அத்தியாயம் 2

புதிய அணுகுமுறைக்குள் நுழைவதோடு, என் கிரியையில் புதிய படிநிலைகளும் இருக்கும். அது ராஜ்யத்தில் இருப்பதால், நான் தெய்வீகத்தின் மூலம் நேரடியாக விஷயங்களைச் செய்வேன். வழியின் ஒவ்வொரு படிநிலையையும் முற்றிலுமாக மனித எண்ணங்களின் கலப்படமில்லாமல் அதன் நுணுக்கமான விவரங்களுக்குத் துல்லியமாக வழிநடத்துவேன். உண்மையான நடைமுறை வழிகளின் ஒரு திட்ட வரையறை இதனால் கிடைக்கிறது: அது கஷ்டங்கள் மற்றும் சுத்திகரிப்பின் மூலம் கிடைப்பதால், அவர்கள் “ஜனங்கள்” என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள், மேலும் அவர்கள் என் ராஜ்யத்தின் ஜனங்களாக இருப்பதால், அவர்களை நான் முந்திய தலைமுறைகளின் என் கிரியையின் முறைகளைவிட தரநிலை அதிகமானதாக இருக்கும் மிகவும் கட்டுப்பாடான நிபந்தனைகளுக்குள் வைக்க வேண்டும். வார்த்தைகளின் யதார்த்தம் மட்டுமல்ல, மிக முக்கியமாக, நடைமுறையின் யதார்த்தமும் கூட இதுதான். இவற்றை முதலில் அடையவேண்டும். எல்லா வார்த்தைகளிலும் செயல்களிலும் அவர்கள் ரஜ்யத்தின் மக்களுக்குத் தேவைப்படும் தரநிலைகளைக் கொண்டிருக்கவேண்டும். இவற்றை மீறுகிற யாரும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என் நாமத்துக்கு அவமானத்தைக் கொண்டு வருவார்கள். இருந்தாலும், தெளிவாகப் பார்க்க முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத அறியாமையில் இருப்பவர்கள் விதிவிலக்குதான். என் ராஜ்யத்தை கட்டமைக்கும் போது, என்னுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுதல், என் ஞானத்தை அறிதல் மற்றும் என்னுடைய கிரியையின் மூலம் உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். என் வார்த்தைகளில் இருப்பவைகள் அல்லாமல் பிற புத்தகங்களில் ஒருவன் கவனம் செலுத்தினால், உறுதியாக அவன் எனக்குத் தேவை இல்லை; இத்தகைய ஜனங்கள் என்னை எதிர்த்து நிற்கும் வேசிகள். ஓர் அப்போஸ்தலனைப் போல் வீட்டில் ஒருவன் அதிக நேரம் தரித்திருக்கக்கூடாது. அப்படி ஒருவன் செய்தால், நான் அவர்களை வற்புறுத்த மாட்டேன், ஆனால் நீக்கிவிடுவேன், அந்த நபரை இனிமேலும் பயன்படுத்த மாட்டேன். அப்போஸ்தலர்கள் நீண்டநேரம் வீட்டில் இல்லாததால், அவர்கள் கற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் சபையில் செலவிடுகிறார்கள். சபைகளின் இரு கூடுகையில் ஒன்றிலாவது அப்போஸ்தலர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, உடன் ஊழியர்கள் கூடுகைகள் (எல்லா அப்போஸ்தலர் கூடுகைகள், எல்லாச் சபைத்தலைவர் கூடுகைகள், மற்றும் தெளிவான நுண்ணறிவுள்ள பரிசுத்தவான்களின் கூடுகைகள் உட்பட) அடிக்கடி நடக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்களில் சிலர் ஒவ்வொரு கூடுகையிலும் கலந்துகொள்ள வேண்டும், மேலும் அப்போஸ்தலர்கள் சபைகளைக் கண்காணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பரிசுத்தவான்களிடம் முன்னர் வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது இன்னும் ஆழமாக இருக்கின்றன. நான் என் நாமத்துக்குச் சாட்சி அளிக்கும் முன்னர் குற்றங்களைச் செய்தவர்களை என்பால் கொண்ட பயபக்தியின் காரணமாக அவர்களை சோதித்த பின் இன்னும் நான் பயன்படுத்துவேன். இருந்தாலும், என் சாட்சிக்குப் பின்னர் மேலும் குற்றங்களைச் செய்தவர்கள் மனந்திரும்புவதற்கு வேதனையைத் தாங்கிப் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்திருக்கிறார்கள், இத்தகைய ஜனங்கள் மட்டுமே சபைக்குள் இருக்க வேண்டும். இருந்தாலும் அவர்கள் கவனக்குறைவாகவோ பொறுப்பற்றோ இருக்கக் கூடாது, மாறாக மற்றவர்களை விட மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நான் பேசிய பிறகும் தங்கள் வழிகளைத் திருத்திக் கொள்ளாதவர்களை என் ஆவியானவர் உடனடியாக விட்டுவிலகுவார், மேலும் என்னுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி அவர்களை வெளியேற்ற திருச்சபை உரிமை உடையதாயிருக்கும். இது முற்றும் முடிவானது, ஆலோசிப்பதற்கு இடமே இல்லை. என்னை சோதிப்பதையும் சாத்தான் வெறித்தனமாக சபைக்குள் புகுவதையும் தவிர்க்க உபத்திரவங்களின் போது வீழ்ந்து போகிறவனை—அதாவது விட்டுச் செல்கிறவனை—குறித்து ஒருவனும் கவலைப்பட வேண்டியதில்லை. இத்தகைய நபரைப் பற்றிய என் நியாயத்தீர்ப்பு இதுவே. யாராவது விலகிப் போகிற ஒரு நபரிடம் நீதிக்குப் புறம்பாகவும் உணர்வுக்குப் புறம்பாகவும் நடந்துகொண்டால் விலகிப்போகிறவன் மட்டுமல்லாமல் முந்தியவனும் என் ஜனங்களை விட்டு நீக்கப்படுவான். சுவிசேஷத்தைப் பரப்புவதே அப்போஸ்தலர்கள் கவனம் செலுத்தவேண்டிய இன்னொரு செயல்பாடு. நிச்சயமாக பரிசுத்தவான்களும் இந்தக் கிரியையைச் செய்யலாம், ஆனால் இப்படிச் செய்ய அவர்கள் ஞானமாக இருக்கவேண்டும் மற்றும் உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும். மேலே சொன்னவைகள்தாம் நடைமுறைக்கான தற்போதைய வழிகள். மேலும், உங்கள் பிரசங்கங்கள் ஆழமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். இதன் மூலம் எல்லோரும் என்னுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் என் வார்த்தைகளை உன்னிப்பாகப் பின்பற்றவேண்டும். இதன்மூலம் எல்லா ஜனங்களும் அவற்றைத் தெளிவாகவும் சந்தேகம் இன்றியும் புரிந்துகொள்ளச் செய்ய வேன்டும். இது மிகவும் முக்கியம். என் ஜனங்களுக்கு மத்தியில் துரோகச் சிந்தனைகளைக் கொண்டிருக்கிறவர்கள் வெளியேற்றப்பட வேண்டும், மேலும் என் வீட்டில் அதிக நேரம் தங்கி இருக்க அனுமதிக்கக் கூடாது, இல்லாவிட்டால் அவர்கள் என் நாமத்துக்கு அவமானத்தைக் கொண்டுவருவார்கள்.

பிப்ரவரி 21, 1992

முந்தைய: அத்தியாயம் 1

அடுத்த: அத்தியாயம் 3

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக