்களை எடுத்ததில்லை, பின்னர் அதனைத் தங்கள் கடமையாகக் கொள்ளவில்லை. நான் அவர்களிடம் வாழ அவர்களில் யாரும் என்னை அனுமதிக்கவில்லை, ஜனங்கள் தங்கள் சொந்த உயிர்களை மதிப்பதுபோல என்னை மதிக்கவில்லை. நடைமுறை யதார்த்தத்தில், என் தெய்வீகம் அனைத்தையும் யாரும் இதுவரை பார்த்ததில்லை; நடைமுறை தேவனுடன் தொடர்பு கொள்ள யாரும் இதுவரை தயாராக இல்லை. மனிதர்களைத் தண்ணீர் முழுவதுமாக விழுங்கும்போது, நான் தேங்கி நிற்கும் அந்த நீரிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, புதிதாக வாழ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். ஜனங்கள் வாழ்வதற்கான தங்கள் நம்பிக்கையை இழக்கும்போது, நான் அவர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து மேலே இழுக்கிறேன், அவர்கள் உயிர்வாழ என்னை ஓர் அஸ்திபாரமாகப் பயன்படுத்திக்கொண்டு, இதனால் அவர்கள் வாழ்க்கையில் மேலே செல்லத் தைரியத்தை அளிக்கிறேன். ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாதபோது, அவர்கள் கீழ்ப்படியாமையிலிருந்து என்னை அறிந்து கொள்ளுமாறு செய்கிறேன். மனிதர்களின் பழைய சுபாவத்தின் வெளிச்சத்திலும், என் இரக்கத்தின் வெளிச்சத்திலும், மனிதர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பதை விட, அவர்கள் மனந்திரும்பி ஒரு புதிய தொடக்கம் காண நான் அனுமதிக்கிறேன். அவர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும்போது, அவர்கள் உடலில் கடைசி மூச்சு மட்டுமே இருந்தாலும், சாத்தானின் தந்திரத்திற்கு இரையாகாமல் தடுத்து, நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறேன். ஜனங்கள் பலமுறை என் கரத்தைக் கண்டிருக்கிறார்கள், பல முறை அவர்கள் என் கனிவான முகத்தோற்றத்தையும் புன்னகை புரியும் முகத்தையும் பார்த்திருக்கிறார்கள், பலமுறை அவர்கள் என் மகத்துவத்தையும் கடுங்கோபத்தையும் பார்த்திருக்கிறார்கள். மனிதர்கள் என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாலும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதற்கான வாய்ப்புகளாக அவர்களின் பலவீனங்களை நான் பயன்படுத்தவில்லை. நான் மனிதர்களின் கஷ்டங்களை அனுபவிப்பது மனித பலவீனத்தின்மீது அனுதாபம் கொள்ள எனக்கு உதவியது. ஜனங்களின் கீழ்ப்படியாமை மற்றும் நன்றியுணர்வு அற்ற நிலைக்குப் பதிலளிக்கும் விதமாக மட்டுமே நான் பல்வேறு அளவுகளில் சிட்சைகளை விதிக்கிறேன்.

ஜனங்கள் பரபரப்பாக இருக்கும்போது நான் என்னை மறைத்துக்கொள்கிறேன், அவர்களின் ஓய்வு நேரத்தில் என்னை வெளிப்படுத்துகிறேன். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஜனங்கள் என்னைக் கற்பனை செய்கிறார்கள்; எல்லா வேண்டுதல்களுக்கும் இணங்குகிற தேவனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள். ஆகவே, பெரும்பாலானவர்கள் தேவனின் உதவியை நாடுவதற்காக மட்டுமே எனக்கு முன்பாக வருகிறார்கள், என்னை அறிந்து கொள்வதற்கான எந்தவொரு விருப்பத்தினாலும் அல்ல. நோயால் அவதியுறும் நிலையில், ஜனங்கள் அவசரமாக என் உதவியைக் கோருகிறார்கள். துன்பம் ஏற்படும் காலங்களில், அவர்கள் தங்கள் சிரமங்களைக் கூறி அவர்களுடைய துன்பங்களைத் போக்க வேண்டும் என்று தங்கள் முழு வல்லமையுடனும் என்னிடம் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், சௌகரியமான நிலையில் இருக்கும்போது ஒரு மனிதனால் கூட என்னை மேலும் நேசிக்க முடியவில்லை; அவர்கள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது அவர்களின் சந்தோஷத்தில் நான் பங்கெடுக்க வேண்டும் என்று ஒரு மனிதன்கூட என்னைக் கேட்டதில்லை. அவர்களுடைய சிறிய குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கும்போது, ஜனங்கள் நீண்ட காலமாகவே அவர்கள் தங்கள் குடும்பங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, என்னை ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள் அல்லது நான் உள்ளே நுழைவதைத் தடுக்க எனக்குக் கதவை மூடியிருக்கிறார்கள். மனித மனம் மிகவும் குறுகியது; என்னைப் போன்ற அன்பான, இரக்கமுள்ள, அணுகக்கூடிய ஒரு தேவனை வைத்துக்கொள்ளக் கூட முடியாத அளவுக்கு மிகக் குறுகியது. மனிதர்கள் மகிழ்ச்சியாகச் சிரிக்கும் காலங்களில் நான் பல முறை அவர்களால் நிராகரிக்கப்பட்டேன்; மனிதர்கள் தடுமாறும்போது பல முறை ஓர் ஊன்றுகோலாக என்மீது சாய்ந்திருக்கிறார்கள்; நோயால் பாதிக்கப்பட்ட ஜனங்களால் நான் பல முறை மருத்துவரின் பாத்திரத்துக்குத் தள்ளப்பட்டேன். மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்! அவர்கள் முற்றிலும் நியாயமற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள். மனிதர்களிடம் பொருந்தி இருக்க வேண்டும் என்று கருதக்கூடிய உணர்வுகள் கூட அவர்களிடம் அறியப்படவில்லை; அவர்களிடம் மனித அம்சத்தின் எந்தத் தடயமும் முற்றிலுமாக இல்லை. கடந்த காலத்தைச் சிந்தித்து, அதை நிகழ்காலத்துடன் ஒப்பிடுங்கள்: உங்களுக்குள் ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுகிறதா? உங்கள் கடந்த காலத்திலிருந்து சில விஷயங்களை நீங்கள் ஒழித்துவிட்டீர்களா? அல்லது அந்தக் கடந்த காலம் இன்னும் மாற்றீடு செய்யப்படவில்லையா?

நான் மலைத்தொடர்களையும் நதியின் பள்ளத்தாக்குகளையும் கடந்து, மனிதர்களின் உலகின் ஏற்றத் தாழ்வுகளை அனுபவித்து உணர்கிறேன். அவர்களின் மத்தியில் நான் சுற்றித் திரிந்தேன், பல ஆண்டுகளாக அவர்களின் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன், இருப்பினும் மனிதர்களின் மனநிலையில் கொஞ்சம்கூட மாற்றம் இல்லை என்று தெரிகிறது. ஜனங்களின் பழைய இயல்பு வேரூன்றி அவற்றிலேயே புதிதாக முளைவிட்டதுபோலத் தோன்றுகிறது. அந்தப் பழைய சுபாவத்தை அவர்களால் ஒருபோதும் மாற்ற இயலாது; அதன் அசல் அஸ்திபாரத்தின் மீது வெறுமனே ஓரளவு மேம்படுத்துகிறார்கள். ஜனங்கள் சொல்வது போல், சாராம்சம் மாறவில்லை, ஆனால் வடிவம் மிகவும் மாறிவிட்டது. ஜனங்கள் அனைவரும் பொய் வார்த்தைகளைக் கூறி என் பாராட்டுக்களைப் பெறலாம் என்று நினைத்து என்னை முட்டாளாக்கவும், என்னைத் திகைக்க வைக்கவும் முயற்சிக்கிறார்கள். மனித தந்திரங்களைப் பார்த்து நான் வியக்கவும் இல்லை, அதன்மீது கவனம் செலுத்துவதும் இல்லை. ஆத்திரத்தில் கோபம் கொள்வதைவிட, கண்டும் காணாது இருக்கும் மனப்பான்மையை நான் பின்பற்றுகிறேன். மனிதகுலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரத்தை வழங்க நான் திட்டமிட்டுள்ளேன், அதன் பிறகு, எல்லா மனிதர்களையும் ஒன்றாகக் கையாளுவேன். மனிதர்கள் அனைவரும், தங்களைத் தாங்களே நேசிக்காத தங்களைத் தாங்களே மதிக்காத, எதற்குமே லாயக்கற்றவர்களாக இருப்பதால், அவர்கள் நான் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் இரக்கம் மற்றும் அன்பைக் காட்ட வேண்டும் என்று ஏன் விரும்புகிறார்கள்? விதிவிலக்கு இல்லாமல், மனிதர்கள் தங்களைத் தாங்களே அறியவில்லை, மேலும் அவர்கள் எவ்வளவு மதிப்புடையவர்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் தங்களைத் தாங்களே எடைபோட ஒரு தராசில் நிற்க வேண்டும். மனிதர்கள் எனக்குச் செவிசாய்ப்பதில்லை, எனவே நானும் அவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் என்மீது கவனம் செலுத்துவதில்லை, எனவே நானும் அவர்கள்மீது எந்தக் கடினமான கிரியையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இது இரு உலகங்களிலும் சிறந்தது அல்லவா? என் ஜனமே, இது உங்களை விவரிக்கவில்லையா? என் முன்பாகத் தீர்மானங்களை எடுத்து, பின்னர் அவற்றைக் கைவிடாதவர் உங்களில் யார்? பல விஷயங்களில் அடிக்கடி மனதை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக என் முன்பாக நீண்டகால தீர்மானங்களை எடுத்தவர் யார்? எப்பொழுதும், மனிதர்கள் எனக்கு முன்பாகச் சௌகரியமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்கிறார்கள், பின்னர் அவை அனைத்தையும் துன்பம் ஏற்படும் நேரத்தில் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; பிற்பாடு, கொஞ்சம் கழித்து, அவர்கள் தங்கள் தீர்மானத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு எனக்கு முன் அமைக்கிறார்கள். குப்பைக் குவியலிலிருந்து மனிதகுலம் எடுத்த இந்தக் குப்பைகளை நான் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் மிகவும் மரியாதை அற்றவனா? சில மனிதர்கள் தங்கள் தீர்மானங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்கிறார்கள், சிலர் தூய்மையானவர்கள், சிலர் எனக்குப் பலியிடுவதற்கு அவர்களுக்கு மிகவும் விலைமதிப்பற்ற விஷயங்களாக உள்ளவற்றை வழங்குகிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரேமாதிரியாக இருக்கிறீர்கள் அல்லவா? ராஜ்யத்தில் என் ஜனங்களின் உறுப்பினர்களாக உங்கள் கடமைகளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நீங்கள் என்னால் வெறுக்கப்படுவீர்கள், நிராகரிக்கப்படுவீர்கள்!

மார்ச் 12, 1992

முந்தைய: அத்தியாயம் 13

அடுத்த: அத்தியாயம் 15

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக