அத்தியாயம் 24
என் தண்டனை எல்லா ஜனங்கள்மீதும் விழுகின்றது, ஆனாலும் அது எல்லா ஜனங்களிடமிருந்தும் தொலைவிலும் உள்ளது. ஒவ்வொரு நபரின் முழு ஜீவிதமும் என்மீது ஏற்பட்டுள்ள அன்பினாலும் வெறுப்பினாலும் நிறைந்திருக்கிறது, என்னை யாரும் எப்போதும் அறிந்திருக்கவில்லை—எனவே என்னைப் பற்றிய மனுஷனின் அணுகுமுறை உக்கிரமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது, மேலும் அது இயல்பாக இருக்க இயலாது. ஆனாலும் நான் எப்போதுமே மனுஷனைக் கவனித்துப் பாதுகாத்து வருகிறேன், ஏனெனில் அவனது மந்தப் புத்தியின் காரணமாக மட்டுமே அவனால் என் கிரியைகள் அனைத்தையும் பார்க்க, என் ஆர்வமுள்ள நோக்கங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை. எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் நான் முன்னணியில் இருக்கிறேன், எல்லா ஜனங்களுக்கு மத்தியிலும் நான் மிக உயர்ந்தவன்; மனுஷனுக்குத்தான் என்னைத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நான் மனுஷனிடையேயும், மனுஷ உலகில் அனுபவம் வாய்ந்த ஜீவிதத்திலும் ஜீவித்திருக்கிறேன், ஆனாலும் அவன் எப்போதும் என்னைப் புறக்கணித்து, என்னை விண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவர்போல நடத்தினான். அதன் விளைவாக, மனநிலை மற்றும் மொழியில் வேறுபாடுகள் இருப்பதால், ஜனங்கள் என்னைத் தெருவில் திரியும் ஓர் அந்நியன் போல நடத்துகிறார்கள். என் ஆடை, மிகவும் வழக்கத்துக்கு மாறானது என்று தோன்றுகிறது, அதன் விளைவாக மனுஷன் என்னை அணுகும் தைரியத்தை இழக்கிறான். அப்போதுதான் நான் மனுஷர்களிடையே ஜீவிதம் பாழடைந்திருப்பதை உணர்கிறேன், அப்போதுதான் மனுஷ உலகின் அநீதியை நான் உணர்கிறேன். வழிப்போக்கர்களிடையே நான் நடந்து செல்கிறேன், அவர்களின் முகங்களை எல்லாம் கவனிக்கிறேன். அவர்கள் அவர்களின் முகங்களைச் சோகத்தால் நிரப்பும் ஒரு நோய்க்கு மத்தியில் வாழ்வது போல இருக்கிறார்கள்; அவர்களை அதிலிருந்து விடுவிப்பதைத் தடுக்கும் தண்டனைக்கு மத்தியில் அவர்கள் வாழ்வது போல இருக்கிறார்கள். மனுஷன் தன்னைத் தானே கட்டிக்கொண்டு, அடக்கமாக இருப்பதாய்க் காட்டுகிறான். அநேக ஜனங்கள் நான் அவர்களைப் பாராட்டுவேன் என்று எண்ணி எனக்கு முன்பாகத் தங்களைப் பற்றி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள்; அநேக ஜனங்கள் வேண்டுமென்றே தங்களை என் முன் பரிதாபகரமாகக் காட்டுகிறார்கள், அதனால் அவர்கள் என் உதவியைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். என் முதுகுக்குப் பின்னால், ஜனங்கள் அனைவரும் என்னைத் தூற்றி, எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். நான் கூறுவது சரிதானே? இது மனுஷனின் உயிர்வாழும் உத்தி அல்லவா? நான் இல்லாமல் யார் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்தது? மற்றவர்களிடையே என்னை உயர்த்தியவர் யார்? ஆவியின் முன் கட்டுண்டவர்கள் யார்? சாத்தானுக்கு முன்பாக அவர்கள் எனக்கு அளித்த சாட்சியத்தில் உறுதியாக இருந்தவர் யார்? அவர்கள் என்னிடம் வைத்திருக்கும் “விசுவாசத்திற்குக்” கூடுதல் சத்தியத்தைச் சேர்த்தவர் யார்? என் காரணமாகப் பெரிய சிவப்பு வலுசர்ப்பத்தால் வெளியேற்றப்பட்டவர் யார்? ஜனங்கள் சாத்தானுடன் தங்கள் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள், இப்போது அதனுடன் சேற்றில் புரளுகிறார்கள்; அவர்கள் என்னை மீறுவதில் வல்லுநர்கள், அவர்கள் என்னை எதிர்ப்பவர்களைக் கண்டுபிடித்தவர்கள், அவர்கள் என்னைக் கையாள்வதற்கு, கடமைக்காகச் செய்யும் வழிகளில் “மேம்பட்ட மாணவர்கள்”. தனது சொந்த விதியின் பொருட்டு, மனுஷன் இங்கேயும் அங்கேயும் பூமியில் தேடுகிறான், நான் அவனை அழைக்கும்போது, அவனால் என் விலைமதிப்பற்ற தன்மையை உணரமுடியாமல், தன்னையே நம்பியிருப்பதில் தொடர்ந்து “நம்பிக்கைக்” கொண்டிருக்கிறான், மற்றவர்களுக்கு ஒரு “சுமையாக” இருக்க அவன் விரும்பவில்லை. மனுஷனின் “அபிலாஷைகள்” விலைமதிப்பற்றவை, ஆனால் ஒருபோதும் யாருடைய அபிலாஷைகளும் முழு மதிப்பீட்டைப் பெறவில்லை: அவை அனைத்தும் எனக்கு முன்பாக நொறுங்கி, ஒலி இல்லாமல் கவிழ்கின்றன.
நான் ஒவ்வொரு நாளும் பேசுகிறேன், ஒவ்வொரு நாளும் நான் புதிய விஷயங்களைச் செய்கிறேன். மனுஷன் தன் எல்லா வலிமையையும் ஒன்று சேர்க்கவில்லை என்றால், அவன் என் குரலைக் கேட்பதில் சிரமப்படுவான், என் முகத்தைப் பார்ப்பது அவனுக்குக் கடினமாக இருக்கும். பிரியமானவர் மிகவும் நன்றாக இருக்கலாம், அவரது பேச்சு மிக மிக மென்மையானதாக இருக்கலாம், ஆனால் மனுஷனால் அவருடைய மகிமையான முகத்தை எளிதில் காணவும், அவருடைய குரலைக் கேட்கவும் இயலாது. பல யுகங்களாக, யாரும் என் முகத்தை எளிதில் பார்த்ததில்லை. நான் ஒரு முறை பேதுருவிடம் பேசினேன், பவுல் முன்பாக “தோன்றினேன்”, ஆனால் வேறு யாரும்—இஸ்ரவேலரைத் தவிர—என் முகத்தை உண்மையிலேயே பார்த்ததில்லை. இன்று, நான் மனுஷர்களிடையே சேர்ந்து வாழத் தனிப்பட்ட முறையில் வந்துள்ளேன். இது உங்களுக்கு அரிதாகவும் விலைமதிப்பற்றதாகவும் தெரியவில்லையா? உங்கள் நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லையா? இதுபோலவே அது உங்களைக் கடந்து செல்ல அனுமதிக்க விரும்புகிறீர்களா? நேரக் கடிகாரத்தின் முட்கள் ஜனங்களின் மனதில் திடீரென அப்படியே நகராமல் நிற்க முடியுமா? அல்லது நேரத்தால் பின்னோக்கி ஓடத்தான் முடியுமா? அல்லது மனுஷன் மீண்டும் இளமையாக மாற முடியுமா? இன்றைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை மீண்டும் வருமா? மனுஷனின் “வீணாக்கப்பட்ட நேரத்திற்கு” ஒரு பொருத்தமான “வெகுமதியை” நான் கொடுப்பதில்லை. நான் வெறுமனே என் கிரியையைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபடுகிறேன், எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன், மனுஷன் சுறுசுறுப்பாக