அத்தியாயம் 26
எனது வீட்டில் தங்கியிருக்கிறவர் யார்? என் பொருட்டு என்னுடன் ஆதரவாக நின்றவர் யார்? எனது சார்பாகத் துன்பப்பட்டவர் யார்? எனக்கு முன்பாக அவருடைய வார்த்தைகளுக்கு உறுதியளித்தவர் யார்? இப்போதுவரை என்னைப் பின்தொடர்ந்து, இன்னும் அலட்சியப்படாமல் இருப்பவர் யார்? எல்லா மனிதர்களும் ஏன் உணர்ச்சியற்று கடின நெஞ்சத்தோடு இருக்கிறார்கள்? மனிதன் என்னை ஏன் கைவிட்டான்? மனிதன் என்மீது ஏன் அலுப்படைகிறான்? மனிதர்களின் உலகில் ஏன் அன்பு இல்லை? சீயோனில் இருக்கும்போது, வானத்திலுள்ள அரவணைப்பை நான் ருசித்திருக்கிறேன், சீயோனில் இருக்கும்போது வானத்திலுள்ள ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கிறேன். மீண்டும், நான் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன், மனித உலகின் கசப்பை நான் ருசித்திருக்கிறேன், மனிதர்களிடையே நிலவும் வெவ்வேறு நிலைகள் அனைத்தையும் நான் எனது சொந்தக் கண்களால் கண்டிருக்கிறேன். இதை அறியாமல், நான் “மாறியிருக்கிறேன்” என்பதாக மனிதனும் மாறியிருக்கிறான், இந்த வகையாக மட்டுமே அவன் இன்றைய நாளுக்கு வந்திருக்கிறான். மனிதன் என் பொருட்டு எதையாவது செய்ய வேண்டும் என்று நான் கோரவில்லை, அல்லது எனக்குப் பலன் தரும் வகையில் எந்தப் பெருக்கத்தையும் செய்ய வேண்டும் என்றும் நான் கோரவில்லை. அவன் எனது திட்டத்திற்கு ஏற்றாற்போல் செயல்பட இயலுமாறு இருக்கவேண்டும், எனக்குக் கீழ்ப்படியாமலோ அல்லது எனக்கு ஒரு அவமானத்தின் அடையாளமாகவோ இருக்கக் கூடாது, ஆனால் என்னை எதிரொலிக்கும் சாட்சியத்தைத் தாங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். மனிதர்களிடையே, எனக்கு நல்ல சாட்சியத்தைத் தாங்கி, என் பெயரை மகிமைப்படுத்தியவர்களும் இருந்திருக்கிறார்கள், ஆனால் மனிதனின் நடைமுறைகள் அல்லது நடத்தை என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? என் இருதயத்துடன் ஒருநிலைப்படுத்துவது அல்லது எனது சித்தத்தைத் திருப்திப் படுத்துவது அவனுக்கு எப்படிச் சாத்தியமாகும்? பூமியிலுள்ள மலைகள் மற்றும் நீர்நிலைகள் மற்றும் பூமியிலுள்ள பூக்கள், புற்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் என் கரங்களின் கிரியையைக் காட்டுகின்றன, அனைத்தும் என் நாமத்திற்காகவே ஜீவித்திருக்கின்றன. என் கோரிக்கையின் தரநிலையை இன்னும் ஏன் மனிதனால் அடைய முடியவில்லை? இது அவனது மோசமான தாழ்வுற்ற நிலைமையினால் இருக்குமா? நான் அவனை உயர்த்திப் பிடித்ததன் காரணமாக இருக்குமா? நான் அவனிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறேன் என்பதால் இருக்குமா? என் கோரிக்கைகளுக்கு மனிதன் எப்போதும் ஏன் பயப்படுகிறான்? இன்று, ராஜ்யத்தில் உள்ள ஏராளமான மக்களிடையே, நீ என் சத்தத்தை மட்டும் கேட்கிறாய், ஆனால் என் முகத்தைக் காண ஏன் விரும்பவில்லை? என் ஆவியுடன் பொருத்தம் செய்யாமல் எனது வார்த்தைகளை மட்டும் நீ ஏன் பார்க்கிறாய்? மேலே வானத்திலும் கீழே பூமியிலும் என்னை ஏன் வேறுபடுத்தி வைத்திருக்கிறீர்கள்? நான் பூமியில் இருக்கும்போது வானத்தில் இருக்கும் அதே விதமாக இல்லாததனாலா? வானத்தில் இருக்கும்போது நான் கீழே பூமிக்கு இறங்கிவர முடியவில்லை என்பதாலா? நான் பூமியில் இருக்கும்போது, வானத்துக்குச் செல்லத் தகுதியற்றவன் என்பதாலா? நான் பூமியில் இருக்கும்போது, ஒரு தாழ்ந்த உயிரினம், நான் வானத்தில் இருக்கும்போது, ஒரு உயர்ந்தவனாக இருப்பதைப் போலவும், வானத்துக்கும் பூமிக்கும் இடையில் ஓர் எல்லையற்ற இடைவெளி இருப்பதைப் போலவும் இது தோற்றமளிக்கிறது. ஆயினும், மனித உலகில், அவர்கள் இந்த வஸ்துக்களின் தோற்றம் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் என் வார்த்தைகளுக்குச் சத்தம் மட்டுமே உண்டு, அர்த்தமில்லை என்பது போல எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறார்கள். எல்லா மனுஷர்களும் என் வார்த்தைகள் மீது சக்தியைச் செலவிடுகிறார்கள், என் வெளிப்புறச் சாயல் ஒற்றுமை மீது அவர்களுடைய சொந்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியைச் சந்திக்கிறார்கள், அவர்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை, அதற்குப் பதிலாக என் வார்த்தைகளால் வீழ்த்தப்படுகிறார்கள், மீண்டும் எழுந்திருக்கத் துணிவதில்லை.
நான் மனிதகுலத்தின் நம்பிக்கையைச் சோதித்துப் பார்க்கும்போது, எந்த ஒரு மனிதனும் உண்மையான சாட்சியம் கொடுக்கவில்லை, எந்த ஒருவனும் தன்னுடைய அனைத்தையும் வழங்கும் சக்தி உடையவன் அல்ல; மாறாக, நான் அவனது இதயத்தைப் பறித்துக் கொண்டு போகிறேன் என்பதுபோல. மனிதன் தொடர்ந்து ஒளிந்துகொண்டு தன் இருதயத்தைத் திறக்க மறுக்கிறான். யோபு கூட அவனது சோதனையின்போது ஒருபோதும் உண்மையாக உறுதியுடன் நிற்கவில்லை, அவனது துன்பங்களுக்கு மத்தியில் இனிமையை வெளிப்படுத்தவில்லை. மக்கள் அனைவருமே வசந்த காலத்தின் இளஞ்சூட்டில் பசுமையின் லேசான சுவட்டை உருவாக்குகிறார்கள்; குளிர்காலத்தின் குளிர்ந்த கொடுங்காற்றில் அவை ஒருபோதும் பசுமையாக இருக்காது. அவனது எலும்பும் தோலுமான மெலிந்த உடற்கட்டு மூலம், மனிதன் என் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. மனிதர்கள் அனைவரிலும், மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்து காட்டக்கூடிய எவரும் இல்லை, ஏனென்றால் எல்லா மனிதர்களும் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள், அவர்களில் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இல்லை, அவர்களில் ஒருவரை ஒருவர் வேறுபடுத்திக் காட்டக்கூடியவை மிகவும் சிறிய அளவே ஆகும். இதே காரணத்தினால், மனிதர்களால் இன்றும்கூட என் கிரியைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. என் தண்டனை எல்லா மனிதர்களின் மீதும் இறங்கி வரும்போதுதான், நான் எதையும் செய்யாமலே அல்லது யாரையும் கட்டாயப்படுத்தாமலே, அவர்கள் தங்களையும் அறியாமல், என் கிரியைகளை அறிந்துகொள்கிறார்கள், மனிதன் என்னை அறிந்துகொள்கிறான், அதன் மூலம் என் கிரியைகளுக்குச் சாட்சி கொடுக்கிறான். இது எனது திட்டம், இது எனது கிரியைகளின் அம்சத்தின் வெளிப்பாடு ஆகும், இதைத்தான் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும். ராஜ்யத்தில், எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் புத்துயிர் பெற மற்றும் அவற்றின் உயிர் சக்தியை மீண்டும் பெறத் தொடங்குகின்றன. பூமியின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒரு நிலத்துக்கும் மற்றொரு நிலத்துக்கும் இடையிலான எல்லைகளும் மாறத் தொடங்குகின்றன. ஒரு நிலம் மற்றொரு நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது, ஒரு நிலமும் மற்றொரு நிலமும் ஒன்றிணையும்போது, இந்த நேரத்தில்தான் நான் எல்லா நாடுகளையும் துண்டு துண்டாக உடைப்பேன் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளேன். இந்த நேரத்தில், படைக்கப்பட்ட அனைத்தையும் புதுப்பித்து முழு பிரபஞ்சத்தையும் நான் மறுபகிர்வு செய்வேன், இதன்மூலம் பிரபஞ்சத்தை ஒழுங்கமைத்து பழையதைப் புதியதாக மாறுதல் செய்வேன்—இதுதான் எனது திட்டம் மற்றும் இவைதான் எனது கிரியைகள். தேசங்களும் உலக மக்கள் அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி வரும்போது, நான் வானத்தின் அருட்கொடை அனைத்தையும் எடுத்து அதனை மனித உலகிற்கு ஒப்படைப்பேன், இதனால், என் நிமித்தம், அந்த உலகம் இணையற்ற அருட்கொடையுடன் இருக்கும். ஆனால் பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்:
நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.