இருப்பதால் அல்லது அவனது அழுகையின் சத்தத்தினால் நேர ஓட்டத்தை நான் நிறுத்தமாட்டேன். பல ஆயிரம் ஆண்டுகளாக, என் பலத்தை யாராலும் பிரிக்க முடியவில்லை, என் அசல் திட்டத்தை யாராலும் கெடுக்க முடியவில்லை. நான் விண்ணை மிஞ்சி, யுகங்களை விரிவுபடுத்தி, என் முழு திட்டத்தின் கருவை மேலேயும் எல்லாவற்றிலும் தொடங்குவேன். மனுஷர்கள் வாய் திறந்து இந்த விஷயங்களுக்காக ஜெபித்தாலும், எல்லாவற்றையும் மறந்து அவர்கள் கைகளை நீட்டி இவற்றைக் கோரியிருந்தாலும், ஒருவர் கூட என்னால் விசேஷமாக நடத்தப்படவில்லை அல்லது என் கைகளிலிருந்து “வெகுமதிகளைப்” பெறவில்லை. இவர்களில் ஒருவர் கூட என்னை அசைக்கவில்லை, இவர்கள் அனைவரும் என் “இருதயமற்ற” குரலால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அநேக ஜனங்கள் தாங்கள் “மிகவும் இளமையானவர்கள்” என்று இன்னும் நம்புகிறார்கள், ஆகவே நான் மிகுந்த கருணை காட்ட வேண்டும் என்றும், இரண்டாவது முறையாக அவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்றும் காத்திருக்கிறார்கள், மேலும் பின் வாசல் வழியாக அவர்களை உள்ளே வர அனுமதிக்குமாறு அவர்கள் கேட்கிறார்கள். ஆயினும் எனது திட்டத்தில் நானே எவ்வாறு இயல்பாகத் தலையிட முடியும்? மனுஷன் பூமியில் இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அவனது இளமைக்காகப் பூமியை சுழற்றுவதை என்னால் நிறுத்த முடியுமா? மனுஷனின் மூளை மிகவும் சிக்கலானது, இருப்பினும் அதில் இல்லாத விஷயங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, மனுஷனின் மனதில் எனது கிரியையை வேண்டுமென்றே குறுக்கிடச் செய்யும் “அற்புதமான வழிகள்” தோன்றுகின்றன.
மனுஷனின் பாவங்களை நான் மன்னித்து, அவனுடைய பலவீனம் காரணமாக அவனுக்கு விசேஷ தயவைக் காட்டிய நேரங்கள் பல என்றாலும், அவனது அறியாமை காரணமாக நான் அவனுக்குத் தகுந்த சிகிச்சை அளித்த நேரங்களும் பல உள்ளன. என் தயவை எப்படிப் பாராட்டுவது என்று மனுஷன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, அதாவது அவன் தற்போதைய சூழ்நிலையில் மூழ்கியிருக்கிறான்: தூசியால் மூடப்பட்டிருக்கிறான், அவனது ஆடைகள் கந்தலாகியுள்ளன, தலைமுடியானது வளர்ந்த களைகள்போல அவன் தலையை மூடிக்கொள்கின்றன, அவன் முகத்தில் அழுக்குப் படிந்துள்ளது, அவனது கால்கள் பண்படாத தானே செய்த காலணிகளுக்குள் இருக்கின்றன, அவனது கைகள் இறந்த கழுகின் நகங்களைப் போல இருபக்கங்களிலும் தொங்குகின்றன. நான் என் கண்களைத் திறந்து பார்க்கும்போது, மனுஷன் அதல பாதாளத்திலிருந்து வெளியேறி வந்ததைப் போல இருக்கிறான். என்னால் உதவ முடியாது, ஆனால் கோபப்பட முடியும்: நான் எப்போதும் மனுஷனைச் சகித்துக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் பிசாசு என் பரிசுத்தமான ராஜ்யத்திற்கு அது விரும்பியபடி வந்து செல்ல நான் எப்படி அனுமதிக்க முடியும்? என் வீட்டில் ஒரு பிச்சைக்காரன் இலவசமாகச் சாப்பிட நான் எவ்வாறு அனுமதிப்பேன்? என் வீட்டு விருந்தினராக ஒரு அசுத்தமான அரக்கன் வந்திருப்பதை நான் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? மனுஷன் எப்போதுமே “தனக்குத் தானே கண்டிப்பாகவும்,” “மற்றவர்களிடம் மென்மையாகவும்” இருந்திருக்கிறான், ஆனாலும் அவன் ஒருபோதும் என்னிடம் மரியாதைப்பண்புடன் இருந்ததில்லை, ஏனென்றால் நான் பரலோகத்தில் உள்ள தேவன், ஆகவே அவன் என்னை வித்தியாசமாக நடத்துகிறான், மேலும் அவன் ஒருபோதும் என்மீது சிறிதும் பாசம் கொண்டிருக்கவில்லை. மனுஷனின் கண்கள் குறிப்பாகப் புத்திசாலித்தனத்துடன் இருப்பதைப் போன்றது: அவன் என்னை எதிர்கொண்டவுடன், அவனது முகத்தோற்றம் உடனடியாக மாறுகிறது, மேலும் அவன் தனது குளிர்ந்த, உணர்ச்சியற்ற பார்வைக்கு இன்னும் கொஞ்சம் வெளிப்பாட்டைச் சேர்க்கிறான். மனுஷனின் என்னைப் பற்றிய அணுகுமுறையின் காரணமாக நான் அவனுக்குத் தகுந்த தடைகளை விதிப்பதில்லை, ஆனால் பிரபஞ்சங்களுக்கு மேலேயுள்ள வானங்களைப் பார்த்து, பின்னர் பூமியில் எனது கிரியையைச் செய்கிறேன். மனுஷனின் நினைவுகளில், நான் எந்தவொரு நபரிடமும் ஒருபோதும் கருணை காட்டியதில்லை, அதே சமயம் நான் யாரையும் தவறாகவும் நடத்தவில்லை. மனுஷன் அவனது இருதயத்தில் எனக்கு ஒரு “வெற்று இருக்கையை” விட்டுவைக்காததால், நான் எச்சரிக்கையைக் காற்றில் கடாசிவிட்டு அவனுக்குள் வசிக்கும்போது, அவன் சம்பிரதாயங்களுக்கு மாறாக என்னை வெளியேற்றி, பின்னர் என் இன்பத்திற்காகத் தன்னை வழங்க இயலாது என்று மென்மையான பேச்சு மற்றும் புகழ்ச்சியைப் பயன்படுத்திச் சாக்குப்போக்கு கூறுகிறான். அவன் பேசும்போது, எந்த நேரத்திலும் மனுஷனுக்குப் பேரழிவு வரக்கூடும் என்பது போல அவனது முகம் அடிக்கடி “இருண்ட மேகங்களால்” சூழப்பட்டது போல மாறுகிறது. ஆயினும் அவன் சம்பந்தப்பட்ட ஆபத்துக்களைக் கருத்தில் கொள்ளாமல் என்னை வெளியேறச் சொல்கிறான். என் சொற்களால் மற்றும் அரவணைப்பால் நான் மனுஷனைத் தழுவினாலும், அவனுக்குச் செவிப்புலன் இல்லை என்பது போலக் காணப்படுவதால், அவன் என் குரல்மீது சிறிதளவேனும் கவனம் செலுத்துவதில்லை, அதற்குப் பதிலாக அவன் விரைவாக வெளியேறும்போது அவனது தலையைப் பற்றிக் கொள்கிறான். நான் சிறிய ஏமாற்றத்தோடு மனுஷனிடமிருந்து வெளியேறுகிறேன், ஆனால் சிறிதளவு கோபத்தையும் உணர்கிறேன். இதற்கிடையில், மனுஷன் பெரும் காற்று மற்றும் வலிமையான அலைகளின் தாக்குதலுக்கு மத்தியில் உடனடியாக மறைந்து விடுகிறான். விரைவில், அவன் என்னிடம் கூக்குரலிடுகிறான், ஆனால் அவனால் காற்று மற்றும் அலைகளின் இயக்கத்தை எவ்வாறு பாதிக்க முடியும்? படிப்படியாக, மனுஷன் காணாமல்போகும் வரை, மனுஷனின் அனைத்துத் தடயங்களும் தொலைந்துபோகின்றன.