எனது சத்தம் தீவிரமாக ஆழம் அடையும்போது, பிரபஞ்சத்தின் நிலையையும் நான் கவனிக்கிறேன். என் வார்த்தைகள் மூலம், படைக்கப்பட்ட எண்ணற்ற வஸ்துக்கள் அனைத்தும் புதியவை ஆக்கப்படும். பூமியைப் போலவே வானமும் மாறுகிறது. மனித குலம் அதன் மூல முதல் வடிவத்திற்கு வெளிப்படுத்தப்படும், மற்றும் மெதுவாக, ஒவ்வொரு நபரும் அவரவர் வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் தங்களையும் அறியாமல், அவர்களது குடும்பத்தின் அரவணைப்புக்கு மீண்டும் வர தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள். இது என்னைப் பெரிய அளவில் மகிழ்விக்கும். நான் இடையூறிலிருந்து விடுபட்டுள்ளேன், கண்ணுக்குத் தெரியாத விதத்தில், என் மாபெரும் கிரியை நிறைவேறியது, மேலும் எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளன. நான் உலகத்தை உருவாக்கியபோது, எல்லாவற்றையும் அவற்றின் வகைக்கு ஏற்ப வடிவமைத்தேன், எல்லாவற்றிலும் அவற்றின் வடிவங்களுடன் அவற்றின் தன்மையை ஒன்றாக இணைத்தேன். எனது நிர்வாகத் திட்டத்தின் முடிவு நெருங்கி வருவதால், படைத்தவற்றின் முந்தைய நிலையை நான் மீட்டெடுப்பேன்; எல்லாவற்றையும் மூல முதலாக இருந்த விதத்திற்கு மீட்டெடுப்பேன், எல்லாவற்றையும் அளவிடமுடியாதவாறு மாற்றுவேன், இதனால் எல்லாமும் எனது திட்டத்தின் அரவணைப்புக்குத் திரும்பும். அதற்கான நேரம் வந்துவிட்டது! எனது திட்டத்தின் கடைசிக் கட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆ, அசுத்தமான பழைய உலகமே! நீ நிச்சயமாக என் வார்த்தைகளுக்குக் கீழே விழுவாய்! என் திட்டத்தால் நீ நிச்சயமாக ஒன்றுமில்லாமல் போவாய்! ஆ, எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்களே! நீங்கள் அனைவரும் என் வார்த்தைகளுக்குள் புதிய ஜீவனைப் பெறுவீர்கள்—உங்களை அரசாளும் கர்த்தர் உங்களுக்குக் கிடைப்பார்! ஆ, தூய்மையான மற்றும் களங்கமற்ற புதிய உலகமே! என் மகிமைக்குள் நீ நிச்சயமாக மீண்டெழுவாய்! ஆ, சீயோன் மலையே! இனி அமைதியாக இருக்கவேண்டாம்—நான் வெற்றிபெற்றுத் திரும்பியுள்ளேன்! படைப்பின் நடுவிலிருந்து, நான் முழு பூமியையும் ஆராய்ந்து பார்க்கிறேன். பூமியில், மனிதகுலம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி புதிய நம்பிக்கையை வென்றுள்ளது. ஆ, என் மக்களே! என் வெளிச்சத்திற்குள் நீங்கள் எப்படி மீண்டும் உயிர்பெற்று வராதிருக்க முடியும்? என் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் எப்படி மகிழ்ச்சியால் குதிக்காமல் இருக்க முடியும்? நிலங்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுகின்றன, நீர்நிலைகள் மகிழ்ச்சியான சிரிப்பால் சலசலக்கின்றன! ஆ, உயிர்த்தெழுந்த இஸ்ரவேலே! என்னால் முன்குறிக்கப்பட்டதற்காக நீங்கள் பெருமை கொள்ளாதிருப்பது எங்ஙனம்? யார் அழுகிறார்கள்? யார் புலம்புகிறார்கள்? பழைய இஸ்ரவேல் இல்லாது போய்விட்டது, இன்றைய இஸ்ரவேல் உலகில் உயர்ந்து, நிமிர்ந்து, எழுந்தது, மேலும் அனைத்து மனிதர்களின் இதயங்களிலும் எழுந்து நிற்கிறது. இன்றைய இஸ்ரவேல் நிச்சயமாக என் மக்கள் மூலமாக இருப்பதற்கான ஆதாரத்தை அடையும்! ஆ, வெறுக்கத்தக்க எகிப்து! நிச்சயமாக நீ இன்னும் எனக்கு எதிராக நிற்கவில்லை, அல்லவா? என் கருணையைப் பயன்படுத்திக் கொண்டு, என் தண்டனையிலிருந்து தப்பிக்க நீ முயற்சி செய்வது எங்ஙனம்? என் தண்டனையில்லாது நீ போகமுடிவது எங்ஙனம்? நிச்சயமாக நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், நிச்சயமாக எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், பிரதாபத்துடனும், உக்கிர கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், பெருந்திரளான மனிதர்களுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!
மார்ச் 29, 1992