யுகங்களுக்கு முன்பு, பிரபஞ்சங்களுக்கு மேலே இருந்து நான் எல்லா நிலங்களையும் பார்த்தேன். நான் பூமியில் ஒரு பெரிய முயற்சியைத் திட்டமிட்டேன்: என் சொந்த இருதயத்தைப் போன்ற ஒரு மனுஷகுலத்தை உருவாக்குவது, பரலோகத்தில் இருந்ததைப் போலப் பூமியில் ஒரு ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது, வானங்களை நிரப்ப என் சக்தியைப் பயன்படுத்துவது, பிரபஞ்சம் முழுமைக்கும் என் ஞானத்தைப் பரப்புவது, இவையே என் திட்டம். இன்று, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எனது திட்டத்தைத் தொடர்கிறேன். பூமியில் எனது திட்டம் அல்லது இரட்சிப்பு பற்றி யாருக்கும் தெரியாது, மேலும் பூமியில் என் ராஜ்யத்தை அவர்கள் மிகக் குறைவாகவே பார்க்கிறார்கள். ஆகையால், மனுஷன் நிழல்களைத் துரத்துகிறான், எனக்கு முன்பாக வந்து என்னை முட்டாளாக்க முயற்சிக்கிறான், பரலோகத்தில் என் ஆசீர்வாதங்களுக்கு ஓர் “அமைதியான விலையைக்” கொடுக்க விரும்புகிறான். இதன் விளைவாக, அவன் என் கோபத்தைத் தூண்டுகிறான், நான் அவன்மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறேன், ஆனாலும் அவன் இன்னும் விழிக்கவில்லை. அவன் தனது சொந்த வாய்ப்புகளைத் தவிர வேறு எதையும் பின்பற்றாததால், நிலத்துக்கு மேலே இருப்பதை முழுமையாக அறியாமல், அவன் பாதாளத்தில் வேலை செய்வதைப் போல இருக்கிறான். எல்லா ஜனங்களிடையேயும், என் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் கீழ் வாழும் எவரையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் இருள் நிறைந்த உலகில் வாழ்கிறார்கள், அவர்கள் இருளுக்கு மத்தியில் வாழப் பழகிவிட்டதாகத் தெரிகிறது. வெளிச்சம் வரும்போது அவர்கள் வெகுதொலைவிற்குச் சென்றுவிடுகிறார்கள், ஏதோ அந்த வெளிச்சம் அவர்களின் வேலையைத் தொந்தரவு செய்தது போல; இதன் விளைவாக, ஏதோ அந்த வெளிச்சம் அவர்களின் அமைதியை எல்லாம் சிதைத்துவிட்டு, அவர்களைச் சரியாகத் தூங்கவிடாமல் செய்தது போல அவர்கள் சற்று எரிச்சலுடன் காணப்படுகிறார்கள். இதன் விளைவாக, வெளிச்சத்தை விரட்ட மனுஷன் தன் முழு பலத்தையும் வரவழைக்கிறான். வெளிச்சத்திற்கும்கூட விழிப்புணர்வு இல்லாததாகத் தோன்றுகிறது, வெளிச்சமும் முன்னுணர்வு இல்லாமல் மனுஷனை அவனது தூக்கத்திலிருந்து எழுப்புகிறது, மேலும் மனுஷன் விழிக்கும்போது, கோபத்தை வெல்ல அவன் தன் கண்களை மூடிக்கொள்கிறான். அவன் என்னிடம் சற்றே அதிருப்தி அடைந்துள்ளான், ஆனாலும் என் இருதயத்தில் எனக்கு மதிப்பீடு தெரியும். நான் படிப்படியாக வெளிச்சத்தைத் தீவிரப்படுத்துகிறேன், எல்லா ஜனங்களையும் என் ஒளியின் மத்தியில் வாழ வைக்கிறேன், அதாவது நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் வெளிச்சத்துடன் தொடர்பு கொள்வதில் திறமையானவர்களாக மாறுகிறார்கள், மேலும், அனைவரும் வெளிச்சத்தைப் புதையலாகக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில், என் ராஜ்யம் மனுஷர்களிடையே வந்துவிட்டது, எல்லா ஜனங்களும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள், பூமி திடீரென்று மகிழ்ச்சியால் நிரம்புகிறது, வெளிச்சத்தின் வருகையால் பல ஆயிர ஆண்டுகால மௌனம் உடைக்கப்படுகிறது…
மார்ச் 26, 1992